முருகன் விமானம்
செஞ்சேரி மலை அருள்மிகு மந்திரகிரி வேலாயுதசுவாமி கோவிலுக்கு 2012 ம் வருடம் பிப்ரவரி மாதம் 2 ம் தேதி என் கணவரின் தம்பி குடும்பத்துடன் அவர்கள் காரில் சென்று இருந்தோம்.
வழி- சூலூர் , காரணம் பேட்டை , கரடி வாவி, சுல்தான் பேட்டை . மாலை 3. 30 க்கு கிளம்பினோம். முதல்நாள் தைப்பூசம் நடந்து முடிந்து இருந்தது. தேர் நிலையில் நின்றிருந்தது..
தைப்பூச விழாவிற்குப் போட்டு இருந்த கடைகளை எடுத்துக் கொண்டு இருந்தார்கள்.
முருகன் இருக்கும் மலை சிறிய மலைதான் , மலையைச் சுற்றிவர கிரிவீதி இருந்தது. அழகிய படிக்கட்டுகள் மலையின் கிழக்கு பகுதியில் இருந்தது.
படி மண்டபங்கள் இடை இடையே இருந்தன.
படிவழியாக போனால் கோவில் சந்நதிக்கு நேரே போகிறது.
அங்கு ஒரு தோரண வாயில்
செவ்வக வடிவமாய் அமைந்த மண்டபம் , கொடிமரம்.
என் கணவர் வரைந்த முகப்பு மண்டபம்.
பிரகாரத்தில் சின்ன சின்ன மாடங்கள் உள்ளன
வாகனங்களில் செல்லும் பாதை, அழகிய தோரண வாயில்
வளைந்து வளைந்து போகும் பாதை
படி ஏறமுடியாதவர்களுக்கு வாகனங்களில் செல்ல மலையின் பின்புறம் மேற்கில் வாகனப் பாதை உள்ளது வசதியாக இருக்கிறது. வளைந்து வளைந்து செங்குத்தாய் சாலை கோவிலின் அருகில் முடிகிறது.
சாரின் தம்பி மகன் சிறிய வயது மிக திறமையாக ஓட்டி வந்தான். கோயில் கிட்டே போகும் போது கவனமாய் ஓட்டவில்லை என்றால் பின்னால் சர சர என்று இறங்க ஆரம்பித்துவிடும். கவனமாய் பிரேக் போட்டு கார் டயரின் அருகில் ஒரு பெரிய கல்லை வைத்துவிட்டான்.
வடமேற்குப் பிரகாரகத்தின் மூலையில் உள்ளே நுழையும் வழி உள்ளது. படி வழியாகச் சென்றால் சந்திதிக்கு நேரே கிழக்கு பார்த்த மூன்று நுழைவாயில்கள் உள்ளன
நுழைவாயில் மூன்றாக இருந்தாலும் அம்மன், ஸ்வாமி, முருகன் மூவரையும் ஒரே மண்டபத்தில் அடுத்து அடுத்துக் காணலாம்.
அம்மன் பெரியநாயகி அம்மன், சுவாமி கைலாசநாதர், தெற்கில் நடராஜர் சன்னதி உள்ளது.
முருகன் மந்திரகிரி வேலாயுத சுவாமி இருக்கும் சந்நதி பெரியது.
முருகன் சூரசம்கார காலத்திற்கு முந்தியது என்பதால் மயில் முருகனது இடதுபுறம் நோக்கி இருக்கிறது.
//சூரசம்காரத்திற்கு முன் இந்திரன் மயிலாக இருப்பார் முருகனுக்கு, அப்புறம் சூரசம்காரம் செய்தபின் சூரபதுமனின் உடல் , ஒரு பாதி சேவலாகவும், மற்றொரு பாதி மயிலாவும் மாறின. இறைவன் அவற்றுக்கு ஞானத்தை அளித்து சேவலைக் கொடியாகவும், மயிலை வாகனமாகவும் ஆக்கிக் கொண்டார். அதன் பின் இந்திரனாகிய மயில் மீதிருந்து இறங்கி சூரபத்மனாகிய மயில் மீது எழுந்தருளினார். பின் இதுவரை மயிலாகவும் சேவலாகவும் நின்ற இந்திரனும், அக்கினியும் முருகன் அருட்பார்வையால் பழைய வடிவை பெற்றனர்.//
(கந்தபுராணத்தில் படித்தது.)
மந்திரகிரிவேலாயுத சுவாமி ஆறுமுகங்களுடன், பன்னிரு கரங்களுடனும், வள்ளி தெய்வானையுடனும், மயிலுடனும் நின்றகோலத்தில் காட்சி அளிக்கிறார்.
இடது கையில் சேவலே ஒரு கருவி போல இருக்கிறது, இது முருகன் தவம் செய்த இடம். இந்த கோவிலை பற்றி இங்குள்ள குருக்கள் சொன்னது :-
தீர்த்தம் கங்கை தீர்த்தம் என்கிறார்கள். கோவிலுக்கு வடக்கில் வள்ளிசுனை உள்ளது.
இந்தக் கோவிலில் சஷ்டி, கிருத்திகை, அமாவாசை விஷேச பூஜைகள் நடக்குமாம். கோவையில் இருந்து குருக்கள் வருகிறார்கள் 15 நாளுக்கு ஒருவர் என்று முறை போட்டு வருகிறார்களாம்.
சாயரட்சை பூஜை முடிந்து வெண்பொங்கல் பிரசாதம் தந்தார்.
கல்வெட்டில் அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ்
.இயற்கைக் காட்சி
மலை மீது இருந்து எடுத்த ஊரின் அழகு
மாலைச் சூரியன்
பக்கத்தில் உள்ள மலைகள்
வாழ்க வளமுடன்.