தலைப்பை படித்தவுடன் கவிஞர் வாலி பாடல் நினைவு வருகிறதா? போனமாதம் பட்டுப்பூச்சி பூங்கா போனோம் அங்கு அழகான பட்டுபூச்சிகளைக் கண்டவுடன் இந்த பாடல் என் நினைவுக்கு வந்தது. "திக்குத் தெரியாத காட்டில் "என்ற படத்தில் இடம்பெற்றது இந்த பாடல். "பூ பூவாய் பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா நீ பள பளன்னு போட்டு இருப்பது யாரு கொடுத்த சொக்கா?" என்று கேட்கும் குழந்தை இந்த பாடலில். இறைவன் கொடுத்த சொக்காய் அணிந்து, அதையும் தவம் இருந்து அழகிய உடலைப் பெற்று நம் கண்களுக்கு விருந்து அளிக்கிறது என்று சொல்லதோன்றுகிறது.
365 நாட்களும் திறந்து இருக்கும் இந்த பூங்கா. முன் பதிவு செய்து கொள்ளலாம். கட்டணம் உண்டு.
உயர்ந்த மனிதரின் சிலை இவர் அருகே எல்லோரும் படம் எடுத்துக் கொண்டார்கள்
இதன் அருகில் அமர்ந்தும் படம் எடுத்துக் கொண்டார்கள்.
கம்பளிபுழு வண்ணத்துப்பூச்சியின் இரண்டாம் நிலை , இதன் மேல் அமர்ந்து எல்லோரும் படம் எடுத்துக் கொண்டார்கள்.
இப்படி வண்ணத்து பூச்சி பேருடன் படம் இருந்தது . இது அரிசோனா மாநில வண்ணத்துப்பூச்சி
பாடம் செய்யப்பட்ட வன்ணத்துப்பூச்சிகளும் கண்ணாடி பெட்டிக்குள் இருந்தன.
அரிசோனா மாநில வண்ணத்துப்பூச்சி
இவைகள் பாதுகாப்பாக பறந்து போகமுடியா பசுமை குடிலில் இருந்தன. அங்கு உள்ள மரம், செடி, கொடிகளில் பறந்து திரிந்து கொண்டு இருக்கிறது.
இந்த வகை வண்ணத்து பூச்சி மட்டும் நன்றாக படம் எடுக்க விட்டது மற்றவை பறந்து கொண்டே இருந்தது.
வளையத்தின் நடுவில் அதற்கு பிடித்த பழ உணவு வைக்கப்பட்டு இருக்கிறது
தர்பூசணி, பிளாக்பெர்ரி, ராஸ்பெர்ரி போன்ற பழங்கள் தட்டில் இருந்தது. அதை உண்ணும் காணொளி மேலே இருக்கிறது.
அசையாமல் கொஞ்சநேரம் நான் படம் எடுக்க ஒத்துழைத்த பட்டாம்பூச்சிகள்
வண்ணத்துப்பூச்சி உண்ண பழங்களும் நீரும் இருக்கிறது நீர் அருந்தும் நீல நிற வண்ணத்துப் பூச்சிப் பார்க்கலாம்
அரிசோனா மாநில வண்ணத்துப்பூச்சி
தர்பூசணி, பிளாக்பெர்ரி, ராஸ்பெர்ரி போன்ற பழங்கள் தட்டில் இருந்தது. அதை உண்ணும் காணொளி மேலே இருக்கிறது.
அவைகளுக்கு பிடித்த மலர்கள், பூக்கள் இருக்கிறது. பூக்களின் தேன் மற்றும் , செடிகளின் துளிர் இலைகளும்தான் உணவு.
அங்கு இருந்த மலர்கள்
மாஸ்க் அணிந்த ஒரு சிலர் மட்டுமே உள்ளே அனுமதி. தள்ளி தள்ளி இடம் விட்டு நின்று ரசிக்க வேண்டும்.
மேலே இருந்து தண்ணீர் சுற்றிலும் சாரல் மழை போல் பொழிந்து கொண்டே இருக்கிறது. அதனால் இந்த இடம் குளிர்ச்சியாக இருந்தது. கூரை வீட்டுக்குள் தண்ணீர் மோட்டார் இருக்கிறது.
பூங்காவில் அருவி போல சல சலத்துக் கொண்டு செயற்கை நீருற்று, சின்ன குளம், . குளத்தில் மீன்கள் இருக்கிறது.
இங்கு இருக்கும் வண்ணத்துப் பூச்சிகளின் பேர் உள்ள கையேடு கொடுத்தார்கள், உள்ளே வரும் போது குழந்தைகள் வண்ணத்துப்பூச்சியின் பேர் அறிந்து கொண்டு மகிழ்ந்தார்கள். நாங்களும் சரிப்பார்த்துக் கொண்டோம்.
என் மருமகளின் தோழி வந்து இருந்தார் குடும்பத்துடன் நியூஜெர்சியிலிருந்து . போன முறை நாங்கள் வந்து இருந்த போதும் வந்து இருந்தார். அவர்களுடன் போன பயணங்கள் முன்பு பகிர்ந்து இருக்கிறேன்.
தோழியின் குழந்தை
3 டி திரை அரங்கில் 3 டி கண்ணாடி அணிந்து கொண்டு வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கையைப்பற்றி அறிந்து கொள்ளலாம். நான்கு நிலை வளர் பருவங்களை அழகாய் காட்டினார்கள் படத்தில். நாம் பள்ளிப் பருவத்தில் படித்து இருக்கிறோம்.
வண்ணத்துப்பூச்சியின் முட்டை, புழு, அப்புறம் கூட்டுப்புழுவாய் தவம் இருப்பது, அதன் பின் அழகான வண்ணத்துப்பூச்சியாக வெளி வருவது . எல்லாம் அழகாய் எடுத்து இருந்தார்கள். பெரிய திரையில் அழகான மலை பகுதியில் அருவி, எங்கும் பசுமை அருமை .வண்ணத்துப் பூச்சி பறப்பது இடை இடையே வரும் பின்னணி இசை எல்லாம் மிக அருமையாக இருந்தது,
மொனார்க் எனப்படும் வண்ணத்துப்பூச்சியின் நீண்ட தூர பயணத்தை காட்டினார்கள். 4,000 கிலோமீட்டர் வரை பறப்பது நமக்கு அதிசயம்.மிக அழகான அதன் பயணம் பார்க்க பார்க்க அருமை. இந்த வகை வண்ணத்துப்பூச்சி மட்டுமே வருட கணக்கில் வாழ்கிறது. மற்ற பட்டாம்பூச்சிகளின் வாழ்க்கை 3 வாரம் மட்டுமே!. இந்த அரிய வகை வண்ணத்துப்பூச்சியை பாதுகாக்க வேண்டும் என்று இறுதியில் சொல்கிறார்கள். மரத்தின் இலைகள் போல இவை கொத்து கொத்தாக தொங்குவது பார்க்க அழகு.
வண்ணத்துப்பூச்சி பறந்து பக்கத்தில் வரும், நம் மேல் அமர்ந்து கொள்ளும். நாமும் குழந்தையாகி போகும் தருணம்.
தாவர பெருக்கத்திற்கு காரணமாக இருக்கும் எல்லா வண்ணத்துப்பூச்சிகளையும் பாதுகாக்க வேண்டும் . என்ற எண்ணத்தோடு வெளியில் வருகிறோம்.
தமிழகத்தின் வண்ணத்துப்பூச்சியாக "தமிழ் மறவன்" என்ற வண்ணத்துப்பூச்சி தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக அறிவிப்பு.
வண்ணத்துப்பூச்சி தமிழ் மறவனின் படம் உதவி -நன்றி தினமணி
ஜூலை 8 தினமணி செய்தி தாளில் செய்தி படித்தேன்.
வண்ணத்துப்பூச்சி பூங்கா இருக்கும் வளாகத்தில் "டைனோசர் உலகம்" இருந்தது அதையும் பார்த்தோம். அது அடுத்த பதிவில்.
வாழ்க வையகம் ! வாழ்க் வையகம் ! வாழ்க வளமுடன்.
---------------------------------------------------------------------------------------------------
அருமையான தகவல்கள்! மிக அழகிய புகைப்படங்கள்!
பதிலளிநீக்குவணக்கம் மனோ சாமிநாதன் , வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
சிறப்பான தகவல்கள் மா. தமிழகத்தில், திருச்சியிலும் ஒரு வண்ணத்துப் பூச்சி பூங்கா அமைத்தார்கள். அமைத்த சில மாதங்கள் நன்றாக இருந்தது. தற்போது பராமரிப்பு சரியில்லை. பூங்காவும் வேறு விதமாகவே பயன்படுத்தப்படுகிறது - நம் மக்களால்!
பதிலளிநீக்குபடங்கள், காணொளிகள் அனைத்தும் நன்று. தொடரந்து ரசிக்கக் காத்திருக்கிறேன்.
வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
நீக்கு//சிறப்பான தகவல்கள் மா//
நன்றி.
//தமிழகத்தில், திருச்சியிலும் ஒரு வண்ணத்துப் பூச்சி பூங்கா அமைத்தார்கள். அமைத்த சில மாதங்கள் நன்றாக இருந்தது. தற்போது பராமரிப்பு சரியில்லை. //
ஆமாம், போனது இல்லை ஆனால் கேள்வி பட்டு இருக்கிறேன். பராமரிப்புக்கு நம் மக்களும் ஒத்துழைக்க வேண்டும். நம் நாட்டில் பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய இருக்கிறது, பொக்கிஷ்மாக பாதுகாக்க வேண்டியதும் நிறைய இருக்கிறது.
படங்கள் , காணொளிகள் எல்லாம் பார்த்தது கருத்து சொன்னது மகிழ்ச்சி.
தொடர்வதற்கு நன்றி.
ஓ.. நம்மூரிலும் முயற்சித்தார்களா?
நீக்குதமிழகத்தில், திருச்சியிலும் ஒரு வண்ணத்துப் பூச்சி பூங்கா அமைத்தார்கள். என்று வெங்கட் சொல்கிறார். நான் செய்தி பேப்பரில் படித்தேன்.
நீக்கு20012 ஆம் ஆண்டிலேயே அமைக்கப்பட்டதாக நினைவு. ஆனால் நாங்கள் போனதில்லை. என்றாலும் விதம் விதமாகப் பறக்கும் வீட்டைச் சுற்றிலும், மொட்டை மாடியிலும். பார்க்கவே விநோதமாக இருக்கும். அவை உட்கார்ந்திருந்தால் படம் எடுக்கலாம். உட்காராது. நம்மைச் சுற்றி வரும். படம் எடுக்கப் போனால் பறந்து விடும்.
நீக்கு2012 ஆம் ஆண்டா என்று தெரியவில்லை ஆனால் அதன் சிறப்பான செயல்பாடுகளை விக்கிபீடியாவில் படித்தேன். முக்கொம்புக்கு அருகில் இருப்பதால் சிறிய சுற்றுலா அழைத்து செல்ல வசதியான இடம். இந்த பூங்காவில் 27 நடசத்திரங்களுக்கு உரிய 27 மரங்கள் இருக்கிறதாம். ஆசியாவின் மிக பெரிய வண்னத்துப்பூச்சி பூங்கா என்கிறார்கள்.
நீக்குமுடிந்த போது பார்த்து விடுங்கள். வெங்கட் பராமரிப்பு குறைவு என்கிறார்.
உங்கள் மீள் வருகைக்கு நன்றி.
ஒவ்வொன்றும் மிகவும் அழகு... இரண்டாவது காணொளியில் அசத்துகிறது... மனதை உற்சாகப் படுத்தும் இடம்...
பதிலளிநீக்குவணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
நீக்கு//ஒவ்வொன்றும் மிகவும் அழகு... இரண்டாவது காணொளியில் அசத்துகிறது... மனதை உற்சாகப் படுத்தும் இடம்...//
ஆமாம் தனபாலன், ஒவ்வொன்றும் அழகுதான், எனக்கு அத்தனையும் படம் எடுக்க முடியவில்லை என்று வருத்தம். பறந்து கொண்டே இருந்தது. வந்து இருந்த குழந்தைகளின் மகிழ்ச்சி ஆரவாரம் , வந்தவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தது எல்லாம் மனதை உற்சாகப் படுத்தும் இடம் என்பதை சொல்லியது உணமை.
உங்கள் கருத்துக்கு நன்றி.
அரிய தகவல்களுடன் கூடிய அரிய ஆனால் தேவையான பதிவு. எல்லாப் படங்களும் அருமை. இங்கேயும் வண்ணாத்திப் பூச்சிப் பூங்கா உள்ளது. போனதில்லை. ஆனால் விதம் விதமாய் வண்ணாத்திப் பூச்சிகள் வீட்டைச் சுற்றிலும் வந்து போய்க் கொண்டிருக்கும். காணொளிகளும் நன்றாக இருந்தன.
பதிலளிநீக்குவணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
நீக்கு//அரிய தகவல்களுடன் கூடிய அரிய ஆனால் தேவையான பதிவு.எல்லாப் படங்களும் அருமை.//
நன்றி.
ஸ்ரீரங்கத்தில் வண்ணத்துப்பூச்சி பூங்கா நல்ல பெரிதாக இருக்கும் என்று கேள்வி பட்டு இருக்கிறேன். வெங்கட் அவர்களும் சொல்லி இருக்கிறார்கள்.
வீட்டைச்சுற்றி வண்ணத்துப்பூச்சிகள் பறப்பதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கும்.
காணொளிகள் எல்லாம் பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.
வண்ணத்துப்பூச்சிகளை அவற்றுக்கான பூங்காவில் நிதானமாகப் படமாக்க முடியும். அருமையான பகிர்வு. விதம் விதமான அழகான பூச்சிகள். பழங்களையும் உணவாக வைப்பது பாராட்டுக்குரியது. ஜாம்ஜெட்பூர் பூங்காவில் வித்யாசமான சிந்தனையாக பூவின் வடிவிலேயே அவற்றுக்கு நீர் அருந்தும் வண்ணக் கிண்ணங்களை வைத்திருந்தார்கள். வண்ணத்துப்பூச்சிகளை கவரும் வண்ண மலர்கள் நம் கருத்தையும் கவருகின்றன. காணொளிகள் அருமை.
பதிலளிநீக்குவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
நீக்குவண்னத்துப்பூச்சிகளை ஓரளவு எடுத்து இருக்கிறேன், நீங்கள் இன்னும் அழகாய் எடுத்து இருப்பீர்கள். கோடைக்கு ஏற்ற பழங்கள் வைத்து இருந்தார்கள் பாராட்டத்தான் வேண்டும்.
//ஜாம்ஜெட்பூர் பூங்காவில் வித்யாசமான சிந்தனையாக பூவின் வடிவிலேயே அவற்றுக்கு நீர் அருந்தும் வண்ணக் கிண்ணங்களை வைத்திருந்தார்கள். //
ஆஹா! அழகாய் நீர் அருந்துவதை படம் எடுத்து இருப்பீர்கள். வண்ணத்துப்பூச்சிகளும் கவரும் வண்ண மலர்கள் நம் கருத்தையும் கவர்வது உண்மை.
காணொளிகள் கண்டு கருத்து சொன்னதற்கு நன்றி ராமலக்ஷ்மி.
நல்ல தகவல்கள். வண்ணத்துப்பூச்சி படங்கள் அழகு.
பதிலளிநீக்குஇது யாருடா கவினுடன் என்று யோசித்தேன்.
நல்லதொரு பயணமாக இருந்திருக்கும்.
வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்
நீக்கு//நல்ல தகவல்கள். வண்ணத்துப்பூச்சி படங்கள் அழகு.//
நன்றி.
//இது யாருடா கவினுடன் என்று யோசித்தேன்.//
ஓ! அவள் 10 நாட்கள் வந்து இருந்தது மிகவும் மகிழ்ச்சியான தருணம்.
அவளும் கவின் போல ஆச்சி ஆச்சி என்று அழைத்து விளையாடி களித்தாள், என்னையும் களிப்புற செய்தாள். நல்ல குழந்தை.
//நல்லதொரு பயணமாக இருந்திருக்கும்.//
ஆமாம்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
மிக மிக அழகான அருமையான பதிவு..
பதிலளிநீக்குபட்டாம் பூச்சிகளைக் காக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்...
இயற்கையை எழிலை அழிக்காமல் இருந்தாலே போதும்.. எண்ணற்ற உயிர்கள் இனிதாக வாழும்...
வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்..
வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
நீக்கு//மிக மிக அழகான அருமையான பதிவு.//
நன்றி.
//பட்டாம் பூச்சிகளைக் காக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்..//
ஆமாம் , தாவர வளர்ச்சி உதவும் பட்டாம் பூச்சிகளை பாதுகாக்க வேண்டும்.
//இயற்கையை எழிலை அழிக்காமல் இருந்தாலே போதும்.. எண்ணற்ற உயிர்கள் இனிதாக வாழும்...//
ஆமாம், நீங்கள் சொல்வது உண்மை. மனித தேவைகளுக்கு இயற்கை வளம் பலியாகி கொண்டே இருக்கிறது. வனப்பாதுகாப்பு, இயற்கை பாதுகாப்பு என்று நாட்கள் வந்து நினைவு படுத்துகிறது.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
வண்ணத்துப் பூச்சிகளைத் துரத்திப் பிடித்த அனுபவம் எதுவும் இல்லை.. நண்பர்கள் பிடித்துக் கொடுத்தால் சில விநாடிகள் வைத்திருந்து விட்டு விடுவேன்...
பதிலளிநீக்குகடலைக் காட்டில் சின்னஞ்சிறியதாய் மஞ்சள் நிறத்தில் கூட்டமாகப் பறந்து கொண்டிருப்பதைப் பார்ப்பதே சந்தோஷம்...
வண்ணத்துப்பூச்சியை யாராவது பிடித்தால் எனக்கு பிடிக்காது , வண்ணத்துப்பூச்சியின் வண்ணம் பிடித்தவர் கையில் ஒட்டிக் கொள்ளும் பாவமாக இருக்கும்.
நீக்குநானும் பார்த்து இருக்கிறேன். ரயிலில் போகும் போது கடலை காட்டில் எல்லாம் மஞ்சள் நிறத்தில் சின்னதாக பறந்து கொண்டே இருக்கும்.
//கடலைக் காட்டில் சின்னஞ்சிறியதாய் மஞ்சள் நிறத்தில் கூட்டமாகப் பறந்து கொண்டிருப்பதைப் பார்ப்பதே சந்தோஷம்..//
பழமுதிர் சோலையில் கார்த்திகைக்கு போகும் போது நிறைய குட்டி பட்டாம் பூச்சி கூட்டமாக பறப்பதைப்பார்த்து இருக்கிறேன். பறப்பதை பார்ப்பதே சந்தோஷம்தான்.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குஅழகான பதிவு. பதிவுக்கு வைத்த பாடல் அருமை. பலமுறை கேட்டு ரசித்தது. பட்டாம்பூச்சிகள் படங்கள் நன்றாக உள்ளன. காணொளிகளும் நன்றாக இருந்தன. அரிசோனா மாநிலத்து வண்ணத்துப் பூச்சிகள் வித்திசாயமாக இருக்கிறது. இறக்கைகளில் இரு கண்கள் உள்ளது போல் பார்க்கவே அழகாக உள்ளது.
உயரமான மனிதருக்கு அருகில் நிற்கும் உங்கள் பேரனும், உங்கள் மருமகளின் தோழியின் பெண்ணும் நன்றாக போஸ் தந்துள்ளனர். அனைத்து இடங்களிலும் குழந்தைகள் இருவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நானும் வந்திருக்கும் உங்கள் குடும்ப தோழியின் மகளாகத்தான் இருக்குமென்று நினைத்தேன்.நீங்களும் பதிவின் நடுவில் அதைப்பற்றி சொல்லியிருக்கிறீர்கள்.
அந்த இடங்கள் பசுமையாய் இருக்கின்றன மலர்களும் கண்களுக்கு குளிர்ச்சியாக உள்ளது. நீர் அருந்தும் பட்டாம்பூச்சி, படபடக்கும் பட்டாம்பூச்சியென அனைத்து காணொளிகளும் அழகு.
/மொனார்க் எனப்படும் வண்ணத்துப்பூச்சியின் நீண்ட தூர பயணத்தை காட்டினார்கள். 4,000 கிலோமீட்டர் வரை பறப்பது நமக்கு அதிசயம்.மிக அழகான அதன் பயணம் பார்க்க பார்க்க அருமை. இந்த வகை வண்ணத்துப்பூச்சி மட்டுமே வருட கணக்கில் வாழ்கிறது. மற்ற பட்டாம்பூச்சிகளின் வாழ்க்கை 3 வாரம் மட்டுமே!. இந்த அரிய வகை வண்ணத்துப்பூச்சியை பாதுகாக்க வேண்டும் என்று இறுதியில் சொல்கிறார்கள்/
கண்டிப்பாக.. இத்தகைய இயற்கை தந்த உயிர் வாழ் ஜீவன்கள் தங்கள் விருப்பப்படி பறந்து தங்கள் தேவைகளை பார்த்து செய்து கொள்ள மனிதர்களாகிய நாம் உதவி செய்தாலே அது இருக்கும் காலம் வரை நம்மை நேசித்து நம்மிடம் அன்பாக இருக்கும். இந்த அரிய விபரங்களை தாங்களும் கண்டு எங்களுக்கும் தெரிவித்திருப்பதற்கு நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மொனார்க் எனப்படும் வண்ணத்துப்பூச்சியின் நீண்ட தூர பயணத்தை காட்டினார்கள். 4,000 கிலோமீட்டர் வரை பறப்பது நமக்கு அதிசயம்.மிக அழகான அதன் பயணம் பார்க்க பார்க்க அருமை. இந்த வகை வண்ணத்துப்பூச்சி மட்டுமே வருட கணக்கில் வாழ்கிறது.///
பதிலளிநீக்குமிக அருமையான செய்தி தெரியாத செய்தி கூட. இங்கே மஞ்சள் வண்ண வண்ணத்துப் பூச்சிகளே நிறைய இருக்கின்றன. சிலசமயம்
கம்பிக் கதவில் வந்து மோதிப் பறக்கின்றன.
எத்தனை வித்த வண்ணங்களிலும், வடிவமைப்பிலொம் இறைவன்
படைத்திருக்கிறார்.
மிக மிக அற்புதம். அதுவும் அந்தக் காணொளியில் சட் சட்டென்று பறக்கும்
சிவப்பு நிற வண்ணத்துப் பூச்சி
எத்தனை அழகு.
ஏதோ நேஷனல் ஜியாக்ரஃபி பார்ப்பது போல
இந்தப் பதிவு கண்ணைக் கட்டிவிட்டது அன்பு கோமதி.
சின்னக் குட்டிப் பொண்ணும், கவினும் சிரித்தபடி
போஸ் கொடுத்திருப்பதும் மிகச் சிறப்பு.
நன்றி அன்பு கோமதி மா.
