திங்கள், 1 பிப்ரவரி, 2021

உல்லாசப்பயணம் - பகுதி 10


உல்லாசப்பயணம் -9  முந்தைய பதிவு படிக்கவில்லை என்றால் படிக்கலாம்.உதயகிரி குகை கோயிலில்
உதயகிரி குகை கோயிலில்
உதயகிரிகுகை கோயிலில்
கோனார்க் - நன்றி கூகுள்


பூரிஜெகன்நாதர் ஆலயம் - நன்றி கூகுள்

பயணக்கட்டுரையை நோட்டில் இத்துடன் நிறைவு செய்து இருக்கிறார்கள்.

நானும் என் கணவரின் பயணக்கட்டுரையை  உங்களுடன்   பகிரும் பணியை  இறையருளால் நிறைவு செய்து விட்டேன். இறைவனுக்கும்    நன்றி. துணையாக இருந்து காத்து உதவிய  துணைவருக்கும் நன்றி.

இடையில் மடி கணினியில் சிறிது பழுது ஏற்பட்டு விட்டது. மகன் புதிய மடிகணினி வாங்கி தந்தான்.  புது கணினியில்  படங்கள் இப்போதுதான்  வலை ஏறி கொண்டு இருக்கிறது. மகனுக்கும் நன்றி.

இத்தனை நாள் தொடர்ந்து படித்து உற்சாகமான பின்னூட்டங்கள் அளித்தவர்கள் எல்லோருக்கும் நன்றி. 

                                                                   வாழ்க வளமுடன்
-----------------------------------------------------------------------------------------------------------------


27 கருத்துகள்:

 1. மிக மிக நிறைவான பகுதி.
  கோனார்க் சிற்பங்களை நாசூக்காகக் கடந்திருக்கிறார் சார்.
  அற்புதமான கண்ணியமான மனிதர்.

  புவனேஸ்வர் கோவில்களும் குளங்களும் மிகப்
  புராதனமானவை. அவற்றை சார் விவரித்திருப்பது
  அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
   உங்கள் தொடர் வரவும், அன்பான உற்சாகம் தரும் பின்னூட்டங்களும் தான் என்னை தொடர்ந்து எழுத வைத்தது.

   //புவனேஸ்வர் கோவில்களும் குளங்களும் மிகப்
   புராதனமானவை. அவற்றை சார் விவரித்திருப்பது
   அருமை.//
   நன்றி அக்கா.

   புவனேஸ்வர், பூரி எல்லாம் போக நினைத்த இடங்கள்

   நீக்கு
 2. சில கோயில்கள் சமணர்களால் கட்டப் பட்டவை என்பது எனக்குப் புதிய செய்தி. மிக நன்றி மா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம், குடைவரை கோவில்கள் சமணர்கள் தான் நிறைய கட்டிஇருக்கிறார்கள்.

   நீக்கு
 3. சூரியனார் கோவில் பற்றிய வர்ணனை மிகச் சிறப்பு. எப்படிக் கவனித்து எழுதி இருக்கிறார்
  என்று வியப்பாக இருக்கின்றது.!!!!!
  சார் எடுத்த படங்களும் இருந்திருந்தால்
  மிக நன்றாக இருந்திருக்கும்.

  இதை ஊர் திரும்பும்போது செய்யலாம்.
  நேரமாகி விட்டது மீண்டும் வந்து படிக்கிறேன் அம்மா.
  வாழ்க நல.
  முடன் வளமுடன்இன்னும் நிறைய பதிவுகள் உங்கள்
  சிந்தையும் மனத்திலும் இருக்கின்றன.
  அவற்றை இங்கே நல் நினைவுகளாகப்பதிய இறைவன் அருளட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சூரியன் கோவில் கலைபெட்டகம் என்று சொல்லி விட்டார்கள்.

   நீங்கள் சொன்னது போல் படங்கள் எல்லாம் எல்லாம் இருப்பதை இணைக்க வேண்டும் ஊர் திரும்பிய பின் .

   ஒய்வு எடுங்கள் அக்கா, பிறகு பார்க்கலாம்.

   பதிய நினைத்தவைகள் நிறைய இருக்கிறது தான்.
   உங்கள் கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி அக்கா.   நீக்கு
 4. நிறைவான பயணம் அருமை அம்மா... பல வரலாற்றுச் சான்றுகள் உள்ளன; அவை இன்றைக்கு அறிய வேண்டிய பொக்கிசங்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்

   ஆமாம், பல வரலாற்றுச் சான்றுகளுடன் எழுதி இருக்கிறார்கள்.
   உங்கள் கருத்துக்கு நன்றி .

   நீக்கு
 5. வணக்கம் சகோதரி

  இன்றைய சுற்றுலா பதிவும் அழகான கையெழுத்துடன் தெளிவாக இருந்தது. அருமை. புவனேஸ்வர் கோவிலைப் பற்றியும், கோனார்க் சிற்பங்கள் பற்றியும் பதிவில் எழுதியிருப்பதை படித்து தெரிந்து கொண்டேன். சூரியனார் கோவில் பற்றிய அழகான வர்ணனை அற்புதமாக இருந்தது.

  பூரி ஜெகன்னாதர் கோவிலைப்பற்றி அவர் கூறியிருப்பதெல்லாம் வியப்பைத் தருகின்றன. அந்த ஊரில் நடைபெறும் திருமணங்களுக்கு கோவிலிருந்து வெண்சாதமா? அரிய விஷயங்கள் பலவற்றை உங்கள் கணவரின் அற்புதமான கட்டுரையிலிருந்து தெரிந்து கொண்டேன். தங்களுக்கு புது மடிக்கணினி வாங்கித் தந்த தங்கள் மகனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். சுற்றுலா பதிவை உங்களை அழகாக தொகுத்து எழுத வைத்த தங்கள் கணவருக்கும், ஆண்டவனுக்கும் எங்கள் நன்றிகளும். இன்னமும் பல பதிவுகளை தொடர்ந்து தர வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
   பதிவை ரசித்து படித்து எப்போதும் விரிவான பின்னூட்டங்கள் கொடுத்து வந்தது மகிழ்ச்சி கமலா.

   //பூரி ஜெகன்னாதர் கோவிலைப்பற்றி அவர் கூறியிருப்பதெல்லாம் வியப்பைத் தருகின்றன. அந்த ஊரில் நடைபெறும் திருமணங்களுக்கு கோவிலிருந்து வெண்சாதமா?//

   வியப்பை தரும் விஷயமே ! இப்போதும் நடைபெறுகிறதா என்று படிக்க வேண்டும்.

   மகனை வாழ்த்தியதற்கு நன்றி.
   பயணக்கட்டுரையை உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மனநிறைவும், மன ஆறுதலும் கிடைத்து விட்டது. உங்கள் வேண்டுகோளுக்கும் நன்றி.

   உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி நன்றி.

   நீக்கு
 6. கல்லூரியிலிருந்து எவ்வளவு உபயோகமான இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் சென்றிருந்திருக்கிறார்கள்!  ஸாரும் மிக அருமையாக எலலா விவரங்களையும் தொகுத்து சுவாரஸ்யமான கட்டுரையாக வடித்ததோடு, இத்தனை வருடங்களாக நல்லதொரு காகிதத்திலேயே அது காணப்படுவதும் சிறப்பு. 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

   கல்லூரியில் அவர்கள் பாடசம்பந்தமான இடங்களுக்கு அழைத்து சென்று நன்றாக காட்டி விட்டார்கள்.சார் இருக்கும் போது இதை பகிர்ந்து இருந்தால் மேலும் தகவல்கள் சொல்லி இருப்பார்கள். நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லி இருப்பார்கள் அது முடியாமல் போய் விட்டது.

   புத்தகத்தின் ஓரங்கள் மட்டும் கொஞ்சம் சேதம் மற்றபடி நோட்டு நன்றாக இருக்கிறது.

   உங்கள் கருத்துக்கு நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 7. பயணக் கட்டுரை மிகச் சிறப்பாக இருந்தது. ஒவ்வொரு இடத்திற்கும் கூடவே சென்றது போன்ற உணர்வு. நீங்கள் சேர்த்த படங்களும் நன்று. பூரி புவனேஸ்வர் கோனார்க் போன்ற இடங்களுக்கு நான் சென்ற போது கிடைத்த அனுபவங்களும் நினைவுக்கு வந்தன. தொடரட்டும் பதிவுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்

   //பயணக் கட்டுரை மிகச் சிறப்பாக இருந்தது./
   நன்றி.

   நாங்கள் சேர்ந்து போகவில்லை அதனால் படங்கள் இல்லை.இணையத்தின் உதவியால் சில படங்கள்.
   நீங்கள் நாளந்தா போய் வந்தீர்கள் அங்கு போகமுடியவில்லை என்று சாருக்கு வருத்தம் சில மாணவ்ர்கள் மட்டும் போனார்கள் என்று போட்டு இருக்கிறார்கள் இவர்கள் ஏன் போக முடியவில்லை என்று தெரியவில்லை.

   சார் பயணக் கட்டுரையைப் படிக்கும் போது உங்கள் பயணத் தொடர் நினைவுக்கு வந்தது.

   உங்கள் கருத்துக்கு நன்றி வெங்கட்.


   நீக்கு
 8. பதினைந்து நாள் உல்லாசப்பயணம் படிக்க மிக சுவாரசியமாக இருந்தது. மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் Sri, வாழ்க வள்முடன்
   தொடர்ந்து படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

   நீக்கு
 9. புவனேஸ்வரை இப்போது பார்த்தால் சிற்றூர் எனச் சொல்ல முடியாது. அருமையான ஊர். எங்களுக்கு ரொம்பப் பிடிச்சது. கொனாரக்கில் அப்படி ஒன்றும் பார்க்க முடியாத அளவுக்குச் சிற்பங்கள் இருந்ததாகத் தெரியவில்லை. வல்லி ஒரு வேளை கஜூராஹோவை நினைத்துக் கொண்டாரோ? கொனாரக் சூரியன் கோயில். நான்கு திசைகளிலும் சூரியனே வெவ்வேறு பருவ அளவைக் குறிப்பிடும்படி அமைத்திருப்பார்கள். மேலே ஏறிப் பார்க்கணும். எங்களை ஏறாதே என்று சொல்லி விட்டார்கள். பார்த்தவரைக்கும் சிற்பங்கள் எல்லாம் அழகே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
   வல்லி அக்கா சரியாகத்தான் சொல்கிறார்கள்.
   சில சிற்பங்கள் இருக்கிறது.
   சிற்பங்கள் எல்லாம் அழகுதான்.
   நீக்கு
 10. கொனாரக் பற்றி எழுதி இருப்பதை இன்றுஎன்னால் சரியாய்ப் படிக்க முடியவில்லை. கண்கள் மறைக்கின்றன. பின்னர் வரேன்.

  பதிலளிநீக்கு
 11. எவ்வளவு இடங்கள் பிரயாணம் செய்திருக்கிறார்கள். அதனை அழகுற எழுதி வைத்தது சிறப்பு. நாங்களும் கூடவே பயணித்த உணர்வு.

  ஏன் பாதியில் நிறுத்திவிட்டார்கள்?

  இதனை நீங்கள் மின்னூலாக்கணும், திரும்ப தட்டச்சு செய்து. பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   பாதியில் நிறுத்தவில்லை. பயணம் சென்னையுடன் நிறைவு பெற்று விட்டது.
   அப்புறம் பழனி கல்லூரிக்கு சென்று விட்டார்கள்.

   உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற பார்க்கிறேன்.
   உங்கள் விருப்பத்திற்கு நன்றி.

   நீக்கு
 12. அருமையான விஷயங்கள். தொடராகப் படித்ததில் மனதிற்கு பூரண திருப்தி. இன்னும் ஒரு முறை திரும்பவும் படிக்க வேண்டும். நீங்களும் எழுதிக் கொண்டே இருங்கள். அன்புடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் காமாட்சி அக்கா, வாழ்க வளமுடன்
   நீங்கள் படித்து கருத்து சொன்னது மகிழ்ச்சி, நன்றி.
   ஆகட்டும் எழுதி கொண்டு இருக்கிறேன்.
   அன்புக்கு நன்றி.

   நீக்கு
 13. பள்ளிப் பாடத் திட்டத்தில் வைப்பதற்கு ஏதுவான குறிப்புகள்...

  பழைமையான படங்களும் அந்த காலத்தின் சூழ்நிலைகளும் பொக்கிஷங்கள்..

  சிறப்பாகத் தொகுத்து வழங்கியிருந்தீர்கள்..
  மனம் நிறைந்த பாராட்டுகள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
   குறிப்புகளை பாராட்டியதற்கு நன்றி.

   உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி.

   நீக்கு
 14. புவனேஸ்வர் கோயில்களுக்காகவே பார்க்க வேண்டிய நகரம். நன்கு அவதானித்து எழுதியிருக்கிறார். திருமண வீடுகள் கோயில் வெண்சோற்றையேப் பெற்றிட வேண்டும் எனும் தகவல் சுவாரஸ்யம்.

  நல்லதொரு பயணக் கட்டுரை. பகிர்ந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு