சனி, 23 ஜனவரி, 2021

உல்லாசப்பயணம் - பகுதி 2

 

உல்லாசப்பயணம்  என் கணவரின் கல்லூரிச்சுற்றுலா தொடர் பதிவு முந்தின பதிவு படிக்காதவர்கள் படிக்கலாம். 


சாஞ்சியில் அமைந்துள்ள ஸ்தூபிகள் ,புத்தவிகாரம்  பற்றிய வரலாறு இந்த பதிவில் இடம்பெறுகிறது. 

படங்கள் இணைக்க முடியவில்லை. பயணக்கட்டுரை எழுதவேண்டும் என்று படங்களை சேமித்து  எடுத்து வந்த மகனின்  மடி கணினி பழுது ஆகி விட்டதால்  படங்களை இணைக்கமுடியவில்லை. ஒரு சில படங்கள் மட்டும் அலைபேசியில் இருக்கிறது.  அந்த இடங்கள் வரும் போது போடுகிறேன்.



நிறைய படங்கள் ஊரில் ஆல்பத்தில் இருக்கிறது. பிறகு இணைக்க வேண்டும்.


                



சிற்பப் பொருட்காட்சி நிலையத்தைப்பார்க்க அடுத்த பதிவு வாருங்கள்.
-தொடரும்
பின் குறிப்பு:-

சுற்றுலாவில் எடுத்த படம், இந்த படத்தில் இரண்டாவதாக இருக்கும் நண்பர்  திரு . சோமசுந்தரம் அவர்கள் பழனியில் ஹாஸ்டலில் ஒரே அறையில் இருந்தவர்கள் பூம்புகார் கல்லூரியில் ஒன்றாய் பணி புரிந்தார்கள் குடும்ப நண்பர்.

பழனி    ஸ்டியோவில் எடுத்த படம் கடைசியில் இருப்பவர் திரு. சோமசுந்தரம் அவர்கள்.

கல்லூரியில் உடன் படித்த நண்பர்    திரு. சோமசுந்தரம்  இந்த படத்தில் என் கணவருக்கு அடுத்து (இடது பக்கம்) இருக்கிறார்கள். பயணத்தில் உடன் வந்த பழனி ஆசிரியர் திரு . அரு. இலக்குவன் அவர்கள் பிரின்ஸ்பாலாக பூம்புகார் கல்லூரியில் இருந்தார்கள், அவர்கள் பேசி கொண்டு இருக்கிறார்கள்.

                                                                     வாழ்க வளமுடன் !
=======================================================================

40 கருத்துகள்:

  1. வரிகளுக்கிடையே சீரான இடைவெளி.  என்ன ஒரு ஒழுங்கு..   படங்களும் அப்போதே வரைய ஆரம்பித்து விட்டார் போல.  தெளிவான படம்.  மேலும் சுவாரஸ்யமான தகவல்கள், புத்தரின் பல், அசோகர் காலம் போல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      படங்கள் சிறு வயதிலிருந்தே வரைவார்கள். கண்ணில் கண்ட மாதிரி வரைவார்கள். பார்த்து வரைவது கிடையாது. மனதில் பதித்துக் கொண்டு வரைவது தான்.

      அசோகர்தான் புத்த விகாரங்கள் கட்டி இருக்கிறார்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  2. அன்பு கோமதி, அற்புதமான பதிவு. எத்தனை உழைப்பு உள்ளே அடங்கி இருக்கிறது என்று எண்ண மிகச் சிறப்பு. அருமையாகப் பயணம் செய்வது ஒன்று. அஅத்தனை விவரங்களை உடனே எழுதி வைத்திருக்கிறார் !அதுவும் மணி மணியாக ஒரு பிழை இல்லாமல். நாம் எல்லோரும் இதே போலப் பழகி இருந்தாலும் அந்த இளைய வயதில். ஒரு சிந்தனையோடு பதிந்திருக்கும் அருமை விவரிக்க முடியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்
      நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது.
      பாடம் நடத்த் போகிறோம் என்றால் முதல் நாள் நிறைய படித்து விவரங்கள் குறித்து வைத்துக் கொண்டுதான் கல்லூரி செல்வார்கள்.
      ஒரு ஊருக்கு போவது என்றால் அந்த ஊரைப்பற்றி தெரிந்து கொண்டு பார்க்க வேண்டிய இடங்களை குறித்துக் கொண்டுதான் போவார்கள்.

      நம் சிறிய வயதில் சுற்றுலா அழைத்து சென்றால் பயணக்கட்டுரை எழுத சொல்லுவார்கள்.

      பார்க்காதவர்களும் கட்டுரை எழுதுவார்கள்.

      இவர்கள் போய் வந்த சுற்றுலா படிப்பு சம்பந்தபட்டது அதனால் விவரங்கள் தெளிவாக எழுதி இருக்கிறார்கள்.

      உங்கள் கருத்துக்கு நன்றி அக்கா.

      நீக்கு
  3. சென்ற கருத்து பதிவானதா தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவாகி பதில் தந்து விட்டேன் அக்கா

      ஊரிலிருந்து போன் செய்து கொண்டு இருந்தார்கள் நேற்று. அதனால் கணினி பக்கம் வர முடியவில்லை.

      நீக்கு
  4. தொகுப்பு அருமையாக இருக்கிறது சகோ பழைய நினைவுகள் இனிமையே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டைஜி, வாழ்க வளமுடன்
      நீங்கள் சொல்வது போல் பழைய நினைவுகள் இனிமையே!
      இனி பழைய நினைவுகளுடன் வாழ கற்றுக் கொள்ள வேண்டுமே நான்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  5. (மூன்றாவது படத்தில்) அழகாக படம் வரைந்து, அதற்கு விளக்கங்களும் மிகவும் அருமை அம்மா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்

      பாடல் பெற்ற தலங்களுக்கு சென்ற போது இப்படித்தான் கோவில் படம் வரைந்து குறிப்புகள் எழுதி வைத்து இருப்பார்கள்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  6. சிறப்பான தொகுப்பு. அந்தக் கால கருப்பு வெள்ளை படங்கள் அழகும்மா...

    அழகான கையெழுத்தில் சிறந்ததொரு பயணக் கட்டுரை. விவரங்களைச் சொல்லிச் செல்லும் பாங்கு நன்று. தொடரட்டும் பதிவுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்
      அந்தக் கால கருப்பு வெள்ளை படம் நன்றாக இருக்கும் என்பது உண்மை.
      கட்டுரையை பாராட்டியதற்கு நன்றி வெங்கட்.

      நீக்கு
  7. என்ன அழகான கையெழுத்து. விவரங்களின் கோர்வை. மரக்கமுடியாத பொக்கிஷங்கள். அருமை. இனிமை. அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் காமாட்சி அக்கா, வாழ்க வளமுடன்
      அவர்களும் தன் கல்லூரி சுற்றுலா காலங்களை மறக்க முடியாமல் பொக்கிஷமாக பாது காத்து வைத்து இருந்தது இப்போது எனக்கு உதவுகிறது.(ஆவர்கள் நினைவுகளை போற்ற)

      உங்கள் கருத்துக்கும், அன்புக்கும் நன்றி.

      நீக்கு
  8. சார் இருக்கும் படங்கள் நல்ல தெளிவாக இருக்கின்றன.
    அவர் வரைந்த ஸ்தூபம் அதைச் சுற்றி இருக்கும்
    வளைவுகள் எல்லாமே மிக அருமை.
    போற்றிக் காத்த கோமதிக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
      சார்தான் எல்லாவற்றையும் பத்திரபடுத்தி எனக்கு கொடுத்து சென்று இருக்கிறார்கள்.
      உங்கள் வாழ்த்துக்கு நன்றி அக்கா.

      நீக்கு
  9. அருமையான பயணக்கட்டுரை, சரித்திரத் தகவல்களுடன் கொடுத்திருக்கார். எழுத்து அருமை. ஒரே நேர்கோட்டில் எழுதி இருக்காரே! எனக்கும் முன்னாடி எல்லாம் இப்படித்தான் நேராக வரும். இப்போதெல்லாம் எழுதுவதில் பிரச்னைகள் வந்துவிட்டன. அருமையான பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாமபசிவம், வாழ்க வளமுடன்
      கலவிச்சுற்றுலா சென்றதால் குறிப்புகள் எல்லாம் சேகரித்து எழுதி வைத்து இருக்கிறார்கள்.
      முன்பு கையால் மட்டுமே எழுதுவீர்கள், இப்போது டைப் செய்கிறீர்கள் விரைவாய்.
      எழுத ஆரம்பித்து விட்டால் வந்து விடும் உங்களுக்கு

      பகிர்வை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  10. 55 வருடங்கள் ஆன பின்னரும் எழுத்துத் தெளிவாகப் படிக்கும்படி உள்ளது. பேப்பரும் தூளாகாமல் இருக்கிறது. பத்திரமாகப் பாதுகாத்து வையுங்கள்.

    பதிலளிநீக்கு
  11. அருமையான கட்டுரை. நாம மனதில் உள்ளதை பேப்பரில் எழுதும்போது அடித்தல் திருத்தல் தவிர்க்கமுடியாதது. ஆனால் இங்க வெகு அழகா எழுதியிருக்கிறார் சார்... படம் சூப்பர். 'விளக்குநர்' போன்ற தமிழ் வார்த்தைகளை மிகவும் ரசித்தேன்.

    அவர் இருக்கும்போது இதனை வெளியிடத் தோன்றவில்லையே உங்களுக்கு. எங்களின் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டிருந்திருக்கலாம்.

    பாராட்டுக்குரிய கட்டுரை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
      விளக்குநர் என்ற வார்த்தையை ரசித்தமைக்கு நன்றி.
      அவர்கள் இருக்கும் போதே எழுத நினைத்த பயணக்கட்டுரை . போன பதிவிலேயே சொன்னேன்.
      அவர்கள் அப்புறம் எழுது என்றார்கள்.

      //எங்களின் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டிருந்திருக்கலாம்.//
      அப்போது வெளியிட்டு இருந்தால் நீங்கள் எல்லோரும் கொடுக்கும் பின்னூட்டங்கள்

      அவர்களை மகிழ்வித்து இருக்கும் ,எல்லோருக்கும் நன்றி சொல்லி இருப்பார்கள் அவர்கள் புன்சிரிப்பால்.

      பாராட்டுக்களை ஏற்றுக் கொண்டு இருப்பார்கள்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.


      நீக்கு
  12. தகவல்களுடன் அருமையான கட்டுரை. புத்தரின் வரலாற்றைக் கூறும் சிற்ப வரிசையில் புத்தரின் உருவம் இருக்கவில்லை என்பது சுவாரஸ்யம். படமும் அழகாக வரைந்திருக்கிறார். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
      //புத்தரின் வரலாற்றைக் கூறும் சிற்ப வரிசையில் புத்தரின் உருவம் இருக்கவில்லை என்பது சுவாரஸ்யம்.//

      கட்டுரையை நன்கு படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
      குடையும், அரியணைமட்டுமே புத்தரின் உருவத்திற்கு பதிலாக பொறிக்கப்பட்டுள்ளது என்பது ஆச்சிரியமான உண்மை.

      வட நாட்டில் நான் பார்க்காத இடங்களை அழைத்து செல்வதாக சொல்லி இருந்தார்கள்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  13. எழுத்துப் பிழை, அடித்தல் திருத்தல், வரி பிளப்பு - இவையெல்லாம் இல்லாமல் எழுதுவதே வரம்...

    சிறப்புக்குரிய பதிவு...

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

      உங்கள் அன்பான கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  14. பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்

      நினைவுகள் இனிமையானதுதான்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  15. எல்லா விபரங்கலையும் அழகாக (அழகான கையெழுத்து)எழுதி, படம் கூட அழகா வரைந்திருக்கிறார். அவ்வளவு நேர்த்தியாக இருக்கு. சார் இருக்கும்போதே எழுதியிருந்தால் இப்படி நாங்க எல்லோரும் பாராட்டுவது தெரிந்து மகிழ்ச்சியடைந்திருப்பார். இன்னும் சில தகவல்களும் கிடைத்திருக்கும் உங்களுக்கு.படங்களும் அழகா இருக்கு அக்கா.
    நான் படிக்கும்போது தமிழ் ஆசிரியர் இப்படி கோடில்லாதாளை தந்து நேராக,அழகாக எழுதவேண்டும் என்பார். ஒவ்வொருநாளும் பயிற்சியாக இது இருக்கும். இப்போதான் எழுதுவதே இல்லையே கையெழுத்து மட்டுமே போட பேனா தேடுவது. மற்றும்படி மொபைல்,கணனிதானே தட்டுவது.அருமையான பதிவு,பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பிரியசகி அம்மு, வாழ்க வளமுடன்
      //சார் இருக்கும்போதே எழுதியிருந்தால் இப்படி நாங்க எல்லோரும் பாராட்டுவது தெரிந்து மகிழ்ச்சியடைந்திருப்பார். இன்னும் சில தகவல்களும் கிடைத்திருக்கும் உங்களுக்கு.//

      ஆமாம், அம்மு. என்ன செய்வது! முடியாமல் போய் விட்டது.

      படங்களும் அழகா இருக்கு அக்கா.//

      நிறைய படங்கள் அங்குள்ள கணினியில் இருக்கிறது. என்னிடமிருக்கும் படங்களை வைத்து போடுகிறேன்.

      //நான் படிக்கும்போது தமிழ் ஆசிரியர் இப்படி கோடில்லாதாளை தந்து நேராக,அழகாக எழுதவேண்டும் என்பார். ஒவ்வொருநாளும் பயிற்சியாக இது இருக்கும். //

      ஆமாம் அம்மு, வரிசை ஏற்ற இறக்கமாய் இருந்தால் கேலி செய்வார்கள் .


      //இப்போதான் எழுதுவதே இல்லையே கையெழுத்து மட்டுமே போட பேனா தேடுவது. மற்றும்படி மொபைல்,கணனிதானே தட்டுவது//

      ஆமாம், இப்போது எழுதுவது இல்லைதான்.

      தினம் ஒரு பக்கம் இறை நாமங்களை எழுதி கொண்டு இருக்கிறேன்.

      பதிவை ரசித்து படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
      இதற்கு முந்திய பதிவை படித்து விட்டீர்களா அம்மு?







      நீக்கு
  16. ஆஹா இது மாமாவின் கைவண்ணத்தில் எழுதி வச்சிருந்தாரோ.. எப்பவோ எழுதி இருக்கிறார் ஆனால் இப்போ அழகாக வெளி வருகிறது, மிக அருமையாக இருக்குது.

    பழைய படங்களோடு பார்க்க மிக அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்
      நீங்கள் எல்லோரும் அழைத்து தான் வலைப் பக்கம் வந்தேன்.
      உங்களுக்கு இப்போது வர முடியாதபடி வேலை தொந்திரவுகள் இருக்கிறது போலும்.

      உங்கள் ஊர் நிலை இப்போது எப்படி இருக்கிறது?

      போன பதிவு படித்தீர்களா?

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  17. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்

    நினைவுகள் இனிமையானதுதான்.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  18. சாஞ்சி ஸ்தூபி சார் அவர்களின் கைவண்ணத்தில்  வரைந்த படம் அழகோ அழகு . மடிக்கணினியில் உள்ள படங்களையும் நேரம் கிடைக்கும்போது இணைச்சிடுங்கக்கா .இது ஒரு அற்புதமான பொக்கிஷ சேமிப்பு .

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்
    ஊருக்கு போன பின் தான் மற்ற படங்களை இணைக்க முடியும்.
    மனிக்கணினியில் இருக்கும் படங்களை ஒவ்வொரு பதிவிலும் இணைக்கிறேன்.

    உங்கள் அன்பான் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  20. பதில்கள்
    1. வணக்கம் மதுரை தமிழன், வாழ்க வளமுடன்
      உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  21. சாஞ்சியில் அமைந்துள்ள ஸ்தூபிகள் ,புத்தவிகாரம் பற்றிய தகவல்கள் மிக அருமை , சார் வரைந்துள்ள படம் மிக அற்புதம் ..

    எங்களின் பயணத்தில் இனி இது போல குறிப்புகள் எடுக்க வேணும் என்னும் ஆசை வருகிறது ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அனுபிரேம், வாழ்க வளமுடன்

      சார் வரைந்த படத்தை பாராட்டியதற்கு நன்றி.

      //எங்களின் பயணத்தில் இனி இது போல குறிப்புகள் எடுக்க வேணும் என்னும் ஆசை வருகிறது ..//

      நீங்கள் அழகாய் செய்வீர்கள் அனு.

      வாழ்க வளமுடன்

      நீக்கு