ஞாயிறு, 31 ஜனவரி, 2021

உல்லாசப்பயணம் - பகுதி 9
1978  ஆம் ஆண்டு நாங்கள்  கல்கத்தா, காசி  போன போது எடுத்த படம்.  என் கணவர், கணவரின் தம்பி, மற்றும் என்  மகளுடன்  கல்கத்தாவில் ஜைன கோவில் சென்ற போது எடுத்த படம். என் கணவரின் அண்ணா எடுத்த படம்

  என் கணவரின் அண்ணா கல்கத்தாவில் வேலைப் பார்த்தார்கள். அப்போது  10 நாட்கள் அவர்கள் வீட்டில்  தங்கி ஊரைச் சுற்றிப்பார்த்து பின்  காசி போய் வந்தோம். அங்கு பார்த்த   பார்சுவநாதர் கோவில். 

ஜைன கோவில் - படம் கூகுள் 

                                                  
புத்தகயாவில் உள்ள புத்தர் ஆலயம்


புகழ் பெற்ற ஹெளரா பாலம்


இம்பீரியல் மியூசியம்
விக்டோரியா மெமோரியல்
இராமகிருஷ்ண மடம்


கல்கத்தா மாடி பஸ்


நாங்களும் கல்கத்தாவில் டிராமில் பயணம் செய்து இருக்கிறோம்.

அடுத்த பதிவில் புவனேஸ்வரத்தில்  என்ன இடங்கள் பார்த்தார்கள் என்று பார்ப்போம்.

வாழ்க வளமுடன்

--------------------------------------------------------------------------------------------------------------------------

 

36 கருத்துகள்:

 1. அவ்வளவு பக்கத்தில் போய் நான் பார்க்காத இடம் புத்தகயா.  கயையில் ஸ்ராத்தம் முடிக்கும்போதே நேரமாகிவிட கிளம்ப வேண்டியதாய்ப் போனது.  ஆனால் காசியில் ஒன்றரை நாள் மறுபடி சுமமாவே இருந்தோம்!  அது நினைவுக்கு வருகிறது.  நீங்கள் எழுபதுகளிலேயே வடநாட்டுப் பக்கம் சுற்றுலா சென்று வந்திருக்கிறீர்கள். 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
   நாங்களும் புத்தகயா மட்டும் பார்த்தோம்.
   //காசியில் ஒன்றரை நாள் மறுபடி சுமமாவே இருந்தோம்! அது நினைவுக்கு வருகிறது//

   அப்போது போய் இருக்கலாம்.

   ஆமாம், அப்போதே வடநாட்டு பக்கம் சுற்றுலா போய் விட்டோம்.
   உறவினர்கள் வீடுகளுக்கு போகும் போது அப்படியே அங்கு இருக்கும் தலங்களையும் தரிசனம் செய்ய திட்டம் இட்டுவிடுவார்கள் எங்கள் குடும்பத்தினர் எல்லோரும்.

   அக்கம் பக்கம் வீட்டினர் எல்லோரும் கேட்கும் கேள்வி உங்கள் வீட்டுக்கு வருகிறவர்கள் எல்லோரும் கோவில் பார்க்கத்தான் வருகிறார்கள் போலும் என்று தான்.

   நீக்கு
 2. ஒரு வாரம் முழுவதும் பார்த்தாலும் முழுமையாகப் பார்க்க முடியாத இடத்தை ஒருமணி நேரத்தில் பார்த்தது வருத்தமான விஷயம்தான்.   பின்னாட்களில் இந்தக் குறை நிவர்த்தி செய்யப்பட்டிருக்கும் என்று நம்புகிறேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பயணத்தில் இப்படி சில நேரம் அமையும்.
   பின்னாட்களில் அந்த குறை இல்லாமல் நிதானமாய் பார்த்தோம்.
   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 3. அப்பாடா...   ஒருவழியாய் ஒருதரம் என்ன சாப்பிட்டோம் என்றும் எழுதி விட்டார்!! 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம், ஸ்ரீராம் விருப்பம் நிறைவேறி விட்டது.

   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 4. அன்பு கோமதிமா,
  மீண்டும் அருமையான விவரங்கள். ஒரு சிறு குறிப்பைக்கூடத் தவற விடவில்லை.

  அருமை.
  புத்தகயா பார்க்க நேரம் இருந்து இருக்கிறது.
  கல்கத்தா பயணம்தான்
  உடனே உடனே முடித்திருக்கிறார்கள்.
  ஒரு திட்டப்படி செல்லும் போது
  அந்த நேரத்தைக் கடைபிடிக்க வேண்டுமே.

  நீங்கள் கல்கத்தா சென்ற நேரம் என்பெற்றோரும் அங்கே இருந்தார்கள். இதே
  புவனேஸ்வர் பயணம் செய்து வந்தார்கள்.
  நீங்கள் புகைப்படத்தில் மிகச் சிறிய பெண்ணாகக்
  காண்கிறீர்கள்.இதில் மகள் குட்டிப் பெண்ணாக
  அழகாக இருக்கிறார்,

  கல்கத்தாவில் ஒரு இடமும் விடவில்லை.
  கல்கத்தாவில் உணவு கிடைப்பது சிரமம்தான்.
  கோமள விலாஸ் நன்றாக இருக்கும் என்று கேள்வி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்
   புத்தகயா பார்த்து விட்டார்கள்.கல்கத்தாவில் நிறைய இடங்கள் இருப்பதால் நிறைய நாட்கள் இருந்தால் தான் முடியும் . முக்கியமான இடங்களைப் பார்த்து விட்டார்கள் .நீங்கள் சொல்வது போல் திட்டமிட்டபடி பயணத்தை நிறைவு செய்ய வேண்டுமே!

   என் மகன் வயிற்றில் இருந்தான் (நான்கு மாதம்)அதனால் உடல் சோர்வு வேறு . பின்னாளில் மகன் நான் வரவில்லையா இந்த ஊருக்கு என்று கேட்பான் படங்களைப்பார்த்து உன்னையும் தூக்கி கொண்டுதான் அம்மா எல்லா இடமும் பார்த்தேன் என்பேன்.

   என் ஓர்ப்படியை கேட்டால் சொல்வார்கள் கோமளா விலாஸ் பற்றி.

   என் ஓர்ப்படி எங்களுக்கு உணவு தயார் செய்து விடுவார்கள் கொண்டு போய் விடுவோம்.
   வெளியில் உணவு சாப்பிடவில்லை.என் அம்மாவும் உடன் வந்து இருந்தார்கள்.

   நீக்கு
  2. கோமளவிலாஸ் நாங்க போனோம். டிஃபன் சாப்பிட்டோம். நன்றாகவே இருந்தது. தங்கத்தான் அறை காலி இல்லை என்றும் 3 மாதம் முன்னாடியே முன்பதிவு செய்யணும்னும் சொன்னாங்க. அது பக்கத்திலே உள்ள தெருவில் தான் தாரா மஹால் என்னும் ஓட்டலில் தங்கினோம். அங்கேயும் அறைகள் அருமையாக இருந்தன. எங்களுக்குக் கீழேயே கொடுத்தார்கள்.

   நீக்கு
  3. கோமளவிலாஸ் நீங்கள் போய் சாப்பிட்டு வந்த விவரம் அறிந்தேன் மகிழ்ச்சி.
   தங்கும் அறையையும் உண்டு என்ற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது.

   தாரா மஹால் ஓட்டலும் நன்றாக இருந்தது அறிந்து மகிழ்ச்சி. இனி போகிறவர்களுக்கு உபயோகமான தகவல்.
   மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.

