வெள்ளி, 22 ஜனவரி, 2021

உல்லாச பயணம்



என் கணவர்  பழனியில் பழனி ஆண்டவர் கல்லூரியில்   இந்தியப் பண்பாடு  பி.ஏ படித்தார்கள்.  இளங்கலை இரண்டாமாண்டு  படிக்கும் போது  வட இந்தியாவிற்கு கல்விச்சுற்றுலா போய் இருந்தார்கள். போய் வந்த பயண அனுபவங்களை ஒரு நோட்டில் அவர்கள் கைப்பட  எழதி வைத்து இருந்தார்கள்  அந்தப் பயணக் கட்டுரை இங்கே பகிர்வதாக சொல்லி இருந்தேன்.  தொடர் கட்டுரையாக பதிய எண்ணம். படிக்க சிரமம்  இல்லாமல் இருக்கும். 
 
கல்லூரி காலத்தில் சக நண்பர்களுடன் உல்லாசபயணம் போவது என்றால் மகிழ்ச்சி தானே!

 பயணத்தின் போது எடுத்தபடம்
மகிழ்ச்சியோடு ஆரம்பித்து விட்டது

ஆசிரியர்களும் மாணவர்களும்

 இடையில் ஏற்பட்ட கோளாறு கொஞ்சம் உற்சாகத்தை  குறைத்து இருக்கும்
முன்பு எல்லாம் விளைநிலங்கள்  நிறைய இருக்கும் தானே! பசுமையான கண்ணுக்கினிய  காட்சிகளில் லயிப்பு 

சிறுவயதில் குகைகளுக்குள் போகும் போது  குதுகலமாக ஆர்ப்பரித்து சிரித்து இருப்பார்கள்.

ஆசிரியர் இடது பக்கம் கடைசியில் கைகட்டிக் கொண்டு நெற்றி நிறைய விபூதியுடன் என் கணவர் 


நிறைய விவரங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது

அவர்கள் இருக்கும் போதே போட நினைத்தேன் முடியவில்லை  . அப்போது போட்டு இருந்தால் அவர்களின் அந்த நேர உற்சாக மனநிலையை அவர்களின் அனுபவத்தையும் பகிர்ந்து இருக்கலாம்.


அக்டோபர் 2 ஆம் தேதி சாஞ்சி நோக்கி பயணம்   அடுத்த பதிவில் தொடர்ந்து வாங்க .

படிக்க முடிகிறதா ? பெரிது செய்து படிக்கலாம் . அவர்கள்  எழுதியதை அப்படியே படிக்க ஆசை  படுகிறேன். உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.

                                                                  வாழ்க வளமுடன்
==========================================================================

30 கருத்துகள்:

  1. எங்கள் ஊரிலிருந்து எழும்பூர் நோக்கி பயணம் ஆரம்பம்... குகை பயணம், புகை வண்டி பெட்டி மாற்றம் என அனைத்தும் அருமை...

    படிக்க முடிகிறது என்பதால் இவ்வாறே இருக்கலாம் அம்மா...

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் திண்டுக்கல் தன்பாலன், வாழ்க வளமுடன்

    உங்கள் ஊரிலிருந்து பயணம் ஆரம்பிக்கிறது.

    திண்டுக்கல் பேர் படித்தவுடன் உங்கள் நினைவு வந்தது.

    //படிக்க முடிகிறது என்பதால் இவ்வாறே இருக்கலாம் அம்மா...//

    படிக்க முடிவது மகிழ்ச்சி .
    உங்கள் கருத்துக்கு நன்றி தனபாலன்.

    பதிலளிநீக்கு
  3. அருமை .பெரிது செய்யாமலேயே படிக்க முடிகிறது. இது எந்த வருடம் நடந்த பயணம் ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீ, வாழ்க வளமுடன்
      படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      1965 ஆம் ஆண்டு நடந்த பயணம்

      நீக்கு
  4. என்ன ஒரு அழகான கையெழுத்து !!! பயணம் ரசிக்கும்படி உள்ளது ! அடுத்த பதிவுக்குக் காத்திருக்கிறேன் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் துளசி கோபால், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  5. முத்து முத்தான கையெழுத்து அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மதுரை தமிழன், வாழ்க வளமுடன்
      ஆமாம், அவர்கள் கையெழுத்து அழகாய் இருக்கும்.

