வியாழன், 7 அக்டோபர், 2021

நகர் வலம்


அரிசோனாவில் உள்ள "டோம்ப்ஸ்டோன்"  என்ற ஊர் வரலாற்று சிறப்புமிக்க ஊர். அதற்கு மகன் ஆகஸ்ட்  மாதம்  வார விடுமுறையில் அழைத்து சென்றான். வெள்ளி, சனி, ஞாயிறு  போய் இருந்தோம். இரண்டு இரவுகள் இந்த பழமையான வீட்டில் தங்கி  அந்த ஊரில் உள்ள பல முக்கியமான இடங்களை சுற்றிப் பார்த்தோம்.

இந்த வீட்டின் சாவி  இந்த பெட்டியில் இருந்தது.
பழமையான வீட்டுக்கு புது மாடல் பூட்டு.

வீட்டு உரிமையாளர் போனில் சொன்ன  நம்பரை அடித்தபின் சாவியை வைத்து திறந்தால் திறந்து கொண்டது கதவு. ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொண்டு போனோம். இரண்டு பதிவுகளில் இந்த படமும் செய்தியும் விட்டுப் போய் விட்டது.


 

பிறகு ஊரைச்சுற்றிப்பார்த்தோம். கடந்த இரண்டு பகுதிகளில் வீட்டின் படங்களை பகிர்ந்து இருந்தேன்.அடுத்த பகுதி  ஊரைப் பார்ப்போம் என்றேன் போன பதிவில்.


 இந்த பதிவில் ஊரின் படங்களை பகிர்ந்து இருக்கிறேன்.


வீட்டுக்கு அருகில்  இருந்த தேவாலயம்
பக்கத்து வீடு பழையப் பொருட்கள்  வாசலில் வைத்து இருந்தார்கள் வித விதமான  காற்றில் அசைந்து ஒலி எழுப்பும்  மணிகள் தொங்கவிட்டு இருந்தார்கள்.

 வீட்டு வாசலில் அந்தி மந்தாரை அழகாய் பூத்து இருந்தது. பழைய பொருட்கள் நிறைய வாசலில் அலங்காரமாக வைத்து இருந்தார்கள்.

உதகமண்டலம் போல இருந்தது இந்த இடம். காலை வெண் மேகம், மலை, குளிர் , மற்றும் ஏற்ற இறக்கமாக   பாதைகள் செல்வது உதகமண்டலத்தை நினைவு படுத்தியது.
அதிகாலை நேரம் மரங்களுக்கு இடையே சூரிய ஒளி  அலங்கார விளக்கு அமைத்து இருந்தது.
இன்னொரு  ஏசு ஆலயம் தங்கி இருந்த வீட்டுக்கு அருகில் இருந்தது. பக்கத்தில் உள்ள ஜெபவீட்டை சூரியன் பொன்மயமாக ஆக்கி இருந்தார்

 இந்த பூங்காவின் வழியாகத்தான் ஊருக்குள் போக வேண்டும். பூங்காவில் உள்ள ஒவ்வொரு மரங்களும் இறந்து போனவர்களின் நினைவாக  வைத்து இருக்கிறார்கள். மரங்களுக்கு அடியில் பெயர்பொறித்த  கல்வெட்டு  இருக்கிறது.


துப்பாக்கி  சண்டை பார்க்க போகும் பாதையில் பார்த்தக் காட்சி. அழகாய் இருந்தது எடுத்தேன், இது விளையாடும் பாதை என்று நினைக்கிறேன். பழைய கால விண்ட்மில்  இருந்தது.

 

ஊர் முழுவதும் இப்படி  மர பீப்பாய்கள்   வைத்து இருக்கிறார்கள்.

முக்கிய வீதி

காலை நேரம் அந்த ஊர் தெருக்களில் சிறிது உலா போனோம்
வண்டி தடம் வீதிகளில். கடைசியில் நீல வானத்தை வெண்மேகம்  மூடி அழகாய் காட்சி அளித்தது.


