தலைப்பை படித்தவுடன் கவிஞர் வாலி பாடல் நினைவு வருகிறதா? போனமாதம் பட்டுப்பூச்சி பூங்கா போனோம் அங்கு அழகான பட்டுபூச்சிகளைக் கண்டவுடன் இந்த பாடல் என் நினைவுக்கு வந்தது. "திக்குத் தெரியாத காட்டில் "என்ற படத்தில் இடம்பெற்றது இந்த பாடல். "பூ பூவாய் பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா நீ பள பளன்னு போட்டு இருப்பது யாரு கொடுத்த சொக்கா?" என்று கேட்கும் குழந்தை இந்த பாடலில். இறைவன் கொடுத்த சொக்காய் அணிந்து, அதையும் தவம் இருந்து அழகிய உடலைப் பெற்று நம் கண்களுக்கு விருந்து அளிக்கிறது என்று சொல்லதோன்றுகிறது.