வியாழன், 28 ஜனவரி, 2021

உல்லாசப்பயணம் - பகுதி 6













1997 ஆம் ஆண்டு
நாங்கள் போன போது குதுப்பினார்  மேலே போக அனுமதி இல்லை


பாராளுமன்றக் கட்டிடமும்,  அகில இந்திய வானொலி நிலையமும்




அப்போது உள்ள ஹரித்துவாரத்தை  காண்போம். 

வாழ்க வளமுடன்
-----------------------------------------------------------------------------------------------------------------------------

35 கருத்துகள்:

  1. அப்போது பத்து பைசாவுக்கு என்னவெல்லாம் செய்ய முடிந்திருக்கிறது.  நம்மூரில் முதலில் இரண்டு இட்லி கிடைக்கும்.  அப்புறம் ஒரு இட்லி ஆனது!  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      10 பைசாவுக்கு பெரிய கோழி முட்டை போன்ற மிட்டாய் வாங்கி இருக்கிறோம் சிறு வயதில். இட்லி விலை எல்லாம் நினைவு இல்லை.

      நீக்கு
    2. கோமதி அரசு மேடம்...நீங்க திருநெவேலிதானே... அங்க கடலை மிட்டாய் வாங்கிச் சாப்பிட்டிருப்பீங்களே. அதெல்லாம் 5 பைசா என நினைவு. திருநெவேலில 10 பைசாவுக்கு மிக்சர் பொட்டணம் தருவாங்க.

      நீக்கு
  2. 1997 ல் நீனால் சென்றபோதே ஸார் தன் பழைய நினைவுகளை உங்களிடம் பகிர்ந்து கண்டே வந்திருப்பார் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம், 1997 ல் நாங்கள் சேர்ந்து குடும்பத்துடன் போனபோது பழைய நினைவுகளை பகிர்ந்து இருக்கிறார்கள் எங்களிடம்.

      நீக்கு
  3. பொதுவாக அப்போது அங்கு எந்தவகை உணவுகள் கிடைத்தன என்றோ, தாங்கள் அழைத்துச் சென்ற உணவுப்பணியாளர்கள் என்ன சமைத்துக் கொடுத்தார்கள் என்றோ குறிப்பிடவில்லை.  உபயோகமான விஷயங்களை மட்டுமே எழுதி இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரு. அரு. இலக்குவன் என்ற முன்னாள் ஆசிரியர், பின்னாள் பிரின்ஸ்பால் என்று முதல் பதிவில் சொன்னது நினைவு இருக்கலாம்.
      அவருக்கு நங்கு சமைக்கத் தெரியும் ,அதனால் சமையல் செய்பவரிடம் இப்படி ,இப்படி செய்யவேண்டும் என்று சொல்லி விடுவார். அங்கு கிடைக்கும் காய்கறிகளை வைத்து சுவையாக சமைத்து கொடுத்து விடுவார்கள்.

      நிறைய இடங்களில் பூரி சாப்பிட்டோம் என்று போட்டு இருக்கிறார்கள். குட்டி குட்டியாக உருளைகிழங்கை வெட்டி உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்த்தூள் போட்டு மொறு மொறு என்று எண்ணெயில் வதக்கும் பொரியல் செய்யும் பக்குவம் அந்த சாரிடம் கற்றுக் கொண்டார்கள்.

      பாடசம்பந்தமான பயண கட்டுரை என்பதால் அதை எல்லாம் குறிப்பிடவில்லை போலும்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  4. நிறைய இடங்கள் சென்றிருக்கிறார்கள் கோமதி மா. நன்றாகத் திட்டமிட்ட
    பயணம்.
    ரயில் வண்டியிலியே தூங்கினோம் என்று எழுதி இருக்கிறா. அவர்களுக்கென்று ஒரு கோச்
    அமர்த்தி இருந்திருப்பார்கள்.
    ஸ்ரீராம் கேட்டதை நானும் நினைத்தேன்.
    அழகாகப் பதில் சொல்லிவிட்டீர்கள்.

    மொகல் சராய் எல்லாம் சுற்றிப் பார்த்திருக்கிறார்கள்

    அந்த வயதின் அனுபவ வார்த்தைகளாகப்
    பதிவுகள் செல்கின்றன

    தண்ணீரை விலை ஒடுத்து வாங்குவது அவரைப் பாதித்திருக்கிறது.!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்
      நிறைய இடங்கள் சென்று இருக்கிறார்கள் தான். நல்ல திட்டமிடல்.
      இவர்கள் பயணத்திற்கு என்று தனியாக ரிசர்வு செய்த பெட்டி முதலில் கிராண்ட் டிரங்க் விரைவு புகைவண்டியில் இணைக்கப்பட்டது என்று முதல் பதிவில் குறிப்பிட்டு இருப்பார்கள். தனியாக அவர்களுக்கு என்று ரிசர்வ் செய்யப்பட்ட பெட்டிதான். அவர்கள் மட்டுமே அதில் இருப்பார்கள்.

      இப்போதும் அப்படி ரயில்வே டூரில் என் தங்கை காசி போய் வந்தாள்.

      //ஸ்ரீராம் கேட்டதை நானும் நினைத்தேன்.
      அழகாகப் பதில் சொல்லிவிட்டீர்கள்.//

      நீங்களும் நினைத்தீர்களா !

      நீங்கள் சொல்வது சரிதான் தண்ணீரை விலைக்கு விற்பதை நிறைய இடங்களில் குறிப்பிட்டு இருக்கிறார்கள். அப்போது இப்போது போல் பாட்டிலில் அடைத்து விற்பனை இல்லை அல்லவா?

      நீக்கு
  5. குதுப் மினாரை நேரே சென்று பார்த்தது
    போலவே இருக்கிறது.
    சாரின் எழுத்து அழைத்துச்செல்கிறது.
    மிக நன்றி மா அன்பு கோமதி.
    மிருகக் காட்சி சாலை வர்ணனையும் அப்படியே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்கள் குதுப்பினார் போன போது எடுத்த படங்கள் எல்லாம் ஆல்பத்தில் இருக்கிறது. மதுரையில் கட்டுரையை எழுதி இருந்தால் அந்த படங்களை எடுத்து போட்டு இருப்பேன்.

      பதிவை ரசித்து படித்து கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி அக்கா.

      நீக்கு
  6. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. இன்றைய சுற்றுலா பயணமும் நல்ல விளக்கமாக நேரில் சென்று கண்டதைப்போல சிறப்பாக இருக்கிறது. படங்களும் அருமை. அந்த கால மன்னர்களிடையே பெரும் போட்டிகளும், பொறாமை பூசல்களும் எவ்வளவு தீவிரமாக இருந்தது என்பதை அலாவுதீன் கில்ஜியின் செயல் விளக்குகிறது. குதுப்மினாரை பற்றி நல்ல விரிவாக தெரிந்து கொண்டேன். முன்பு பள்ளியில் படித்ததெல்லாம் நன்றாக நினைவுக்கும் வருகின்றன.

    பத்து பைசாவுக்குத்தான் அந்த காலத்தில் எவ்வளவு மதிப்பு.? ஒரு இடத்தை சுற்றிப்பார்க்க நுழைவு கட்டணமாக அந்த தொகையே எவ்வளவு உதவியாயிருந்திருக்கிறது என்பதை இப்போது நினைத்தால் வியப்பு மேலிடுகிறது. இப்போதெல்லாம் கையில் பல ஆயிரங்கள் இல்லாமல், ஒரு ஊரின் இடங்களை சுற்றிப் பார்ப்பதென்பது இயலாத காரியம்.

    தங்கள் பதிவு அருமை. அடுத்த பதிவுக்கும் காத்திருக்கிறேன். ஏற்கனவே விட்டுப் போன பதிவுகளையும் நேரம் கிடைக்கையில் படிக்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //முன்பு பள்ளியில் படித்ததெல்லாம் நன்றாக நினைவுக்கும் வருகின்றன.//

      ஆமாம், பள்ளியில் படித்தது எல்லாம் எனக்கும் குதுப்பினாரை பார்க்கும் போது நினைவுக்கு வந்தது.

      நான் வரலாறு சிறப்பு பாடமாக எடுத்து படித்தேன் 10 ம் வகுப்பில். அப்போது மன்னர்கள் யாருக்கு பின் யார் எத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தார்கள் அவர்கள் பிடித்த நாடுகள், கட்டிய கோட்டைகள் எல்லாம் , அவர்கள் ஆட்சி செய்த இடங்களை குறிக்கும் மேப் எல்லாம் தயார் செய்த ஆல்பம் இருக்கிறது என்னிடம்.

      குதுப்பினார் படம் எல்லாம் ஒட்டி விவரகள் எழுதியதை சாருடன் போகும் போது சொல்லி கொண்டு சென்றேன். ஆமாம் உனக்கு சொல்லவேண்டியது இல்லை என்று கிண்டல் செய்தார்கள். அந்த நினைவுகள் வருகிறது.

      //இப்போதெல்லாம் கையில் பல ஆயிரங்கள் இல்லாமல், ஒரு ஊரின் இடங்களை சுற்றிப் பார்ப்பதென்பது இயலாத காரியம்.//

      உண்மை கமலா நீங்கள் சொல்வது.

      //ஏற்கனவே விட்டுப் போன பதிவுகளையும் நேரம் கிடைக்கையில் படிக்கிறேன். நன்றி.//

      நேரம் கிடைக்கும் போது பொறுமையாக படிக்கலாம் அதற்குதானே சுட்டி கொடுத்து இருக்கிறேன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
    2. வணக்கம் சகோதரி

      அட.. நீங்களும் வரலாறு சிறப்பு பாடமாக எடுத்திருந்தீர்களா? நானும்தான்.. அதனால்தான் சரித்திர நாவல்கள்,அதைப் பற்றிய விபரங்கள் படிக்க, கேட்க பிடிக்கும். ஆனால் நீங்கள் என்னை விட ஆர்வமாக அதையெல்லாம் தொகுத்து ஒரு ஆல்பமாக வைத்திருப்பது தெரிந்து மனதாற பாராட்டுகிறேன். நன்றி சகோதரி.

      நீக்கு
  7. சிறு வயதில் உறவுகள் தரும் முக்கோண வடிவ மூன்று பைசா இன்னும் நினைவில் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
      சிறு வயதில் உறவுகள் தரும் மூன்று பைசா நினைவுக்கு வந்து விட்டதா !
      உங்கள் பகிர்வுக்கு நன்றி.

      நீக்கு
  8. // குடிதண்ணீர் விலைக்கு விற்கப்படுகிறது... //

    ஒவ்வொன்றையும் அவர் விவரிக்கும் தகவல்கள் வியப்பாக இருக்கின்றன...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      நாம் நிறைய தகவல்கள் தெரிந்து கொள்ள முடிகிறது இல்லையா?
      நன்றி.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  9. அன்றைய பைசாக்களின் மதிப்பு வியப்பைத் தருகிறது

    பதிலளிநீக்கு
  10. இடங்களின் விவரம் அழகாகச் சொல்லிச் சென்றிருக்கிறார்.

    5 பைசா, 10 பைசா... எங்க அப்பா கணக்கு எழுதும் வழக்கம் உள்ளவர். 75ல், 7 பைசாவுக்கு வெண்டைக்காய் கூர் (1/2 கிலோவுக்குச் சிறிது குறைவு) என்றெல்லாம் வாங்கியதை எழுதியிருக்கிறார். 76ல், இரண்டடி நீளமுள்ள பெரிய பலாப்பழம் 3 ரூபாய்கள். நான் 10ம் வகுப்பு படிக்கும்போதுதான் 5 பைசா இருந்த கடலை மிட்டாய், கொஞ்சம் பெரிய அளவாகி 10 பைசாவாக ஆனது. 72ல், ஒரு கமர்கட் 1 பைசா (இலந்தைக் கொட்டை சைஸில் இருக்கும்).

    சார் திரும்பவும் இந்த இடங்களுக்குச் சென்றாரா? அப்போது அவைகள் இருந்த நிலைக்கும் அவர் முதலில் சென்றபோது இருந்த நிலைக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்திருப்பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
      உங்கள் அப்பா போல் என் கணவரும் கணக்கு எழுதும் பழக்கம் உண்டு பல வருடங்கள் பழக்கம் . அந்த நோட்டுக்களை மாயவரம் விட்டு வரும் போது கிழித்து போட்டு விட்டார்கள் அவை இருந்து இருந்தால் நிறைய நாம் உரையாடலாம். விலைவாசி விவரங்களை.
      அப்புறம் எல்லாம் தனி தனியாக விலை கேட்டால் தெரியாது மொத்த கணக்கு சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.கேட்டால் உனக்கு எதற்கு நீ கேட்டவை வந்து விட்டதா என்று மட்டும் பார் என்று சொல்லி விட்டார்கள்.
      நானும் கேட்பது இல்லை விலைகளை. சேர்ந்து போய் காய்கள் வாங்கும் போது, தனியாக சாமான்கள் வாங்கும் போது தெரிந்து கொள்வேன், அப்புறம் மறந்து விடுவேன்.

      நாங்கள் சேர்ந்து திரும்பவும் இந்த இடங்களுக்கு போனோம். அப்போது வித்தியாசங்களை சொல்லி இருக்கிறார்கள்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  11. பதில்கள்
    1. வணக்கம் குமார், வாழ்க வளமுடன்
      நலமா குமார்?
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  12. குதுப்மினார் பக்கத்தில் உள்ள ஓர் இரும்புத் தூணில் சாலிவாஹனனின் வெற்றியும் வெற்றி பெற்ற ஆண்டும் குறிக்கப்பட்டிருக்கும். இதை யாருமே கவனிப்பதில்லை. இது இந்தியர்களால் கட்டப்பட்டது. இதைப் பற்றிப் பல குறிப்புக்கள் வந்தாலும் யாரும் அதைப் பெரிதாக நினைப்பதில்லை. ஆனால் இரும்புத்தூணைக் குறிப்பிடுவார்கள். ராஜபுதன ஆட்சியின் கீழ் தில்லி இருந்தபோது இதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதன் முழு விபரங்களை நானும் குறித்து வைத்துள்ளேன். தேடினேன். கிடைக்கலை. பின்னர் கிடைத்ததும் பகிர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
      இரும்புதூணை முன்பு எல்லாம் கட்டி பிடித்து இருக்கிறார்கள் , அப்புறம் அதற்கும் வேலி போட்டு விட்டார்கள். படிக்கும் போது மழை, வெயிலால் துருபிடிக்காத தூண் என்றும் குப்தர்கள் காலத்தில் கட்டபட்டு இருக்கலாம் என்று படித்து இருக்கிறோம்.

      உங்களின் விவரமான பகிர்வுக்கு நன்றி.

      நீக்கு
  13. குதுப்மினாரில் இப்போதும் மேலே சென்று பார்க்க அனுமதியில்லை.

    அங்கே இருக்கும் புல்வெளிப் பகுதியில் இப்போது உணவு சாப்பிட அனுமதியில்லை.

    இந்தப்பதிவில் பகிர்ந்து இருக்கும் தகவல்கள் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
      குதுப்மினாரில் மேலே போக அனுமதி இல்லை என்பதற்கு பல காரணங்கள் சொனனார்கள்.

      நாங்கள் போன போதும் புல்வெளியில் உணவு சாப்பிட அனுமதி இல்லை.

      செங்க்கோட்டையில் நிறைய இடங்களை 1998ல் பார்த்தோம் அப்புறம் அடுத்த தடவை போகும் போதே நிறைய இடங்களை பார்க்கவிடாமல் கட்டி வைத்து விட்டார்கள்.

      காலங்களை கடந்து நிற்கும் கட்டிடக் கலையின் மிச்சங்களை பாதுகாக்க வேண்டியது இருக்கே!

      உங்கள் கருத்துக்கு நன்றி.



      நீக்கு
  14. மிக அழகான பதிவு...
    அந்தக் கால நினைவுகள் மேலிடுகின்றன..

    தவிரவும் இப்படியான பாடத்திட்டமும் அப்போது இருந்தது.. தான் கண்டு களித்த இடங்களை நயம்பட எடுத்துரைக்கப் பழக்கினார்கள் அன்றைய ஆசிரியர்கள்...

    ஆசிரியர்கள் வாக்கைத் தலைமேற்கொண்டு நடந்த மாணாக்கர் குழாமும் அப்போது...

    எப்படியான பொற்காலம்!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
      பழைய காலங்கள் நினைவுகளில் வந்து போவது உண்மை.

      பாடத்திட்டத்தில் சுற்றுலா கட்டுரை உண்டு., எனக்கு பிடித்த ஊர் என்றெல்லாம் கட்டுரை எழுத சொல்லுவார்கள்.வருடா வருடம் நான் பள்ளிச் சுற்றுலாவில் கலந்து கொண்டு போன இடங்களை குறிப்பெடுத்து எழுதிய கட்டுரைகள் நினைவுகளில்.

      ஆசிரியர், மாணவ்ர்கள் உறவு உன்னதமாக இருந்த காலம். நீங்கள் சொல்வது போல் பொற்காலம் தான்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  15. மிக அருமை மா ...

    பையனுக்கு இந்த வருட வரலாற்று பாடத்தில் இவை எல்லாம் உண்டு ...ஆசையாக படிப்பான் ,...நானும் கேள்விகள் கேக்கும் பொழுது அவனிடம் இவற்றை பற்றி பேசுவது உண்டு ...

    இப்பொழுது அவர்கள் படிக்கும் போதே இந்த இடங்களுக்கு எல்லாம் அழைத்து சென்று காண்பிக்க வேண்டும் என்னும் பேரவாவும் உண்டு ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அனுபிரேம், வாழ்க வளமுடன்

      //அவர்கள் படிக்கும் போதே இந்த இடங்களுக்கு எல்லாம் அழைத்து சென்று காண்பிக்க வேண்டும் என்னும் பேரவாவும் உண்டு ..//
      நல்ல காலம் வரட்டும் விரைவில். குழந்தைகளை அழைத்து சென்று காட்டி வாருங்கள்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  16. பழைய தில்லியில் பார்த்த இடங்களைப் பற்றிய பகிர்வு நன்று. ஒளிப்படங்கள் அப்போதைய பயணத்தில் சார் எடுத்தவையா? மீண்டும் 97_ஆம் ஆண்டு சென்றபோது இந்த நினைவுகளையும் அனுபவங்களையும் சார் பகிர்ந்திருப்பார் இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
      படங்கள் அவர்கள் போன போது எடுத்தது யார் எடுத்தது என்று தெரியவில்லை.
      97 ம் ஆண்டு சென்ற போது நினைவுகளை பகிர்ந்து கொண்டார்கள்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  17. நீங்கள் இடையில் 97ல் போனபோது என குறிப்பிட்டதை பார்த்து, முதல் பயணத்துக்கும்,இப்போதுள்ள பயணத்தில் நினைவுகளை பகிர்ந்திருப்பார் என. அனேகமானோர் இக்கேள்வியை கேட்டுவிட்டனர். பதிலும் உங்களிடமிருந்து தெரிந்தாயிற்று.
    நானும் குதுப்மினாரை கட்டிபிடிப்பது பற்றி படித்திருக்கேன்.இவைகளை பற்றி படித்ததுதான். இப்போ விரிவாக சார் எழுதியதை வாசிக்க ஞாபகம் வருகிறது. 10 ந.பை அப்போ இவை பெரிய காசு. எங்க ஊரில் 10 சதம் என்போம்.
    எங்க பாடசாலையிலும் எங்காவது கல்விச்சுற்றுலா போய் வந்தால் கட்டுரை எழுத்த்ச்சொல்வார்கள். அப்படி எழுத்ய அனுபவம் உண்டு. சாரோட கட்டுரை படிக்க ஞாபகம் வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பிரியசகி அம்மு, வாழ்க வளமுடன்
      ஆமாம், முதல் பயண நினைவுகளை மறுமுறை போன போது பகிர்ந்து கொண்டார்கள்.

      குதுப்பினார் இரும்பு தூணை கட்டி பிடிப்பது பாடத்தில் படித்து இருக்கிறோம்.
      10 சதம் பெரிய காசு என்பது பெரிய காசு அப்போது உள்ள குழந்தைகளுக்கும் அதன் மதிப்பும் தெரிந்து இருந்தார்கள்.

      ஒவ்வொருவருக்கும் சிறு வயதில் சுற்றுலா சென்று கட்டுரை எழுதிய நினைவுகள் வந்ததில் மகிழ்ச்சி.

      தொடர்ந்து படித்து கருத்துக்கள் சொன்னது மகிழ்ச்சி , நன்றி அம்மு.

      நீக்கு