வியாழன், 28 ஜனவரி, 2021

உல்லாசப்பயணம் - பகுதி 7

பூம்புகார் கல்லூரி மேடையில் 
பழைய ஹரித்துவார்
தினம் மாலை நேரம் ஆறு மணிக்கு 
கங்கை நதிக்கு ஆரத்தி
இதற்கு முன்பு எழுதிய பதிவுகள் படிக்கவில்லை என்றால் படிக்கலாம்.

முந்தைய பதிவில்  அடுத்த பதிவில் ஹரித்துவார் பார்க்கலாம்  என்றேன் , வாங்க ஹரித்துவார்ப்பற்றி படிக்கலாம்




- நன்றி கூகுள்

வாங்க இமயமலை பகுதிக்கு டாங்காவில் போகலாம்

நானும் என் கணவரும் போன போது எடுத்த படங்கள் இனி வருவது. 
தொங்கு பாலத்தில் எவ்வளவு பேர் போகிறார்கள் பாருங்கள், விசை படகுக்கு காத்து இருக்கும் கூட்டம்

லக்ஷ்மண ஜூலா
நாங்கள் போன போது எடுத்த படம் அவர்கள் கல்லூரிச்சுற்றுலா போன போது  எடுத்த படங்கள் இல்லை.( ஊரில் இருக்கிறது ஆல்பத்தில்)



ரிஷிகேசில் பார்த்த கோவில்கள் நிறைய இருக்கிறது அதில் கொஞ்ச படங்கள் சேர்த்து இருக்கிறேன் 


அடுத்து போன இடம் ரிஷிகேசத்தில் சுவாமி  சிவானந்தர் ஆசிரமம்





நூலகம் இரண்டு உண்டு.  நாங்கள் சேர்ந்து போன போது  நூலகத்தில்  சுவாமி சிவனாந்தரின் புத்தகம் ஒன்றும், சிடி ஒன்றும் வாங்கினார்கள்.

 

                        அடுத்த பதிவில் அலகாபாத்தைப் பார்ப்போம்.

                                                         வாழ்க வளமுடன்
==========================================================================

             
                       

34 கருத்துகள்:

  1. வாரணாசியில் கூட கங்கை அலையாட்டத்தால் அபாயகரமானதாகவே கருதப்பட்டு, கரையோரம் என்றாலும் கயிறு கட்டி வைத்திருக்கிறார்கள்.  ஹரித்துவார் சென்றதில்லை.  ஆனால் கங்கை நீரை சேமிப்போர் வாரணாசியில் வேணிதானம் முடிந்து சேகரிப்பதைப் பார்த்திருக்கிறேன். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      ஹரித்துவாரத்தில் மிக வேகமாக கங்கை ஆறு போகும் அதனால் கயிறு கட்டி இருப்பார்கள் . தண்ணீர் பிடிக்க கேனையோ பாத்த்திரத்தையோ ஆற்றுக்குள் விட்டால் கெட்டியாக பிடிக்கவில்லை ஏன்றால் அடித்துக் கொண்டு போய் விடும். அதற்கு அங்கு சிறுவர்கள் இருப்பார்கள் ஆற்றில் நீந்தி சென்று நமக்கு அந்த பொருளை எடுத்து தந்து விடுவார்கள் அவர்களே நமக்கு கங்கை நீரை எடுத்து தருவார்கள். நாம் பிரியபட்டு கொடுக்கும் பணத்தைப் பெற்றுக் கொள்வார்கள். அங்கு உள்ள பூ விற்கும் பெண்களும் நல்ல அன்பானவர்கள் . குளித்துவிட்டு ஆடைமாற்ற தயக்கமாய் இருந்த போது அவர்கள் இருப்பிடத்திற்கு கூட்டிப்போய் ஆடைமாற்ற உதவி செய்தார்கள். அவர்களிடம் ஆற்றில் விட பூக்களும், விளக்கும் உள்ள தொன்னையை வாங்கினால் அவர்களுக்கு சந்தோஷம்.

      நீக்கு
    2. கங்கை அமைதியாக ஓடும் மற்ற இடங்களிலேயே கயிறு கட்டி இருந்தால், முதலில் இறங்கும் ஹரித்துவாரில் எப்படி இருக்கும்?  உண்மைதான்.

      அங்கு இருப்பவர்கள் செருப்புக்காலுடன் நம்மை நதியை அண்டவிட மாட்டார்கள்.  நதியை அவமரியாதை செய்கிறோம் என்று சண்டைக்கு வருவார்கள்.

      நீக்கு
    3. @ஸ்ரீராம், வேணி தானம் பிரயாகையில் தான் செய்வார்கள். அங்கே தான் கங்கை நீரும் எடுப்பார்கள்.

      நீக்கு
    4. கயிறு கட்டி வைத்து இருப்பது பாதுகாப்பு அதற்கு அப்பால் போக கூடாது என்பதாலும் தான்.
      புனித நதி, விளையும் வயல் இதில் எல்லாம் செருப்பு காலுடன் நடக்க கூடாது என்பார்கள். அதையும் தெய்வமாக வணங்குவதால்.

      நீக்கு
    5. நாங்கள் போயிருந்தபோது புதுவெள்ளம். ஒரே கலங்கல். எப்படியோ நன்றாகவே குளித்தோம் (புதுச் சேறு நிறத்தில் இருந்த கங்கையில்). கங்கை நீர், அலஹாபாத்தில் திரிவேணி சங்கமத்தின்போதுதான் எடுத்தோம் (இரண்டு முறையும்). கங்கையில் அவ்வளவாக நீர் சுத்தமாக இல்லை என்பது என் அபிப்ராயம்.

      நீக்கு

    6. ஒரு முறை கங்கை மிகவும் கலங்கி படித்துறை எல்லாம் சேறு படித்து இருந்தாக படித்தேன்.
      //கங்கையில் அவ்வளவாக நீர் சுத்தமாக இல்லை என்பது என் அபிப்ராயம்.//

      முன்பு முதல் தடவை போன போது ஈனக்கு இப்படித்தான் தோன்றியது.
      படியில் உள்ள குப்பைகளை அள்ளாமல் அப்படியே ஆற்றில் தள்ளி கொண்டு இருந்தார்கள்.

      நீக்கு
  2. ஸாரின் பழைய புகைப்படம் சிறப்பு.  பதிவில் இடம்பெற்றுள்ள புகைப்படங்களும் சிறப்பு. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுற்றுலாவில் போன படம் இன்னும் இரண்டு இருக்கு அது காசி போன படங்கள் , மற்ற படங்கள் ஊரில் இருப்பதால் கை வசம் உள்ள(மடி கணினியில் உள்ள) பழைய பட பகிர்வு. புகைபடங்கள் உங்களுக்கு பிடித்து இருப்பது மகிழ்ச்சி.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  3. எல்லாப் படங்களும் அருமை. ஹரித்வாரில் பெண்கள் குளித்த்தும் உடை மாற்றக் குடை போன்ற கூடாரம் கொடுப்பார்கள். இப்போல்லாம் உடை மாற்றும் அறைகள் வந்திருக்கலாம். லக்னோவில் நாங்க எல்லா இடங்களும் போகலை. ஹரித்வார், ரிஷிகேஷ் நன்கு சுற்றிப் பார்த்தாலும் சிவானந்தா ஆசிரமம் போக முடியலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதாசாம்பசிவம், வாழ்க வளமுடன்

      இப்போது உடை மாற்றும் அறைகள் வந்து இருக்கலாம். அந்த பெண்கள் கூடாரம் போன்ற அவர்கள் இருப்பிடத்திற்கு கூட்டி போனார்கள். குடை போன்ற கூடாரம் பார்க்கவில்லை நாங்கள்.

      சிவானந்தா ஆசிரமமத்தில் நிறைய படங்கள் எடுத்தேன். கைடு வந்து இருந்தார் உள்ளே சுற்றி காட்ட கொஞ்ச படங்கள்தான் இதில் போட்டு இருக்கிறேன்.

      நீக்கு
  4. அருமையான கை எழுத்தில் மிக அழகாகவும் தெளிவாகவும் விவரித்துள்ளார்.

    பதிலளிநீக்கு
  5. அன்பு கோமதிமா,
    வாழ்க வளமுடன்.
    ஒவ்வொரு பதிவையும் படிக்கும் போது மீண்டும் மேஏண்டும் எண்ணத்தில் உறைப்பது
    சாரின் கையெழுத்து தான்.
    ஆங்கிலச் சொற்கள் பிரயோகமே இல்லை.

    அந்த நாளைய ஹரித்வார் அழகாக இருந்திருக்கிறது.
    என் பெற்றோர் சென்ற போது என்னால் செல்ல முடியவில்லை.

