வெள்ளி, 26 டிசம்பர், 2014

பழைய கோலங்கள்

மார்கழி மாதம் வந்து விட்டால் கறுப்புப் பெட்டி திறக்கப்படும். அது என்ன கறுப்பு பெட்டி?   அதற்குள் என்ன இருக்கிறது?  என்று நினைக்கிறீர்களா? அந்த கறுப்பு சூட்கேஸ் நிறைய என் கோல  சேகரிப்புகள் இடம் பெற்று இருக்கிறது.

பொக்கிஷத்தை  பாதுகாப்பதுபோல் பெட்டியில் பாதுகாத்து வருகிறேன். நான் சின்ன வயதில்  கோலங்கள் போட்ட நோட்டு தொட்டாலே கிழிவது போல் உள்ளது.   வார மாத இதழ்களில் . வந்த கோலங்கள், தினமலர் பேப்பரில் வந்த கோலங்கள்  சேகரித்து வைத்து இருக்கிறேன்.

என் கோலநோட்டில் அம்மா வரைந்த சில கோலங்கள், என் மாமியார் வரைந்து தந்த சில கோலங்கள், என் கணவர் வரைந்த கோலங்கள்  என்று இருக்கிறது.  இப்போது  இணையத்தில் கோலங்களை பார்த்து  பிடித்த கோலத்தை போடுகிறேன்.

பழைய கோலங்கள் சேகரிப்பிலிருந்த சில உங்கள் பார்வைக்கு.:-





                               மாமியார் வரைந்து தந்த கோலங்கள்

 எங்கள் வீட்டுக்கு எனது மாமியார் வந்திருந்தபோது சில கோலங்கள் வரைந்துகொடுத்தார்கள்.  சர்க்குலேஷன் புத்தகத்தில் உள்ள கோலத்தை எனது கோலநோட்டில் வரைந்துகொண்டுவிட்டு மறுநாள் புத்தகத்தைத் திருப்பிக்கொடுக்க வேண்டும். அப்போது,”அதை நான் வரைந்து தருகிறேன்” என்று மாமியார் அதைப் பார்த்து வரைந்து தந்த கோலம். அவர்கள் அழகாய் சிக்கு கோலம் போடுவார்கள்.

சிக்குக் கோலம் போடுவது பெரிய விஷயமா? நானும் போடுவேன் என்று என்கணவர் ஸ்கேல் வைத்து அழகாய்  வரைந்து தந்த கோலம்.  

பெட்டிக்குள் இருக்கும் கோலநோட்டுக்கள், பத்திரிக்கை கோலங்கள் சேகரிப்பு


சிறு வயதில் நான் போட்ட கோலங்கள்

10 வயதில் கை பழக, அம்மா சொல்லிக் கொடுத்த கோலம் . ( பாலபாட கோலம்)
+ போட்டு அதை இணைக்கும் கோலம்.
எளிதான கோலங்களாய் சொல்லிக் கொடுத்து பின் சிக்கு கோலம் சொல்லிக் கொடுத்தார்கள், அதுவும் எளிதாக போடும் சிக்கு கோலம்.
 பள்ளிவாசல் கோலம் எனும் ஆறு  ஆறு புள்ளிகளாய் விரிவு படுத்தும்கோலம்

 சின்ன பூக் கோலம் - 5 பைசா கோலம் என்று இதற்கு பெயர்

மிக எளிதாக போடும் துளசி மாடம்
இதை சந்தன கும்பா என்பார்கள்.

தொட்டில், சோபா
அலங்காரக் கண்ணாடி
தொட்டில்

நாற்காலி (இன்னும் இரண்டு கால் எங்கே என்று கேட்காதீர்கள்?( நானும் அம்மாவிடம் கேட்டவள்தான்)
ஸ்வஸ்திக் கோலம்

கோலங்கள் வைத்துப் பாதுகாக்கும் பெட்டி
தினமலர் பத்திரிக்கை கோலங்கள்



 புலி நகக்கோலம், மாட்டுக்கொம்பு கோலம், கொடிமலர், முக்கண் கோலம், நட்சத்திர கோலம், கஷ்டமான துளசி மாடக் கோவில், ஸ்வஸ்திக் கோலதேர்க் கோலம், வரிக் கோலம்,  என்று வித விதமான கோலங்கள்.அம்மாவிடம் போட்டுக் காட்டுவேன். கொஞ்ச நாள் தான் சிக்கு கோலம் எல்லாம் போட்டேன். அப்புறம் எல்லாம் பூக் கோலம் தான். கேட்டால் குழந்தைகளுக்கு அது தான் பிடிக்கிறது என்று சாக்கு. சிக்கு கோலம் தப்பாய் போட்டு விட்டால் திருத்தி அமைப்பது கஷ்டம், பூக்கோலம் என்றால் சரி செய்து விடலாம்.

சித்திரமும் கைபழக்கம் என்பது போல் கோலம் போட போடத்தான் எனக்கு அழகாய் வர ஆரம்பித்தது.

என் மாமியாருக்கு சிக்கு கோலம்தான் பிடிக்கும். பொங்கலுக்கு வீடு முழுவதும் சிக்கு கோலம் போடுவார்கள். அம்மா வெள்ளிக்கிழமை படிக்கோலம், மனைக்கோலம்  என்று சொல்லும் வரைக் கோலங்கள் போடுவார்கள். சின்ன கட்டங்கள்  போட்டு அதை இணைக்கும் வரிக்  கோலம்  உண்டு.  
  
கஷ்டமான வரிக்கோலமும் எளிதான வரை கோலமும் இருக்கிறது.வரைக்கோலங்களுக்கு  காவி கட்டும் போது கோலம் அழகாய் இருக்கும். சனிக்கிழமைகளில்  சங்குக்கோலம் போடுவார்கள். தேர்த்திருவிழா அன்று தேர்க்கோலம், போடுவார்கள். இங்கும் வீதியில் தேர் வரும் போது அழகான தேர்க்கோலங்களை எல்லோர் வீடுகளிலும் போடுவார்கள்.
அம்மா போட்ட கோலங்கள் இப்போது என்தங்கையிடம் இருக்கிறது.  
பழைய கோலங்கள் தொடரும்.

வாழ்க வளமுடன்.

====================

21 கருத்துகள்:

  1. சின்ன வயதில் மார்கழிப்பனியில் தங்கைகளோடு சேர்ந்து கோலத்திற்கு ரங்கோலி கலர் அடித்தது நினைவுக்கு வந்தது. என் தங்கைகள் இப்படி நிறைய கோலங்கள் சேகரிப்பர். உங்கள் கோலங்களும் அழகாகவும் ரசிக்கும் படியும் இருந்தன! பாராட்டுக்கள்! நன்றி!

    பதிலளிநீக்கு
  2. இப்படியெல்லாம் பின்னாளில் பதிவுலகம் என்று ஒன்று தோன்றும். அதிலே இவற்றை வெளியிட்டு மலரும் நினவுகளில் மற்றவர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தலாம்!.. - என யூகித்து சேர்த்து வைத்திருந்தீர்கள் போலிக்கின்றது.

    அநேகமாக எல்லாருடைய மலரும் நினவுகளும் அதே கறுப்புப் பெட்டிக்குள்ளே தான்!..

    வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
  3. அனைத்துக்கோலங்களும் மிக அழகாக உள்ளன. அவற்றையெல்லாம் பொக்கிஷமாகச் சேகரித்து வைத்து பொறுமையாகக் காட்டியுள்ளது மிகச்சிறப்பாக உள்ளது.

