திங்கள், 25 ஜனவரி, 2021

உல்லாசப்பயணம் - பகுதி 3



பயணக்குறிப்பு உள்ள நோட்டில் பின் பகுதியில் போன இடங்களின் படங்கள் (அங்கு விற்கும் படங்களும் , போட்டோ க்கள் சிலவும் )ஒட்டி வைத்து இருக்கிறார்கள்.

உல்லாசப்பயணம்உல்லாசப்பயணம்  -2 என் கணவரின் கல்லூரிச்சுற்றுலா தொடர் பதிவு முந்தின பதிவு படிக்காதவர்கள் படிக்கலாம். 

சென்ற பதிவில் சாஞ்சி ஸ்தூபியைப் பார்த்து விட்டோம். அடுத்து  குன்றிலிருந்து இறங்கி கீழே  உள்ள தொல்பொருள் ஆராய்ச்சித் துறையினரின் பொருட்காட்சிப் பார்க்க வாங்க என்றேன்.


                            




நன்றி - கூகுள்




அந்தக் காலத்திலேயே ஒரு டம்ளர் தண்ணீர்  5.ந.பை வீதம்  விற்பனை


நன்றி - கூகுள்

                                                                      நன்றி- கூகுள்

நன்றி- கூகுள்
ரயில் அடுத்து ஜான்ஸியிலிருந்து ஆக்ரா நோக்கி புறப்பட்டதை பார்ப்போம்.
அடுத்த பதிவில்.

                                                                      வாழ்க வளமுடன்
=========================================================================

29 கருத்துகள்:

  1. பயணக்கட்டுரை அழகாய் பயணிக்கிறது சார் அவர்களின் கையெழுத்திலும் விவரணையிலும் .தண்ணீர் அப்போவே விரக ஆரம்பிச்சுட்டாங்களா !!!! அப்போவே 5 நயா பைசா ஆச்சர்யமா இருக்கு .தொடர்கிறேன் அக்கா 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஏஞ்சல் வாழ்க வளமுடன்
      நான் கணவருடன் 1978ல் கல்கத்தா, காசி எல்லாம் பயணம் செய்தேன், அந்தக்காலத்திலும் குளிர்ந்த நீர் காசுக்குத்தான் வாங்கி இருக்கிறோம்.

      பயணக்கட்டுரையை தொடர்ந்து படித்து கருத்து சொல்வதற்கு நன்றி.

      நீக்கு
  2. //விற்க // எழுத்துப்பிழை 
    திருத்துமுன் என்டர் செய்ஞ்சிட்டேன் 

    பதிலளிநீக்கு
  3. நல்ல விவரமான பயணக்குறிப்பு/கட்டுரை. படிக்க மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. வழியில் ஏற்பட்ட தடங்கல்களை அவ்வளவாக பொருட்படுத்தாமல் இருந்தது சிறப்பு. நண்பர்களுடன் பயணம் சென்றதால் இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் Sri, வாழ்க வளமுடன்

      //வழியில் ஏற்பட்ட தடங்கல்களை அவ்வளவாக பொருட்படுத்தாமல் இருந்தது சிறப்பு. நண்பர்களுடன் பயணம் சென்றதால் இருக்கலாம்.//

      ஆமாம் நீங்கள் சொல்வது சரிதான்.

      படிக்கும் காலம் கவலைகள் இல்லா காலம், நண்பர்களுடன் பயணம் சென்றதால் மகிழ்ச்சி மட்டுமே நிறைந்து இருக்கும்.

      தொடர்ந்து வந்து கருத்து சொல்வதற்கு நன்றி.

      நீக்கு
  4. மிகவும் சுவாரஸ்யமாக எழுதி இருக்கிறார்.  அப்போதே யாரோ கேமிரா வைத்திருந்து புகைப் படமும் எடுத்திருக்கிறார்களே...  போபால் கல்லூரி மாணவர்களுடனும் உரையாடி மகிழ்ந்திருக்கிறார்.  தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      நிறைய படங்கள் இருக்கிறது. ஊருக்கு போனபின் வலை ஏற்ற வேண்டும்.
      இப்போது பதிவு வேண்டிய படங்களை கூகுளில் இருந்து போட்டு இருக்கிறேன்.
      போபால் கல்லூரி மாணவர்களுடன் பேசி இருக்கிறார்கள், தமிழ் நாட்டிலிருந்து அங்கு நிறைய பேர் அப்போது போபாலில் படித்தார்கள்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
    2. அன்பு கோமதி ம. இன்னும் எனக்கு ஆச்சர்யம் தீரவில்லை. எத்தனை அழகான கெயெழுத்து! களங்கம் அறியாத வயது.
      இவ்வளவு சிறப்பான விவரங்களுடன் இது அவரை யாராவது எழுதி இருப்பார்களா? ஒவ்வொரு மணித்துகளையும் எழுத்தில வடிவமைத்திருக்கிறார். உன்னதமான பயணப் கட்டுரை. சிரமங்களைக் கண்டு சுளிக்காத மனம் .

      நீக்கு
    3. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்

      உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி.
      உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.


      நீக்கு
  5. ஆங்காங்கே தாமதமனாலும் சுவாரசியமாக செல்கிறது பயணம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல தனபாலன், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  6. மொழிப் பிரச்னை இருந்ததில்லை போல! சுவாரசியமாக ஆர்வத்தைத் தூண்டும் விதம் எழுதி இருக்கார். தண்ணீரை விற்பனை செய்தார்கள் என்னும் செய்தி எனக்குப் புதுசு. ஏனெனில் நாங்க எழுபதுகளில் க்ரான்ட் ட்ரங்க் விரைவு வண்டியில் பயணிக்கையில் இம்மாதிரிப் பெரிய ரயில் நிலையங்களில் எல்லாம் பெரிய பெரிய பானைகளில் நீரை நிரப்பிக் கொண்டு ரயில் பெட்டிகளுக்குள் வந்து விநியோகம் செய்வார்கள். நாம் வண்டியை விட்டுக் கீழே இறங்காமலேயே தண்ணீரை நாம் கொண்டு போகும் குடுவைகளில் நிரப்பிக்கலாம். மத்தியப் பிரதேசம், உத்திரப் ப்ரதேசம், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் பயணம் செய்கையில் இவற்றைப் பார்த்திருக்கேன். விற்பனைக்குத் தண்ணீரைக் கொடுத்து நாங்கள் பார்த்தது இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
      இந்தி படிக்கதெரியும் சாருக்கு. பெரிய ரயில் நிலையங்களில் கிடைக்கும் .
      கஜூராஹூ வில் விற்று இருப்பார்கள் போலும் . சுணைகளிலிருந்து வெகு தூரம் போய் எடுத்து வருவதால் விற்று இருப்பார்கள்.

      உங்கள் பகிர்வுக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  7. தண்ணீரை அப்போதே வாங்கி இருக்கிறார்களே. பெரிய சுற்றுலாதான்.ஊர் விவரங்களைக் குறித்துக் கொள்கிறேன். உங்களுக்கும் கணவருக்கும் மிக நன்றிமா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தண்ணீர் வெகு தூரத்திலிருந்து தலைகளில் சுமந்து வருவார்கள் . அப்போது விற்க தான் வேண்டும்.

      15 நாட்கள் சுற்றுலா இன்னும் வரும். படிக்க சிரமம் இல்லாமல் இருக்க நாலு பக்கம் 5 பக்கம் தான் போடுகிறேன்.
      தொடர்ந்து படித்து கருத்து சொல்வதற்கு நன்றி.

      நீக்கு
  8. எனக்கு விபரம் தெரிந்து சகோதரி சென்னைக்கு திருமணமாகி போகும்போது 1985-ல் தண்ணீர் பாட்டில் விலைக்கு வாங்கி இருக்கிறேன்.விலை ஞாபகமில்லை ஆனால் மிக மிக அதிகமே விலை.

    அன்று தேவகோட்டை டூ சென்னை பேருந்து சீட்டு 80 ரூபாய். இன்று 800 ரூபாய்.

    தொடர்கிறேன் சகோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
      சென்னையில் 1985 ல் தண்ணீர் பாட்டில் விலை கொடுத்து வாங்கினீர்களா?
      நம் ஊரில் 25, 35 வரை விற்பனை 1985ல் அது விலை அதிகம் தான்.
      காலம் மாறும் போது விலைவாசியும் மாறுகிறது.

      உங்கள் கருத்துக்கும் பகிர்வுக்கும் நன்றி.

      நீக்கு
  9. சிறப்பான விவரங்களுடன் பதிவு நன்று. ஐந்து நயா பைசாவிற்கு தண்ணீர் வாங்கியது வியப்பு. 91-இல் தலைநகர் தில்லியில் ஒரு டம்ளர் தண்ணீர் 25 பைசாவிற்கு விற்றார்கள். அதற்கு முன்னர் 10 பைசாவிற்கு வாங்கியதாக நண்பர்கள் சொன்னதுண்டு. இப்போது ஒரு ரூபாய்!

