செவ்வாய், 2 பிப்ரவரி, 2021

அருள்மிகு ஏடகநாதர் திருக்கோயில்

திருவேடகம் 
தலவரலாறு பெயர் திரு ஏடகம், இப்போது அழைக்கப்படுவது திருவேடகம்
திருஞானசம்பந்தரால் பாடப்பட்ட தலம். மதுரை மாவட்டத்தில் உள்ளது, மதுரையிலிருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது திருவேடகம்.
 
சுவாமி பேர் திரு ஏடகநாதேஸ்வரர் , அம்பாள் பெயர் ஏலவார் குழலி, சுகந்தகுந்தளாம்பிகை. தலவிருட்சம் வில்வம்.

இந்த கோயிலுக்கு 2018 ம் ஆண்டு தீபாவளி பண்டிகை அன்று போய் வந்தோம்.


இந்த கோவிலுக்கு உள்ளே போகும் போது   கோவில் வாசலில் நிறைய முதியவர்கள்  யாசகம் கேட்கிறார்கள். பணம் கொடுத்தால் தனி தனியாக கொடுக்க வேண்டும் மொத்தமாய் கொடுத்து எடுத்துக் கொள்ள சொல்லாதீர்கள்   என்று சொல்லி விடுகிறார்கள். அதுவும் கோவிலுக்கு போகும் படியில் நிறபவர்  மிகவும் கறாராக சொன்னார். கோவிலுக்கு போகும் போது பணம் அவர் சொன்னது  போல் தனி தனியாக கையில்  கொடுக்க  எடுத்து போக வேண்டும்(சில்லறை மாற்றி).

                     
அழகான கொடிமரம்  அணையாவிளக்கு எறிய  ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

கோவில் திருவிழாவில்  கலைநிகழ்ச்சிகள் நடக்க அழகான மேடை உள்ளது



தலவிருட்சம் வில்வம்

                                         தீர்த்தம் :- பிரம்ம தீர்த்தம் - வைகைநதி.
அழகான தாமரை விளக்கு  எல்லோரும் ஊற்றும்  எண்ணெய்  அதிகமாகி விட்டால்   திறந்து வேறு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வசதியாக குழாய் பொருத்தி இருக்கிறது.
அம்மன் சன்னதி



சுவாமிக்கு, அம்மனுக்கு என்று தனி தனியாக அழகான கோபுரம் இருக்கிறது.
தீபாவளி அன்று போனோம் , சுவாமிகள் எல்லாம் புதுத்தூணியில் காட்சி தந்தார்கள். அது போல கோவில் காளைக்கும் புது தூண்டு அணிவித்து இருந்தார்கள்.
                             பசு மாட்டுக்கும் புது துண்டு அணிவித்து இருந்தார்கள்.
அம்மன் சன்னதி இந்த வாசலை பூட்டி வைத்து இருக்கிறார்கள் ஸ்வாமி சன்னதி வழியாக அன்னை சன்னதிக்கு போக வழி இருக்கிறது



                                            நந்தி வித்தியாசமாய் இருக்கிறது 

                           
கோபுரத்தில் அழகிய  சிற்பங்கள்  கதை சொல்கிறது

கோவில் பிரகாரம் மிக சுத்தமாக இருக்கிறது. அழகிய  நந்தவனம் அமைக்கப்பட்டு இருக்கிறது.
                                
                            நீ படங்கள் எடுத்து வரும் வரை அமர்ந்து கொள்கிறேன் என்று சொல்லி அமர்ந்து இருந்தார்கள்
அம்மன் சன்னதி சுவாமி சன்னதி தூண்களில் அழகிய சிற்பங்கள் இருக்கிறது.








                              கொடி மரத்தில் முகம் காட்டாத  மைனாக்கள்
இதோ பார்த்துக் கொள் என்று அடுத்த நிமிடம் முகம் காட்டியது


உள்ளே கொடிமரம் மீதி பகுதி மேலே






கோயில் விவரங்கள் படித்து இருப்பீர்கள்.   ஏடகநாதர் எல்லோர்க்கும் எல்லா நன்மைகளும் அருளட்டும்.
வாழ்க வையகம்! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்  .
-------------------------------------------------------------
 

28 கருத்துகள்:

  1. அழகிய படங்கள்.  சுவாரஸ்யமான விவரங்கள்.  சின்ன கோவிலாக வெளியிலிருந்து காட்சி தருவது உள்ளே போனால் பெரிய கோவிலாகத் தெரிகிறது.  எண்ணெய் வழியாமல் அதிகமானால் குழாய் வைத்து எடுக்கும் முறை சிறப்பு.  படங்களில் ஸார் முன்னே சென்று கொண்டிருப்பது மனதைக் கனமாக்குகிறது.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
    கோவில் பெரிய கோவில்தான் . கோபுரங்களில் நிறைய சிலைகள் அழகாய் இருந்தது எல்லா படமும் பகிரவில்லை.
    இப்போது எல்லா கோவில்களிலும் இது போன்ற அமைப்பு வைத்து விட்டார்கள்.

    "நான் முன்னாலே போறேன் நீ பின்னாலே வா" என்று சொல்வது போல இருக்கிறது.
    மனம் கனத்துதான் போகிறது படங்களை பார்க்கும் போது நினைவுகளை பகிரும் போதும் .
    நவம்பரில் எழுதி வைத்து இருந்தபதிவு.
    உங்கள் கருத்துக்கு நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  3. அன்பு கோமதிமா.
    மிக அருமையான கோவில். நல்ல தமிழ்ப் பெயருடன்
    ஈஸ்வரனும் அம்பிகையும்.
    திரு ஏடக நாதர், ஏலவார் குழலி அம்மன்.
    அழகோ அழகு.
    நீங்களும் பார்த்துப் பார்த்து படங்கள் எடுத்திருக்கிறீர்கள்.எல்லாப்
    படங்களிலும் சார் முன்னால் போய்க் கொண்டிருக்கிறார்.
    கோவில் மேலே இருக்கும் நந்தி உண்மையில்
    வித்தியாசமாக இருக்கிறது.

    சுற்றி இருக்கும் சிற்பங்களும் மிக அருமை.
    யானைகளும், யாளியும் சொல்லும் கதை
    என்னவோ என்று யோசனை வருகிறது.

    தீபாவளியன்று புதுத் துண்டு போட்டுக் கொண்டு காளையும் ,பசுமாடும்
    நல்ல போஸ் கொடுக்கின்றன.

    பிரகாரங்களும் செடி கொடிகளும் சுத்தமாகப்
    பராமரிக்கப் படுகின்றன. அதுதான் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
      பதிவையும் , படங்களையும் ரசித்து படித்து அன்பான கருத்து சொன்னதற்கு நன்றி.

      கோவில் மிக சுத்தமாக பராமரிக்கப்படுகிறது.

      நீக்கு
  4. அழகிய படங்கள். நான் முதல்முறை எங்க பெண்ணோடு சப்தகன்னிகளுக்கு வழிபாடு செய்யப் போனேன். பின்னர் அவள் கல்யாணம் ஆனதும் பிரார்த்தனைகளைப் பூர்த்தி செய்யப் பெண், மாப்பிள்ளையோடு அடுத்த வருஷமே போனோம். அப்போது படங்கள் எடுத்தார்கள். ஆனால் என்னிடம் இல்லை. எதிரே வைகை அப்போது பெருக்கெடுத்து வேகமாய் ஓடிக் கொண்டிருந்தாள். அருமையான சுற்றுப்புறச் சூழ்நிலை. இப்போது எப்படி இருக்கோ, தெரியலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
      கோவில் அருமையான இடத்தில் அமைந்து இருக்கிறது . இயற்கை காட்சிகள் அருமையாக இருக்கும். ஊரும் மிக அழகாய் இருக்கும்.

      உங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  5. வைகை நதியே தீர்த்தமாக இருப்பது மிக அருமை.
    நீங்கள் இருவரும் கோவிலுக்கு சென்று

    வந்து எங்களுக்கும் புண்ணியம் சேர்த்துவிட்டீர்கள்.
    நல்லதொரு இறை தரிசனம்
    செய்வித்து மகிழ வைத்திருக்கிறீர்கள்.
    மிக மிக நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் , வல்லி அக்கா. வைகை நதி அந்த இடத்தை வளமான இடமாய் வைத்து இருக்கிறது.
      மதுரை மக்கள் தீபாவளி சமயம் அங்கு போய் நீராடி மகிழ்வார்களாம்.

      இறைவன் தரிசனம் செய்ய வாய்ப்பு கொடுத்தார் .
      இறைவனுக்கு நன்றி சொல்லவேண்டும்.

      நீக்கு
  6. அழகான விளக்கின் அடியில் எண்ணெய்
    சேர்ப்பது அந்த இடத்தை சுத்தமாக
    வைத்திருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அக்கா இப்போது பெரிய கோவில்களில் எல்லாம் இப்படி வைத்து இருக்கிறார்கள் மக்கள் நினைத்த இடங்களில் எல்லாம் விளக்கை வைக்க முடியாது.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி அக்கா.

      நீக்கு
  7. வணக்கம் சகோதரி

    அருமையான பதிவு. அழகான படங்கள். ஒவ்வொன்றையும் மிகப் பொறுமையாக அழகாக எடுத்துள்ளீர்கள். கோவில் அமைப்பு பெரியதாக உள்ளது எல்லா விபரங்களும் நன்றாக உள்ளது. அணையா விளக்கு படமும், அதன் விபரங்களும் அருமை.

    உங்கள் கணவரின் படங்களை கண்டதும், கருத்துரையில் சகோதரர் ஸ்ரீ ராம் சொல்வது போல் மனம் கனத்துத்தான் போகிறது. என்ன செய்வது?

    தூண்களில் சிற்பங்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. பிறகு நிதானமான அனைத்தையும் பெரிதுபடுத்தி பார்க்கிறேன். இப்போது நெட் தொந்தரவு தர ஆரம்பித்து விடும். இன்று என்னவோ வருகிறது. இன்னமும் என் பதிவுக்கு வந்தவர்களுக்கு முழுதுமாக பதில்கள் தர இயலாமல் இருக்கிறேன்.(உங்களுக்கும்தான்) மன்னிக்கவும். கோவில் படங்களோடு அழகான விபரங்களையும் தொகுத்து தந்த உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
      பதிவை படித்து ஒன்று விடாமல் அதைப்பற்றி கருத்து சொன்னதற்கு நன்றி கமலா.
      நினைவுகளுடன் வாழ வேண்டும் நான் . அவர்கள் இல்லாமல் நான் இல்லை.

      நெட் தொந்திரவுகளுக்கு இடையில் வந்து படித்து அன்பாய் விரிவாய் பின்னூட்டங்கள் தந்து உற்சாகப்படுத்துவதற்கு நன்றி.

      நீக்கு
  8. அழகான சிற்ப படங்களும் சொல்லிச் சென்ற விதமுமு அனுமை சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி ஜி.

      நீக்கு
  9. அருமையான திருஏடகநாதர் கோவில் அறிமுகம். நிறைய படங்களோடு விபரங்கள். சாருடன் 2018ல் சென்ற நினைவு உங்களிடத்தில் தங்கியிருக்கும்.

    எண்ணெய் விளக்கு அழகு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்
      அத்தை இறந்த வருடம் தீபாவளி பண்டிகை கிடையாது எங்களுக்கு. அதனால் அதிகாலையில் ஏடகநாதரை தரிசனம் செய்ய போய் விட்டோம்.
      நினைவுகள் என்னோடு இருக்கிறது.

      எண்ணெய் விளக்கு அழகாய் ஒவ்வொரு சன்னதியிலும் இருக்கிறது.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  10. படங்கள் அனைத்தும் காண்கையில் கோவிலை சுற்றிப் பார்த்த உணர்வு... விளக்கங்களும் அருமை அம்மா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      கோவிலை சுற்றிப்பார்த்தது மகிழ்ச்சி.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  11. பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  12. தாமரை விளக்கு மிகவும் அழகாக இருக்கிறது. இது போல பார்த்ததில்லை.

    படங்களும் தகவல்களும் சிறப்பாக வந்திருக்கின்றன. ஏடகநாதர் - ஏலவார்குழலி - சிறப்பான பெயர்கள். அண்ணலும் அம்மையும் அனைவருக்கும் அருள் புரியட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்
      தாமரை விளக்கு இப்போது நிறைய கோவில்களில் இருக்கிறது .

      அண்ணலும் அம்மையும் அனைவருக்கும் அருள் புரியட்டும்
      உங்கள் கருத்துக்கு நன்றி வெங்கட்.

      நீக்கு
  13. அமைதியான இடத்தில் மிக இனிய தரிசனம் மா ..

    திரு ஏடகநாதேஸ்வரர் , அம்பாள் பெயர் ஏலவார் குழலி, சுகந்தகுந்தளாம்பிகை..அழகிய பெயர்கள் ...வாசிக்கும் போது மட்டுவார் குழலம்மை பெயர் நினைவில் வந்தது .

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் அனுபிரேம், வாழ்க வளமுடன்
    அம்மன் பெயர்கள் நன்றாக இருக்கும்
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  15. திரு ஏடக தரிசனம் மகிழ்ச்சி...
    இத்தலங்களையெல்லாம் நேரில் காண்பதற்குக் காலம் எப்போது கனியுமோ!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் துரை செல்வராஜூ. வாழ்க வளமுடன்
      நேரம் காலத்தை இறைவன் தரட்டும்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  16. மிக அழகிய வித்தியாசமான சிற்பங்கள். கோபுரங்களும் அழகு. சில படங்களில் சார் முன் செல்வதைப் பார்க்க முடிகிறது.

    காளைக்கும் பசுவுக்கும் தீபாவளிப் புதுத் துணி அருமை. என் தங்கை அவளது வளர்ப்பு நாய்க்கு தீபாவளிக்கு புது ஸ்கார்ஃப் அணிவிப்பது நினைவுக்கு வருகிறது.

    பகிர்வு மிக நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
      கோவில் நன்றாக இருக்கும்.
      ஆமாம், சார் முன்னால் செல்கிறார்கள்.

      //என் தங்கை அவளது வளர்ப்பு நாய்க்கு தீபாவளிக்கு புது ஸ்கார்ஃப் அணிவிப்பது நினைவுக்கு வருகிறது.//

      வளர்ப்பு செல்லங்களுக்கு புது துணி எடுப்பார்கள்தானே!

      உங்கள் கருத்துக்கு நன்றி.


      நீக்கு