21.4. 2022 வியாழன் அன்று திட்டை கோயில் சென்று வந்தேன். தங்கையின் கணவருக்கு "ஷஷ்டியப்த பூர்த்தி" (மணிவிழா) அதில் கலந்து கொள்ள திருக்கடவூருக்கு உறவுகளுடன் சென்றேன் போகும் வழியில் சில கோவில் தரிசனம். திட்டை கோயில் தரிசனம் இந்த பதிவில். மாயவரத்தில் இருந்த போது போய் இருக்கிறோம். பழைய நினைவுகள் வந்து போயின.
தஞ்சை மாவட்டத்தில் "தென்குடித்திட்டை" என்ற ஊரில் இருக்கிறது இந்த கோயில். தஞ்சாவூரிலிருந்து 10 கிமீ தூரத்தில் உள்ளது .
கோபுர கலசங்கள், விமானம் அனைத்தும் கருங்கல்லால் கட்டப்பட்ட கோயில்.
சிறப்பு தரிசனம் 50 ரூபாய் கொடுத்து பார்த்தோம்
மூலவரை படம் எடுக்க முடியாது . நன்றி படம் - தினமணி
மூலவர் வசிஷ்டேஸ்வரர் . அம்மன் உலகநாயகி அம்மை,
சுவாமிக்கு பசுபதிநாதர், பசுபதீஸ்வரர், என்றும் அழைக்கபெறுகிறார். சுயம்பு மூர்த்தி. அதனால் ஸ்ரீசுயம்பூதேஸ்வரர் என்றும் அழைக்கபடுகிறார்.
திருஞானசம்பந்தர் அவர்களால் தேவாரப்பாடல் பெற்ற தலம்.
நன்றி - தினமணி
அம்மனுக்கு உலகநாயகி, சுகந்த குந்தாளம்பிகை , மங்களாம்பிகை என்ற பெயர்களும் உள்ளன.
அம்மனுக்கு முன் புறம் உள்ள நந்தி தாமிரத்தில் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் உள்ளது போல நல்ல அலங்காரமாக சுவாமியும், அம்மனும் இருந்தார்கள். மிகவும் பக்கத்தில் பார்த்தோம். ஸ்வாமி, அம்மன் இருவருக்கும் நடுவில் குருவின் சன்னதி உள்ளது. அனைவருக்கும் பூக்களுடன் விபூதி, குங்கும பிரசாதம் கொடுத்தார்கள்.
நான் எடுத்த படம்.
குரு நின்றகோலத்தில் இருக்கிறார் மலர் பந்தலில் அழகாய் காட்சி அளித்தார் வெள்ளி கவசம் அணிந்து. குருபெயர்ச்சி சிறந்த பரிகாரத்தலம் . ராஜ குருவாக இங்கு இருக்கிறார்.
பிரகாரத்தில் இருந்த மகாலிங்கம்.
வெளி பிரகாரம் சுற்ற அனுமதி இல்லை. கம்பு கட்டி தடுத்து உள்ளார்கள். குருவிற்கு விளக்கு போடும் இடம் மட்டும் வழி விட்டு இருக்கிறார்கள். தலவிருட்சம் முல்லை.
நந்தி வாகனம்
கோவில் முழுவதும் கருகல்லில் தான் கட்டப்பட்டு இருக்கிறது, கொடிமரமும் கருகல்லில் உள்ளது
கொடிமரத்திற்கு முன்னால் திருநீற்றுக் கோயில் என்று இருக்கிறது. அதில் திருநீறு இருக்கிறது.
சுவாமி சன்னதி
சம்பந்தர் சிலை வித்தியாசமாக இருக்கிறது எங்கும் இப்படி பார்த்தது இல்லை.
திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் கல்வெட்டில்
முன்னை நான் மறையவை முறைமுறை குறையொடுந்
தன்னதாள் தொழுதெழ நின்றவன் தன்னிடம்
மன்னுமா காவிரி வந்தடி வருடநற்
செந்நெலார் வளவயல் தென்குடித் திட்டையே
ஊறினார் ஓசையுள் ஒன்றினார் ஒன்றிமால்
கூறினார் அமர்தருங் குமரவேள் தாதையூர்
ஆறினார் பொய்யகத் தையுணர் வெய்திமெய்
தேறினார் வழிபடுந் தென்குடித் திட்டையே
- திருஞானசம்பந்தர் தேவாரம்
திட்டை கோயில் பல சிறப்புகளை கொண்டது. அதில் முக்கியமானது நெடு நாள் மருந்து மாத்திரை எடுத்து கொள்பவர்கள் இந்த தலத்து இறைவனை வணங்கினால் உடல் நலம் பெறலாம் என்பது . எல்லோரும் ஆரோக்கியமாக வாழ வேண்டிக் கொள்வோம்.
காரின் பின்பக்க கண்ணாடி வழியே எடுத்த படம்
கோயிலின் முன்புறம் உள்ள திருக்குளம். காரிலிருந்து எடுத்த படம்
குருபெயர்ச்சி நடந்தபோது வைத்த விளம்பர பலகையில் குரு அழகாய் காட்சி அளிக்கிறார்.
இறைவனை வணங்கி கொண்டு நிற்கிறது
வணக்கம் சகோ
பதிலளிநீக்குவிவரங்கள் அருமையாக சொல்லியுள்ளீர்கள்.
அழகிய படங்களுடன் தரிசனம் கிடைத்தது நன்றி.
வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்குஅந்த கோயிலின் சிறப்புகள் நிறைய இருக்கிறது.நான் கொஞ்சம்தான் சொல்லி இருக்கிறேன்.
குருபெயர்ச்சி 13ம் தேதி நடந்து இருப்பதால் பரிகாரம் செய்ய வருபவர்கள் கூட்டம் உள்ளது . பந்தல்கள் இருப்பதால் படம் எடுக்க வசதி இல்லை. முடிந்தவரை எடுத்தேன்.
உங்கள் கருத்துக்கு நன்றி ஜி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குநலமா? இன்றைய பதிவு அருமையாக உள்ளது. தென்குடித் திட்டை கோயில் அழகாக உள்ளது.ஒவ்வொரு படங்களும் கண்களுக்கு நிறைவாக இருக்கிறது. கோயிலைப் பற்றி தாங்கள் விரிவாக சொல்லியிருப்பதும், தாங்கள் பகிர்ந்த படங்களின் வாயிலாகவும் இன்று காலை எழுந்தவுடன் எனக்கு அற்புதமான இறை தரிசனம் கிடைத்தது. கோபுர தரிசனமும் கண்டு கொண்டேன். இறைவன் இறைவியை மனமாற தரிசித்துக் கொண்டேன். கோவில் மிகவும் தூய்மையாக உள்ளது. பழமையான கோவில் போலும். முழுதுமாகவே கருங்கல்லில் கட்டப்பட்ட இத்தகைய கோவில்களை தரிசனம் செய்யும் போது மனதுக்குள் ஒரு மகிழ்ச்சி வருகிறது.
தஞ்சை, கும்பகோணம் பகுதியில் நிறைய பழங்கால கோவில்கள் உள்ளன. ஒவ்வொன்றையும் ஆற அமர சென்று பார்க்க வேண்டும். அதற்கு இறைவன் அழைக்க வேண்டும்.
தங்கள் தங்கைக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளையும் கூறவும். அவர்களின் மணிவிழாவில் கலந்து கொள்ள உறவுகளுடன் சென்ற உங்களுக்கு அற்புதமான இறை தரிசனங்கள் காணப் பெறும்படி செய்ததற்கு அந்த இறைவனுக்கும் நன்றி.
/திட்டை கோயில் பல சிறப்புகளை கொண்டது. அதில் முக்கியமானது நெடு நாள் மருந்து மாத்திரை எடுத்து கொள்பவர்கள் இந்த தலத்து இறைவனை வணங்கினால் உடல் நலம் பெறலாம் என்பது . எல்லோரும் ஆரோக்கியமாக வாழ வேண்டிக் கொள்வோம்./
அதுதான் நம் அனைவருக்கும் வேண்டியது.இறைவன் அனைவரது பிணிகளை களைந்து ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டுமென நானும் மனமுருக பிரார்த்தனை செய்து கொண்டேன்.
நீங்கள் எங்கு சென்றாலும், உங்கள் மீது நேசமாக பறவைகளும் உங்களை பின் தொடர்ந்து வந்து விடுகிறது. இந்த தடவை ஸ்வாமி தரிசனம் செய்ய உங்களுடனேயே இந்த குருவியும் வந்திருக்கிறது. இரட்டைவால் குருவி படங்கள் அழகாக இருக்கிறது. நானும் இதை பல சமயங்களில் ஊரிலிருக்கும் போது பார்த்துள்ளேன். அழகான படங்களை தந்த உங்களுக்கு மிக்க நன்றி. அடுத்து திருக்கருகாவூர் அம்மனையும் ஸ்வாமியையும் காண காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கம்லா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்குநலமாக இருக்கிறேன். உடல்நிலை சரியில்லாமல் இருந்து இப்போது நலம் பெற்று வருகிறேன். சொந்தங்களுடன் நேரம் செலவிட்டது மனதில் புத்துணர்ச்சி தந்து கொண்டு இருக்கிறது. எல்லோரும் கை, கால் வலிகளை மறந்து இறைவனை வணங்கி வந்தோம். கோயிலுக்கு போய் விட்டு கால்வலி என்று சொல்லகூடாது என்று பேசி கொண்டோம்.
கோயிலில் அவ்வளவு கூட்டம் இருந்தது ஆனால் மிக தூய்மையாக இருந்தது.
சோழர் காலத்தில் கட்டிய மிக பழமையான கோயில்தான் திட்டை கோயில்.
//தஞ்சை, கும்பகோணம் பகுதியில் நிறைய பழங்கால கோவில்கள் உள்ளன. ஒவ்வொன்றையும் ஆற அமர சென்று பார்க்க வேண்டும். அதற்கு இறைவன் அழைக்க வேண்டும்.//
ஆமாம். கண்டிப்பாய் அழைப்பார் சென்று வருவீர்கள்.
நாங்களும் மாயவரத்தில் இருந்ததால் நிறைய கோயில்கள் பார்க்க முடிந்தது.
என் உறவினர்களும் நீங்கள் போய் வந்த கோயில்கள் போகும் வழியில் இருந்தால் சொல்லுங்கள் பார்ப்போம் என்றார்கள். அப்படி தேர்வு செய்து பார்த்த கோயில்களை.
//தங்கள் தங்கைக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளையும் கூறவும். அவர்களின் மணிவிழாவில் கலந்து கொள்ள உறவுகளுடன் சென்ற உங்களுக்கு அற்புதமான இறை தரிசனங்கள் காணப் பெறும்படி செய்ததற்கு அந்த இறைவனுக்கும் நன்றி.//
தங்கைக்கு உங்கள் வாழ்த்துகளை சொல்கிறேன் நன்றி.
ஆமாம், இறைவனுக்கு நன்றி சொல்லி கொண்டு இருக்கிறேன். மேல்கால்வலி என்று மகன், மகளிடம் சொல்லி கொண்டே இருந்தேன். அவர்களும் மேலே தடவி கொள்ளும் மருந்துகள் அனுப்பினார்கள்.மகன் மசாஜ் செய்து கொள்ளும் கருவிகள் அனுப்பினார்.
மருத்துவரிடமும் சென்று வந்து மாத்திரைகள் எடுத்து கொள்கிறேன்.
தேகபலம் தந்து கோயில்களை பார்க்க வைத்தற்கு அனைவருக்கும் நன்றி சொல்லி கொண்டு இருக்கிறேன்.
//அதுதான் நம் அனைவருக்கும் வேண்டியது.இறைவன் அனைவரது பிணிகளை களைந்து ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டுமென நானும் மனமுருக பிரார்த்தனை செய்து கொண்டேன்.//
ஆமாம், பிரார்த்தனை செய்து கொண்டது நல்லது. கூட்டு பிரார்த்தனை பலன் அளிக்கும் கண்டிப்பாய்.
//ஸ்வாமி தரிசனம் செய்ய உங்களுடனேயே இந்த குருவியும் வந்திருக்கிறது. இரட்டைவால் குருவி படங்கள் அழகாக இருக்கிறது. //
நன்றி.
இந்த குருவி வணங்கிய கோயில் "திருவலிவலம்" உள்ளது. திருவாரூர் பாக்கம் உள்ளது இந்த கோயில் இந்த பறவைக்கு வலியன் என்ற் பேரும் உள்ளது.இந்த பறவைகளை அடிக்கடி பார்க்கலாம். ஆடு, மாடு மேல் அமர்ந்து பயணம் செய்யும். முன்பு அப்படி படங்கள் எடுத்து இருக்கிறேன்.
உங்கள் மகன் நலமாக ஊர் போய் சேர்ந்து பேசி கொண்டு இருப்பார்கள் உங்களுடன்.
உங்கள் உடல் நிலையும் இப்போது சரியாகி இருக்கும் என்று நம்புகிறேன்.
உங்கள் விரிவான பின்னூட்டம் மகிழ்ச்சியை தருகிறது. நன்றி நன்றி.
அழகிய படங்கள். அதிகாலையில் லிங்கேஸ்வரர் தரிசனம். நன்றி. நான் கூட ஒரு சிவன் கோவில் செல்லவேண்டும் என்ற ஆவல் இருந்தது. ஆனால் இன்றும் ஒரு பெருமாள் கோவில்தான் செல்கிறேன்!
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்கு//நான் கூட ஒரு சிவன் கோவில் செல்லவேண்டும் என்ற ஆவல் இருந்தது. ஆனால் இன்றும் ஒரு பெருமாள் கோவில்தான் செல்கிறேன்!//
ஹரியும், சிவனும் ஒன்றே ! நமக்கு. நீங்கள் சிவன் கோயில் போக வேண்டும் என்று நினைத்தீர்கள் பசுபதீஸ்வரர் காட்சி அளித்து விட்டாரே!.
தினமணி இணையதளத்திலிருலிருந்து படங்களை சேமிக்க முடிந்ததா? மறுக்குமே...
பதிலளிநீக்குதிட்டை கோயில் மூலவர்கள் அழகான அலங்காரத்தில் இருந்தார்கள் அவர்கள் படம் தேடிய போது தினமணியில் கிடைத்தது. காப்பி இமேஜ் செய்தேன்.செய்திகளை காப்பி எடுக்க முடியாது மறுக்கும்.
நீக்குதிட்டையிலிருந்து வந்து என்னுடன் ஒரு மாணவன் படித்தான். அவனை திட்டை என்றே அழைப்போம். ஆதலால் அவன் உண்மையான பெயர் இப்போது நினைவுக்கு வரவில்லை!
பதிலளிநீக்கு//திட்டையிலிருந்து வந்து என்னுடன் ஒரு மாணவன் படித்தான். அவனை திட்டை என்றே அழைப்போம். //
நீக்குநினைவுகள் வந்து விட்டதா திட்டை பேர் வாசித்த போது.
எனக்கும் கோயில் உலா போது நினைவுகள் வந்தன, உறவுகளுடன் பேசி கொண்டே வந்தேன்.
திட்டையிலிருந்து நிறைய மாணவர்கள் பூம்புகார் கல்லூரியில் படித்தார்கள். எந்த கோயில் சென்றாலும் சாரின் மாண்வர்களை பார்ப்போம். சாருக்கு வணக்கம் சொல்லி சிறிது நேரம் பேசுவார்கள் வீட்டுக்கு அழைத்து செல்வார்கள்.
கரிச்சான் குருவி கடவுளை நோக்கி வணங்கி நிற்கும் காட்சி கற்பனை ஜோர்.
பதிலளிநீக்குஸ்ரீராம் கற்பனை அல்ல , உண்மையாக கரிச்சான் குருவி வணங்கிய தலம் திருவாரூர் அரிகில் உள்ளது "திருவலிவலம்" என்று அந்த ஊர் பறவையின் பேரில் இருக்கிறது. வலியன் என்ற பேரும் இதற்கு உண்டு.
பதிலளிநீக்குமாயவரம் அருகில் கருங்குயில் பேட்டை என்ற ஊர் இருக்கிறது அங்கு குயில் வழி பட்டு இருக்கிறது.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
அழகிய படங்கள்... ஓம் நமச் சிவாய...
பதிலளிநீக்குவணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
தல யாத்திரைகள் என்றுமே இனிமையானவை. கண்ணுக்கு விருந்தும் மனதுக்கு அருளும் சேர்ந்து கிடைக்கிறது அல்லவா?
பதிலளிநீக்குயாத்திரை விவரணமும் படங்களும் நன்றாக உள்ளன.
Jayakumar
வணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகரன் சார், வாழ்க வளமுடன்
நீக்குஆமாம், நீங்கள் சொன்னது போல தலயாத்திரை இனிமையானவைதான். அதுவும் உறவுகளுடன் பல கதைகளை பேசி போய் வரும் போது மேலும் இனிமை.
மனதுக்கு ஆறுதல், இறைவனின் அருளும் கிடைப்பது உண்மை.
உங்கள் கருத்துக்கு நன்றி.
இவ்வளவு தூரம் வந்திருக்கின்றீர்கள்... ஒரு வார்த்தை தெரிந்திருந்தால் தங்களை நான் வந்து சந்தித்திருப்பேன்.. நல்லபடியாக தரிசனம் பெற்றதற்கு மகிழ்ச்சி..
பதிலளிநீக்குவணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்
நீக்குதிட்டமிடா பயணம். திருகடவூர் கல்யாணத்திற்கு போவது மட்டும் தான் உறுதி செய்தோம். அப்புறம் போகும் வழியில் தங்கை மகளை புதுகோட்டையில் போய் பார்த்து காலை டிபனை முடித்து விட்டு வழியில் கோவில்கள் தரிசனம். மாலை 5 மணிக்கு திருக்கடவூர் முதல் கால பூஜையில் கலந்து கொள்ள வேண்டும் என்று போய் விட்டோம்.
மாயவரம் நட்புகளும் அப்படித்தான் சொன்னார்கள்.
தஞ்சைக்கு அருகில் இருக்கும் தென்குடித் திட்டையைப் பற்றிய பதிவு அழகான படங்களுடன் சிறப்பு.. அப்பர் ஸ்வாமிகளின் குருபூஜையாகிய இன்று சிவதரிசனம் புண்ணியம்..
பதிலளிநீக்குஆமாம், நீங்கள் போய் வந்து பதிவு போட்டது படித்து அங்கும் என் கருத்தை சொல்லி இருக்கிறேன்.
நீக்குஅப்பர் ஸ்வாமிகள் குருபூஜை பதிவை படித்தேன். காலையில் சித்திரை சதயம் பதிவில் தரிசனம் செய்தேன்.
உங்கள் பதிவாலும் புண்ணியம்தான்.
இந்த வருடம் பிப்ரவரி 24 ல் தரிசனம் 7 தலைப்பில் தென்குடித் திட்டை கோயிலைப் பற்றி எழுதியுள்ளேன்... தங்களது கருத்தும் அங்கே உள்ளது..
பதிலளிநீக்குஎனக்கு எதிர்பாராமல் கிடைத்தது திட்டை கோயில் தரிசனம்.
நீக்குஇப்போது ஊருக்கு வந்து விட்டதால் உங்களுக்கு கோவில்கள் தரிசனம் கிடைக்கிறது இறையருளால். கிடைக்கும் போது நன்றாக பாருங்கள் அனைத்து கோயில்களையும்.
உடம்பையும் பார்த்து கொள்ளுங்கள்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
அழகான கோவில். ஒரு முறை அங்கே பயணித்திருக்கிறேன்.
பதிலளிநீக்குவணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
நீக்குஆமாம், அழகான கோயில். உங்கள் கருத்துக்கு நன்றி.
எல்லோருக்குமே கருத்துப் பெட்டி மாறி இருக்குப் போல. எ.பி.யில் மட்டும் இல்லை. துரையின் பதிவிலும். என்னோடதில் யாரானும் சொன்னால் தான் தெரியும். ஆனாலும் அத்தனை கஷ்டமாக இல்லை. அதோடு இப்போ எல்லா அறிவிப்புக்களும் தமிழிலேயே வருகின்றன. ஆங்கிலக்கலப்பே இல்லை. காப்சா பற்றிச் சொல்லும்போது கூட அந்த வார்த்தை மட்டுமே ஆங்கிலம்.
பதிலளிநீக்குவணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
நீக்குஎல்லோருக்கும் கருத்துப்பெட்டி மாறி இருக்கிறது. எனக்கு காலை 10 மணியிலிருந்து மாற்றம். அவ்வளவு கஷ்டம் இல்லைதான்.
தென்குடித்திட்டை அடிக்கடி போயிருக்கோம். மெலட்டூர் தான் என் நாத்தனாரின் புக்ககம். அங்கே போனால் மட்டுமின்றி திட்டை கோயில் தரிசனத்துக்கு என்றே போயிருக்கோம். கருங்கல்லால் கொடிமரம் என்பதால் இது சோழர் காலத்துக்கும் முந்தையதாக இருக்குமோனு நினைக்கிறேன். எப்படியும் பழமையான கோயில் தான். ஞானசம்பந்தரும் அழகாகச் சிறு குழந்தையாகக் காட்சி அளிக்கிறார். படங்கள் எல்லாமே அருமையாக வந்திருக்கின்றன.
பதிலளிநீக்குமெலட்டூர் அருகில்தான் இருக்கிறது தென்குடித்திட்டை. தல வரலாறில் சோழர் காலத்து கோயில் என்று சொல்கிறது. அதற்கு முன் என்றாலும் மிக அருமையாக இன்னும் இருக்கிறது கோயில்.
நீக்குஞானசம்பந்தரும் சிறு குழந்தையாக ஆவுடையார் போன்ற பீடத்தில் இருப்பது வேறு எங்கும் பார்த்தது இல்லை.
நாங்களும் இரண்டு முறைகள் போய் இருக்கிறோம்.
படங்களை பாராட்டியதற்கு நன்றி.
கரிக்குருவியும் அழகாய்ப் பிரார்த்தித்துக் கொண்டு இருக்கிறது. வலிவலம் தான் அந்தக் குருவிக்கான தலம் என்பது அறிந்திருக்கேன். ஆனாலும் போனதில்லை. பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணத்தில் கரிக்குருவிக்கு உபதேசம் செய்த படலம் என்றொரு திருவிளையாடல் உண்டு. எனக்கு அது நினைவில் வந்தது. ஆவணி மூலத்திருவிழாவின் போது இந்தப் படலம் ஒவ்வொரு வருஷமும் நிகழ்வாக நடத்திக் காட்டப்படும். அப்போது தான் ஈசன் அருளால் கரிக்குருவிக்கு "வலியன்" என்னும் பெயரை ஈசன் சூட்டினதாகச் சொல்லுவார்கள்.
பதிலளிநீக்குஆமாம், கரிக்குருவியும் அழகாய் பிராத்தித்துக் கொண்டு இருக்கிறது.
நீக்குவலிவலம் போய் இருக்கிறோம். திரிவிளையாடல் புராணத்தில் கரிக்குருவிக்கு உபதேசம் செய்த படலம் உண்டு. ஆவணி மூலத்திருவிழாவில் புட்டு திருவிழா மட்டுமே பார்த்து இருக்கிறேன். கரிக்குருவிக்கு உபதேசம் பார்த்தது இல்லை.
பெயர் காரணம் விளக்கத்திற்கு நன்றி.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
தென்திட்டை அப்பனையும் அம்மையையும் மனதாரக் கண்டேன். கோயில் படங்களும் அதைப்பற்றிய விவரமும் நன்று
பதிலளிநீக்குதுளசிதரன்
வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
கோமதிக்கா வெயில் பயங்கரமா இருந்திருக்குமே. கரிக்குருவி/கரிச்சான்/ரெட்டைவால் தெரிகிறதே....
பதிலளிநீக்குகீதா
வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்குநீங்கள் சொல்வது சரிதான் பயங்கர வெயில். ரெட்டைவால் தெரிகிறமாதிரி எடுத்தது வந்து விட்டது மகிழ்ச்சி.
கோயில் பெரிய கோயிலாக இருக்கும் என்று தெரிகிறது. கருங்கல்லில் வடிவமைத்திருப்பதுதான் அழகுகோமதிக்கா. அப்படியான கோயில்கள் தனிதான் பழமைவாய்ந்த கோயில் என்பதும் அதன் ஈர்ப்பும் தனி. புதிதாய் வரும் கோயில்கள் மொசைக் டைல்ஸ் எல்லாம் போடுவது ஏனோ கொஞ்சம் அந்நியப்படுவது போல் ..ஒரு வேளை எனக்கு அப்படித் தோன்றுகிறதாக இருக்கலாம். பக்திக்கு அதெல்லாம் முக்கியமில்லைதான்.
பதிலளிநீக்குகீதா
மிக பெரிய கோயில் இல்லை, ஒரளவு பெரிது.
நீக்குகருங்கல்லில் இருக்கிறது கோயில் கோயில் புதிதாகவே இருக்கிறது.
பழமையாக இருந்தாலும் புதிதாக தோன்றும் கோயில்.
மொசைக் டைல்ஸ் எல்லாம் போடுவது பழமையான கோயிலில் நன்றாக இருக்காதுதான்.
கோபுர கலசம் விமானம் ரொம்ப அழகு. இப்படி இருப்பதுதான் சிறப்பாக இருப்பது போல் தோன்றுகிறது. ரசித்துப் பார்த்தேன்.
பதிலளிநீக்குகீதா
கோபுர கலசம், விமானம் அழகுதான் கீதா.
நீக்குமுன் மண்டபம் புதிதாக கட்டி இருப்பதால் கோபுடத்தை முழுமையாக எடுக்க முடியவில்லை. முன்பு போன போது எடுத்த படத்தை தேடி போட முடியவில்லை. தேடவேண்டும்.
ரசித்து பார்த்தது மகிழ்ச்சி.
திருநீற்றுக் கோயில் அதன் வடிவம் அழகாக இருக்கிறது கோமதிக்கா.
பதிலளிநீக்குநல்ல தரிசனம் கிடைத்தது என்று தெரிகிறது. நல்ல பயணம். நானும் நம் எல்லோருக்காகவும் பிரார்த்தித்துக் கொண்டே ன். எல்லோரும் மாத்திரை மருந்தில்தானே காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறோம்!
கீதா
திருமுறை கோயில் என்று பன்னிரு திருமுறைக்கு கோயில் அமைத்து இருப்பார்கள் அது போல திருநீற்றுக்கு மைத்து இருப்பது பார்க்க அழகு..
நீக்குநல்ல பயணம் எனக்கு உடம்பு சரியில்லாமல் இருக்கும் போது கிடைத்தது மகிழ்ச்சியாக இருந்தது.
எல்லோரும் மருந்து மாத்திரைகளிலிருந்து விடுபட்டால் நல்லதுதான்.
இறைவன் கருணை உடையவன் அனைவரையும் காக்க வேண்டும்.
உங்கள் காருத்துக்கு நன்றி கீதா.
படங்களும் விரிவான பகிர்வும் நன்று.
பதிலளிநீக்குபுதுமையான கோவில் கண்டு கொண்டோம்.
பதிலளிநீக்குவணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
நீக்குபழமையான புதுமையான கோயில்.
உங்கள் கருத்துக்கு நன்றி.