ஞாயிறு, 20 ஜனவரி, 2013

கழுகுமலை


என் கணவர் சிறு வயதில் பள்ளி விடுமுறையின்போது  தன் சித்தப்பா  வசித்த
கழுகுமலைக்கு அடிக்கடி போவார்களாம்.  அங்குள்ள வெட்டுவான் கோவிலுக்கு சித்தப்பாவின் மகன்களுடன் போவார்களாம். கல்லூரி ஆசிரியரான பிறகு மாணவர்களை அழைத்துக்கொண்டு அங்கு சுற்றுலா போயிருக்கிறார்கள்.  எப்போதும் எங்களிடம் அந்த கோவிலைப்பற்றி சொல்லி எங்களுக்கும்  கழுகுமலையைப் பார்க்கும் ஆசையை  ஏற்படுத்திவிட்டார்கள்.

இந்தமுறை என் மகன் அதற்கும் பயணத்திட்டம் வகுத்து இருந்தார்.  நாங்கள் அங்கு போனோம்.

திருநெல்வேலி  அருகே உள்ள கோவில்பட்டியிலிருந்து  சங்கரன் கோவிலுக்குச் செல்லும் வழியில் இருபது கி.மீ தூரத்தில் இவ்வூர் உள்ளது.

கழுகுமலையில் முக்கியமாகப் பார்க்கவேண்டியவை

1. அருள்மிகு கழுகாசலமூர்த்தி  திருக்கோயில்
2.வெட்டுவான் கோயில் என்று கூறப்படும் குடைவரைக் கோயில்
3.சமணதீர்த்தங்கரர்களின் சிற்பங்கள்,சமணர் கல்வெட்டுக்கள்

 வெட்டுவான் கோயில் கி.பி எட்டாம் நூற்றாண்டிலிருந்து 9ஆம்
நூற்றாண்டுக்குள் வெட்டப்பட்ட இந்து கோயிலாகும். மகாபலிபுரம் போல
பாறையைக்  குடைந்து செய்யப்பட்ட குடைவரை கோவிலாகும். இது மலைமீது உள்ளது. இப்போது  தொல்லியல் துறையின் பாதுகாப்பின் கீழ் உள்ளது.

 முதலில் இதைப் பார்க்கப் படிகள் ஏறிப் போய் விட்டோம். அங்கு வேலி போட்டு பூட்டுபோட்டு பூட்டி இருந்தார்கள்.  ஏமாற்றத்துடன் தூரத்தில் இருந்தே பார்த்தோம். சில பள்ளிச் சிறுவர்கள் மலை மீது ,ஊசி வெடி வெடித்துக் கொண்டு இருந்தார்கள்.சில  சிறுவர்கள் கம்பி வேலியின் அடிவழியாகப் படுத்துக்கொண்டே உள்ளே போய் சாதனை புரிந்த மாதிரி பார்த்து வந்தார்கள்.வெட்டுவான் கோயில்- தூரப்பார்வையில்
 பாதுகாப்பற்ற பழைய இறங்கும் வழி

வெட்டுவான் கோவில் - ஓவியம் :- என் கணவர்.

நாங்கள் சற்றுமேலே உள்ள மலையில் செதுக்கப்பட்ட சமணர் உருவச்சிலைகளைப் பார்க்கப் போனோம்.

கழுகுமலைப் பாறைகளில் சமணதீர்த்தங்கரரின் உருவச்சிலைகள் வெட்டப்பட்டுள்ளன.


தீர்த்தங்கரர்கள்


தலைக்கு மேற்பகுதியில் குடைகளுடன் தீர்த்தங்கரர்கள்  பத்மாசனத்தில் வீற்றிருக்கும் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் உள்ளன.
  பார்ஸ்வநாதர் ,  கோமடேஸ்வரர், பத்மாவதி, அம்பிகா  ஆகியோருக்கு சிலைகள் வடிக்கப்பட்டுள்ளன. 
                                                        கோமடேஸ்வரர்

பழங்காலத் தமிழ்க் கல்வெட்டுக்கள் இங்கு  காணப்படுகின்றன சமண முனிவர்கள் பயன்படுத்திய கல் படுக்கைகள் இங்கு உள்ளன  

உள்ளே கல் படுக்கைகள்

சமணர் குகைக்குச்செல்லும்வழி
அதன் அருகில் ஒரு அம்மன்  கோவிலும், சாஸ்தா கோவிலும் உள்ளன.சுவாமிக்கு முன்பு யானை வாகனச்சிலை உள்ளது, பெரிய உருவத்துடன்  கதாயுதத்தை வைத்துக் கொண்டு ஒரு உருவச்சிலை உள்ளது. குதிரையில் சாஸ்தா உட்கார்ந்து இருப்பது போல்  உருவச்சிலை உள்ளது. உள்ளூரில் சபரிமலைக்கு மாலை போட்டிருந்த ஒருவர் தன் இரு குழந்தைகளுடன் வந்து சூடம் ஏற்றி கும்பிட்டார்,

அக்கோயிலின் அருகே கொஞ்சநேரம் உட்கார்ந்திருந்தோம். இந்த இடத்திற்கு மேலே மலை உச்சிக்குப் போகும் வழி உள்ளது. மலைக் குன்றின் உச்சியில் சிறிய பிள்ளையார் கோவில் உள்ளது.,

இதற்கு என் கணவரும் மகனும் மட்டும் போய் வந்தார்கள். உச்சிக்கு செல்ல படிக்கட்டுக்கள் சில இடங்களில் கட்டி இருக்கிறார்களாம்,  சில இடங்களில் பாறைகளில் வெட்டப்பட்டு  உள்ளனவாம்.  சில இடங்களில் பாதை வழுக்குப் பாறையாக இருக்குமாம்,

மலைவழி


உச்சிப்பிள்ளையார்

உச்சிக் கோவிலுக்கு நாள்தோறும் வழிபாடு இருப்பது போல் தெரியவில்லையாம் .வழியில் குரங்குகள் நிறைய இருக்கின்றனவாம். எங்களை வேண்டாம் என்று சொல்லிவிட்டு என் கணவ்ரும், மகனும் மட்டும் போனதால் அவர்கள் வரும் வரை நானும் என் பேரனும் சமையல் சாமான்கள் வைத்து சமைத்து சாப்பிடும் விளையாட்டு விளையாடினோம். அவர் பருப்பு சாதம், தோசை, சப்பாத்தி  செய்து கொடுத்தார். மிக்ஸியில் ஜூஸ் போட்டு கொடுத்தார்.  நான் சஷ்டி விரதம் இருந்தாலும் குழந்தை கற்பனையில் செய்து தந்த உணவை வேண்டாம் என்று சொல்லமுடியவில்லை. ரசித்து உண்டேன். காற்று சுகமாய் வீசியது. அருமையான இயற்கை சூழல். எல்லாம் மனதுக்கு  மிக  மிக ரம்மியமாக இருந்தது.பாறை நிற்கும் அழகை பார்த்தால் அதை தள்ளி உருட்டி விளையாட எண்ணம் வரும்.    தள்ள முயற்சிப்பது -- மருமகளும், மகனும்.


வெட்டுவான் கோவிலை பார்க்க முடியாத வருத்ததோடு இறங்கினோம்.
 அப்போது கீழே இருக்கும் சுற்றுலாப் பூங்காவைப்  பார்த்துக் கொள்ளும் பணியாளரிடம் ‘பூட்டி இருக்கிறதே’ என்று கேட்ட போது, அவர் தொல்லியல் துறை வழிகாட்டியின்  செல் நம்பரைக்  கொடுத்து உதவினார் .அவருக்கு போன் செய்தபோது  அவர்  பஸ்ஸில் வந்து கொண்டு இருப்பதாய் சொன்னார்.

அவர் வரும் வரை நான் பேரனை   அழைத்துக் கொண்டு அங்குள்ள குழந்தைகள் பூங்காவில் விளையாடினேன். சீ-ஸா  பலகையில் உள்ளூர் குழந்தையும் பேரனும் விளையாடினார்கள்.அந்தப்பக்கம்  அந்தக் குழந்தையின் அருகில் அதன்அப்பாவும், இந்தப்பக்கம்பேரனுக்கு  அருகில் நானும் இருந்து கைகளால் பலகையை அழுத்தி அவர்கள் விளையாட உதவினோம். இரண்டு குழந்தைகளும் ரசித்து சிரித்து விளையாடினார்கள்.பின் தொல்லியல் துறை வழிகாட்டி வந்தார், மீண்டும் படிகளில் ஏறி வெட்டுவான் கோவிலுக்குச் சென்றோம்.

இந்த இடத்திற்கு செல்வதற்கு புதிதாக படிகள் வெட்டப்பட்டுள்ளன.
படிகளுக்கு கைப்பிடிக் கம்பிகள் வைத்து இருக்கிறார்கள். முன்பு இங்கு
செல்வதற்கு வழி  ஆபத்துக்குரியதாக இருந்ததாம்.

நேரே இருந்து தோற்றம்


குடைவரைக்கோயில் பிள்ளையார்

 கோவிலிலின் உள்ளே . ஒரு விநாயகர் சிலை இருக்கிறது.  முன்பு அந்த இடத்தில் சிவலிங்கம் இருந்தாகக் கூறுகிறார்கள். கோவிலின் விமானத்தில் அழகிய சிற்பங்கள் காணப்படுகின்றன. கோவிலை சுற்றி வந்தால் சிற்பங்கள் காணலாம். கோவிலின் உள்ளே இருந்த பிள்ளையாருக்கு, வழிகாட்டி பூஜை செய்து காண்பித்தார்.

சிவன் மான், மழு தாங்கிய தோற்றம்.


விமானம்

வழிகாட்டியுடன்
குன்றின் அடிவாரத்தில் ஒரு ஊருணி இருக்கிறது.

ஊருணி


மலையின் தென்புறத்தை ஒட்டி அருள்மிகு கழுகாசல மூர்த்தி (முருகன்)  திருக்கோவில் உள்ளது. அருணகிரி நாதர் இத்தலத்து முருகன் மேல் திருப்புகழ் பாடி இருக்கிறார். கழுகாசல மூர்த்தி விபூதி  அலங்காரத்தில்  சிரித்தமுகத்தோடு காட்சி அளித்தார். முருகனுக்கு நேரே நிறைய  பெண்கள் அமர்ந்து திருப்புகழ், கந்தசஷ்டி கவசம் எல்லாம் பாடிக் கொண்டு இருந்தார்கள்..நாங்கள் அங்கு சென்ற அன்று கந்தசஷ்டியின் 5ஆம் நாள். அங்கு 6 நாளும் சூரசம்காரம் நடைபெறுமாம்.  காகிதம், மூங்கில் கொண்டு செய்த -சூரர்கள் போல்  தோற்றம் கொண்ட கவசத்துக்குள்  மனிதர்கள் இருந்தார்கள்.
நான்கு சூரர்கள் இருந்தார்கள் அவர்கள் கைகளில் ஆயுதங்கள் இருந்தன.அங்கு திரண்டு இருந்த மக்கள் எங்களை சம்காரம் பார்த்து விட்டுப் போங்கள் என்றார்கள் .நாங்கள் இரவுக்குள்  மதுரை போக வேண்டும் என்பதால் அதைப்
பார்க்க முடியவில்லை. திருவிழாவுக்கு கடைகள் நிறைய போட்டு இருந்தார்கள்.

இளநீர் வாங்கி குடித்து விட்டு அங்கிருந்து கிளம்பினோம்.

என் மகன் , மருமகள் இருவரும் காமிராவில் ஆசை தீர படங்கள் எடுத்தார்கள். அவ்வளவையும் இங்கு பகிர்ந்து கொள்ள ஆசைதான். . ஆனால் பதிவு நீண்டு விடும்.
கல்வெட்டு, கோமடேஸ்வரர், சமணகல்படுக்கை,  சாஸ்தா கோவில் உச்சிபிள்ளையார் , சீசா-பலகை படங்கள் எல்லாம் என் கணவர் செல்லில் எடுத்தது.

 கழுகுமலை ! பார்க்க வேண்டிய இடம் .

                                                       _________________________

50 கருத்துகள்:

 1. நிச்சயம் பார்க்கவேண்டிய கோவில்தான்
  படங்களுடன் விளக்கங்களும் அருமை
  பகிர்வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. வெட்டுவான் கோவில் - ஓவியம் :-
  கவனத்தை வெகுவாக ஈர்த்தது ..

  பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 3. நான் சஷ்டி விரதம் இருந்தாலும் குழந்தை கற்பனையில் செய்து தந்த உணவை வேண்டாம் என்று சொல்லமுடியவில்லை. ரசித்து உண்டேன். காற்று சுகமாய் வீசியது. அருமையான இயற்கை சூழல். எல்லாம் மனதுக்கு மிக மிக ரம்மியமாக இருந்தது.

  ரம்மியமான சூழல் நிறைவளித்தது ..

  வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 4. நிச்சயம் பார்க்க வேண்டிய கோவில். தமிழகத்தினுள்ளேயே எத்தனை எத்தனை இடங்கள் பார்க்க இருக்கின்றன..... இந்த ஒரு ஜன்மா போதாது..... அடுத்த முறை திருநெல்வேலி பக்கம் தான் செல்ல இருக்கிறேன். அப்போது செல்ல முயல்கிறேன்....

  த.ம. 2

  பதிலளிநீக்கு
 5. கழுகுமலையைப்பற்றி பயனுள்ள பல தகவல்கள். படங்கள் எல்லாமே மிகச் சிறப்பாகக் கொடுத்துள்ளீர்கள்.

  பாறைகள், கல்வெட்டுக்கள், சிற்பங்கள் என எல்லாமே நல்லாயிருக்கு.

  தங்கள் கணவர் வரைந்ததோ! அந்த கார்டூன் படமும் சூப்பர். அதிலும் அனிமேஷன் கொடுத்து அசைத்தியுள்ளாரே! சபாஷ்.

  பதிலளிநீக்கு
 6. வாங்க ரமணி சார், வாழ்கவளமுடன்.
  உங்கள் பாராட்டுக்கும், வாழ்த்துக்களுக்கும் தமிழ்மண ஓட்டுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 7. வாங்க இராஜராஜேஸ்வரி, வாழ்கவளமுடன்.
  வெட்டுவான் கோவில் ஓவியத்தை ரசித்து பாராட்டியதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 8. இராஜராஜேஸ்வரி, பேரனுடன் விளையாடியதை ரசித்து அதற்கு கருத்து கூறியதற்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 9. வாங்க கவியாழி கண்ணதாசன்,வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 10. அன்பு கோமதி, உங்கள் பதிவே ரம்யமாக இருக்கிறது.பல்கலைகழகமான குடும்பம். இத்தனை அன்பு மிக அம்மாவைப் பெற்ற மகன் புண்ணியம் செய்தவர். தங்கள் கணவரின் ஓவியம் வெகு அழகு. திற்க்க வில்லை என்று விட்டுப் போகாமல் சாவி கொண்டுவரச் சொல்லிப் பார்த்த பொறுமை அற்புதம்
  படங்கள் செல்லில் எடுத்ததா. மிக அருமை நீங்கள் போவதால் புண்ணிய ஸ்தலங்கள் எங்கள் மனத்திலும் உட்கார்ந்து கொண்டன.
  மிக நன்றி கோமதி.

  பதிலளிநீக்கு
 11. வாங்க வெங்கட், வாழ்கவளமுடன். நீங்கள் சொல்வது சரிதான். பார்க்க வேண்டிய கோவில்கள் பார்க்க
  இந்த ஒரு ஜன்மா போதாதுதான். அவ்வளவு இருக்கிறது. திருநெல்வேலிக்கு போகும் போது பார்த்து வாருங்கள்.
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும், தமிழ்மண ஓட்டுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 12. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்கவளமுடன்.
  கழுகுமலை படங்கள், செய்திகளை ரசித்தமைக்கு நன்றி.
  கணவர் வரைந்த ஓவியத்தை பாராட்டியதற்கு நன்றி. என் கணவர் தான் வரைந்த ஓவியத்தையும் அனிமேஷனையும் ரசித்து கருத்து சொன்னதற்கு தங்களுக்கு நன்றிகளை கூறச்சொன்னார்.
  உங்கள் பாராட்டு அவர்களை மேலும் வரைய தூண்டி உள்ளது. அதற்கு நான் உங்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 13. வாங்க வல்லி அக்கா, வாழ்கவளமுடன்.
  அன்பான குடும்பத்தை தந்த இறைவனுக்கு நன்றி. உங்கள் ஆசிர்வாதங்களுக்கு நன்றி.
  கணவரின் ஓவியத்தை பாராட்டியதற்கு நன்றி.
  அவ்வளவு தூரம் போய் விட்டு பார்க்காமல் திரும்பிவர மனது இல்லை. மகனுக்கும் இப்படி வரலாற்று சிறப்பு நிறைந்த இடங்களை பார்க்கும் ஆவல் அதனால் காத்து இருந்து பார்த்து வந்தோம். கோவிலும் சஷ்டி என்பதால் அடைக்கவில்லை.
  அதனால் முருகனையும் தரிசிக்க முடிந்தது.

  சிலபடங்கள் தான் செல்லில் எடுத்தது மற்றவை எல்லாம் என் மகன், மருமகள் தங்கள் காமிராவில் எடுத்த படங்கள்.

  பதிலளிநீக்கு
 14. கதையை வைத்துக் கொண்டு நிற்கும் சிலையின் பின்னால் நிற்பது தான் 'திருமதி' யா?

  சமயம் கிடைக்கும்போதெல்லாம் பேரனுடன் விளையாட போய் விடுவீர்கள் போலிருக்கிறதே, என்னைபோல!
  பேரன் வந்துவிட்டால் எனக்கும் அவனுக்குமான தனி உலகத்திற்குள் போய் விடுவோம் நாங்கள் இருவரும்.


  வெட்டுவான் கோயில் பூட்டியிருந்தது என்று நீங்கள் எழுதியதைப் படித்தவுடன் எங்கே தரிசனம் செய்யாமல் வந்து விட்டீர்களோ என்று நினைத்தேன். எங்களுக்கும் தரிசனம் கிடைக்காதே! நல்லவேளை எல்லோருக்கும் தரிசனம் கிடைத்தது.

  கட்டாயமாக பார்த்து ரசிக்க வேண்டிய இடம் கழுகு மலை.

  கூட்டிப் போனதற்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 15. இன்று தைகிருத்திகை கழுகாச்சலமூர்த்தி பகிர்வு நிறைவைத்தந்தது மிகவும் நன்றிஅம்மா . குழந்தையுடன் நாமும் குழந்தையாய் மாறும் தருணம் இனிமை.

  பதிலளிநீக்கு
 16. அழகிய வேலைப்பாடுகள் நிரம்பிய கோவில் இயற்கை அழகு கொட்டிக்கிடக்கிறது மன அமைதி தரும் இடம் படங்கள் வெகுவாக கவர்ந்தது.

  பதிலளிநீக்கு
 17. வாங்க ரஞ்சினி, வாழ்கவளமுடன்.
  கதையை வைத்துக் கொண்டு நிற்கும் சிலையின் பின்னால் நிற்பது தான் 'திருமதி' யா?//
  ஆமாம்.
  சமயம் கிடைக்கும்போதெல்லாம் பேரனுடன் விளையாட போய் விடுவீர்கள் போலிருக்கிறதே, //

  இவையெல்லாம் பேரன் வந்து இருந்த போது, அவர்கள் வரும் நேரம் கிடைக்கும் பொழுதை சிக்கெனப்பிடித்துக் கொண்டு பேரனுடன் விளையாடுவேன்.
  வெட்டுவான் கோவிலுக்கு என் கூட வந்து தரிசனம் செய்தமைக்கு நன்றி ரஞ்சனி.

  பதிலளிநீக்கு
 18. வாங்க இந்திரா , வாழ்கவளமுடன். தைக்கிருத்திகை கழுகாச்சலமூர்த்தி தரிசனம் கிடைத்து விட்டதா! மகிழ்ச்சி.
  நீங்கள் சொல்வது போல் குழந்தைகளுடன் நாமும் குழந்தையாக மாறும் தருண இனிமை தான்.
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் மிகவும் நன்றி.

  பதிலளிநீக்கு
 19. வாங்க சசிக்கலா, வாழ்கவளமுடன்.
  வெகு நாட்களாய் உங்களை பார்க்க முடியவில்லையே! கவிதை புத்தகம் வெளியீட்டு விழா சிறப்பாக நடந்ததா?
  நீங்கள் சொல்வது போல் இயற்கை அழகு கொட்டிக் கிடக்கிறது. நிச்சயம் மன அமைதி தரும் உண்மை. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 20. அழகான பகிர்வும்மா. கழுகுமலையை பார்க்கும் ஆவலை தூண்டி விட்டது தங்கள் பதிவு. ஐயா வரைந்த ஓவியம் பிரமாதமாக உள்ளது. புகைப்படங்களும் அருமை.

  பேரனுடன் சமையல் விளையாட்டு விளையாடியது சூப்பர்மா. எத்தனை தாத்தா, பாட்டிகளுக்கு இப்படி விளையாட பொறுமை இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 21. வாங்க ஆதி, வாழ்கவளமுடன். கழுகுமலையை ரசித்தீர்களா வெங்கட் அடுத்த்முறை திருநெல்வேலி போகும் போது அங்கு போக முயற்சிப்பதாய் சொல்லி இருக்கிறார்கள். சென்று வாருங்கள் ரோஷிணி ரசிப்பாள்.
  சார் வரைந்த படத்தையும், புகைபடங்களையும் பாராட்டியதற்கு நன்றி.

  பேரன் விளையாட்டில் ஈடுபாடு இல்லாதவர்களையும் இழுத்து விளையாட வைத்து விடுவான்.
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி ஆதி.

  பதிலளிநீக்கு
 22. நான் திருநெல்வேலிக்கே ஒரு முறை தான் வந்துள்ளேன். அங்கிருக்கும் பல கோவிலக்ளுக்குப் போக வேண்டும் என்று ஆவல் . எபபோது முடியுமோ தெரியவில்லை.நீங்கள் பதிவு செய்திருக்கும் கழுகு மலையும் இப்பொழுது அந்த லிஸ்டில் சேர்ந்தது.

  அழகான போட்டோக்களுடன் அருமையான பதிவு.

  உங்கள் கணவர் வரைந்த ஓவியம் மிகவும் அழகு வரைந்திருக்கிறார்.
  அந்த பட்டாம் பூச்சிகள் பட பட என்று பறப்பது பேரழகு.

  பகிர்விற்கு நன்றி.

  ராஜி  பதிலளிநீக்கு
 23. மிக அருமையான பகிர்வு. அழகான சிற்பங்கள். படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளன. ஓவியம் அற்புதம். இனி ஒவ்வொரு பதிவிலும் எதிர்பார்க்கிறோம்:)! (சென்ற பதிவின் பின்னூட்டத்தில் சொல்லியிருந்தீர்களே).

  பதிலளிநீக்கு
 24. அழகிய மலைக்கோயில் கண்டு தர்சிக்கக் கிடைத்தது. சிற்பங்களும் அழகு.

  காகித சூரர்கள் வித்தியாசமாக இருக்கின்றார்கள்.

  உங்கள் பயணத்தில் நாங்களும் பல இடங்களைக் கண்டு மகிழ்கின்றோம். மிக்கநன்றி.

  பதிலளிநீக்கு
 25. அருமையான சுற்றுலாத்தலம் பற்றிய அழகான பதிவு! நன்றி!

  பதிலளிநீக்கு

 26. அந்தக் காலத்தில் நாம் நினைத்துப் பார்க்க முடியாத இடங்களில் எல்லாம் கோயில்கள், சிற்பங்கள். இதற்கான உந்துசக்திதான் எது,?என்னதான் சொன்னாலும் நம்பிக்கையே அவர்களை இயக்கி இருக்க வேண்டும்.புதுக்கோட்டைக்கு அருகில் ஓவியங்களுடனும் கல் படுக்கைகளுடனும் சிற்பங்களுடனும்
  ஒரு இடம் பார்த்திருக்கிறேன். பெயர் நினைவுக்கு வரவில்லை. வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 27. வாங்க ராஜி, வாழ்கவளமுடன். திருநெல்வேலியில் நிறைய கோவில்கள் இருக்கின்றன. ஒவ்வொரு முறையும் போகும் போது கொஞ்சம் கொஞ்சமாய் பார்க்கிறோம்.
  நீங்களும் முடிந்த போது பார்த்து வாருங்கள்.

  போட்டோக்களையும், என் கணவரின் ஓவியத்தை பாராட்டியதற்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 28. G.M.B ஐயா,

  புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள இடம் சித்தன்னவாசல் என்று நினைக்கிறேன். சென்றது இல்லை. கேள்விப்பட்டிருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 29. வாங்க ராமலக்ஷ்மி, வாழ்கவளமுடன். பகிர்வு, போட்டோ , ஓவியம் எல்லாவற்றையும் பாராட்டியதற்கு நன்றி.
  ஓவியம் தொடரும் ராமல்க்ஷ்மி.

  பதிலளிநீக்கு
 30. வாங்க மாதேவி, வாழ்கவளமுடன். எனக்கும் காகித சூரர்கள் ஆச்சிரியத்தை ஏற்படுத்தினார்கள். எப்படி சூரசம்ஹாரம் நடக்கும் என்று பார்க்கவும் ஆசை ஆனால் மதுரை பயணம் சம்ஹாரம் பார்க்க முடியாமல் போய் விட்டது.
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி மாதேவி.

  பதிலளிநீக்கு
 31. வாங்க சுரேஷ் , வாழ்கவளமுடன். உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 32. வாங்க பாலசுப்பிரமணியம் சார், வாழ்கவளமுடன்.
  நீங்கள் சொல்வது சரியே! நம்பிக்கைதான் அவர்களை வழி நடத்தி சென்றது.

  புதுக்கோட்டைக்கு அருகில் ஓவியங்களுடனும் கல் படுக்கைகளுடனும் சிற்பங்களுடனும்
  ஒரு இடம் பார்த்திருக்கிறேன். பெயர் நினைவுக்கு வரவில்லை.//

  அது சித்தன்னவாசல் சார். அங்கும் சென்று பார்த்து வந்தோம். மகள் மருமக்னுடன் அதையும் பகிர்ந்து கொள்கிறேன்.
  உங்கள் வரவுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 33. வாங்க ஆதி, வாழ்கவளமுடன். நீங்கள் சொன்னது சரியே அது சித்தன்னவாசல் தான். ஜுன் மாதம் கயல் வந்து இருந்த போது அங்கு போய் வந்தோம்.
  நன்றி ஆதி.

  பதிலளிநீக்கு
 34. ரொம்பவும் தெளிவாக எழுதியிருக்கிறீர்கள்! புகைப்படங்களும் உங்கள் கணவரின் ஓவியமும் மிக அழகு!

  பதிலளிநீக்கு
 35. கழுகு மலைக்கோவில்கள் பற்றிய விவரங்கள் அருமை.படங்கள் பிரமாதமாக இருக்கு.மிக அழகான இயற்கை சூழ்நிலையை பார்க்கும் பொழுது உடனடியாக சென்று பார்க்க வேண்டும் என்கிற எண்ணம் எழுகிறது.

  பதிலளிநீக்கு
 36. வாங்க மனோ, வாழ்கவளமுடன். புகைபடங்களையும், என் கணவரின் ஓவியத்தையும் பாராட்டியமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 37. வாங்க ரமாரவி, வாழ்கவளமுடன். உங்கள் ஆர்வத்திற்கு மகிழ்ச்சி.
  சமயம் கிடைக்கும் போது பார்த்து வாருங்கள்.
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 38. அருமையான இடம். படங்கள் பார்க்கும்போது பார்க்கும் ஆவல் வருகிறது. கணவர் வரைந்த ஓவியம் அழகு. அட, அந்தப் பக்கம் ஆள் இருக்காங்களான்னு பார்க்காமலேயே பாறையைத் தள்றாங்களே... யாராவது அந்தப் பக்கம் நின்னா பாவங்க..! :)))

  பதிலளிநீக்கு
 39. வாங்க ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
  உங்களுக்கு பார்க்க ஆவல் வந்து விட்டதா! மகிழ்ச்சி. சென்று வாருங்கள்.

  அந்தப் பக்கம் ஆள் இருக்காங்களான்னு பார்க்காமலேயே பாறையைத் தள்றாங்களே... யாராவது அந்தப் பக்கம் நின்னா பாவங்க..! :)))//

  அந்தப்பக்கம் மலைத்தொடர் ஸ்ரீராம் அதனால் பயம் இல்லை.
  உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 40. வாங்க காஞ்சனா ராதாகிருஷ்ணன், வாழ்கவளமுடன். உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 41. ஸ்ரீராம், என் கணவரின் ஓவியத்தை பாராட்டியதற்கு மிகவும் நன்றி.

  பதிலளிநீக்கு
 42. கழுகு மலையை பார்க்கும் ஆசையை ஏற்படுத்தி விட்டீர்கள்

  பதிலளிநீக்கு
 43. மலைக்குமேலே ஏறி, ராக்ஷஸ பாறையெல்லாம் உருட்டிவிட்டு... அடேயப்பா, அட்வென்ச்சர் ட்ரிப்தான்!! பேரனோடு உணவு உண்டு விளையாடியதைச் சொல்லிருந்தது அழகு. சிறுகுழந்தைகள் கற்பனையாக உணவை நம் வாயில் திணிக்கும்போது.. அது ஒரு தனி சுகம்!!

  அப்புறம், எல்லாப் படங்களையும்விட, சார் வரைந்த அனிமேஷன் படம் சூப்பர்!! பதிவுக்குப் பதிவு, அவர்களின் படங்கள் மெருகேறிக் கொண்டே போகிறது. ரசிகர்களும் கூடிக்கொண்டே போகிறார்கள். தனி வலைப்பூவே தொடங்கிவிடலாம் போல!! (உங்களுக்கு வீட்டிலேயே இன்னொரு போட்டியாளர்!!) :-)))

  பதிலளிநீக்கு
 44. வாங்க ஹுஸைனம்மா< வாழ்க வளமுடன்.
  அட்வென்ச்சர் ட்ரிப்தான்!! //

  மகனுக்கு எப்போதும் வரலாற்று சிறப்பு மிகுந்த இடங்களை பார்ப்பது பிடிக்கும்.

  //சிறுகுழந்தைகள் கற்பனையாக உணவை நம் வாயில் திணிக்கும்போது.. அது ஒரு தனி சுகம்!!//

  ஆம், தனி சுகம் தான் ஹுஸைனம்மா சரியாக சொன்னீர்கள்.

  சார் வரைந்த படங்களை பாராட்டியதற்கு நன்றி.
  சிறு வயதில் குமுதம் பத்திரிக்கையில் பாக்கியம் ராமசாமி கதை பாத்திரங்கள் அப்புசாமி, சீதாபாட்டி படங்களை அப்படியே ஜெயராஜ் வரைந்த மாதிரியே வரைவார்கள். இப்போது கணினியில் வரை படங்கள் வரைந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களை என் பதிவுக்கு படம் வரைந்து கொடுங்களேன் என்றவுடன் மகிழ்ச்சியாக வரைந்து கொடுத்தார்கள் உங்கள் எல்லோர் பாராட்டு தான் அவர்கள் படங்கள் மெருகு ஏற காரணம்.
  வலைப்பூ ஆரம்பித்து எழுத சொல்கிறோம் எழுத நேரமில்லை என்கிறார்கள். கல்லூரி பாடம், கோவில் சொற்பொழிவுகள் என்று அவர்கள் நேரம் போகிறது.

  பதிலளிநீக்கு
 45. உங்கள் பதிவின் வழியே இங்கு வந்தேன். கழுகுமலை பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். சென்றதில்லை. உங்கள் பதிவில் உள்ள தீர்த்தங்கரர்களைப் பார்க்கும்போது இந்த கோயில் ஒரு காலத்தில் சமண முனிவர்களின் பள்ளிகளாக (இருப்பிடங்களாக) இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.

  உங்கள் கணவர் வரைந்த அனிமேசனுடன் இருக்கும் ஓவியத்திற்கு பாராட்டுக்கள்!

  பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 46. வணக்கம் இளங்கோ சார், வாழ்க வளமுடன்.
  ஆம், இது முன்பு சமண முனிவர்களின் இருப்பிடம் தான்.
  கணவர் வரைந்த அனிமேசன் படத்தை பாராட்டியதற்கு நன்றி.
  உங்கள் வரவுக்கும். கருத்துக்கும் நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 47. கழுகுமலை பற்றி படங்களுடன் விரிவான தகவல்கள் அடங்கிய பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திருமதி கோமதி அரசு

  http://mathysblog.blogspot.com/2013/01/blog-post_20.html

  பதிலளிநீக்கு
 48. வணக்கம் ரத்தினவேல் சார், வாழ்க வளமுடன்.
  உங்கள் பக்கத்தில் பகிர்வது அறிந்து மகிழ்ச்சி.
  நன்றி.

  பதிலளிநீக்கு