பாரதிக்கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாரதிக்கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 27 ஜூலை, 2021

காலையும் நீயே! மாலையும் நீயே!






மகன் வீட்டுத் தோட்டத்திலிருந்து காலைக் கதிரவனை  எடுத்த படங்கள். மற்றும்  வீட்டு முன்புறம் தெரியும் மாலை கதிரவனையும் , தோட்டத்தில்  இரவு நிலாவையும் எடுத்த படங்கள் இந்த பதிவில். 
காலைக் கதிரவன் தன் பொன் கிரணங்களை வான் முழுவதும் பரப்பி அழகு  படுத்தினான்.


//கடவுள் வாழ்த்து பாடும் இளங்காலை நேரக்காற்று 
என் கைகள் வணக்கம் சொல்லும் செங்கதிரவனைப்பார்த்து//
-கவிஞர் வாலி

வேதம் பாடிய சோதியைக் கண்டு
வேள்விப் பாடல்கள் பாடுதற் குற்றேன்;
நாதவார் கடல் இன்னொலியோடு
நற்றமிழ்ச் சொல் இசையையும் சேர்ப்பேன்;
காதம் ஆயிரம் ஓர் கணத்துள்ளே
கடுகி ஓடும் கதிரினம் பாடி
ஆதவா, நினை வாழ்த்திட வந்தேன்
அணிகொள் வாண்முகம் காட்டுதி சற்றே.

- மகாகவி பாரதியார்



சுருதியின்கண் முனிவரும் பின்னே
தூமொழிப் புலவோர் பலர் தாமும்
பெரிது நின்றன் பெருமை யென்றேத்தும்
பெற்றி கண்டு உனை வாழ்த்திட வந்தேன்;
பரிதியே பொருள் யாவிற்கும் முதலே,
பானுவே, பொன்செய் பேரொளித்திரளே,
கருதி நின்னை வணங்கிட வந்தேன்;
கதிர் கொள் வான்முகம் காட்டுதிசற்றே!

-- மகாகவி பாரதியார்


கதிரவன் தன் ஒளி முகம் காட்டி நின்றான்

கடற்கரையில் சூரிய உதயம் பார்க்க போன பாரதி மேகம் மறைத்து இருப்பதை கண்டு  சூரியனை முகம் காட்ட வேண்டிப் பாடிய பாடல்.

மாலைச்சூரியன் மகன் வீட்டுக்கு எதிர் வீட்டுக்கு மேல் புறம் மாலைச்சூரியன் 



சூரிய அஸ்தமனம் 

மழை பெய்து ஓய்ந்த பின்  வானம் மிக அழகாய் இருந்தது இரவு 7 மணி இருக்கும்
நிலா நல்ல பொன் வண்ணத்தில் இருந்தது

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசனெந்தை யிணையடி நீழலே
-திருநாவுக்கரசர் அருளிய தேவாரம் (ஐந்தாம் திருமுறை)

வெண்ணிலவே! வெண்ணிலவே !

ஜூம்  செய்துஎடுத்தால் வெள்ளை கலர்   

முழுமை அடையா நிலாவும் அழகுதான்.


மருமகள் வீட்டில் உள்ள பலகையில் இப்படி சூரியனையும் , சந்திரனையும் வரைந்து இருக்கிறார்.


கவிஞர் - கண்ணதாசன்.




பி.கு - பயணக்கட்டுரை சில காரணங்களால்  தடை படுகிறது.
வாழ்க வையகம் ! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன் !
---------------------------------------------------------------------------------------------------