தோட்டத்திற்கு வந்த பறவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தோட்டத்திற்கு வந்த பறவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 19 ஜூலை, 2021

இன்று தோட்டத்திற்கு வந்த புதிய பறவை

இன்று காலை தோட்டத்திற்கு வந்த பறவை.
சிவப்பு நிறப்பறவை  அதன் பேர்" red  Cardinal bird "
முழு சிவப்பாக உள்ள பறவையும் இருக்கிறது. இது முகம்   மற்றும்  உடலில்  திட்டு திட்டாக சிவப்பு இருக்கிறது. 

தண்ணீரைப் பார்த்து நிற்கிறது

அரளிச் செடிக்கு பாத்தி மாதிரி கட்டி சொட்டு நீர் பாசன வசதி செய்து இருக்கிறான் மகன்.  பறவைக்கு  அது சாரல் மழை போல இருந்து இருக்கிறது. சிறிது நேரம் பார்த்துக் கொண்டு இருந்தது, பிறகு  நீர் அருந்தியது.  அப்புறம் ஆனந்தமாக சிறிது குளியல் போட்டது , பறந்து சென்றது.

கோடைக்கு ஏற்ற குளியல்  செய்யும் பறவை

சிறிய காணொளிதான் ஒரு நிமிடம் கூட இல்லை.  பார்த்து விட்டுச்சொல்லுங்கள், எப்படி இருக்கிறது என்று.
வாழ்க வையகம் ! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
--------------------------------------------------------------------------------------------------------