மதுரை ,திருப்பரங்குன்றம் சாலையிலுள்ள “குமரக கல்யாண மண்டபத்தில்” இரவு 7மணிக்கு ஒரே பரபரப்பு!
‘என்ன இன்னும் மாப்பிள்ளை வரலை ! ’என்று ஆளுக்கு ஆள் பேசிக் கொண்டு இருந்தார்கள். ’கோவையிலிருந்து எத்தனை மணிக்கு புறப்படுவதாய் சொன்னார்கள், மாப்பிள்ளை அழைக்கப் போனவர்கள்’ என்று கேள்விமேல் கேள்வி கேட்டுக்கொண்டு இருந்தார்கள், பெண்ணின் அப்பாவிடம்.
கவலை தோய்ந்த முகத்துடன் கேள்வி கேட்கும் எல்லோருக்கும் நிதானமாய் உள்ளுக்குள் ஏற்பட்டு இருக்கும் பதட்டத்தை மறைத்துக் கொண்டு பதில் சொல்லிக் கொண்டு இருந்தார்கள் பெண்ணின் அப்பா . பெண்ணின் அம்மா எல்லா தெய்வங்களையும் வேண்ட ஆரம்பித்து விட்டார்கள். இப்போது போல் அந்தக் காலத்தில் அலைபேசி வசதிகள் இல்லை. கல்யாணமண்டபத்தின் தொலைபேசிக்கு காலதாமதத்தின் காரணத்தை சொல்ல மறந்து விட்டனர், மாப்பிள்ளை அழைக்கச் சென்றவர்கள்.
மாப்பிள்ளை அழைப்புக்கு வந்த உறவினர்களும், நண்பர்களும் தங்கள் மாப்பிள்ளை அழைப்பு எப்படி நடந்தது என்றும், வேறு ஊரில் எப்படி அசம்பாவிதங்கள் மாப்பிள்ளை அழைப்பின் போது நடந்தது என்றும் பேசிக்கொண்டு இருந்தார்கள். அதைக் கேட்ட பெண்ணின் பெற்றோர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது போல் இருந்தது.
1973இல் பிப்ரவரி 6 ஆம் தேதி தமிழ்நாட்டில் பஸ் ஸ்டிரைக் வேறு. போக்குவரத்து இல்லை. அதனால் மிக நெருங்கிய உறவினர்கள் முன்பே வந்துவிட்டார்கள். மற்றவர்கள் ரயிலில் வந்துகொண்டு இருந்தார்கள் அவர்களை அழைக்க வேன், வாடகைக் கார் என்று ஏற்பாடு ஆகி இருந்தது.
வந்தவர்கள் எல்லாம் கேட்கும் கேள்வி - மாப்பிள்ளை வரவில்லையா? - என்பது தான். ஒரு வழியாக எல்லோர் பிரார்த்தனையின் பலனாய் நலமாக மாப்பிள்ளை வந்தார். வழியில் டயர் பழுது அடைந்து அதை மாற்றிவந்ததால் காலதாமதம். ( அந்தக்காலத்தில் 1973ல் நடந்த திருமணத்தில் மாப்பிள்ளை காலதாமதாய் வந்ததுபோல், 1997இல் நடந்த அவர்களின் மகளின் திருமணத்தின் போது மாப்பிள்ளை காலதாமதமாய் வந்தார். என்னே ஒற்றுமை! தஞசாவூரில் 1997-இல் பெரியகோயில் குடமுழுக்கு விழாவிற்கு முதல் நாள் ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாய்ப் போக்குவரத்துப்பிரச்சினையால் அன்று அவர்கள் வருவது தாமதமானது. )
மாப்பிள்ளை வந்தார், மாப்பிள்ளை வந்தார். மாட்டு வண்டியிலே !
பொண்ணு வந்தா பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே!
என்று அந்தக்காலப் பாட்டு உண்டு. அதுபோல் மாட்டு வண்டியில் வந்து இருந்தால் கூட வந்து இருக்கலாம் போல மாப்பிள்ளை. அலங்கரித்த காரில் வந்தார் வந்தார் வந்தாரே!
மண்டபத்தின் அருகில் இருந்த பிள்ளயார் கோயிலில் இருந்து மாப்பிள்ளை அழைப்பு சிறப்பாக நடைபெற்றது.
மணமகன் வரவில்லை என்ற விபரம் எல்லாம் தெரியாமல் மணப்பெண் தன் அறையில் தன் மாமா பெண், அத்தை பெண், தன் பெரியப்பா, சித்தப்பா பெண்கள், அண்ணன், தம்பிகளுடன் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டு இருந்தாள்.
இன்று போல் அன்று மாப்பிள்ளை , பெண் சேர்ந்து அமர்ந்து வரவேற்பு நடக்காது . மாப்பிள்ளை அழைப்பின்போது பெண் ஒளிந்து இருந்துதான் மாப்பிள்ளையைப் பார்க்க வேண்டும் .
மறுநாள் மணமேடையில் எதிர் எதிராக ஆசனம் போட்டு இருப்பார்கள். அதில் பெண்ணையும் , மாப்பிள்ளையையும் அமர வைத்து இருப்பார்கள். அப்போதுதான் இருவரும் பார்த்துக் கொள்ள வேண்டும். அல்லது பெண் ஊஞ்சலில் இருப்பாள், அப்போது மணமகன் பார்த்துக் கொள்வார்.
அப்புறம் மோதிரம் மாற்றி, மாலை மாற்றி - பின் தான் திருமணம்.
அந்த மணமக்கள் யார் என்று தெரிந்ததா? தெரியவில்லையா? அவர்கள் நாங்கள் தான். எங்களுக்குத்தான் பிப்ரவரி 7-இல் திருமணம் ஆனது.
மோதிரம் மாற்றல் |
1973ஆம் வருடம் பிப்ரவரி 6 ஆம் தேதி !
மாப்பிள்ளை அழைப்பு இப்படியாக நடந்தது.
அன்றைய தினம் நடந்த வேறு சில நாட்டுநடப்புகள் - சுதேசமித்திரன் நாளிதழில் இருந்து:- (40 ஆண்டுகளுக்கு முந்தைய நாளிதழ்)
(இப்போது சுதேசமித்திரன் வருவதில்லை)
எங்கள் திருமணத்தின்போது தங்கத்தின் விலை என்ன தெரியுமா?
1 கிராம் தங்கத்தின் விலை- ரூ25.25பை
அதாவது ஒரு பவுன் (22 காரட்) =ரூ202
வேறு செய்திகள்:-
மத்திய மந்திரிசபை விஸ்தரிப்பு
அப்போதும் தமிழகத்தில் மின்வெட்டு.
ஆலைத்தொழிலதிபர்களின் யோசனையைப் படித்துப்பாருங்கள்
அப்போதும் தெலுங்கானாப் போராட்டம்:-
அன்றைய ரேடியோ நிகழ்ச்சிகள்:-
ஆகா.. அற்புதம்!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்!
மனம் நிறைந்த இனிய
பதிலளிநீக்குதிருமண்நாள் வாழ்த்துகள்...!
உங்கள் திருமணத்தின் போது நடந்த மாப்பிள்ளை அழைப்பைப்பற்றித்தான் சொல்லுகிறீர்கள் என்று நான் ஊகித்து விட்டேன் முதல் வரியிலேயே!
பதிலளிநீக்கு41 ஆவது திருமண நிறைவு நாளிற்கு இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!!
அன்றைய பேப்பரில் உங்கள் கல்யாண தகவலை தேடினேன் ,ஊஹும் !
பதிலளிநீக்குத ம 1
சுவாரஸ்யமான பதிவு அம்மா! திருமண நாள் வாழ்த்துகள்!
பதிலளிநீக்குஇப்பொழுது இருக்கும் பல பிரச்சனைகள் அப்பொழுதும் இருந்திருக்கின்றன :((.. பல விவரங்கள் செய்தித்தாளிலிருந்து தெரிந்து கொண்டேன்..நன்றி!
1973 என்பதால் படத்தில் அரசு ஸார் ஓவியத்தில் வீடியோ வரையவில்லை பாருங்கள்! ஆஹா...
பதிலளிநீக்குஅன்றைய சுதேசமித்திரன் தினசரியைப் பாதுகாத்து வைத்திருப்பது எதனால்? ஆச்சர்யமாக இருக்கிறது! ரேடியோ நிகழ்ச்சிகள், அன்றும் மின்வெட்டு, தெலுங்கானா பிரச்னை...அடேடே.... வானொலியில் காலை 9.30க்கு உங்கள் விருப்பத்துடன் நிகழ்ச்சிகள் முடிந்து விடும். 11.30 க்கு கல்வி ஒலிபரப்பு, எல்லாம் நிகழ்ச்சி நிரல் பார்த்து நினைவுக்கு வந்தன.
திருமண நாள் வாழ்த்துகள் மேடம், உங்களுக்கும் ஸாருக்கும்!
இனிய திருமண நல்வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குபல தகவல்கள் கொடுத்து அசத்திட்டீங்க அம்மா...
வணக்கம்
பதிலளிநீக்குஅம்மா.
ஆரம்பத்தில் இருந்து படித்துக்கொண்டு போகும்போது... ஏதோ கதை என்று நினைத்தேன் கேள்வி கேட்டு விடை சொன்னபோதுதான் அறிந்தேன் ....விடயத்தை. எத்தனை பொக்கிஷங்களை சேமித்து வைத்துள்ளிர்கள்.
-------------------------------- இனிய திருமணவாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
பதிலளிநீக்குத.ம 4வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நாற்பதாம் ஆண்டு திருமணநாள் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு\\அன்றைய சுதேசமித்திரன் தினசரியைப் பாதுகாத்து வைத்திருப்பது எதனால்? ஆச்சர்யமாக இருக்கிறது!// அதானே எதனால்..? :)
பதிலளிநீக்குவணக்கம் அப்பதுரை சார், வாழ்க வளமுடன்.உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.
பதிலளிநீக்குவணக்கம் அப்பதுரை சார், வாழ்க வளமுடன்.உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.
பதிலளிநீக்குவணக்கம் இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன். உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
பதிலளிநீக்குவணக்கம் இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன். உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
பதிலளிநீக்குவணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன். உங்கள் கருத்துக்கும், இதயம் நிறைந்த நல் வாழ்த்துக்களுக்கும் நன்றி.
பதிலளிநீக்குவணக்கம் பகவான் ஜி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஎங்கள் திருமணத்தை பத்திரிக்கைக்கு கொடுக்கவில்லை.
உங்கள் முதல்வரவுக்கும், தமிழ்மண வாக்குக்கும் நன்றி.
வணக்கம் தியானா ,வாழ்க வளமுடன். இன்றுள்ள பல பிரச்சனைகள் அன்ரும் உண்டு தான்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஆம், நீங்கள் சொல்வது சரிதான்.அப்போது வீடியோ கிடையாது என்பதால் சார் வரைய வில்லை.
//அன்றைய சுதேசமித்திரன் தினசரியைப் பாதுகாத்து வைத்திருப்பது எதனால்?//
எங்களுக்கு கல்யாணப்பரிசாக ஒரு சின்ன மேஜை கிடைத்தது. அதன் இழுப்பறையில்(டிரா) ஊரிலிருந்து கொண்டு வந்த பேப்பரை போட்டு அதன் மேல் சாமான்களை அடுக்கி வைத்து இருந்தோம். பழைய பேப்பராய் போய் விட்டது என்று புது பேப்பர் மாற்றலாம் என்னும் போது அதை எடுத்து படித்தோம். நம் திருமண சமயத்தில் உள்ள பேப்பர் இருக்கட்டும். அப்போது உள்ள நாட்டு நடப்புகள் இருக்கிறது என்று பத்திரப்படுத்தி வைத்தார்கள் என் கண்வர். வேறு ஒன்றும் காரணம் இல்லை. இப்போது பதிவு எழுத உபயோகப்பட்டு விட்டது.
இப்போது நீங்கள் எவ்வளவு ஆர்வமாய் படித்தீர்கள்!
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
வணக்கம் ரூபன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு//விடயத்தை. எத்தனை பொக்கிஷங்களை சேமித்து வைத்துள்ளிர்கள்.//
உங்கள் அழகான கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
வணக்கம் ரூபன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு//விடயத்தை. எத்தனை பொக்கிஷங்களை சேமித்து வைத்துள்ளிர்கள்.//
உங்கள் அழகான கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
வணக்கம் ரூபன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு//விடயத்தை. எத்தனை பொக்கிஷங்களை சேமித்து வைத்துள்ளிர்கள்.//
உங்கள் அழகான கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
வணக்கம் ரூபன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு//விடயத்தை. எத்தனை பொக்கிஷங்களை சேமித்து வைத்துள்ளிர்கள்.//
உங்கள் அழகான கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
வணக்கம் கவியாழி கண்ணதாசன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
பதிலளிநீக்குவணக்கம் முத்துலெட்சுமி, வாழ்க வளமுடன்.
\\அன்றைய சுதேசமித்திரன் தினசரியைப் பாதுகாத்து வைத்திருப்பது எதனால்? ஆச்சர்யமாக இருக்கிறது!// அதானே எதனால்..? :)
ஸ்ரீராம் அவர்களுக்கு சொன்ன பதிலை வாசித்துக் கொள்.
பதிலளிநீக்குவணக்கம் முத்துலெட்சுமி, வாழ்க வளமுடன்.
\\அன்றைய சுதேசமித்திரன் தினசரியைப் பாதுகாத்து வைத்திருப்பது எதனால்? ஆச்சர்யமாக இருக்கிறது!// அதானே எதனால்..? :)
ஸ்ரீராம் அவர்களுக்கு சொன்ன பதிலை வாசித்துக் கொள்.
பதிலளிநீக்குவணக்கம் முத்துலெட்சுமி, வாழ்க வளமுடன்.
\\அன்றைய சுதேசமித்திரன் தினசரியைப் பாதுகாத்து வைத்திருப்பது எதனால்? ஆச்சர்யமாக இருக்கிறது!// அதானே எதனால்..? :)
ஸ்ரீராம் அவர்களுக்கு சொன்ன பதிலை வாசித்துக் கொள்.
திருமண நாள் வாழ்த்துக்கள். அருமையான மலரும் நினைவுகளை எல்லோர் மனமும் மகிழ்வில் ஆச்சரியப்படும் படி படங்களுடன் சிறப்பான தகவல்களை பகிர்ந்து விட்டீர்கள்.
பதிலளிநீக்குஅன்றைய பத்திரிகை முதல் அனைத்தையும் பத்திரப்படுத்தி வைத்திருப்பது பாராட்டுக்குரியது. அன்றைய உங்கள் திருமண பத்திரிகையும் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
வணக்கம் சசிகலா, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குகல்யாணப்பத்திரிக்கை, தாம்பூலக்கவர் எல்லாம் பத்திரமாய் வைத்து இருக்கிறேன். எங்கள் வீட்டுக்கு வாருங்கள் காட்டுகிறேன்.
உங்கள் வரவுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி சசிகலா.
வணக்கம் சசிகலா, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குகல்யாணப்பத்திரிக்கை, தாம்பூலக்கவர் எல்லாம் பத்திரமாய் வைத்து இருக்கிறேன். எங்கள் வீட்டுக்கு வாருங்கள் காட்டுகிறேன்.
உங்கள் வரவுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி சசிகலா.
பதிலளிநீக்கு41 ஆவது திருமண நிறைவு நாளிற்கு இதயம் நிறைந்த நல்வாழ்த்துகள்.
தங்களுக்கும் அரசு சாருக்கும் இனிய மணநாள் வாழ்த்துகள்:)! ஓவியம் அருமை. தங்கம் விலை, ஓடிக் கொண்டிருந்த திரைப்படங்கள் என அன்றைய நாட்டு நடப்புகளும் சுவாரஸ்யம்.
பதிலளிநீக்கு/ சுதேசமித்திரன் தினசரியைப் பாதுகாத்து வைத்திருப்பது எதனால்?/
பதிலளிநீக்குஸ்ரீராமின் கேள்விக்கான விடையும் சுவாரஸ்யம்.
திருமண நாள் வாழ்த்துகளும், என் பிரார்த்தனைகளும் அக்கா. ஆரம்பம் முதலே அன்றைய செய்தித்தாளைப் பிரத்தியேகமாச் சேகரித்து வைத்திருக்கும் அருமையான திட்டம் எப்படி வந்தது என்று கேட்கவேண்டும் என்று நினைத்திருந்தேன். கேட்குமுன்னே விடையும் கிடைத்துவிட்டது.
பதிலளிநீக்குமேஜையில் விரித்திருந்தது 6-ம் தேதி செய்தித்தாளாகவே அமைந்தது தற்செயலென்றாலும் ஆச்சரியப்பட வைக்கிறது.
அப்புறம், 1973-ல் தான் திருமணமா? அப்படின்னா முத்தக்காவுக்கு நாந்தான் அக்கா!! :-)))))
அடே... குத்து மதிப்பா ஒரு 145 நாள் சீனியரா நீங்கள்!
பதிலளிநீக்குவாழ்த்துகள்.
தலயின் படத்துக்கு தனி வாழ்த்து
வணக்கம் காஞ்சனாராதாகிருஷ்ணன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு41வது துவக்க நாள்.
வாழ்த்துக்களுக்கு நன்றி.
அன்பான திருமண நாள் வாழ்த்துக்கள். அழகான பதிவு.
பதிலளிநீக்குபதிவுக்கான இணைப்புகள் பிரமாதம். ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை ரூ.16/- மற்றும் ஏகப்பட்ட சுவாரஸ்யமான தகவல்கள். பார்க்கவும், படிக்கவும் சுவையாக இருந்தது.
இன்னொன்று. வரையும் சித்திரங்களில் கால் விரல்களைப் வரைவது தான் மிகவும் கஷ்டமான காரியம் என்று எங்கோ படித்த ஞாபகம். அரசு சாரிடம் கேட்டுச் சொல்கிறீர்களா?..
வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குஓவியம், பதிவை ரசித்தமைக்கு நன்றி.
சுதேசமித்திரன் பத்திரிக்கையில் வந்த நாட்டுநடப்பை ரசித்தமைக்கு நன்றி.
ஸ்ரீராம் கேள்விக்கு அளித்தபதிலை ரசித்தமைக்கும் நன்றி ராமலக்ஷ்மி.
தங்களுக்கும் தங்கள் துணைவருக்கும் இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் மேடம். இருபத்தொரு வருடங்களுக்கு முன்பு நடந்த எங்கள் திருமண அழைப்பிதழையே பத்திரப் படுத்தி வைக்கத் தோன்றவில்லை எனக்கு. தாங்களும் தங்கள் கணவரும் நாற்பத்தியொரு வருடங்களுக்கு முந்தைய செய்தித்தாள்களை பத்திரப் படுத்தி வைத்திருப்பது வியப்பிலும் வியப்பு. மனம் நிறைந்த பாராட்டுகள் இருவருக்கும்.
பதிலளிநீக்குவணக்கம் ஹுஸைனம்மா, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது போல் செய்தித்தாள்களை சேகரிக்கும் பழக்கம் உள்ளவர்கள் இருக்கிறார்கள்.
காரணம் இல்லாமல் காரியம் இல்லை என்பார்கள். ஒவ்வொரு செயலும் நடப்பதைப் பார்த்தால் ஆச்சிரியங்களும் அற்புதங்களும் வாழ்வில் நிறைய இருக்கும் ஹுஸைனம்மா.
நான் பதிவு எழுதுவேன் அதற்கு உபயோகப்படும் என்று என் கணவர் பத்திரபடுத்தியது போல் உள்ளது.
ஆம் 1973- ல் தான் திருமணம்.
முத்தக்காவிற்கு அக்கா கிடைத்தது மகிழ்ச்சி.
உங்கள் வாழ்த்துக்களுக்கும், பிராத்தனைகளுக்கும் மிகவும் நன்றி.
வணக்கம் தருமி சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குசாருக்கு திருமணம் ஆகும் போது 24 வயது.
எங்கள் திருமணத்திற்கு பிறகு 145 நாள் கழித்து உங்களுக்கு திருமணமா?
என் கணவரின் ஓவியத்திற்கு வாழ்த்து சொன்னதற்கும் , திருமண நாளுக்கு வாழ்த்து சொன்னதற்கும் நன்றி.
வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி.
பதிவையும் மற்ற செய்திகளை ரசித்து படித்தமைக்கு நன்றி.
என் கணவரிடம் உங்கள் கேள்வியை கேட்டேன். சித்திரங்களில் கால் விரல்களை வரைவது கஷ்டம் தான் என்றார்கள்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
வணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஎங்கள் திருமண ஆல்பத்தில் முன் பக்கத்தில் தமிழ் பத்திரிக்கை, ஆங்கிலப் பத்திரிக்கை கடைசியில் என்று ஒட்டிக் கொடுத்தார்கள் அப்பா.
அந்த ஆல்பம் அழகாய் தங்க கலரில் குஞ்சலம் தொங்க இருக்கும். படங்கள் உள் பக்கம் கறுப்பு கலர் பேப்பரில் ஒட்டி இருக்கும், டிஸ்யூ பேப்பர் ஒவ்வொரு பக்கத்திலும் படத்தை பாதுகாத்து இருக்கும். அப்புறம் அதை வேறு ஆல்பத்தில் ஒட்டி வைத்தாலும் பழைய் ஆல்பம் தூக்கிப் போட மனம் இல்லாமல் அப்பாவின் நினைவுகளை தாங்கி எங்களுடன் இருக்கிறது.
கல்யாணப் பத்திரிக்கை, தாம்பூலகவர், கல்யாணத்திற்கு வரமுடியாமல் தந்தி அடித்தவர்களுக்கு நன்றி கார்டு அடித்தோம் அதுவும் இருக்கிறது.
அதில் கையெழுத்து போட சொன்ன போது ஏற்பட்ட ஒரு வேடிக்கையை நினைவு வைத்துக் கொள்ள இருக்கிறது.
திருமணம் ஆனபின் கணவரின் இன்ஷியல் போடாமல் அப்பாவின் இன்ஷியலைப்போட்டு அது அனுப்ப முடியாமல் என்னிடம் இருக்கிறது.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
//சாருக்கு திருமணம் ஆகும் போது 24 வயது.//
பதிலளிநீக்குஎனக்கு 29
அடடா ... அவ்வளவு ’சின்னப்பையனையா’ திருமணம் செய்தீர்கள் !!!!
இனிய மண நாள் வாழ்த்துக்கள் அம்மா... 40 வருடமாய் தொடர்கிறதா மின் வெட்டும், தெலுங்கான பிரச்சனையும்...
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குவணக்கம் எழில், வாழ்க வளமுடன். உங்கள் இனிய மண நாள் வாழ்த்துக்களுக்கு நன்றி
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி..
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அக்கா..! மாப்பிள்ளை அழைப்பு.. சாரின் கை வண்ணத்தில் அழகாக உள்ளது ஓவியம்.. பதிவின் ஆரம்பத்தில் எங்கேயோ நடந்த சேதியை சொல்கிறீர்களோ என நினைத்தேன்.
பதிலளிநீக்குமணமகன் அரசு அவர்களும், மணமகள் கோமதி அவர்களும் விரைவில்(இன்னும் 8,9ஆண்டுகளில்) காணவிருக்கும் பொன்விழாவிற்கும், தொடர்ந்து பவளவிழா, நூற்றாண்டுவிழாக்களுக்கும் இப்போதே என் வாழ்த்துகள். தமிழ்நாட்டின் முந்திய வரலாற்றுக் குறிப்புகளை விகடனும், தந்தியும் தொகுத்துப் போட்டிருக்கிறார்கள். அதைப் படித்தது போல இருந்தது உங்கள் திருமணம் பற்றிய பதிவு. வாழ்த்துகளுடன் வணக்கம்.
பதிலளிநீக்குவணக்கம் ராதாராணி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குசாரின் ஓவியத்தை ரசித்தமைக்கும், உங்கள் வாழ்த்துக்களுக்கும் நன்றி. உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வணக்கம் முத்துநிலவன் சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஆஹா! நூற்றாண்டுவிழா! உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
மனம் நிறைந்த இனிய
பதிலளிநீக்குதிருமணநாள் வாழ்த்துகள்...!
சார் வரைந்துள்ள ஓவியம் நல்லா இருக்கு. அவருக்கும், பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.
அன்றைய செய்திகள் யாவும் இன்றும் பொக்கிஷமாக வைத்துள்ளது ஆச்சர்யமாக உள்ளது.
மணநாள் வாழ்த்துகள் கோமதிம்மா.
பதிலளிநீக்குஅன்றைய தினசரி ஆச்சரியமூட்டுகிறது :-)
வணக்கம் வை.கோபாலகிருஷ்ணன் சார் வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் மனம் நிறைந்த இனிய வாழ்த்துக்களுக்கு நன்றி.
சாரின் ஓவியத்திற்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் அளித்தமைக்கு சார் நன்றி சொல்கிறார்கள்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் மிகவும் நன்றி சார்.
வாங்க சாந்திமாரியப்பன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
அன்றும், இன்றும் எப்படி இருக்கிறது என்பதற்கு அன்றைய தினசரி பகிர்வு.
உங்கள் இருவருக்கும் திருமண நாள் வாழ்த்துகள்...
பதிலளிநீக்குஅப்படியே எனக்கு ஆசீர்வாதம் பண்ணிடுங்க :)
வணக்கம் தெகா, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குதிருமண நாள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
நாங்களும் உங்களுக்கும், உங்கள் அன்பு குடுமத்தினர்களுக்கும் ஆசீர்வாதம் செய்து விட்டோம்.
வாழ்க வளமுடன்!
வாழ்க நலமுடன்!
வாழ்த்துகள் அம்மா....
பதிலளிநீக்குஅந்த நாளின் நினைவுகளையும், அன்றைய தினச் செய்திகளையும் புகைப்படங்களாக வெளியிட்டது நன்று.
வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வாழ்த்துக்களுக்கும், கருத்துக்கும் நன்றி.
அன்று அன்று என்று எத்தனை சேகரிப்பு. கிறேட்.
பதிலளிநீக்குயார் இன்று இப்படிச் செய்வார்!.
சீரும் சிறப்புடன் நீடு வாழ்க! வாழ்க!..
இது:- வேதா. இலங்காதிலகம்.
வணக்கம் வேதா. இலங்காதிலகம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் மிகவும் நன்றி.
அன்பு கோமதி இனிய மணநாள் வாழ்த்துகள்.சார் வரைந்த படம் கம்பீரமாக இருக்கிறது.என்ன ஒரு அற்புதமான பதிவு.வெகு சுவை. எனக்கு அழைப்பிதழ் கொடுக்க மறந்துவிட்டீர்கள்>;(**}}} மிகச் சிறந்த பதிவாளரை சார் மணந்திருக்கிறார்.வாழ்க வளமுடன் அம்மா.
பதிலளிநீக்குஅன்பு வல்லி அக்கா வணக்கம், வாழ்கவளமுடன்.சார் வரைந்த படத்தை பாராட்டியதற்கு நன்றி அக்கா.
பதிலளிநீக்குநான் சிறந்த பதிவாளரா?
அன்பு உங்களுக்கு மிகவும் அதிகம் அதனால் புகழ்ச்சியும் அதிகமாய் இருக்கிறது.
உங்கள் வரவுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி அக்கா.
இனிய திருமணநாள் வாழ்த்துகள்!
பதிலளிநீக்குஅழகாக உள்ளது ஓவியம்.
வணக்கம் மாதேவி, வாழக வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
சரித்திரத்தில் இன்று என்பது போல உள்ளது. நிச்சயமாக எவரும் இது போன்று எழுதி பார்த்தது இல்லை.
பதிலளிநீக்குஇனிய வாழ்த்துகள்.
வணக்கம் ஜோதிஜி , வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநான் சரித்திரத்தை விருப்ப பாடமாய் எடுத்தவள். அதனால் இப்படி எழுத தோன்றி இருக்குமோ!
உங்கள் கருத்துக்கும், இனிய வாழ்த்துக்களுக்கும் நன்றி.
பதிலளிநீக்குசற்று தாமதமாக வந்தேன் போலிருக்கிறது. இருந்தாலும் பரவாயில்லை. இனிய மண நாள் வாழ்த்துக்கள். உங்கள் மண நாளை என்றும் நினைவூட்டும் அத்தனை செய்திகளையும் சேமித்து வைக்க வேண்டும் என்று எப்படித் தோண்ரியது.? பாராட்டுக்கள்.
வ்ணக்கம் பாலசுப்பிரமணியம் சார்,வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் இனிய வாழ்த்துக்குளுக்கு நன்றி.
ஒரே பேப்பரில் உள்ள செய்திகள்தான்.
அத்தனையும். இப்போது உள்ளவர்களுக்கு படிக்க வாய்ப்பு என்று பகிர்ந்தேன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
வ்ணக்கம் பாலசுப்பிரமணியம் சார்,வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் இனிய வாழ்த்துக்குளுக்கு நன்றி.
ஒரே பேப்பரில் உள்ள செய்திகள்தான்.
அத்தனையும். இப்போது உள்ளவர்களுக்கு படிக்க வாய்ப்பு என்று பகிர்ந்தேன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
தாமதமான திருமண நாள் வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு//இன்று போல் அன்று மாப்பிள்ளை , பெண் சேர்ந்து அமர்ந்து வரவேற்பு நடக்காது . மாப்பிள்ளை அழைப்பின்போது பெண் ஒளிந்து இருந்துதான் மாப்பிள்ளையைப் பார்க்க வேண்டும் .//
மதுரைப்பக்கம் நிச்சயத்தின் போதே பெண், மாப்பிள்ளையைச் சேர்த்து உட்கார வைப்பார்கள். தஞ்சை ஜில்லாவில் வழக்கம் இல்லை. என் கல்யாணத்தில் அதுக்கு ஒரு சின்ன வாதவிவாதம் நடந்து கொண்டிருக்கையிலேயே சுற்றி உள்ள சிலர் சேர்த்து அமர வைத்துவிட்டனர். :)))))
வல்லியின் பதிவில் படித்தேன், உங்கள் திருமண நாள் ஏழாம் தேதி என. ஆனால் அடுத்தடுத்து விருந்தினர் வருகையில் மறந்தே போச்சு. இன்னிக்கும் இதோ வரப் போறார். காத்துட்டு இருக்கோம். :)))))
பதிலளிநீக்குவணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குதிருநெல்வேலி பக்கம் பாளையங்கோட்டை எங்கள் ஊர்.. . எங்கள் வீடுகளில் முன்புதான் மாப்பிள்ளை ,பெண்ணை சேர்ந்து உட்கார வைக்கும் பழக்கம் இல்லை.
இப்போது நிச்சியத்திற்கு மாப்பிள்ளை வருகிறார், புடவை எடுத்துக் கொடுக்கிறார், இருவரையும் சேர்த்து உட்காரவைத்து ஆசிர்வாதம் செய்கிறார்கள். காலம் மாறி விட்டது.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.