    அப்பா வந்து தனிப் புத்தகமாக வாங்கி
    எனக்குக் கொண்டு வந்தார்,.
    எல்லாப்படங்களையும் விளக்கிச் சொன்னார்.
    அப்போது வீட்டில் பாட்டி, மாமியார் எல்லோரும் இருந்ததால்
    சட்டென்று கிளம்ப முடியவில்லை.

    நீங்கள் பதிவிட்டிருக்கும் படங்களும்
    வண்ணத்தில் அழகாக இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
      சாரின் எழுத்தை பாராட்டியதற்கு நன்றி .

      நான் அம்மாவுடன் ஒரு தடவை, சார் மற்றும் உறவினர்களுடன் 4 தடவை போய் இருக்கிறேன்.

      கோவில்களில் எல்லா மொழிகளும் கோவில் தலவரலாறுகள், படங்களுடன் கிடைக்கும்.

      //அப்போது வீட்டில் பாட்டி, மாமியார் எல்லோரும் இருந்ததால்
      சட்டென்று கிளம்ப முடியவில்லை.//

      வயதானவர்களை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு இருக்கும் போது எப்படி உடனே கிளம்ப
      முடியும்


      நீக்கு
  6. லக்ஷ்மண் ஜூலா படம் அருமை.
    எங்க பாட்டி அங்கு நின்று எடுத்துக் கொண்ட படம் கூட
    சென்னையில் இருக்கிறது.
    எவ்வளவு புனிதமான இடங்கள் அவை.!!!!
    ஒவ்வொன்றையும் உயர்வாக ஒன்று விடாமல்
    எழுதி இருக்கிறார்.
    ஹரித்வார்,, ரிஷிகேஷ் , கங்கை ஆரத்தி எல்லாமே
    உடலுக்கும் மனதுக்கும் வலிமை கொடுப்பவை.
    அந்தச் சின்ன வயதில் சென்று வந்தது
    , நீங்களும் பிறகு கூட சென்று வந்தது
    எல்லாமே இனிமை.
    லக்னோவில் இன்னும் என்னென்ன
    காத்திருக்கிறதோ. அன்பு கோமதி,
    தளராமல் நீங்கள் இன்னும் நிறைய
    பதிவிட வேண்டும். நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எங்க பாட்டி அங்கு நின்று எடுத்துக் கொண்ட படம் கூட
      சென்னையில் இருக்கிறது.//

      லக்ஷ்மண் ஜூலா பாலததில் நானும் நின்று எடுத்து இருக்கிறேன்.
      சின்ன வயதிலிருந்து அவர்கள் நிறைய கோவில்களுக்கு போய் வந்து இருக்கிறார்கள்.
      நாங்களும் அவர்களுடன் நிறைய இடங்கள் போகும் பாக்கியம் பெற்றோம்.

      இன்னும் இரண்டு , மூன்று பதிவு எழுதவேண்டும் பயணக்கட்டுரை நிறைவு செய்ய.
      இறைவன் அருள வேண்டும். நல்லபடியாக நிறைவு செய்ய.
      உங்கள் ஆதரவான பின்னூட்டங்களுக்கு நன்றி அக்கா



      நீக்கு
  7. அழகிய காட்சிகள் ரசனையோடு எடுத்து இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  8. படங்கள் எல்லாம் மிக அழகு ...

    இதுவரை நீங்கள் சொன்ன இடங்களில் லக்னோ மட்டும் பையனின் போட்டி பயணத்திற்காக சென்ற போது கண்டோம் ...


    மற்ற இடங்கள் செல்லும் ஆசை இருந்தாலும் இன்னும் அதற்ககான வாய்ப்புகள் வரவில்லை அம்மா ...

    ஆனாலும் இங்கே வாசிப்பதன் மூலம் பல தகவல்களை அறிந்துக் கொள்ள முடிகிறது ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அனுபிரேம், வாழ்க வளமுடன்
      இந்த அச்சமான காலம் போய் எங்கும் பயமில்லாமல் பயணம் செய்யலாம் என்ற காலம் விரைவில் வரும் இறைவன் அருளால் அப்போது போய் வாருங்கள்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  9. லக்ஷ்மண ஜூலா தகவல்கள் அருமை...

    சமீபத்திய பயண படங்களையும் இணைத்தது சிறப்பு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      சமீபத்திய பயண படங்கள் முன்பு சில பதிவுகளில் பதிவு செய்து இருக்கிறேன்.
      அதனால் இங்கு தேவையான படங்கள் மட்டும் இணைத்து இருக்கிறேன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  10. இன்றைய பதிவு மிகவும் சிறப்பானது. நான் இந்த இடங்களுக்கெல்லாம் போகணும் என்ற பேராவல் கொண்டிருக்கிறேன். போக வாய்ப்பு கிடைக்குமா என்பதுதான் தெரியவில்லை.

    ஹரித்வாரில்தான் சுத்தமான கங்கை நீர் கிடைக்கும் என்று படித்திருக்கிறேன். இமய மலையில் ஏறி தவம் செய்யப் புறப்படும் பலருக்கு ஹரித்துவார்தான் ஆரம்ப இடம். பதிவில் குறிப்பிட்டுள்ள ஆசிரமங்களுக்கும் செல்லவேண்டும் என்று அவா. எப்போது வாய்ப்பு கிடைக்கப் போகிறதோ...

    பிரயாணத்தைத் தெளிவாக எழுதியிருக்கிறார்.

    ஒவ்வொரு மனிதரும் எப்படி எப்படியெல்லாம் தங்கள் வாழ்க்கையில் பயணிக்கிறார்கள், சட் என்று எப்படி பயணம் முடிந்துவிடுகிறது என்றெல்லாம் என் மனதில் தோன்றுகிறது.

    வட பகுதியில் இமயம் அருகே செல்லும் வாய்ப்பு அவருக்கு இளமையிலேயே கிடைத்தது அவருக்குக் கிடைத்த கொடுப்பினை என்றே நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்

      //நான் இந்த இடங்களுக்கெல்லாம் போகணும் என்ற பேராவல் கொண்டிருக்கிறேன். போக வாய்ப்பு கிடைக்குமா என்பதுதான் தெரியவில்லை.//

      ஏன் அப்படி நினைக்கிறீர்கள் ? காலமாற்றம் இறை அருளால் சரியான பின் போய் வரலாம். நம்பிக்கைத்தான் வாழ்க்கை.


      நாங்களும் நிறைய ஆசிரமங்களுக்கு சென்றோம் சார், குறிப்பிட்ட ஆசிரமங்களுக்கும் சென்றோம்.

      சிவானந்த ஆசிரமம் பெரிது நிறைய நேரம் செலவிட்டோம் . அவர்களே கைட் வைத்து இருக்கிறார்கள் அவர் அழைத்து சென்று எல்லாம் காட்டினார்கள்.
      அமைதியான அருமையான இடம்.

      //ஒவ்வொரு மனிதரும் எப்படி எப்படியெல்லாம் தங்கள் வாழ்க்கையில் பயணிக்கிறார்கள், சட் என்று எப்படி பயணம் முடிந்துவிடுகிறது என்றெல்லாம் என் மனதில் தோன்றுகிறது.//


      வழித்துணையாக வந்தவர் தன் பயணம் முடிந்தது என்று இறங்கி விட்டார்கள். நான் இறங்கும் இடம் எப்போது வரும் என்று தெரியாவில்லை. இறைவன் சித்தம்.

      //வட பகுதியில் இமயம் அருகே செல்லும் வாய்ப்பு அவருக்கு இளமையிலேயே கிடைத்தது அவருக்குக் கிடைத்த கொடுப்பினை என்றே நினைக்கிறேன்.//

      ஆமாம், அவர்கள் பெற்றோர்கள் ஆசியால் கிடைத்தது .

      உங்கள் கருத்துக்கு நன்றி.











      நீக்கு
  11. பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  12. ஹரி கா த்வார் என்பதே ஹரித்வார் ஆனது என்று சொல்வார்கள். ஹரித்வார், ரிஷிகேஷ், லக்னோ போன்ற இடங்களை உங்களது பதிவு மூலம் காணக் கிடைத்ததில் மகிழ்ச்சி. படங்கள் பார்க்கும்போது மீண்டும் எப்போது ஹரித்வார் செல்லும் வாய்ப்பு அமையும் என்று ஏங்க ஆரம்பித்து விட்டது மனது. ரிஷிகேஷ் சென்று ஒன்றிரண்டு நாட்கள் தங்கவேண்டும் என்பது ஆசைகளில் ஒன்று - பெரும்பாலும் ஒரே நாளில் திரும்பிவிடுவதே வழக்கமாக இருக்கிறது.

    அடுத்தது அலஹாபாத்... காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்

      //ஹரி கா த்வார் என்பதே ஹரித்வார் ஆனது என்று சொல்வார்கள்.//

      நல்ல விளக்கம்

      //ஹரித்வார் செல்லும் வாய்ப்பு அமையும் என்று ஏங்க ஆரம்பித்து விட்டது மனது. ரிஷிகேஷ் சென்று ஒன்றிரண்டு நாட்கள் தங்கவேண்டும் என்பது ஆசைகளில் ஒன்று - பெரும்பாலும் ஒரே நாளில் திரும்பிவிடுவதே வழக்கமாக இருக்கிறது.//

      கால நிலை சீராகி உங்கள் பயணம் மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இறைவன் நினைத்தால் விரைவில் சரியாகும்.

      ஹரித்துவார் காலையும், மாலையும் பார்ப்பது அதுவும் கங்கை ஆரத்தி பார்ப்பது மனதுக்கு மகிழ்ச்சியான தருணம்.

      நாங்கள் இரண்டு மூன்று நாள் தங்கினோம், இரண்டு மூன்று தடவை போய் இருக்கிறோம் அதனால் நிறைய இடங்கள் பார்க்க முடிந்தது.

      உங்கள் கருத்துக்கு நன்றி.


      நீக்கு
  13. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. இன்றைய பயணங்களும் நேரில் சென்று எல்லாவிடங்களையும் பார்த்து தரிசித்த திருப்தியை தந்தது. படங்கள் அருமை. விபரங்களும் தங்கள் கணவரின் கையெழுத்து சுத்தமாக, அழகாக எழுப்பட்டிருப்பதால் பயணித்த உணர்வை தருகிறது. இங்கெல்லாம் எனக்கு இனி போக வாய்ப்பு கிடைக்குமா எனத் தெரியவில்லை. அப்படியே வாய்ப்பு வந்தாலும், சுற்றிப் பார்க்கும் போது தங்கள் பதிவு கண்டிப்பாக நினைவுக்கு வரும். அடுத்து அலஹாபாத்.. அங்கு கண்ட இடங்களைப் பற்றி தெரிந்து கொள்ளும் ஆவலில் உள்ளேன. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
      வாய்ப்பு கிடைக்கும் பார்த்து வந்து அழகாய் பதிவு செய்வீர்கள்
      அலஹாபாத், காசி பதிவு போட்டு விட்டேன்.
      உங்கள் ஆவலுக்கும் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  14. சாரோட கட்டுரைக்கு உங்க படங்கள் (இப்போ எடுத்தது தானே)நன்றாக இருக்கிறது. தமிழ் எழுத்தை பார்த்ததும் மகிழ்ச்சி வராமல் இருக்குமா என்ன?சொற்பொழிவினை கேட்காதது வருத்தமா இருந்திருக்கும்.ஹரித்துவார்,ரிஷிகேஷ்,கங்கை எல்லாமே என் மாமியார் சென்று வந்து இன்னமும் அதை பற்றிசொல்வார். எங்கலையும் போகச்சொல்வார் வாய்ப்பு வந்தால்..பார்ப்போம் சித்தம் இருக்கா என.
    வல்லிம்மா சொன்னமாதிரி ஆங்கிலம் கலக்காமல் சார் எழுத்தியிருக்கார்.நானும் இதை எழுத்த நினைத்தேன் அக்கா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பிரியசகி, வாழ்க வளமுடன்
      ஆமாம், படங்கள் நாங்கள் 8, 9 வருடங்களுக்கு முன் நாங்கள் போன போது எடுத்த படம். அங்கு தினம் சொற்பொழிவுகள் நடைபெறும் அங்கேயே இரண்டு மூன்று நாள் இருந்தால் எல்லாம் பேச்சை கேட்கலாம்.
      உங்கள் மாமியார் சொன்னது போல் பார்க்கவேண்டிய இடங்கள் தான் ரிஷிகேஷ், ஹரித்துவார்.

      சாரை பற்றி சொன்னது மகிழ்ச்சி.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  15. சிறப்பான பயணக் குறிப்புகள். பாலத்தில் ‘லக்ஷ்மண ஜூலா’ என தமிழில் எழுதப்பட்டிருந்தது நமக்கும் வியப்பைத் தருகிறது. சேர்த்திருக்கும் தங்களது தற்போதையப் படங்கள் நன்று.

    பதிலளிநீக்கு