சனிக்கிழமை மாலை சூரியன் மறையும் காட்சியை பார்க்கப் போனோம்.
மலையில் மறையும் காட்சி . பேரன் "சூரிய பகவானே!" என்று திருமதி. செளம்யாவின் நவக்கிரகப் பாடலை பாட ஆரம்பித்து விட்டான்.
மகன் வீட்டின் பின் புறம் காலை சூரியன் வரும் முன் வானம்.
நான் காலையும் மாலையும் சூரியனைப் பார்க்கும் போது பாடும் பாடல்
சீலமாய் வாழ சீரருள் புரியும்
ஞாலம் புகழும் ஞாயிரே போற்றி
சூரியா போற்றி சந்திரா போற்றி
வீரியா போற்றி வினைகள் களைவாய்
சூரியன் உதிக்கும் போதும் மறையும் போதும் பார்ப்பது மகிழ்ச்சியை தரும்.
மாலை 4 முதல் 6 மணி வரை சூரிய ஓளி நம் மேல் படுவது நல்லது என்பார்கள். சூரியன் மறைவதையும் பார்த்து விட்டு அப்படியே கொஞ்சம் நடந்து வந்தோம்.
மாலை நேரத்தில் இயற்கையை ரசித்து கொண்டே நடந்து போனது மனதுக்கு ஆறுதலாக இருந்தது
மாலை நேரம் அந்த இடத்தையே சிவப்பு வண்ணமாக மாற்றி இருந்தது சூரிய கதிர்கள்.இந்த கள்ளி பல வருடம் ஆனதாம். 150 வயது உடைய கள்ளிகள் இருக்கிறதாம்.
ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி இருந்தது.
மரத்துக்கு பின்னால் மரம் உயரம் வளர்ந்து நிற்கும் கள்ளி
தந்தையின் தோளில் இருந்த குழந்தை எங்களைப்பார்த்து புன்னகைத்து சென்றாள்.
சைக்கிளில் நிறைய பேர் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கை அசைத்து சென்றார்கள்.
சைக்கிளில் நிறைய பேர் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கை அசைத்து சென்றார்கள்.
வாங்க போகலாம் என்று அழைக்கும் பேரன்
Teddy bear cholla என்று அழைக்கப்படும் கள்ளி
Teddy bear cholla என்று அழைக்கப்படும் கள்ளி
குட்டி குட்டியாக இப்படி கீழே கிடப்பவை ஒட்டுபுல் போல் நம் மேல் ஒட்டிக் கொள்ளும்
சிறிதாக இருக்கும் போது இதற்கு பேர் Teddy bear cholla பூ போல காட்சி அளிக்கும் இவை ஒட்டுப்புல் போல் (குட்டி கரடி போல்) நம் ஆடைகளில் ஒட்டிக் கொண்டு வந்து விடும் பக்கத்தில் போனால் அதை அப்புறபடுத்துவது கொஞ்சம் சிரமமாக இருக்குமாம். அதற்கென உள்ள கருவியால்தான் அப்புறபடுத்த முடியும் என்று மருமகள் சொன்னாள்.
இதை அப்புறப்படுத்த எவ்வளவு கஷ்டபடுகிறார்கள் என்று நேரமிருந்தால் இந்த காணொளியில் பார்க்கலாம்.
30 வயதுவரை அவசரமில்லாமல் மிக மெதுவாக ஒவ்வொரு வாரமும் கிட்டதட்ட ஒரு சென்டிமீட்டர் வளருமாம். 70 வயதில் கள்ளி தடிமனான கிளைகளை கொண்ட உயரமான முள் மரம் போல் மாறுகிறதாம். பல பறவைகளுக்கு ஒரு வீடாக மாறுகிறது இந்த கள்ளிகள்.
இந்த படம் ஞாயிறு அன்று வீட்டுக்கு பக்கத்தில் நடப்பதற்கு என்று இருக்கும் இடத்தில் எடுத்தது. கள்ளியில் கூடு (பறவை வீடு) இருக்கு பாருங்கள்.
பக்கத்தில் போய் கூட்டில் பறவை இருக்கா என்று பார்க்க போனேன் "ஆச்சி ஒட்டிக் கொள்ளும் தள்ளி வாங்க" என்று பேரன் எச்சரித்து விட்டான்.
தன் வளர்ப்பு செல்லத்தை அழைத்துக் கொண்டு நடந்து வரும் ஒரு முதிய அம்மா
கள்ளிகளுக்கு அருகில்
2017 ஆம் ஆண்டி பீனிக்ஸ் வந்த போது எடுத்த படம்.வாழ்க வளமுடன்.
-------------------------------------------------------------
உதிக்கும் சூரியனோ மறையும் சூரியனோ... இரண்டுமே அழகான காட்சிகள். அவை கண்ணில் பட்டால் படம் எடுக்கும் ஆசையைத் தவிர்க்க முடியாது.
பதிலளிநீக்குகள்ளிச்செடிகளில் இவ்வளவு விவரங்களா? ஒட்டிக்கொள்ளும் முள்கள்ளி ஆபத்தானது போலும். அந்தப் பறவை பாதுகாப்பான இடத்தில்தான் கூடு கட்டி இருக்கிறது.
பதிலளிநீக்குகள்ளிச்செடிப்பற்றி நிறைய விவரங்கள் இருக்கிறது. கொஞ்சம் பகிர்ந்தேன்.
நீக்குநீங்கள் சொல்வது போல பறவை பாதுகாப்பான இடத்தில் தான் கூடு கட்டி இருக்கிறது.
காணொளியில் சட்டையில் ஒட்டிக்கொண்டிருக்கும் கள்ளிமுட்கள் பயமுறுத்துகிறது! வேலைக்காரர்களை வைத்துக் கொண்டு விளையாடும் ஒரே ஆட்டம்!
பதிலளிநீக்குஆமாம் , சட்டையில் ஒட்டி இருக்கும் கள்ளிகள் பயத்தை தருகிறது.
நீக்குஅதை எடுக்க எத்தனை பேர் கருவிகளுடன் .
//வேலைக்காரர்களை வைத்துக் கொண்டு விளையாடும் ஒரே ஆட்டம்!//
காணொளியில் பந்தை அடித்தவரே தான் போய் எடுத்து வருகிறார்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
அழகான படங்கள். நல்ல விபரங்கள்.கள்ளிகள் பற்றி இப்போத்தான் இத்தனை விஷயங்கள் கேள்விப் படுகிறேன். இந்த மாதிரி இங்கே இந்தியாவிலும் ஏதோ ஒரு செடி/மரத்தின் விதைகளோ/காய்களோ ஒட்டிக்கொள்ளும். எடுக்கச் சிரமப்படுவோம். பெயர் என்னவோ, மறந்துட்டேன்.
பதிலளிநீக்குவணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
நீக்கு//அழகான படங்கள்.//
நன்றி.
நெருஞ்சி முள் காலில் ஒட்டிக் கொள்ளும் அதை எடுக்க மிகவும் கஷ்ட படுவோம்.
//இங்கே இந்தியாவிலும் ஏதோ ஒரு செடி/மரத்தின் விதைகளோ/காய்களோ ஒட்டிக்கொள்ளும். எடுக்கச் சிரமப்படுவோம். பெயர் என்னவோ, மறந்துட்டேன்.//
எனக்கும் தெரியவில்லை
ஏஞ்சல் அன்புடன்
நீக்குநாங்க சின்னப் பசங்களா இருந்தபோது (4வது படிக்கும்போது) கள்ளிப் பழங்களைப் பறிக்க முயல்வோம். அதனைச் சாப்பிடுபவர்கள் பலர் உண்டு. அதில் உள்ள மெல்லிய முட்கள் (முடி போல மெல்லிய ஆனால் சட்டையில், விரலில் குத்திக்கொள்ளும்) குத்திவிடும். அதனை எடுப்பது கடினம். அதுபோல கூரையில் பனை மரத்தின் தண்டுகளை சிறிய உத்திரங்கள் போள வைத்திருப்பார்கள். பனைமரத் தண்டுகளை handle பண்ணும்போதும் அதனுடைய நரம்புகள் ஊசி போல விரல்களில் குத்தி உள்ள போயிடும்.
நீக்குவணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
நீக்குகள்ளிப்பழம், கள்ளிப்பூ எல்லாம் பறித்து விளையாடுவார்கள் சிறுவர்கள் என்று கேள்வி பட்டு இருக்கிறேன். ஆனால் சிறுவயதில் நான் பார்த்தது கூட கிடையாது கள்ளிகளை.
சப்பத்திக்கள்ளி பார்த்து இருக்கிறேன் முன்பு இந்த வகை கள்ளிகள் பார்த்தது இல்லை.
பனை மரத்தின் நரம்புகள் ஊசி போல இருக்கும் குத்தும் என்பார்கள்.
சூரிய உதய/அஸ்தமனக் காட்சிகள் சிறப்பு. காணொளி எரர் காட்டுது. சிலநாட்களாகவே இப்படித்தான் வருது. ரேவதியின் வலைப்பக்கமும் ஒரு காணொளி திறக்கவே இல்லை.
பதிலளிநீக்குஅன்பு கோமதிமா. படங்கள் அத்தனையும் மிக மிக அருமை.
நீக்குநாங்களும் இந்தக் கள்ளிகள் தோட்டத்துக்குப் போனது நினைவுக்கு வருகிறது. அது ஆச்சு
12 வருடம்.
இப்பொழுது அங்கே குளிர்காலம் என்பதால் நடப்பது
சுலபமாக இருக்குமோ.
மிகத் தோழமையான மக்கள் போல.
எல்லோரும் சிரித்துக் கை அசைப்பது மகிழ்ச்சி.
சார் கடைசி படத்தில் வந்ததுதான் இன்னும் சந்தோஷம்.
நீக்குஎன்னாலும் உதய அஸ்தமன படங்களை எடுக்காமல்
இருக்க முடிவதில்லை. இந்த ஊரில் நடுவில்
கட்டிடங்கள் மறைப்பதில்லை.
அது பெரிய கொடை.
கள்ளிகளைப் பற்றி எத்தனை செய்திகள்!!!
நீக்குமிகச் சிறப்பான முறையில் சொல்லி இருக்கிறீர்கள்.
முன்பு படித்த கதைகளில் பாலைவனத்தில் மாட்டிக்
கொண்டவர்கள் கள்ளிச் செடியின் உதவியொடு
உயிர் பிழைப்பது சொல்லப் படும்.
காணொளி அருமை. எத்தனை ஆபத்து இந்த ஒட்டும் கள்ளிகளால்!!!
அரிசோனா பண்ணையில் வாங்கிய கள்ளிச் செடிகள்
இன்னும் சென்னையில் இருக்கின்றன.
காணொளி சிலருக்கு தெரிவது இல்லைதான்.
நீக்குஉங்கள் கருத்துக்களுக்கு நன்றி கீதா
வணக்கம் வல்லி அக்கா வாழ்க வளமுடன்
நீக்குநீங்கள் போய் வந்த நினைவுகள் வந்ததா?
ஆமாம் , குளிர் காலம் என்பதால் நடக்க நன்றாக இருந்தது . சிறிது தூரம் தான்.
வெளியே நடந்து வாங்க தினம் கொஞ்ச தூரம் என்கிறான் மகன் . பேரனுடன் வீட்டுக்கு அருகிலேயே ஓரு வாரமாக நடந்து வருகிறேன்.
தோழமையான மக்கள் தான் யாராக இருந்தாலும் புன் சிரிப்பு ஒரு கை அசைப்பு, ஹலோ என்று சொல்கிறார்கள். அது மகிழ்ச்சியை எங்கும் பரவ விடுகிறது.
//சார் கடைசி படத்தில் வந்ததுதான் இன்னும் சந்தோஷம்.
நீக்குஎன்னாலும் உதய அஸ்தமன படங்களை எடுக்காமல்
இருக்க முடிவதில்லை. இந்த ஊரில் நடுவில்
கட்டிடங்கள் மறைப்பதில்லை.
அது பெரிய கொடை.//
ஆமாம், நீங்கள் சொல்வது சரிதான்.
//கள்ளிகளைப் பற்றி எத்தனை செய்திகள்!!!
பதிலளிநீக்குமிகச் சிறப்பான முறையில் சொல்லி இருக்கிறீர்கள்.
முன்பு படித்த கதைகளில் பாலைவனத்தில் மாட்டிக்
கொண்டவர்கள் கள்ளிச் செடியின் உதவியொடு
உயிர் பிழைப்பது சொல்லப் படும்.
காணொளி அருமை. எத்தனை ஆபத்து இந்த ஒட்டும் கள்ளிகளால்!!!
அரிசோனா பண்ணையில் வாங்கிய கள்ளிச் செடிகள்
இன்னும் சென்னையில் இருக்கின்றன.//
கள்ளி பூக்களில் தேன், மட்டும் மிட்டாய் தயார் செய்கிறார்கள்.
காணொளி பார்த்தது விட்டீர்களா மகிழ்ச்சி. சின்ன காணொளிதான்.
சென்னையில் இருக்கா? மகிழ்ச்சி. சார் நிறைய செடிகள் வைப்பார்கள் இல்லையா?
அட்டகாசமான படங்கள். சண்டிகரை அடுத்த பஞ்ச்குலாவில் இப்படி ஒரு காக்டஸ் பார்க் உண்டு. அங்கே சென்ற போது நிறைய வகையான கள்ளிச் செடிகளை கண்டு வந்தேன். வலைப்பூவில் எழுதாத காலம் அது! பெரிதாக படங்களும் எடுக்கவில்லை - அப்போது அலைபேசி வசதிகள் இல்லை! அதற்குப்பிறகு அங்கே செல்ல வாய்ப்பும் அமையவில்லை.
பதிலளிநீக்குவணக்கம் வெங்கட் நாகராஜ் , வாழ்க வளமுடன்
நீக்கு//சண்டிகரை அடுத்த பஞ்ச்குலாவில் இப்படி ஒரு காக்டஸ் பார்க் உண்டு.//
அங்கே போனது இல்லை நாங்கள்.
வாய்ப்பு கிடைக்கும் போது போய் வாங்க எங்களுக்கு அழகான படங்களுடன் விரிவான செய்திகளும் கிடைக்கும்.
அன்பின் வணக்கம்...
பதிலளிநீக்குவணக்கம் சகோ துரை செல்வராஜூ. வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் அன்பான வணக்கத்திற்கு நன்றி.
சற்று பொறுத்து வருகின்றேன்...
பதிலளிநீக்குநலம் வாழ்க...
நேரம் கிடைக்கும் போது வாருங்கள்
நீக்குவாழ்த்துக்கு நன்றி.
படமும் பாடலும் வெகு அருமை பார்த்துக்கொண்டே இருக்கலாம் அன்புடன்
பதிலளிநீக்குவணக்கம் காமாட்சி அக்கா, வாழ்க வளமுடன்
நீக்குபடமும், பாடலும் உங்களுக்கு பிடித்து இருப்பது மகிழ்ச்சி, நன்றி.
படங்கள் மிக அழகு...சூரியன் இருக்கும் படங்களும் கள்ளிப் படங்களும ரொம்பவே அழகாக இருக்கின்றன.
பதிலளிநீக்குவணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்
நீக்குபடங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
இந்த மாதிரி இடங்களில்தான் ரேட்டில் ஸ்னேக் இருக்கும் என்று முன்பு எழுதியிருந்தீர்களோ (கள்ளிகள்லாம் இருக்கு மலை/புதர் பகுதியில்)
பதிலளிநீக்குவீட்டுக்கு அருகில் இருந்த நடக்கும் இடத்தில் நடந்த போது பேரன் சொன்னான் இங்கு பாம்பு இருக்கும் என்று. இந்த குடியிருப்பு பகுதியில் வாழும் மக்கள் தங்கள் வளர்ப்பு செல்லங்களை அழைத்துக் கொண்டு இந்த பாதையில் தினம் போய் வருகிறார்கள்.
நீக்குஉங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. காலை/மாலைச் சூரியன் என கண்களுக்கு மிக அழகாக படங்களை எடுத்துள்ளீர்கள். மாலைச் சூரியன் படிப்படியாக மறைவதை பார்க்க அவ்வளவு அழகாக உள்ளது. இந்த இருவேளைகள் சூரியனை நானும் வீட்டு பால்கனியிலிருந்தபடியே கைப் பேசியில் நிறைய படம் எடுப்பேன். ஆனால்,அதில் நிறைய குறைகள் இருக்கும். ஆனால் நீங்கள் எடுத்த படங்கள் அவ்வளவு அழகாக தெளிவாக உள்ளது இவை இயற்கை நமக்கு தந்த கொடைகள் அல்லவா.. படங்களை மிகவும் ரசித்தேன்.
எத்தனை விதமான கள்ளிச் செடிகள். ஒவ்வொன்றின் விபரங்களும் மலைக்க வைக்கிறது. அத்தனை படங்களும் நன்றாக உள்ளது. சின்ன சின்ன செவந்தி பூக்கள் மாதிரி உள்ள கள்ளிகள் ஒருவரின் உடம்பில் உடையில் ஒட்டிக் கொண்ட புகைப்படம் காண பயமாக இருக்கிறது. அதை அகற்றும் காணொளி எனக்கும் வரவில்லை.
நம்மூரில் ஒட்டட்டாம் புல் வகை ஒன்று உண்டு. அது நம் உடையில் சட்டென ஒட்டிக் கொள்ளும். ஆனால் அதை களைவது சுலபம்தான். சின்ன வயதில் இதைப்படித்து ஒருவர் மீது ஒருவர் விளையாட்டாய் எறிந்து கொள்வோம். நினைவிருக்கிறதா? அதன் நினைவு இதைப் பார்த்ததும் அதன் நினைவு வந்தது. ஆனால், இதை எடுப்பது மிகவும் சிரமமென்று கூறுகிறீர்களே? இந்தக்கள்ளிச் செடிகளை பற்றிய விபரங்கள் பிரமிப்பூட்டுகின்றன.எத்தனை செய்திகள்.. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா, ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்குஜூம் வேலை செய்யாத காமிராவை எடுத்து வந்து விட்டேன் வரும் போது.
அலைபேசியில் அவ்வளவுதான் ஜூம் செய்ய முடியும்.
இதையே நீங்கள் எல்லாம் பாராட்டியது உங்கள் அன்பு உள்ளத்தை காட்டுகிறது.
உடையில் காலில் , உடம்பில் ஒட்டிக் கொண்ட கள்ளி எடுக்க படும் சிரமங்கள் அதிகம்.
சின்ன காணொளிதான் நெட் நங்கு வேலை செய்யும் போது பாருங்கள்.
//ஒட்டட்டாம் புல் வகை ஒன்று உண்டு//
கேள்வி பட்டு இருக்கிறேன், ஆனால் பார்த்தது இல்லை. அதை வைத்து விளையாடியது இல்லை.
கள்ளிகளை சின்ன இடுக்கி போன்றவற்றால் எடுக்கிறார்கள். பாக்குவெட்டி போல் இருக்கிறது.
உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி கமலா.
ஆஹா சூரியக் காட்சிகள் அழகோ அழகு.. கள்ளிகளும் அழகு. நான் ஒட்டியிருக்கும் கள்ளியை எடுக்கும் வீடியோப் பார்க்கவில்லை, நினைச்ச்சுப்பார்க்கவே உடம்பெல்லாம் கூசுது எனக்கு:))...
பதிலளிநீக்குபடம் பார்க்கும் போது, இம்முறை மாமா மிஸ்ஸிங் என நினைச்சுக் கொண்டே பார்த்தேன், முடிவில் நிற்கிறார்...
அழகிய போஸ்ட் கோமதி அக்கா. படங்கள் மிக துல்லியமாக இருக்கிறது.
வணக்கம் அதிரா , வாழ்க வளமுடன்
நீக்குபடங்களை ரசித்துப் பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி அதிரா.
//படம் பார்க்கும் போது, இம்முறை மாமா மிஸ்ஸிங் என நினைச்சுக் கொண்டே பார்த்தேன், முடிவில் நிற்கிறார்..//
மாமா இல்லாமல் போஸ்ட் போட முடியவில்லை அதிரா.
இங்கு வந்த போதும் நினைவுகள் நினைவுகள் அதிகமாய் தான் இருக்கிறது.
மகன் வீட்டுக்குள் நுழைந்தவுடன் சிரித்து கொண்டு வரவேற்கிறார் (மருமகள் பிரேம் செய்து வைத்து இருக்கும் படம்)
//அழகிய போஸ்ட் கோமதி அக்கா. படங்கள் மிக துல்லியமாக இருக்கிறது.//
நன்றி அதிரா.
சிலசமயங்களில் நினைவுகளும் சுகமாகத்தான் இருக்கும் கோமதி அக்கா, கவலையாகிடாமல், கவலைக்கு இடம் கொடுத்திடாமல் மனதை திடமாக வச்சிருங்கோ.
நீக்குநீங்கள் சொல்வதும் சரிதான் அதிரா.
நீக்குநினைவுகள் சுகமாகத்தான் இருக்கிறது. அது சுமையாக சில சமயம் நெஞ்சை அழுத்தும் போது திடமாய் இருக்க பயிற்சி செய்ய வேண்டும். முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன். உங்கள் ஆறுதல் வார்த்தைக்கு நன்றி.
ஒவ்வொன்றுமே அழகான ரசனையான காட்சிகள் அம்மா... மிகவும் ரசித்தேன் அம்மா...
பதிலளிநீக்குவணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
நீக்குகாட்சிகளை ரசித்துப் பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி தனபாலன்.
படங்கள் மிக அழகு! கள்ளி பற்றி விவரமாக விளக்கியுள்ளீர்கள். நடைபாதை படமும் மிக அழகு.
பதிலளிநீக்குவணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
இயற்கைக் காட்சிகள் என்றும் மனதுக்கு இதமானவை. அருமையான படங்கள், விவரங்கள். நன்றி!
பதிலளிநீக்குவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி
மிக அழகான காட்சிகள் ...என்றும் காண காண அலுக்காதவை இந்த சூரிய காட்சிகள் மா ...
பதிலளிநீக்குவணக்கம் அனுபிரேம், வாழ்க வளமுடன்
நீக்குஇங்க்கு காலையும், மாலையும் சூரிய காட்சிகளை காண மக்கள் நம்மை போல் பிரியபடுகிறார்கள்.
உங்கள் கருத்துக்கு நன்றி.