திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் திருக்குளம் இருக்கும் கீழ கோபுர வாசல்.
ஜோதி தொலைக்காட்சியில் திருக்கடவூர் கும்பாபிஷேக காட்சிகளை நேரலையில் பார்த்தேன். அதில் கோயிலை பறவை பார்வையாக மேலிருந்து காட்டிய போது திருக்குளத்தை காட்டினார்கள், அதில் படகு வேறு விட்டு இருந்தார்கள்
எத்தனையோ முறை திருக்கடவூர் போய் இருக்கிறேன், திருக்குளத்தை பார்த்தது இல்லை. திருக்கடவூர் போகும் வாய்ப்பு கிடைத்தால் குளத்தை பார்க்க வேண்டும் என்று நினைத்து கொண்டேன். தங்கை கணவர் மணிவிழாவில் அந்த வாய்ப்பை இறைவன் தந்தார். 48 நாள் மண்டல பூஜை சமயம் பார்த்து விட்டோம் .
வெளி வாசல்
முனீஸ்வரர் கோபுரமும் திருக்குளமும் இருக்கும் இடம்.
முனீஸ்வரார் கோயில் மதில் சுவர்களுக்கு பின்னால் தெரியும் திருக்கடவூர் கோபுரங்கள் சுவாமி விமானம்.
வெகு தூரத்திலிருந்து ஜூம் செய்து எடுத்த படம்
பெரிய திருக்குளம் திருக்குளத்தை மாலை நேரம் சுற்றி வந்தாலே போது, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
தண்ணீர் நல்ல சுத்தமாக இருந்தது . மாலைச்சூரியனும் தெரிகிறார் குளத்தில் (மாலை 4.50)
முனீஸ்வரர் இருக்கும் இடம் வெகு தூரமாக இருந்தது, காலையிலிருந்து வரிசையாக நிறைய கோவில் தரிசனம் செய்து வந்த களைப்பு, மாலையில் தங்கைமணிவிழா காலபூஜையில் கலந்து கொள்ளவேண்டும் என்பதால் நான் குளக்கரையில் அமர்ந்து விட்டேன். தங்கை மட்டும் போய் பார்த்து வந்தாள், திறந்து இருந்தால் கூப்பிடுகிறேன் வாருங்கள் என்றாள்.
திறக்கவில்லையாம், கம்பி கதவு வழியே முனீஸ்வரனை பார்த்து வந்தாள், உத்திராட்ச மாலை போட்டு இருந்தாக சொன்னாள்
மறு நாள் வருவோம் என்று பேசி கொண்டோம் , அப்புறம் திருமணம் முடிந்தவுடன் வைத்தீஸ்வரன் கோவில் போகவேண்டும் என்றதால் நேரம் இல்லை பார்க்க.கோபுர வாசலில் இருந்த கல்வெட்டு
வாசலுக்கு வெளியே கம்பி கதவுக்குள் என்ன சாமி இருக்கிறார் என்று பார்க்க முடியவில்லை குரங்கார் அமர்ந்து தேங்காய் சில்லை கடித்து கொண்டு இருந்தது.
அடுத்து மார்க்கண்டேயர் கோயில் போனோம். அங்கு படம் எடுக்க அனுமதி இல்லை.
சிறிய கோயில்தான் மூலவர் மார்க்கண்டேயர், பிரகாரத்தில் பிள்ளையார், முருகன் அனுமன், பைரவர், மாகாலட்சுமி ஆகியோர் இருக்கிறார்கள். படம் எடுக்க அனுமதி இல்லை.
திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வந்து மணிவிழா, விஜயரதசாந்தி, சதாபிஷேகம் செய்பவர்கள் இந்த கோயிலுக்கு வந்து வழி பட்டு செல்ல வேன்டும் என்பார்கள்.
திருக்கடவூரிலிந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது.
கோவிலுக்கு உள்ளே போய் விட்டு வந்து எடுக்கலாம் என்று நினைத்து மறந்து விட்டது. (சில நினைவுகள் மனதை ஆக்கரமித்து கொண்டதால்)
கோயிலில் எங்கள் மணிவிழா முதல் நாள் கங்கா பூஜை என்று ஒன்று செய்தார்கள். எங்களுக்கு திருமணம் செய்து வைத்தவ்ர் விஸ்வநாதகுருக்கள் அவர் இந்த மார்க்கண்டேயர் கோயில் டிரஸ்டியாக இருந்தார்.
எங்கள் குடும்பத்தில் எங்களுக்கு முன் எல்லோருக்கும் மணிவிழாக்கள், சாதாபிஷேகம் எல்லாம் செய்து வைத்து இருக்கிறார். யாருக்கும் செய்யவில்லை இப்படி கங்கா பூஜை. . இவர்கள் அண்ணாவிற்கு விளக்கு பூஜை செய்ய வைத்தார் இந்த கோயிலில்.
எங்கள் மணிவிழா சமயம் இப்படி புதிதாக இந்த கோயிலில் கங்கா பூஜை நடந்தது போலும். அதன் பின் முதல் கால பூஜைகள் ஹோமங்கள் திருக்கடவூர் கோயிலில் நடந்தது.
மறுநாள் மணிவிழா.
திருக்கடவூர் என்றதும் என் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டேன்.
அடுத்து திருக்கடவூர் கோயில் பார்ப்போம்.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
----------------------------------------------------------------------------------------------------
படங்கள் அனைத்தும் அருமை, கோஙிலுக்கு சென்று வந்த உணர்வு...
பதிலளிநீக்குவண்ககம் திண்டுக்கல் தன்பாலன், வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி தன்பாலன்.
அழகிய படங்களுடன் விவரங்கள் தந்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குகுளம் மிகப் பெரியதாக தெரிகிறது.
தங்களது குடும்ப விழாவையும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. திருக்கடவூர், மற்றும் திருக்கடவூர் குளம் இருக்கும் பகுதி முனீஸ்வரர் கோபுர தரிசனங்கள் கிடைக்கப் பெற்றேன். கோபுரங்கள் அழகாக உள்ளன. கோவிலின் திருக்குளம் பெரிதாக உள்ளது. கோவில் குளத்தின் நீரும் தூய்மையாக தெரிகிறது. மாலைச்சூரியனின் அழகோடு குளத்து நீர் பிரதிபலிப்பது மிக அழகாக உள்ளது. கோவிலைப்பற்றிய விபரங்களும், படங்களும்
படித்துப் பார்த்ததில் உங்களோடு கோவிலுக்கு வந்த திருப்தியும் கிடைத்தது.
வாசலுக்கு வெளியே கம்பி கதவுக்குள் அங்கு என்ன கடவுள் உள்ளார் என யாரையும் பார்க்க விடாது அடம் பிடித்து அமர்ந்திருக்கிறார் போலும் குரங்கார்.
திருக்கடையூரில் மணிவிழா செய்து கொள்வோர்க்கு இந்தப்பதிவில் விபரமாக சொல்லியுள்ளீர்கள்.
தங்களின் மணிவிழா படங்கள் ரொம்ப அழகாக உள்ளன. திருக்கடவூர் கோவிலில் தங்கள் மணிவிழாவை அருகிலிருந்து சிறப்புற நடத்தி வைத்த அந்த ஈஸ்வரனுக்கு கோடி வணக்கங்களும், நன்றியும்.
திருக்கடவூர் மிக அருகிலிருக்கும் மார்க்கண்டேயர் கோவிலும் வெகு அழகு. அங்கு சென்றதும் வந்த தங்கள் நினைவுகளை புரிந்து கொள்ள முடிந்தது. பல கோவிலின் அழகான படங்களுடன், தங்களின் மணிவிழா படங்களையும். எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள். அடுத்து திருக்கடவூர் கோவிலைப்பற்றி அறியவும் காத்திருக்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குகுளம் இருக்கும் இடம் மிக அழகாய் இருந்தது ஆனால் நாங்கள் போன நேரம் வெயில் அதிகம் நிழல் இல்லை. அதிகநேரம் செலவிடமும் முடியவில்லை.
வெளியில் குரங்கார் அவரை படம் எடுக்க அனுமதித்தார்.
திருக்கடவூரில் வந்து திருமணம் செய்து கொள்ளும் எங்கள் உற்வினர் எல்லாம் எங்கள் வீட்டில்( மாயவரத்தில் ) வந்து இருந்துதான் செய்து ஊருக்கு போவார்கள். அக்கம் பக்கத்து நட்புகள் திருக்கவூரில் , 60, 70, 80 செய்து கொள்ளும் போதும் போவோம் .
இப்படி பல இனிமையான நினைவுகளை தரும் கோயில்.
அதுதான் என் நினைவுகளை பகிர்ந்து கொண்டேன்.
//திருக்கடவூர் கோவிலில் தங்கள் மணிவிழாவை அருகிலிருந்து சிறப்புற நடத்தி வைத்த அந்த ஈஸ்வரனுக்கு கோடி வணக்கங்களும், நன்றியும்.//
ஆமாம், அவருக்கு நானும் நன்றிகளை சொல்லி கொள்கிறேன்.
உங்களுக்கும் நன்றி.
தங்கையின் மணிவிழாவிறகு வந்த உறவினர்கள் எல்லாம் மாயவரம் நினைவுகளை சொல்லி கொண்டே இருந்தார்கள்,
அதுதான் இந்த பகிர்வு.
உங்கள் அன்பான விரிவான கருத்துக்கு நன்றி கமலா.
முனீஸ்வர் கோவில் தரிசனம். கோவில் குளம் பெரிதாக இருக்கிறது.
பதிலளிநீக்குஉங்கள் மணிவிழா படங்கள் கண்டோம் நன்றாக உள்ளது.
வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
நீக்கு//முனீஸ்வர் கோவில் தரிசனம். கோவில் குளம் பெரிதாக இருக்கிறது.//
ஆமாம்.
//உங்கள் மணிவிழா படங்கள் கண்டோம் நன்றாக உள்ளது.//
நன்றி மாதேவி.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
முதல்முறை சென்றபோது கோவிலைச் சுற்றிச் சென்று (மோசமாக பராமரிக்கப்படும் அசுத்தமான வெளிப் பிரகாரங்கள்) அந்தத் திருக்குளத்தைப் பார்த்திருக்கிறேன். அதன் மறுமுனையில் முனீஸ்வரன் கோவில் இருக்கிறதோ... கதவு பார்த்த நினைவு. சென்றதில்லை.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்குநீங்கள் திருக்குளத்தை பார்த்து இருக்கிறீர்களா நல்லது.
இப்போது கும்பாபிஷேகம் ஆகி இருப்பதால் கோயில் சுத்தமாக இருக்கிறது. இப்போது உள்பிரகாரத்தில் திருமணங்கள் இல்லை.
எல்லாம் வெளிபிரகாரத்தில் தான் மண்டபம் கட்டி நடக்கிறது.
படங்கள் வழக்கம்போல சிறப்பு. உங்கள் மணி விழா எல்லாம் இங்குதான் நடந்ததுவோ.. அழகான படங்கள். .
பதிலளிநீக்குஆமாம் ஸ்ரீராம் எங்கள் குடும்பத்தினர் எல்லோருக்கும் இங்குதான் மணிவிழா நடந்தது. சாரின் பெரிய அண்ணா 80(சதாபிஷேகம்) செய்து கொண்டார்.அப்போது நான் கலந்து கொள்ளமுடியவில்லை. மகன் வீட்டில் இருந்தேன்.
நீக்குஉங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
வர வர எ பி வாசகர்கள் சிறந்த புகைப்பட நிபுணர்கள் ஆகிறார்கள். புகைப்படங்கள் ரசனையாக அழகாக பொலிவுடன் இருக்கின்றன. கோவிலுக்கு சென்று நிகழ்விலும் பங்கெடுத்த உணர்வு ஏற்பட்டது. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகரன் சார், வாழ்க வளமுடன்
நீக்கு//புகைப்படங்கள் ரசனையாக அழகாக பொலிவுடன் இருக்கின்றன. கோவிலுக்கு சென்று நிகழ்விலும் பங்கெடுத்த உணர்வு ஏற்பட்டது. வாழ்த்துக்கள்.//
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி சார்.
திருக்கடவூர் கோயிலின் வாசல் மணல் வீதியாக - இருபுறமும் எளிமையான வீடுகளாக இருந்த (1977/80) காலம் அது..
பதிலளிநீக்குஎத்தனையோ முறை திருக்கடவூர் சென்றிருக்கின்றேன்.. இருந்தும் கிழக்குவாசல் திருக்குளம் மார்க்கண்டேயர் கோயில் பற்றிய செய்திகள் புதியவை..
படங்கள் எல்லாம் வழக்கம் போல அருமை.. பயனுள்ள செய்திகள்..
அம்மையப்பனின் நல்லருளை அனைவரும் பெற்று உய்வோமாக...
வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
நீக்குநாங்கள் எங்கள் மாமனாருக்கு 70 பிறந்தநாள் அங்கு கொண்டாடிய போதும் ஊர் அப்படித்தான் இருந்தது. இப்போது கும்பாபிஷேக நேரலையில் ஊரை காட்டிய போது நினைத்தேன் ஓட்டு வீடுகள் எல்லாம் எங்கே என்று. எல்லாம் மாடி வீடுகளாக தங்கும் விடுதிகளாக மாறி விட்டது.
ஆண்டுக்கு ஆண்டு திருக்கடவூர் வளர்ச்சி அடைந்து வருகிறது. கோயிலுக்கு வரும் போதெல்லாம் ஊரின் முன்னேற்றத்தைப்பார்த்து இருக்கிறேன். ஆனால் இன்னும் பஸ் வசதி இல்லை. மக்கள் சிரமபடுகிறார்கள். வாடகை வண்டிகள், கார் , வேன் என்று நிறைய திருக்கடவூருக்கு கூப்பிடும் மாயவரத்திலிருந்து . பேருந்துக்கு மட்டும் காத்து கிடக்க வேண்டும் அன்றும், இன்றும்.
மார்க்கண்டேயர் கோயில் சின்னதாக இருந்தாலும் நன்றாக இருக்கும்.
மார்க்கண்டேயர் கோயில் அடிக்கடி போய் இருக்கிறோம் திருக்குளம் தான் முதன் முதலில் பார்த்து இருக்கிறேன்.
.
//அம்மையப்பனின் நல்லருளை அனைவரும் பெற்று உய்வோமாக...//
நீங்கள் சொல்வது போல அம்மையப்பனின் நல்லருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.
உங்கள் கருத்துக்கு நன்றி..
// கார் , வேன் என்று நிறைய திருக்கடவூருக்கு கூப்பிடும் மாயவரத்திலிருந்து . பேருந்துக்கு மட்டும் காத்து கிடக்க வேண்டும் அன்றும், இன்றும்..//
பதிலளிநீக்குசரியாகச் சொன்னீர்கள்..
எல்லாருக்கும் இயல வில்லையே கார்களிலும் வேன்களிலும் வந்து செல்வதற்கு!..
ஊரின் அடையாளமே மாறிப் போய் விட்டது.. முறையான தேநீர்/ சாப்பாட்டுக்கு இடமில்லை..
எல்லோருக்கும் இயலவில்லையே கார்களிலும் வேன்களிலும் வந்து செல்வதற்கு//
நீக்குஆமாம் , அதுதான் கஷ்டம் கார் வாங்கும் முன் நாங்கள் மிகவும் கஷ்டபட்டு இருக்கிறோம் திருக்கடவூர் போய் வருவதற்கு.
குறிப்பிட்ட நேரம் வரை தான் பேரூந்து இருக்கும் மாயவரம் போக இருக்காது சில நேரம் ஆட்டோக்களில் போவோம் மாயவரம் . நிறைய பேர் இருந்தால் அங்கு ஒன்று இரண்டு ஆட்டோதான் இருக்கும்
அதில் இடித்து கொண்டு நெருக்கி கொண்டு போய் சேர்வோம்.
எளிமையான டீகடைகள் இல்லை. குருக்களே திருமணம் செய்பவர்களுக்கு முதல் நாள் மாலை முதல் மறுநாள் வரை உணவு ஏற்பாடு செய்து தந்து விடுகிறார்கள். அவர்களே டீ, காபி, பால் தந்து விடுகிறார்கள். சும்மா வந்து இறைவனை தரிசனம் செய்து போகிறர்வர்களுக்குதான் கஷ்டம். சில ஓட்டல்கள் இருக்கிறது. ஓட்டல் அபிராமி, கனகாபிஷேகம் , போன்றவை இருக்கிறது.
பிள்ளையார் கோவில் பக்கம் ஒரு ஓட்டல் இருந்தது. பேர் மறந்து விட்டது. இருந்தாலும் அங்கும் திருமணம் செய்பவர்கள் டோக்கன் வாங்கி கொடுத்து விட்டால் மற்றவர்கள் உணவுக்கு காத்து இருக்க வேண்டும்.
முன்பு குடும்பத்தினருடன் வரும் போது இட்லி, தயிர்சாதம், புளியோதரை என்று தூக்கி செல்வோம்.
மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.
படங்கள் அனைத்தும் நன்று. கோவில் குறித்த தகவல்கள் அனைத்தும் சிறப்பு.
பதிலளிநீக்குவணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
கோமதிக்கா இந்தப் பதிவிலும் முதல் படம் அந்தக் கோபுரம் அதன் உள்ளே தெரியும் அடுத்த கோபுரம் படம் பிரமாதம்,
பதிலளிநீக்குஅடுத்து உள்ள கோபுரப் படங்களும் இன்னும் கிட்டத்தில் எடுத்த முதல் படத்தின் கிட்டத்து க்ளிக்கும் செம மிகவும் ரசித்துப் பார்த்தேன் அக்கா, இதோ வருகிறேன் மீண்டும்
கீதா
வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்கு//கோமதிக்கா இந்தப் பதிவிலும் முதல் படம் அந்தக் கோபுரம் அதன் உள்ளே தெரியும் அடுத்த கோபுரம் படம் பிரமாதம்,//
நன்றி கீதா.
//அடுத்து உள்ள கோபுரப் படங்களும் இன்னும் கிட்டத்தில் எடுத்த முதல் படத்தின் கிட்டத்து க்ளிக்கும் செம மிகவும் ரசித்துப் பார்த்தேன்//
மகிழ்ச்சி கீதா.
//அக்கா, இதோ வருகிறேன் மீண்டும்//
வாங்க மெதுவாக , காலை நேர வேலைகள் முடித்து வாங்க.
முனீஸ்வரர் கோபுரம், தெப்பகுளம், அடுத்து வரும் //முனீஸ்வரார் கோயில் மதில் சுவர்களுக்கு பின்னால் தெரியும் திருக்கடவூர் கோபுரங்கள் சுவாமி விமானம். //
பதிலளிநீக்குஓ இந்தத் திருக்குளம் கீழ கோபுர வாசல்...திருக்கடவூர் கோயில் குளமா? முனீஸ்வரர் கோயில் வாயில் வழியா போகணுமோ? அல்லது முனீஸ்வரர் கோயில் திருக்கடவூர் கோயில் உள்ளேயே இருக்கிறதோ?
புரிந்தது குளத்தின் அப்புறத்தில் முனீஸ்வரர் சன்னதி இருக்கிறது இல்லையா.
கீதா
திருக்கடவூர் கோயில் குளம் தான். ஆனால் கீழ கோபுர வாசல் வழியே போய் தான் பார்க்க வேண்டும்.
நீக்குகுளத்து அப்புறத்தில் முனீஸ்வரர் சன்னதி இருக்கிறது.
திரிக்கடவூர் கோயிலுக்கு அந்த வழியாக போக முடியுஆ என்று தெரியவில்லை. மதில் சுவர் தெரிகிறது. அடுத்த முறை போய் தான் பார்க்க வேண்டும்.
நினைவுகள் சிறப்பு. இக்கோயிலுக்குப் பல முறை சென்றுள்ளேன்.
பதிலளிநீக்குவணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
சில நினைவுகளால் கோபுரம் எடுக்க மறந்துவிட்டது என்று நீங்கள் சொல்லியிருப்பதன் காரணம் புரிந்ததை நினைத்துக்கொண்டே வந்தால் அடுத்து நீங்களே புகைப்படங்களுடன் சொல்லியிருக்கீங்க.
பதிலளிநீக்குஅழகான புகைப்படங்கள் அக்கா.
//யாருக்கும் செய்யவில்லை இப்படி கங்கா பூஜை. . இவர்கள் அண்ணாவிற்கு விளக்கு பூஜை செய்ய வைத்தார் இந்த கோயிலில்.
எங்கள் மணிவிழா சமயம் இப்படி புதிதாக இந்த கோயிலில் கங்கா பூஜை நடந்தது போலும். அதன் பின் முதல் கால பூஜைகள் ஹோமங்கள் திருக்கடவூர் கோயிலில் நடந்தது//
நல்ல விஷயம் அக்கா.
படங்கள் விவரங்கள் எல்லாம் ரசித்தேன் கோமதிக்கா
கீதா
புகைபடங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி கீதா.
பதிலளிநீக்குஉங்கள் அனைத்து கருத்துக்களுக்கும் நன்றி.
அன்பின் கோமதி மா. வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஅருமையான கோவில்களின் படங்களால் எங்களை அங்கேயே அழைத்துச் சென்று
சென்று விட்டீர்கள்.
கோபுரக் காட்சிகளும் , குரங்கார் தரிசனமும் நலம்
வெகு சிறப்பு. எல்லாவற்றையும் மிகப்
பிடித்தது உங்கள் மணி விழாக் காட்சிகள்.
ஸாரும் நீங்களும் மிக அழகாக இளமையாகப்
பக்தியும் கனிவும் ஒரு சேர இருக்கும்
படங்கள் மனசுக்கு வெகு நெகிழ்ச்சி.
குளமும் சுற்றுப் பாதையும் மிக நேர்த்தி.
அங்கேயே உட்கார்ந்து விடலாமா என்று தோன்றியது தங்கள் தங்கைக்கும் மணிவிழா
வாழ்த்துகளும் ஆசிகளும்.
வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
நீக்கு//அருமையான கோவில்களின் படங்களால் எங்களை அங்கேயே அழைத்துச் சென்று
சென்று விட்டீர்கள்.//
உடன் வந்து தரிசனம் செய்தமைக்கு நன்றி.
எல்லாவற்றையும் மிகப்
பிடித்தது உங்கள் மணி விழாக் காட்சிகள்.
ஸாரும் நீங்களும் மிக அழகாக இளமையாகப்
பக்தியும் கனிவும் ஒரு சேர இருக்கும்
படங்கள் மனசுக்கு வெகு நெகிழ்ச்சி.//
படங்களை ரசித்து நீங்கள் சொன்ன கருத்து நெகிழ்ச்சி.
திருக்கடவூர் என்றாலே நினைவுகள் வந்து மோதுகிறது.
என் நினைவுகளை பகிர்ந்து கொண்டது எனக்கும் மகிழ்ச்சி.
குளமும் சுற்றுப் பாதையும் மிக நேர்த்தி.
//அங்கேயே உட்கார்ந்து விடலாமா என்று தோன்றியது//
இன்னும் மரங்கள் குளத்தை சுற்றி வைத்தால் அந்த இடம் எப்போது குளிர்ச்சி பொருந்தி இன்னும் ரம்யமாக இருக்கும். இப்போது வெயில் இல்லையென்றால் அங்கு கொஞ்ச நேரம் அமர்ந்து வந்து இருப்போம்
//தங்கள் தங்கைக்கும் மணிவிழா
வாழ்த்துகளும் ஆசிகளும்.//
தங்ககையிடம் சொல்கிறேன். உங்கள் வாழ்த்துக்களுக்கும் , கருத்துக்கும் நன்றி அக்கா.
மணிவிழா படங்கள் மிகச் சிறப்பு.
பதிலளிநீக்குமார்க்கண்டேயர் கோவில் ரவம்ப புராதானக் கோவிலாகத் தோன்றுகிறது.
திருக்கடையூர் படங்கள் ரசித்தேன். நல்ல பகிர்வு.
வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
நீக்கு//மணிவிழா படங்கள் மிகச் சிறப்பு.//
நன்றி.
//மார்க்கண்டேயர் கோவில் ரவம்ப புராதானக் கோவிலாகத் தோன்றுகிறது.//
நன்றாக இருக்கும் கோயில் அமைதியான கோயில். நிழல் தரும் மரங்கள் சூழ்ந்து பார்க்க அருமையாக இருக்கும்.
பதிவை ரசித்து கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி.
திருக்கடவூர் கோவில் குளம் பிரம்மாண்டம். அந்தக் காலத்தில் எப்படியெல்லாம் யோசித்து, சமூகத்துக்குப் பயன் தரும் விதமாக்க் கட்டியிருக்கிறார்கள் என வியந்தேன்.
பதிலளிநீக்குஆமாம், நீங்கள் சொல்வது போல சமூகத்திற்கு பயன் தரும் விதமாகக் கட்டினார்கள் கோயிலை. மழை வெள்ல காலத்தில் மக்களுக்கு கோயில்தான் புகலிடம். அனைவருக்கும் உணவு இருப்பிடம் தரும் இடம். அரசர்கள் தன் மாளிகையை விட இறைவன் இருக்கும் ஆலயத்தை உயர்த்தி கட்டி உயர்ந்தவர்கள் ஆனார்கள். அவர்கள் பெயர் சொல்லி கொண்டு ஆலயங்கள் இன்னும் காலங்களை கடந்து நிற்கிறது.
நீக்குஉங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
திருக்க்டவூர் சென்ற நினைவிருக்கிறது. இப்போது உங்கள் படங்கள், விவரங்கள்வழி கண்டு கொண்டேன். திருக்குளம் படம் பார்த்த போதுதான் சென்ற நினைவு வந்தது. அது இருக்கும் 20 வருடங்களுக்கும் முன்.
பதிலளிநீக்குஉங்களின் மணிவிழாப் படங்களும் அருமை.
துளசிதரன்
வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்
நீக்கு20 வருடங்களுக்கு முன்பு பார்த்தீர்களா? இப்போது கோயில் பல மாற்றங்கள் பெற்று இருக்கிறது.
//உங்களின் மணிவிழாப் படங்களும் அருமை.//
நன்றி .
உங்கள் கருத்துக்கு நன்றி.