நன்றி சொல்ல வேண்டும் இறைவனுக்கு . என் துயரமான நாட்களில் உற்ற துணையாக உடன் இருந்து உதவிய இரு பக்க சொந்தங்களுக்கும் நன்றி. உறவுகள் வருமுன்னே அக்கம் பக்கம் நட்புகள் உடனே வந்து உதவியதை காலம் முழுவதும் மறக்க முடியாது அவர்களுக்கும் நன்றி.
மற்றும் வலைத்தள நட்புகள் அனைவருக்கும் நன்றி. "அக்கா", "தங்கச்சி" சகோதரி என்று வாய் நிறைய அழைத்துஉடன்பிறவா சகோதர சகோதரிகளாக ஆறுதல் மொழிகள் சொல்லி அழைத்த அனைத்துஅன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி.
"அம்மா" என்று அழைத்து வலைத்தளத்திற்கு வாருங்கள்" என்றும் , மனகவலைகளை மாற்றும் மருந்து இது இணையத்திற்கு வருக" என்றும் அழைத்து கொண்டே இருக்கும் அனைத்து நட்புகளுக்கும் நன்றி.
தங்கள் வலைத்தளங்களில் இரங்கல் பதிவு போட்டு ஆறுதல் தெரிவித்த நட்புகளுக்கு நன்றி.
திருமணம்ஆகி வாழ்க்கை துணைவருடன் வசித்த ஊர்கள் மூன்று,அங்கு அன்பாய் பழகிய நட்புகள் ஆறுதலாக அன்பாய் பேசிக் கொண்டு இருக்கிறார்கள் அவர்களுக்கும் நன்றி .
மகன் ஊருக்கு வந்து இருக்கிறேன் இப்போது. இங்கு வரும் வரை எங்களுக்கு (என் மகனுக்கும் எனக்கும்) எத்தனை எத்தனை அனுபவங்கள் நாளும் ! உறவுகளும், நட்புகளும் இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டார்கள். அவர்களின் பிரார்த்தனைகளுக்கு நன்றி.
நல்லவிதமாக அனைத்தையும் நடத்தி கொடுத்த என் இதய தெய்வத்திற்கும், இறைவனுக்கும் நன்றி.
என் கணவர் இளங்கலை முதலாண்டு படிக்கும் போது வடஇந்தியப் பயணம் சென்றார்கள் . அவர்கள் கைப்பட எழுதிவைத்து இருந்த பயணக்கட்டுரையை தொடரவிரும்புகிறேன். இறையருள் விருப்பத்தை நிறைவேற்றி வைக்க வேண்டும்.
வருகிறேன் விரைவில்.
வாழ்க வளமுடன்.
வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஇணையத்தில் புதுத் தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
இறைவன் உங்களுக்கும் உங்களைச் சார்ந்தவர்களுக்கும் மனத் திண்மையைத் தர வேண்டுகிறேன்
வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் எதிர்பார்ப்புக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி.
ஆருதல் என்று மீண்டும் கூறி உங்கள் நினைவுகளை தூண்ட விரும்பவில்லை... நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும் இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்று உங்களுக்காக பிரார்த்திக்கின்றேன்.. உங்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது வழக்கம் போல உங்கள் பதிவுகளை தொடருங்கள் கவலைகளை மறங்கள்.. வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவணக்கம் மதுரை தமிழன், வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் ஆறுதல் பின்னூட்டத்தை பழைய பதிவில் படித்தேன், நன்றி உங்கள் ஆறுதல் வார்த்தைகளுக்கு.
உங்கள் பிரார்த்தனைக்கு நன்றி உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் நன்றி
காலமே கவலைகளைப் போக்கும் அருமருந்து
பதிலளிநீக்குபுதிய தொடரைத் தாருங்கள் சகோதரி
வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
நீக்குநீங்கள் சொல்வது சரிதான் .
உங்கள் கருத்துக்கு நன்றி
தங்களுக்கு என் வணக்கங்கள்...
பதிலளிநீக்குவணக்கம் சகோ துரைசெலவராஜூவாழ்க வளமுடன்
நீக்குதங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி..
பதிலளிநீக்குஎல்லாம் வல்ல இறைவன் எல்லாருக்கும் உற்றதுணையாய் இருந்தருள்வானாக..
இறைவன் உற்றதுணையாக இருந்து வழிநடத்துவார் என்று நம்புவோம் உங்கள் கருத்துக்கு நன்றி.
நீக்குமீள் வருகைக்கு நன்றி கோமதி. காலம் உங்கள் மனதுக்கு ஆறுதலைத் தரும் பேரன் முகம் கவலைகளை நீக்கும். மனத்திண்மையுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன். உங்களிடம் பேசினால் நான் கதறி விடுவேனோ என்னும் அச்சத்தால் பேசுவதைத் தவிர்த்தேன். :( பேசவில்லையே என்னும் குறையும் இருக்கத்தான் செய்கிறது. அவர் விட்டுச் சென்றவற்றை முடியுங்கள். இறைவன் துணை இருப்பான். உங்களோடு கூட உங்கள் கணவரும் மானசிகமாப் பங்கு எடுத்துக் கொண்டு முடித்துக் கொடுப்பார். அரசு ஐயா அவர்களின் ஓவியங்களை இனி பார்க்க இயலாதே என்னும் வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. வழக்கம் போல் எழுதுங்கள்.
பதிலளிநீக்குவணக்கம் கீதாசாம்பசிவம், வாழ்க வளமுடன்
நீக்குநீங்கள் சொல்வது போல் பேரன் என் கவலைகளை போக்கும் அருமருந்தாய் இருக்கிறான்.
நீங்கள் சொல்வது போல் இறைவனும் அலர்களும் உடன்இருப்பர்கள் என்று நம்புகிறேன்.
உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.
வணக்கம் கோமதிம்மா...
பதிலளிநீக்குஇதுவும் கடந்து போகும். தங்களை இங்கே கண்டதில் மகிழ்ச்சி.
வரும் காலத்தில் எல்லாம் நல்லவையாகவே நடக்கட்டும். இனிய நினைவுகளோடு நாட்கள் நகரட்டும். வழக்கம் போல பதிவுகளைத் தொடருங்கள் அம்மா.
வணக்கம் வெங்கட் , வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது போல் வருங்காலத்தில் நல்லதே நடக்க இறையருள் துணை இருக்கும் என்று நம்புகிறேன்.
உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.
வாழ்க வளமுடன் என் அன்பு தங்கச்சி.
பதிலளிநீக்குஇப்பொழுதுதான் நிம்மதி. இணைய வாசலத் திறந்து விட்டீர்கள். இனித் தடை இல்லை. உங்கள் சாரின் எழுத்துக்களை உலவ விடுவதால்
எங்களுக்கும் ஒரு ஆறுதல் கிடைக்கும்.
மகள் கயல் பதிவிடும் நல்ல படங்களையும்
சேர்த்துக் கொள்ளுங்கள்.
இரண்டு பேரும் இருப்பது போல இருக்கட்டும். அவரைத் தனியாக விட வேண்டாம்.
நேன்மேலும் மனம் உறுதி
பெற வாழ்த்துகள். என்றும் நலம் திகழ வேண்டும்.
வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
நீக்குஇணைய வாசலைத்திறந்தற்கும், இதயவாசலை திறப்பதற்கும் உறுதுணையாக இருந்தது நீங்கள்தான். கஷ்டமான நேரத்தை கடக்க உதவியாக இருந்தீர்கள்.
அதை மறக்க முடியாது.
உங்கள் அன்பும் மற்றும் அனைவரின் அன்பும் என்னை மீண்டும் இங்கு வரவழைத்து விட்டது.
மகளின் படங்களை சேர்த்துக் கொள்கிறேன்.
மனபலம் அவர்கள் கூட இருப்பதாக நினைப்பதால் தான் வந்து கொண்டு இருக்கிறது.
உங்கள் அன்பான கருத்துக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி அக்கா.
அக்கா மீண்டும் இணையதளத்தில் பார்த்தது மிக்க மகிழ்ச்சி.கவலைகளை மறந்து உங்க எழுத்தினை உங்க பக்கத்தில் தொடருங்கள்.ந்ன்றும் நலமுடன்,தெம்புடன் வாருங்கள்.
பதிலளிநீக்குவணக்கம் பிரியசகி அம்மு, வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் எல்லோர் அன்பு அழைப்பால் வந்து இருக்கிறேன். தொடர்கிறேண்
உங்கள் அன்பான கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி அம்மு.
அன்பு சகோதரி!!
பதிலளிநீக்குவாழ்க்கையின் மிகப்பெரிய துயரத்தை சந்தித்துக்கொண்டிருக்கும் உங்களை நினைத்து வருந்தாத நாளில்லை. இப்போது மறுபடியும் வலைப்பக்கம் வந்திருப்பது சற்று நிம்மதியாக இருக்கிறது. நிறைய எழுதுங்கள். அது தான் மனதை பலப்படுத்தும் மருந்து. நிறைய எழுத வேண்டும் போல இருக்கிறது. ஆனால் எதையாவது எழுதி உங்களை மீண்டும் துயரத்தில் தள்ளி விடுவேனோ என்றும் அச்சமாக இருப்பதால் மனதில் நினைப்பதை எழுதாமலேயே விடுகிறேன். மனதை வலிமையாக்கிக்கொண்டு தொடர்ந்து வாருங்கள் கோமதி! அதோடு உடல் நலத்தையும் கவனித்துக்கொள்ளுங்கள்.
வணக்கம் சகோ மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்
நீக்குநினைத்துப் பார்க்க முடியாத அதிர்ச்சியான துயரம், இன்னும் நம்பமுடியவில்லை.
அவர்களை விட்டு விட்டு எப்படி நான் இருக்கிறேன் என்பதும் என்னால் நம்பமுடியவில்லை .
இனி வரும் நாட்கள் அவர்களின் நினைவுகளுடன் பயணிக்கவேண்டும்.
மனதை தினம் நீங்கள் எல்லோரும் அன்பால் வலிமை படுத்தி வருகிறீர்கள்.
உடல்நலத்தைப்பார்த்துக் கொள்கிறேன்.
உங்கள் அன்பான ஆறுதல் மொழிகளுக்கு நன்றி.
சகோதரி கோமதி உங்களை இங்கு பார்த்ததில் ஓரளவு மனது நிம்மதி பல விதங்களில் ஆறுதல் கூற முடியும் ஆனால் பட்ட மரத்திற்கு தான் வலி தெரியும் மனது அமைதிப்படுத்தி எழுத முன்வாருங்கள் பெற்ற பசங்களும் பேரன் பேத்திகளும் உற்ற துணையாக இருப்பார்கள் கடவுளின் வழி அதுதான் வாருங்கள் நிறைய உங்களை எழுத்துக்களின் மூலம் சந்திக்கிறேன் அதிகம் நான் உங்களிடம் தொடர்பு கொள்ளாவிட்டாலும் என் மனதில் உங்களைப் பற்றி எண்ணம் இருந்து கொண்டே இருந்தது வாருங்கள் மன அமைதி பெறுங்கள் அன்புடன்
பதிலளிநீக்குவணக்கம் காமாட்சி அக்கா, வாழ்க வளமுடன்
நீக்குபேரன் பேத்திகள் மன ஆறுதல் தருகிறார்கள்.
பேத்தி பக்கதுணையாக இருந்தாள் என்னுடன்.
பேரன்கள் பேசி கொண்டு இருப்பார்கள்.
பசங்களும் உற்றதுணையாக இருக்கிறார்கள்.
உங்கள் அன்பான ஆறுதலான வார்த்தைகளுக்கு மிகவும் நன்றி.
வணக்கம் அம்மா...
பதிலளிநீக்குகைப்பட எழுதி வைத்து இருக்கும் பயணக்கட்டுரையை தொடர உள்ளதாக குறிப்பிட்டு உள்ளீர்கள்... அவையும் சிறிது ஆறுதலாக இருக்கக்கூடும்... தொடருங்கள் அம்மா...
வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
நீக்குசார் கைப்பட எழுதி வைத்த பயணக்கட்டுரை அவர்கள் இருக்கும் போதே பதிவிட நினைத்தது. இப்போது பதிவிட மன ஆறுதலை தரும் என்று நினைக்கிறேன்.
உங்கள் ஆறுதலான கருத்துக்கு நன்றி.
இந்த அதிர்ச்சி தகவல் அறிந்த பின், இணையம் வரவே மனம் ஒப்பவில்லை... மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டேன்... நான் மட்டுமல்ல; எனது குடும்பமும்...
நீக்குஅதிர்ச்சி தான் தன்பாலன், இரவு படுக்க போகும் போது நன்றாக இருந்தவர்கள் காலையில் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அன்பு குடும்ப உறவுகளாக பழகி விட்டதால் மனது பாதிக்கபடும் தான். சார் சொல்வார்கள் ஏதாவது கணினி பிரச்சனை செய்தால் தனபாலன் இருக்கிறார் அப்புறம் என்ன அவரிடம் கேள் என்று. என் வலைத்தளம் வரும் எல்லோரையும் அவர்களுக்கு தெரியும்.
நீக்குஉங்கள் அன்பு குடும்பத்தினருக்கும் என் அன்பும் நன்றியும்.
ஆஆஆ கோமதி அக்கா வாங்கோ வாங்கோ உங்களை இங்கு பார்த்ததும் சொல்ல வார்த்தைகள் இல்லை எனக்கு... மகிழ்ச்சி.
பதிலளிநீக்குஎழுதத் தொடங்குங்கோ.
வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்
நீக்குஇங்கு வரவழைத்தது உங்கள் அன்புதான்.
உங்கள் மகிழ்ச்சியான புன்னகை முகம் மனகண்ணில் வந்து மன ஆறுதலை தருகிறது.
நன்றி அதிரா.
கோமதி அக்கா ,உங்களை பதிவுகளூடே சந்திப்பதில் சந்தோஷமக்கா .உறவுகளும் உங்களுக்கு மிகவும் பிடித்த இயற்கை சூழலும் உங்களுக்கு நல்லதொரு மாற்றத்தை தரும் .சார் அவர்களின் பயணக்கட்டுரையை வாசிக்க ஆவலுடன் இருக்கிறேன் .அன்புடன் ஏஞ்சல்
பதிலளிநீக்குவணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்
நீக்குஆமாம் ஏஞ்சல், அன்பான உறவுகள் அருகாமையும் இயற்கை சூழலும் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. காலை சூரிய உதயம், பறவைகள் வீட்டுக்கு வருகை, மலைகள் என்று மனதுக்கு இதமான காட்சிகள் பல.
உங்கள் ஆவல் மகிழ்ச்சி அளிக்கிறது. அன்பான கருத்துக்கு நன்றி ஏஞ்சல்.
அந்தச் செய்தி திடுக்கிடத் தான் வைத்து விட்டது. எப்படி எந்த இடத்தில் ஆரம்பிப்பது என்ற தயக்கம் என்னை இத்தனை நாட்கள் வாட்டியது. நானும் கிட்டத்தட்ட வலையுலகிலிருந்து விலகியிருந்தது பலதை அறியாமலும் செய்து விட்டது. காலம் ஒருவிதத்தில் மருந்து தான். எதேச்சையாக வந்த பொழுது கண்ணில் பட்ட உங்கள் வலைத்தளம் மன பாரத்தை இறக்கி வைக்க ஏதுவாயிற்று. தொடர்ந்து எழுத்துப் பணியைத் தொடர்வது ஆறுதலாக இருக்கும்.
பதிலளிநீக்குதொடருங்கள். தொடர்கிறோம்.
வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்
நீக்குமனம் இன்னும் ஆறுதல் அடையவில்லை. எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்பதாலும் ஆறுதல் மொழிகளை கூறி என்னை ஆற்றுப்படுத்த நினைப்பதாலும்
தான் இந்த பதிவு. மேலும் இப்போது நான் எங்கு இருக்கிறேன் என்பதை நட்புகள் தெரிந்து கொள்ளவும் இந்த பதிவு சார்.
வருவேன் கொஞ்ச நாட்கள்கழித்து. காலம் ஒருவித மருந்துதான்.
உங்கள் ஆறுதலான அன்பான கருத்துக்கு நன்றி.
வணக்கம் கோமதி அக்கா... மீண்டும் வலையுலகத்துக்கு வந்திருப்பதில் பெருமகிழ்ச்சி. நம் இணைய உறவுகளால் மனம் சற்று திசைதிரும்பி கலகலப்பாகும். ஸாரைப் பற்றிய நினைவுகளையும் அனுபவங்களையும் அவ்வப்போது பகிருங்கள். அவர் விட்டுச் சென்றிருக்கும் பணியை முடிப்பதும் சிறப்பு.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்குநீங்கள் சொல்வது சரிதான். நம் இணைய உறவுகள் மனத்தை திசை திருப்பினார்கள், அவர்களுக்கு நன்றி. குடும்ப உறுப்பினர்களும் எழுதுவதில் இறைவனை தொழுவதில் மனத்தை செலுத்து என்று சொன்னார்கள்.
நினைவுகள் பகிர நினைத்து இருக்கிறேன். அவர்கள் விட்டு சென்ற பணியை இறையருளால் முடிக்க வேண்டும்.
உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.
உங்கள் எழுத்தினைத் தொடர்ந்து காண காத்திருக்கிறோம். இறையருள் துணையுடன் ஆரம்பியுங்கள்.
பதிலளிநீக்குவணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.
எழுத்தில் சற்று நாட்டம் செலுத்துங்கள் மனம் சற்றே மாற்றம் தரும்.
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்.
வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்குஆமாம், எழுத வேண்டும். மன மாற்றத்திற்கு உதவும்.
உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.
வணக்கம் அம்மா ..
பதிலளிநீக்குதங்களின் எழுத்துக்களை மீண்டும் கண்டதில் மிக மகிழ்ச்சி ....
வணக்கம் அனுபிரேம், வாழ்க வளமுடன்
நீக்குஎனக்கும் உங்களுடன் பேசுவது மகிழ்ச்சி மன ஆறுதல்.
நன்றிம்மா.