Saturday, July 12, 2014

கண்ணில் தோன்றும் காட்சி எல்லாம்!

பறவைகள் பலவிதம்! ஒவ்வொன்றும் ஒருவிதம்! என்பதுபோல்  பறவைகளின் படங்கள் எனக்குத் தெரிந்தவரை எடுத்து இருக்கிறேன்.  பாருங்கள். பார்த்து உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.
  
ஏகாந்தம் இனிது

காகமும், குயிலும் 
பாடும் பெண் குயில் 
(ஆண் குயிலுக்கு உடம்பில் புள்ளிகள் இல்லை, பெண் குயில் போல் )


முகம் காட்ட மறுத்த குயில் 

ஆண் குயில்
மறைந்து இருந்து பார்க்கும் மர்மம் என்ன? 

இரைக்காகக் காத்து இருக்கிறது-(drongo) கருங்குருவி 
கிடைத்து விட்டது!
ஆனந்தம் ஆனந்தம்!

வாலாட்டிக் குருவி (பாடும் பறவை) (கருப்பு வெள்ளை ராபின் பறவை)

புளியமரத்தின் இலைகள் காய்ந்தாலும், 
பச்சைக்கிளி  பசுமை தருகிறது
என்னைப் படம் பிடிக்க முடியாதே!
நான் போறேன் போ!

 என் வீட்டுக்குள் வந்து மாட்டிக் கொண்டு வெளியே போக வழி தெரியாமல் மாட்டிக் கொண்ட தேன் சிட்டு

புறாவும்,  கொண்டைலாத்தி பறவையும்
மணிப்புறாவும், புல் புல் பறவையும்

மணிப்புறா

வீட்டு மொட்டைமாடியின் கொடிக்கம்பியில் உட்காரும் புல் புல்
என் வீட்டுக்கு அருகில் உள்ள மின்சாரக்கம்பியில் தினம்  காலை மாலை வந்து உட்காரும் மீன் கொத்தியின்  புகைப்படம் பாருங்கள்  - முதல் நாள்
இரண்டாம் நாள்
                                                                மூன்றாம் நாள்


இதை (hoopoe ) கொண்டைலாத்தி பறவை  என்கிறார்கள்  திரு.தெகாவும் , திருமதி. கீதாமதிவாணன் அவர்களும். இணையத்தில் சென்று பார்த்தேன்  இதன் உணவு பூக்களின் தேன், பூச்சிகள் என்கிறது. இருவருக்கும் நன்றி.

 தன் முகத்தை மறைத்துக் கொண்ட  பூச்சி பிடிப்பான் ( Bee Eater)-
 வயல்கள் அருகில் இருந்தது .

முகம் காட்டும் பூச்சிபிடிப்பான்.

கங்கை கொண்ட சோழபுரபின்னணியில் பூச்சிபிடிப்பான்
உறவினர் வீட்டில்  கூண்டுக்குள் காதல் கிளிகள்

சுதந்திரமாய் பறந்து, நினைத்த இடத்தில் அமர்ந்து இளைப்பாறி மகிழ்விக்கும் பறவைகள் ஒருபுறம்! இப்படிக் கூண்டுக்குள் அடைபட்டு அந்த வீட்டினரை மகிழ்விக்கும்   பறவைகள் ஒருபுறம்! 

                                                          வாழ்க வளமுடன்.
                                                                     --------------


56 comments:

‘தளிர்’ சுரேஷ் said...

அழகான படங்கள்! சிறந்த தொகுப்பு! அருமை!

ரூபன் said...

வணக்கம்
அம்மா
எல்லாப்படங்களையும் இரசித்தேன் அழகாக உள்ளது பகிர்வுக்கு நன்றி அம்மா
நன்றி
அன்புடன்
ரூபன்

துரை செல்வராஜூ said...

புல்புல்..
அந்த அழகான பறவையின் பெயர் இது தானா!..

எவ்வளவு கால பழக்கம் இதற்கும் எனக்கும்!.. பெயர் தெரியாமலே!.. விடியற்காலை 4.30 - 4.45 மணிக்கெல்லாம் விழித்து விடும் இந்த புல்புல்!.. தான் மட்டும் பாடினால் போதாது என்று - தன் குடும்பத்தையும் கூட்டி வந்து விடும்.வீட்டு வாசலில் போடும் கோலமாவுக்காக கும்மாளம். இதெல்லாம் 15 வருடங்களுக்கு முன்!.. ஆனால் - இப்போது வேலை செய்யும் இடத்திற்கு அருகேயும் தென்படுகின்றன..

எல்லா பறவைகளையும் கண்டதில் மகிழ்ச்சி..

G.M Balasubramaniam said...


இத்தனை வகைப் பறவைகளையும் காணவும் புகைப்படம் எடுக்க முடிகிறதே. வாழ்த்துக்கள் எங்கள் பக்கம் காகம் தேன்சிட்டு, புறா சிலசமயம் கிளிகள்.முகம் காட்டாதகுயில்கள் வருவதும் போவதும் தெரியாது.

ஹுஸைனம்மா said...

ம்ம்... சும்மாவே அடிச்சு ஆடுவிங்க... இப்ப புது காமரா வேற.. சொல்லணுமா... சூப்பர படங்கள்... எத்தனைவித பறவைகள் உங்க ஏரியாவில்.. பொறாமையா இருக்கு. :-)

ராஜி said...

மனதை கொள்ளைக் கொள்ளும் படங்கள்

ADHI VENKAT said...

எல்லாப் படங்களுமே அழகாக உள்ளன அம்மா. சிலவற்றின் பெயர்களையும் தெரிந்து கொண்டேன்.

கரந்தை ஜெயக்குமார் said...

படங்கள் அனைத்தும் அழகு
நன்றி சகோதரியாரே

ஸ்ரீராம். said...

கோபித்துக் கொண்டு செல்லும் சேவல், முகத்தை மறைத்துக் கொள்ளும் பூச்சி பிடிப்பான்... எல்லாப் படங்களுமே அழகு. பல்வேறு கோணங்களில் பறவைகளைப் படம் பிடித்து அசத்தி இருக்கிறீர்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

பறவைகள் ...... பலவிதம் ......
ஒவ்வொன்றும் ..... ஒருவிதம் !

என்ற பாடல் போல எல்லாமே அழகாக உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொருவித அழகு தான் .....

இவற்றையெல்லாம் தேடிப்பிடித்து படம் பிடித்து பதிவிட்டுள்ளது அதைவிட அழகாக உள்ளது.

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

பறவைகள் ...... பலவிதம் ......
ஒவ்வொன்றும் ..... ஒருவிதம் !

என்ற பாடல் போல எல்லாமே அழகாக உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொருவித அழகு தான் .....

இவற்றையெல்லாம் தேடிப்பிடித்து படம் பிடித்து பதிவிட்டுள்ளது அதைவிட அழகாக உள்ளது.

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

Yarlpavanan Kasirajalingam said...

பறவைகள் ஒவ்வொன்றும்
ஒவ்வொரு படமாக
படங்கள் ஒவ்வொன்றும்
ஒவ்வொரு எண்ணமாக
உண்மைகள் பேசுகின்றன!

சே. குமார் said...

படங்கள் அனைத்தும் அருமை...
வாழ்த்துக்கள் சகோதரி...

திண்டுக்கல் தனபாலன் said...

அட்டகாசம்....!

Thekkikattan|தெகா said...

மரங்கொத்தி பறவை இந்த புகைப்படத்தில் இல்லை. மாறாக hoopoe என்று வர வேண்டும். நல்ல முயற்சி!


ரை

rajalakshmi paramasivam said...

பறவைகளைப் பார்த்துக் கொண்டிருத்தலே அழகு தான். நல்ல ரசனையுடன் எடுக்கப்பட்ட புகைப் படங்கள்.நன்றி பகிர்விற்கு.

Bagawanjee KA said...

#சுதந்திரமாய் பறந்து, நினைத்த இடத்தில் அமர்ந்து இளைப்பாறி மகிழ்விக்கும் பறவைகள் ஒருபுறம்! இப்படிக் கூண்டுக்குள் அடைபட்டு அந்த வீட்டினரை மகிழ்விக்கும் பறவைகள் ஒருபுறம்! #
நீங்கள் படம் பிடித்து இறுப்பது ஒரு புறம் ,அதை நாங்கள் பார்த்து ரசிப்பது இன்னொரு புறம் !

ஜீவி said...

காக்கையால் கூட ஏகாந்தமாய் இருக்க முடியுமா, என்ன?..

புல் புல் பறவையை இப்பொழுது தான் பார்க்கிறேன்; சினிமாப் பாட்டில் கேட்டதோடு சரி.

மணிப்புறா சரி; மாடப்புறா எங்கே என்று மனசு கேட்டது.. அதற்கு என்ன பதில் சொல்லித் தேற்றுவது என்று தெரியவில்லை!

Ramani S said...

அற்புதமான புகைப்படங்கள்
ரசித்து ரசிக்கத் தந்தமைக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

கோமதி அரசு said...

வணக்கம் தளிர் சுரேஷ், வாழ்க வளமுடன்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் ரூபன், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.
எங்கள் குடியிருப்பில் கூடு கட்டி குடி இருக்கிறது புல் புல் முன்பு அது கூடு கட்டி இருப்பதை பதிவு போட்டு இருக்கிறேன்.
தினம் நான் வைக்கும் உணவை விரும்பி சாப்பிடும்.
நீங்கள் சொல்வது போல் காலையில் குரல் கொடுத்துக் கொண்டே இருக்கும் மதியம் வரை, பின்பு மாலையில் ஆரம்பித்துவிடும் ஆறுமணிக்கு மேல் சத்தம் இருக்காது.
அங்கும் நீங்கள் அதை பார்ப்பது மகிழ்ச்சி.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
முகம் காட்ட மறுக்கும் குயில் எங்கள் பக்கமும் உண்டு.
மதுரை போன போது என் வீட்டுக்குஅருகில் உள்ள வேப்பமரம் எதிர்ப்பக்கம் இருக்கும் புளியமரம் என்று (காலையில் உட்கார்ந்து கூவும்) இரண்டு மரத்திற்கும் இடையே பறந்து கொண்டே இருக்கும். அமரும் போது எடுக்க வெகு நேரம் காத்து இருந்தேன்.

பூச்சிபிடிப்பான் கங்கைகொண்ட சோழபுரத்தில் எடுத்தது.
மற்ற பறவைகள் எங்கள் பக்கம் இருக்கிறது.

தேன்சிட்டு பன்னீர்மரம் எங்கள் குடியிருப்பில் இருக்கிறது அதில் உள்ள பன்னீர் பூவில் தேன் எடுக்க வரும் போது எடுக்கலாம் என்றால் ஒரு நிமிடம் கூட உட்காராமல் பறந்து கொண்டே இருக்கும்.
வீட்டில் வந்து விட்டு வெளியே போக வந்த வழி தெரியாமல் திண்டாடிய போது பழைய காமிராவில் எடுத்தபடம்.

முன்பு திருவெண்காட்டில் எங்கள் வீட்டிலேயே கூடு கட்டி வாழ்ந்தது தேன்சிட்டு அப்போது என்னிடம் காமிரா இல்லை.

உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி சார்.

கோமதி அரசு said...

வணக்கம் ஹுஸைனம்மா, வாழ்க வளமுடன்.

உங்கள் பழைய குடியிருப்பில் உள்ள பறவைகளுக்கு உங்கள் முகவரி கொடுத்து வந்தீர்களே ! இங்கு வரவில்லையா?


உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் ராஜி, வாழ்கவளமுடன்.
பறவைகள் உங்களை இங்கு அழைத்து வந்து விட்டதா?
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் ஆதி, வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
படங்களை குறிப்பிட்டு கருத்து சொல்லி பறவைகளின் படங்களை ரசித்தமைக்கு நன்றி .

கோமதி அரசு said...

வணக்கம் வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் மிகவும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் yarlpavanan kasiralingm, வாழ்க வளமுடன்.
உங்கள் எண்ணங்களை அழகாய் சொன்னதற்கு நன்றி.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் குமார், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் தெகா, வாழ்கவளமுடன்.நலமா?
hoopoe இதுதான் எங்கள் பக்கத்தில் மரம் கொத்துகிறது தெகா. மீன் கொத்தியிலும் கொஞ்சம் வித்தியாசமான மீன் கொத்தி வைத்தீஸ்வரன் கோவில் தெப்பக்குளத்தில் மீன் பிடிக்கும்போது பார்த்து எடுத்தேன் அதை நேற்று பகிரமுடியவில்லை.
உங்கள் பின்னூட்டத்தில்
கடைசியில் ரை என்று முடிந்து இருக்கிறது, மேலும் ஏதாவது சொல்ல நினைத்தீர்களா?
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன்.
நீங்கள் சொல்வது போல் பறவைகளை பார்த்துக் கொண்டு இருந்தாலே மகிழ்ச்சி தான்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
முந்திய இரு பதிவுகளில் உங்களை காணவில்லையே! ஊரில் இல்லையா?

கோமதி அரசு said...

வணக்கம் பகவான் ஜி, வாழ்கவளமுடன்.
உங்கள் பாணியில் அழகாய் கருத்து சொல்லி இருக்கிறீர்கள் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.
எல்லாபறவைகளுமே ஏகாந்தமாய் இருக்க விரும்புகிறது என்று நினைக்கிறேன். உச்சாணி கிளையில் எல்லா பறவைகளும் சில நேரங்களில் தனியாக இருப்பதை பார்க்கிறேன்.

”பார்த்தால் பசிதீரும்” பாடல் நினைவுக்கு வந்து விட்டதோ சார்!
”மணிப்புறாவும், மாடப்புறாவும் மனதில் பாடும் பாட்டல்லோ!”

உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் ரமணி சார், வாழ்க வளமுடன். உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

ராமலக்ஷ்மி said...

பறவைகளைக் கவனிப்பது மனதுக்கு உற்சாகமானது. மிக அருமையான தொகுப்பு.

இராஜராஜேஸ்வரி said...

புளியமரத்தின் இலைகள் காய்ந்தாலும்,
பச்சைக்கிளி பசுமை தருகிறது

படங்கள் அனைத்தும்
மகிழ்ச்சி தருகின்றன..

சிரத்தையான பகிர்வுகளுகுப் பாராட்டுக்கள்.!

கீத மஞ்சரி said...

பறவைகளின் படங்கள் மனத்துக்குள் புது உற்சாகத்தை வரவழைக்கின்றன. மிகவும் அழகாகப் படம்பிடித்திருக்கிறீர்கள் மேடம். hoopoe - இதை எங்கள் தாத்தா கொண்டைலாத்தி என்று சொல்வார்கள். சின்னப்பிள்ளையாயிருக்கும்போது பார்த்தது. சமீபமாய் பார்க்கும் வாய்ப்பு அமையவில்லை. இப்போது பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி. படங்களுக்கான கமெண்டுகளும் சூப்பர்.

கோமதி அரசு said...

வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
நீங்கள் சொல்வது உண்மை. பறவைகள் கவனிப்பது மனதுக்கு உறசாகம் தான்.
உங்கள் பறவைகள் பகிர்வு கண்களையும் கருத்தையும் கவர்ந்து மகிழ்விக்கிறது.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வண்க்கம் ராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன். தட்சிணபாண்டுரங்க கோவில் அருகில் உள்ள புளியமரத்தில் நான் எடுக்க தயார் ஆகும் போது நிறைய கிளிகள் இருந்தது. எடுத்தபோது ஒன்று மட்டும் போஸ் கொடுத்தது மற்றவை பறந்து விட்டது.அந்த புளியமரம் பட்டு வருகிறது ஆனால் அதுனுடன் கிளிகளுக்கு உறவு தளைத்துக் கொண்டு இருக்கிறது அது மறுபடியும் துளிர்க்க வைக்கும் என்று நினைக்கிறேன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வண்க்கம் கீதாமதிவாணன் வாழ்க வளமுடன்.
உங்கள் தாத்தா hoopoe பறவையை கொண்டைலாத்தி என்று சொல்வார்கள் என்று சொன்னது புது தகவல். அது கொண்டையை ஆட்டிக் கொண்டு மின் கம்பியில் நடந்து வந்தது அழகாய் இருந்தது.நம் ஊர் பக்கம் நடப்பதை என்ன லாத்திக் கொண்டு இருக்கிறாய் என்று கேட்பார்கள். அதுதான் கொண்டை லாத்தி என்றார்கள் போலும். அவற்றை கங்கைகொண்ட சோழபுரத்திலும் மாயவரத்திற்கு அருகில் இருக்கும் ஆனதாண்டவபுரம் எனும் ஊரிலும் எடுத்தேன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி கீதமஞ்சரி.

கோமதி அரசு said...

கீதமஞ்சரி, தெகா உங்கள் இருவருக்கும் நன்றி. மரம்கொத்தி என்று போட்ட பறவை கொண்டைலாத்தி என்று தெரிய படுத்தியமைக்கு.
அது மரத்தில் கொத்தி பூச்சி பிடிப்பதைதான் நான் மரங்கொத்தி என்று நினைத்து விட்டேன்.அடுத்தமுறை மரங்கொத்தியை படம் பிடித்து போடுகிறேன்.

கீத மஞ்சரி said...

கொண்டைலாத்தியென்று பதிவில் குறிப்பிட்டமைக்கு நன்றி மேடம். இதுவும் மரத்தில் செங்குத்தாக அமர்ந்து க்கூம் க்கூம் என்ற சத்தத்துடன் மரப்பட்டைகளைக் கொத்திக்கொண்டிருக்கும். உள்ளிருக்கும் புழு பூச்சிகளைத் தின்பதற்காக என்று நினைக்கிறேன்.

கோமதி அரசு said...

வண்க்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்.

//இதுவும் மரத்தில் செங்குத்தாக அமர்ந்து க்கூம் க்கூம் என்ற சத்தத்துடன் மரப்பட்டைகளைக் கொத்திக்கொண்டிருக்கும்.//
இதைப்பார்த்து தான் மரங்கொத்தி பறவையில் இது ஒரு ரகம் என்று நினைத்தேன்.

உள்ளிருக்கும் புழு பூச்சிகளைத் தின்பதற்காக என்று நினைக்கிறேன்.//
நானும் அப்படித்தான் நினைக்கிறேன் கீதமஞ்சரி. பூவில் தேனையும் பூச்சி முதலியவற்றையும் சாப்பிடுமாம்.
பூக்களில் தேனை உறிஞ்ச அதன் ஊசிபோன்ற அலகு பயன்படுகிறது போலும்.
உங்கள் மீள் வருகைக்கு நன்றி.

மனோ சாமிநாதன் said...

ஏகாந்தமாய் அமர்ந்திருக்கும் குருவி மிக அழகு!! ' இனிது, இனிது, ஏகாந்தம் இனிது' என்று சொல்கிறாரோ?

கோமதி அரசு said...

வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்.
”இனிது இனிது ஏகாந்தம் இனிது” தான்.

தவறுதலாக குருவி என்று அடித்துவிட்டீர்களோ!
ஏகாந்தமாக இருப்பது காகம்.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜீவி said...

//பார்த்தால் பசிதீரும்” பாடல் நினைவுக்கு வந்து விட்டதோ சார்!
”மணிப்புறாவும், மாடப்புறாவும் மனதில் பாடும் பாட்டல்லோ!” //

இல்லை, கோமதிம்மா..

புல்புல் பறவையைப் பற்றி நீங்கள் சொன்னதும் ஞாபகத்திற்கு வந்த ஒரு கலவையான நினைவு இது.

எம்.ஜி.ஆர். நடித்த மார்டன் தியேட்டர்ஸ் 'அலிபாபா' படம் பார்த்திருக்கிறீர்களா?.. அதில் தவுலத் - புல்புல் என்று சாரங்கபாணியும், எம்.என்.ராஜமும் ஜோடியாக வருவார்கள்.

அவர்கள் இருவரும் பாடுகிற மாதிரி ஒரு பாட்டு: "சின்னஞ்சிறு சிட்டே என் சீனா கல்கண்டே.." என்று.

நீங்கள் 'புல்புல்' பறவையைப் பற்றி சொன்னதும் இந்த 'புல்புல்'லும் பாட்டு வார்த்தையான சின்னஞ்சிறு சிறு சிட்டும், கலவையாய் கலந்து
புல்புல் பறவையாய் நினைவில் வந்து சிறகடித்திருக்கிறது.

நினைவுகளின் அதிர்வுகள் எப்படியெல்லாம் ஒன்று சேர்ந்து வலைப்பின்னல் பின்னுகிறது பாருங்கள்!

ஜீவி said...

கூட்டுறவுக்கு காக்கை தான் எடுத்துக் காட்டு.

தனியாக, தனக்கு மட்டும் என்று இருக்கத் தெரியாத பறவை அது.

"கா..கா.." என்று கரைந்து மற்ற காக்கைகளையும் கூவி அழைத்து பகுத்துண்டு வாழ பழக்கம் கொண்டது அது.

அதனால் தான் காக்கையால் கூட ஏகாந்தமாய் இருக்க முடியுமா என்று அதிசயித்தேன்.

பறவையைப் பார்த்து விமானம் படைத்த மனிதன், காக்கைகளைப் பார்த்து ஒற்றுமையைக் கற்றுக் கொண்டானில்லை.

கோமதி அரசு said...

வணக்கம் ஜீவி சார், வாழக வளமுடன்."சின்னஞ்சிறு சிட்டே என் சீனா கல்கண்டே.."//
இந்த பாடல் கேட்டு இருக்கிறேன், சினிமாவும் பார்த்து இருக்கிறேன்.

பாடல் நன்றக இருக்கும். பழைய பாடல், பழைய சினிமாக்கள் தொலைக்காட்சியில் வைத்தால் பார்ப்பேன்.

//மணிப்புறா சரி; மாடப்புறா எங்கே என்று மனசு கேட்டது.. அதற்கு என்ன பதில் சொல்லித் தேற்றுவது என்று தெரியவில்லை!//

இப்படி நீங்கள் பின்னூட்டம் போட்டவுடன் எனக்கு நினைவுக்கு வந்தது
பார்த்தால் பசிதீரும்” பாடல். அதுதான்
”மணிப்புறாவும், மாடப்புறாவும் மனதில் பாடும் பாட்டல்லோ!” //

நினைவுக்கு வந்து விட்டதோ சார்! என்று கேட்டேன்.

//நினைவுகளின் அதிர்வுகள் எப்படியெல்லாம் ஒன்று சேர்ந்து வலைப்பின்னல் பின்னுகிறது பாருங்கள்//!

ஆம், நீங்கள் சொல்வது உண்மைதான்.


கூட்டுறவுக்கு காக்கை தான் எடுத்துக் காட்டு.

தனியாக, தனக்கு மட்டும் என்று இருக்கத் தெரியாத பறவை அது.

"கா..கா.." என்று கரைந்து மற்ற காக்கைகளையும் கூவி அழைத்து பகுத்துண்டு வாழ பழக்கம் கொண்டது அது.//

உண்மைதான் சார்.

பகுத்துண்டு வாழ நாம் கற்றுக் கொண்டது காகத்திடம் தானே!

//அதனால் தான் காக்கையால் கூட ஏகாந்தமாய் இருக்க முடியுமா என்று அதிசயித்தேன்.//

ஆம் சார், உண்மைதான்.

எப்போதும் இப்படி கூட்டமாய் இருக்கும் பறவை ஏகந்தமாய் இருப்பதையும், இரண்டு காகம் ஜோடியாக இருப்பதையும் பார்த்தபோது எடுத்து விட்டேன்.

//பறவையைப் பார்த்து விமானம் படைத்த மனிதன், காக்கைகளைப் பார்த்து ஒற்றுமையைக் கற்றுக் கொண்டானில்லை//

ஆம், நிறைய நாம் பறவைகளிடம் கற்றுக் கொள்ள இருக்கிறது.

இந்த பின்னூட்டம் பார்த்தபின் நினைவுக்கு வரும் பாடல்:-

பாவமன்னிப்பு படத்தில் வரும் பறவையை கண்டான் விமானம் படைத்தான் மனிதன் மாறிவிட்டான் என்ற பாடலும்,

இன்னொரு சிவாஜி படப் பாடல்

காக்கா கூட்டத்தை பாருங்க நமக்கு கற்றுக் கொடுத்தது யாருங்க?
ஒன்றாய் இருக்க கத்துக்கனும் இந்த உண்மையை சொன்னா ஒத்துக்கனும் என்று பாடல்கள் நினைவுக்கு வருகிறது.
உங்கள் மீள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிகவும் நன்றி சார்.

வல்லிசிம்ஹன் said...

அட இந்தப் பதிவைப் பார்க்காமல் விட்டேனே. பறவைகளின் சரணாலயம் நடத்துகிறீர்களா கோமதி. பறவைகளும் அவைகளின் பெயர்களு ம் அதிசயிக்க வைக்கின்றன. இங்கும் வருகின்றன. கண்ணாடிச் சுவருக்குள் இருந்து நிழலாட்டம் கண்டாலே ஓடிவிடுகின்றன. மனிதர்களுக்குத்தான் சிறை. பறவைகளுக்கு இல்லை. பாடகளும் இனிமை. தவறிப்போய் டிடி பதிவுக்கு வந்தது போலத் தோன்றியருமையான அழகான பதிவு கோமதி மிக நன்றி.

கோமதி அரசு said...

வண்க்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
பறவைகள் சரணாலயமா!

இறைவன் படைப்பில் அழகிய பசுமையான இடம் பறவைகளின் இருப்பிடம்.

நான் வசிக்கும் இடம், மற்றும் போன இடம் எல்லாம் பசுமை இன்னும் மறையவில்லை.
புல் புல் பறவை பழகி விட்டது. முன்பு பழுகுவதற்கு முன் பறக்கும் சிறு அசைவுக்கும். இப்போது பயமில்லாமல் கொடி கம்பியில் உட்கார்ந்து நம்மை பார்க்கிறது.

ஜீவி சார் பழைய பாடல்கள் நினைவுக்கு வந்தது என்றார். நானும் சில பாடல்கள் நினைவுக்கு வந்தது என்று போட்டேன் அவ்வளவுதான்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் ந்ன்றி.

மாதேவி said...

பறவைகளின் அணிவகுப்பு அருமை.

ராமலக்ஷ்மி said...

வீட்டுக்குள் சிக்கிக் கொண்ட தேன் சிட்டை நானே தேடி வந்து விட்டேன்:). மீண்டும் அனைத்தையும் இரசித்தேன். ஆம் இது பெண் குயில்தான். ஆண் குயில், பெண் குயில்,
இரட்டைவால் குருவி, பூச்சி பிடிப்பான் ஆகியவற்றை சமீபத்தில் நானும் படமாக்கினேன். என் பதிவில் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் ராமலஷ்மி, வாழ்க வளமுடன்.
பழைய பதிவை தேடி படித்து கருத்து சொன்னதுற்கு நன்றி.