வெள்ளி, 19 பிப்ரவரி, 2021

கதிர் நரசிங்க பெருமாள்

கதிர்நரசிங்க பெருமாள்

 திண்டுக்கல் அருகில்  12 கிலோமீட்டர் தூரத்தில் பழனி தேசியநெடுஞ்சாலையோரத்தில் கதிர்நரசிங்க பெருமாள் கோவில்  இருக்கிறது.   போகும் வழியில் இருப்பதால்   பார்க்க வசதியாக இருக்கிறது. 


என் கணவரோடு இரண்டு முறை போய்  இருக்கிறேன். கோவை போகும் போது இந்த கோவிலுக்கு  போய் இருக்கிறோம்.

கதிர் நரசிங்க பெருமாள் கோவில்


அனுமன் மிக சக்தி வாய்ந்தவர்
கோவிலின் சிறப்புகள் சொல்லும்   பலகை

இரண்டாவது முறை போன போது புரட்டாசி சனிக்கிழமை 4- வது வாரம் அனுமனுக்கு  பழ அலங்காரம் செய்து இருந்தார்கள் , கூட்டம் அதிகமாக இருந்தது ஒருவரிடம் சற்று விலகச்சொல்லி பார்த்து வந்தோம். அவருக்கு நன்றி சொன்னோம்.  அப்போது படம் எடுக்கவில்லை.





அழகிய நந்தவனம் இருக்கிறது பிரகாரத்தில் 
சக்கரத்தாழ்வார் சன்னதி  உள்ளது  இங்கு அவர் பலகை சித்திரமாக காணப்படுகிறார்.  அவருக்கு பின் யோகநரசிம்மர் இருக்கிறார்.
பக்கத்தில்  தனி சன்னதியில் லட்சுமி ஹயக்ரீவரும் இருக்கிறார், வியாழக்கிழமை சிறப்பு வழி பாடு உண்டாம்.
தலவிருட்சம் வில்வம்
கோவில் தீர்த்த கிணறு
எதிரில் தெரிவது பைரவர் சன்னதி  அனுக்கிரக பைரவர் என்று அழைக்கப்படுகிறார், இரு நாய் வாகனம் இருக்கிறது. தேய்பிறை அஷ்டமி நாளில் கூட்டம் நிறைய இருக்குமாம்.


 சன் தொலைக்காட்சியில் வந்த "ஆலய வழிபாடு"  பகுதியில் இடம் பெற்ற மூலவர்  படங்களை எடுத்து போட்டு இருக்கிறேன். மூலவரை நாம் எடுக்க அனுமதி இல்லை என்பதால். மூலவர் கதிர் நரசிங்க பெருமாள், கமலவல்லி தாயார், லட்சுமியுடன் காட்சி தருகிறார். 

தாயார்,  நரசிங்க பெருமாள் பக்கத்தில் சுயம்பு  லிங்கம் உள்ளது சிவனும், பெருமாளும்  கருவறையில் இருக்கிறார்கள்.

உற்சவர் மட்டும் நரசிங்க பெருமாளாக காட்சி தருகிறார்.

மூலவர் இருக்கும் சன்னதிக்கு போகும் பாதை  , இரண்டு மண்டபங்களை கடந்து பெருமாளை தரிசிக்க வேண்டும்.புரட்டாசி சனிக்கிழமை என்பதால்  வரிசையில் உள்ளே போக கம்பு கட்டி வைத்து இருக்கிறார்கள். கருவறையை சுற்றி வலம் வர  இடம் உள்ளது.  வாசலில் குனிந்தபடி உள்ளே சென்று பின் நிமிர்ந்து வலம் வந்து மீண்டும் குனிந்து வெளியே வர வேண்டும்.

                           இரண்டாவது தடவை கோவிலுக்கு போன போது

இரண்டாவது முறை போன போது என் கணவர் வலம் வருகிறார்கள்.

தலவிருட்சம் வில்வம் வில்வ காய் மிக பெரிதாக இருக்கிறது. கோட்டை மதில் போல் அழகாய் அமைந்து இருக்கும் கோவில் மதில்.

இரண்டு முறை கோவைக்கு போகும் போது போய் இருக்கிறோம் இந்த கோவிலுக்கு.  கோவிலுக்கு வெளியே வசந்த மண்டபம் இருக்கிறது. 
இரண்டாவது முறை போகும் போது புரட்டாசி சனிக்கிழமை அதனால் கடைகள் நிறைய இருந்தது.

நெய் தீபம் உள்ளே  விற்கபடுவதற்கு விளம்பர பலகை
மலை மேல் இருப்பவர்தான் கோபிநாத சுவாமி,  கோவை போக வேண்டி இருந்ததால் மலை மேல் உள்ள பெருமாளை இரண்டு தடவை சென்றும் பார்க்கவில்லை. ஒரு நாள்  தனியாக இந்த  கோயிலுக்கு   மட்டும் போகிற மாதிரி வருவோம் என்றார்கள். 


 ஒளி பொருந்திய பெருமாள் எல்லோருக்கும்    நலம் அருள வேண்டும்.

வாழ்க வளமுடன்
======================================================================

36 கருத்துகள்:

  1. அன்பு கோமதிமா,
    வாழ்க வளமுடன்.
    திண்டுக்கல்லில் இருந்த போது இந்தக் கோவிலுக்குப் போடிருக்கிறோமா
    என்று நினைவில்லை. மிக அழகான கோவில் படங்கள்.
    ஆஞ்சனேயரைப் பார்த்த நினைவு இருக்கிறது. திண்டுக்கல் மலைக் கோட்டை அர்ய்கே இருக்கா. சார் படங்களை அவருக்குத் தெரியாமல்
    வெகு அழகாக எடுத்திருக்கிறீர்கள்.
    காலை கடவுள் அருளில் பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
      திண்டுக்கல்லில் இருந்த போது பார்த்து இருக்கலாம். சாலையோரம் இருப்பதால் போய் இருக்கலாம்.

      மதுரையிலிருந்து கோவை போகும் வழியில் பார்த்தோம் அக்கா.
      சாருக்கு தெரியாமல் போட்டோ எடுக்கவில்லை . அவர்கள் போய் கொண்டே இருப்பார்கள் நான் கோவிலை எடுக்கும் போது அவர்களையும் சேர்த்து எடுப்பேன். கொஞ்சம் திரும்புங்கள் என்றால் "வா வா சீக்கீரம் "என்பார்கள். போட்டோவிற்கு வற்புறுத்தி நிற்க வைக்க வேண்டும்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  2. அழகான படங்கள் கோவிலைப்பற்றிய விபரங்கள் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  3. அழகான கோவில். படங்களும், விவரங்களும் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  4. அட...! எங்க ஊரு கோவில், உங்களின் படங்களின் மூலம் மேலும் சிறப்பாக இருக்கிறது... அருமை அம்மா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி தனபாலன்.

      நீக்கு
  5. நல்ல தரிசனம்.வாய்ப்பு கிடைக்கும்போது அவசியம் செல்வேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்
      வாய்ப்பு கிடைக்கும் போது சென்று வாருங்கள்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  6. கேள்விப்படாத கோயில், நரசிங்கப் பெருமாள் அழகாய் இருக்கிறார். கோயிலில் பழைய கல்தரையை எடுத்துவிட்டுப் புனருத்தாரணம் என்னும் பெயரில் வழுக்கும் டைல்ஸைப் பதித்திருக்கிறார்கள். இது கோயிலின் பழமையை முழுக்க முழுக்க மாற்றுவதோடு அந்தக் கற்களில் இருக்கும் கல்வெட்டுக்கள் அடியோடு காணாமல் போகும் அபாயமும் உண்டு. ஆனால் சொன்னால் யார் கேட்கிறார்கள்? :( எங்க ஊர்ப் பெருமாள் கோயில்த் திருப்பணியின்போதும் சொல்லிச் சொல்லி அலுத்துவிட்டேன். :( இங்கே டைல்ஸ் தரையைப் பார்த்ததுமே மனம் வேதனையில் ஆழ்ந்தது. கற்களான் ஆன தளம் பலவிதத்திற்கும் நன்மை தரும். இந்த டைல்ஸினால் பலனே இல்லை. :( கோயில்களைப் பழமை மாறாமல் புதிப்பிப்பதே அழகு! நம்மவர்களுக்கு அது தெரியவில்லை. அந்தக்கால ராஜாக்கள், ஸ்தபதிகள், சிற்பிகள் இதில் சிறந்தவர்களாக இருந்திருக்கின்றனர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்

      கோயில் மிக பழமையானது என்று தலவரலாறு சொல்கிறது. ஒரு சிலர் பாண்டியர்கள் கட்டியது என்றும், ஒரு சிலர் கட்டிட அமைப்பு நாயக்கர் காலம் என்றும் சொல்கிறார்கள்.

      இப்போது உள்ளவர்கள் அவர்கள் வசதிக்கு மாற்றிக் கொள்கிறார்கள். பழமையை அப்படியே வைத்துக் கொண்டு பாதுகாக்கலாம். உள்ளே மாற்றியது இல்லாமல் வெளியே பிரகாரத்திலும் மாற்றி உள்ளார்கள் பழைய கால கற்களில் நடந்து போனால் பலவித நன்மைகள் உண்டு நீங்கள் சொன்னது போல். என்ன செய்வது! நாம் மனதில் உள்ளதை சொல்லி வேதனை பட்டுக் கொள்ள மட்டுமே முடியும்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  7. கோவில் மிக அழகாகவும் பிரம்மாண்டமாகவும் படங்களில் தெரிகிறது.

    அனுமனின் அதி சக்திக்கான காரணத்தைப் புரிந்துகொண்டேன்.

    போட்டோக்களுக்கு சார் pose கொடுக்கவில்லை போலிருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழக வளமுடன்
      கோவில் நன்றாக இருந்தது.
      அனுமனின் சக்திக்கான காரணத்தை படித்து தெரிந்து கொண்டீர்களா? மகிழ்ச்சி.

      போட்டோக்கு சில நேரங்களில் நின்று போஸ் கொடுப்பார்கள். இப்போது நினைக்கிறேன் வற்புறுத்தி நிற்க வைத்து எடுத்து இருக்கலாம் என்று.

      குடும்பத்தார், மற்றும் குழுவாக போனால் யாராவது "நில்லுங்கள் இரண்டு பேரும் "என்று எடுத்து தருவார்கள்.

      தனியாக போனால் அவர்கள் மட்டும் அதுவும் இப்படி முன்னே போய் கொண்டு இருப்பார்கள் யாரோ மாதிரி.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  8. மிக அழகிய கோயில், உள்வீதியைப் பார்க்கவே மனதுக்கு மிக அமைதியாக இதமாக சாந்தமாக இருக்குது. அதிலும் அந்த தீர்த்தக்கிணறு மிக அழகு.

    வசந்த மண்டபத்தை மட்டும் பாழடைந்ததுபோல விட்டிட்டினமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்
      மிக அழகிய கோவில், அமைதியான கோவில்தான்.
      மனதுக்கு இதம் தரும் தான். கோவில் திருக்குளம் இருக்கிறது போல நாங்கள் பார்க்கவில்லை. வசந்த மண்டபத்தில் திருவிழா சமயம் ஸ்வாமி எழுந்தருளுவார் என்று நினைக்கிறேன். அப்போது வெள்ளை அடிப்பார்கள் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  9. சக்தி வாய்ந்த ஆஞ்சனேயரை.. களவெடுத்திட்டேன் ஹா ஹா ஹா.. எனக்கு ஆஞ்சநேயரை ரொம்பப் பிடிக்கும்.. என் குருவெல்லோ அவர்:)).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழ அலங்கார ஆஞ்சனேயர் இன்னும் அழகாய் இருந்தார் அதை எடுத்து இருந்தால் அதுவும் அதிரா எடுத்து இருக்கலாம். குரு எல்லா நன்மைகளும் செய்யட்டும் அதிராவிற்கு.
      உங்கள் கருத்துக்கு நன்றி அதிரா.

      நீக்கு
  10. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. கதிர் நரசிங்க பெருமாள் கோவில் நன்றாக உள்ளது. நிறைய கோவில்கள் இப்படித்தான் பெரிதாகவும், விஸ்தாரமாகவும் உள்ளது. ஆனால், தெரிந்து கொள்ள முடிவதில்லை. உங்களுடைய அழகான படங்கள் மூலமாகவும், விளக்கமான பகிர்வு மூலமாகவும் கோவிலை மானசீகமாக சுற்றிப்பார்த்து தரிசித்த திருப்தி கிடைத்தது.

    அருள் மிகுந்த ஆஞ்சநேயர் படம் அழகாக உள்ளது. அவரின் அருளுக்கு காரணத்தை தாங்கள் தந்திருந்த படம் மூலமாக படித்தும் தெரிந்து கொண்டேன். எப்போதும் சிரஞ்சீவியாக இருந்து காத்து வரும் அவரின் அருளால், உலக மக்கள் அனைவரையும் நல்லபடியாக வைத்திருக்குமாறு அவரிடம் வேண்டிக் கொண்டேன். பலகை சக்கரத்தாழ்வார் என்றால், வெறும் கல் பலகையில் சக்கரத்தாழ்வார் உருவம் பொறித்திருக்குமா?

    படங்கள் அனைத்தும் மிக அருமையாக எடுத்துள்ளீர்கள். கோவின் சிறப்புக்கள் தெரிந்து கொண்டேன். இங்கெல்லாம் செல்லும் வாய்ப்பு எப்போது கிடைக்கும் தெரியவில்லை. ஆனால், தங்களின் பகிர்வால் இந்த சனிக்கிழமையன்று பெருமாள் தரிசனத்துடன், இந்த கோவிலுக்கு சென்று தரிசித்த திருப்தி கிடைத்து விட்டது. மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
    நீங்கள் சொல்வது போல பெரிய பழமையான கோவில்கள் நிறைய இருக்கிறது. அனைத்தையும் நாம் தெரிந்து கொள்ள முடிவது இல்லைதான்.

    //எப்போதும் சிரஞ்சீவியாக இருந்து காத்து வரும் அவரின் அருளால், உலக மக்கள் அனைவரையும் நல்லபடியாக வைத்திருக்குமாறு அவரிடம் வேண்டிக் கொண்டேன்//

    நல்ல வேண்டுதல். நானும் வேண்டிக் கொள்கிறேன் உங்களுடன்.


    //பலகை சக்கரத்தாழ்வார் என்றால், வெறும் கல் பலகையில் சக்கரத்தாழ்வார் உருவம் பொறித்திருக்குமா?/

    சதுரபலகை வடிவ கல்லில் சக்கரத்தாழ்வார் மற்றும் அவரைசு சுற்றி தேவர்கள் கை கூப்பிய நிலையில் இருக்கிறார்கள் அது மிக சிறப்பு என்று சொல்கிறார்கள்.

    படங்களையும், பதிவையும் ரசித்து விரிவான கருத்து தெரிவித்தமைக்கு நன்றி கமலா.










    பதிலளிநீக்கு
  12. பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  13. மிக அழகிய கோவிலாக இருக்கிறது.   சுத்தமாக காட்சி அளிக்கிறது.  வழக்கம்போல பக்தர் கூட்டம் குறைவு போல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      //மிக அழகிய கோவிலாக இருக்கிறது. சுத்தமாக காட்சி அளிக்கிறது.//

      கோவில் சுத்தமாக அழகாய் காட்சி அளிப்பது மனதுக்கு மகிழ்ச்சி தருகிறது.
      பக்தர்கள் கூட்டம் இல்லை. காலை நேரம் சென்றோம். அதனால் கூட்டம் இல்லை.

      நீக்கு
  14. ஆஞ்சநேயர் இந்தியாவிலேயே இந்தக் கோவிலில் மட்டும்தான் அக்னி மூலையில்  இருக்கிறார் எனும் தகவல் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம், கோவில் வரலாறு அப்படித்தான் சொல்கிறது.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  15. அழகிய படங்கள் வாயிலாக கோவிலை நேரில் தரிசித்த உணர்வு.

    பதிலளிநீக்கு
  16. கதிர் நரசிங்கப் பெருமாள் தரிசனம் அருமை..

    நரசிங்க மூர்த்தியின் நல்லருளால்
    நல்லவர் வாழ்வு நலமாகட்டும்!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

      //நரசிங்க மூர்த்தியின் நல்லருளால்
      நல்லவர் வாழ்வு நலமாகட்டும்!...//

      ஆமாம், அனைவருக்கும் நரசிங்க மூர்த்தியின் நல்லருள் கிடைத்து நலமாக வாழ வேண்டும்.

      உங்கள் கருத்துக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி.

      நீக்கு
  17. கோவில் பற்றிய விபரங்களும் படங்களும் சிறப்பாக உள்ளன!திருமதி.கீதா சொன்னது மாதிரி, மார்பிள் டைல்ஸ் கோவிலின் அருளையும் உள்ளார்ந்த அழகையும் கெடுக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வாழ்க வளமுடன் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்
      உங்கள் உடல் நலம் எப்படி இருக்கிறது?

      //மார்பிள் டைல்ஸ் கோவிலின் அருளையும் உள்ளார்ந்த அழகையும் கெடுக்கிறது!//

      ஆமாம், பழமையை அப்படியே போற்றி பாதுகாத்தால் நல்லது. கோவிலுக்கு வரும் வயதானவர்களுக்கும் ஆபத்து கவனமாக நடக்க வேண்டியதாக இருக்கிறது.

      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  18. எங்களுக்கும் கிடைத்தது தங்கள் மூலமாக ஆலய தரிசனம்.

    பிரகாரங்களில் சார் நடந்து செல்லும் படங்கள் அருமையாக உள்ளன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
      அவர்களுடன் சென்ற கோயில்கள் நிறைய இருக்கிறது இன்னும் . பார்க்கும் போதெல்லாம் மனம் வேதனை படுகிறது . "முன்னே போகிறேன், பின்னே வா " என்று சொல்லுவது போலவே இருக்கிறது.

      உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  19. கதிர் நரசிங்க பெருமாள்...மிக அருமையான ஆலய தரிசனம் மா ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அனுபிரேம், வாழ்க வளமுடன்
      கதிர் நரசிங்க பெருமாள் கோயில் நன்றாக இருக்கும் நேரம் கிடைக்கும் போது பாருங்கள்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு