சிறு வயதில் கோவையில் இருந்தோம், அப்புறம் புகுந்த வீடும் கோவை ஆனது. சிறு வயதில் மேட்டுப்பாளையம் சாலையில் சாய் கோயில் இருந்தது. (அவர் பேரில் அந்த இடம் சாய் பாபா காலனி ஆனது) அந்த கோயில் பேர் "நாகசாயி கோயில்."ஒரு முறை பக்கத்து வீட்டு அக்கா அழைத்து சென்றார்கள். அப்புறம் நானும் என் அக்காவும் வார வாரம் போய் வருவோம். நாங்கள் காந்திபுரத்தில் இருந்தோம், அங்கிருந்து பேருந்தில் சென்று வருவோம்.
வெள்ளி, 30 ஜூலை, 2021
செவ்வாய், 27 ஜூலை, 2021
காலையும் நீயே! மாலையும் நீயே!
மகன் வீட்டுத் தோட்டத்திலிருந்து காலைக் கதிரவனை எடுத்த படங்கள். மற்றும் வீட்டு முன்புறம் தெரியும் மாலை கதிரவனையும் , தோட்டத்தில் இரவு நிலாவையும் எடுத்த படங்கள் இந்த பதிவில்.
காலைக் கதிரவன் தன் பொன் கிரணங்களை வான் முழுவதும் பரப்பி அழகு படுத்தினான்.
//கடவுள் வாழ்த்து பாடும் இளங்காலை நேரக்காற்று
என் கைகள் வணக்கம் சொல்லும் செங்கதிரவனைப்பார்த்து//
-கவிஞர் வாலி
வேதம் பாடிய சோதியைக் கண்டு
வேள்விப் பாடல்கள் பாடுதற் குற்றேன்;
நாதவார் கடல் இன்னொலியோடு
நற்றமிழ்ச் சொல் இசையையும் சேர்ப்பேன்;
காதம் ஆயிரம் ஓர் கணத்துள்ளே
கடுகி ஓடும் கதிரினம் பாடி
ஆதவா, நினை வாழ்த்திட வந்தேன்
அணிகொள் வாண்முகம் காட்டுதி சற்றே.
- மகாகவி பாரதியார்
சுருதியின்கண் முனிவரும் பின்னே
தூமொழிப் புலவோர் பலர் தாமும்
பெரிது நின்றன் பெருமை யென்றேத்தும்
பெற்றி கண்டு உனை வாழ்த்திட வந்தேன்;
பரிதியே பொருள் யாவிற்கும் முதலே,
பானுவே, பொன்செய் பேரொளித்திரளே,
கருதி நின்னை வணங்கிட வந்தேன்;
கதிர் கொள் வான்முகம் காட்டுதிசற்றே!
-- மகாகவி பாரதியார்
கதிரவன் தன் ஒளி முகம் காட்டி நின்றான்
கடற்கரையில் சூரிய உதயம் பார்க்க போன பாரதி மேகம் மறைத்து இருப்பதை கண்டு சூரியனை முகம் காட்ட வேண்டிப் பாடிய பாடல்.
மழை பெய்து ஓய்ந்த பின் வானம் மிக அழகாய் இருந்தது இரவு 7 மணி இருக்கும்
நிலா நல்ல பொன் வண்ணத்தில் இருந்தது
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசனெந்தை யிணையடி நீழலே
-திருநாவுக்கரசர் அருளிய தேவாரம் (ஐந்தாம் திருமுறை)
கவிஞர் - கண்ணதாசன்.
பி.கு - பயணக்கட்டுரை சில காரணங்களால் தடை படுகிறது.
வாழ்க வையகம் ! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன் !
---------------------------------------------------------------------------------------------------
Labels:
அப்பர் தேவாரம்,
கண்ணதாசன்,
சந்திரன்,
சூரியன்,
பாரதிக்கவிதை,
வாலி
ஞாயிறு, 25 ஜூலை, 2021
ஏரிக்கரை பூங்காற்றே!
வடக்கு அரிசோனாவின் கைபாப் தேசிய வனத்தில் இந்த ஏரி அமைந்து இருக்கிறது. இந்த இடத்திற்கு புதன் கிழமை காலையில் மகன் அழைத்து போனான். இந்த ஏரிக்கு " cataract Lake " என்று பேர். "கண்புரை ஏரி" என்று ஏன் பேர் வந்தது தெரியவில்லை. சூரிய ஒளியை வரவிடாமல் மரங்கள் மறைத்து இருப்பதால் இந்த பேர் வந்து இருக்கும் போல !
ஓங்கி வளர்ந்த பைன் மரங்கள் இந்த பகுதியை அழகு படுத்துகிறது. எல்லா நாளும் இங்கு காலை முதல் மாலை வரை பார்க்கலாம். மகன் வீட்டிலிருந்து 2 மணி நேரம் பயணம் செய்தால் இந்த அழகிய இடம் வரும்.
இந்த மரங்கள் உள்ள பகுதி குழந்தைகளுக்கு ஒடி பிடித்து விளையாட பிடித்த இடம்.
பேரன் சொன்னான் நண்பர்களுடன் வந்து இருந்தால் ஓடி பிடித்து விளையாடலாம் என்று. எங்கு சுற்றுலா சென்றாலும் இரண்டு மூன்று நண்பர்கள் குடும்பத்துடன் வருவார்களாம் . போன சுற்றுலாவில் மருமகளின் தோழி குடும்பம் இருந்தது நன்றாக இருந்தது.
வெள்ளி, 23 ஜூலை, 2021
அன்னாய் ! வாழ்க நின்தன் அருளே!
ஆடி வெள்ளிக்கிழமை இன்று .ஆடி வெள்ளி, ஆடிச் செவ்வாய்களில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், அலங்காரம் நடைபெறும். விளக்கு பூஜைகள் ஆடி வெள்ளிக் கிழமை உண்டு.
இந்த ஆடி வெள்ளி சில நினைவுகளை கொண்டு வருகிறது. மயிலாடுதுறை, மதுரை கோயில்களில் தரிசனம் செய்த அம்மன் படங்கள் இந்த பதிவில் இடம்பெறுகிறது.
மயிலாடுதுறை அருள்மிகு சாந்தநாயகி அம்மன்
Labels:
ஆடி மாதம் அம்மன் வழிபாடு,
பாரதி பாடல்கள்
Location:
Indian Ocean
திங்கள், 19 ஜூலை, 2021
இன்று தோட்டத்திற்கு வந்த புதிய பறவை
முழு சிவப்பாக உள்ள பறவையும் இருக்கிறது. இது முகம் மற்றும் உடலில் திட்டு திட்டாக சிவப்பு இருக்கிறது.
அரளிச் செடிக்கு பாத்தி மாதிரி கட்டி சொட்டு நீர் பாசன வசதி செய்து இருக்கிறான் மகன். பறவைக்கு அது சாரல் மழை போல இருந்து இருக்கிறது. சிறிது நேரம் பார்த்துக் கொண்டு இருந்தது, பிறகு நீர் அருந்தியது. அப்புறம் ஆனந்தமாக சிறிது குளியல் போட்டது , பறந்து சென்றது.
கோடைக்கு ஏற்ற குளியல் செய்யும் பறவை
சிறிய காணொளிதான் ஒரு நிமிடம் கூட இல்லை. பார்த்து விட்டுச்சொல்லுங்கள், எப்படி இருக்கிறது என்று.
வாழ்க வையகம் ! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
--------------------------------------------------------------------------------------------------------
வெள்ளி, 16 ஜூலை, 2021
தொன்மா மிருகம் (Dinosaur)
வண்ணத்துப்பூச்சி பூங்கா இருக்கும் வளாகத்தில் "டைனோசர் உலகம்" இருந்தது அதையும் பார்த்தோம். அது அடுத்த பதிவில், என்று வண்ணத்துப்பூச்சி பதிவில் சொல்லி இருந்தேன். அந்த டைனோசர் உலகத்தைப் பார்க்கலாம் இந்த பதிவில்.
ஞாயிறு, 11 ஜூலை, 2021
பேரன் எடுத்த குறும்படம்
எல்லாம் மிக சின்ன குறும்படங்கள்தான்.(இரண்டு, மூன்று நிமிடங்கள்தான் வரும்) அவன் பார்க்கும் டிஸ்னியின் கதாபாத்திரங்களை வைத்து இந்த படங்களை செய்து இருக்கிறான். படங்களை வரைந்து அவனே பல குரல்களில் பேசி பின்னணி இசை கொடுத்து செய்து இருக்கிறான்.
Remy's Cooking Day
https://www.youtube.com/watch?v=R5-sMlpevE8&t=2s
காணொளிகள் அலைபேசி வழியே பார்க்க முடியவில்லை என்றால் ஒவ்வொரு காணொளிகளுக்கும் கீழ் அதன் சுட்டி கொடுத்து இருக்கிறேன், அதன் வழியே பார்க்கலாம்.
வெள்ளி, 9 ஜூலை, 2021
பூ பூவாய் பறந்து போகும் பட்டு பூச்சி அக்கா !
தலைப்பை படித்தவுடன் கவிஞர் வாலி பாடல் நினைவு வருகிறதா? போனமாதம் பட்டுப்பூச்சி பூங்கா போனோம் அங்கு அழகான பட்டுபூச்சிகளைக் கண்டவுடன் இந்த பாடல் என் நினைவுக்கு வந்தது. "திக்குத் தெரியாத காட்டில் "என்ற படத்தில் இடம்பெற்றது இந்த பாடல். "பூ பூவாய் பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா நீ பள பளன்னு போட்டு இருப்பது யாரு கொடுத்த சொக்கா?" என்று கேட்கும் குழந்தை இந்த பாடலில். இறைவன் கொடுத்த சொக்காய் அணிந்து, அதையும் தவம் இருந்து அழகிய உடலைப் பெற்று நம் கண்களுக்கு விருந்து அளிக்கிறது என்று சொல்லதோன்றுகிறது.
புதன், 7 ஜூலை, 2021
பண்ணை வீட்டில் பாம்பு
நாற்றுப் பண்ணை
போன மாதம் செடிகள் வளர்த்து விற்கும் பண்ணைவீட்டுக்கு போய் இருந்தோம். பெரிய நாற்றுப் பண்ணை, மரம், செடி, கொடிகள் கிடைக்கும் இங்கு. சில செடிகள் மற்றும் உரம் கலந்த மண் மூட்டைகள் வாங்கி வந்தோம்.
அந்த செடிப் பண்ணையில் என்ன பார்த்தோம் தெரியுமா?
அதன் பேரைச் சொன்னாலே படையும் நடுங்கும் என்று சொல்வார்கள் அல்லவா! அதைப்பார்த்து படம், மற்றும் காணொளி எடுத்தது இந்த பதிவில். (அது படம் எடுக்கவில்லை)