    தொடரட்டும் பயணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ் வாழ்க வளமுடன்

      //91-இல் தலைநகர் தில்லியில் ஒரு டம்ளர் தண்ணீர் 25 பைசாவிற்கு விற்றார்கள். அதற்கு முன்னர் 10 பைசாவிற்கு வாங்கியதாக நண்பர்கள் சொன்னதுண்டு. இப்போது ஒரு ரூபாய்!//

      விவரங்களுக்கு நன்றி.
      உங்கள் கருத்துக்கும் தொடர்வதற்கும் நன்றி.



      நீக்கு
  10. ஒவ்வொரு விடயங்களையும் விடாமல் சுவாரஸ்யமாக மறக்காமல் எழுதியிருக்கிறார். எனக்கும் தண்ணீர் விற்றது ஆச்சர்யமா இருக்கு. பயண கட்டுரை சுவாரஸ்யமாக உள்லது. புத்தகமாக போடலாம் போல இருக்கு.
    நான் எல்லா பகுதியும் வாசித்து கருத்திட்டிருக்கேன் அக்கா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பிரியசகி அம்மு, வாழ்க வளமுடன்
      பயணக்கட்டுரை உங்களுக்கு பிடித்து இருப்பதில் மகிழ்ச்சி.
      //புத்தகமாக போடலாம் போல இருக்கு.//

      நீங்கள் சொல்வது மகிழ்ச்சி தருகிறது அம்மு.
      நீங்கள் தொடர்ந்து படித்து கருத்து சொல்வதற்கு நன்றி, நன்றி.

      நீக்கு
  11. சென்ற இடங்களைப் பற்றி நன்கு அவதானித்து விரிவாக எழுதியுள்ளார். ‘டாங்கா’ குதிரை வண்டிப் படம் தேடிச் சேர்த்திருப்பது சிறப்பு. அந்த நாளிலேயே தண்ணீர் விலைக்கு என்பது வியப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
      1978 ஆம் வருடம் மூடி போட்ட டாங்கவில் பயணம் செய்து இருக்கிறேன் காசியில்.
      சார் இருந்தால் எந்த மாதிரி டாங்காவில் பயணம் செய்து இருக்கிறார்கள் என்று கேட்கலாம். அந்தக் கால கருப்பு வெள்ளை டாங்கா தேர்ந்து எடுத்தேன். நன்றி ராமலக்ஷ்மி.

      பழைய காலத்திலும் தண்ணீர் கஷ்டங்கள் உண்டு. இப்போதும் கைலை செல்லும் வழியில் தண்ணீருக்கும் மக்கள் படும் துன்பத்தை பதிவு செய்து இருந்த்னே!
      வழியெல்லாம் மலையிலிருந்து அருவிகள் கொட்டிக் கொண்டு இருக்கிறது ஆனால் மக்கள் வெகு தூரம் தண்ணீருக்கு அலைய வேண்டி உள்ளது.

      உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  12. பயணக்கட்டுரை ரசனையாக இருக்கிறது. விதிஷா, கஜுரஹோ இன்னும் பல இடங்களை எப்போது பார்ப்போம் என்று தோன்றியது.

    உலகத்துக்கே தண்ணீர் விற்பனையைக் கற்றுத் தந்தது இந்தியராக இருக்குமோ?

    குதிரை வண்டிப் பயணம் எப்படி இருந்ததோ... மதராஸ் விடுதியில் உணவு உண்டதைப் படித்தேன்.

    உதயகிரி குகைக்கோயில்கள்? அங்கு கோட்டை இருக்கிறது என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்

      //விதிஷா, கஜுரஹோ இன்னும் பல இடங்களை எப்போது பார்ப்போம் என்று தோன்றியது.//

      பயணம் செய்வது பயமில்லா காலம் வரும் போது போய் பார்த்து வாருங்கள்.
      தீநுண்மியால் சுற்றுலா மிகவும் பாதித்து இருக்கிறது.

      பழனியில் நிறைய குதிரை வண்டிகள் உண்டு அதில் அவர்கள் பயணம் செய்து இருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு அது பிடித்து இருக்கும்.

      உதயகிரியில் வனத்துறையிடம் இருக்கிறது கோட்டைகள்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
    2. உதயகிரி, சந்திரகிரி, வேங்கடகிரி போன்ற வனப்பகுதிகளில்தான் ஸ்வேதஹூணர்கள் என்று சொல்லப்படும் கொள்ளையர்கள் இருந்திருக்கிறார்கள்.

      நீக்கு
  13. சேஷ சயன மூர்த்தி ...அழகிய பெயர் கொண்ட குகை கோவில் ...

    அவர்கள் பயணம் செய்த பெட்டிகள் அடுத்த வண்டியில் இணைத்த தகவல்கள் சுவாரசியம் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அனுபிரேம், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு