திங்கள், 2 ஆகஸ்ட், 2021

வனவிலங்கு பூங்கா


பேரன் கவின்  பூங்கா வாசலில்


வனவிலங்கு பூங்கா  தோரண வாயில். முதலில் அண்டம் காக்கா வரவேற்கிறது. பெரிய பெரிய அண்டம்  காகங்கள் இந்த பூங்கா முழுவதும் பறந்து வந்து கொண்டு இருக்கிறது.

காரில் போய் கொண்டே இயற்கைச்சூழலை, மற்றும் இந்த இடத்தில் இருக்கும் வன விலங்குகளைப் பார்க்கலாம். எனக்கு  இது புது அனுபவமாக இருந்தது.

அரிசோனாவில் வில்லியம்ஸ் என்ற இடத்தில் அமைந்து இருக்கிறது இந்த பியரிசோனா வனவிலங்கு பூங்கா. 

காரில் அமர்ந்து கொண்டே  சிறிது தூரம் கரடிகளை, மற்றும் சில விலங்குகளையும் பார்க்கலாம். அவை காடுகளில் எப்படி இருக்குமோ அப்படி வாழ  அவைகளுக்கு இயற்கை  சூழலை அமைத்து கொடுத்து இருக்கிறார்கள்.

ஏரிக்கரை பூங்காற்றே  பதிவில் மகன் மூன்று நாள் பயணமாக சில இடங்கள் அழைத்து சென்றான்  என்று சொல்லி இருந்தேன். ஏரிக்கரையை ரசித்தபின் இந்த இடம் போனோம்.
ஓங்கி வளர்ந்த பைன் மரங்களுக்கு இடையில்  செயற்கையான மலைகளை, அருவிகளை   அமைத்து இருக்கிறார்கள். டிக்கட் எடுத்து உள்ளே போகும் போது கார் ஜன்னல்   கதவுகளை அடைத்து  விட்டுதான் போக வேண்டும் திறக்க கூடாது, கையை வெளியே நீட்டக்ககூடாது என்று எச்சரித்து அனுப்புகிறார்கள். கார் கண்ணாடி வழியாக பார்த்து அலைபேசியில் எடுத்த படங்கள் இங்கு பகிர்வாய் வருகிறது.

முதலில்  பார்த்தது பெரிய   மலை ஆடு
அடுத்து சில மான்கள்வெகுதூரம் இந்த பைன் மரக் காடுகள்தான் , தடுப்பு வேலிகளுக்குள்  கரடிகள் இருக்கும் பகுதி இருக்கிறது.

கருப்பு கரடிகள் நிறைய இருந்தனநல்ல தூக்கம்

"யார் என்னைப் பார்ப்பது"  என்று தலையைத் தூக்கி ஒரு பார்வை!

வெயில் காலம் என்பதால் கரடிகளுக்கு உடல் அரிப்பு இருக்கிறது போலும் மரத்தில் தன் உடலைத் தேய்த்து கொண்டு இருந்தது

நீர் அருந்தும் கரடி, காரின் பின் போகும் கரடி

மழை நன்றாக பெய்து இருந்ததால்  சில இடங்களில் இப்படி சின்ன குட்டைகள்  உருவாகி கரடிகளின் தாகம் தணித்தது.
இடைவெளி விட்டு போகும் கார்கள், போகும் பாதையில் படுத்துக் கொண்டு வழிவிடா கரடி, சிறிது நேரம் கழித்து எழுந்து போனதுகரடிகள்  ஒரு குறிப்பிட்ட  எல்லைக்குள் சுதந்திரமாக திரிய முடியும்

அடுத்து காட்டெருமை இருக்கும் பகுதி

கம்பீரமான காட்டெருமைகள்


இரும்பு தொட்டியில் தண்ணீர், அதன் மேல் புறம் புற்கள்.  மேல் பகுதி காய்ந்த மாதிரி இருந்தாலும் உள்ளே பசுமை புற்கள் இருக்கிறது.
வைக்கோல் , புல் எல்லாம் இப்படி அழகாய் கேக் மாதிரி   வைத்து இருந்தார்கள். 

கார் கண்ணாடியை இறக்கி விட்டு எடுத்தேன். மேல் கூரையில் புல்லும், இரும்பு தொட்டியில் நீரும் வைத்து இருக்கிறார்கள்..
இவைகளுக்கு பெரிய இடம் இருக்கிறது .


இந்த காணொளி பார்க்க முடியவில்லை என்றால் வனவிலங்கு பூங்கா சுட்டி கீழே கொடுத்து இருக்கிறேன் அதன்  மூலமாகவும்
பார்க்கலாம்.

இந்த வனவிலங்கு பூங்கா அமைந்து இருக்கும் பரப்பளவு  பார்க்க வசதியாக அவர்கள் ஏற்பாடு செய்து இருக்கும் வாகனம், அங்கு உள்ள விலங்குகள் விவரம் அடங்கிய சிறிய காணொளி பார்க்க விருப்பம் இருந்தால் பார்க்கலாம் ஒரு நிமிடம் இருக்கும்.காமிராவில் எடுத்த படங்களை சேமித்து வைத்து இருந்த  பாஸ்போர்ட் என் கவனக்குறைவால் கீழே விழுந்து விட்டது. அதை  சரி செய்ய  மகன் கடையில் கொடுத்து இருக்கிறான்.  நினைவுகளை பத்திரமாக போற்ற எடுத்து வைத்து இருந்தது வரவில்லை என்றதும் மனம் மிகவும் வருத்தம் அடைந்தது.  மகன் ஆறுதல் சொல்லி அவன் எடுத்த  படங்களை தந்தான். இன்று பதிவில் இடம் பெற்றவை நான் அலைபேசியில் எடுத்தவை. 


 ரிப்பேர் செய்ய கொடுத்தது வந்து விடும் என்று நினைத்தேன்.
வரவில்லை, நான்கு வாரம் ஆகுமாம். அதனால்  "ஏரிக்கரை பூங்காற்று" பதிவுக்கு  பிறகு வேறு பதிவுகள் போட்டேன். 


அடுத்து வரும் பதிவுகளில் நான் அலைபேசியில் எடுத்ததும் மகன் எடுத்த படங்களும் கலந்து வரும்.
வனவிலங்கு பூங்காவில் பார்த்த காட்சிகள் இன்னும் இருக்கிறது அடுத்த பதிவிலும்  வரும்.

வாழ்க வையகம் ! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்.
----------------------------------------------------------------------------------------------------

31 கருத்துகள்:

 1. இந்த மாதிரி எலெக்ட்ரானிக் பொருட்கள் கீழே விழுந்தால் வீணாகி விடுகின்றன!  சமயங்களில் அவற்றைக் கடையில் கொடுப்பதும் இல்லை.  இங்கு நீங்கள் கடையில் கொடுத்து இருப்பதால் சரியாகி வந்துவிடும் என்று நம்புவோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க் வளமுடன்
   //எலெக்ட்ரானிக் பொருட்கள் கீழே விழுந்தால் வீணாகி விடுகின்றன//

   ஆமாம், நிறைய கடைகளில் வாங்க மாட்டேன் என்றார்கள். ஒரு கடையில் மட்டும் திறந்து பார்த்து முடியும் என்று சொல்லவே 4 வாரமும், பணமும் அதிகமாய் கேட்டு இருக்கிறார்கள். இறை யருளால் மீண்டும் படங்கள் கிடைத்தால் மகிழ்ச்சி.

   நம்பிக்கைதான் வாழ்க்கை என்பது போல் நம்புகிறேன், பார்ப்போம்.

   நீக்கு
 2. கரடிகள்தான் ஏராளமாக கண்ணில் படுகின்றன.  அண்டங்காக்கை படம் ஒன்று கூட இல்லையே...   அது அந்த பாஸ்போர்ட்டில் இருக்கிறதோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இரண்டாவது கரடி படத்தில் இரண்டு காக்கா இருக்கே! தோரண வாயில் படத்தில் காக்கா இருக்கிறது. ஸ்ரீராம்.

   நீக்கு
 3. காணொளி பார்த்தேன். நல்ல இடம். சுவாரஸ்யமாக பொழுது போயிருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் , நல்ல இடம். மகிழ்ச்சியாக பொழுது போனது. குட்டி கரடி மரத்தில் ஏறீ பின் இறங்க்கிய காட்சி, பெரிய கரடிகள் மூன்று மரத்தில் ஏறி இறங்கி எல்லோரையும் மகிழ்ச்சி படுத்தியது.அன்னங்கள் தண்ணீர் தொட்டியில் குளித்தன.

   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 4. படங்கள் எல்லாமே நன்றாக இருக்கிறது.

  முதல் தோரணவாயில் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
   படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

   நீக்கு
 5. இனிமையான சுற்றுலா. நானும் உடன் வந்ததைப் போல இருந்தது. சிறப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்
   உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 6. காணொளியும், வனவிலங்கு பூங்காவும் அருமையாக உள்ளது...

  எடுத்த படங்கள் கிடைத்து விடும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்

   //எடுத்த படங்கள் கிடைத்து விடும்.//

   உங்கள் வாக்கு பலிக்கட்டும் தனபாலன்.

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 7. வணக்கம் சகோதரி

  வன விலங்கு பூங்கா படங்கள் அனைத்தும் அருமை. முகப்பு தோரண வாசலருகே தங்கள் பேரன் (பொம்மைதான் இருந்தாலும்) அமர்ந்திருக்கும் கரடியுடன் தானும் பயமின்றி அமர்ந்து போஸ் தந்துள்ளார்.

  முகப்பு வாசலில் அண்டங்காக்கை உங்கள் அனைவருக்கும் வரவேற்பு அளிக்கும் வகையில் அங்கு வந்து நடந்து கொண்டுள்ளதோ ?

  கரடி படங்கள் அனைத்தும் நன்றாக வந்திருக்கின்றன. பகிர்வுக்கு மிக்க நன்றி இன்னமும் வருகிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா, ஹரிஹரன், வாழ்க வளமுடன்

   //வன விலங்கு பூங்கா படங்கள் அனைத்தும் அருமை.//

   நன்றி.

   //முகப்பு தோரண வாசலருகே தங்கள் பேரன் (பொம்மைதான் இருந்தாலும்) அமர்ந்திருக்கும் கரடியுடன் தானும் பயமின்றி அமர்ந்து போஸ் தந்துள்ளார்.//

   ஆமாம் , இளகன்றுக்கு பயம் தெரியாது தானே!

   //முகப்பு வாசலில் அண்டங்காக்கை உங்கள் அனைவருக்கும் வரவேற்பு அளிக்கும் வகையில் அங்கு வந்து நடந்து கொண்டுள்ளதோ ?//

   ஆமாம், வழி காட்டுவது போல கூடவே பறந்து வேறு வந்தது.

   //கரடி படங்கள் அனைத்தும் நன்றாக வந்திருக்கின்றன. பகிர்வுக்கு மிக்க நன்றி இன்னமும் வருகிறேன்.//

   வாருங்கள் தொடர்ந்து கருத்துக்கள் கொடுப்பது மகிழ்ச்சி.

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 8. படங்களும் பகிர்வும் அருமை. கரடிகள் மனிதர்களைப் பொருட்படுத்தாமல் திரிவதை ஜம்ஜெட்பூரில் பார்த்திருக்கிறேன். காணொளி நன்று. இணைப்பில் மேலும் விவரங்கள் அறிய முடிந்தது.

  எனக்கும் இதே போல பாஸ்போர்ட் ஹார்ட் டிஸ்க் கீழே விழுந்ததில் 2,3 வருடங்கள் தோட்டத்தில் எடுத்த அத்தனை படங்களும் மீட்க முடியாது போயின. நல்லவேளையாக அவ்வப்போது ஃப்ளிக்கரிலும் பின்னர் வலைப்பூவிலும் பகிர்ந்தவை மட்டும் சேமிப்பாக உள்ளன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

   //கரடிகள் மனிதர்களைப் பொருட்படுத்தாமல் திரிவதை ஜம்ஜெட்பூரில் பார்த்திருக்கிறேன்.//

   ஓ சரி. நன்றாக பராமரிக்கிறார்களா அந்த இடத்தை?
   //காணொளி நன்று. இணைப்பில் மேலும் விவரங்கள் அறிய முடிந்தது.//

   ஆமாம், அதற்கு தான் காணொளியை பகிர்ந்தேன்.

   உங்களுக்கு பாஸ்போர்ட் ஹார்ட் டிஸ்க் கீழே விழுந்த அனுபவம் இருக்கா?
   நீங்கள் எவ்வளவு அழகு அழகான படங்கள் எடுத்து இருப்பீர்கள்!   நீங்கள் சேமிப்புகளை பல இடங்களில் வைத்தது நல்லதாக போய் விட்டது.
   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.


   நீக்கு
 9. படங்களும் பகிர்வும் நேரில் பார்த்த உணர்வை ஏற்படுத்துகின்றன
  நன்றி சகோதரி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 10. அன்பின் கோமதி,
  வாழ்க வளமுடன்.
  இந்த ஊரின் வளமையே இந்தச் சிறப்பு காட்சிகள் தான்.
  கரடிகள் தான் எத்தனை பெரிதாக இருக்கின்றன!!

  தோரணவாயில் அலங்காரம் மிகச் சிறப்பு.
  அதில் அண்டங்காக்கையும் அழகுதான்.
  குரல் தான் சகிக்காது:)அதுவும் நம் ஊர்ப் பருந்தின் அளவில்
  அது பறந்து வருவதைப் பார்த்தால் திகைப்பாகவே இருக்கும்!!!

  பதிலளிநீக்கு
 11. நீங்களாவது பரவாயில்லை மா. நான் இரண்டு காமிராக்களையே கீழே
  போட்டு இருக்கிறேன்.
  மனம் வருந்தி எனக்கு காமிராவே வேண்டாம் என்று சொல்லி விட்டேன்.
  உங்களது கருவியும் சரிசெய்யப் பட்டு
  படங்கள் மீளட்டும் அம்மா.

  அம்மா பரவாயில்லை, நீ விழாமல் காமிரா தானே விழுந்தது
  என்று மகன் சொன்னான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
   நானும் ஒரு காமிரா கீழே போட்டு உடைத்து இருக்கிறேன். இரண்டு ஜூம் சரியாக வேலை செய்யவில்லை. இப்போது புதுக்காமிரா. நம்ம காலம் போல் இல்லை சரி செய்து வைத்து கொள்வது இப்போது வழக்கம் இல்லை. பழுது ஆனால் புது வாங்கி கொள்ள வேண்டும். ரிப்பேர் செய்ய கடைகளில் விரும்ப மாட்டேன் என்கிறார்கள்.

   மன் ஊரில் திறந்து பார்த்து வேலை செய்யுமா செய்யாதா என்று பார்க்கவே காசு கேட்கிறார்கள். அப்புறம் தான் ரிப்பேர் செய்யப்படும்.

   //அம்மா பரவாயில்லை, நீ விழாமல் காமிரா தானே விழுந்தது
   என்று மகன் சொன்னான்.//

   மகன் சொன்னது சரிதான்.

   நீக்கு
 12. பைசன், ஆடு, மான் எல்லாமே அழகு தான்.
  அலைபேசியில் எடுத்தது போலவே தெரியவில்லை.

  நாங்கள் தென் டகோட்டா மானிலம் சென்ற போது அங்கிருக்கும் கரடிகள் சரணாலயம் சென்று வந்தோம்.

  ஒரு மாறுதலுக்கு அங்கே சிறுத்தையும்ம் இருந்தது.!!
  அவர்கள் வேலிபோட்டுக் காப்பதே அருமை.
  எத்தனை பெரிய இடம்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அலைபேசியில் கார் ஜன்னல் கண்ணாடி வழியாக எடுத்ததால் படங்கள் சுமார்தான். முதல் இரண்டு படங்களும் கார் கண்ணாடி இறக்கி விட்டு எடுத்தது.

   //கரடிகள் சரணாலயம் சென்று வந்தோம்.//

   நினைவுகளில் வரும், புகைப்படம் எடுத்து இருப்பீர்கள் இல்லையா?

   இதுவும் பெரிய இடம் நான் அடுத்த பகிர்வில் மீதியை பகிரலாம் என்று இருக்கிறேன். நாங்களே நிறைய பார்க்கவில்லை எல்லோருக்கும் கால்வலி. பார்த்தவரை போதும் என்று விட்டு விட்டோம்.   நீக்கு
 13. காணொளி மிக அருமை.
  அட பாந்த்தர் இருக்கிறதே,.
  அந்தக் கறுப்புதான் எத்தனை பளபளப்பு. ஜங்கிள் புக் நினைவுக்கு வருகிறதல்லாவா!!
  பேரன் கரடி பொம்மையோடு பேசுவது போன்ற
  படம் தனி அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காணொளி மிக அருமையாக சின்னதாக இருந்தது அதனால்தான் அதை பகிர்ந்தேன்.
   உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி.

   ஜங்கிள் புக் கினைவுக்கு வருகிறதுதான் அதுவும் அவனுடன் அடிக்கடி ப்பார்ப்பேன்.(நேற்று பேரனுடன் " டார்சான்" படம் பார்த்தேன்.)

   பேரன் படத்தை ரசித்தமைக்கும், உங்கள் கருத்துக்களுக்கும் நன்றி அக்கா.

   நீக்கு
 14. அரிசோனா ... BEARIZONA!!! அருமையான சொல் தொடர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் அக்கா, அருமையான சொல் தொடர்தான்.
   மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.

   நீக்கு
 15. அழகான படங்கள். தகவல்களும் நன்று.

  நீங்கள் சேமித்து வைத்த படங்கள் மீண்டும் கிடைக்கட்டும். எலெக்ட்ரானிக் பொருட்கள் பழுதடைந்து விட்டால் வேதனை தான். சரியாகட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்

   //நீங்கள் சேமித்து வைத்த படங்கள் மீண்டும் கிடைக்கட்டும். எலெக்ட்ரானிக் பொருட்கள் பழுதடைந்து விட்டால் வேதனை தான். சரியாகட்டும்.//

   நீங்கள் சொல்வது உண்மை. எலெக்ரானிக் பொருட்கள் பழுதடைந்து விட்டால் வேதனைதான்.
   உங்கள் வாக்கு பலிக்கட்டும். படங்கள் மீண்டும் கிடைத்தால் மகிழ்ச்சி.
   உங்கள் கருத்துக்கு நன்றி.


   நீக்கு
 16. சரணாலயம் நன்றாக இருக்கிறது படங்களும் நன்று.
  கரடியார் பயமில்லாமல் உலாவருகிறார் . நாங்கள் இங்கு யால சரணாலயம் சென்றபோதும் கரடியார் லீட் பண்ணிக் கொண்டு செல்ல எங்கள் வாகனம் பின்னால் சென்றது இந்நேரம் நினைவுக்கு வருகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்

   //சரணாலயம் நன்றாக இருக்கிறது படங்களும் நன்று.//

   நன்றி.


   //கரடியார் லீட் பண்ணிக் கொண்டு செல்ல எங்கள் வாகனம் பின்னால் சென்றது இந்நேரம் நினைவுக்கு வருகிறது.//

   ஆஹா! அருமை.
   நினைவுகள் பகிர்வுக்கு நன்றி.

   வலைத்தளத்தில் எழுதுங்கள் மாதேவி. உங்களை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்.

   நீக்கு