   நீக்கு
 5. டிராம் வண்டியின் பயணம் அவ்வளவாக சாருக்கு ரசிக்கவில்லை
  போல இருக்கிறது.
  கல்கத்தா போக்குவரத்து அச்சுறுத்துவதாகத் தான்
  இருக்கும்.
  எப்படியோ சாமர்த்தியமாகச் சென்று
  வந்திருக்கிறார்.
  இனி புவனேஸ்வர் பார்க்கலாம்.
  மிக நன்றி மா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. டிராம் மிக மெதுவாக நின்று நின்று போகும் அப்போது .
   நாங்கள் போனபோது கொஞ்சம் வேகம் என்றார்கள்.
   மாடி பஸ் மகிழ்ச்சியை தந்தது.

   பெரிய நகரங்களின் போக்குவரத்து முன்பு அச்சம் தருவதாக எழுதி இருக்கிறார்கள் , இப்போது வாகனம் பெருகி விட்டது எல்லா ஊர்களிலும் போக்குவரத்து அச்சம் தருவதாக இருக்கிறது. இத்தன் பாலங்கள் அமைக்கப்பட்ட போதும் நெரிசல் குறையவில்லை.

   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.


   நீக்கு
 6. வணக்கம் சகோதரி

  இன்றைய பதிவும் அருமை. 78 லேயே நீங்கள் வடநாட்டு பயணமெல்லாம் சென்றிருக்கிறீர்கள். மகிழ்ச்சி. அதிலும் நம் உறவுகள் அங்கிருந்தால் சென்று தங்கி சுற்றிப்பார்ப்பதென்பது மகிழ்வாகத்தான் இருந்திருக்கும். அந்த சந்தர்ப்பம் தங்களுக்கு கிடைத்தது மிக்க மகிழ்வாக உள்ளது. உங்கள் குடும்ப படம் நன்றாக உள்ளது. ஜைன, புத்த ஆலயங்களும், மற்ற படங்களும் நன்றாக இருக்கிறது. ஹெளரா பாலம் அழகாக உள்ளது. கல்கத்தா காளி தரிசனம் செய்து கொண்டேன்.

  தங்கள் கணவர் எழுதிய கட்டுரை மூலம் புத்தகயா, மற்ற இடங்கள் என அனைத்தையும் சுற்றிப் பார்த்த நிறைவு கிடைத்தது. சாரின் அழகான கையெழுத்து எங்களை வழி நடத்தி, பார்க்காத அத்தனை இடங்களுக்கும் அழைத்துச் செல்கிறது. அதற்கு உங்களுக்கு மிக்க நன்றிகள்.

  கல்கத்தா அப்போதே ஜனசந்தடி நிறைந்த நகரமாக கேள்விபட்டிருக்கிறேன். இப்போது எப்படி இருக்குமோ? பதிவும் படங்களுமாய் இன்றைய சுற்றுலா மனதிற்கு மகிழ்வாக இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
   நீங்கள் பதிவை ரசித்து படித்து விரிவான பின்னூட்டம் தருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

   அப்பாவிற்கு ஊர் மாற்றல் ஆகும் வேலை அவர்களுடன் அந்த அந்த ஊர்களின் சிறப்பான இடங்களை வீட்டுக்கு வரும் உறவினர்களை அழைத்து செல்லும் போது பார்த்துவிடுவோம்.
   அப்புறம் வருட வருடம் பள்ளிச்சுற்றுலாவில் போய் விடுவேன்.
   கணவர் வீடு வந்ததும் அவர்களும் நிறைய இடங்கள் அழைத்து சென்று காட்டி விட்டார்கள்.
   மகன், மகள் இருவரும் நிறைய இடங்கள் காட்டி இருக்கிறார்கள்.
   இறைவன் அருளால் எல்லாம் கிடைத்தது.

   கல்கத்தா ஜனசந்தடி நிறைந்த ஊர் தான். இப்போதும் அப்படியேதான் இருக்கிறது.
   ஆனால் வெங்கட் புதிய கொல்கத்தா நன்றாக இருப்பதாக சொல்கிறார்.

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 7. அழகாய விளக்கம் அடுத்து புவனேஸ்வரம் காண ஆவலோடு....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுன்
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 8. புத்தகயா சென்றிருந்தார்களா... நல்லது... கயாவில் வேறு எதுவும் பார்க்கவில்லையா?

  கல்கத்தா பயணம் அவசர அவசரமாக இடங்களைப் பார்த்ததுபோல இருக்கிறது. பின்பு பத்து நாட்கள் சென்றிருந்த நீங்கள் ஆற அமர நிறைய இடங்களை நிதானமாகப் பார்த்திருப்பீர்கள். அப்போதெல்லாம் கல்கத்தா இனிப்புக்குப் பிரசித்தி பெற்றது இல்லையா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
   மதியம் உணவு முடித்த பின் கிளமபலாம் என்று இருந்து இருக்கிறார்கள். நேரம் வீணாக கழிந்தது எண்கிறார்களே!
   காலையில் கிளம்பி இருந்தால் நிறைய இடங்கள் பார்த்து இருக்கலாம்.
   தொடர்ந்து பயணம் செய்த காரணத்தால் ஓய்வும் தேவைப்பட்டு இருக்கும்.

   கைலை போன போது சோலாரில் இயங்கும் உருளை போன்ற ஒன்று வாங்கி வந்தோம் ஒரு முறை சுற்றி முடிக்கும் போதும் புத்தமத புனித நூலை படித்தது போல் என்பார்கள். இப்போது எங்கள் காரில் இருக்கும்.

   //நீங்கள் ஆற அமர நிறைய இடங்களை நிதானமாகப் பார்த்திருப்பீர்கள். அப்போதெல்லாம் கல்கத்தா இனிப்புக்குப் பிரசித்தி பெற்றது இல்லையா?//

   ஆமாம், நிறைய இடங்கள் பார்த்தோம்.
   ரசகுல்லா மிகவும் பிரசித்தம்.
   என் ஓர்ப்படி நன்றாக செய்வார்.
   வேலைக்கு போகிறவர்கள் எல்லாம் இனிப்பு பெரிய கிளாஸ் பால் குடிக்காமல் வெளியே கிளம்ப மாட்டார்கள் என்பார்கள்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 9. மிக அழகாக விஷயங்களை எழுதிருக்கின்றார்கள்...

  என்ன சொல்வது எனத் தெரியவில்லை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 10. சிறப்பான தகவல்கள். புத்தகயா கோவில் மிகச் சிறப்பான இடம். நாங்கள் பார்த்து வந்தது நினைவில்.... கொல்கத்தா - பழைய கொகத்தாவினை விட புதிய கொல்கத்தா அழகு.

  புவனேஷ்வர் குறித்து என்ன எழுதி இருக்கிறார் என்று பார்க்கும் ஆவலுடன் நானும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
   புத்தகயா (மகா போதி கோயில்) யுனஸ்கோ பராபரிப்பதால் நன்றாக இருக்கிறது.நாங்கள் கலர் படங்கள் எடுத்தோம் எல்லாம் ஆலபத்தில் ஊரில் இருக்கிறது.

   புதிய கொல்கத்தாஅழகுதான்.
   புவனேஸ்வரரில் வரலாற்று புகழ்பெற்ற இடங்கள் நிறைய இருக்கிறது
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 11. நாங்க முதல் முறை 78 ஆம் ஆண்டில் தான் காசி செல்லப் பயணச்சீட்டுகள் எல்லாம் வாங்கி வைச்சுட்டு அந்த வருஷம் மே மாதம் அடித்த புயலில் போக முடியவில்லை. ரயில்கள் எல்லாம் ரத்து செய்து விட்டார்கள். அதன் பின்னர் 20 வருஷம் கழிச்சே போக முடிந்தது, கல்கத்தாவிற்கு என் கணவர் பல முறை அலுவலக ரீதியாகப் போய் வந்திருக்கார். ஆனால் நான் அவருடன் 2015 ஆம் ஆண்டிலே தான் போக முடிந்தது. அப்படி ஒண்ணும் கவரவில்லை. ஆனால் பழமையான நகரம் என்பதை உணர முடிந்தது. கிட்டத்தட்ட ஒரு குப்பைத் தொட்டியே என்றே நான் சொல்லுவேன். ராஷ் பிஹாரி அவென்யூவில் தான் தங்கினோம். ராமகிருஷ்ணா மடம் பார்க்க முடியவில்லை. மூடி விட்டார்கள், மத்தியானம் 3 மணி ஆகும் திறக்க என்றார்கள். ஆனால் நாங்கள் மறுநாளே திரும்பணும் என்பதால் காத்திருந்து பார்க்கவில்லை. திரும்பிட்டோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
   பயணசீட்டு வாங்கி வைத்து போக முடியாமல் போய் விட்டதா?
   உங்கள் பயண அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

   கொல்கத்தாவில் வீடுகள் பார்க்க பயமாக இருந்தது மரங்கள் முளைத்து இருக்கும் அதில் மனிதர்கள் குடியிருந்தார்கள்.

   இப்போது அந்த ஊர் நன்றாக இருப்பதாய் வெங்கட் சொல்கிறார்.
   ராமகிருஷ்ணர் மடம் அழகு. பார்க்க வேண்டிய இடம்.

   நீக்கு
 12. எல்லா விபரங்களும் நன்றாய்க் கொடுத்திருக்கிறார். புவனேஸ்வரும் நாங்க 2015 ஆம் ஆண்டில் தான் போனோம். திரு அரசு சார் போயிட்டு எழுதி இருப்பதைப் படிக்க ஆவலுடன் காத்திருக்கேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் புவனேஸ்வர் பார்க்கவில்லை. உதயகிரி, கோனார்க் எல்லாம் அழைத்து போவதாக சொன்னார்கள் அதற்கு நேரம் வரவில்லை.

   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 13. 78 இல் எடுத்த படம் இன்னும் அழகா க்ளியரா இருக்கு .நேரம் விரயமானதில் வீணாக கழிந்ததில்  சாருக்கு விருப்பமில்லைனு நினைக்கிறேன். ஒவ்வொன்றையும் ரசித்து எழுதியிருக்கிறார் .விக்ட்டோரியா மெமோரியல் மற்றும் zoological பார்க் அதிக நேரம் கிடைத்திருந்தா இன்னும் தகவல்கள் நமக்கு கிடைத்திருக்கும் பயணகுறிப்பில் . .கல்கத்தா கிராமப்புறங்கள் மிக அழகா இருக்குமாம் .தொடர்கிறேன் அக்கா 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஏஞ்சல் வாழ்க வளமுடன்
   நேரம் விரயம் ஆனதில் அவர்களுக்கு பிடிக்கவில்லைதான்.
   ஏதாவது இடம் பார்க்க வேண்டும் என்றால் எப்போதும் அதிகாலை கிளம்பி விடுவார்கள்

   .//விக்ட்டோரியா மெமோரியல் மற்றும் zoological பார்க் அதிக நேரம் கிடைத்திருந்தா இன்னும் தகவல்கள் நமக்கு கிடைத்திருக்கும் பயணகுறிப்பில் //

   ஆமாம் , நீங்கள் சொல்வது சரிதான் ஏஞ்சல். கிராமப்புறம் அழகாய் சினிமாவில் பார்த்து இருக்கிறேன்.

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 14. அருமையான படங்கள் மற்றும் விளக்கங்கள் அம்மா... அன்றே கல்கத்தா பற்றிய தவறான தகவல்கள் உட்பட...

  பார்சுவநாதர் கோயில் பற்றிய ஒரு முக்கிய குறிப்பை, கணக்கியல் பதிவில் எழுதி வைத்துள்ளேன்... உலகப் புகழ் பெற்ற 34 மாயச் சதுரம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
   இந்தியாவின் குப்பைத்தொட்டி இல்லை நன்றாகவே இருந்தது என்று சார் சொல்லி இருக்கிறார் இல்லையா!

   நீங்கள் எழுதி வைத்து இருக்கும் பார்சுவநாதர் கோவில் பற்றி படிக்க ஆவல்.

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 15. எல்லாவற்றையும் படித்தபோது என்னுடைய பாரக்பூர் ஞாபகங்கள் வந்தது. 55இல்இருநது 66.வரை. வாராவாரம் கல்கத்தாதான். எவ்வளவு அழகாக எழுதி இருக்கிறார். கலகநகரம் கல்கத்தா என்று அப்பொழுது சொல்லுவார்கள். அவ்வளவு வேலை நிறுத்தங்களும், கலகமும் நடந்து கொண்டே இருக்கும். எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருந்தாலும் இப்படிபபட்டவைகளும் ஞாபகம் வருகிறது. காசியாத்திரையும் அந்த நாட்களில் காசியிலேயே தங்கி இருந்து முடித்தோம்.. நான்கைந்து குடும்பங்களாகப் போய் வந்தோம். உங்கள் பதிவைப்படித்ததும் என் எண்ண அலைகள். நன்றி. அன்புடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. வணக்கம் காமாட்சி அக்கா, வாழ்க வளமுடன்
   உங்கள் கல்கத்தா நினைவுகளை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி தரும் விஷயம்.
   காசியை நிறைய நாட்கள் தங்கி பார்ப்பது நல்ல விஷயம் .
   உங்கள் எண்ண அலைகளில் வந்தவைகளை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி தருகிறது. பகிர்வுக்கு நன்றி. அன்புக்கு நன்றி.

   நீக்கு
 16. கல்கத்தா பற்றி குப்பையான இடம் என நானும் கேல்விபட்டேன்.ஆனா இங்கு ஒரு சானல் இந்திய நகரங்கள் என ஒரு டாக்குமென்ரி போட்டார்கள். எல்லா நாட்டினுடையதும் தான். அப்போ கல்கத்தா பற்றி பார்த்தேன். அப்படி பெரிதாகுப்பையாக காணவில்லை.ஆனா சனக்கூட்டமாக இருந்தது. இனிப்பு பற்றியும் சொன்னார்கள்.எல்லா ஸ்வீட்,செய்யும் முறைகளையும் காட்டினார்கள். காளி கோவிலும் காட்டப்பட்டது.போக முடியாத இடங்களை இப்படிதான் பார்க்கவேண்டும். சார் எழுதியிலிருந்து ஓரளவு இடங்களை பற்றி அறியமுடிந்தது.
  சிறப்பன சுற்றுலா. இதை வாசிக்க எப்போ நிலமை சரியாகி ஊருலா கிளம்புவோம் என இருக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் பிரியசகி அம்மு, வாழ்க வளமுடன்
   நலமா?

   கொல்கத்தா இந்தியாவின் குப்பைத்தொட்டி என்பார்கள் அப்படி இல்லை நன்றாக இருந்தது என்று தான் சாரும் எழுதி இருக்கிறார்கள்.

   மக்கள் கூட்டம் அதிகம் தான்.
   இனிப்பு அவர்களின் பிடித்த உணவு. கல்த்தா ரஸகுல்லாவை மறக்க முடியுமா?

   இறைவன் அருளால் நிலமை சரியாகிவிடும், நீங்களும் ஊர்க்கு போய் உறவுகளை , கோவில்களை கண்டு வாருங்கள்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 17. அருமையான பகிர்வு. இரண்டு தினங்களே இருந்தபடியால் இதில் கூறப்பட்டுள்ள பல இடங்களுக்குச் செல்ல முடியவில்லை. ராமக்கிருஷ்ண மடம் பார்க்க முடியாதது வருத்தமே. கொல்கத்தாவின் அனைத்து வகை போக்குவரத்து வாகனங்களையும் படமாக்கினேன். இந்த மாடி பஸ் இப்போது இருக்கிறதா தெரியவில்லை. முதல் படம் அழகு.

  பதிலளிநீக்கு