வியாழன், 14 அக்டோபர், 2021

நவராத்திரி வாழ்த்துக்கள் !

நடுவில்  அம்பிகேஸ்வர்  மாகதேவ், பார்வதி இருக்கிறார்கள்.

அட்லாண்டாவில் "அம்பாஜி யுஎஸ்ஏ" என்ற இந்து மத அமைப்பினரால் கட்டப்பட்ட  சக்தி  கோயில். (வடநாட்டு மக்கள் கட்டிய கோயில்.) மத சடங்குகள் செய்வதற்கும் ஆண்டு முழுவதும்  பண்டிகைகள்   கொண்டாடவும்  இந்த கோயிலை கட்டி இருக்கிறார்கள்.

நன்றி- கூகுள்
இரவு   நேரம் போனதால்  கோயில்  பெயர் பலகையை எடுக்கவில்லை. கூகிள் உதவியில் இணைத்துள்ளேன்

நவராத்திரி கொலு பார்க்க வாங்க என்ற இதற்கு முந்திய   பதிவில்  அடுத்து "சக்தி மந்திர் " என்ற கோயில் போனோம், அது அடுத்த பதிவில் என்றேன். அந்த கோயில் படங்கள் இந்த பதிவில்.

 
கோயில் சிவப்பு வண்ண ஒளி வெள்ளத்தில் இருக்கிறது, நிலவு முகப்பு மண்டபத்திற்கு மேலே தெரிகிறது.
அரசமரம் தொட்டியில் இருக்கிறது, வாழை வைத்து இருக்கிறார்கள் மஞ்சள், குங்குமம் போட்டு வழிபட்டு இருக்கிறார்கள்.
கோயிலுக்குள் போன உடன் முதலில் நிறைய கலசங்களில்  தேங்காய் வைத்து இருக்கிறார்கள். அதற்கு மேல் சிறு அலங்கார பலகையில் அம்மன் இருக்கிறார்.  சிவப்பு துணியால் அலங்காரம், சிவப்பு வண்ண விளக்கும்  போட்டு இருக்கிறார்கள். மக்கள் வலம் வந்து  முன்னால் இருக்கும் பச்சை பட்டு துணியில்  பணம் போடுகிறார்கள்.

அழகான வேலைபாடு செய்த மர மண்டபத்தில் பிள்ளையார்,  அனுமன்,  சரஸ்வதி,  லட்சுமி, துர்கை, , மகா காளி ,பகுசார்மா.
ராதா கிருஷ்ணாவின்  இருபக்கமும் குழந்தை கண்ணன்.  சூரிய நாராயணன், காயத்திரி மாதா, மகேஸ்வரி, வைஷ்ணவி ,  லட்சுமணன், ராமன், சீதை
திரைச்சிலை தொங்குவது போல அலங்காரமாய் கட்டி இருக்கிறார்கள் 
கோயில் சுற்றுச்சுவர் எல்லாம் அழகிய மயில்தோகை விரித்தார் போல் அழகிய வேலைப்பாடு

மேல் விதானம்  அழகாய் இருக்கிறது

அன்னையின் வடிவங்கள் நான்குபுறமும்
வடநாட்டு பெண்கள் அவர்கள் பரம்பரிய உடை அணிந்து வந்தார்கள்.
சஞ்சீவி மலையுடன் அனுமன்
இருந்தார்
நவக்கிரகங்கள் பளிங்கில் வித்தியாசமான தோற்றத்தில்.
அழகான மரவேலைப்பாட்டில் உண்டியல்


பிரகாரம் மிக அழகாய் இருக்கிறது
கோயிலுக்குள் உள்ள கடையில் அழகான பொம்மைகள்

நடனம் நடக்கிறது, உள்ளே போய் பார்க்க ஒரு ஆளுக்கு 10 டாலர் என்றார்கள்.

வெள்ளை நிறமாய் காசி கோபுரம் போன்று இருக்கும் , நவராத்திரி இரவில்  சிவப்பு  வண்ணவிளக்கு அலங்காரத்தில் இருக்கிறது கோபுரம்.  
படேல் பிரதர்ஸ் உணவு கூடம்


எங்களுடன் வந்த உறவினர் குழந்தைகளுக்கு பசிக்கும் என்பதால் உணவு கூடம் போனோம். அங்கு இருந்த உறவினரின்  வட இந்திய நண்பர் எங்கள் கோயில் எப்படி இருக்கிறது?  என்று கேட்டார். வீட்டில் உபசரிப்பது போல் உணவு வகைகளை வாங்கி வந்து உபசரித்தார்.

சமோசா, பாவ்பாஜி, பேல்பூரி, தோசை, கரும்புச்சாறு. பீட்சா.
ஆளுக்கு கொஞ்சமாக எல்லாவகை உணவையும் பகிர்ந்து உண்டோம். காரம் இல்லாமல் சாத்வீக உணவு. நவராத்திரி என்பதால் பூண்டு வெங்காயம் மசாலா கிடையாது.

அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள்.
சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை, விஜயதசமி வாழ்த்துக்கள்.

அன்னை அனைவரையும் காக்க வேண்டும்.

வாழ்க வையகம் ! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்.

--------------------------------------------------------------------------------------------------
 

42 கருத்துகள்:

  1. கோவில் வடநாட்டு பாணியில் அமைந்துள்ளது போலும்..  மேலும் அம்பாஜி!  அம்பிகேஸ்வர்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //கோவில் வடநாட்டு பாணியில் அமைந்துள்ளது போலும்.. மேலும் அம்பாஜி! அம்பிகேஸ்வர்!//

      வடநாட்டினர் கட்டிய கோவில் அவர்கள் ஊரில் உள்ளது போல இருந்தால் தானே அவர்களுக்கு மனநிறைவு ஏற்படும்.

      நீக்கு
  2. கோவில் நவீனம்.  விதானம் பிரமாதம்.  ஆனால் ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலுக்குள் பூஜை ஏற்பாடு செய்யப்பட இடம்போல இருக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவில் மிக சுத்தமாக புதிது போல் பள பள வென்று நவீன வசதிகளுடன் இருக்கிறது.

      //ஆனால் ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலுக்குள் பூஜை ஏற்பாடு செய்யப்பட இடம்போல இருக்கிறது//

      ஆமாம்.

      நீக்கு
  3. நவகிரகங்கள் அழகாய் வித்தியாசமாய் இருக்கின்றன.  பிரகாரம் - ஹோட்டல் காரிடார்!  நவகிரகங்களை இன்னும் க்ளோசப்பில் எடுத்திருக்கலாமோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நவகிரங்களை தனி தனியாக எடுக்க ஆசைதான், பதிவில் படங்கள் அதிகமாகி விடும் என்பதால் இப்படி.

      ஒவ்வொன்றும் ஒவ்வொரு வண்ணத்தில் வேறு அமைத்து இருந்தார்கள்.

      நீக்கு
  4. உணவகம் அழகு.  தட்டில் வைத்திருக்கும் பண்டங்கள் ஈர்க்கின்றன.  அனைவருக்கும் நவராத்திரி, விஜயதசமி சரஸ்வதி பூஜை வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உணவகம் அழகுதான். வடநாட்டினர் அனைவரும் தோசை, மசால்தோசை என்று வாங்கி சாப்பிட்டார்கள் நம் மக்கள், பீட்ஸா, பேல்பூரி, பாவ்பாஜி என்று வாங்கினார்கள்.

      கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  5. வடநாட்டு பாணியில் அழகாக கட்டி இருக்கிறார்கள்.

    இனிய சரஸ்வதி பூஜை விஜயதசமி வாழ்த்துகள் சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      வடநாட்டு பாணியில் அழகாக கட்டி இருக்கிறார்கள்.

      இனிய சரஸ்வதி பூஜை விஜயதசமி வாழ்த்துகள் சகோ//

      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்

      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  7. அனைவருக்கும்
    சரஸ்வதி பூஜை, விஜயதசமி வாழ்த்துக்கள்..

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ, துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  8. அன்பின் கோமதிமா,
    வாழ்க வளமுடன்.
    அருமையான மஹா சுத்தமான கோவில்.

    எல்லாமே பளிங்கு வெண்மையில் கண்கூச
    வைக்கும் ஒளியில் அற்புதமாக இருக்கின்றன.

    நவக்கிரஹங்கள் வித்தியாசமாக இருக்கின்றன.

    இந்த ஊர் சத்ய நாராயணா, ஸ்வாமி நாராயணா கோவில்
    கண்ணைப் பறிக்கும் மர வேலைப்பாடுகளுடன்
    நன்றாக இருக்கும்.
    எல்லா உழைப்பாளிகளும் குஜராத் மானிலத்தில் இருந்து '
    வந்து இங்கு வருடக்கணக்கில் தங்கி
    வேலை செய்து பிரம்மாண்டமாகச் செய்து முடிப்பார்கள்.

    அம்பாஜி மந்திர் அதே போல சக்தி உபாசனைக்கு
    அமைத்திருக்கிறார்கள் போல இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
      //அருமையான மஹா சுத்தமான கோவில்.//
      ஆமாம் அக்கா, சுத்தமான அழகான கோயில்தான்.

      ந்த ஊரிலும் சத்ய நராரயணா கோவில் இருக்கிறது. அது இன்னும் போகவில்லை.

      //எல்லா உழைப்பாளிகளும் குஜராத் மானிலத்தில் இருந்து '
      வந்து இங்கு வருடக்கணக்கில் தங்கி
      வேலை செய்து பிரம்மாண்டமாகச் செய்து முடிப்பார்கள்.//

      ஆமாம், கேள்வி பட்டேன்.

      //அம்பாஜி மந்திர் அதே போல சக்தி உபாசனைக்கு
      அமைத்திருக்கிறார்கள் போல இருக்கிறது.//

      வட மாநிலத்தில் துர்கை வழிபாடு மிகவும் முக்கிய பண்டிகை இல்லையா!

      அதனால் இங்கும் கொண்டு வந்து விட்டார்கள்.

      நீக்கு
  9. நவராத்திரியின் போது அங்கே சென்றதுதான் விசேஷம்.

    உணவு சாலையும், அவர்கள் உபசாரம் செய்ததும்
    அருமை.

    இங்கே உள்ள வட இந்தியர் கோயிலிலும் இதே போல
    சமோஸா, வித விதமான இனிப்புகள்
    என்று கிடைக்கும். இப்போதுதான் செல்வதில்லை.

    நல்ல படங்களுடன் மிக அருமையான
    பதிவு அம்மா. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நவராத்திரி சமயம் சென்றதால் அவர்கள் விழாவை பார்க்க முடிந்தது.

      //உணவு சாலையும், அவர்கள் உபசாரம் செய்ததும்
      அருமை.//

      அந்த பண்பு பாராட்டப்பட வேண்டியதுதான்.

      இங்கும் கோயிலுக்குள் உள்ள கடையில் வட நாட்டு இனிப்புகள் கிடைக்கிறது. லட்டும், காராசேவ் போன்றதற்கும் குழந்தைகளுக்கு வாங்கினோம்.

      பதிவை ரசித்து கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி அக்கா.

      நீக்கு
  10. வடநாட்டு பாணிக் கோவில்.

    நாம் மனதில் நினைத்து வணங்கும் எந்தப் பொருளிலும் இறை சக்தி வந்து குடியிருக்கிறது. என்றாலும் நம் ஊர் கோவில்கள் தரும் திருப்தி அதிகம்தான்.

    நடனம் பார்க்க பத்து டாலரா?

    உணவுக்கூடம் அழகு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்

      //நாம் மனதில் நினைத்து வணங்கும் எந்தப் பொருளிலும் இறை சக்தி வந்து குடியிருக்கிறது. என்றாலும் நம் ஊர் கோவில்கள் தரும் திருப்தி அதிகம்தான்.//

      ஆமாம். நமக்கு நம் ஊர் கோயில் மனதுக்கு திருப்தி. அவர்களுக்கு அவர்கள் ஊரில் சாமியை தொட்டு வணங்குவது போல் நெருக்கம் இல்லை மற்ற ஊரில் என்று நினைப்பார்கள். அவர்கள் இனிப்புகளை வாங்கி வந்து கடவுளுக்கு கொடுக்கிறார்கள்.

      ஆமாம், அந்த பணம் சமூக சேவைகளுக்கு உதவுகிறதாம். நாம் முழுமையாக பார்த்தாலும் பரவாயில்லை காசு கொடுக்கலாம். நாங்கள் உடனே கிளம்ப வேண்டும்.
      அதனால் பார்க்கவில்லை.youtube மூலம் பார்த்தேன் அந்த அரங்கத்தை, நல்ல பெரிதாக இருக்கிறது. ஆடுபவர்களும் நன்றாக ஆடுகிறார்கள்.

      உணவுக் கூடம் நல்ல சுத்தமாக இருந்தது.

      உணவுகளும் நன்றாக இருந்தது.

      உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  11. வட் இந்திய பாணி கோயில். இதுவும் அழகாகத்தான் இருக்கிறது. நீங்கள் எடுத்திருப்பதும் நேர்த்தியாக இருக்கிறது.

    பிராகாரம் ஏதோ ஏரோ பிளேனுக்குள் செல்வது போல இருக்கிறது. ஆனால் அழகாகத்தான் இருக்கிறது

    கோயில் கடைகளில் உள்ள பொம்மைகள் விலை அதிகமாக இருக்குமோ?

    அனைத்துப் படங்களும் நன்று

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  12. அக்கா க்டைசிலருந்து போகிறேன். அட பூண்டு வெங்காயம் இல்லாமல் உணவு. ஆமாம் வட இந்தியர்களும் இப்படிப் பார்ப்பதுண்டு. வட இந்திய உணவுகள் கூடவெ பிசா வும் போல...

    அவர்கள் கோயிலே வித்தியாசமாக எல்லாமே பொதுவாக மார்பிளில் இருக்கும் படங்கள் எல்லாம் ரொம்ப அழகாக இருக்கின்றன கோமதிக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்
      பூஜா காலங்களில் பூண்டு, வெங்காயம் சேர்ப்பது இல்லைதானே!

      பீட்சாவும் சின்னதாக நம்மை பயமுறுத்தாமல் இருந்தது.

      ஆமாம், மார்ப்பிள் கோயில் தான் .


      //படங்கள் எல்லாம் ரொம்ப அழகாக இருக்கின்றன கோமதிக்கா//

      நன்றி கீதா.

      நீக்கு
  13. உபசாரம் செய்தது மிகவும் நல்ல விஷயம்.

    உணவு, கலைநிகழ்ச்சிகள் மூலம் கிடைக்கும் பணம் பெரும்பாலும் கோயில் பராமரிப்புக்கும், நல்ல சேவைகளுக்கும் பயன்படும்.

    இறைவனை தொட்டு வணங்க சம்மதித்தார்களா அக்கா. பெரும்பாலும் வட இந்தியக் கோயில்களில் நாம் பூஜை கூடச் செய்யலாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்கள் கோயில் நன்றாக இருப்பதாக சொன்னதும் பெருமிதம். அவ்ர்கள் கோயிலுக்கு வந்தவர்கள் சாப்பிட்டு போக வேண்டும் என்றபரிவு இரண்டும் இருந்தது.
      அவர்கள் முன்பே நங்கொடை அளித்து இருப்பார்கள், அவர்களுக்கு கையில் அடையாள சின்னம் கட்டி இருந்தார்கள். அவர்கள் தங்களுக்கு வேண்டியதை வாங்கி கொள்ளலாம்.

      நமக்கு அவர்க்ளே கேட்டு வாங்கி தந்தார்கள்.

      எல்லா கடவுள் சிலைகளும் ஒரு மேடை மேல் அமைந்து இருந்தது. அங்கு இருந்த பூஜை செய்பவர் இறைவனுக்கு கொண்டு வந்த இனிப்புகள், பூக்களை இறைவனுக்கு பக்கத்தில் கொடு போய் வைத்து முகத்துக்கு நேரே காட்டிவிட்டு கொண்டு வந்து கொடுத்தார். நவகிரங்களை தொட்டு தலையை வைத்து வணங்கினார்கள்.

      காசி மற்றும் நிறைய கோயில்களில் நாம் தொட்டு வணங்கலாம், அபிஷேகம் செய்யலாம. வீதிகளில் இருக்கும் தெயவங்களுக்கு தினம் மக்கள் தண்ணீர், பால் விட்டு அபிஷேகம் செய்து பூந்தி, லட்டு மற்றும் இனிப்பு வகைகளை வாயில் ஊட்டி மகிழவதை பார்த்து இருக்கிறேன்.

      நீக்கு
  14. காசி கோபுரம் விளக்கில் ஒளிமயமாக இருக்கிறது

    கோயில் கடை பொம்மைகள் எல்லாம் ஹையோ செமையா இருக்கு

    பிராகாரம் கொஞ்சம் பெரிய லெவல் ஹோட்டல் போல உள்ளது!!!!!! என்றாலும் மனதைக் கவரும் வகையில் இருக்கிறது. நல்ல இழைத்திருக்கிறார்கள்.

    ஆஞ்சனேயர் அழகு.

    குஜராத்தியர் கட்டிய கோயில் போல இருக்கிறது இல்லையாக்கா

    சுவர்களில் இருக்கும் சிற்பங்கள், மேல் விதானம், கோயில் சுற்றுச் சுவர் எல்லாம் நல்ல கலைவடிவம்

    இங்கு இஸ்கான் கோயில் பார்ப்பது போல இருக்கு. சின்ன சின்ன விக்ரகங்கள் எல்லாம் ரொம்ப அழகா இருக்கு. உடையலங்காரம் என்ன அழகாகச் செய்திருக்காங்க வட இந்திய உடைகள்..ஜரி வேலைப்பாடுடன்..

    அவர்கள் அம்பா கூடவே ஜி போட்டு மரியாதையாகச் சொல்வதும் ஒரு அழகுதான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவில் உள்ள அனைத்தையும் ரசித்து பார்த்து
      ஒவ்வொன்றையும் குறிப்பிட்டு சொன்னது மகிழ்ச்சி.

      //உடையலங்காரம் என்ன அழகாகச் செய்திருக்காங்க வட இந்திய உடைகள்..ஜரி வேலைப்பாடுடன்.//
      ஆமாம் கீதா,
      உடை அலங்காரம், நகைகள் எல்லாம் நேர்த்தியாக இருக்கும்.
      ஜரிகை வேலைப்பாடு மிக அழகாய் இருக்கும்.

      எல்லோரையும் ஜி போட்டு மரியாதையாக கூப்பிடுகிறார்கள் அம்பாஜி என்ற இந்து அமைப்பு கட்டி இருக்கும் கோயில்.

      நீக்கு
  15. அரசமரத்தை அப்புறம் கீழே நடுவார்களாக இருக்கும் தொட்டி தாங்காதே.

    வாழை நடந்துகொன்டே எடுத்தீர்களோ அவசரமாக!!?? வாழைக்கும் மஞ்சள் குங்குமம்!!
    நம் மக்கள் அமெரிக்கா போனாலும் கூட வழிபாடுகளை விடுவதில்லை!! நல்ல விஷயம்தான்

    கோயில் சிவப்பு வண்ண ஒளியில்...அந்தப் படம் வெகு ஜோர்!!!!ஆஅமாம் நிலவும் தெரிகிறது

    எல்லாப்படங்களுமே மிகச் சிறப்பு

    கீதா



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரசமரத்தை அப்புறம் நடுவார்கள். விஜயதசமிக்கு அந்த மரத்தை வணங்குவார்கள் அதற்காக அதை வைத்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

      //வாழை நடந்துகொன்டே எடுத்தீர்களோ அவசரமாக!!?? வாழைக்கும் மஞ்சள் குங்குமம்!!
      நம் மக்கள் அமெரிக்கா போனாலும் கூட வழிபாடுகளை விடுவதில்லை!! நல்ல விஷயம்தான்//

      வாழையை சுற்றி கயிறுகள் கட்டுவதைப்பார்த்து இருக்கிறேன். வட நாட்டு கோயில்களில்.


      //கோயில் சிவப்பு வண்ண ஒளியில்...அந்தப் படம் வெகு ஜோர்!!!!ஆஅமாம் நிலவும் தெரிகிறது

      எல்லாப்படங்களுமே மிகச் சிறப்பு//

      அனைத்தையும் ரசித்து கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி நன்றி நன்றி கீதா.


      நீக்கு
  16. வணக்கம் சகோதரி

    இந்த பதிவும் அருமை. ஆனால் தாமதமாக வந்திருக்கிறேன்.வடநாட்டு பாணியில் கட்டியுள்ள கோவில் படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. மார்பிள் சிலைகள் நல்ல அழகுடன் இருக்கும். இங்கும் அந்த மாதிரி சிலைகள் இருக்கும் சில கோவில்களுக்கு சென்று தரிசித்திருக்கிறேன். அங்கு இடமும் சுத்தமாக பராமரிக்கப்படும். அதே போல் நீங்கள் பகிர்ந்த படங்களிலும் சுத்தம் தெரிகிறது. கோபுரங்கள் அழகாக உள்ளது. கடையில் வைத்திருக்கும் பொம்மைகளில் எத்தனை விதமான விநாயகர் பொம்மைகள்.. . பார்க்கவே ஒவ்வொன்றும் விதவிதமாக அழகாக உள்ளது. உணவும் நன்றாக உள்ளது. குழந்தைகளுக்கு நேரத்தில் பசி வந்து விடும். அவர்களுக்கு வயிற்றுக்கு ஏதாவது சாப்பிட வாங்கி தந்தாலதானே நம்முடன் கோவிலின் அனைத்து இடங்களையும் சுற்றுவார்கள்.படங்கள் அனைத்தும் அருமையாக எடுத்து பகிர்ந்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //இந்த பதிவும் அருமை. ஆனால் தாமதமாக வந்திருக்கிறேன்.//

      நன்றி, அதெல்லாம் இல்லை.

      வட நாட்டு பாணியில் மிக அழகான கோயில்தான்.
      உங்கள் ஊரிலும் இருக்கே! இஸ்கான் கோயில் அங்கு இப்படித்தான் பளிங்கு சிலைகள் இருக்கும்.நான் பார்த்து இருக்கிறேன்.

      ஒவ்வொன்றையும் தனி தனியாக போடலாம் அவ்வளவு அழகு பொம்மைகள், விலைதான் மிக அதிகம்.

      //குழந்தைகளுக்கு நேரத்தில் பசி வந்து விடும். அவர்களுக்கு வயிற்றுக்கு ஏதாவது சாப்பிட வாங்கி தந்தாலதானே நம்முடன் கோவிலின் அனைத்து இடங்களையும் சுற்றுவார்கள்//

      ஆமாம், குழந்தைகளுக்கு பசிக்கும் போது சாப்பிட தந்தால் சாப்பிட்டு நம்முடன் குதுகலமாக கோயிலை சுற்றி வருவார்கள்.
      உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி.


      நீக்கு
  17. அம்பாஜி மந்திர் பற்றிய செய்திகளும் படங்களும் அருமை..

    பெருமை மிகும் நமது கலாசாரம் பாரெங்கும் பரவட்டும்..

    மேன்மை கொள் சைவ நீதி
    விளங்குக உலகமெல்லாம்..

    - சேக்கிழார் பெருமானின் திரு வாக்கு நிச்சயம் பலிக்கும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ , வாழ்க வளமுடன்


      //மேன்மை கொள் சைவ நீதி
      விளங்குக உலகமெல்லாம்..

      - சேக்கிழார் பெருமானின் திரு வாக்கு நிச்சயம் பலிக்கும்//

      ஆமாம். உலகமெல்லாம் இருக்கும் நம் மக்கள் வணங்க ஆலயம் அமைத்து வணங்கி வருவது மகிழ்ச்சிதான்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  18. சக்தி கோவில்,பிரகார வேலைபாடுகள் என கண்ணை கவர்கின்றன மிகவும் அருமையாக உள்ளது.
    நவராத்திரி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதவேஈ, வாழ்க வளமுடன்

      //சக்தி கோவில்,பிரகார வேலைபாடுகள் என கண்ணை கவர்கின்றன மிகவும் அருமையாக உள்ளது.//

      ஆமாம், கோவில் முழுவது கலைநயத்தோடு கட்டப்பட்டு இருக்கிறது.
      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  19. பிர்லா மந்திர், ஹரே கிருஷ்ணா கோயில்களை நினைவூட்டுகிறது. விக்கிரகங்கள் அழகு. படங்களும் பகிர்வும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

      //பிர்லா மந்திர், ஹரே கிருஷ்ணா கோயில்களை நினைவூட்டுகிறது. விக்கிரகங்கள் அழகு.//

      ஆமாம்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  20. அம்பாஜி கோயில் ஓர் சக்தி பீடம். குஜராத்தில் அஹமதாபாதிலிருந்து கொஞ்சம் வடக்கே இருக்கிறது. 51 சக்தி பீடங்களில் ஒன்று அராவளி(நாம் ஆரவல்லி என்போம்) மலைத்தொடரின் ஒரு பகுதியில் சுமார் 100 அடி உயரத்தில் அமைந்துள்ளது. அம்பிகையின் மார்பகம் இங்கே விழுந்ததாக ஐதிகம். அம்பிகை அரூபமாகத் தான் காட்சி கொடுப்பாள். இங்கே அட்லான்டாவில் இருக்கும் இதே அமைப்பில் தான் மூலக்கோயிலான அம்பாஜி கோயிலிலும் பார்க்க முடியும். மாலையில் சீக்கிரமே இதை மூடிவிடுவார்கள். அராவளை மலைக்குன்றில் இருந்து இறங்குவது கொஞ்சம் சிரமம் என்பதால். இதைத் தவிரக் கீழே இருக்கும் ஊரான பனஸ்கந்தாவில் உள்ள அம்பாஜி என்னும் பெயரிலேயே உள்ள ஊரில் கீழேயும் ஓர் ஆலயம் உண்டு. பழநியில் மலை மேலும் கீழேயும் முருகன் குடி கொண்டிருப்பதைப் போல. இங்கும் மக்கள் வந்து வழிபடுவார்கள்.குன்றின் மேல் அம்பாஜி இருப்பதைப் போலவே கீழேயும் இருப்பதற்குச் சுவையானதொரு பின்னணி உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
      நிறைய தெரியாத, தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகளை பகிர்ந்தமைக்கு நன்றி.
      சக்தி பீடங்களில் ஒன்று அம்பாஜி கோயில் என்பது மகிழ்ச்சி. குஜராத் மக்கள் சேர்ந்து தங்கள் அன்னையை இங்கே வழிபட ஆலயம் அமைத்து இருக்கிறார்கள்.

      நீக்கு
  21. அம்பாஜி இருக்கும் குன்றின் மேல் ஏறி அம்பிகையைத் தரிசனம் செய்வதில் மக்களுக்குச் சிரமங்கள் ஏற்பட அந்தப் பகுதி அரசர் ஊரினுள்ளேயே நடுவில் இருக்கும் பெரிய மேடையில் அம்பாஜியை எழுந்தருளச் செய்யலாமே என நினைத்தார். அங்கே உருவச்சிலையே இல்லாததொரு கருவறைதான் அம்பாஜியின் சந்நிதானமாக வழிபடப்படுகிறது. ஆனால் தேவியின் உருவமோ அங்கே தினம் தினம் உருவாக்கப்படுவதாகச் சொல்லுவார்கள். கருவறையில் உள்ள அம்பிகையின் யந்திரத்தைச் சுற்றிப் பூக்களால் தினம் தினம் அம்பிகையின் ஓர் உருவத்தை உருவாக்குகிறார்கள். இந்த யந்திரத்தைப் பொதுமக்கள் வெறும் கண்களால் பார்க்கக் கூடாது எனவும் பார்த்தாலும் தெரியாது எனவும் கூறப்படுகிறது. கண்களில் வெள்ளைத்துணியைக் கட்டிக் கொண்டு தான் யந்திரத்தைத் தரிசிக்க வேண்டும். யந்திரத்தில் உள்ள ஆமையைச் சுற்றி அம்பிகையின் 51 எழுத்துக்களும் பொறிக்கப்பட்டிருக்கின்றன. அம்பே மா எனவும் அழைப்பார்கள். இந்த ஊர் அஹமதாபாதிலிருந்து சுமார் 200 மைல் தூரத்தில் உள்ளது. அங்கே அம்பிகைக்குச் சார்த்திய புடைவைகளை தினம் தினம் ஏலம் விடுவார்கள். நாங்கள் போயிருந்தப்போ நானும் ஒரு புடைவை வாங்கி வந்தேன். இன்னமும் வைச்சிருக்கேன். கட்ட மனசு வரலை. :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.

      //தேவியின் உருவமோ அங்கே தினம் தினம் உருவாக்கப்படுவதாகச் சொல்லுவார்கள். கருவறையில் உள்ள அம்பிகையின் யந்திரத்தைச் சுற்றிப் பூக்களால் தினம் தினம் அம்பிகையின் ஓர் உருவத்தை உருவாக்குகிறார்கள். இந்த யந்திரத்தைப் பொதுமக்கள் வெறும் கண்களால் பார்க்கக் கூடாது எனவும் பார்த்தாலும் தெரியாது எனவும் கூறப்படுகிறது. கண்களில் வெள்ளைத்துணியைக் கட்டிக் கொண்டு தான் யந்திரத்தைத் தரிசிக்க வேண்டும்//

      சக்தி அதிகம் என்பதால் கண்களை வெள்ளைத்துணியால் மூடிதான் தரிசிக்க வேண்டும் போல!

      அம்பே மா என்று பாடல்கள் கேட்டு இருக்கிறேன்.இந்த அன்னையை குறித்த பாடல்கள்தான் போலும்.
      அஹமதாபாத்திலிருந்து 200 மைல் தூரத்தில் இருக்கும் விவரம் அருமை. போக விரும்புபவர்களுக்கு நல்ல தகவல்.

      நானும் தஞ்சையில் பெரிய கோயிலில் அம்மன் புடவை ஏலம் விட்ட போது வாங்கினேன்.

      உங்கள் கருத்துக்களுக்கு மிகவும் நன்றி.
      உங்களுக்கு அம்பே மா பழைய உற்சாகத்தை தந்து விட்டாள், மகிழ்ச்சி.



      நீக்கு