பேரன் கவின் பூங்கா வாசலில்
வனவிலங்கு பூங்கா தோரண வாயில். முதலில் அண்டம் காக்கா வரவேற்கிறது. பெரிய பெரிய அண்டம் காகங்கள் இந்த பூங்கா முழுவதும் பறந்து வந்து கொண்டு இருக்கிறது.
காரில் போய் கொண்டே இயற்கைச்சூழலை, மற்றும் இந்த இடத்தில் இருக்கும் வன விலங்குகளைப் பார்க்கலாம். எனக்கு இது புது அனுபவமாக இருந்தது.
அரிசோனாவில் வில்லியம்ஸ் என்ற இடத்தில் அமைந்து இருக்கிறது இந்த பியரிசோனா வனவிலங்கு பூங்கா.
காரில் அமர்ந்து கொண்டே சிறிது தூரம் கரடிகளை, மற்றும் சில விலங்குகளையும் பார்க்கலாம். அவை காடுகளில் எப்படி இருக்குமோ அப்படி வாழ அவைகளுக்கு இயற்கை சூழலை அமைத்து கொடுத்து இருக்கிறார்கள்.
ஏரிக்கரை பூங்காற்றே பதிவில் மகன் மூன்று நாள் பயணமாக சில இடங்கள் அழைத்து சென்றான் என்று சொல்லி இருந்தேன். ஏரிக்கரையை ரசித்தபின் இந்த இடம் போனோம்.