மே மாதம் இரண்டாவது ஞாயிறு, அன்னையர் தினம்.
தெய்வம் ஒரு வீட்டில் இருக்கிறது என்றால், அது ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் தாய் தான்.
அம்மா என்றால் அன்பு. அட்சய பாத்திரமும் அம்மாவும் ஒன்று. அட்சய பாத்திரம் அள்ள அள்ளக் குறையாமல் வழங்குவது போல், அம்மாவும் அள்ள அள்ளக் குறையாத அன்பைத் தருவாள். அம்மா என்ற மூன்றெழுத்துக்கு எல்லை ஏது! அப்பாவிடம் ஏதாவது கேட்டுப் பெற வேண்டும் என்றால் அம்மாவிடம் தான் முதலில் சொல்லி அப்பாவிடம் சிபாரிசு செய்ய சொல்லி கேட்போம்.
தாயன்பும் இறையன்பும் ஒன்றுதான்.
பகவானின் பிரேமையைப்பற்றி சொல்லும் போது ஸ்ரீ ராமகிருஷ்ணர் சொல்கிறார், ஒரு தாய்க்கு குழந்தையிடம் உள்ள பிரேமை போல் என்று.
//கன்றினுக்குச் சேதா
கனிந்திரங்கல் போலஎனக்கு
என்று இரங்கு வாய்கருணை
எந்தாய் பராபரமே!//
என்று தாயுமானவர் பாடுகிறார்.
//உலகனைத்தையும் ஈன்ற தாயே, என்னை நீ தாங்கிக் கொள்வாயாக, அறியாமையினால் கேடுகள் பலசெய்யும் என்னைக் கருணையோடு நீ காப்பாயாக!
தாயும் சேயும் என்னும் முறையில் கடவுளோடு இணக்கம் வைப்பது சாலச்சிறந்தது. குற்றங்கள் பல செய்தாலும் தாயினிடம் அவைகளைப் பற்றித் தாராளமாகப் பேசலாம், குழந்தையின் மீது படியும் அழுக்கைத் தாய் தானே துடைத்து வைக்கிறாள். பிள்ளையை பிரியத்தோடு பேணுதல் ஒன்றே அவள் புரியும் பணிவிடையாகும். கடவுள் நமக்கு அத்தகைய தாயாகிறார்.//என்று சுவாமி சித்பவானந்தர் சொல்லுகிறார்
இறை வழிபாட்டிலும், அப்பன் வழிபாட்டை விட அன்னை வழிபாடுதான் மிகவும் சிறப்பாகச் சொல்லப்படுகிறது. அன்னை தான் மகவுக்கு உடனே இரங்கி அருள் புரிகிறாள். தாய் எவ்வளவு திட்டினாலும் அடித்தாலும் குழந்தை தாயின் காலை கட்டிக் கொண்டு தான் அழும்.
பாரதியும் அன்னையிடம் தான் தனக்கு வேண்டியதைக் கேட்கிறார்:-
//எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்தநலறிவு வேண்டும்
பண்ணிய பாவமெலாம்
பரிதிமுன் பனியே போல
நண்ணியநின் முன் இங்கு
நசிந்திடல் வேண்டும் அன்னாய் ! //
//ஆதாரம் சக்தி என்றே அருமறைகள் கூறும்
யாதானுந் தொழில் புரிவோம் யாதுமவள் தொழிலாம்
துன்பமே இயற்கை யெனும் சொல்லை மறந்திடுவோம்
இன்பமே வேண்டி நிற்போம் யாவுமவள் தருவாள்.
நம்பினார் கெடுவதில்லை நான்கு மறைத்தீர்ப்பு
அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிகவரம் பெறலாம்.//
அகிலத்தைக் காக்கும் அன்னை, அனைவரையும் காப்பாள்.
இன்றைய சமூகநிலையில் தாய்மார்களின் நிலை எப்படி இருக்கிறது?
இப்போது இருக்கும் காலக்கட்டத்தில் ஒருவர் சம்பாதித்தால் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது என்றும் , குழந்தைகள் படிப்பு, மற்றும்
தேவைகளுக்கு என்று தாய்மார்கள் இரட்டைபாரம் சுமக்கிறார்கள்.
இது போன்ற தாய்மார்களின் தியாகத்தை குழந்தைகள் உணரவேண்டும்.
வீட்டையும், பார்த்துக் கொண்டு வேலைக்கும் போய் வரும் தாய் படும் அவலம் ஒரு சிறுகதையில் கூறப்படும் சூழ்நிலையைக்காண்போம். கதையின் பேர் ”உலகப் பெண்கள் நாள்’ ”.எழுதியவர் தஞ்சை இறையரசன். குடும்பத்தேவைக்காக வேலைக்குப் போகும் ஒரு தாய், தன் துன்பம் தீர, தன் கல்வி அதிகாரியிடம் உத்தியோக மாற்றல் கேட்பதைப் பாருங்கள்:-
// அம்மா , என் கணவர் தனியார் கம்பெனியில் வேலை பார்க்கிறார், குழந்தைகள் பள்ளியில் படிக்கிதுங்க, . தினம் முப்பது மைல் மூனு பஸ் மாறி போய் திரும்ப வேண்டிருக்கு. டவுன்பஸ் ரிப்பேர் ஆகி வராத நாளில் இரண்டரை மைல் நடக்க வேண்டிருக்கு, ஸ்டாண்டில் நிக்கவே முடியலை
கம்பியைப் பிடிச்சிக்கிட்டு நின்னு நின்னு கை கால்வீங்கிடுது. காலைல ஏழு மணிக்குத்தான் திரும்ப முடியுது. பத்து பன்னிரண்டு வருஷமா டிரான்ஸ்பர் கேட்டு அலையறேன்.//
இப்படிக் கேட்டும் , சிபாரிசின் பேரில் இன்னொருவருக்கு மாற்றல் கிடைத்தது. அந்தத் தாய்க்குத் துன்பம் தொடர்கதையாகிறது.
இது போல் எல்லாம் தன் குடும்ப நலத்திற்காகப் பாடுபடும் தாய்மார்களுக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள்.
இதே ஆசிரியர் எழுதிய மற்றொரு கதையில் வேலைக்குப் போகும் மனைவி, தன் கணவனுக்கு வண்டி வாங்கி கொடுத்தால் பஸ்ஸில் இடிபடாமல் வேலைக்கு நேரத்திற்கு சென்று வரலாம் என்று நினைக்கிறாள்.சிறு வயதில் தான் தன் கணவனின் தோளைப்பற்றிக் கொண்டு ஸ்கூட்டரில் போக முடியவில்லை. இப்போதாவது போகலாம் என்று கற்பனையில் திளைக்கிறாள். அந்தப்பெண்ணின் கதையைச் சொல்கிறார்,’ஒரே ஒரு நகரத்துக் குள்ளே ‘:என்ற கதையில்.
தன் மூன்று பவுன் நகை விற்றுப் பணம் ஆக்குகிறாள்.மேலும் தேவைப்படும் பணத்திற்காக, தன் சம்பளப்பணத்தில் பிடித்து வைக்கப்பட்ட பிஎப் பணத்தை பெற , கடன் கேட்டு,விண்ணப்பம் பெறவே லஞ்சம் கொடுத்து , பின் கிடைத்த பி.எப் பணத்தில் ஸ்கூட்டர் வாங்கி தன் கணவனுக்கு கொடுக்கிறாள். அதில் அலுவலகத்திற்கு போகலாம், இனி பஸ்ஸில் இடி வாங்கும் கஷ்டம் இல்லை என்று நினைத்தால், அந்தப் பெண்ணின் கணவர் என்ன செய்தார், கதையைப்பாருங்கள்!
//பணம் வந்தது , ஸ்கூட்டர் வந்தது, ஏதோ இரண்டு, மூன்று நாள் அங்கும் இங்கும் இவளை அழைத்து போனான், பிறகு எங்கே? அவ்வளவு தான், பெரியபெண் வேறு பள்ளிக்கூடத்தில் சேர்ந்தாள். பெரிய பெண்ணுக்கு ஒரு தடவை, மற்ற பிள்ளைகளுக்கு ஒரு தடவை, ஆபீசுக்கு ஒரு தடவை , காலையிலே மூணு முறை . சாயாங்காலம் மூணு முறை அலையறேன், உன்னை நான் டவுன் பஸ்சுக்குக் கொண்டு போய் விட அழைக்க ஏது நேரம் என்று அலுத்துக் கொண்டான் //
வண்டி வந்தால் வண்டியில் கணவனுடன் பயணிக்கலாம் என்று நினைத்து அது முடியாமல், மறுபடியும் பஸ்ஸில் கூட்டத்தில் இடிபட்டு நசுங்கி வேலைக்குப் போய்த் தன் குடும்பநலத்திற்குப் பாடுபடும் இது போன்ற தாய்மார்கள் இருக்கிறார்கள்.
துன்பப்படும் இத்தகைய தாய்மார்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.
குழந்தைகளுக்கு அம்மாவின் அன்பு, தந்தையின் பாசம், இரண்டையும் அள்ளித் தந்து, பார்த்துக் கொள்ளும் தாயுமானவர்களுக்கு (தந்தையர்களுக்கு) வாழ்த்துக்கள். குழந்தைகள் தங்களின்அம்மா, அப்பாவிற்குப் பொன் ,பொருள் கொடுப்பதற்குப் பதில் அனபையும், கனிவான வார்த்தைகளையும் கொடுத்தால் போதும். தாய் , தந்தை மகிழ்வார்கள்.அதே போல் ஒழுக்கம், நற்பண்பு கொண்டு விளங்கினாலே போதும். வேறென்ன வேண்டும்?
கொட்டி கிடக்குது செல்வங்கள் பூமியிலே -அதை
அள்ளி வளங்கிட நெஞ்சங்கள் ஏதுமில்லே!
என்று ஒரு பாட்டு சொல்கிறது. ஊற்று, தோண்டத் தோண்டத் தான் நீர்
ஊறும் . அது போல் அன்பு கொடுக்கக் கொடுக்கத் தான் பெருகும்.
அன்புக்குப் பஞ்சமில்லை என்று பஞ்சமில்லா நிலையை உருவாக்க வேண்டும். நாளை மறுநாள் அட்சய திருதியை .அன்று நல்லசெயல்களைச் செய்வோம், அன்பைப் பரிமாறிக் கொள்வோம். அன்றைய நாளில் , ஒன்று செய்தால் அது பன்மடங்காய்ப் பெருகி வாழ்வில் எல்லோருக்கும் நன்மையை நல்கும் என்பார்கள். அவ்வாறே பெருகட்டும். அட்சய திரிதியை வாழ்த்துக்கள்!
தாய்மை உணர்வு உடைய அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.
என் நினைவில் வாழும் என் பெற்றோர்களுக்கு வணக்கங்கள்.

தாயாகி , தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம் |
அன்புத் தாயும் நானும் |
தந்தையும் நானும் |
பெற்றோருடன் நான் |
ஏன் இந்த சோகம் கண்ணே ! |
மகன், மருமகள், பேரன் வாங்கி தந்த அன்னையர் தின பரிசு.
சினிமா பாடல்கள், பக்தி பாடல்கள், எப்.எம் ரேடியோ அனைத்தும் இருக்கிறது.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
-------
பெண்ணின் பெருந்தக்க யாவுள...?
பதிலளிநீக்குஎன்றும் அன்னையர் தின வாழ்த்துகள்...
வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
நீக்குஅருமையான கருத்தை பகிர்ந்து வாழ்த்தியதற்கு நன்றி.
சிறப்பான பதிவு.. மலர்ந்த நினைவுகளாக அந்நாளைய படங்கள்..
பதிலளிநீக்குநம் வாழ்வில் எல்லோருடைய நன்மைக்காகவும் பிரார்த்தனை செய்து கொள்வோம்..
வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
நீக்கு//நம் வாழ்வில் எல்லோருடைய நன்மைக்காகவும் பிரார்த்தனை செய்து கொள்வோம்..//
ஆமாம், அப்படியே பிரார்த்தனை செய்து கொள்வோம்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
அன்னையர்தின வாழ்த்துகள். அன்னையின் பெருமைகளை சொல்லத்தான் முடியுமா? எதிர்பார்ப்பிலல்லாத அன்பு.
பதிலளிநீக்குதாயின் இதயத்தைக் கேட்ட காதலிக்கு, தாயிடமே அனுமதி வாங்கி, அறுத்து எடுத்துச் செல்கையில் அவனுக்கு கால் இடறுகிறதாம். "பார்த்து மகனே... பார்த்து நட" என்று பதறுகிறதாம் அவன் கையில் உள்ள தாயின் இதயம். படித்த மேல்நாட்டு கதை ஒன்று.
வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்குஎதிர்பார்ப்பு இல்லாத அன்பு நிச்சயம் வேண்டும்.
கதை நல்ல கதை. குழந்தைகளின் நலமே தாய் என்றும் நினைப்பாள்.
உங்கள் சிறுவயதுப் படம் இன்னமும் வைத்திருப்பது சிறப்பு. அன்னையும் தந்தையும்தானே என்கிற எம் கே டி பாடல் நினைவுக்கு வருகிறது. பொறுமைக்கு பூமியையே உதாரணம் காட்டுவார்கள். பூமியையும் தாய் என்றுதான் அழைப்பார்கள்.
பதிலளிநீக்குவீட்டில் ஆல்பத்திலிருந்து அவர் அவர் அப்பா அம்மாவுடன் இருப்பதை எடுத்து வந்தோம்.
நீக்குஎம்.கேடி பாடல் மிகவும் பிடித்த பாடல்.
பூமியை தாய்க்கு உதாரணம் சொல்வர்கள் தான்.
சரிகம கார்வா வாங்கவேண்டும் என்பது எனக்கும் ஆசை. மனதில் சில தயக்கங்கள் இருக்கிறியாது. அந்த கார்வா பற்றியும் மேலே உள்ள திரை பற்றியும் ஒரு பதிவு இடுங்கள்.
பதிலளிநீக்கு//சரிகம கார்வா வாங்கவேண்டும் என்பது எனக்கும் ஆசை. மனதில் சில தயக்கங்கள் இருக்கிறியாது. அந்த கார்வா பற்றியும் மேலே உள்ள திரை பற்றியும் ஒரு பதிவு இடுங்கள்.//
நீக்குநன்றாக இருக்கிறது வாங்கலாம்.
சினிமா பாடல்கள், தெய்வீக பாடல்கள், பாடுபவர்கள், இசை அமைத்தவ்ரகள் என்று தனி தனியாக இருக்கிறது மொத்தம் 5000 பாடல்கள் இருக்கிறது. கர்நாடக இசை பிரபலங்கள் பாடியது இருக்கிறது.கிறிஸ்டியன் பாடல்கள், இஸ்லாமிய பாடல்கள் இருக்கிறது. தமிழ் பாடல்கள் மட்டும்.
உங்கள் விருப்பம் போல பதிவு போடுகிறேன் .
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
மேலே உள்ள திரை பேரு "போர்ட்ல்" வீடியோ கால் பேசலாம். வீடியோ கால் நேரே பார்த்து பேசுவது போல இருக்கும். குரல் தெளிவாக கேட்கும்.
நீக்குமகனின் பரிசுதான் அதுவும்.
கோமதிக்கா அப்ப கார்வான் மேலே தெரிவது டிவி இல்லையா? நான் சொல்ல வந்தேன் அந்தப் படம் என்ன அழகு! கைலாயமோ? வீடியோ கால் தெளிவாகக் குரல் கேட்கிறதா அட! சூப்பர் கோமதிக்கா...மகனுக்கு வாழ்த்துகள் அவர் அன்புடன் உங்களுக்காகச் செய்வது. இறைவன் எல்லோரையும் மகிழ்வாக வைத்துக் கொள்ள வேண்டும்!
நீக்குகீதா
வணக்கம் கீதா , வாழ்க வளமுடன்
நீக்குகார்வான் மேலே தெரிவது பேஸ்புக் போர்ட்ல்.
வீடியோ கால் தெளிவாக இருக்கும்.
மகனுக்கும் வாழ்த்து சொன்னதற்கு நன்றி.
எல்லோரையும் இறைவன் நன்றாக வைத்து கொள்ள வேண்டும் அது போதும் நமக்கு.
அன்னையர் தினம் பற்றிய பதிவு அருமை பழைய புகைப்படங்களை இன்னும் பாதுகாத்து வைப்பது பெருமையான விசயம்.
பதிலளிநீக்குவணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்குஅன்னையர் தினம் பற்றிய பதிவு அருமை
நன்றி
பழைய புகைப்படங்களை இன்னும் பாதுகாத்து வைப்பது பெருமையான விசயம்.//
இப்போது படங்களை கூகுள் சேமித்து வைத்து தருகிறது.
அப்போது ஆலபம் தான் அதை பூச்சிகள் அரிக்காமல் பத்திர படுத்த வேண்டும். அம்மா பத்திரபடுத்தி எங்களுக்கு தந்து இருக்கிறார்கள்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
அன்னையர் தின வாழ்த்துகள் கோமதிக்கா!
பதிலளிநீக்குநீங்களும் உங்கள் அப்பா அம்மாவுடன் இருக்கும் ஃபோட்டோக்கள் எல்லாம் பொக்கிஷம்தான்.
ஆஹா சரிகமா கார்வான் பரிசு சூப்பர். மகன் மருமகள் பேரனின் சாய்ஸ் அருமை.!
கீதா
அன்னையர் தின வாழ்த்துகளுக்கு நன்றி கீதா, உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
நீக்குஆமாம், அவைகள் காலத்தை காட்டும் பொக்கிஷங்கள் தான்
மூவரும் பரிசுகள் தேர்வு செய்வதில் வல்லவர்கள்.
அப்பாவுடன் இருக்கும் கோமதிக்காவுக்கு என்ன வருத்தம் கோபம்?!! ஹாஹாஹா அந்த முகம் அந்த வயதிற்கே உரிய அந்த உணர்வு வெளிப்படுதல்! ஹாஹாஹா அழகு! ரசித்தேன்.
பதிலளிநீக்குகீதா
அப்பாவுடன் இருக்கும் படத்தில் என்ன செல்ல சிணுங்கல் என்று தெரியவில்லை, ஏதாவது கேட்டு இருப்பேன். அப்பா செல்லம் நான்.
நீக்குஅந்த வயதிற்கே உரிய உணர்வுதான். உங்கள் ரசிப்புக்கு நன்றி.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி நன்றி.
அன்னையர் தின வாழ்த்துகள் அம்மா! பதிவு வழி பகிர்ந்த விஷயங்கள் அனைத்தும் மிகவும் சிறப்பாக அமைந்தது.
பதிலளிநீக்குவணக்கம் வெங்கட் நகாராஜ், வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி வெங்கட்.
உங்கள் மகனின் பரிசு அருமையாக உள்ளது. அதிலும் வீடியோ கால் தெளிவாகத் தெரிவது இன்னமும் மகிழ்ச்சி. அருமையான அன்னையர் தினப் பதிவு. தாயிற்சிறந்தது வேறே எதுவும் இல்லை.
பதிலளிநீக்குவணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
நீக்குஆமாம், நல்ல பரிசுதான். நமக்கு வீடியோ கால்தானே மகிழ்ச்சி தரக்கூடியது.
பதிவும் உங்களுக்கு பிடித்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி.
உங்கள் கருத்துக்கு நன்றி.
அன்பின் கோமதி மா,
பதிலளிநீக்குவாழ்க வளமுடன். பதிபு மிகப் பிடித்தது. உங்கள்
அப்பா அம்மாவுடன் நீங்களும் உங்க வீடும் இருக்கும்
படமும் மிக அருமை.
மகன் வாங்கித் தந்திருக்கும் வானொலி மற்றும் பேசும் திரை அனைத்தும்
மிக மிகச் சிறப்பு.
கரிசனத்துடன் வாங்கித் தந்திருக்கிறார்.
அனைவரும் வாழ்க வளமுடன்.
வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
நீக்குபாளையங்கோட்டை தாத்தா வீடு அது அதன் முன் நானும், அம்மாவும் , அப்பாவும். அப்பா தூக்கி வைத்து இருக்கும் படத்தில் உள்ள வீடு மதுரை சொக்கிகுளம் வீடு . விவரம் தெரியாவயதில் அப்பா மதுரையில் வேலை பார்த்த போது இருந்தோம். பிறகு என் திருமணம் சமயம் மதுரையில் இருந்தோம். அப்புறம் மதுரைதான் அம்மாவீடு ஆச்சு.
//மகன் வாங்கித் தந்திருக்கும் வானொலி மற்றும் பேசும் திரை அனைத்தும்மிக மிகச் சிறப்பு.//
நன்றி அக்கா.
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமையாக உள்ளது. தங்களுக்கும் அன்பான அன்னையர் தின வாழ்த்துகள். உங்கள் தாய் தந்தையுருடன் இருக்கும் புகைப்படம்ங்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. உலகத்தில் அவர்களின் அன்புக்கு எல்லையேது? பிரதிபலன் கருதா அன்பிது.
பாரதியாரின் பாடல் அருமை. நீங்கள் பகிர்ந்த கதைச் சுருக்கங்களும் நன்றாக உள்ளது. குடும்பத்துக்காக இப்படி வீட்டிலும் வெளியிலும் சோம்பலில்லாமல் உழைக்கும் பெண்களை மனமாற பாராட்டுவோம்..பதிவின் நல்ல கருத்துக்களை ரசித்தேன்.
தங்கள் மகன் தங்களுக்காக வாங்கித்தந்திருக்கும் பரிசை பார்த்தேன். நன்றாக உள்ளது. தங்கள் மகனுக்கும் மருமகளுக்கும் அன்பு பேரனுக்கும் அன்பான மனம் நிறைந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நேற்று என்னால் வலைத்தளம் வர முடியவில்லை. ஆதலால் கருத்துரைக்க தாமதமாகி விட்டது.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்கு//பதிவு அருமையாக உள்ளது. தங்களுக்கும் அன்பான அன்னையர் தின வாழ்த்துகள்//
நன்றி.
உங்கள் தாய் தந்தையுருடன் இருக்கும் புகைப்படம்ங்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. உலகத்தில் அவர்களின் அன்புக்கு எல்லையேது? பிரதிபலன் கருதா அன்பிது.//
அவர்கள் அன்புக்கு எல்லையே இல்லை.
////பாரதியாரின் பாடல் அருமை. நீங்கள் பகிர்ந்த கதைச் சுருக்கங்களும் நன்றாக உள்ளது. குடும்பத்துக்காக இப்படி வீட்டிலும் வெளியிலும் சோம்பலில்லாமல் உழைக்கும் பெண்களை மனமாற பாராட்டுவோம்..பதிவின் நல்ல கருத்துக்களை ரசித்தேன்.//
பாரதியாரின் பாடல், பகிர்ந்த கதைரசித்து உழைக்கும் பெண்களை வாழ்த்தியதற்கு நன்றி.
மகன், மருமகள், பேரனை வாழ்த்தியதற்கும் உங்கள் கருத்துக்கும் நன்றி நன்றி.
நேரம் கிடைக்கும் போது வந்து கருத்து சொல்லலாம் கமலா.
அன்னையவள் அன்பை சொல்ல வார்த்தைகள் ஏது .
பதிலளிநீக்குஉங்கள் சிறுவயது குடும்ப படங்கள் நிறைவாக இருந்தன.
அன்னையர் தின வாழ்த்துகள் .
வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குஆமாம், அன்னையின் அன்பை சொல்ல வார்த்தைகள் இல்லை.
அன்னையர் தின வாழ்த்துக்களுக்கும் உங்கள் கருத்துக்கும் நன்றி.