    நாற்காலி ஜோராக உள்ளது. இன்னும் இரண்டு கால்கள், காட்டியுள்ள கால்களுக்குப் பின்னால் மறைந்துள்ளன, என நாம் சொல்லிக் கொள்ளலாம். :)

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  4. ஆகா பெட்டி நிறைய கோலங்கள்
    பார்ப்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கின்றது சகோதரியாரே
    ஸ்டிக்கர் கோலம் ஒட்டும் இக்காலத்தில் நிஜக் கோலங்கள்
    அருமை

    பதிலளிநீக்கு
  5. அம்மாவின் விடுமுறை தினங்களில் நான் கோலம் போட்டிருக்கிறேன். முதலில் புள்ளிகள் தேவைப்படாத எளிய நட்சத்திர, ஸ்வஸ்திக் கோலங்கள். அப்புறம் எளிதான புள்ளிக் கோலங்கள்... அப்புறம் புள்ளி வைத்து நானே இயற்றிய வடிவங்கள்...!!!

    எல்லாம் ஒரு அனுபவம்தான்! கோலங்கள் யாவும் அழகு!

    பதிலளிநீக்கு

  6. இந்த கோலப்புத்தகங்களை இன்னும் பாதுகாப்பாக வைத்து இருக்கிறீர்களே,,,, இதுக்காக ஒரு சல்யூட்

    பதிலளிநீக்கு
  7. ஆஹா எத்தனை விதமாக கோலங்கள்.அனைத்தும் அழகு. கோலம் போடுவது ஒரு கலை.இப்போதெல்லாம் நகர்ப்புறங்களில் கோலம் நிறைந்த வாசல்களை காணமுடிவதில்லை.

    பதிலளிநீக்கு
  8. ஒவ்வொன்றும் அழகோ அழகு... பொக்கிசங்கள்...

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் தளிர் சுரேஷ், வாழ்க வளமுடன்.

    உங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி.
    உங்கள் பாராட்டுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. அப்படியே எங்க அம்மா கோலப் புத்தகம் மாதிரி இருக்கு. பெயர்தான் வேற. தொட்டில் கோலம், பாரிஜாதம், பாவற்காய், ஜவந்தி என்று வித விதமாகக் கற்றுத் தந்தார் அம்மா. உங்க மாமியார் ஈன் அதற்குக் சிக்குக் கோலம்னு பேர் வைத்தார். திருச்சியில் இருந்தவரை 20 புள்ளிக் கோலமெல்லாம் அசராமல் போடுவேன்.சென்னையில் சிறிய வாசல். சாலையில் கோலம் போடுவது பொங்கல் அன்று மட்டும் தான். மிக ஆழ காகப் போற்றி வைத்திருக்கிறிர்கள் கோமதி. மனம் நெகிழ்ந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் தளிர் சுரேஷ், வாழ்க வளமுடன்.
    உங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி.
    உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்கவளமுடன்.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.

    நாற்காலி ஜோராக உள்ளது. இன்னும் இரண்டு கால்கள், காட்டியுள்ள கால்களுக்குப் பின்னால் மறைந்துள்ளன, என நாம் சொல்லிக் கொள்ளலாம். :)//

    ஆமாம் அப்படி சொல்லிக்கொள்ளலாம் நன்றி.
    பாராட்டுக்கள், வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் கரந்தைஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    நீங்களே கோலங்கள் தயார் செய்து போட்டது கேட்டு மகிழ்ச்சி.
    நீங்கள் சொல்வது போல் எல்லாம் ஒவ்வொரு அனுபவம் தான்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் கில்லர்ஜி, வாழ்க வளமுடன்.உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் முரளிதரன் , வாழ்க வளமுடன்.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்கவளமுடன்.
    கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
    அம்மா கோலம் போல் உள்ளதா? மகிழ்ச்சி.
    பின்னி, பின்னி வளைத்து , நெளித்து போடுதால் சிக்கு கோலம் என்று சொல்லி இருப்பார்கள்.
    உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.





    பதிலளிநீக்கு
  20. அழகான கோலங்கள்...நானும் கோலம் போட சிறிய வயதில் முயற்சி செய்தேன் ஆனா வரவேயில்ல நன்றிகள்..நினைவுகளை மிட்டமைக்கு...

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் ராயதுரை, வாழ்க வளமுடன்.

    உங்கள் கருத்துக்கும், பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு