செவ்வாய், 26 ஜனவரி, 2021

உல்லாசப்பயணம் - 4


ரயில் அடுத்து ஜான்ஸியிலிருந்து ஆக்ரா நோக்கி புறப்பட்டதை பார்ப்போம் என்றேன் முந்தின பதிவில்.  தொடர்ந்து பார்க்கலாம்.


 முந்தின பதிவு படிக்கவில்லை என்றால் படிக்கலாம்.

ஆகரா 
பயண நோட்டில்  சேமித்து வைத்த படங்கள்.
                                                 


அடுத்த  பதிவில் தலைநகர் டெல்லியில்   காணச்சென்றக் காட்சிகளைப் பார்ப்போம்.

வாழ்க வளமுடன்
===============================================================

 

31 கருத்துகள்:

 1. அசராத பயணமாக இருக்கிறது. காலையில் புறப்பட்டு
  இரவு வரையில் பயணம்.
  அலுப்பில்லாமல் சென்றிருக்கிறார்கள்.
  ஆக்ரா நகரின் வர்ணனையும்
  தாஜ் மஹால் புகைப் படங்களும் பொக்கிஷமாகக்
  காட்சி கொடுக்கின்றன.
  உண்மையிலேயே ஆக்ரா சென்ற உணர்வு வருகிறது.

  கட்டிட அளவுகளை இவ்வளவு துல்லியமாக
  யாரும் சொல்லிக் கேட்டதில்லை.


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்

   கல்விச்சுற்றுலா இல்லையா ! விரைவில் முடித்து ஊருக்கு திரும்ப வர வேண்டும்.
   கட்டிட அளவுகள் துல்லியமாக இருக்கவேண்டும் பாடம் இல்லையா!
   இது அவர்களுக்கு பின் நாளில் உதவியது பாடல் பெற்ற தலங்கள் போன போது எல்லாம் வரைந்தும் எழுதியும் வைத்துக் கொண்டார்கள்.

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 2. அக்பரின் கோட்டை, ஜஹாங்கீர் அரண்மனைத் தோட்டங்கள் நீரூற்றுகள்
  என்று ஒவ்வொன்றாகப்
  பொறுமையுடன் விவரித்திருக்கிறார்.
  இந்தப் பதில் ஒட்டப் பட்டிருக்கும் படங்களும்
  புத்தம் புதிது போலப் பாதுகாத்து வந்திருக்கிறீர்கள்
  அன்பு கோமதி.
  எத்தனை பாராட்டினாலும் தகும்.

  நிறைய பேர் தாஜ் மஹால் பார்த்திருக்கலாம்.
  ஆனால் நுணுக்கமாகப் பார்த்து,
  அப்படியே சார் விவரித்திருப்பது மிகச் சிறப்பு.
  உங்களுக்கு ஆதரவாக இந்த எழுத்து உங்களை ஊக்குவிக்கும்.
  உங்கள் உழைப்புக்கு நன்றி மா.

  இந்த எழுத்துகள் தான் புத்தகமாக வரவேண்டும். இறைவன் அருளட்டும்.
  வாழ்க வளமுடன் அன்பு கோமதி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாங்கள் தாஜ் மஹால் சேர்ந்து பார்த்த படம் அழிந்து விட்டது அது எனக்கு மிகவும் வருத்தம்.

   தனியாக அம்மா, சகோதரி குடும்பத்துடன் போனது இருக்கிறது.
   அவர்கள் நோட்டில் படங்களை ஒட்டி வைத்து இருக்கிறார்கள்
   அதற்கு கீழ் எழுத நேரமில்லை போலும் அப்புறம் தொடர வில்லை.

   முன்பு போஸ்ட் கார்ட் படங்கள் ஒவ்வொரு சுற்றுலாத்தலங்களிலும் விற்பார்கள். அவர்கள் எடுத்தது, வாங்கியது எல்லாம் வைத்து ஆல்பம் போல் தயாரித்து இருக்கிறார்கள்.

   உங்கள் விருப்பம் நிறைவேற வேண்டும்.
   உங்கள் கருத்துக்கும் , வாழ்த்துக்கும் நன்றி.

   நீக்கு
 3. மிக தெளிவான நடையில் எளிமையாக விவரித்து சொன்னவிதம் மிக அருமை.. அதுமட்டுமில்லாமல் ஒரு சில இடங்களில் தவிர அடித்தல் திருத்தல் இல்லாமல் மனதில் வாங்கியதை எழுதியதை பாரட்டத்தான் வேண்டும் உங்களவரை பற்றி முன்பு எனக்கு அதிகம் தெரியாது... இப்போதுதான் அவரை பற்றி தெரியவந்தது..வாழும் போது அவரை பற்றி அறிந்து பாராட்டாமல் இருந்ததை நினைக்கும் போது இப்போது மனம் வருந்துகிறது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் மதுரை தமிழன், வாழ்கவளமுடன்

   நானும் அவர்கள் திறமைகளை பதிவு செய்யாமல் போய் விட்டேன்.
   இப்போது வருந்தி கொண்டு இருக்கிறேன்.

   அவர்களிடம் நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டு இருக்கலாம், படித்து இருக்கலாம். எல்லா வற்றையும் கை நழுவ விட்டு விட்டேன். என்னால் ஒரு பிரயோசனமும் இல்லை இறைவன் என்னை எடுத்துக் கொண்டு அவர்களை வைத்து இருந்து இருக்கலாம்.


   வாழ் நாள் எல்லாம் படித்துக் கொண்டே இருந்தார்கள். அவர்கள் தன்னை வெளிபடுத்தி கொண்டது குறைவு. அவர்களுடன் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கும், மாணவசெல்வங்களுக்கும் அவர்களின் திறமைகள் தெரியும்.

   பிள்ளைகள் நிறைய பேசுவார்கள் அவர்கள் அப்பாவுடன் பேத்தி, பேரன்கள் எங்களுக்கு தாத்தாவின் உதவி தேவைபடும் நேரம் இப்படி ஆகி விட்டதே! என்கிறார்கள்.

   என்ன செய்வது இறைவன் விருப்பம் இப்படி இருக்கும் போது என்ன செய்வது?

   உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி.
   நீக்கு
 4. சேமிப்புகள் பொக்கிஷமாக பாதுகாத்து வைத்து இருப்பது சிறப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளடமுடன்

   இந்த பெருமையும் சாரைத்தான் சேரும்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.
   நீக்கு
 5. எத்தனை எத்தனை தகவல்கள். ஒரு பயணக் கட்டுரை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்தக் கட்டுரை ஒரு உதாரணம். படங்களும் நன்று. அவரது கையெழுத்தில் படிக்கப் படிக்க மகிழ்ச்சி பொங்குகிறது. அடுத்தது தலைநகர் தில்லி... அவரது வார்த்தைகளில் எங்கள் ஊர் பற்றி அறியக் காத்திருக்கிறேன் மா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
   நிறைய பயணங்கள் செய்து பயணக்கட்டுரை எழுதும் உங்களுக்கு சாரின் பயணக் கட்டுரை பிடித்து இருப்பது மகிழ்ச்சி.

   உங்கள் ஆர்வத்திற்கும் அன்பான கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 6. கட்டிடங்களைப் பற்றிய விவரணைகள் வெகு துல்லியம். இப்போதெல்லாம் பொதுவாக நாம் இணையத்தின் துணையோடு விவரங்களை சேகரித்து அத்தோடு நாம் கண்ட காட்சிகளை நினைவுக்குக் கொண்டு வந்து பயணக் கட்டுரைகளை எழுதிட முடியும். ஆனால் சார் அருமையாக ஒவ்வொன்றையும் விவரித்திருக்கிறார். பயண நோட்டில் படங்களை ஒட்டி வைத்திருப்பதும் நேர்த்தி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

   //இப்போதெல்லாம் பொதுவாக நாம் இணையத்தின் துணையோடு விவரங்களை சேகரித்து அத்தோடு நாம் கண்ட காட்சிகளை நினைவுக்குக் கொண்டு வந்து பயணக் கட்டுரைகளை எழுதிட முடியும்.//

   நீங்கள் சொல்வது உண்மைதான் .

   நோட்டிலேயே எல்லா படங்களும் இருந்து இருக்கிறது , அதை ஸ்கேன் செய்ய எடுத்தவர்கள் அந்த நோட்டில் வைக்காமல் விட்டதால் படங்கள் நிறைய இணைக்க முடியவில்லை. நோட்டில் இருக்கும் ஒரு சில படங்கள் தான் இணைக்க முடிந்தது.

   பதிவை ரசித்து படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.   நீக்கு
 7. பதில்கள்
  1. வணக்கம் கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 8. சேமித்து வைத்த படங்கள் பொக்கிசங்கள்... பல அரிய தகவல்கள் உள்ளது அம்மா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தன்பாலன், வாழ்க வளமுடன்

   //பல அரிய தகவல்கள் உள்ளது அம்மா...//

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 9. வணக்கம் சகோதரி

  நலமா சகோதரி? எப்படியிருக்கிறீர்கள்? உங்களை நினைக்காத நாளில்லை. இன்று வலைத்தளத்தில் உங்கள் வரவை கண்டதும் மிகவும் சந்தோஷமாக இருந்தது. உங்கள் கணவரின் கல்லூரி சுற்றுலா பயண விபரங்களை அழகாக தொகுத்து தருவதை இப்போதுதான் படித்தேன். தங்களின் அருமையான எழுத்தாற்றலுடன் தங்கள் கணவரின் அற்புதமான கட்டுரை வடிவில் வந்திருக்கும் பதிவை மிக சுவாரஸ்யமாக படித்து வருகிறேன். அவர் கையெழுத்துகள் அவ்வளவு முத்து முத்தாக தெளிவுடன் இருக்கிறது.

  எனக்கு ஏற்பட்ட நெட் பிரச்சனை காரணமாக ஒரு வார காலத்துக்கும் மேலாக என்னால் வலைத்தளம் வர இயலவில்லை எனக்கும் இந்த வலைத்தளந்தான் மன அமைதியை தந்து கொண்டிருக்கிறது. எப்படியோ இன்று வந்தவுடன் இங்கு என் நண்பர்கள் பதிவில் உங்களை கண்டதும் மிகுந்த சந்தோஷமாகி போனேன். தங்களுக்கு மனபலம் தந்த இறைவனுக்கும், உங்களை நன்கு கவனித்து பேணும் உங்கள் உறவுகளுக்கும் என் அன்பார்ந்த நன்றிகள்.இவ்விதமே நீங்கள் தொடர்ந்து வலைத்தளம் வந்து கொண்டிருப்பதை நாங்கள் அனைவரும் ஆவலுடன் விரும்புகிறோம் அவ்விதமே இனி வாருங்கள் சகோதரி. தொடர்ந்து தங்கள் பதிவுகளை விடாமல் படிக்கிறேன்.உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.

  அன்புடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

   நானும் உங்களை நினைத்து கொண்டே இருக்கிறேன்.
   பயணக்கட்டுரையை படித்து வருவது மகிழ்ச்சி.
   //எனக்கும் இந்த வலைத்தளந்தான் மன அமைதியை தந்து கொண்டிருக்கிறது.//

   நெட் பிரச்சனை சரியானது மகிழ்ச்சி. இனி பதிவுகள் எழுதுங்கள்.
   மனபலத்தை கேட்டு தினம் இறைவனிடம் வேண்டுகிறேன். என்னை கவனித்து பேணும் உறவுகளுக்கும், மனதைரியத்தையும், ஆறுதலையும் அளித்து வரும் நட்புகளுக்கும் நன்றிகள் சொல்லிக் கொண்டே இருக்கிறேன்.

   இங்கு மகன், மருமகள், பேரனின் அன்பான கவனிப்பில் நலமாக இருக்கிறேன்.

   வருகிறேன் வலைத்தளத்திற்கு. நீங்களும் தொடர்ந்து வருவேன் என்றது மகிழ்ச்சி தருகிறது.

   உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி கமலா.

   நீக்கு
 10. அருமையான விவரனைகள். நாங்கள் தாஜ்மஹால் சென்றிருந்த பொழுது கைட் கூறிய விளக்கங்கள் மறந்து விட்டது. உங்கள் கணவர் மிக அழகாகவும், தெளிவாகவும் எழுதி வைத்துள்ளார். அதை பத்திரமாக பராமரித்திருப்பது பாராடுதல்களுக்குரியது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்
   உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி பானு.

   நீக்கு
 11. வாசித்தேன் அக்கா .ஒவ்வொரு பக்கமும் பல புதிய செய்திகளை தாங்கி வருகின்றது .யமுனை நதிக்கரை ஆமைகள் .இன்னமும் அவை இருக்கா என்று அறிய ஆவலாயிருக்கு .நீர் கலக்காத பால் ஆச்சர்யமா யிருக்கு .1965 களில் புகைவண்டிப்பயணத்தில் ஒவ்வொன்றையும் விட்டுவிடாமல் நினைவு கூர்ந்து எழுதியிருக்கிறார் .எனக்கு இதுவரைக்கும் நாட்குறிப்பு எழுதக்கூட வராது . நாங்கள் சென்ற இடங்கள் பற்றிக்கூட எழுதணும்னு தோணலை .இனி முயற்சிக்கணும் இதைப்பார்த்தாவது .தொடர்கிறேன் அக்கா 

  பதிலளிநீக்கு
 12. வணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்
  யமுனை நதிக்கரை ஆமைகள் இப்போது இருக்கா தெரியவில்லை ஏஞ்சல்.
  நீர் கலக்காத பால் மதுராவில் குடித்து இருக்கிறேன்.
  என் கணவர் நாட்குறிப்பு எழுதிய டைரிகள் நிறைய இருக்கிறது.

  நீங்கள் பார்த்த இடங்களை எழுதுங்கள் நேரம் இருக்கும் போது.

  உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி ஏஞ்சல்.

  பதிலளிநீக்கு
 13. சென்ற இடங்களைக் குறித்துக்கொண்டு பயணக் கட்டுரையாக எழுதியுள்ளார். நல்ல விவரணம்.

  நீண்ட பயணம். உணவுக்கு என்ன செய்தனர் எனக் குறிப்பிடவில்லை.

  ஆக்ரா கோட்டை பார்க்கவேண்டிய ஒன்று. அதில்தான் முகலாய சரித்திரத்தில் பெரும்பகுதி புதையுண்டிருக்கிறது.

  மதுரா, பிருந்தாவன், எனக்கு சென்ற ஃபெப்ருவரி பயணத்தை நினைவூட்டியது.

  நல்லா எழுதியிருக்கார். படங்களும் சிறப்பு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்
   15 நாள் பயணம்.

   ஹாஸ்டல் சமையல்க்காரரை அழைத்து சென்று இருந்தார்கள்


   முந்திய பதிவுகளில் பூரி சாப்பிட்டோம், காய்கறிகள் வாங்கினோம் என்று எல்லாம் எழுதி இருந்தார்கள்.

   கஜுராஹூ பதிவு நீங்கள் படிக்கவில்லை மூன்றாம் பகுதி அதில் ஒரு தமிழர் உணவு விடுதி நடத்துவதையும் அவர்கடையில் கொண்டு போன உணவை சாப்பிட்டதையும், அப்புறம் அவர் கடையில் சிற்றுண்டி சாப்பிட்டதையும் எழுதி இருப்பார்கள்.

   உங்கள் கருத்துக்கு நன்றி.


   நீக்கு
 14. தாஜ்மஹால் விவரங்கள் நிறைய கொடுத்திருக்கிறார்.  பார்த்ததை  மனதில் அங்கு வாங்கி, விவரங்கள் அறிந்து மறக்காமல் எழுதி இருக்கிறார்.  எவ்வளவு நேரம் எழுதினாலும் கையெழுத்து சீராக இருப்பது வியப்பு.

  பதிலளிநீக்கு
 15. அழகான எழுத்தில் நல்ல நினைவாற்றலுடன் அனைத்தையும் விடாமல் குறிப்பிட்டிருக்கிறார். இப்போல்லாம் கூகிள்/விக்கி பீடியா துணையுடன் விபரங்கள் சேகரிக்க வேண்டி இருக்கிறது. எதுவும் இல்லாத அந்தக் காலத்தில் இத்தனை விபரங்களைச் சேகரித்து நினைவில் வைத்துக் கொண்டு எழுதி இருப்பது மிகவும் பாராட்டத்தக்க ஒன்று. புத்தகமாகப் போடுங்கள்.

  பதிலளிநீக்கு
 16. விவரமான தகவல்கள். கல்லூரியிலும் uniform இருந்ததா? புகைப்படங்களில் அனைவரும் white & white உடுப்பு அணிந்து இருப்பதினால் இந்த சந்தேகம்.

  பதிலளிநீக்கு
 17. அக்பர் கோட்டையின் விவரங்கள் அருமையா இருக்கு மா ...

  தாஜ்மஹால் தகவல்களும் படங்களும் அழகு ...

  பார்க்க ஆசைப்படும் இடங்கள் மதுரா எல்லாம் .....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அனு பிரேம், வாழ்க வளமுடன்

   உங்கள் ஆசைகள் நிறைவேற வாழ்த்துக்கள்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 18. தாஜ்மகால் புகைப்படங்களும்,மற்றைய ப்ளாக்,அண்ட் வைட் படங்கலும் பொக்கிஷம். ஒவ்வொரு இடத்தையும் ர்சித்து,ரசித்து பார்த்தபடியால்தான் இத்தனை விளக்கமாக சாருக்கு எழுதமுடிந்திருக்கு. அக்பர் கோட்டையை பற்றி பாடசாலையில் படித்தபின் இப்போதான் படிக்கிறேன். எனக்கும் தாஜ்மகால் பார்க்கவேண்டிய இட லிஸ்டில் ஒன்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் பிரியசகி அம்மு, வாழ்க வளமுடன்
   ஆமாம் பழைய படங்கள் பொக்கிஷம் தான்.
   ரசித்து மனதில் நிலைநிறுத்தி கொண்டு எழுதியது.பாடம் அல்லவா?

   பாடசாலையில் படித்தவை நினைவுக்கு வந்ததா?
   விரைவில் பார்க்கும் நிலமை வரட்டும்.
   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி அம்மு.

   நீக்கு