      நீக்கு
  6. அந்த கால தமிழ் எழுத்துகளை பார்க்க ஒரு வாய்ப்பு... இப்போது 'லை' என்ற எழுத்து அப்போது யானை துதிக்கையை தூக்கிய போல இருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இப்போது 'லை' என்ற எழுத்து அப்போது யானை துதிக்கையை தூக்கிய போல இருக்கும்//

      ஆமாம் , நீங்கள் சொல்வது சரி.

      அந்தக் கால தமிழ் எழுத்து ,அப்போது இருந்த இடங்கள் இப்போது எப்படி மாறி இருக்கிறது, நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ளலாம் இந்த கட்டுரையில் தமிழன் தொடர்ந்து வாங்க.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  7. அச்சடித்தது போல் அழகான கையெழுத்து. அந்த கால அனுபவங்கள் எப்பவும் வாசிக்க சுவாரஸ்யமான ஒன்று தான். பகிர்ந்தமைக்கு நன்றிங்க அம்மா. இது போன்ற நினைவலைகள் மூலம் அவர் என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தங்கமணி, வாழ்க வளமுடன்
      அனுபவங்கள் எப்பவும் வாசிக்க சுவாரஸ்யம் தான்.
      நினைவுகளில் என்றும் வாழ்வார்கள் என்பது உண்மை.
      உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.

      நீக்கு
    2. ஹாஹாஹாஹா, கோமதி, ஏடிஎம்மோட பெயர் புவனா! அப்பாவி தங்கமணி என்பது அவருடைய புனைப்பெயர். வலைப்பக்கத்துக்காக வைத்துக் கொண்டது. அதைச் சுருக்கி நான் ஏடிஎம் என்றே கூப்பிடுவேன்! :)))))

      நீக்கு
  8. 1965-இல் வட இந்தியப் பயணம் - அதுவும் இரயிலில்... ஸ்வாரஸ்யமான தொடக்கம் கோமதிம்மா. அழகான கையெழுத்து. படத்திலிருந்து சுலபமாகவே படிக்க முடிந்ததும்மா. அப்படியே தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்

      //அழகான கையெழுத்து. படத்திலிருந்து சுலபமாகவே படிக்க முடிந்ததும்மா. அப்படியே தொடருங்கள்.//

      நல்லது வெங்கட், அப்படியே தொடர்கிறேன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  9. என்ன அழகான கையெழுத்து...   கோர்வையாக எழுதி இருக்கிறார்.  எத்தனை வருட பழசு..   பாதுகாப்பாக நல்ல நிலையில் இருப்பதும் பாராட்டுக்குரியது.  கட்டுரையை அவர் கையெழுத்திலேயே படிப்பது சந்தோஷம்.  கைகட்டிக்கொண்டு அடக்கமான மாணவராக விபூதியுடன்...  தொடர்கிறேன் அக்கா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      சின்ன வயதில் சாரின் கையெழுத்தை பக்கத்து வகுப்பு குழந்தைகளுக்கு கொண்டு காட்டுவார்களாம் அவர்கள் இரண்டாம் வகுப்பு ஆசிரியர். அவர்களுக்கு பிடித்த ஆசிரியர் அவரை போல அன்பான டீச்சர் அப்புறம் கிடைக்கவில்லை என்பார்கள்.

      //பாதுகாப்பாக நல்ல நிலையில் இருப்பதும் பாராட்டுக்குரியது. கட்டுரையை அவர் கையெழுத்திலேயே படிப்பது சந்தோஷம்.//
      நன்றி ஸ்ரீராம்.

      பத்திரமாக வைத்து இருந்த ஓவிய நோட்டு, பாட்டு நோட்டு(பிடித்த சினிமா, பக்தி பாடல்களை எழுதி வைத்து இருப்பார்கள்) எல்லாம் ஒருவர் தன் மகளுக்கு காட்டிவிட்டு தருவதாய் வாங்கி சென்று தரவில்லையாம், அது அவர்களுக்கு மிகவும் வருத்தம்
      உண்டு.

      விசிலில் பாட்டு அழகாய் பாடுவார்கள் அதை பதிவு செய்யாமல் விட்டது வருத்தம்.
      கைகட்டிக் கொண்டு இருப்பது மிகவும் பிடித்தமானது அவர்களுக்கு.
      உங்கள் கருத்துக்கு நன்றி.


      நீக்கு
  10. மிக அருமை. நல்ல கையெழுத்து. அவர் இருக்கும்போது இதனைப் பதியாமல் விட்டுவிட்டீர்களே. சின்ன வயதிலேயே ஒரு ஒழுங்குமுறை தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்

      நான் பதியாமல் விட்டது நிறைய தமிழன்.இப்போது நினைத்துப் பார்க்கிறேன் , அவர்கள் பேச்சை, பாட்டை விசிலில் இசைக்கும் கர்நாடக இசையை என்று நிறைய.

      அவர் கள் இருக்கும் போது பதிய நினைத்தபோது கர்நாடக தொடரை முடி முதலில் அப்புறம் தொடரலாம் என்றார்கள்.

      அவர்கள் நினைவில் வாழப் போகிறேன் அதனால் அப்போது பதியட்டும் என்று நினைத்தார்கள் போலும்.

      காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை நேரத்திற்கு எல்லாம் செய்வார்கள் அவரகள் வேலைகளில் ஒழுங்கு முறை எப்போதும் இருக்கும். நினைத்தமாதிரி திடீர் என்று எல்லாம் முடிவு எடுக்க மாட்டார்கள். முன்பே திட்டமிடல் வேண்டும் என்பார்கள்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.



      நீக்கு
  11. ஐயா அவர்களது கையெழுத்து எத்தனை
    எத்தனை அழகு..

    தெளிவான நடை... அருமை..
    அடுத்த பதிவுக்குக் காத்திருக்கிறேன்...

    நலமெலாம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  12. வாருங்கள் கோமதி!
    ம‌றுபடியும் தொடரும் இந்த வலைப்பயணம் உங்களுக்கு ஆழ்ந்த அமைதியையும் ஆறுதலையும் தர மிகவும் விரும்புகிறேன்!
    உங்கள் கணவ‌ரின் பயண அனுபவம் படித்தேன். எங்கும் தங்கு தடையின்றி, அடித்தல் திருத்தலின்றி சீரான கையெழுத்தில் சம்பவங்களை தொகுத்திருக்கிறார்க்ள். அதுவும் அந்த வயதிலேயே என்பது பாராட்டத்தக்க விஷயம். அவர்கள் மிகவும் systematic என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  13. அக்கா ! மிக அழகான கையெழுத்துக்கா .சூப்பரா எழுதியிருக்கார் சார். இப்படியே இருக்கட்டும்க்கா .முத்து முத்தான எழுத்துக்கள் .எத்த்னை  உற்சாகமுடன் ஆர்வமுடன் எழுதியிருப்பார் என்பது புரிகிறது .அதுவும் கோடுபோடாத நோட்டில் அவ்ளோ அழகுக்கா ..மிக அருமையான  பயணக் கட்டுரை .அந்த நோட்டின் அட்டையை  if possible லேமினேட் செஞ்சுடுங்கக்கா ..அந்த அட்டைப்படம் vintage வகை எங்கும் கிடைக்காது .

    பதிலளிநீக்கு
  14. அழகான கையெழுத்து இரவு கண்டிப்பாக பெரிதாக்கி படிப்பேன் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  15. திருத்தமான கை எழுத்து. நன்றாய்ப் படிக்க முடிகிறது. தொடர்ந்து படிக்கக் காத்திருக்கேன்.

    பதிலளிநீக்கு
  16. மிக அருமை. நேர்த்தியான விவரிப்புடன் முத்துமுத்தான கையெழுத்தும். மா‘லை’, கா‘லை’ .. அந்நாளைய வளைந்த கொம்புடனான எழுத்துக்கள் தனிக் கவனம் பெறுகின்றன.

    பதிலளிநீக்கு
  17. அன்பு தங்கச்சி கோமதி வாழ்க வளமுடன்.
    நேற்றே பார்க்காமல் போனேன்.
    ஒன்றும் பாதகம் இல்லை. சார் எங்கள் திண்டுக்கல்லில் இருந்து கிளம்பி இருக்கிறார்கள். அந்த நேரம் நாங்கள், அப்பாவின் வேலை மதுரைக்கு மாற்றலாகி
    பசுமலை வந்துவிட்டோம்.

    எத்தனை இனிமையான பயணம். அந்த வயதுக்கே உரிய உற்சாகம். அழகான குறிப்புகளுடன்
    ஒவ்வொரு நடப்பையும்
    முத்து முத்தான கையெழுத்தில் பதிந்தது ஒரு அருமை என்றால்,
    அதைப் பாதுகாத்து வைத்தது இன்னும் அருமை.
    க்ராண்ட் ட்ரங்க் எக்ஸ்ப்ரஸ் இந்த வழியாகப்
    போகும் என்று பாட்டி விவரமாகச் சொல்லுவார்.

    இட்டார்சி, விந்திய மலைப் பகுதியின் காடுகள்
    எல்லாமே தெளிவாகப் படிக்க முடிகிறது அம்மா.
    உங்கள் உழைப்பு ,அன்பு இதில் படிந்திருக்கிறது.

    பல விஷயங்களைப் பதிய முடியாமல் எதிர்பாராதது நடந்து விடுகிறது.
    என்ன செய்யலாம்.
    இந்தப் பயணத்தும் போது உங்களுடனும் சாருடனும் நாங்களும்
    பயணிக்கிறோம். நன்றி மா.

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
    நீங்கள் இருந்த ஊர் இல்லையா அப்பாவுடன்.
    நான் அப்பாவுடன் கோவையில் இருந்தேன்.

    கையெழுத்து அழகாய் இருக்கும் , அவர்கள் படித்த போது இருந்து அனைத்தையும் பத்திரப்படுத்தி வைத்து இருக்கிறார்கள்.

    படிக்க முடிவது அறிந்து மகிழ்ச்சி. அவற்றை கணினிக்கு வலைஏற்றுவது படங்களை தேடி போடுவது மட்டுமே என் வேலை.

    முன்பு எல்லா பாட்டிகளும் ரயில் வரும் நேரம் போகும் ஊர் எல்லாம் தெளிவாக சொல்வார்கள்.


    பல விஷயங்களை பதிய முடியாமல்தான் ஆகி விட்டது. இறைவன் விருப்பம் மட்டுமே நிறைவேறும் என்பதை உணர்ந்து கொண்டே இருக்கிறேன் ஒவ்வொரு நேரமும்.

    உங்கள் விரிவான அன்பான கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  19. படத்திலிருக்கும் அந்த முகத்தை பார்த்தவுடனே தெரிகிறது சாரின் முகம். அழகான கையெழுத்து.படிக்க கூடியதாகவே இருக்கு அக்கா. நல்ல காலம் பத்ரமாக நீங்க வைத்திருக்கிறீங்க.ஞாபகங்கள் என்றும் வாழவைப்பவை. இதெல்லாம் பொக்கிஷங்கள்.பாதுகாப்பாக வைத்திருங்க. எனக்கும் லை, றா,றொ எழுத்துக்களை பார்க்கும்போது பழைய ஞாபகம் வருகிறது.
    அக்காலத்தில் பள்ளி,கல்லூரி சுற்றுலா எனில் மிக்க மகிழ்ச்சியாக இருக்கும். மறக்கமுடியாதவை.நெகிழ்ச்சியான பதிவு.

    பதிலளிநீக்கு
  20. அழகிய எழுத்தில் இனிய நினைவுகள் ....தொடர்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அனு பிரேம், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      எழுத்துக்களை தொடர்வதற்கு மகிழ்ச்சி.

      நீக்கு