வெள்ளி, 31 அக்டோபர், 2025

ஹாலோவீன் கொண்டாட்டம்





வெளி நாட்டில் அக்டோபர் மாதம் கடைசி நாள் கொண்டாட படும் பண்டிகை  "ஹலோவீன்" புனிதர்" அல்லது "புனிதமானது" என்று பொருள்படும். "ஹாலோ என்பது  "அனைத்து புனிதர்களின் மாலை" என்று பொருள் முன்னோர்கள் வழிபாடாகவும் நடக்கிறது. 

போன வருடம் அரிசோனாவில் மகன் வீட்டில் இருந்த போது கொண்டாடிய ஹாலோவீன்  நானும், சம்பந்தி அவர்களும். இரண்டு பேருக்கும் கால் வலி இருந்தது அதனால்  மடக்கு நாற்காலி எடுத்து  வந்தார்கள் இந்த விழா நடக்கும் இடத்திற்கு.  மக்கள் எல்லாம் வித விதமாக  வேஷம் போட்டு வந்து இருந்தார்கள்.



பேரன் ஹலோவீன் உடை

பேரன் சென்ற ஆண்டு போட்ட  Bird doctor costume



                                                   சேவல் போல




2013 ஆம்  ஆண்டு போட்ட பதிவு :- இந்த பதிவில் எழுதிய விஷயங்களை கொஞ்சம் எடுத்து போட்டு இருக்கிறேன் படங்கள் அங்கு சென்று பார்கலாம் அந்த பதிவில் மேலும் சில  நினைவு பகிர்வுகள் சுட்டி இருக்கிறது நேரம் இருந்தால் படிக்கலாம்.


//நாங்கள்ஆலோவீன் கொண்டாட்டத்தை இந்த முறை மகனுடைய ஊரில் பார்க்கப் போகிறோம்.அக்டோபர் மாதம் கடைசிநாளன்று இது கொண்டாடப்படுகிறது. கிறித்தவ மதப்பெரியார்கள் ,தியாகிகள் மற்றும் இறைநம்பிக்கையாளர்களை வணங்கும் தினமாகச் சிலர் கருதுகிறார்கள். இந்நாளை ஆல் செயிண்ட்ஸ் டேயுடன் தொடர்பு படுத்திக்  கூறுகிறார்கள். (உலகெங்கிலும் உள்ள கிறித்தவர்கள் நவம்பர் ஒன்றாம் தேதி ஆல் செயின்ஸ்டேயும் மறுநாள் ஆல் சோல்ஸ்டேயும் கொண்டாடுகிறார்கள்)

(நியூஜெர்சி) ஊரே ஆலோவீன் கொண்டாட்டத்திற்கு தயார் ஆகிக்கொண்டு இருக்கிறது. ஆலோவீன் காஸ்டீயூம் கடைகள்,  புதிதாக விளைந்த பறங்கிகாய்கள், காய்ந்த சோளத்தட்டைகள், வைக்கோல்கள் விற்பனை என்று எங்கும் கடைகள். இலை தெரியாமல் அழகாய் சிவந்தி மலர்கள் தொட்டிகள்  எல்லாம் ஆலோவீனை வரவேற்கக் காத்து இருக்கிறது. ஒவ்வொரு வீடுகளிலும் மலர் தொட்டிகள் பறங்கி காய்களை வித விதமாய் அழகாய் அடுக்கி வைத்து இருக்கிறார்கள்.

ஆலோவீன் என்றால் என்ன என்று பார்த்தேன் விக்கிப்பீடியாவில். உங்களுக்கு தெரிந்திருக்கும் . அதுபற்றி  கொஞ்சம் கீழே கொடுத்து இருக்கிறேன்.//



//ஆலோவீன் (Halloween ) என்பது அக்டோபர் 31 அன்று கொண்டாடப்படும் ஒரு விடுமுறைக் கொண்டாட்டம் ஆகும். 

இப்போது  இது மதச்சார்பற்ற ஒரு கொண்டாட்டமாகவே திகழ்கிறது. இந்த நாளானது ஆரஞ்சு வண்ணத்துக்கும் மற்றும் கருமை நிறத்துக்கும் தொடர்புபட்ட நாளாகக் கருதப்படுகிறது.

மற்றவர்களை பயமுறுத்தி விளையாடுவது, பலவிதமான மாறுவேடங்கள் அணிவது, மாறுவேட விருந்துகளில் கலந்து கொள்வது, சொக்கப்பனை கொளுத்துவது, பயமுறுத்தும் கதைகளைப் படிப்பது, பயமுறுத்தும் படங்களைப் பார்ப்பது ஆகியவை இந்த கொண்டாட்ட நாளில் இடம்பெறும்.

சிறுவர் சிறுமியர் மாறுவேடமணிந்து வீடு வீடாகச் செல்வர். '"பரிசு தருகிறீர்களா அல்லது தந்திரம் செய்யட்டுமா" என்று கேட்பர். வீட்டில் இருப்பவர்கள் மிட்டாய் அல்லது வேறு ஏதேனும் பணம் கொடுத்து அனுப்புவார்கள்.

முன்னோர்களின் ஆவிகளுக்கு அவர்கள் மரியாதை செய்வதோடு தீங்கிழைக்கும் பிற ஆவிகளை துரத்துவதையும் மேற்கொள்கின்றனர். தீய ஆவிகளில் இருந்து தங்களைப் பாதுகாக்கும் அடையாளமாக தாங்களும் அது போன்ற முகமூடிகளையும் ஆடைகளையும் அந்நாளில் அணிந்து கொள்கின்றனர்.

ஆலோவீன் நாளில் பேய்க் கதைகளை சொல்வதும் திகிலூட்டும் படங்களைப் பார்ப்பதும் பொதுவானவைகளாக இருந்தன. பல பேய்ப் படங்கள் ஆலோவீன் விடுமுறை நாட்களுக்கு முன்பாக வெளியாகின்றன.//





முன்னோர்களை  வணங்கும் நாளாகவும் இருக்கிறது.
நம் நாட்டில் நடக்கும்  கல்லறைத் திருவிழா போல்.
முன்னோர்களுக்குப் பிடித்த உணவுகளும் செய்து வைத்து வணங்குகிறார்கள்.

மேற்கு நாடுகளில் கொண்டாடப்படும் (பேய்) இருள் விலக்கும் பண்டிகை.


தீயவை அழிந்து எங்கும் நல்லது நடக்கட்டும்.
இருள் விலகி ஓளி பரவட்டும்.




முதலில் இருப்பது நான் பயமுறுத்துவது சம்பந்தி


  மகனின் நண்பர் மகன்






வீட்டு வாசலில் பேரன்
மகன் வீட்டு வாசலில்
கவினுக்கு பிடித்த டைனோசர் வீட்டு வாசலில் வைக்கிறான்

பல உணர்ச்சிகளை காட்டும் பரங்கி காய்கள்

இரவு ஒளிரும் பறங்ககிகாய்கள்



மகன் வீட்டு வாசலில் வரும் குழந்தைகளுக்கு சாக்லேட்



வீட்டு வாசலில்  அலங்காரம்.



பேரன் தன் வீட்டு மரத்தில் அல்ங்காரம் செய்கிறான்




பெரிய சிலந்தி

போன வருட அலங்காரம்  மேலே உள்ளது எல்லாம். போன வருடம் பதிவு போட முடியவில்லை,  தீபாவளி, அடுத்து மருமகளின் அக்கா மகன் திருமணம் தாய்லாந்து பயணம்  போய் விட்டதால் பதிவு போட வில்லை.

கீழே வருவது இந்த வருட ப் படங்கள்.



இந்த வருடம் மருமகள் அவள் அலுவலகத்தில் செய்த ஹலோவீன் அலங்காரம். பேரன் படிக்கும்  ஹாரிபட்டர் புத்தகம் லெகோ ஹாரிபட்டர் காதாபாத்திரங்களை வைத்து மிரட்டி இருக்கிறாள்.








ஹாரி பாட்டர்  மிரட்டல் செய்து இருந்தாள் எல்லோரும்  பாராட்டினார்களாம் .

மருமகள் அம்மா, மருமகள், பேரன், மகன் இந்த வருட ஹாலோவீன்  அலங்காரம். 


  Red Demon

எல்லோரும் வேடமிட்டு இப்படி ஒரு இடத்தில் கூடுவார்கள் ஒரு விடுமுறை நாளில் அங்கு வாணவேடிக்கை எல்லாம் இருக்கும் போன வருடம் தீபாவளிக்கு முதல் நாள் ஊருக்கு  கிளம்ப வேண்டும் என்று வாணவேடிக்கை பார்க்க இருக்கவில்லை. இந்த தடவையும்  இவர்கள் வாணவேடிக்கைப்பார்க்கவில்லை..

 அப்புறம் 31ம் தேதியும் கொண்டாடுவார்கள்

                               

 

எங்கள் குடியிருப்பு வளாக குழந்தைகள் சனிக்கிழமை வந்தார்கள்.  நல்லவேளை தங்கைமகன்  வெளி நாட்டிலிருந்து தீபாவாளிக்கு வந்தவன் கொடுத்த சாக்லேட் இருந்தது அந்த குழந்தைகளுக்கு கொடுத்தேன், அவர்களுக்கு மகிழ்ச்சி. 


 எல்லோருக்கும் ஹாலோவீன் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் ! வாழ்க  வையகம்! வாழ்க வளமுடன்!
-----------------------------------------------------------------------------------------------------

18 கருத்துகள்:

  1. வினோத விழா..  அனைவரும் சேர்ந்திருக்கவும், மகிழ்ச்சியாக இருக்கவும் எத்தனை வழிகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //வினோத விழா.. அனைவரும் சேர்ந்திருக்கவும், மகிழ்ச்சியாக இருக்கவும் எத்தனை வழிகள்...//

      இப்போது நம்மூரிலும் ஹாலோவீன் வந்து விட்டது ஸ்ரீராம்.
      மக்களுக்கு மகிழ்ச்சியாக இருக்க ஒரு காரணம் வேண்டும்.
      நம்மூரில் அழகர் திருவிழா, மீனாட்சி திருவிழாவில் பல விதமாக வேஷம் போட்டு மக்கள் வருகிறார்கள். அம்மன் திருவிழாவில் வேஷமிட்டு வருவார்கள் பச்சைக்குத்திக் கொண்டு வித விதமாக ஆடை அணிந்து வருகிறார்கள்.

      நீக்கு
  2. கவினின் கற்பனைத் திறன்தான் நாம் அறிவோம்...  கவினுக்கென்றே அங்கு வாய்ப்புகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன.  கவின் அப்பாவும் சளைத்தவரில்லை என்பதையும், அப்பாவிடமிருந்துதான் மகனுக்கு ஜீன் வந்திருக்கிறது என்பதையும் மகனின் படமும் சொல்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கவினின் கற்பனைத் திறன்தான் நாம் அறிவோம்... கவினுக்கென்றே அங்கு வாய்ப்புகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன.//
      ஆமாம், அவனுக்கு அவன் கற்பனை தீரனை காட்ட வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருக்கிறது நீங்கள் சொல்வது போல.

      //கவின் அப்பாவும் சளைத்தவரில்லை என்பதையும், அப்பாவிடமிருந்துதான் மகனுக்கு ஜீன் வந்திருக்கிறது என்பதையும் மகனின் படமும் சொல்கிறது!//

      அவனும் அடுத்த ஆண்டு என்ன வேடம் அணியலாம் என்று யோசிப்பான், நண்பர்களையும் ஊக்கப்படுத்துவான். மருமகளும் அப்படியே அவளுக்கும் ஆர்வம் அதிகம்.

      நீக்கு
  3. ஹல்க்காக வேடமிட்ட சிறுவன் அந்த முகமூடியை நீக்கியதும் அவனின் அழகான குழந்தை முகம் வெளிப்படுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஹல்க்காக வேடமிட்ட சிறுவன் அந்த முகமூடியை நீக்கியதும் அவனின் அழகான குழந்தை முகம் வெளிப்படுகிறது.//

      ஆமாம், அவன் அழகு குழந்தை, மிக திறமையான அன்பான, பாசமான சுட்டிப்பையன். அவன் அப்பா, அம்மாவுக்கு மதுரை சொந்த ஊர்.

      நீக்கு
  4. ​நீங்களும் உங்கள் சம்பந்தியும் அமர்ந்திருக்கும் படம் ஜோர். உங்கள் கண்களை அடையாளம் தெரிகிறதா என்று ஜூம் செய்து பார்த்தேன்! சம்பந்தி நன்றாகவே பயமுறுத்துகிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​//நீங்களும் உங்கள் சம்பந்தியும் அமர்ந்திருக்கும் படம் ஜோர். //

      நன்றி.

      //உங்கள் கண்களை அடையாளம் தெரிகிறதா என்று ஜூம் செய்து பார்த்தேன்! சம்பந்தி நன்றாகவே பயமுறுத்துகிறார்.//

      தெரிந்து இருக்காதே! ஆமாம் நன்றாக பயமுறுத்துகிறார்.
      உங்கள் கருத்துக்கள் அனைத்துக்கும் நன்றி.

      நீக்கு
  5. ​ஹாலோவீன் கொண்டாட்டம் படங்களும் விவரங்களும் நன்றாக உள்ளன. நம்ம ஊரிலும் ஹாலோவீன் கொண்டாட்டம் என்பது ஆச்சர்யம்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகரன் , வாழ்க வளமுடன்

      //ஹாலோவீன் கொண்டாட்டம் படங்களும் விவரங்களும் நன்றாக உள்ளன. நம்ம ஊரிலும் ஹாலோவீன் கொண்டாட்டம் என்பது ஆச்சர்யம்.//

      ஆமாம், இங்கு எங்கள் வளாகத்தில் ஒவ்வொரு வருடமும் சின்ன குழந்தைகள் வருகிறார்கள் அவர்கள் பெரியவர்கள் ஆனதும் வருவது இல்லை.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  6. அக்கா நீங்கள் இருவரும் இருக்கும் படம் நல்லாருக்கு. உங்களைக் கண்டுபிடிக்க முடிந்தது.

    கவின் வேஷமும் நல்லாருக்கு.

    ஆமாம் இச்சமயம் அங்கு பூஷணிக்காய்கள் நிறைய விளையும். அவங்களும் பம்ப்கின் பட்டர் என்று வருடத்துக்கானதை தயார் பண்ணி வைச்சுக்குவாங்க.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்

      //அக்கா நீங்கள் இருவரும் இருக்கும் படம் நல்லாருக்கு. உங்களைக் கண்டுபிடிக்க முடிந்தது.//

      ஓ ! கண்டு பிடித்து விட்டீர்களா?

      //கவின் வேஷமும் நல்லாருக்கு.//

      ஆமாம்.

      //ஆமாம் இச்சமயம் அங்கு பூஷணிக்காய்கள் நிறைய விளையும். அவங்களும் பம்ப்கின் பட்டர் என்று வருடத்துக்கானதை தயார் பண்ணி வைச்சுக்குவாங்க.//

      ஆமாம், இது பூஷணிக்காய் அதிகம் விளையும் காலம். அதில் நிறைய உணவு வகைகள் செய்வார்கள் தான்.

      நீக்கு
  7. நீங்களும் சம்பந்தி மாமியும் இருக்கும் இரண்டாவது படத்தைப் பார்க்கும் முன்னரே உங்களைத் தெரிந்துவிட்டதே!!!!!

    //பயமுறுத்துவது சம்பந்தி//

    ஆ!!!! ஆ!!!!! அக்கா இந்த வரி சிம்பாலிக்காக இருக்கே!!!!!!!!!!!!!!!!!!! சும்மா தமாஷ் பண்ணறேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நீங்களும் சம்பந்தி மாமியும் இருக்கும் இரண்டாவது படத்தைப் பார்க்கும் முன்னரே உங்களைத் தெரிந்துவிட்டதே!!!!!

      //பயமுறுத்துவது சம்பந்தி//

      ஆ!!!! ஆ!!!!! அக்கா இந்த வரி சிம்பாலிக்காக இருக்கே!!!!!!!!!!!!!!!!!!! சும்மா தமாஷ் பண்ணறேன்...//

      நீங்கள் விளையாட்டாக சொல்வது புரிகிறது.

      நீக்கு
  8. முன்பு நீங்க அங்கு வீட்டு வாசலில் வைத்திருந்த ஹாலோவீன் பொம்மைகள் பற்றிச் சொல்லியிருந்ததும் படங்கள் போட்டதும் நினைவு இருக்கு. ஒரு முறை கடைக்குப் போனப்ப எடுத்ததையும் பகிர்ந்த நினைவு இருக்கு.

    ந்த வருடம் மருமகள் அவள் அலுவலகத்தில் செய்த ஹலோவீன் அலங்காரம். //

    சூப்பரா பண்ணிருக்காங்க!!

    உங்கள் மகன் அலங்காரம், பேரன் அலங்காரம், மருமகள் அவங்க தேவதை மாதிரி போட்டிருக்காங்க!! அவங்க அம்மா இருக்கும் படம் எல்லாமே சூப்பர்.

    உங்கள் வளாகத்திலும் குழந்தைகள் இதைக் கொண்டாடுகிறார்களா...நீங்க சாக்லேட் கொடுத்தது அவங்களுக்கும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் ...உங்களுக்கும்.

    இங்கும் பல இடங்களில் குழந்தைகள் இப்படிக்கொண்டாடத் தொடங்கிருக்காங்க.

    எங்கள் ஏரியாவில் யாரும் கொண்டாடவில்லை இதுவரை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //முன்பு நீங்க அங்கு வீட்டு வாசலில் வைத்திருந்த ஹாலோவீன் பொம்மைகள் பற்றிச் சொல்லியிருந்ததும் படங்கள் போட்டதும் நினைவு இருக்கு. ஒரு முறை கடைக்குப் போனப்ப எடுத்ததையும் பகிர்ந்த நினைவு இருக்கு.//

      முதல் பதிவு நியூஜெர்சியில் இருந்த போது கொண்டாடிய ஹாலோவீன் பண்டிகை


      //இந்த வருடம் மருமகள் அவள் அலுவலகத்தில் செய்த ஹலோவீன் அலங்காரம். //

      சூப்பரா பண்ணிருக்காங்க!!//

      நன்றி.

      //உங்கள் மகன் அலங்காரம், பேரன் அலங்காரம், மருமகள் அவங்க தேவதை மாதிரி போட்டிருக்காங்க!! அவங்க அம்மா இருக்கும் படம் எல்லாமே சூப்பர்.//

      மருமகள் எகிப்த் ராணி வேடம்

      //உங்கள் வளாகத்திலும் குழந்தைகள் இதைக் கொண்டாடுகிறார்களா...நீங்க சாக்லேட் கொடுத்தது அவங்களுக்கும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் ...உங்களுக்கும்.//

      நான் எப்போதும் நினைவாக வாங்கி வைப்பேன் இந்த முறை மறந்தே போய் விட்டேன் அவர்கள் ஓஉவாரம் முன்பாக வேறு வந்து விட்டார்கள்.

      //இங்கும் பல இடங்களில் குழந்தைகள் இப்படிக்கொண்டாடத் தொடங்கிருக்காங்க.

      எங்கள் ஏரியாவில் யாரும் கொண்டாடவில்லை இதுவரை.//

      ராமலக்ஷ்மி முன்பு இருந்த இடத்தில் வருவதாக சொன்னார்கள்.

      உங்கள் கருத்துக்கள் அனைத்துக்கும் நன்றி கீதா

      நீக்கு
  9. ஹலோவின் படங்கள் எல்லாம் நன்றாக உள்ளன.
    நீங்கள், சம்பந்தி , மகன், பேரன் மருமகள் அனைவரின் ஹலோவின் உடைகள் அசத்தல்.

    பேரன் அழகுபடுத்துவது நன்றாக உள்ளது. பெரிய ஸ்பைடர் பயமுறுத்துகிறது.

    மருமகளின் ஹரி பாட்டர் பாராட்டுக்கள்.

    நாளை இங்கு எமது பேரனின் தனியார் வகுப்பில் , ஹலோவின் கொண்டாட்டம் இருக்கிறது . பேரன் vampire prince உடுப்பு போட வாங்கி வைத்திருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்

      //ஹலோவின் படங்கள் எல்லாம் நன்றாக உள்ளன.
      நீங்கள், சம்பந்தி , மகன், பேரன் மருமகள் அனைவரின் ஹலோவின் உடைகள் அசத்தல்.//

      நன்றி மாதேவி

      //பேரன் அழகுபடுத்துவது நன்றாக உள்ளது. பெரிய ஸ்பைடர் பயமுறுத்துகிறது.

      மருமகளின் ஹரி பாட்டர் பாராட்டுக்கள்.//

      உங்கள் பாராட்டுக்கு நன்றி

      //நாளை இங்கு எமது பேரனின் தனியார் வகுப்பில் , ஹலோவின் கொண்டாட்டம் இருக்கிறது . பேரன் vampire prince உடுப்பு போட வாங்கி வைத்திருக்கிறார்.//

      உங்கள் பேரன் உடுப்பு நன்றாக இருக்கும். வாழ்த்துக்கள்.

      உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி மாதேவி.

      நீக்கு