வண்டிச் சக்கரம் பார்வைக்கு

வீதி நாடகம் நடத்த தயார் ஒரு வீட்டில் அழகாய் தோட்டம் அமைத்து இருந்தார்கள்.   பழைய டி.வி ஆண்டனா,  மற்றும் இப்போது உள்ள டிஷ் ஆண்டனாவும்  இருக்கிறது.
தோட்டத்தைச் சுற்றி இரவு வண்ணவிளக்கு அலங்காரமும் உண்டு.
பழைய வீடு இப்போது தங்கும் விடுதியாக மாற்றப்பட்டு இருக்கிறது.


சினிமா படபிடிப்பு நடக்கும் வீடு.

அடுத்து  என்னப் பார்த்தோம் என்பதை அடுத்த பதிவில்.

வாழ்க வையகம் ! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

----------------------------------------------------------------------------------------------------

27 கருத்துகள்:

 1. நகர் வலம் நன்றாக இருந்தது... படங்கள் அருமை...

  பதிலளிநீக்கு
 2. படங்களும் விளக்கங்களும் அருமை சகோ. தொடர்கிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
   உங்கள் கருத்துக்கும் தொடர்வதற்கும் நன்றி.

   நீக்கு
 3. இனிய காலை வணக்கம் அன்பு கோமதி.
  வாழ்க வளமுடன்.

  அப்படியே வெஸ்டர்ன் கிராமம் ஒன்று கண்முன் எழுகிறது.
  படங்கள் அனைத்தும் அத்தனை அழகு.
  இங்கேயும் சூரியனை மறக்கவில்லை நீங்கள்.

  அடுத்தாற்போல் க்ளீண்ட் ஈஸ்வுட்,
  கையிரண்டிலும் உறுமும் துப்பாக்கிகளோடு வந்து
  விடுவாரோ என்று திகைக்கும்படி தத்ரூபமாக
  இருக்கிறது.:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்

   //அப்படியே வெஸ்டர்ன் கிராமம் ஒன்று கண்முன் எழுகிறது.
   படங்கள் அனைத்தும் அத்தனை அழகு.
   இங்கேயும் சூரியனை மறக்கவில்லை நீங்கள்.//

   நன்றி அக்கா . காலை, மாலை சூரியக்காட்சி கிடைக்கும் இடத்தில் ரசித்து வணங்கி கொள்கிறேன் அக்கா.

   //அடுத்தாற்போல் க்ளீண்ட் ஈஸ்வுட்,
   கையிரண்டிலும் உறுமும் துப்பாக்கிகளோடு வந்து
   விடுவாரோ என்று திகைக்கும்படி தத்ரூபமாக
   இருக்கிறது.:)//

   ஆமாம் அக்கா, நாம் பார்த்த படங்களும், படித்த கதைகளும் கண் முன் வருகிறது இல்லையா!   நீக்கு
 4. நாங்கள் சென்ற மூன்று வெஸ்டர்ன், நேடிவ் அமெரிக்கன்
  கிராமங்களில், குதிரைகளில் வலம் வரும்
  காட்சிகளும் இருந்தன:)
  ஒரு நிமிடம் எங்கே இருக்கிறோம் என்று கூட
  மறந்து விட்டது.!!!

  சரித்திரத்தை மறக்காமல் இருக்க ஒரு
  நல்ல ஏற்பாடு நம்மூரிலும் இருந்தால்
  எவ்வளவு நன்றாக இருக்கும்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாங்கள் சென்ற மூன்று வெஸ்டர்ன், நேடிவ் அமெரிக்கன்
   //கிராமங்களில், குதிரைகளில் வலம் வரும்
   காட்சிகளும் இருந்தன:)
   ஒரு நிமிடம் எங்கே இருக்கிறோம் என்று கூட
   மறந்து விட்டது.!!!//

   குதிரைகளின் வக்லம் அடுத்த பதிவில் வருகிறது அக்கா.

   //சரித்திரத்தை மறக்காமல் இருக்க ஒரு
   நல்ல ஏற்பாடு நம்மூரிலும் இருந்தால்
   எவ்வளவு நன்றாக இருக்கும்!!//

   ஆமாம், நல்லா இருக்கும்தான்.

   நீக்கு
 5. அதுவும் அந்த வண்டிகள் ஸ்டேஜ் கோச் எல்லாமே நன்றாகப்
  பராமரிக்கிறார்கள் என்று தெரிகிறது.

  மலையும் ,நீல வானமும், மேகங்களும் அத்தனை அழகு.

  குளிர் காற்றா!! நான் அங்கெல்லாம் உஷ்ணம் தான் அதிகம்
  என்று நினைத்தேன் மா.
  படங்களுக்கும் பதிவுக்கும் மிக மிக நன்றி மா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //அதுவும் அந்த வண்டிகள் ஸ்டேஜ் கோச் எல்லாமே நன்றாகப்
   பராமரிக்கிறார்கள் என்று தெரிகிறது.//

   ஆமாம். நன்றாக பராமரிக்கிறார்கள்.


   //மலையும் ,நீல வானமும், மேகங்களும் அத்தனை அழகு.//

   ஆமாம் அக்கா , பார்க்க பார்க்க பரவசமாய் இருந்தது.

   //குளிர் காற்றா!! நான் அங்கெல்லாம் உஷ்ணம் தான் அதிகம்
   என்று நினைத்தேன் மா.//

   இல்லை அக்கா நல்ல குளிர். காலை நேரம் நல்ல குளிர்.

   படங்களை ,பதிவை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.   நீக்கு
 6. கிராமத்தின் வீதி மிக அழகாகவும் சுத்தமாகவும் இருக்கிறது.

  படங்கள் எப்போதும்போல அருமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்
   வீதிகள் சுத்தமாக இருந்தது.
   படங்களை, பதிவை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

   நீக்கு
 7. கதவைத் திறக்க வழிமுறை நன்றாக இருக்கிறது.  ஜெபவீடு பிரம்மாண்டம்!  மரங்களையே நினைவுச்சின்னமாக்கி இருக்கிறார்களா...  சூப்பர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
   //கதவைத் திறக்க வழிமுறை நன்றாக இருக்கிறது //

   ஆமாம், நன்றக இருக்கிறது.

   //ஜெபவீடு பிரம்மாண்டம்!//

   பாதி ஜெபவீட்டைத்தான் இதில் போட்டு இருக்கிறேன், அழகிய தோட்டத்துடன் இன்னும் பெரிதாக இருக்கிறது.

   //மரங்களையே நினைவுச்சின்னமாக்கி இருக்கிறார்களா... சூப்பர்.//

   இப்படி இருந்தால் மரங்களை பாதுகாப்பார்கள், வெட்ட மாட்டார்கள்.
   இங்கு அட்லாண்டாவிலும் நிறைய பூங்காவில் இப்படி மரங்கள், மரங்களுக்கு போகும் நடைபாதை கற்கள் எல்லாம் முன்னோர்களின் நினைவாக வைத்து இருக்கிறார்கள்.

   அமரும் கல் ஆசனங்களில் பேர் வெட்டி இருக்கிறார்கள்.   நீக்கு
 8. மரப் பீப்பாய்கள் குப்பை போடுவதற்கா?  சுத்தமாக இருந்தாலும் சாலைகளில் எதுவோ ஒன்று குறைகிறது!  மண்சாலை போல இருப்பதா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மரப்பீப்பாய்கள் பழைய காலத்தை நினைவூட்ட மட்டும் குப்பைதொட்டிகளும் வேறு இருக்கிறது.

   பழைய காலத்தை நினைவூட்ட இப்படி இந்த இடத்தை மண் சாலையாக வைத்து இருக்கிறார்கள்.

   நீக்கு
 9. பழைய டீவி ஆன்டென்னா பார்த்து எவ்வளவு நாளாச்சு?  இன்னமும் அது அங்கு உபயோகத்தில் இருக்கிறதா?  தாங்கும் விடுதி அளவு வீடா?  ஊர்ப் பெரிய தனக்காரர்களாய் இருந்திருப்பார்கள் போல!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பழைய டீவி ஆன்டென்னா பார்த்து எவ்வளவு நாளாச்சு? இன்னமும் அது அங்கு உபயோகத்தில் இருக்கிறதா?

   தெரியவில்லை ஸ்ரீராம் , அந்த வீட்டில் அது இரண்டு இடத்தில் கூரை மேல் இருந்தது,
   வெள்ளி சுரங்களில் பொருள் நிறைய சம்பாதித்து இருக்கிறார்கள். அதனால் நல்ல வசதியாக இருந்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 10. பதில்கள்
  1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 11. உதகமண்டலம் போல இருந்தது இந்த இடம். காலை வெண் மேகம், மலை, குளிர் , மற்றும் ஏற்ற இறக்கமாக பாதைகள் செல்வது உதகமண்டலத்தை நினைவு படுத்தியது.//

  ஆமாம் அக்கா நானும் அதையே நினைத்து அட நம்மூர் மலைப்பிரதேசம் போல இருக்கிறதே என்று சொல்ல வந்தால் படத்திற்கான உங்கள் வரிகளைப் பார்த்தேன். ஹைஃபைவ் கோமதிக்கா

  பக்கத்து வீட்டுப்பொருட்கள் வாசலில் அலங்காரமாக வைத்திருப்பதும் அழகு.

  அட அங்கும் நம்மூர் போல அந்திமந்தாரை!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

   //நம்மூர் மலைப்பிரதேசம் போல இருக்கிறதே என்று சொல்ல வந்தால் படத்திற்கான உங்கள் வரிகளைப் பார்த்தேன். ஹைஃபைவ் கோமதிக்கா//

   மகிழ்ச்சி.

   //பக்கத்து வீட்டுப்பொருட்கள் வாசலில் அலங்காரமாக வைத்திருப்பதும் அழகு.

   அட அங்கும் நம்மூர் போல அந்திமந்தாரை!!!//

   ஆமாம், நம்மூர் மாதிரி, அந்தி மந்தாரை மல்லிகை எல்லாம் பூக்கிறது.


   நீக்கு
 12. பூங்கா வழியாகப் போவது செம ஜாலியா இருந்திருக்குமே இல்லையா.
  ஒவ்வொரு மரமும் நினைவாகத் தகவல்களுடன் என்பது நல்ல விஷயம் இல்லையா/...அப்போ நிறைய மரங்கள் ஊர் கொள்ளாமல் இருக்க வேண்டுமே...

  துப்பாக்கி சண்டை பார்க்க போகும் பாதையில் பார்த்தக் காட்சி. அழகாய் இருந்தது எடுத்தேன், இது விளையாடும் பாதை என்று நினைக்கிறேன். பழைய கால விண்ட்மில் இருந்தது.//

  ஆமாம் ரொம்ப அழகாக இருக்கிறது வின்ட் மில் ..இடமும்தான்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //பூங்கா வழியாகப் போவது செம ஜாலியா இருந்திருக்குமே இல்லையா.
   ஒவ்வொரு மரமும் நினைவாகத் தகவல்களுடன் என்பது நல்ல விஷயம் இல்லையா/...அப்போ நிறைய மரங்கள் ஊர் கொள்ளாமல் இருக்க வேண்டுமே...//

   ஆமாம், பூங்கா வழியாக போக நன்றாக இருந்தது. ஊஞ்சல் இருந்தது எல்லோரும் கொஞ்சம் ஊஞ்சல் ஆடினோம்.

   ஊரில் மக்கள் தொகை குறைச்சல். எல்லோரும் வெளியே இருக்கிறார்கள். கல்லரைகள் இருக்கும் பகுதியில் மரங்கள் இருக்கிறது, பூங்காவில் மரம் இருக்கிறது.

   வின்ட் மில் பார்க்க அழகாய் இருந்தது

   நீக்கு
 13. ரோடுகளைப் பார்க்கும் போது நம்ம ஊர் மாதிரியே இருக்கிறது. ஜட்கா வண்டி அதில் சவாரி செய்ய முடிந்ததா?

  தோட்டம் அழகான தோட்டம். அந்தக்கால டிவி ஆன்டெனா அட! போட வைத்தது.

  பழைய வீடு தங்கும் விடுதி பெரிதாக இருக்கிறதே. ஒரு வேளை இரு குடும்பங்கள் அல்லது மூன்று குடும்பங்கள் தங்குவது போல இருக்குமோ? நம்மூரில் செய்வது போல்...ஆனால் பார்க்க அழகாக இருக்கிறது. அரிஜோனா பகுதி என்பது தெரிகிறது சரளைக்கற்கள் மண் பார்க்கும் போது.

  இப்பகுதி கிட்டத்தட்ட நம்மூர் போல இருக்கிறது. அதுவும் சினிமா படப்பிடிப்பு நடக்கும் வீடு என்று சொல்லப்பட்டிருக்கும் ரோடு நம்மூரில் இருக்கும் பள்ளம் அதை அடைத்திருப்பது (ஸ்ரீராம் கூட எழுதியிருந்தாரே!!!) அது போல இருக்கிறது! இப்பகுதி அமெரிக்காவின் மற்ற பகுதி போல இல்லையோ?

  கீதா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //ரோடுகளைப் பார்க்கும் போது நம்ம ஊர் மாதிரியே இருக்கிறது. ஜட்கா வண்டி அதில் சவாரி செய்ய முடிந்ததா?//

   நாங்கள் நியூயார்க் நகரில் இந்த வண்டியில் பயணம் செய்து விட்டோம் அதனால் பயணம் செய்த வாகனம் அடுத்த பதிவில் வரும்.

   //தோட்டம் அழகான தோட்டம். அந்தக்கால டிவி ஆன்டெனா அட! போட வைத்தது.//

   அவர்கள் பழுதடைந்து விட்ட பொருட்களில் செடிகளை வைத்து இருந்தார்கள். எதையும் வேஸ்ட் செய்யாமல் உபயோகித்து இருந்தார்கள்., காரில் போகும் போது எடுத்த படம். இறங்கி போய் இருந்தால் அவர்கள் செடிகள் வைத்து இருக்கும் பொருடகளை படம் எடுத்து காட்டி இருப்பேன்.

   //பழைய வீடு தங்கும் விடுதி பெரிதாக இருக்கிறதே. ஒரு வேளை இரு குடும்பங்கள் அல்லது மூன்று குடும்பங்கள் தங்குவது போல இருக்குமோ? நம்மூரில் செய்வது போல்...ஆனால் பார்க்க அழகாக இருக்கிறது. அரிஜோனா பகுதி என்பது தெரிகிறது சரளைக்கற்கள் மண் பார்க்கும் போது.//

   சேர்ந்து தங்ககலாம், தனி தனியாகவும் அறைகள் இருக்கிறது.

   அரிசோனாவில் உள்ள ஊர் தான் இது. கல்லறைகள், வெள்ளி சுரங்கம் இருந்த ஊர் அதில் வேலைப்பார்க்க ஆட்களை கூட்டி வந்து அவர்கள் தங்க என்று ஊர் உருவாக்கி இருக்கிறார்கள்.

   இப்போது சுற்றுலா வரும் மக்களால் ஊருக்கு வருமானம் கிடைக்கிறது.
   ரோடு துண்டு தூண்டாக பழுது பார்த்து இருப்பது நமூரை நினைவு படுத்துகிறதா!
   அமெரிக்காவில் நிறைய் இடங்கள் இந்த மாதிரியும் இருக்கிறது.

   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 14. அழகிய ஊர். வீடுகளும் நல்ல அமைப்பாக உள்ளன. நீங்கள் தங்கிய வீட்டின் கதவைத் திறக்கும் முறை புதுமை! ஊரைச் சுற்றி உங்களுடன் நானும் பார்த்துக் கொண்டேன். அரியதான இடங்கள். தேர்ந்தெடுத்துக் கூட்டிச் செல்கிறார் உங்கள் மகன். நீங்கள் க்ரான்ட் கான்யான் பார்த்து விட்டீர்களோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க் வளமுடன்
   அழகான ஊர்தான்.

   //நீங்கள் க்ரான்ட் கான்யான் பார்த்து விட்டீர்களோ ?//
   2017 ல் போன போது அழைத்து போனான். பார்த்து விட்டோம்.
   இந்த ஊரிலிருந்து பக்கம் தான் அது.
   பதிவு போட்டு இருக்கிறேன்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.


   நீக்கு