திங்கள், 29 டிசம்பர், 2014

மாக்கோலமாய் விளைந்த மதி விருந்து

நான் முதல் முதலில் வலைத்தளம் ஆரம்பித்த போது இந்த கிளிக்கோலம் போட்டு வேதாத்திரி மகரிஷி அவர்களின் ”மாக்கோலமாய் விளைந்த மதி விருந்து” என்ற கவிதை தொகுப்பிலிருந்து இரண்டு வரிகளை எழுதி என் பதிவுகளை ஆரம்பித்தேன். 

1953  ஆம் ஆண்டுமுதல் வேதாத்திரி மகரிஷி அவர்கள், தன் மனைவியின்  விருப்பப்படி, கோலத்தை சுற்றி எழுதுவதற்காக  எழுதிய கவிதைகளை  1958ல் சிறு நூலாக வெளியிட்டார்களாம், அந்த நூலின் முன்னுரையில் உள்ள அவருடைய கவிதைகள் :-

1’ மார்கழி மாதங்களிலே என் துணைவி
மாக்கோலம் காலையிலே தெருவிலிட்டு
ஆர்வமுடன் எனை நோக்கி அகம் பூரித்து
அக்கோலத்தைச் சுற்றி எழுதுவதற்கு 
ஓர் பாட்டு சொல்லும் என்பாள் அந்நேரத்தில்
உதிக்கும்சில சொற்றொடரை கோத்துச்சொல்வேன்
ஊர்ந்து செல்லும் அவளின்கை விரல்கள்மாவை
உதிர்த்தெழுத்தாய் மாற்றும் பலர் கண்பார்கள்.

அன்றன்று இந்தவிதம் தோற்றமான
அனுபவ ஆராய்ச்சிகளின் குறிப்பனைத்தும்
ஒன்றொன்றின் உட்கருத்தை விவாதம் செய்து
ஒத்துணர்ந்து உள்ளத்தில் நிறைவு பெற்று
என்றென்றும் பலர் படிக்க உதவுமென்று
எண்ணிஎழுதித் தொகுத்து அச்சிலிட்டு
இன்றுஇப்போ நாம் கண்டு இன்பம் காண
ஏற்றபடி இதைத்தந்தோர்க் கெனது நன்றி.


வித்தியாசமான கோலம்  என்று  ’எங்கள் Blog’ ல் பகிர்ந்து இருந்தார்கள். அதில் “மாக்கோலமாய் விளைந்த மதி விருந்து” என்ற கவிதை தொகுப்பிலிருந்து இரண்டு வரிகளை எழுதி  இருந்தார்கள் அதைப் பார்த்தவுடன் உங்களிடம் அதிலிருந்து சிலவற்றை பகிர ஆசை வந்து விட்டது.  எங்கள் Blogக் குழுமத்திற்கு  நன்றி.

 மார்கழி மாதங்களில் நான் கோலம் போடும்போது கோலங்களுக்கு கீழே அல்லது மேலே மகரிஷி அவர்களின்  அருளுரையிலிருந்து சில வாசகங்களை எழுதினேன். அந்தக் கோலங்களும் வாசகங்களும் இங்கே. (சில படங்களில் வாசகங்கள் போட்டோவுக்குள் அடங்கவில்லை).

இயற்கைச் சக்தியே விதி,
இதையறிந்த அளவே மதி 
உண்ணும் உணவு உனக்கு கிடைத்தவகை
 எண்ணி யுண்ணிடல்  என்றும் உன் கடன்.
உடையில் ஒழுக்கம் உள்ளத்தில் கருணை ,
 நடையில் கண்ணியம், நல்லோர் பண்பு

நினைவை யடக்க நினைத்தால் , நிலையா
நினைவை யறிய நினைத்தால் , நிலைக்கும்
உழைப்பினால் உடலும், உள்ளமும், 
உலகமும், பயன் பெறும் உணர்வீர். 
ஆக்கத்துறையில் அறிவைச் செலுத்து,
ஊக்கத்துடன் உழை, உயர்வு நிச்சயம் .
உனக்கும் நல்லதாய் , ஊருக்கும் நல்லதாய் ,
நினைப்பதும் , செய்வதும் நித்தியகடன்.

அவனில் அணு, அணுவில் அவன் 
உன்னில் எல்லாம், நீ அறி உன்னை
எண்ணு , சொல், செய், 
எல்லோருக்கும் நன்மை தர,
எண்ணும்படி செய்,
செய்யும்படி எண்ணு>

                                                      உலகமே ஒரு பெரிய பள்ளி,
                                      ஒவ்வொருவருக்கும் தினம் புதிய பாடம்.
                                     பலகலைகள் கற்றோர்க்கும் பாமரர்க்கும்,
                                      பகிர்ந்து தரும் இன்பதுன்பம் எனும் பரிசு


வாங்கும் கடனும் , தேங்கும் பணமும்
 வளர வளர  வாழ்வை கெடுக்கும்
கண்ணாடிப் பார்க்கக் காணலாம் உருவநிலை
உண்ணாடிப் பார்க்க உணராலாம் உயிர்நிலை

                                        வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
                                                                 ---------------------

24 கருத்துகள்:

  1. கோலமும் அதனுள் அமைந்த கருத்துக்களும் சிறப்பு! பகிர்வுக்குநன்றி!

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் தோழி !

    அருமையான கருத்துக்களுன் தொடர்ந்து வந்த மாக் கோலமும் மனதை மகிழ்வித்தது !வாழ்த்துக்கள் என் அருமைத் தோழியே .

    பதிலளிநீக்கு
  3. அழகான கோலங்களுடன் மிக அருமையான செய்திகளுடன் கூடிய அற்புதமான பதிவுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. சிறப்பான கருத்துக்களுடன் அழகான கோலங்கள் கண்களில் நிறைகின்றன.

    மாக்கோலமும் - பாக்கோலமும் அருமையிலும் அருமை!..

    பதிலளிநீக்கு
  5. 'எங்கள்' ஞாயிறு உங்களிடமிருந்து ஒரு சுவாரஸ்யமான பதிவை வரவழைத்து விட்டது பல்!

    எல்லா வரிகளுமே அருமை. படங்கள்தான் திறக்க (எனக்கு) நேரம் எடுக்கின்றன. எல்லாப் படங்களும் திறந்தபின் பார்த்துவிட்டுத்தான் பின்னூட்டமிடுகிறேன்.

    கோலங்கள் அழகு.

    பதிலளிநீக்கு
  6. கோலமும் அதன் நடுவில் பூசணிப்பூவும் இருந்தால் வாசலே அழகு பெறும்!ஆனால் இன்றைய அடுக்கு மாடிக் குடியிருப்புகளும்,மாறி வரும் வாழ்க்கை முறைகளும் அதற்கு இடம் கொடுப்பதில்லையே.
    உங்கள் அழகான கோலங்கள் பக்கையில் மகிழ்சீ

    பதிலளிநீக்கு
  7. கோலங்களும் வரிகளும் அழகு. அருமை.

    பதிலளிநீக்கு
  8. கோலங்களும் கருத்தும் அழகு.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் தளிர் சுரேஷ், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம், அம்பாளடியாள், வாழ்க வளமுடன்.

    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்கவளமுடன்.
    கோலத்தையும், கவிதையையும் ரசித்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    உங்கள் ஞாயிறு பதிவு என்னை இந்த பதிவை எழுத தூண்டியது அதற்கு மீண்டும் நன்றி.
    பொறுமையாக படங்களைப் பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  14. வண்க்கம் சென்னை பித்தன் சார், வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்வது போல் கோலமும், அதன் நடுவில் பூசணி பூவும் மிக அழகுதான்.

    நீங்கள் சொல்வது போல் அடுக்குமாடி குடியிருப்புகளில் கோலம் போட முடியாது தான்.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் புதுகை தென்றல், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் கரந்தைஜெயக்குமார், வாழ்கவளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், தமிழ்மணவாக்கிற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் கில்லர்ஜி, வாழ்க வளமுடன்
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  18. இனிய கருத்துடன் கூடிய கோலங்கள் அழகு...

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  20. மிக அழகான கோலங்கள். அதற்காக வந்த ரிஷியின் வரிகள்.
    மனக் கோலத்தை மாற்ற வந்த பதிவு. வெகு அருமை கோமதி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு அக்கா, வாழ்க வளமுடன்.
      பழைய பதிவை படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு