மாலையில் கூடு திரும்பும் பறவைகள் பூங்காவில் உள்ள மரங்களில், ரயில்நிலையத்தில் உள்ள மரங்களில் எழுப்பும் ஒலியைக் கேட்டு இருப்பீர்கள் தானே! .
எங்கள் ஊர் ரயில்நிலையத்தில் உள்ள இந்த அரசமரத்தில் தான் பறவைகள் மாலையில் எழுப்பும் ஒலியை எடுத்தேன்.
கோயில் கோபுரங்கள், ஆலமரம், அரசமரம் இவைதாம் பெரும்பாலும் பறவைகளின் இருப்பிடம்.
வேப்பமரக் கிளி
தென்னைமரத்தில் புல் புல் பறவை
மாமரத்துக் கிளி
வேப்பமரக் கொக்கு
எங்கள் ஊர் ரயில் நிலைய அரசமரத்தில் மாலை நேரம் பறவைகள் எழுப்பிய ஒலியைத் தான் இப்போது இங்கு கொடுத்து இருக்கிறேன்.
வீடு திரும்பிவிட்டோம் என்று மகிழ்ச்சி ஆரவாரத்தில் ஒலி எழுப்புகிறதா அல்லது,’என் இடம், உன் இடம்’ என்கிறதா? தெரியவில்லை. அமராமல் அங்கும் இங்கும் பறந்து கூச்சல் எழுப்புவதைப்பார்த்தால் அப்படி ஒரு சந்தேகம் வருகிறது.
வாழ்க வளமுடன்.
==============
அழகான பறவைகள்...நன்றி...த.ம1
பதிலளிநீக்குமனதில் ம்கிழ்ச்சி பொங்குகிறது
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
மனதில் ம்கிழ்ச்சி பொங்குகிறது
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
தம 2
பதிலளிநீக்குபறவைகளின் ஒலி காதுக்கு மிக இனிமை. புகைப்படங்களும், காணொளியும் நன்றாக இருக்கின்றன.
பதிலளிநீக்குஅருமை! பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குஏற்கெனவே சொல்லியிருக்கிறேன், ஶ்ரீவில்லிபுத்தூர் ஜி. ஹெச்சில் இந்த ஒலிகளைக் கேட்டு ரசித்திருக்கிறேன்.
பதிலளிநீக்கு:))))
//வீடு திரும்பிவிட்டோம் என்று மகிழ்ச்சி ஆரவாரத்தில் ஒலி எழுப்புகிறதா அல்லது,’என் இடம், உன் இடம்’ என்கிறதா? தெரியவில்லை. அமராமல் அங்கும் இங்கும் பறந்து கூச்சல் எழுப்புவதைப்பார்த்தால் அப்படி ஒரு சந்தேகம் வருகிறது. //
பதிலளிநீக்குநல்ல கற்பனை. அது உங்களுக்குள் இருக்கும் கவிஞரைக் காட்டுகிறது.
இயற்கையோடு ஒன்றி
பதிலளிநீக்குஎழுதிய பதிவு சிறப்பு
இனிய வாழ்த்தும் நன்றியும்.
வேதா. இலங்காதிலகம்.
இயற்கையோடு ஒன்றி
பதிலளிநீக்குஎழுதிய பதிவு சிறப்பு
இனிய வாழ்த்தும் நன்றியும்.
வேதா. இலங்காதிலகம்.
கிளி கொஞ்சும் படங்களும் செய்திகளும் அழகோ அழகு !
பதிலளிநீக்குபாராட்டுக்கள். வாழ்த்துகள்.
பசுமை நிறைந்த பகிர்வுக்கு மிக்க நன்றிகள்.
பதிலளிநீக்குபுகைப்படங்கள் அருமை.
அவகள் சொல்வது எனக்கு புரிந்து விட்டது..
ஆம்,,,
ஓ.... ஆறறிவு (?) எனச்சொல்லப்படும் மனிதர்களே,,,, மரங்களை வெட்டாதீர்கள் நாளைய எங்களது சந்ததிகள் எங்கு வீடு கட்டுவார்கள் எனக்கேட்கின்றது....
வணக்கம் ராயதுரை, வாழ்க வளமுடன். உங்கள் முதல்வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
பதிலளிநீக்குதமிழ்மண வாக்கிறகு நன்றி.
வணக்கம் கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளகமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கும், தமிழ்மணவாக்கிற்கும் நன்றி.
வணக்கம் ரஞ்சனி நாராயணன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
வணக்கம் தளிர் சுரேஷ் வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஆம், நீங்கள் ஏற்கனவே கேட்டு இருப்பதை.
இப்போது கேட்டீர்களா?
நன்றி ஸ்ரீராம்.
வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு//அது உங்களுக்குள் இருக்கும் கவிஞரைக் காட்டுகிறது.//
ஆ! கவிஞர்! மகிழ்ச்சி.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வணக்கம் வேதா. இலங்காதிலகம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
வணக்கம் வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கும், பாராட்டுக்கள், வாழ்த்துக்களுக்கு நன்றி.
வணக்கம் கில்லர்ஜி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது போல் மரங்கள் வெட்டபட்டால் நம் சந்ததிகள் கூடுக் கட்ட மரம் இருக்குமா என்றும், நிறைய மரங்கள் வெட்டபட்டதால் இருக்கும் மரங்களில் நாம் வாழவேண்டி இருக்கே! என்றும் பேசிக் கொள்ளும் போலும்.
நன்றி உங்கள் கருத்துக்கு.
அழகான பறவைகள்...
பதிலளிநீக்குஅழகான பறவைகள்...
பதிலளிநீக்குபறவைகள் பார்த்தாலே ஆனந்தம்
பதிலளிநீக்குவணக்கம் ரிஷபன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது உண்மை. பறவைகளை பார்த்தால் மனதுக்கு மகிழ்ச்சி தான்.
நன்றி.
இயற்கை எழில் கொஞ்சும் மரங்கள். அவற்றினூடே பாடி வரும் பறவைகள். படங்கள் யாவும் “சூப்பர்”. தங்கள் போட்டோக்கலை ஆர்வத்திற்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குத.ம.4
படங்கள் அழகாக இருக்கின்றன.. ஆனாலும் அவைகளுக்குள் பொதிந்திருக்கும் செய்திகள் மிகக் கனமானவை..
பதிலளிநீக்குமாலையில் பறவைகள் நடத்தும் இசைக் கச்சேரி அது!..
இல்லாவிட்டால் -
விடிந்ததில் இருந்து அங்கும் இங்குமாக அலைந்து இரை தேடிய பறவைகள் - தங்களின் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதாக இருக்கும்!.. என்று நினைக்கின்றேன்..
வணக்கம் தி. தமிழ் இளங்கோ.வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கு நன்றி.
தமிழ்மண வாக்கிற்கு நன்றி
வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது போல் பறவைகள் சந்தோஷமாக இசை கச்சேரி செய்யலாம்.
அடுத்து தங்களின் அனுபவததை பகிர்ந்து கொள்ளவும் செய்யலாம்.
உங்கள் கருத்து நன்றாக இருக்கிறது.
வவ்வால் வேறு அந்த மரத்தில் தொங்குகிறது.
அதனால் பறவைகளுக்கு உட்கார கிளை கிடைக்காமல் வெகு நேரம் பறந்து சத்தம் போட்டு பின் அமர்கிறது என்று நினைக்கிறேன்.
நன்றி.
ஆஹா....
பதிலளிநீக்குஅழகான படங்கள் அம்மா...
அதெப்படி பறவைகள் உங்களுக்கு போஸ் கொடுப்பதற்காகவே உச்சாணிக் கிளையில் ஒயிலாக வந்து அமர்ந்துகொள்கின்றனவோ? வியப்பாகவும் மகிழ்வாகவும் உள்ளது.
பதிலளிநீக்குஇங்கும் வசந்தகாலங்களில் மாலைநேரப் பறவைகள் சத்தம் காது கிழிக்கும். ஆனாலும் மிகவும் ரசனையான அனுபவம். நன்றி கோமதி மேடம்.
வணக்கம் குமார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
வண்க்கம் கீதமஞ்சரி, வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குபறவைகளின் இயல்பு உச்சாணி மரக்கிளைகளில் ஊஞ்சல் ஆடுவது போலும்.(அவற்றிற்கு மிகவும் விருப்பமானது மரக்கிளை. மற்றும் உயரமான தண்ணீர் டாங், உயரமான மின்சார கம்பிகள் என்று அமர்கிறது)
என் வீட்டு மொட்டைமாடியிலிருந்து என் கேமிராவில் முடிந்தவரை மரங்களில் அமருவதை காட்சி ஆக்குகிறேன்.
உங்கள் கருத்துக்கு நன்றி கீதமஞ்சரி.
அழகான பறவைகள்...நன்றி...
பதிலளிநீக்குமயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நான் ரசிப்பதும் அந்த மரத்தைத் தான். ரயில் நிலையத்தையே ரம்யமாக்குகிறது அந்த மரம் என்று நான் நினைப்பதுண்டு. அதை அழகாய் படமேடுத்திருக்கிரீர்கள் கோமதி.
பதிலளிநீக்குஅருமையான பகிர்வு.
பதிலளிநீக்குஎனக்கும் தோன்றுவதுண்டு. “இன்றைக்கு நீ என்ன செய்தாய்... நான் என்ன செய்தேன்..” என்றெல்லாம் பேசிக் கொள்ளுமோ என. அப்புறம் சுவிட்ச்சை அணைத்த மாதிரி டக் என நிசப்தம் சூழ்ந்து விடும் மரத்தில்.