மிக அருமையான செய்தி தெரியாத செய்தி கூட. இங்கே மஞ்சள் வண்ண வண்ணத்துப் பூச்சிகளே நிறைய இருக்கின்றன. சிலசமயம்
பதிலளிநீக்குகம்பிக் கதவில் வந்து மோதிப் பறக்கின்றன.
எத்தனை வித்த வண்ணங்களிலும், வடிவமைப்பிலொம் இறைவன்
படைத்திருக்கிறார்.
மிக மிக அற்புதம். அதுவும் அந்தக் காணொளியில் சட் சட்டென்று பறக்கும்
சிவப்பு நிற வண்ணத்துப் பூச்சி
எத்தனை அழகு.
ஏதோ நேஷனல் ஜியாக்ரஃபி பார்ப்பது போல
இந்தப் பதிவு கண்ணைக் கட்டிவிட்டது அன்பு கோமதி.
சின்னக் குட்டிப் பொண்ணும், கவினும் சிரித்தபடி
போஸ் கொடுத்திருப்பதும் மிகச் சிறப்பு.
நன்றி அன்பு கோமதி மா.
வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
நீக்கு//இங்கே மஞ்சள் வண்ண வண்ணத்துப் பூச்சிகளே நிறைய இருக்கின்றன. சிலசமயம்
கம்பிக் கதவில் வந்து மோதிப் பறக்கின்றன.//
மஞ்சள் வண்ணத்துப்பூச்சி அழகாய் இருக்குமே!
இறைவன் படைப்பில் அற்புதமான படைப்பு வண்ணத்துப்பூச்சி.
பதிவை, காணொளியை ரசித்து பார்த்தமை அறிந்து மகிழ்ச்சி அக்கா.
//சின்னக் குட்டிப் பொண்ணும், கவினும் சிரித்தபடி
போஸ் கொடுத்திருப்பதும் மிகச் சிறப்பு.//
நிறைய இடங்களில் இரண்டு பேரும் படம் எடுத்து கொண்டார்கள்.
உங்கள் கருத்துக்கு நன்றி அக்கா.
உங்கள் கருத்துக்கு நன்றி அக்கா.
நம்மூரில் இல்லாதது என்று நினைக்கிறேன். வண்னத்துப்பூச்சிகள் வாழ்க்கையை அழகாக்குகின்றன. நம் மனதுக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கின்றன.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்குஸ்ரீரங்கத்தில் இருப்பதாய் செய்தி படித்தேன் , பார்த்தேன்.
வெங்கட் இப்போது சரியாக பராமரிப்பு இல்லை என்கிறார்.
வண்ணத்துப்பூச்சி வாழ்க்கையை அழகாக்குவது உண்மை.
நம மனதுக்கு சுறு சுறுப்பைக் கொடுப்பதும் உண்மை.
காணொளிகள் கண்டேன். உயரமான மனிதர் சிலை.. நிஜமான வயரமா? அடேயப்பா! அங்கிருக்கும் வண்ணத்துப்போச்சிகளுக்கு சுதந்திரம்தான். கட்டுப்பாடான சுதந்திரம்!
பதிலளிநீக்குகாணொளிகள் பார்த்தது மகிழ்ச்சி. நிஜமான உயரம் இல்லை அதிகப்படியான உயரம்.அங்கிருக்கும் வண்ணத்துப்பூச்சிகளுக்கு கட்டுப்பாடான் சுதந்திரம்.
நீக்குமலை, அருவி, வானம் எல்லாம் அந்த பசுமை வீட்டுக்குள்ளேதான். இது ஒரு அழகிய சிறை.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
படங்களும், விளக்கத்தகவல்களும் அருமை சகோ காணொளிகளும் கண்டேன் நன்றி
பதிலளிநீக்குவணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குபதிவை படித்து விட்டீர்களா? என்று கேட்டவுடன் வந்து படித்து கருத்து சொன்னதற்கு நன்றி சகோ.
காணொளிகள் பார்த்தது அறிந்து மகிழ்ச்சி.