வெள்ளி, 23 ஜூலை, 2021

அன்னாய் ! வாழ்க நின்தன் அருளே!


ஆடி வெள்ளிக்கிழமை இன்று .ஆடி வெள்ளி, ஆடிச் செவ்வாய்களில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், அலங்காரம் நடைபெறும். விளக்கு பூஜைகள் ஆடி வெள்ளிக் கிழமை உண்டு.

இந்த ஆடி வெள்ளி சில நினைவுகளை கொண்டு வருகிறது. மயிலாடுதுறை, மதுரை கோயில்களில் தரிசனம் செய்த அம்மன் படங்கள் இந்த பதிவில் இடம்பெறுகிறது.
 மயிலாடுதுறை அருள்மிகு சாந்தநாயகி அம்மன்


மயிலாடுதுறை அருள்மிகு சாந்தநாயகி சமேத புனுகீசுவரசுவாமி கோயிலில் உள்ள துர்க்கை அம்மன்

ஆடி வெள்ளி அலங்காரம்

யாதுமாகி நின்றாய் -காளி ! 
எங்கும் நீ நிறைந்தாய்
                            தீது நன்மையெல்லாம் - காளி
                              தெய்வ லீலை யன்றோ?
                           பூதமைந்து மானாய் - காளி
                                   பொறிகளந்து மானாய்
                              போதாமாகி நிண்றாய் -காளி
                                  பொறியை விஞ்சி நின்றாய்
- மகா கவி பாரதி


ஆடி வெள்ளிக் கிழமை விளக்கு பூஜை விளக்கு நாச்சியார்.

இல்லக விளக்கது இருள்கெடுப்பது
சொல்லக விளக்கது ஜோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நமச்சிவாயவே

மயிலாடுதுறை அருள்மிகு சாந்தநாயகி சமேத புனுகீசுவரசுவாமி திருக்கோயிலில் விளக்கு பூஜை

மயிலாடுதுறையில் நாங்கள் இருந்த வீட்டுப்பக்கம் உள்ள 'செல்வ விநாயகர்' கோவிலில் உள்ள "சிவதுர்க்கை" அம்மனுக்கு  ஆடி செவ்வாய் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு அலங்காரம் நடைபெறும். ஆடிப்பூரம் மிக சிறப்பாக நடைபெறும்.ஆடிப்பூரம் வளையல், மஞ்சள் கயிறு வைத்து வணங்குவார்கள்.அதிகாலை சூரிய உதயம்

தட்சிணாயணம் துவங்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து சக்திகள் வெளிப்படும். பிராண வாயு அதிகமாகக் கிடைக்கும். எல்லா உயிர்களுக்கு ஆதார சக்தியை அதிகமாகத் தரும் மாதம்  ஆடிமாதம். வேத பாராயணங்கள் , மந்திரங்கள், ஜெபங்களுக்கு ஆடி மாதம் சிறந்தது. (ஆடி மாதம் சிறப்புகளை படித்தேன் அதில் தெரிந்து கொண்டது)மாயவரத்தில் இருக்கும் போது ஓவ்வொரு ஆடி வெள்ளிக்கிழமைக்கும் ஒவ்வொரு அம்மன் கோவில்   போவோம்.  அம்மன் கோவில் வாசலில்  உள்ள துர்க்கை அம்மன் மேல் கதிரவனின் கதிர்கள் . திருவெண்காடு போகும் வழியில் உள்ள  அம்மன் கோவில் 
வாராஹி  அம்மன்
கோவில் மதிலை சுற்றி பிராமி, கெளமாரி, வைஷ்ணவி, இந்திராணி, சாமுண்டி, மகேஸ்வரி, வாராஹி அம்மன்  சுதை சிற்பங்கள் இருக்கிறது.


மயிலாடுதுறை அருள்மிகு சாந்தநாயகி சமேத புனுகீசுவரசுவாமி ஆடி வெள்ளி சந்தனக் காப்பு அலங்காரம் அம்மனுக்கு

மதுரையில்  வீட்டுக்கு அருகில் உள்ள அய்யனார்  கோயிலில் உள்ள அம்மனுக்கு ஆடிக்கூழ்  படைக்கும் விழா ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் உண்டு. மாவிளக்கு  போடுதலும் ஆடி வெள்ளிக்கிழமையில் உண்டு. 

 இப்போது முன்பு கண்டு தரிசனம் செய்த கோயில் விழாக்களை  மனதில் நினைத்து   வணங்கி கொள்கிறேன்.

.மதுரையில் எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் கோயிலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண கோலத்தில் இருக்கிறார்கள். கல்யாணம் சித்திரை மாதம் நடைபெறும். இந்த கோயிலில்  ஆடி வெள்ளிக்கிழமை சிறப்பாக பூஜைகள் நடை பெறும்.

மீனாட்சி சுந்தரேஸ்வரர் எல்லோருக்கும் எல்லா நலன்களையும், வளங்களையும்  தரட்டும்.


அன்னாய் ! வாழ்க நின்தன் அருளே!

வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்

----------------------------------------------------------------------------------------------


 

33 கருத்துகள்:

 1. வாழ்க வையகம்..
  வாழ்க வளமுடன்..

  ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
   வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
   ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் !

   நீக்கு
 2. மெய்ஞ்ஞானச் செய்திகளுடன் விஞ்ஞானச் செய்திகளையும் பதிவில் தந்தது அருமை..

  தேவியின் தரிசனம் மகிழ்ச்சி..
  அன்னை அனைவரையும் ஆதரித்து அருள்வாளாக...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மெய்ஞ்ஞானமும், விஞ்ஞானமும் இணைந்தது தானே வாழ்க்கை!
   உங்கள் தேவி தரிசனம் படிக்க வருகிறேன்.
   இரண்டு மூன்று தினம் வெளியூர். நேற்று இரவுதான் வந்தோம்.
   அனைவரையும் அன்னை ஆதரித்து அருள வேண்டும்.
   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 3. அழகான தரிசனப்படங்கள் அருமை.
  சூரியனின் இரண்டு படங்களும் அற்புதம்.

  வாராஹி அம்மன் கோவில் உத்திரகோசமங்கையிலும் இருக்கிறது. பெரிய கோவில்தான். வாழ்க நலம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

   //அழகான தரிசனப்படங்கள் அருமை.
   சூரியனின் இரண்டு படங்களும் அற்புதம்.//

   நன்றி ஜி.

   உத்திரகோசமங்கை கோவில் போய் இருக்கிறேன். நினவு இல்லை பல வருடம் இருக்கும் போய். அப்போது காமிரா கிடையாது என்னிடம் அந்த கோயிலை படமும் எடுக்கவில்லை.மார்கழி திருவாதிரைக்கு போனேன். சந்தன அபிஷேகம் ,அலங்காரம் சிறப்பு அங்கு உள்ள மரகத நடராஜருக்கு. சார் அந்த கோயில் பார்த்தது இல்லை நான் என் அம்மா, சகோதரியுடம் போனேன். சார் போக வேண்டும் ஒரு திவாதிரைக்கு என்று சொல்லி கொண்டு இருந்தார்கள்.

   உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

   நீக்கு
  2. இது மரகத நடராஜர் கோவிலை சார்ந்தது அல்ல ஊருக்கு வெளியில் அதாவது இராமநாதபும் செல்லும் பாதையில் இருக்கிறது.

   நீக்கு
  3. ஊருக்கு வெளியில் இருக்கா?
   அப்போ தெரியாது. உத்தரகோச மங்கை என்றால் மரகத நடராஜர்தான் நினைவுக்கு வந்தார்.
   மறு வருகைக்கும் தகவலுக்கும் நன்றி.

   நீக்கு
 4. அன்பின் கோமதி மா,
  வாழ்க வளமுடன்.
  எங்கும் செல்ல முடியாத நிலையில்
  நீங்கள் இங்கே பதிவிட்டிருக்கும்
  அம்மன் படம் அனைத்தும்
  கண்டு வணங்கும் பாக்கியம் கிடைத்தது.
  எத்தனை விதமான அலங்காரங்கள்.

  எனக்கு சென்னை, சென்னையைச் சுற்றி
  இருக்கிற அம்மன் கோவில்கள் தான் தெரியும்.

  பட்டீஸ்வரம், துர்க்கை, சமயபுரம், தஞ்சை மாரியம்மன்
  கோவில்கள் தெரியும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
   ஆடி, வெல்ளி தை வெள்ளி எல்லாம் அம்மன் கோயில்களில் விழாக்கள்தான் சிறப்பாக இருக்குமே! நினைவுகள் வந்து போனதால் இந்த பதிவு.

   முன்பே படங்களை பதிவு ஏற்றி வைத்து இருந்தேன். மாயவரத்தில் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் பிள்ளையார் கோவிலில் ஆடி செவ்வாய் வார வழிப்பாட்டு மன்றம் குழு சிறப்பாக சேர்ந்து செய்வோம் அம்மனுக்கு அலகங்காரங்கள். மாயவர நட்புகளிடம் பேசும் போது நினைவுகளை பகிர்ந்து கொண்டோம். அப்படியே இங்கேயும் அதனை பகிர்ந்து கொண்டேன்.
   பட்டீஸ்வரம் ஊரிலிருந்து வரும் உறவுகளை அழைத்து போவோம். நிறைய முறை தரிசனம் செய்து இருக்கிறோம்.
   சென்னையை சுற்றி உள்ள மாங்காடு, கருமாரி, கற்பகவல்லி அம்மன் கோவில்களில்
   திருஒற்றியூர் எல்லாம் தரிசனம் செய்து இருக்கிறோம்.
   அவர்களை நினைத்து மனதில் வழிபட்டுக் கொள்ள வேன்டும்.

   நீக்கு
 5. சார் திருவாதிரைக்குப் போகலாம் என்று
  சொன்னதை நினைத்து கொஞ்சம் வருத்தம்.
  இப்பொழுது நேரிலேயே
  கண்டு கொண்டிருப்பார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //சார் திருவாதிரைக்குப் போகலாம் என்று
   சொன்னதை நினைத்து கொஞ்சம் வருத்தம்.//

   பதிவில் அக்கா இதைச் சொல்லி இருப்பதாய்த் தெரியவில்லையே...

   நீக்கு
  2. மதுரையிலிருந்து உத்தரகோசமங்கை பக்கம் அதனால் போவொம் என்றார்கள்.

   இப்போது நீங்கள் சொன்னது போல எப்போதும் அவர் திருவடி நிழலில்தானே இளைப்பாறல்.

   நீக்கு
  3. ஸ்ரீராம் , தேவகோட்டை ஜி அவர்களுக்கு அளித்த மறு மொழியில் சொல்லி இருக்கிறேன்.

   நீக்கு
 6. இப்போது முன்பு கண்டு தரிசனம் செய்த கோயில் விழாக்களை மனதில் நினைத்து வணங்கி கொள்கிறேன்.///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////// இப்போதைக்கு நினைத்துக் கொள்வோம்.
  சீக்கிரமே கோயில்கள் தரிசனம் கிடைக்கட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இங்கு சாய் பாவா கோயிலில் முருகன், பெருமாள் இருக்கிறார்கள்.
   வார வாரம் அழைத்து செல்கிறான்.

   நீக்கு
 7. ஆடி சூரிய ஒளியில் அம்மன் ஒளி வீசுவதும் அருமை.
  தக்ஷிணாயன சூரியன் வந்தவுடன் கூடவே மழைக்காலமும்,
  காற்றுக்காலமும் உண்டு என்று பெரியவர்கள் சொல்வார்கள்.  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆடி சூரிய ஒளியில் அம்மன் ஒளி வீசுவதும் அருமை.//
   நன்றி அக்கா.

   ஆடி பிறந்து விட்டால் ஆற்றில் தண்ணீர் வரும், பயிர் பச்சைகள் செழிக்கும் அதற்கு சூரிய ஒளி தேவை அதுவும் ஆடி மாதம் நன்றாக கிடைக்கும். "ஆடி பட்டம் தேடி விதை" ஆடி மாதம் விதை விதைத்து பயிர் செய்ய ஆரம்பித்தால் தை மாதம் அறுவடை. ஆடி வரும் போது பண்டிகைகள் எல்லாவற்றையும் அழைத்து வருதே!

   ஆடி மாதம் சிறப்புதான்.

   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி அக்கா.

   நீக்கு
 8. ஆடிவெள்ளி அம்மன் தரிசனம் அருமை.  நேற்று இங்குள்ள துர்க்கா கோவிலில் பொங்கல் வைத்து ஒரே கூட்டம், கொண்டாட்டம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
   ஆடி வெள்ளி தரிசனம் அருமை//

   நன்றி.
   ஆடி வெள்ளிக்கு பொங்கல், மாவிளக்கு என்று சிறப்பாக மக்கள் செய்வது வழக்கம்.
   ஆடி தபசுக்கு உள்ளூர் தொலைக்காட்சியில் ஒளி பரப்புகிறோம் கோயிலில் கூட்டம் சேர வேண்டாம் என்று கோயில் நிர்வாகம் சொன்னாலும் கூட்டம் அலை மோதுகிறது.
   நேரலையில் பார்த்தேன். கோயில் போய் தரிசனம் செய்தால்தான் மனதுக்கு நிம்மதி என்று நினைப்பவர்கள் இருக்கும் போது என்ன செய்வது!
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 9. அம்மன் அலங்காரப் படங்கள் மிக அழகு. இங்கிருந்தே வணங்கிக்கொள்கிறேன்.

  சூரியன் மரம் படங்களை ரசித்தேன்.

  இங்கு வரும்போது கோவில்களுக்குச் செல்ல வாய்ப்பு கிடைக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்

   //அம்மன் அலங்காரப் படங்கள் மிக அழகு. //

   குருக்கள் நன்றாக அலங்காரம் செய்வார்.
   சூரியன் படங்கள் பிடித்து இருப்பது மகிழ்ச்சி.

   //இங்கு வரும்போது கோவில்களுக்குச் செல்ல வாய்ப்பு கிடைக்கும்.//

   வாய்ப்பு கிடைக்கும் ஆனாலும் அவர்கள் அழைத்து போனது நினைவுகளில்.

   உங்கள் கருத்துக்கு நன்றி.   நீக்கு
 10. வணக்கம் சகோதரி

  பதிவு அருமை. ஆடி வெள்ளிக்கு அம்மன் தரிசனம் படங்கள் அனைத்தும் அருமை. அழகான பல அலங்காரங்களில் ஜொலிக்கும் அம்மனை கண்டு பணிவுடன் நமஸ்கரித்து கொண்டேன். ஆடி மாத சிறப்பு பற்றி அழகாக சொல்லியுள்ளீர்கள்.

  மலை முகடுகளிடையே செவ்வொளி வீசியபடி வந்து கொண்டிருக்கும் காலைக் கதிரவன் படமும், மரத்தினிடையே சூரியன் பிரகாசிக்கும் படமும் நன்றாக உள்ளது. எனக்கும் காலை, மாலை சூரிய படங்களை ரசிக்க ரொம்பவும் பிடிக்கும். அலைபேசியில் வீட்டின் பால்கனியிலிருந்து அதைப் படங்களாக எடுத்து வைத்துக் கொள்வேன்.

  மயிலாடுதுறை அருள்மிகு சாந்தநாயகி சமேத புனுகீசுவரசுவாமி சந்தனகாப்பு அலங்காரம் நன்றாக உள்ளது. சர்வ சக்தி படைத்த மீனாட்சி சுந்தரேஷ்வரர் அகிலத்தை காத்தருள வேண்டும் என நானும் பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நீங்கள் வெளியூர் பயணம் நல்லபடியாக சென்று வந்தமைக்கு சந்தோஷம். நேற்று உங்களை சில நாட்களாக பதிவுலகில் எங்கும் காணோமேயென்று உங்கள் தளம் வந்து விசாரித்தேன். அதற்கு நீங்கள் உங்கள் பதிவில் பதில் தந்தோடு மட்டுமின்றி, என் தளம் வந்தும் பதில் அளித்திருப்பதற்கும் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். இந்த அன்பும். நட்பும் நமக்குள் என்றும் நீடித்திருக்க வேண்டுமெனவும் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹ்ரிஹரன், வாழ்க வளமுடன்

   //ஆடி வெள்ளிக்கு அம்மன் தரிசனம் படங்கள் அனைத்தும் அருமை. அழகான பல அலங்காரங்களில் ஜொலிக்கும் அம்மனை கண்டு பணிவுடன் நமஸ்கரித்து கொண்டேன். ஆடி மாத சிறப்பு பற்றி அழகாக சொல்லியுள்ளீர்கள்.//

   நன்றி கமலா. இன்னும் நிறைய அலங்கார படங்கள் இருக்கிறது. இன்னொரு பதிவில் போடலாம்.

   எனக்கும் சூரியனை காலை , மாலை பார்க்க பிடிக்கும். நானும் நிறைய எடுத்து வைத்து இருக்கிறேன்.நீங்களும் அவற்றை பகிருங்கள்.

   //மயிலாடுதுறை அருள்மிகு சாந்தநாயகி சமேத புனுகீசுவரசுவாமி சந்தனகாப்பு அலங்காரம் நன்றாக உள்ளது.//

   அந்த கோயில் குருக்கள் மிகவும் அழகாய் அலங்காரம் செய்வார்.

   உங்கள் நலம் விசாரிப்பு மிகவும் மகிழ்ச்சி அளித்தது.
   வெளியூர் பயணம் மிக நன்றாக இருந்தது. மகனும், மருமகளும் விடுமுறை எடுத்துக் கொண்டு என்னை மகிழ்ச்சி படுத்த அழைத்து சென்ற இடங்கள் நன்றாக இருந்தது.
   பேரனுக்கு அடுத்த மாதம் பள்ளி தொடக்கம்.


   //இந்த அன்பும். நட்பும் நமக்குள் என்றும் நீடித்திருக்க வேண்டுமெனவும் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். மிக்க நன்றி சகோதரி.//

   இறையருள் அதை நிறைவேற்றும் . நல்ல மனது பிரார்த்தனை பலிக்கும்.
   உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.


   நீக்கு
 11. துல்லியமான படங்கள்... அருமை... சிறப்பான தரிசனம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
   உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 12. இப்போ இருக்கும் உடல்நிலைக்கு இந்த மாதிரி இருந்த இடத்தில் இருந்தே தரிசனம் செய்து கொள்ள வேண்டும். இனி எங்கும் போக முடியுமா என்பது கேள்விக்குறி. எப்படியும் குலதெய்வம் கோயிலுக்கு இந்த ஆடி மாதத்தில் போகணும்! அம்பிகை மனசு வைக்கணும். எல்லா அம்மன்களையும் நன்கு கண் குளிர தரிசனம் செய்து கொண்டேன். மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
   அம்பிகை மனது வைப்பார். விரைவில் நலமாக குலதெய்வம் கோயிலுக்கு போய் வருவீர்கள். நம்பிக்கையோடு இருங்கள்.

   நீக்கு
 13. நானும் இரண்டு நாட்களாகச் சரியாக வராததால் நீங்கள் இணையத்தில் இல்லை என்பதே தெரியவில்லை. பயணம் சௌகரியமாக முடிந்திருக்கும் என நம்புகிறேன். விரைவில் உங்கள் பயண அனுபவங்களுக்குக் காத்திருக்கேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இறைவன் அருளால் பயணம் நல்லபடியாக இருந்தது.
   வழி எல்லாம் மழை. தங்கி இருந்த இடத்தில் ஆலங்கட்டி மழை . இயற்கையின் மாற்றங்களை கண்டேன். இடர்பாடுகளும் ஒரு அனுபவமாக இருந்தது.
   பயண அனுபவங்களை பகிரவேண்டும். உங்கள் காத்து இருப்புக்கு மகிழ்ச்சி.
   உடல் நலத்தைப்பார்த்துக் கொள்ளுங்கள். மனபலம் தான் உடல் பலத்தை தரும். மனதை சோர்வடைய விடாதீர்கள்.

   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 14. ஆடி வெள்ளி சிறப்புப் பதிவு நன்று. எல்லாம் வல்ல இறைவி அனைவருக்கும் நல்லதையே அருளட்டும்.

  படங்கள் சிறப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வெங்கட் நகாராஜ், வாழ்க வளமுடன்

   //எல்லாம் வல்ல இறைவி அனைவருக்கும் நல்லதையே அருளட்டும்.//
   அது தான் வேண்டும் வெங்கட்.

   படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

   நீக்கு