திருப்புவனம் கோபுரம்
வைத்தீஸ்வரன் கோயில் வணங்கி விட்டு அடுத்து நாங்கள் போன கோயில் திருப்புவனம்.நாங்கள் ஏபரல் மாதம் 22ம் தேதி மாலை . 6.40க்கு போனோம். இருட்ட ஆரம்பித்து விட்டது.
.
இறைவன் கம்பகரேஸ்வரர், கம்பகரேஸ்வரர் என்றால் நடுக்கத்தை போக்கியவர் என்று அர்த்தம். நடுக்கத்தை போக்கியவர் என்பதால் "நடுக்கம் தவிர்த்த பெருமான்" என்று அழைக்கப்படுகிறார்.
அம்மன் தர்மசம்வர்த்தினி. அறம்வளர்த்தநாயகி என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார்.
சரபேஸ்வரர் வழிபாடு இங்கு ஞாயிறு மிகவும் சிறப்பு.
தீர்த்தம் சரப தீர்த்தம் உட்பட 9 தீர்த்தங்கள் இருக்கிறது.தல விருட்சம் வில்வமரம்.
கோபம் கொண்டால் உடல் நடுங்கும் அல்லவா? அப்படி இரணியனை வதம் செய்த ஸ்ரீ நரசிம்மருக்கு கோபம் அடங்காமல் உடல் நடுங்கி கொண்டு இருந்தது. அப்போது அவர் கோபத்தை கண்டு பயந்து அவர் கோபத்தை தணிக்க முக்கோடி தேவர்களும் சிவபெருமானிடம் கேட்டு கொள்கிறார்கள்.
பாதி உருவம் விலங்கு பாதி உருவம் மனிதனாக இருக்கும் திருமாலின் கோபம் தணிக்க சிவன் பாதி உருவம் அகோர பறவையாக, பாதி உருவம் அகோர விலங்காய் எட்டு கால்கள், நான்கு கைகள்,(மனித உருவம் மான் மழு ஏந்தி இருக்கிறார்) இரண்டு இறக்கைகள், கூர்மையான நகங்கள் , பற்கள், யாளிமுகத்துடன் தோன்றி நரசிம்மரை தீண்டுகிறார், சிவனின் தீண்டலில் நடுக்கம் மறைந்து இயல்பு நிலைக்கு திரும்புகிறார் திருமால். சிவன் திருமாலை தழுவி கட்டிபிடி வைத்தியம் செய்து கோபத்தை போக்கி இருக்கிறார்.
நரசிம்மரின் கோபத்தால் நடுக்கம் ஏற்பட்ட அனைவருக்கும் நடுக்கம் தீர்ந்ததால் நடுக்க தீர்த்த பெருமான் , சரப பறவையாய்த் தோன்றியதால் சரபேஸ்வரர் என அழைக்கபடுகிறார். என்று சொல்கிறது புராணவரலாறு.
நரம்பு தளர்ச்சி போகும் இவரை வணங்கினால் என்று நம்பபடுகிறது.
உள்ளே மேல் விதானத்தில் அழகிய வேலைபாடு
கொடிமரம்
கோபுர வாசல் பெரிய கதவு
மிக அழகான பெரிய பிரகாரம்
தட்சிணா மூர்த்தி
சச்சிதானந்த விமானம் என்ற பெயர் . இடது பக்கம் மஞ்சள் ஆடை அணிந்து இருக்கும் தட்சிணாமூர்த்தி தெரிகிறார் இந்த படத்தில்
பகலில் பார்த்தால் இதில் உள்ள சிற்பங்களின் அழகு தெரியும் பலமுறை பகலில் போய் இருக்கிறேன், அப்போது காமிரா, அலைபேசி என்னிடம் கிடையாது, இப்போது இரவு நேரத்தில் போய் விரைவாக ஊருக்கு திரும்பவேண்டும் என்பதால் அவசர தரிசனம். தஞ்சை கோவில் போலவே இந்த கோயில் இருக்கும். சோழர் காலத்து கோயில். இராஜராஜ சோழனின் பேரன் மூன்றாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது என்கிறது வரலாறு.
சரபேஸ்வரர் இருக்கும் மண்டபம் வெகு அழகான தூண்களை கொண்டது. அவரை சுற்றி வலம் வந்து வணங்கலாம். மூலவரும், உற்சவரும் மிக அழகு. சுற்று பிரகராத்தில் சுவற்றில் சரபேஸ்வரர் கதையை வண்ணத்தில் தீட்டி வைத்து இருக்கிறார்கள். அன்று குருக்கள் ஒருவர் மட்டுமே இருந்தார்,அவரே பொறுமையாக சுவாமி சன்னதி, அம்மன் சன்னதி, சரபேஸ்வரருக்கு வந்து ஆரத்தி காட்டினார்.
ஞாயிறு ராகு காலத்தில் சிறப்பான ஹோமம் நடைபெறுகிறது. மனபயம், கவலை, எதிரிகளால் ஏற்படும் பல விததுன்பங்களை போக்க வேண்டிக் கொள்வார்களாம்.
வெள்ளி, சனி, ஞாயிறு,அஷ்டமி, பெளர்ணமி 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடக்கிறதாம்.
இரவு நேரம் ஆகி விட்டதால் திருக்குளத்தை பார்க்கவில்லை.
இந்த கோயிலில் அழகை பகலில் பார்த்தால்தான் நன்றாக இருக்கும். சிற்பங்களின் அழகு தெரியும்.
இந்த ஊர் பட்டு புடவை விசிறி மடிப்பு என்று சொல்வது போல் இருக்கும்.
இந்த ஊர் பட்டு ஜவுளி வியாபாரத்திற்கு மிகவும் சிறப்பு பெற்ற ஊர். நாங்கள் மாயவரத்தில் இருக்கும் போது எங்கள் வீட்டு விழாக்களுக்கு இங்கு பட்டு புடவைகள் வாங்கி இருக்கிறோம். நான் பட்டு கட்ட மாட்டேன். ஆனால் உறவுகளுக்கு இங்கு வாங்கி இருக்கிறோம்.
ஏப்ரல் 21, 22 இரு தினங்களில் பார்த்த கோயில்களின் பதிவு இந்த பதிவுடன் நிறைவு அடைகிறது.
தொடர்ந்து படித்து கருத்து சொன்னவர்களுக்கு நன்றி.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
----------------------------------------------------------------------------------------------------
திருபுவனம், மானாமதுரை அருகில் உள்ளதுதானே ?
பதிலளிநீக்குஅங்கு இவ்வளவு பெரிய கோயில் உள்ளதா ?
பலமுறை ஊரைக் கடந்து இருக்கிறேன். அடுத்தமுறை செல்ல வேண்டும்
வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்குஇந்த கோயில் மானாம்துரைஅருகில் உள்ள கோயில் இல்லை.
அந்த கோயில் திருப்பூவனம்.
அழகியநாயகி உடனுறை பூவணர்
அது சிவகங்ககை மாவட்டம் அந்த கோயிலும் பெரிய கோயில்தான் பதிவு போட்டு இருக்கிறேன் முன்பு . இந்த திருபுவனம் கோயில்
கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ளது. திருவிடைமருதூர் பக்கம்.மாயவரத்திலிருந்து பக்கம்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
இந்தக் கோவில் பார்த்ததில்லை. அழகிய பெரிய கோவிலில் தெரிகிறது. 'கட்டாயம் பார்க்கவேண்டும்' என்று என் மனதில் இருக்கும் லிஸ்ட்டில் சேர்த்துக் கொள்கிறேன். இரவாகி விட்டதால் படங்கள் சரியாக எடுக்க முடியவில்லை என்று தெரிகிறது. புராண வரலாறு சுவாரஸ்யம்.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்குஆமாம், மிக அழகிய பெரிய கோவில்தான்.
நீங்கள் கும்பகோணத்தில் அல்லது மாயவரத்தில் தங்கி அருகில் உள்ள அனைத்து கோயில்களும் பார்க்கலாம்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
அழகான கோவில். நேரில் சென்று தரிசனம் பெற ஆவல். படங்கள் அனைத்தும் நன்று.
பதிலளிநீக்குவணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
நீக்குகோயில் மிக அழகிய கோயில் ஒரு முறை வாய்ப்பு கிடைக்கும் போது நேரில் பார்த்து வாருங்கள்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
படங்களும் தகவல்களும் அருமை அம்மா...
பதிலளிநீக்குபுடவை திருபுவனம் தான்... ஆனால் தயாரிப்பு இங்கு(ம்) உண்டு...!
வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
நீக்கு//படங்களும் தகவல்களும் அருமை அம்மா..//
நன்றி.
தயாரிப்பு இங்கு செய்து அங்கு போகும் என்று சொல்கிரீர்களா?
உங்கள் கருத்துக்கு நன்றி.
திருபுவனம் - ஆஹா என் உறவினர் அங்கு இருந்தனர் இருக்கின்றனர். இந்த ஊர் தானே ஒரு வகைப் பட்டுப் புடவைக்கும் புகழ்பெற்றது இல்லையா கோமதிக்கா?
பதிலளிநீக்குமுதல் படம் செமையா இருக்கு.
//சிவன் திருமாலை தழுவி கட்டிபிடி வைத்தியம் செய்து கோபத்தை போக்கி இருக்கிறார். //
ஹாஹாஹாஹாஹா அட !!! நம்ம கோமதிக்காவும் எழுதியிருக்காங்களே!!!!!!!!
இரண்டாவது படம், கோயில் கதவு எல்லாமே செம....இதைப் பார்த்து ரசித்து வந்தால் அடுத்தாப்ல இன்னும் செம ன்னு சொல்றாப்ல பிராகாரப் படம்!!! அழகா எடுத்துருக்கீங்க கோமதிக்கா
கீதா
வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்குஹாஹாஹாஹாஹா அட !!! நம்ம கோமதிக்காவும் எழுதியிருக்காங்களே!!!!!!!!//
நன்றி ரசிப்புக்கு கீதா.
//இரண்டாவது படம், கோயில் கதவு எல்லாமே செம....இதைப் பார்த்து ரசித்து வந்தால் அடுத்தாப்ல இன்னும் செம ன்னு சொல்றாப்ல பிராகாரப் படம்!!! அழகா எடுத்துருக்கீங்க கோமதிக்கா//
படங்கள் எல்லாம் அலைபேசியில் தான் எடுத்தேன் கீதா.
தட்சிணா மூர்த்தி அந்தக் கோபுரம் ஒரு விதமான அழகு...ஒளி பாதி இருட்டு பாதி என்று அதுவும் ஒருவித அழகு..
பதிலளிநீக்குஹையோ சச்சிதானந்த விமானம்!!!!! என்ன அழகு...நீங்க ரொம்ப ரொம்ப அழகா எடுத்துருக்கீங்க கோமதிக்கா...ஆமாம் மஞ்சள் ஆடை தரித்த தட்சிணா மூர்த்தி தெரிகிறார்..
//பகலில் பார்த்தால் இதில் உள்ள சிற்பங்களின் அழகு தெரியும் பலமுறை பகலில் போய் இருக்கிறேன், அப்போது காமிரா, அலைபேசி என்னிடம் கிடையாது, //
புரிந்தது கோமதிக்கா...என்றாலும் ,
//இப்போது இரவு நேரத்தில் போய் விரைவாக ஊருக்கு திரும்பவேண்டும் என்பதால் அவசர தரிசனம். //
இப்படங்களும் மிக அழகாக வந்திருக்கின்றன.
//தஞ்சை கோவில் போலவே இந்த கோயில் இருக்கும். சோழர் காலத்து கோயில். இராஜராஜ சோழனின் பேரன் மூன்றாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது என்கிறது வரலாறு. //
ஓஹோ அதான் சிற்பங்கள் அந்த அழகு கவர்கிறது.
ஆஅமாம் பகலில் பார்த்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று தெரிகிறது.
ஆஹா!! திருபுவனம் பட்டு கடைசியில் வந்துவிட்டது!!!!!
//நான் பட்டு கட்ட மாட்டேன்.//
ஹைஃபைவ் கோமதிக்கா!!!! நானும் கட்ட மாட்டேன்!!! உங்க தங்கை இல்லையா!!!
படங்களையும் விவரங்களையும் ரசித்து வாசித்தேன் கோமதிக்கா
கீதா
//தட்சிணா மூர்த்தி அந்தக் கோபுரம் ஒரு விதமான அழகு...ஒளி பாதி இருட்டு பாதி என்று அதுவும் ஒருவித அழகு..//
நீக்குஆமாம். இருட்டில் ஒளிரும் விளக்கில் கோபுரம் பார்க்க நன்றாக இருந்தது.
ஹையோ சச்சிதானந்த விமானம்!!!!! என்ன அழகு...நீங்க ரொம்ப ரொம்ப அழகா எடுத்துருக்கீங்க கோமதிக்கா...ஆமாம் மஞ்சள் ஆடை தரித்த தட்சிணா மூர்த்தி தெரிகிறார்.//
தட்சிணாமூர்த்தி தெரிகிறார் என்பதை பார்த்து விட்டீர்கள் மகிழ்ச்சி.
நீங்களும் பட்டு கட்ட மாட்டீர்கள் என்று அறிந்து மகிழ்ச்சி.
படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி கீதா.
அன்பின் கோமதிமா,
பதிலளிநீக்குஎத்தனை அழகான படங்கள். இரவின் விளக்கொளியில்
துல்லியமாகத் தெரியும் பிராகரங்கள், கோபுரம், மின் விளக்குப்
பிரகாசம் அனைத்தும் அருமை.
வணங்கிக் கொள்கிறேன்.
என்றும் வாழ்க வளமுடன் அன்புத் தங்கச்சி.
தக்ஷிணாமூர்த்தியை அழகாகப் படம் எடுத்திருக்கிறீர்கள்.
இந்தக் கோவிலுக்கு சிறு வயதில் சென்றிருக்கிறேன்.
அத்தை புடவை எடுக்க வந்தபோது அவர்களுடன் சென்றேன்.
சரப மூர்த்தியைப் பற்றி எல்லாம் அப்போது தெரியாது.
எவ்வளவு பிரம்மாண்டமான கோவில் அம்மா.
உங்களுக்கும் படங்களைப் பிரகாசமாக எடுக்கும் காமிராவுக்கும்,
வாங்கித் தந்தவர்க்கும் மனம் நிறை நன்றி.
வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
நீக்குஇரவு விளக்கொளியில் எடுத்த படங்கள் உங்களுக்கு பிடித்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி அக்கா.
நீங்கள் சிறு வயதில் வந்து இருக்கிறீர்களா?
கோயில் நல்ல பெரிய கோயில்தான். பகலில் போய் இருந்தால் இன்னும் நிறைய படங்கள் எடுத்து இருப்பேன்.
படங்கள் எல்லாம் மகன் வாங்கி தந்த ஆப்பிள் ஐபோனில் எடுத்த படங்கள்தான் அக்கா. காமிரவில் எடுக்கவில்லை.
நானும் மகனுக்கு உங்களுடன் சேர்ந்து நன்றி சொல்லி கொள்கிறேன்.
உங்கள் கருத்துக்கு நன்றி அக்கா.
அழகான கோவில். கோபுரம் கவர்கிறது.
பதிலளிநீக்குவணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
ஸ்ரீ சரப மூர்த்தி வழிபாடு - ராஜராஜ சோழனின் மகளான குந்தவை சாளுக்கிய இளவரசன் விமலாதித்தனுக்கு மணம் முடித்துக் கொடுக்கப்பட - அவர்களது வழித் தோன்றல்களால் தமிழகத்திற்கு வந்தது..
பதிலளிநீக்குவணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
நீக்கு//ஸ்ரீ சரப மூர்த்தி வழிபாடு - ராஜராஜ சோழனின் மகளான குந்தவை சாளுக்கிய இளவரசன் விமலாதித்தனுக்கு மணம் முடித்துக் கொடுக்கப்பட - அவர்களது வழித் தோன்றல்களால் தமிழகத்திற்கு வந்தது..//
ஆமாம். நிறைய வரலாறு இருக்கிறது சரப மூர்த்திக்கு.
உங்கள் தகவல் பகிர்வுக்கு நன்றி.
நான் இதுவரை திருபுவனத்திற்குச்சென்றதில்லை... தங்களது பதிவின் மூலமாக தரிசித்துக் கொண்டேன்.. மகிழ்ச்சி..
பதிலளிநீக்குநலம் வாழ்க..
உங்கள் கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி
நீக்குவணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. திருபுவனம் கோவில் படங்கள் நன்றாக உள்ளன. நல்ல தல புராண விளக்கத்துடன் கோவிலை உங்கள் பதிவால் சுற்றிப் பார்த்தேன்.கோவில் கோபுரங்கள் நன்றாக இரவின் ஒளி விளக்குகளில் அழகாக உள்ளது. தரிசித்துக் கொண்டேன். முதலில் உள்ள பெரிய நிலைக்கதவுடன் உள்ள கோபுர வாசல் படமும் அழகாக இருக்கிறது.
இந்த சரபேஸ்வரர் புகைப்படத்துடன் அருகில் நரசிம்ம மூர்த்தியாக மஹாவிஷ்ணு என எங்கள் பிறந்த வீட்டில் அப்பா காலத்தில் ஒரு படம் இருந்தது. நான் அப்போது சிறு பெண்ணாக எங்கள் அப்பாவிடம் இந்த கதையை அடிக்கடி கேட்டது நினைவுக்கு வருகிறது. மற்றபடி கோவில் விபரத்தை உங்கள் பதிவின் வாயிலாக இப்போதுதான் அறிகிறேன். உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்குஎல்லா கோயில்களையும் பகலில், இரவில் எடுத்து போட்டு இருக்கிறேன், இது இரவில் மட்டுமே எடுக்க முடிந்தது.
பகலில் எடுத்த ஏதாவது பழைய படம் இருக்கா என்று பார்க்க வேண்டும். படதொகுப்பில் பேர் போட்டு சேகரித்து வைக்கமால இருந்து விட்டேன் முன்பு அதனால் தேட கஷ்டமாய் உள்ளது.
உங்கள் அப்பாவிடம் இந்த கதையை கேட்டு இருப்பது அறிந்து மகிழ்ச்சி. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்சரபேஸ்வரார் தூணில் இருப்பார் அவருக்கு மக்கள் சந்தனம் பூசி ஞாயிறு வெள்ளியில் பூஜை செய்வார்கள் பார்த்து இருக்கிறேன்.
படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கும், உங்கள் சிறு வயது நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி.