செவ்வாய், 27 ஜூலை, 2021

காலையும் நீயே! மாலையும் நீயே!


மகன் வீட்டுத் தோட்டத்திலிருந்து காலைக் கதிரவனை  எடுத்த படங்கள். மற்றும்  வீட்டு முன்புறம் தெரியும் மாலை கதிரவனையும் , தோட்டத்தில்  இரவு நிலாவையும் எடுத்த படங்கள் இந்த பதிவில். 
காலைக் கதிரவன் தன் பொன் கிரணங்களை வான் முழுவதும் பரப்பி அழகு  படுத்தினான்.


//கடவுள் வாழ்த்து பாடும் இளங்காலை நேரக்காற்று 
என் கைகள் வணக்கம் சொல்லும் செங்கதிரவனைப்பார்த்து//
-கவிஞர் வாலி

வேதம் பாடிய சோதியைக் கண்டு
வேள்விப் பாடல்கள் பாடுதற் குற்றேன்;
நாதவார் கடல் இன்னொலியோடு
நற்றமிழ்ச் சொல் இசையையும் சேர்ப்பேன்;
காதம் ஆயிரம் ஓர் கணத்துள்ளே
கடுகி ஓடும் கதிரினம் பாடி
ஆதவா, நினை வாழ்த்திட வந்தேன்
அணிகொள் வாண்முகம் காட்டுதி சற்றே.

- மகாகவி பாரதியார்சுருதியின்கண் முனிவரும் பின்னே
தூமொழிப் புலவோர் பலர் தாமும்
பெரிது நின்றன் பெருமை யென்றேத்தும்
பெற்றி கண்டு உனை வாழ்த்திட வந்தேன்;
பரிதியே பொருள் யாவிற்கும் முதலே,
பானுவே, பொன்செய் பேரொளித்திரளே,
கருதி நின்னை வணங்கிட வந்தேன்;
கதிர் கொள் வான்முகம் காட்டுதிசற்றே!

-- மகாகவி பாரதியார்


கதிரவன் தன் ஒளி முகம் காட்டி நின்றான்

கடற்கரையில் சூரிய உதயம் பார்க்க போன பாரதி மேகம் மறைத்து இருப்பதை கண்டு  சூரியனை முகம் காட்ட வேண்டிப் பாடிய பாடல்.

மாலைச்சூரியன் மகன் வீட்டுக்கு எதிர் வீட்டுக்கு மேல் புறம் மாலைச்சூரியன் சூரிய அஸ்தமனம் 

மழை பெய்து ஓய்ந்த பின்  வானம் மிக அழகாய் இருந்தது இரவு 7 மணி இருக்கும்
நிலா நல்ல பொன் வண்ணத்தில் இருந்தது

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசனெந்தை யிணையடி நீழலே
-திருநாவுக்கரசர் அருளிய தேவாரம் (ஐந்தாம் திருமுறை)

வெண்ணிலவே! வெண்ணிலவே !

ஜூம்  செய்துஎடுத்தால் வெள்ளை கலர்   

முழுமை அடையா நிலாவும் அழகுதான்.


மருமகள் வீட்டில் உள்ள பலகையில் இப்படி சூரியனையும் , சந்திரனையும் வரைந்து இருக்கிறார்.


கவிஞர் - கண்ணதாசன்.
பி.கு - பயணக்கட்டுரை சில காரணங்களால்  தடை படுகிறது.
வாழ்க வையகம் ! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன் !
---------------------------------------------------------------------------------------------------

34 கருத்துகள்:

 1. பாரதி பாடல்களோடு படங்களுக்கு விளக்கம் அருமை சகோ.

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

  உங்கள் கருத்துக்கு நன்றி ஜி.

  பதிலளிநீக்கு
 3. அழகான படங்கள்... அதற்கேற்ப பாடல்கள் என அனைத்தும் அருமை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
   படங்களையும், பாடல்களையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

   நீக்கு
 4. வணக்கம் சகோதரி

  இன்றைய பதிவு அழகாக உள்ளது. உதயமாகும் செங்கதிரோனின் வண்ண முகம் காட்டும் காலை நேர படங்கள் அருமை.

  தன் பணி முடிந்து களைப்புடன் செல்லும் சமயத்திலும், உலக மக்களுக்காக ஒளி வீசிக் கொண்டே மறைந்து, "நாளை மறுபடியும் புத்துணர்ச்சியோடு வருகிறேன்" என சொல்லிச் செல்லும் மாலைச் சூரியனும் அழகாக உள்ளது. படங்களை மிகவும் அழகாக எடுத்துள்ளீர்கள். உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

  நிலவு படங்களும் அழகாக உள்ளது. ஜூம் செய்து எடுத்த படம் பளீரென்ற வெள்ளை ஒளியில் நன்றாக உள்ளது.

  மருமகள் பலகையில் வரைந்த சூரியன், சந்திரன் வரைபடங்கள் அழகாக உள்ளது. அவருக்கும் பாராட்டுகள்.

  கவிஞர் வாலி பாடலும், மஹாகவி பாரதியார் பாடலும் பதிவுக்கு பலம் சேர்த்து விட்டன. சிவபெருமானையே சதா தொழும் அடியார் திருநாவுக்கரசரின் எண்ணங்களும் பாடல்களும் என்றுமே பக்தி பெருக்கில் நம்மை மூழ்க வைப்பவை. கவிஞர் கண்ணதாசனின் பாடல்களும் நாம் வாழும் வரை மறக்க முடியாதவை. இயற்கையோடு கூடி இணைந்தவர்கள் இவர்கள். நல்ல இயற்கை வனப்புடன் கூடிய பதிவின் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
   //இன்றைய பதிவு அழகாக உள்ளது. உதயமாகும் செங்கதிரோனின் வண்ண முகம் காட்டும் காலை நேர படங்கள் அருமை.//

   நன்றி.


   //"நாளை மறுபடியும் புத்துணர்ச்சியோடு வருகிறேன்" என சொல்லிச் செல்லும் மாலைச் சூரியனும் அழகாக உள்ளது. படங்களை மிகவும் அழகாக எடுத்துள்ளீர்கள். உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.//
   உங்கள் அழகான கருத்து பகிர்வு அருமை. பாராட்டுக்கு நன்றி.

   //மருமகள் பலகையில் வரைந்த சூரியன், சந்திரன் வரைபடங்கள் அழகாக உள்ளது. அவருக்கும் பாராட்டுகள்.//

   மருமகளிடம் உங்கள் கருத்தையும் பாராட்டையும் தெரிவித்து விட்டேன். நன்றி சொன்னாள்.

   படங்கள், பாடல்கள் எல்லாவற்றையும் ரசித்து மிகவும் அழகாய், விரிவாக கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி, நன்றி.

   நீக்கு
 5. சூரியன், நிலா படங்கள் அனைத்துமே அழகு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 6. சூர்யோதயப் படங்கள் அற்புதம்.  அதிலும் இரண்டாவது படம்.   அப்புறம் மூன்று, நான்கு, ஆறு, ஏழு, எட்டு...!   எல்லாமே நல்லாதான் இருக்கு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

   எல்லா படங்களும் உங்களுக்கு பிடித்து இருப்பது மகிழ்ச்சி.
   எல்லா படங்களையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

   நீக்கு
 7. //கடவுள் வாழ்த்துப் பாடும்//

  வாலியின் இந்த வரிகளை முன்னர் இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்பேன். அதிகாலை எல்லாமே என்கிற எஸ் பி பி யின் குரல் மனதில் ஒலிக்கிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாலியின் பாடல் காலை செங்கதிரவனைப்பார்த்து வணங்கும் போதெல்லாம் மனதில் வரும். நீங்கள் சொல்வது போல் இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்ட பாடல்.

   நீக்கு
 8. பாரதியின் வரிகளில் எனக்கு நினைவுக்கு வந்தது வானம் எங்கும் பரிதியின் சோதி.. அதே போல பாரதிதாசனின் காலை இளம் பரிதியிலே அவளைக் கண்டேன்...  இந்த வரிகள் நினைவுக்கு வரும்போது சீர்காழியில் குரலில் வரும் வரிகளும் நினைவுக்கு வருகிறது! 

  பகிர்ந்திருக்கும் பாடல்களும் இனிமை.  

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வானம் எங்கும் பரிதியின் சோதி என்ற வரிகளை நிறைய தடவை செவ்வானமும் மாலைச்சூரியனும் இருக்கும் போது பகிர்ந்து இருக்கிறேன் ஸ்ரீராம். அப்போதும் எனக்கு பிடித்த வரிகள் என்று சொல்லி இருக்கிறீர்கள். நான் பாரதியின் பாடல்களை பகிர்கிறேன் என்று பழைய பாரதி புத்தகம் ஏடு ஏடாக வருகிறது என்று சார் புது பாரதி கவிதை புத்தகம் வாங்கி தந்தார்கள். பாரதி தாசன் பாடலும் பிடிக்கும்.
   பதிவு எழுத வந்த காலத்தில் இவர்கள் பாடல்களை அடிக்கடி பகிர்வேன்.
   அப்பாதுரை சார்கூட பாரதி கவிதை இல்லாமல் உங்கல் பதிவு இல்லை போலவே! என்பார்.


   பாடல்களை ரசித்தமைக்கு நன்றி.
   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
  2. //வானம் எங்கும் பரிதியின் சோதி என்ற வரிகளை நிறைய தடவை செவ்வானமும் மாலைச்சூரியனும் இருக்கும் போது பகிர்ந்து இருக்கிறேன் ஸ்ரீராம். அப்போதும் எனக்கு பிடித்த வரிகள் என்று சொல்லி இருக்கிறீர்கள்//


   ஆம். 2017 பிப்ரவரியிலும், ஆகஸ்டிலும்!

   நீக்கு
  3. ஆஹா ! நினைவாற்றல் அருமை ஸ்ரீராம்.மீண்டும் வந்து பகிர்ந்து கொண்டதற்கு மகிழ்ச்சி.

   நீக்கு
 9. பாரதியின் பாடல்களோடு கூடிய படப்பகிர்வு அருமை. ஜூம் பண்ணி எடுத்ததில் பாதி கிள்ளிய தோசையை நினைவூட்டும் நிலா! ஹிஹிஹி! மருமகளின் கோலங்கள் அழகு. வாழ்த்துகளையும்/ ஆசிகளையும் சொல்லுங்கள். மழை பெய்து ஓய்ந்த வானம் எப்போவுமே அழகு! நன்கு அழுத பின்னர் சிரிக்கும் குழந்தையை நினைவூட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்

   //பாரதியின் பாடல்களோடு கூடிய படப்பகிர்வு அருமை//

   நன்றி.

   //ஜூம் பண்ணி எடுத்ததில் பாதி கிள்ளிய தோசையை நினைவூட்டும் நிலா! ஹிஹிஹி!//

   ஆஹா! நல்ல கற்பனை ரசித்தேன்.

   //மருமகளின் கோலங்கள் அழகு. வாழ்த்துகளையும்/ ஆசிகளையும் சொல்லுங்கள்.//
   சொல்லி விட்டேன், மகிழ்ச்சியுடன் நன்றி சொன்னாள்.

   //மழை பெய்து ஓய்ந்த வானம் எப்போவுமே அழகு! நன்கு அழுத பின்னர் சிரிக்கும் குழந்தையை நினைவூட்டும்.//

   அருமை.

   உங்கள் அழகான கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 10. சூரியனின் கிரணங்களோடு கூடிய படம் அட்டகாசம்.

  புல்லின் உள்ளே இருந்து கேமராவைக் கொண்டு எடுத்ததுபோலப் படம் ரசித்தேன்.

  நிலவுப் படம் ரொம்ப அட்டஹாசமா வந்திருக்கே... மணைப்பலகை அழகு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
   இதற்கு முந்திய ஏரிக்கரை பூங்காற்றே! பதிவில் உங்களை காணவில்லையே!

   //சூரியனின் கிரணங்களோடு கூடிய படம் அட்டகாசம்.//

   நன்றி.

   //புல்லின் உள்ளே இருந்து கேமராவைக் கொண்டு எடுத்ததுபோலப் படம் ரசித்தேன்.
   நிலவுப் படம் ரொம்ப அட்டஹாசமா வந்திருக்கே..மணைப்பலகை அழகு//

   எல்லா படங்களையும் ரசித்து கருத்து சொல்வது மகிழ்ச்சி, நன்றி.


   நீக்கு
 11. அன்பின் கோமதிமா,
  வாழ்க வளமுடன்.

  அப்பாடி!! கண்ணைக் கூச வைக்கும் கதிரவன் ஒளி.
  என்ன ஒரு அழகு மா.
  சூரியனும் அதன் முன் நிழல்களும்,
  புல்லினூடே தெரியும் ஒளியும்,
  மாலைக் கதிரவனின் அதீத வெளிச்சமும் அழகாகப்
  பதிவாகி இருக்கின்றன.
  கூடவே பாரதியார், பாடல்களும்,
  வாலியின் வரிகளும் சிறப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்

   //அப்பாடி!! கண்ணைக் கூச வைக்கும் கதிரவன் ஒளி.
   என்ன ஒரு அழகு மா.//

   நன்றி அக்கா.
   படங்களும் பாடல்களும் உங்களுக்கு பிடித்து இருப்பது மகிழ்ச்சி அக்கா.

   நீக்கு
 12. நாவுக்கரசரை பெருமானின் தெய்வீகப் பண்
  மனதை நெகிழ்விக்கிறது.
  அருமையான ரசமான பதிவுமா.

  வெண்ணிலவும், மழை நீங்கிய வானமும்
  மிக அருமை.
  மேகங்களீன் ஊடே தெரியும் ஆதவனும் வானமும்

  மிகச் சிறப்பு மா. மிக நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தேவாரம் மனதை நெகிழ வைத்து விட்டது என்று கேட்டு மகிழ்ச்சி.

   //வெண்ணிலவும், மழை நீங்கிய வானமும்
   மிக அருமை.
   மேகங்களீன் ஊடே தெரியும் ஆதவனும் வானமும்

   மிகச் சிறப்பு மா//

   எல்லா படங்களியயும் ரசித்துப்பார்த்து பாடல்களை கேட்டு இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி அக்கா.

   நீக்கு
 13. படங்கள் வெகு அழகு! அவற்றை பொருத்தமான கவிதை வரிகளோடு பகிர்ந்து கொண்டதற்கு பாராட்டுகள்!
  மருமகளின் கை வண்ணம்... ஆஹா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்


   //படங்கள் வெகு அழகு! அவற்றை பொருத்தமான கவிதை வரிகளோடு பகிர்ந்து கொண்டதற்கு பாராட்டுகள்!//

   நன்றி நன்றி.

   //மருமகளின் கை வண்ணம்... ஆஹா!//

   நன்றி.
   படங்களை, பதிவை, மருமகளின் கைவண்ணத்தை ரசித்து படித்து கருத்து சொன்னதற்கு நன்றி .

   நீக்கு
 14. பதில்கள்
  1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 15. // சுருதியின்கண் முனிவரும் பின்னே
  தூமொழிப் புலவோர் பலர் தாமும்
  பெரிது நின்றன் பெருமை யென்றேத்தும்
  பெற்றி கண்டுனை வாழ்த்திட வந்தேன்;. //

  இதற்குமேல் என்ன வேண்டும்!..
  மகாகவியின் வாக்கிற்கு நிகர் வேறில்லை!.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துரைசெல்வாராஜூ, வாழ்க வளமுடன்
   மகாகவியின் வாக்கிற்கு நிகர் வேறில்லை என்பது உண்மைதான்.

   நீக்கு
 16. காலை உதயம் கண்ணுக்கழகு...

  அழகிய படங்களுடன் இனிய பதிவு..

  வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை உதயம் கண்ணுக்கழகுதான்.

   //அழகிய படங்களுடன் இனிய பதிவு..//
   நன்றி.
   வாழ்க வையகம், வாழ்க வளமுடன்

   நீக்கு
 17. இந்தப் பதிவின் படங்களுள் ஒன்றைக் கண்டு மனதில் எழுந்த சில வரிகளை எதிர் வரும் ஞாயிற்றுக் கிழமையன்று தனிப் பதிவாக வெளியிடலாம் என்பது எண்ணம்...

  அதற்காக இங்கிருந்து ஒரு படத்தினை மட்டும் எடுத்துக் கொள்கிறேன்...

  மகிழ்ச்சி.. நன்றி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //இந்தப் பதிவின் படங்களுள் ஒன்றைக் கண்டு மனதில் எழுந்த சில வரிகளை எதிர் வரும் ஞாயிற்றுக் கிழமையன்று தனிப் பதிவாக வெளியிடலாம் என்பது எண்ணம்...//   ஓ! நல்லது . உங்கள் கவிதை பதிவா? ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதுமாக மலர போகிறதா?

   //அதற்காக இங்கிருந்து ஒரு படத்தினை மட்டும் எடுத்துக் கொள்கிறேன்...//
   எடுத்து கொள்ளுங்கள். உங்கள் பதிவை படிக்க ஆவல், மகிழ்ச்சி.
   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.


   நீக்கு