இரண்டு நாள் முன்பு மாலை வேளை மகன் "அம்மா வாங்க, வாங்க, நம்ம தோட்டத்து மரத்தில் தேனீ கூடு கட்டி விட்டது என்றான்" எனக்கு ஆச்சரியம் ! "மாலை நடைபயிற்சி தோட்டத்தில் செய்தேன் அப்போது அந்த மரத்தில் உள்ள குருவிகளை படம் எடுத்தேன் பார்க்கவில்லையே ! என்றேன். "இப்போது தான் நான் மாடி பால்கனியில் நிற்கும் போது பார்த்தேன் கும்பலாக பறந்து வந்து அமர்ந்தது என்றான்."
சனிக்கிழமை காலையில் அரிசோனா தமிழ்பள்ளியில் பட்டமளிப்பு விழா நடந்தது. பேரன் எட்டாவது படித்து வெற்றி பெற்று இருக்கிறான். விழா படங்கள் இந்த பதிவில் இடம்பெறுகிறது.
ஞாயிறு அன்று தமிழ்ப்புத்தாண்டு கொண்டாட்டம் நடந்தது அரிசோனா தமிழ்ச் சங்கத்தில். அதில் கலந்து கொண்டேன் இந்த ஆண்டு, மகிழ்ச்சியாக இருந்தது. ஊரிலிருந்து வந்த தாத்தா, பாட்டிகளுடன் குழந்தைகள் இந்த வருட தமிழ்ப் புத்தாண்டை மகிழ்வுடன் கொண்டாடினார்கள்.
தமிழ்ச்சங்கத்தில் நடந்த புத்தாண்டுவிழா படங்கள் இந்த பதிவில் இடம்பெறுகிறது.
சித்திரா பெளர்ணமி அன்று வீட்டுத்தோட்டத்திலிருந்து எடுத்தோம் , நிலவை நானும், பேரனும்.
நிலாவை பார்க்க பிடிக்கும், அதுவும் நிலா வரும் நேரம் மஞ்சள் வண்ணத்தில் வருவதை பார்க்க மிகவும் பிடிக்கும். இந்த பதிவில் நிலவும், கள்ளிச்செடி மலர்களும் இடம் பெறுகிறது.