வனவிலங்கு பூங்கா தோரண வாயில். முதலில் அண்டம் காக்கா வரவேற்கிறது. பெரிய பெரிய அண்டம் காகங்கள் இந்த பூங்கா முழுவதும் பறந்து வந்து கொண்டு இருக்கிறது.
காரில் போய் கொண்டே இயற்கைச்சூழலை, மற்றும் இந்த இடத்தில் இருக்கும் வன விலங்குகளைப் பார்க்கலாம். எனக்கு இது புது அனுபவமாக இருந்தது.
அரிசோனாவில் வில்லியம்ஸ் என்ற இடத்தில் அமைந்து இருக்கிறது இந்த பியரிசோனா வனவிலங்கு பூங்கா.
காரில் அமர்ந்து கொண்டே சிறிது தூரம் கரடிகளை, மற்றும் சில விலங்குகளையும் பார்க்கலாம். அவை காடுகளில் எப்படி இருக்குமோ அப்படி வாழ அவைகளுக்கு இயற்கை சூழலை அமைத்து கொடுத்து இருக்கிறார்கள்.
ஏரிக்கரை பூங்காற்றே பதிவில் மகன் மூன்று நாள் பயணமாக சில இடங்கள் அழைத்து சென்றான் என்று சொல்லி இருந்தேன். ஏரிக்கரையை ரசித்தபின் இந்த இடம் போனோம்.
அரிசோனாவில் உள்ள சாய் பாபா கோயில். இரவு நேரம் எடுத்த படம். சாய் பாபா கோவில் முன் பகுதி
மே மாதம் 14 ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது ,நேரலையில் வீட்டிலிருந்து பார்த்தோம்.
உள் நுழையும் வாசல்.
சிறு வயதில் கோவையில் இருந்தோம், அப்புறம் புகுந்த வீடும் கோவை ஆனது. சிறு வயதில் மேட்டுப்பாளையம் சாலையில் சாய் கோயில் இருந்தது. (அவர் பேரில் அந்த இடம் சாய் பாபா காலனி ஆனது) அந்த கோயில் பேர் "நாகசாயி கோயில்."ஒரு முறை பக்கத்து வீட்டு அக்கா அழைத்து சென்றார்கள். அப்புறம் நானும் என் அக்காவும் வார வாரம் போய் வருவோம். நாங்கள் காந்திபுரத்தில் இருந்தோம், அங்கிருந்து பேருந்தில் சென்று வருவோம்.
மகன் வீட்டுத் தோட்டத்திலிருந்து காலைக் கதிரவனை எடுத்த படங்கள். மற்றும் வீட்டு முன்புறம் தெரியும் மாலை கதிரவனையும் , தோட்டத்தில் இரவு நிலாவையும் எடுத்த படங்கள் இந்த பதிவில்.
காலைக் கதிரவன் தன் பொன் கிரணங்களை வான் முழுவதும் பரப்பி அழகு படுத்தினான்.
//கடவுள் வாழ்த்து பாடும் இளங்காலை நேரக்காற்று
என் கைகள் வணக்கம் சொல்லும் செங்கதிரவனைப்பார்த்து//
-கவிஞர் வாலி
வேதம் பாடிய சோதியைக் கண்டு
வேள்விப் பாடல்கள் பாடுதற் குற்றேன்;
நாதவார் கடல் இன்னொலியோடு
நற்றமிழ்ச் சொல் இசையையும் சேர்ப்பேன்;
காதம் ஆயிரம் ஓர் கணத்துள்ளே
கடுகி ஓடும் கதிரினம் பாடி
ஆதவா, நினை வாழ்த்திட வந்தேன்
அணிகொள் வாண்முகம் காட்டுதி சற்றே.
- மகாகவி பாரதியார்
சுருதியின்கண் முனிவரும் பின்னே
தூமொழிப் புலவோர் பலர் தாமும்
பெரிது நின்றன் பெருமை யென்றேத்தும்
பெற்றி கண்டு உனை வாழ்த்திட வந்தேன்;
பரிதியே பொருள் யாவிற்கும் முதலே,
பானுவே, பொன்செய் பேரொளித்திரளே,
கருதி நின்னை வணங்கிட வந்தேன்;
கதிர் கொள் வான்முகம் காட்டுதிசற்றே!
-- மகாகவி பாரதியார்
கதிரவன் தன் ஒளி முகம் காட்டி நின்றான்
கடற்கரையில் சூரிய உதயம் பார்க்க போன பாரதி மேகம் மறைத்து இருப்பதை கண்டு சூரியனை முகம் காட்ட வேண்டிப் பாடிய பாடல்.
மாலைச்சூரியன் மகன் வீட்டுக்கு எதிர் வீட்டுக்கு மேல் புறம் மாலைச்சூரியன்
சூரிய அஸ்தமனம்
மழை பெய்து ஓய்ந்த பின் வானம் மிக அழகாய் இருந்தது இரவு 7 மணி இருக்கும்
வடக்கு அரிசோனாவின் கைபாப் தேசிய வனத்தில் இந்த ஏரி அமைந்து இருக்கிறது. இந்த இடத்திற்கு புதன் கிழமை காலையில் மகன் அழைத்து போனான். இந்த ஏரிக்கு " cataractLake " என்று பேர். "கண்புரை ஏரி" என்று ஏன் பேர் வந்தது தெரியவில்லை. சூரிய ஒளியை வரவிடாமல் மரங்கள் மறைத்து இருப்பதால் இந்த பேர் வந்து இருக்கும் போல !
ஓங்கி வளர்ந்த பைன் மரங்கள் இந்த பகுதியை அழகு படுத்துகிறது. எல்லா நாளும் இங்கு காலை முதல் மாலை வரை பார்க்கலாம். மகன் வீட்டிலிருந்து 2 மணி நேரம் பயணம் செய்தால் இந்த அழகிய இடம் வரும்.
இந்த மரங்கள் உள்ள பகுதி குழந்தைகளுக்கு ஒடி பிடித்து விளையாட பிடித்த இடம்.
பேரன் சொன்னான் நண்பர்களுடன் வந்து இருந்தால் ஓடி பிடித்து விளையாடலாம் என்று. எங்கு சுற்றுலா சென்றாலும் இரண்டு மூன்று நண்பர்கள் குடும்பத்துடன் வருவார்களாம் . போன சுற்றுலாவில் மருமகளின் தோழி குடும்பம் இருந்தது நன்றாக இருந்தது.
ஆடி வெள்ளிக்கிழமை இன்று .ஆடி வெள்ளி, ஆடிச் செவ்வாய்களில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், அலங்காரம் நடைபெறும். விளக்கு பூஜைகள் ஆடி வெள்ளிக் கிழமை உண்டு.
இந்த ஆடி வெள்ளி சில நினைவுகளை கொண்டு வருகிறது. மயிலாடுதுறை, மதுரை கோயில்களில் தரிசனம் செய்த அம்மன் படங்கள் இந்த பதிவில் இடம்பெறுகிறது.
முழு சிவப்பாக உள்ள பறவையும் இருக்கிறது. இது முகம் மற்றும் உடலில் திட்டு திட்டாக சிவப்பு இருக்கிறது.
தண்ணீரைப் பார்த்து நிற்கிறது
அரளிச் செடிக்கு பாத்தி மாதிரி கட்டி சொட்டு நீர் பாசன வசதி செய்து இருக்கிறான் மகன். பறவைக்கு அது சாரல் மழை போல இருந்து இருக்கிறது. சிறிது நேரம் பார்த்துக் கொண்டு இருந்தது, பிறகு நீர் அருந்தியது. அப்புறம் ஆனந்தமாக சிறிது குளியல் போட்டது , பறந்து சென்றது.
கோடைக்கு ஏற்ற குளியல் செய்யும் பறவை
சிறிய காணொளிதான் ஒரு நிமிடம் கூட இல்லை. பார்த்து விட்டுச்சொல்லுங்கள், எப்படி இருக்கிறது என்று.
வண்ணத்துப்பூச்சி பூங்கா இருக்கும் வளாகத்தில் "டைனோசர் உலகம்" இருந்தது அதையும் பார்த்தோம். அது அடுத்த பதிவில், என்று வண்ணத்துப்பூச்சி பதிவில் சொல்லி இருந்தேன். அந்த டைனோசர் உலகத்தைப் பார்க்கலாம் இந்த பதிவில்.