செவ்வாய், 16 டிசம்பர், 2014

மார்கழி மாதமும் ,பாவை நோன்பும்



தமிழ் மொழியில் பாவைப் பிரபந்தங்கள் ஐந்துள்ளன. அவை 1. மணிவாசகர் அருளிய திருவெம்பாவை, 2. ஆண்டாள் அருளிய திருப்பாவை. 3.சமணமுனிவர் அருளிய பாவை
4.தத்துவராய சுவாமிகள் அருளிய பாவை இரண்டு. சமண முனிவர் அருளிய பாவை முழுநூல் கிடைக்க வில்லை. அதில் உள்ள பாட்டொன்று யாப்பருங்கல விருத்தி உரையில் இருக்கிறது. அந்தப்பாடல்:

“கோழியுங் கூவின குக்கி லழைத்தன
கோழியுங் கூவின குக்கி லழைத்தன
தாழியுணீலத் தடங்கணீர் போதுமினோ
ஆழிசூழ் வைத் தறிவனடி யேத்திக்
கூழை நனைக் குடைந்து குளிர்புனல்
ஊழியுண் மன்னுவோ மென்றேலோ ரெம்பாவாய்”

திருப்பாவை வைணவர்களால் பெரிதும் போற்றப்படுகிறது. இது பாகவத வரலாற்றை ஒட்டி வருவது. கண்ணனை நாயகனாகப் பெறவேண்டும் என்ற வேட்கையும், நாடு செழிக்க மழை வேண்டும் என்ற விழைவும்,ஆக்கள் விருத்தியடைய வேண்டும் என்ற விருப்பமும் தன்னகத்தே கொண்டு மிளிர்வது இந்நூல். திருப்பாவையில் பாவை (மண்ணால்)அமைத்து வழிபாடு செய்யும் முறை குறிப்பிடப்படுகிறது. அதைக் காத்யாயனி விரதம் என்பார்கள்.

திருவாதவூரர் அருளிய திருவெம்பாவை, திருப்பெருந்துறையில் அருளப்பட்டது என திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் குறிக்கும்.திருவாதவூரடிகள் புராணம் அருளிய கடவுண்மா முனிவர் இதைத் திருவண்ணாமலையில் அருளியதாகக் கூறுகிறார். திருவாதவூரர் விருத்தியடைய வேண்டும் என்ற விருப்பமும் தன்னகத்தே கொண்டு மிளிர்வது இந்நூல். திருப்பாவையில் பாவை (மண்ணால்)அமைத்து வழிபாடு செய்யும் முறை குறிப்பிடப்படுகிறது. அதைக் காத்யாயனி விரதம் என்பார்கள்.

திருவாதவூரர் அருளிய திருவெம்பாவை, திருப்பெருந்துறையில் அருளப்பட்டது என திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் குறிக்கும்.திருவாதவூரடிகள் புராணம் அருளிய கடவுண்மா முனிவர் இதைத் திருவண்ணாமலையில் அருளியதாகக் கூறுகிறார்.

திருவாதவூரர் பாவையர்கள்  நீராடப்போவதைக் கண்டார்.அக்காட்சியின் பயனாக விளைந்தது திருவெம்பாவை என்னும் நூல் என்பார்கள்.

பாவையர் மழை வேண்டியும், நல்ல கணவரை அடைய வேண்டியும் பாவைப் பாடல்களைப் பாடினார்கள்.

மார்கழி மாதம் பாவை நோன்பு இருந்தால் மழை வளம் பெருகும். நல்ல இறை நம்பிக்கை உள்ள கணவன் கிடைப்பார். மழை வளம் இருந்தால் நாடு செழிப்பாய் இருக்கும். மக்கள் நலம் பெறுவர்.

நீராடுதல் தவமெனக் கருதப்படும். புற அழுக்கை நீக்குவது நீர், நம் அக அழுக்கை நீக்குவது இறைவன் திருநாமம்.

இளமை நோன்பில் மனதை நன்கு வைத்துக் கொண்டால் உடல் நலமாக இருக்கலாம். உடல் பிறக்கிறது, வளர்கிறது, நோய்வாய்ப்படுகிறது. ஆனால் உள்ளம் எந்நாளும் இளமையாக இருக்கலாம், உள்ளத்தைப் பண்பட்ட நிலையில் வைத்திருந்தால். தளர்வும் சோர்வும் சலிப்பும் இளமையைப் போக்கி முதுமையைத் தரும்.உறுதியும்,ஊக்கமும்,உழைப்பும் இளமையைப் பாதுகாக்கின்றன.

பாவை நோன்பில் காலையில் சுறுசுறுப்பாய் எழுந்து இறைவனைத் தொழுது பின் கடமைகளை ஆற்றும் போது உள்ளத்திற்குத் தளர்வு,சோர்வு,சலிப்பு இல்லை. உறுதியுடன்,ஊக்கத்துடன் உழைக்கும் போது உயர்வு நிச்சயம். இது ஆண் பெண் இரு பாலருக்கும் பொருந்தும்.

”சந்ததமும் இளமையோடு இருக்கலாம்,”- தாயுமானவர்.

மார்கழி மாதம் திருப்பாவை,திருவெம்பாவை பாடி உயர்வு பெறுவோம்.


வாழ்க வளமுடன்!
------------------------

42 கருத்துகள்:

  1. மார்கழி மாதம் போல சில்லென்று இருக்கின்றது - இன்றைய பதிவு!..

    (நமது பதிவிலும் மார்கழிப் பூக்கள் மலர்கின்றன.)

    வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
  2. மார்கழி மாதத்தை வரவேற்கும் அருமையான பகிர்வுக்கு நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் அக்கா!

    மார்கழியின் மகத்துவமும் மனம் நிறைக்கும் காட்சியும் அருமை!

    வாழ்த்துக்கள் அக்கா!

    த ம.1

    பதிலளிநீக்கு
  4. மார்கழி மாதத்தைப் பெருமைப்படுத்தும் அருமையான பகிர்வுகள்.பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  5. மார்கழிக் காலையில் பாவை கேட்பதுபோல் இருக்கிறது உங்களின் பதிவு!
    அருமை சகோ!
    நன்றி

    பதிலளிநீக்கு
  6. பாவை பிரபந்தங்களைப் பற்றிய பதிவோடு மார்கழி மாதத்தை அழகாக வரவேற்று இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்! மேகம் சூழ்ந்து காணப்படும் சூரியன் புகைப்படம் அருமை.

    பதிலளிநீக்கு
  7. மார்கழிப் பதிவு சிறப்பாக இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் தினம் காலை 5 முதல் 5--30 வரை ஶ்ரீரங்கன் மேல் திருப்பள்ளி எழுச்சியும், ஈசன் மேலான மாணிக்கவாசகரின் திருப்பள்ளி எழுச்சியும் போடுகின்றனர். தினம் தவறாமல் கேட்கிறோம்.

    பதிலளிநீக்கு
  8. மார்கழியை வரவேற்போம்
    அருமையான பதிவு சகோதரியாரே
    நன்றி

    பதிலளிநீக்கு
  9. மார்கழிப் பதிவு குளிர்மையாக உள்ளது
    மிக்க நன்றி
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  10. மார்கழிப் பதிவு குளிர்மையாக உள்ளது
    மிக்க நன்றி
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் துரைசெல்வராஜூசார், வாழ்க வளமுடன்.

    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் சசிகலா, வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் இளமதி, வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும் தமிழ்மண வாக்கிற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் ஊமைக்கனவுகள், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் ரஞ்சனி, வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும் பாராட்டுக்களுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் கீதா, வாழக் வளமுடன்.
    நீங்கள் சொல்வது தினம் விஜய் தொலைக்காட்சியில் வைப்பது. அதை நானும் தினம் பார்ப்பேன்.
    மார்கழி மாதம் பொதிகையில் திருப்பாவை, திருவெம்பாவை, பாடலும் . விளக்கமும் 5.30க்கு.
    வானொலியில் 6 மணிக்கு இரண்டும் கேட்பேன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் கரந்தைஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் வேதா. இலங்காதிலகம், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் குமார், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும் தமிழ்மண வாக்கிற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  22. இலக்கியச் சுவையோடு இனிய மார்கழியை வரவேற்ற கட்டுரை.
    த.ம.4

    பதிலளிநீக்கு
  23. வணக்கம் தி. தமிழ் இளங்கோ, வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும் தமிழ்மணவாக்கிற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  24. மார்கழிப் பாவை நோன்பைப் பதிவிலேயே ஏற்றி விட்டீர்கள் மனம் குளிர வாழ்த்துகள் கோமதி.

    பதிலளிநீக்கு
  25. அன்பு வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
    இது முன்பு போட்ட பதிவுதான்.
    கொஞ்சம் படங்கள் ஏற்றி மறுபடியும் போட்டு இருக்கிறேன்.
    உங்கள் மனம்குளிர்ந்த வாழ்த்துக்களுக்கு நன்றி அக்கா.

    பதிலளிநீக்கு
  26. மார்கழியில் பாவை நோன்பு ஏற்றால், நல்லவன் ஒருவன் கணவனாக வருவான் என்று ஆதிகாலத்தில் நம்பினார்கள். அப்படியே கிடைத்தான் எனவும் முடிக்கலாம். ஆனால், நம் காலத்தில் எவ்வளவுக்கெவ்வளவு பணம் கூட்டி வரதட்சணையாகக் கொடுக்கிறீர்களே அவ்வளவுக்கவ்வளவு ஒரு நற் கணவன் கிடைப்பான். நற்கணவன் என்பது குணத்தோடு மட்டும் முடியாது. நற்குணம் கொண்ட ஆஃபிஸ் கடைநிலை ஊழியனை எவரும் தேடமாட்டார்களில்லையா? வாழ்க்கை வசதிகளைத் தர எவனால் முடியுமே அவனே நற்கணவன். Marriage is a commercial contract today!

    ஆக, அரசு அவர்களே, நீங்களே சொல்லுங்கள்: எதற்கு பாவை நோன்பேற்க வேண்டும்> நற்கணவன் கிடைப்பானென்றா? ஆமென்றால், நம்மூரில் பெண்கள் எல்லாருக்கும் உடனேயே மணமாகியிருக்கவேண்டுமே? அப்படி இல்லாமல் முதிர்கன்னிகளாக வாழ்கிறார் நிறைய பேர்!

    என் பதில் - இல்லை. பாவை நோன்பை ஆண்டால் ஏற்றது, நற்கணவனைப்பெற என்று தவறாகப் புரிந்ததனால் வந்த வினை.

    பாவை நோன்பு இறைவனோடு ஒன்றிய மாதமாக்கவே உருவாக்கப்பட்டது. இறைவனை நித்தம்நித்தம் போற்றி வழிபடவே இம்மாதம். பலன் கருதி வணங்கப்படும் இறைவணக்கம் சாதாரணமானது. அத்தை மீறியது பரவசமானது. அதுவே உயர்நிலை. அதை நோக்கிச்செல்க என்பன‌ இந்து தர்மங்கள். இல்லையா? வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே!

    லவுகீக செயல்களில் நம்மை பதினொரு மாதங்கள் இணைத்துக் கொண்டிருக்க, குறைந்தது ஓர் மாதமாகவாவது அதிலிருந்து விலகி இறைவணக்கம் செய்ய காட்டிய பலபடி நிலைகளுள் ஒன்றுதான் மார்கழி நோன்பு.

    மார்கழியை வைணவர்கள் தேர்தெடுத்தது, அல்லது ஆண்டாள் தேர்ந்தெடுத்தது, மாதங்களுள் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று கண்ணன் கீதையில் சொன்னதால்.

    I don't know why Mancikavasagar chose Margazhi. Maybe, there are strong reasons for his choice. Could you say those to us? Advance thanks.

    எழத வாய்ப்பளித்த உங்கள் பதிவுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  27. அழகிய மாதத்தைப் பற்றிய அழகிய பதிவு.

    பதிலளிநீக்கு
  28. வண்க்கம் குலசேகரன், வாழக வளமுடன்.

    உங்கள் வரவுக்கும் நல்ல கருத்துக்களை சொன்னதற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  29. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  30. பாவை நோன்பின் சிறப்பைப் பற்றி அருமையான பகிர்வு. ஒரு மார்கழிக் கோலத்தின் வழியாகதான் உங்கள் வலைப்பக்கத்திற்குள் நுழைந்தேன்.

    பதிலளிநீக்கு
  31. முதன் முதலில் வருகை தந்ததைக் குறிப்பிட்டிருக்கிறேன்:).

    பதிலளிநீக்கு
  32. பாவை நோன்பு விளக்கம் சிறப்பு! நன்றி!

    பதிலளிநீக்கு
  33. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.

    வலைப்பதிவை 2009ல் ஜூன் 1ம் தேதி ஆரம்பித்தேன், ஆனால் நீங்கள் சொல்வது போல் மார்கழி மாதம் போட்ட கிளி கோலத்தை போட்டு , மகரிஷியின் கவிதையோடு ஆரம்பித்தேன்.

    நினைவாய் அதை இங்கு அதை குறிப்பிட்டமைக்கும், பதிவை படித்து கருத்து சொன்னதற்கும் நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  34. வணக்கம் தளிர் சுரேஷ், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  35. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  36. மார்கழி மாதமும் பாவைகளும் தண்ணென்றிருக்கின்றன :)

    பதிலளிநீக்கு
  37. வணக்கம் தேனம்மை, வாழ்க வளமுடன்.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  38. மார்கழியின் மகத்துவம் அருமை.
    ஜில்லென்று புகைப்படம்...அழகு அம்மா. நன்றி

    பதிலளிநீக்கு