திங்கள், 19 நவம்பர், 2018

புள்ளிச்சில்லை (முனியா பறவை)

எங்கள் வீட்டில் கூடு கட்டி இருக்கும் பறவை 




ஒரு நாள்  பின் அறையின் தரையில் பச்சைப்புல் கிடந்தது 


மறு நாளும் அதே இடத்தில் தரையில் பச்சைப் புற்கள் கிடந்தது. அப்போதுதான் மேலே பார்த்தேன், ஸ்பிளிட் ஏசிக்குப்  போடப்பட்ட துவாரத்தில் பச்சைப் புற்கள் எட்டிபார்த்துக் கொண்டு இருந்தன அப்போதுதான் தெரிந்து கொண்டேன் அந்தத் துவாரத்தில் குருவி  கூடு கட்டுவதை.

வெளிப்பக்கம் உள்ள துவாரம்



துவாரத்தில் புற்களை வைத்து விட்டு ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தது.
பச்சைப்புற்கள்தான் எடுத்து வந்து வைக்கிறது.

ஆனால் குஞ்சுகளை நான் பார்க்க முடியாது.  எதிர்வீட்டுப் பால்கனி என்றால் என் வீட்டு பால்கனியிலிருந்து எடுக்கலாம். ஆனால் எங்கள் வீட்டில் கட்டி இருப்பதால்  பார்ப்பது கஷ்டம். பால்கனிக்குப் போனாலே பயந்து கூட்டை விட்டுப் பறக்குது.  நல்லபடியாகக் குஞ்சுகளுடன் வெளியேற வேண்டும்.
மைனா வேறு அடிக்கடி கூட்டை எட்டிப்பார்க்குது. விரட்டி விரட்டி விடுகிறேன்.  பறவைகளுக்கும்  கூடு கட்ட , குஞ்சுகளைப் பாதுகாக்க என்று எவ்வளவு கஷ்டம்! இறைவன் நல்லபடியாக இவைகளை வைத்து இருக்க வேண்டும்.

முனியா குருவி கஷ்டப்பட்டு வைக்கும் புற்கள் உள் அறையில் விழுவதும் , முட்டையிட்டால் கீழே விழுந்து விடுமே  ! என்று  என் கணவரிடம் வருத்தப்பட்டு சொன்னவுடன்  அவர்கள்  உள் பக்கம் இப்படி ஒட்டிக் கொடுத்தார்கள். இனி கவலை இல்லை  என்று எனக்கு நிம்மதி ஆச்சு.


மழை நேரத்தில் என் வீட்டுக் கொடிக் கம்பியில்


ஜூலை மாதம் ஜன்னல் வழியே என்ற பதிவில் இந்த குருவியைப் பற்றி சொல்லி இருந்தேன்.

இந்த முனியா குருவியை பற்றி தினமலரில்  மாணவர் பக்கம் பட்டத்தில் ராமலக்ஷ்மி பகிர்ந்து இருக்கிறார்கள்.

மேலும் விவரம்:-

//புள்ளிச் சில்லை என்பது சில்லை எனப்படும் திணைக்குருவி வகையைச் சேர்ந்த சிட்டுக்குருவி அளவிலான ஒரு பறவை. இது ஆசியாவைத்தாயகமாகக் கொண்டது. இது 1758-இல் லின்னேயசால் அறிவியல் முறைப்படி பெயரிடப்பட்டது.
இதன் மேற்புறம் பழுப்பாகவும் மார்பு, வயிற்றுப்புறம் செதில் போல் புள்ளிகளுடன் இருப்பதால் புள்ளிச் சில்லை எனப்படுகிறது. இதன் அலகு பெரிதாக கூம்பு வடிவத்தில் இருக்கும். இது புற்களின் கிழங்கினை உணவாகக் கொள்ளும். மேலும் சிறு பூச்சிகளையும் பழங்களையும் உண்ணும். இவை கூட்டமாக வாழும் தன்மையுடையன.மேலும் இப்பறவைகள் இவற்றின் அழகிய தோற்றத்தின் காரணமாக செல்லப் பறவைகளாகவும் வளர்க்கப்படுகின்றன.
- நன்றி விக்கிப்பீடியா.

ஜன்னல் வழியே பதிவில் எல்லா குஞ்சுகளும் பத்திரமாய் பறந்து போக வேண்டும் . என்று சொல்லி இருந்தேன் மூன்று குஞ்சுகளும் பத்திரமாய் பறந்து போய் விட்டது.


குஞ்சுக்கு உணவு ஊட்டுகிறது.
முதலில் ஒரு குருவி பறந்து போகுது

அடுத்து இந்த இரண்டும் பறந்து போச்சு.

                                                                        வாழ்க வளமுடன்.

30 கருத்துகள்:

  1. உங்களின் தங்க மனதிற்கு வாழ்த்துகள் அம்மா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  2. இவங்க எங்க வீட்டு பால்கனியிலும் உட்காருவாங்க. ஆனால் படம் எடுக்கும் முன்னர் பறந்துடுவாங்க. எதிரெ இருக்கும் குடியிருப்பின் குளியலறையின் ஜன்னலில் கூடு கட்டுவாங்க. இப்போ அங்கே வலை போட்டுவிட்டதால் என்ன செய்யறாங்களோ தெரியலை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
      இந்த பறவை செல்லமாய் வீடுகளில் வளர்ப்பார்கள் என்கிறார்கள், பார்ப்போம் போக போக பழகுவார்கள் என்று நினைக்கிறேன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  3. பறவைகளுக்கு தெரிந்திருக்கிறது.. தங்களுக்கு பத்திரமான இடம் எது என்று! நன்றாய் கூடுகட்டி, அழகாய் பிள்ளை பெற்று சௌக்கியமாய்க் கிளம்பட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
      உங்கள் வாழ்த்து மகிழ்ச்சி அளிக்கிறது.
      அப்படியே நடக்கட்டும்.

      நீக்கு
  4. அழகாக புகைப்படம் எடுத்திருக்கிறீர்கள். ஸாரும் உங்களுக்கு இணையாக அதற்கு பாதுகாப்பு செய்து கொடுத்திருப்பது சிறப்பு. முனியாவுக்கு அது புரிந்தால் அதுவும் சந்தோஷப்படும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தினம் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் புற்களை அலகில் கொத்திக் கொண்டு செல்வதைப் பார்த்து இருக்கிறேன். ஜன்னலில் புற்களை வைக்கப் பார்ப்பதும் அது கீழே விழுவதும் பார்க்கவே கஷ்டமாய் இருக்கும் கூடு கட்ட அவை படும் பாட்டைப் பார்த்து.

      அட்டை பெட்டி வைப்போம் ஜன்னலில் என்றார்கள் சார், வேண்டாம் அவை பயப்படும் அதன் இயல்பில் கூடு கட்ட விட்டுவிடுவோம் என்றேன், எங்கள் வீட்டுக்கே வந்து விட்டது.
      விருந்தினர் வருகைக்கு நாம் வசதி செய்து கொடுக்க வேண்டும் இல்லையா?
      முனியாவிற்கு புரிந்து இருக்கிறது. பால்கனி வாசலில் நிற்கும் போது கொஞ்சம் பயபடாமல் நிற்கிறது. காமிராவை எடுத்தால் தான் பயந்து போகிறது.

      சாரும் உதவி செய்தது மகிழ்ச்சி.

      நீக்கு
  5. மைனாக்கள் பேட்டை தாதா, ரௌடிகள் ரேஞ்சுக்கு சுற்றும் போலும். வார்டு கவுன்சிலர் கமிஷனுக்கு அலைவது போல அலைகின்றனவே....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மைனாக்களை நீங்கள் சொல்வது உண்மை , கீதாமதிவாணன் எழுதிய 'ஒண்டவந்த பிடாரிகளில்' பதிவில் இந்த மைனாவின் அடாவடிதனத்தை எழுதி இருப்பார்கள்.
      கூட்டுக்குள் தலையை விட்டு எட்டிப் பார்ப்பதை பார்த்து சார் ஒட்டடைகுச்சியை வைத்து குருவி போகும் அளவில் வழி விட்டு ஏற்பாடு செய்தார்கள், குருவிகள் பயந்து வரவில்லை, அப்புறம் கம்பை எடுத்தவுடன் வந்து விட்டன குருவிகள்.

      இப்போது மைனா சத்தம் கேட்டாலும், குருவிகளின் ஓலம் கேட்டாலும் போய் பார்த்து விரட்டுவோம் மைனாவை.

      நம்மால் முடிந்தவரை அப்புறம் இறைவன் விருப்பம்.

      உங்கள் கருத்துகளுக்கு நன்றி.

      நீக்கு
  6. முனியா குருவி காத்த கோமதிக்காவுக்கு பல கோடி வணக்கங்க்ள்!

    உங்கள் ஒவ்வொரு வரியும் அக்கறை, கருணை, தாய்மை உணர்வு என்று பல உணர்வுகள் பளிச்!

    அழகான படங்கள் ! எங்கள் வீட்டிலும் இப்படித்தான் நாங்கள் அனைவருமே ஒரே கருத்தை உடையவர்க்ள் இந்த விஷயத்தில்...நிறைய செல்லங்களை ரெஸ்க்யூ செய்திருக்கோம்...

    சூப்பர் அக்கா...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
      உங்கள் பல கோடி வணக்கத்திற்கு நன்றி.
      உங்கள் நல்ல உள்ளம் தெரிந்ததே பல பதிவுக்ளில்.
      ஒத்த கருத்து இருந்தால் நல்லது
      செல்லத்தை வளர்ப்பவர்களுக்கு அக்கறை, கருணை, தாய்மை உணர்வு என்று பல உணர்வுகள் இருத்தல் அவசியம் அது இருக்கே உங்களிடம்.

      நீக்கு
  7. உங்கள் வீட்டிலும் நீங்கள் எல்லோருமே இறைவன் அருளால் ஒத்த சிந்தனை உடையவர்களாக இருப்பதால் பாருங்கள் நீங்கள் சொன்னதும் அண்ணா அவர்கள் அங்கு செல்லோ டேப் ஒட்டி ஆஹா மனம் நெகிழ்ந்துவிட்டது....மிகமிக ரசித்தேன் அக்கா...

    செம பதிவு...குருவிக் குஞ்சுகள் அனைத்தும் நல்லபடியாகப் பிழைத்து வெளியேறியது மகிழ்ச்சி..உங்களின் கருணையால்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏதோ நம்மால் முடிந்த உதவி குருவிக்கு.
      குஞ்சுகள் நல்லபடியாக பறந்து போனது மகிழ்ச்சி.
      உங்கள் அன்பான கருத்துக்களுக்கு நன்றி கீதா.

      நீக்கு
  8. பறவைகளுக்கு உதவிய உங்களது மனதுக்கு எமது இராயல் சல்யூட்.
    வாழ்க வளமுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
      உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  9. மிக மகிழ்ச்சி மா..

    அழகிய கூடும் , குடும்பமும்...பார்க்க பார்க்க அழகு


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அனுராதா பிரேம் குமார், வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி அனு.

      நீக்கு
  10. @ ஸ்ரீராம்...

    >>>> முனியாவுக்கு அது புரிந்தால் அதுவும் சந்தோஷப்படும்.. <<<<

    இந்தப் பறவைகளும் விலங்குகளும் நுண்ணுணர்வாளர்கள்...
    நம்மை விட மேம்பட்டவர்கள்...

    அன்பின் கோமதி அரசு (ஐயா அவர்களையும் சேர்த்து )அவர்களின்
    நேர்மறையான எண்ணங்களையும் நல்லெண்ணங்களின் அதிர்வலைகளையும் உணர்ந்ததனால் தான் முனியாக்கள் அணில்கள் - இன்ன பிற சிற்றுயிர்கள் அவர்கள் இல்லத்தினைத் தேடி வருகின்றன...

    இந்த சந்தோஷம் எல்லாம் அளவிடற்கரியது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு சகோ, அவைகளுக்கு நாங்கள் நன்றி சொல்ல வேண்டும்
      அவை எங்கள் வீட்டுக்கு வந்து எங்களை சந்தோஷபடுத்துவதற்கு.
      வாழ்க்கை அலுப்பு தட்டி விடாமல் அவைதான் காக்கிறது.
      உடல் சோர்வு, மனச்சோர்வு ஏற்படும் போது பால்கனியில் வந்து பறவைகளையும் வானத்தைப் பார்த்தவுடன் மனம் லேசாகிவிடும்.
      நேற்று குஞ்சு காக்கா செய்த குறும்பை ஒரு நாள் பகிர்கிறேன்.
      நம் குழந்தைகள் சிறு வயதில் செய்வது போலவே செய்கிறது.

      நீக்கு
  11. முனியாக் குருவிகளைப் பற்றி அறிந்து கொண்டேன்...

    அன்பிற்கு அடையாளமாகச் சொல்லும் - அது
    சிற்றுயிர்க்கு அடைக்கலமான இல்லம்...

    வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.
      உங்கள் அன்பான கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  12. இங்கெல்லாம் குருவிகளைப் பார்ப்பதே அதிர்ஷ்டம் தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
      குருவிகளைப் பார்ப்பதே அதிர்ஷ்டம் என்பதின் அர்த்தம் குருவிகளை காணக்கிடைப்பது இல்லையா?
      அப்படி குருவிகளைப் பார்த்தால் அதிர்ஷ்டம் தான்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  13. அன்பு கோமதி, சீக்கிரம் உங்கள் வீடு குருவிகளின் பிள்ளை பேற்றுத் தலம் ஆகிவிடும். அம்மா ,அப்பா பார்த்துக் கொண்டால் பிள்ளைகள் வராமல் இருப்பார்களா.
    மிக மிக அருமையான பதிவு. புறாக்களும், குருவிகளும் பல்கிப் பெருகட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.


      //மிக மிக அருமையான பதிவு. புறாக்களும், குருவிகளும் பல்கிப் பெருகட்டும்./

      உங்களின் அன்பான கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி அக்கா.

      நீக்கு
  14. ஆஹா! 'காக்கை குருவி எங்கள் ஜாதி' என்பதை நடைமுறைபடுத்தி இருக்கிறீர்கள். வாழ்க வளமுடன்!.
    வழக்கம்போல் படங்கள் சிறப்பு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்.
      உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  15. முனியா பறவை....

    பார்க்க அழகு.

    கூடுகள் கட்டி பாதுகாப்பாக குட்டிக் குருவிகள் பிறந்து வளர வேண்டும்.....

    சமீபத்தில் புறா ஒன்று மின்சார இணைப்பு இருந்த பெட்டிக்கு மேல் இரண்டு முட்டையிட்டு புறாக்குஞ்சுகளைப் பார்த்தேன். அத்தனை அழகு அந்த இரண்டும். அலைபேசி மூலம் படம் எடுக்க முடிந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
      ஆமாம், தினம் வந்து போகுது.குருவி சத்தம் கேட்குது
      புறாகுஞ்சுகளை உங்கள் தளத்தில் விரைவில் காணலாம் என்று நினைக்கிறேன், பார்க்க ஆவல்.
      உங்கள் வாழ்த்துக்களுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு