வியாழன், 26 மே, 2022

அமிர்தகடேஸ்வரர் ஆலயம்



திருக்கடவூர் கோயில்  25 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடந்து இருக்கிறது. 


அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவில்  அஷ்ட வீரட்ட தலங்களில் ஒன்று. அபிராமி பட்டருக்காக அமாவாசையை  பவுர்ணமியாக்கிய  கோயில் எல்லோருக்கும் இந்த கதை தெரிந்து இருக்கும். அபிராமி பட்டர் "அபிராமி அந்தாதி" பாடிய தலம்.

அடுத்து மார்க்கண்டேயருக்காக எமனை  காலால் உதைத்த   இடம். எமபயத்தை போக்கும் கோயில் என்பதால் இங்கு  மணிவிழா, பவளவிழா , சதாபிஷேகம் விழாக்கள் இங்கு நடைபெறும்.

அப்பர், சம்பந்தர், சுந்தரர்   மூவராலும்  தேவாரப்பாடல் பெற்ற தலம். பல புராண கதைகளை கொண்ட பல சிறப்புகளை கொண்ட  கோயில். கோவிலுக்கு பல தடவை போய் வந்து பதிவு போட்டு இருக்கிறேன். கும்பாபிசேகம் நடந்து கோயில் புதுபொலிவுடன் இருக்கிறது .
காலை எடுத்த  படம்

தங்கி இருந்த விடுதி அறையிலிருந்து ஜன்னல்வழியே அதிகாலை  கோபுர தரிசனம் செய்து விட்டு எடுத்த படம்
ஆதவன் வழி பாடு
அலைபேசியில் எடுத்த படம்
ஜன்னல்வழியே எடுத்த  படம்


நாங்கள் தங்கி இருந்த விடுதி

விடுதியில் வரவேற்பு அறை தோற்றம்.
பிள்ளையாரை வணங்கி விட்டு கோவிலுக்கு போவார்கள்

மாலை நேரம்

முன்பக்கம் மண்டபம் மறைப்பதால் முழு கோபுரத்தையும் பக்கவாட்டில் எடுத்த படம். தெருவிளக்கின் ஒளி அபிராமி  முழு நிலவை ஒளி வீச வைத்தது போல இருக்கா?

கோயில் தோரண வாயில்


இரவு வண்ண விளக்கு அலங்காரம். மண்டபத்தில்   அபிராமி பட்டர் கதை, மார்க்கண்டேயர் வரலாறு   ஓவியமாக  தீட்டப்பட்டு இருக்கிறது. மேல் விதானத்தில்  அலங்கார  வட்ட கோலங்கள்.

கோபுரம்  இரவு நேரத்தில் அலை பேசியில் எடுத்த படங்கள்.
தேர் நிற்கும்  இடம் 
தேர்
குழந்தைகளுக்கு காத்தாடி

 கோபுர வாசலை தாண்டி உள்ளே போனால் நீண்ட நடைபாதை மண்டபத்தில் மேல்விதான ஓவியங்கள்

கோயில் யானை அபிராமி
சுவாமி சன்னதி கொடிமரம் 

அம்மன் சன்னதி செல்லும்  வாயில் இரவுக் காட்சி
இரண்டு பக்கமும் விளக்குதூண் அழகாய் இருக்கும்  அம்மன் கோயில் வாசலில்


அம்மன் சன்னதி வாசல் பக்கம் இருந்து வெளி கோபுரமும், உள் மண்டபமும்
தங்கை மணிவிழா நடந்த வெளி பிரகாரம். 

அடுத்து அடுத்து திருமணங்கள் நடக்க போகிறது(இந்த படம் தங்கை திருமணத்திற்கு  ஏற்பாடு.
ஒளி வெள்ளத்தில் மணமக்கள்

இப்போது திருமணங்கள் கோயில் உள்ளே நடைபெறுவது இல்லை. வெளி பிரகாரத்தில்  நல்ல உயரமான மேல் விதானத்துடன்,  நீண்ட தூண்களுடன் அழகாய்  கட்டி இருக்கிறார்கள்.  அந்த  இடத்தில் நடைபெறுகிறது.

  ஹோம புகை போக நல்ல  ஜன்னல்களுடன் மண்டபம் வசதியாக இருக்கிறது. ஆனால் இட நெருக்கடி. நிறைய திருமணங்கள். இரண்டு வரிசையாக இரண்டு பக்கமும் நடக்கிறது.  முன்பு கோயிலுக்குள் நடக்கும் போது  ஹோம புகை கண்களை கசக்க வைக்கும். இப்போது நிறைய திருமணங்கள் நடந்தும் கண் எரியவில்லை.

 கீழே அமர முடியாதவர்களுக்கு நாற்காலி 5 ரூபாய் கொடுத்து வாங்கி கொள்ளலாம். நாற்காலிகளை யாரும் காசு கொடுக்காமல் எடுக்க முடியாது சங்கிலியால் பிணைத்து வைத்து இருக்கிறார்கள்.

திருக்கடவூருக்கு அடுத்து என்ன கோயில் போனோம் என்பது அடுத்த பதிவில் பார்ப்போம்.


இன்று மருமகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துங்கள்  . உங்களுடன் இணைந்து நானும் வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன்  என்று.
அமிர்தகடேஸ்வரர், அபிராமி  இருவரும்  எல்லா நலங்களையும் அருள வேண்டும்.


வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
----------------------------------------------------------------------------------------------------

40 கருத்துகள்:

  1. இன்று காலையில் அழகான தரிசனம்.. பற்பல கோணங்களில் கோபுர தரிசனம் அருமை..

    கோயிலின் அழகை தங்களது பதிவு காட்டுகின்றது..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்

      //இன்று காலையில் அழகான தரிசனம்.. பற்பல கோணங்களில் கோபுர தரிசனம் அருமை..//

      நன்றி.

      கோயில் புது பொலிவுடன் இருப்பதை இரவு நிறைய எடுத்தேன். காலை தங்கையின் திருமணம், உறவுகளுடன் உரையாடல் என்று இருந்து விட்டேன். காலையில் படங்கள் அவ்வளவாக எடுக்கவில்லை.
      கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  2. இன்று பிறந்த நாள் காணும் தங்களது அன்பின் மருமகள் அன்னை அபிராம வல்லியின் நல்லருளால் மேலும் மேலும் நலம் பெற்று வாழ்ந்திட வேண்டிக் கொள்வோம்...

    பதிலளிநீக்கு
  3. //இன்று பிறந்த நாள் காணும் தங்களது அன்பின் மருமகள் அன்னை அபிராம வல்லியின் நல்லருளால் மேலும் மேலும் நலம் பெற்று வாழ்ந்திட வேண்டிக் கொள்வோம்...//

    உங்களின் வாழ்த்துக்கு மகிழ்ச்சி, நன்றி. அபிராமிவல்லியின் நல்லருளும் உங்கள் வாழ்த்தில் இருக்கிறது. எல்லோரின் பிரார்த்தனையும் மருமகளுக்கு நலம் சேர்க்கும். நன்றி .

    பதிலளிநீக்கு
  4. முதலில் உங்கள் மருமகளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.  எல்லா நலனும் வளமும் பெற்று நீடுழி வாழ வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //உங்கள் மருமகளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். எல்லா நலனும் வளமும் பெற்று நீடுழி வாழ வாழ்த்துகள்//

      நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. படங்கள் சிறப்பாய் வந்திருக்கின்றன.  கோவில் புது வர்ணம் பூசிக்கொண்டிருக்கிறது என்பது பார்த்தாலே தெரிகிறது.  வெளிப்பிரகாரத்தில் என்றால் யானையை அழைத்து வந்து விடுமே அதற்கு அடுத்த உள் பிரகாரமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், கோவில் புது வர்ணம் பூசிக் கொண்டு இருப்பது மகிழ்ச்சிதான். கடற்காற்று இன்னும் சில நாளில் பழசு போல மாற்றி விடும்.
      கொடிமரத்தின் இடது பக்க பிரகாரம். கொடி மரத்துக்கு பக்கம் தான் கோபூஜை, கஜபூஜை செய்வார்கள் மணமக்கள்.

      நீக்கு
  6. உங்கள் தங்கைக்கும் தங்கை கணவருக்கும் மணிவிழா வாழ்த்துகள்.  கனகாபிஷேகம் எனும் கட்டிடம் பார்த்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.  கோவில் நோக்கி சென்றால் வலது புறம் இருந்த ஒரு தங்குமிடத்தில் ஒருமுறை தங்கி இருக்கிறேன்.  மற்ற இருமுறைகள் பக்கவாட்டில் ஏற்பாடு செய்யப்பட வீட்டில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //உங்கள் தங்கைக்கும் தங்கை கணவருக்கும் மணிவிழா வாழ்த்துகள்.//

      நன்றி ஸ்ரீராம், அவர்களிடம் சொல்லி விடுகிறேன் உங்கள் வாழ்த்தை.

      கனகாபிஷேகம் எனும் கட்டிடம் பார்த்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்//

      கோவிலுக்கு போகும் போது கடைசியில் பிள்ளையார் கோவில் அருகில் இடது பக்கம் உள்ளது.

      குருக்கள் வீடுகள் எல்லாம் இப்போது தங்கும் விடுதிகளாக மாற்ற்ம் அடைந்து உள்ளது. முன்பு ஓட்டு வீடாக இருக்கும் இப்போது நவீன வசதிகளுடன் இருக்கிறது. திருமண்ம் செய்பவர்களுக்கு உணவு தங்குமிடத்திற்கு குறைவு ஒன்றும் இல்லை. முன் பதிவு செய்து கொள்ள் வேண்டும் தீடிரென்று போய் நின்றால் அறைகள், உணவு வசதி கிடைக்காது.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.


      .

      நீக்கு
  7. படங்கள் அழகாக வந்திருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம், சந்திர சேகரன் சார், வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  8. கோபுர தரிசனம் அருமை.

    தங்கும் விடுதியை அறிந்துகொண்டேன். கோவில் பிரம்மாண்டமாக இருக்கிறது. தமிழகத்தில் பார்க்கவேண்டிய கோவில்களே ஏகப்பட்டன இருக்கின்றன.

    உங்கள் மருமகளுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்
      நிறைய தங்கும் விடுதிகள் இருக்கிறது. இந்த முறை தங்கை பிள்ளைகள் போட்ட விடுதி நன்றாக இருந்தது. அதிகாலையில் கோபுர தரிசனம் செய்து சூரிய உதயம் பார்த்தது மனதுக்கு மகிழ்ச்சி.

      நிறைய இருக்கிறது தமிழகத்தில் கோயில்கள். மாயவரத்தில் இருந்த போது கோயில்கள் தரிசனம் அடிக்கடி கிடைத்தது.


      //உங்கள் மருமகளுக்கு வாழ்த்துகள்//

      நன்றி .

      நீக்கு
  9. இங்கெல்லாம் தங்கி பல கோவில்களையும் தரிசனம் செய்யவேண்டும்.

    சொல்லடி அபிராமி பாடலையும் காட்சிகளையும் நினைவுபடுத்திவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கெல்லாம் தங்கி பல கோயில்களை தரிசனம் செய்யலாம், தரங்கம்பாடி, பூம்புகார் கடற்கரையை ரசிக்கலாம்.
      சொல்லடி அபிராமி பாடல் படம் சார் வரைந்தது முன்பு பகிர்ந்து இருக்கிறேன்.

      அந்த பாடலையும் எஸ்.வி சுப்பையா அவர்கள் நடிப்பையும் மறக்க முடியாது.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  10. இக்கோயிலுக்குப் பல முறை சென்றுள்ளேன். குடமுழுக்கிற்குப் பின்னால் உங்கள் பதிவு மூலமாகக் காணும் வாய்ப்பினைப் பெற்றேன்.அழகான புகைப்படங்கள். சிறப்பான பதிவு.
    சில கோயில்களில் ராஜகோபுரத்திற்கு முன்பாக (பல கோயில்களில் உள் கோபுரங்களுக்கு முன்பாகவும்) புதிதாக ஒரு மண்டபத்தையோ, அமைப்பையோ கட்டிவிடுகின்றனர். ராஜகோபுரத்தின் முழு அழகினை இவ்வமைப்பு சிதைத்துவிடுவதுடன், பழைமையையும் நாம் இழக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்
      //அழகான புகைப்படங்கள். சிறப்பான பதிவு.//

      நன்றி.

      //சில கோயில்களில் ராஜகோபுரத்திற்கு முன்பாக (பல கோயில்களில் உள் கோபுரங்களுக்கு முன்பாகவும்) புதிதாக ஒரு மண்டபத்தையோ, அமைப்பையோ கட்டிவிடுகின்றனர். ராஜகோபுரத்தின் முழு அழகினை இவ்வமைப்பு சிதைத்துவிடுவதுடன், பழைமையையும் நாம் இழக்கிறோம்.//

      ஆமாம், நீங்கள் சொல்வது சரிதான்.

      இந்த கோயிலில் மணமக்களை யானை வந்து உள்ளே அழைத்து போகும். கோபுற வாசலில் உறவினர்கள் எல்லோரும் கூடுவார்கள்.
      மழை வெயில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க இது போல செய்து விட்டார்கள் போலும். திருவிடைமருதூர் கோயில் வாசலில் கொட்டகை போட்டு இருப்பார்கள். ராஜகோபுரத்தை நிறைய இடங்களில் முழுமையாக பார்க்க முடிய மாட்டேன் என்கிறது.
      நீங்கள் சொல்வது போல ராஜகோபுரத்தின் அழகினை சிதைப்பது போலவும், பழமையை இழப்பது போலவும் தான் இருக்கிறது.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.






      நீக்கு
  11. நீண்ட பிரகாரம் மேலுள்ள வண்ண ஓவியங்கள் போல, பதிவின் ஒவ்வொரு படமும் துல்லியமாக உள்ளது... நம்ம தலைநகர் தல தளத்தின் படங்கள் ஒரு வகை என்றால், இங்கு வேறு வகை...! அற்புதம்...

    தங்களின் மருமகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் திண்டுக்கல் தன்பாலன், வாழ்க வளமுடன்

    //நீண்ட பிரகாரம் மேலுள்ள வண்ண ஓவியங்கள் போல, பதிவின் ஒவ்வொரு படமும் துல்லியமாக உள்ளது.//

    நன்றி தன்பாலன்.

    //நம்ம தலைநகர் தல தளத்தின் படங்கள் ஒரு வகை என்றால், இங்கு வேறு வகை...! அற்புதம்..//

    வெங்கட் படம் எடுப்பதில் வல்லவர்.
    என் படங்களையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

    //தங்களின் மருமகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்...//

    நன்றி.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி நன்றி.





    பதிலளிநீக்கு
  13. கோமதிக்கா படங்கள் எல்லாம் மிக அழகு. இதே போன்று ஒரு விடுதி மணிவிழா விடுதி என்று ஒன்று இருக்கு இல்லையா? அங்கு தான் வெங்கட்ஜி அவர் நண்பரின் 60விழாவிற்குத் தங்கியிருந்ததாகச் சொன்ன நினைவு.

    ஜன்னல் வழியே எடுத்த படம் முதல் படம் எல்லாம் அழகு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
      மணிவிழா, சாதபிஷேகம் , என்ற பேர்களில் ஓட்டல் இருக்கிறது.
      எங்கள் வீட்டு திருமணங்களுக்கு மணிவிழாவில் அறைகள் போட்டு இருக்கிறோம். மணிவிழா மாயவரத்திலும் இருக்கிறது.

      //ஜன்னல் வழியே எடுத்த படம் முதல் படம் எல்லாம் அழகு//

      நன்றி கீதா.



      நீக்கு
  14. கோபுரத்தின் பக்கவாட்டுப் பகுதி விளக்குகளுடன் அழகு.

    இரவுப் படங்களும் அழகாக வந்திருக்கின்றன அக்கா.

    தோரண வாயில், தோரண வாயில் உள்பக்க கோபுரம் ஆஹா...செம...அலைபேசியில் அழகாக வந்திருக்கின்றன கோமதிக்கா..

    தெர் வித்தியாசமாக ஓலைக்கூரையுடன் அழகாக இருக்கின்றதே!!! ரொம்ப அழகு.

    குழந்தைகளுக்கான காத்தாடிகள், மேல்விதான படங்கள், அழகு அபிராமி!!!!,
    அம்மன் சன்னதி செல்லும்வ் வாயில், விளக்குத்தூண்- ஆஹா என்ன அழகு!! படங்களும் அழகாக எடுத்திருக்கீங்க அக்கா.

    விவரங்களும் அருமை

    உங்கள் மரும்களுக்கு அன்பான இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்! கோமதிக்கா

    எல்லாம் ரசித்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைத்து படங்களையும் ரசித்து கருத்து சொன்னதற்கு மகிழ்ச்சி கீதா.
      தேர் திருவிழா சமயம் ஓலைக் கூரை மேல் அலங்கார துணிகளால் அலங்ககாரம் செய்வார்கள் கீதா.
      இரண்டு பக்க விளக்குதூண்கள் வருகிற மாதிரி படம் எடுத்தேன் , தேடினால் கிடைக்கவில்லை.
      விளக்குதூண் அழகுதான்.

      மருமகளுக்கு வாழ்த்து சொன்னதற்கு நன்றி.

      உங்கள் கருத்துக்களூக்கு நன்றி.

      நீக்கு
  15. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. முதலில் தங்கள் மருமகளுக்கு இனிதான பிறந்த நாள் வாழ்த்துகள். வாழ்வில் எல்லா நலன்களும் பெற்று சிறப்பாக வாழ இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    கோவில் படங்கள், விபரங்கள் என எப்போதும் போல் தங்கள் பதிவு அமர்க்களமாக உள்ளது. கோபுர தரிசனம் கண்டு கொண்டேன். அதிகாலை சூரியனின் படங்களும் அழகாக உள்ளது. நீங்கள் தங்கியிருந்த விடுதியும், வரவேற்பறை பிள்ளையார் நன்றாக இருக்கிறது. மாலை பொழுதிலும், இரவிலும் சரி, பகலிலும் சரி நீங்கள் எடுத்த படங்கள் மனதை கவர்கின்றன.

    அபிராமி பட்டர் கதையை நினைவுபடுத்தி அபிராமி அன்னையை கண்முன்னே கொண்டு வந்து விட்டீர்கள். நீங்கள் சொல்வது போல், மின்விளக்கை நிலவாக பார்த்ததில் ஆதிபராசக்தி திரைப்படமும் நினைவுக்கு வந்தது.

    எல்லா கோபுர படங்களும், பக்கவாட்டில் எடுத்த கோபுர படமும் வெகு அழகாக வந்துள்ளது. படம் எடுப்பதில் சிறந்த நிபுணராகி விட்டீர்கள். மனமார்ந்த வாழ்த்துகள். எனக்கு நான் எங்காவது கோவிலுக்கு செல்லும் போது எப்போதாவது அலைபேசியில் சில படங்கள் எடுத்தாலும் இவ்விதமாக சிறப்பானதாக வராது. ஆனால் உங்களின் அழகான படங்கள் மூலமாகவும், கோவிலைப் பற்றிய அருமையான விவரணைகள் மூலமாகவும் உங்களுடன் கோவிலுக்கு வந்த திருப்தி எனக்கும் ஏற்பட்டது.

    தங்கள் தங்கையின் மணிவிழா படங்களும் நன்றாக வந்துள்ளன. மணிவிழா கண்ட தங்கள் தங்கைக்கு எங்களின் அன்பான வாழ்த்துக்களை தெரிவியுங்கள். பதிவு வெகு நன்றாக உள்ளது. அடுத்து தாங்கள் சென்ற இடங்களைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
      //முதலில் தங்கள் மருமகளுக்கு இனிதான பிறந்த நாள் வாழ்த்துகள். வாழ்வில் எல்லா நலன்களும் பெற்று சிறப்பாக வாழ இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.//

      மருமகளுக்கு வாழ்த்தும் சொல்லி, பிரார்த்தனைகளும் செய்து கொண்டதற்கு நன்றி.

      //கோவில் படங்கள், விபரங்கள் என எப்போதும் போல் தங்கள் பதிவு அமர்க்களமாக உள்ளது. //

      நன்றி.

      படங்கள் அனைத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.


      //மின்விளக்கை நிலவாக பார்த்ததில் ஆதிபராசக்தி திரைப்படமும் நினைவுக்கு வந்தது.//

      மகிழ்ச்சி.

      தங்கைக்கு வாழ்த்து சொன்னதற்கு நன்றி. அவளிடம் உங்கள் வாழ்த்துக்களை சொல்லி விடுகிறேன்.
      பதிவும் உங்களுக்கு பிடித்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி.
      உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி நன்றி.


      நீக்கு
  16. அழகிய படங்கள் . அமிர்தகடேஸ்வரர் அபிராமி தரிசனம் அருமை.

    மணிவிழா கொண்டாடிய தங்கை அவர்கட்கு வாழ்த்துகள்.

    பிறந்தநாள் கொண்டாடும் மருமகளையும் வாழ்த்துகிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
      தங்கைக்கு, மருமகளுக்கு வாழ்த்துக்கள் சொன்னதற்கு நன்றி மாதேவி.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  17. அன்பின் கோமதிமா,

    வாழ்க வளமுடன்.
    மிக அருமையான படங்களுடன் அன்னை அபிராமியின்
    தரிசனமும் சுற்றுப்புற வீதிகள் தரிசனமும் அருமை.
    கோபுர விளக்குகளுடன்
    வீதி விளக்கு ,
    அன்னை அபிராம பட்டருக்குக் காட்சி தந்த அழகும் அருமையும்
    கண் முன் வருகின்றது.
    அருமையாகப் படம் எடுக்கிறீர்கள் அன்பு தங்கச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
      படங்கள் அனைத்தையும் ரசித்துப்பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  18. அமிர்தகடேஸ்வரர் ஆலயக் கோபுரங்களின் புத்தம் புது
    அழகு மனதை கவர்கிறது.
    முன்பெல்லாம் கோவில்களில் இத்தனை
    வெளிச்சமாகப் பார்த்ததில்லை.

    கோவிலைச் சுற்றியும் உள்ளேயும்
    ஒளி வெள்ளம் மனதைக் கவர்கிறது. அதிகாலைச் சூரிய உதயமும்,
    கோபுர தரிசனமும்
    மன வளத்தைக் கூட்டும். தங்கள் அனுபவம் எங்கள் அனுபவமாகும் படி

    அருமையான படங்கள் பதிவிட்டிருக்கிறீர்கள்.
    மன்ம் நிறைய நன்றி கோமதிமா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அமிர்தகடேஸ்வரர் ஆலயக் கோபுரங்களின் புத்தம் புது
      அழகு மனதை கவர்கிறது.
      முன்பெல்லாம் கோவில்களில் இத்தனை
      வெளிச்சமாகப் பார்த்ததில்லை.//

      இப்போது கோயில் நல்ல வெளிச்சமாக அழகாய் இருக்கிறது.

      //அதிகாலைச் சூரிய உதயமும்,
      கோபுர தரிசனமும்
      மன வளத்தைக் கூட்டும். தங்கள் அனுபவம் எங்கள் அனுபவமாகும் படி//

      ஆமாம் அக்கா. மனம் மகிழ்ச்சியாக இந்த காட்சிகள் உதவும்.

      //அருமையான படங்கள் பதிவிட்டிருக்கிறீர்கள்.
      மன்ம் நிறைய நன்றி கோமதிமா.//

      நன்றி அக்கா , உங்கள் உற்சாகம் தரும் பின்னூட்டங்கள் நன்றாக படம் எடுக்க தூண்டுகிறது. அதற்கு உங்களுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.






      நீக்கு
  19. தங்கள் தங்கைக்கும் கணவருக்கும் நல் வாழ்த்துகள். தங்கள் மருமகளுக்கு இனிய பிறந்த நாள்
    வாழ்த்துகள் தங்கச்சி.
    நலமுடன் வாழ வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தங்கள் தங்கைக்கும் கணவருக்கும் நல் வாழ்த்துகள். தங்கள் மருமகளுக்கு இனிய பிறந்த நாள்
      வாழ்த்துகள் தங்கச்சி.
      நலமுடன் வாழ வேண்டும்.//

      உங்கள் வாழ்த்துக்களும், ஆசிகளும் அவர்களுக்கு கிடைத்தது மகிழ்ச்சி அக்கா.
      உங்கள் கருத்துகளுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி நன்றி அக்கா.

      நீக்கு
  20. படங்களும் பகிர்வும் அருமை. விடுதி பெயர் வித்தியாசமாய் நன்றாக உள்ளது. விநாயகர் சிலையும் அழகு. மணிவிழா நடக்கும் விதம் குறித்தத் தகவல்கள் பயனுள்ளவை.

    மருமகளுக்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
      வெகு நாட்களாக காணவில்லையே!

      உங்கள் கருத்துக்கும் நல்வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  21. மிகவும் அழகான படங்கள் அற்புதமாக எடுத்து இருக்கின்றீர்கள்.

    தங்களது மருமகளுக்கு எமது வாழ்த்துகளும்கூடி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டைஜி, வாழ்க வளமுடன்

      //மிகவும் அழகான படங்கள் அற்புதமாக எடுத்து இருக்கின்றீர்கள்.//

      நன்றி ஜி.


      மருமகளுக்கு வாழ்த்து சொன்னதற்கும் நன்றி.

      நீக்கு
  22. இந்தப் பதிவைப் பார்க்கலை. விட்டுப் போயிருக்கு. வைத்தீஸ்வரன் கோயில் பதிவில் உங்கள் பதில் மூலம் அறிந்து கொண்டேன். உங்கள் தங்கை/தங்கை கணவருக்கு தாமதமாக வாழ்த்துகள்/ஆசிகள். திருக்கடவூரும் பல முறை போயிருந்தாலும் சமீபத்தில் போகாததால் நீங்கள் சொல்லி இருக்கும் மாற்றங்கள் பற்றித் தெரியாது. அழகான நேர்த்தியான படங்களுடன் கூடிய பகிர்வுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
      தங்கைக்கும், அவள் கணவருக்கும்
      வாழ்த்துக்களும், ஆசிகளும் வழங்கியது மகிழ்ச்சி, நன்றி.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு