ஞாயிறு, 12 மே, 2024

அரிசோனா தமிழ்ப்பள்ளி பேரனின் பட்டமளிப்பு விழா

சனிக்கிழமை காலையில்  அரிசோனா தமிழ்பள்ளியில் பட்டமளிப்பு விழா நடந்தது. பேரன் எட்டாவது படித்து வெற்றி பெற்று இருக்கிறான். விழா படங்கள் இந்த பதிவில் இடம்பெறுகிறது.



மகன் செய்தவை


சிறு குழந்தைகள் "நான் பாரதி" என்று முகம் காட்டி சிரித்தார்கள். மகனுக்கு எல்லா குழந்தைகளும் அதில் முகம் காட்டிய போது மகிழ்ச்சியாக இருந்தது, எங்களுக்கும் மகிழ்ச்சி. சிறு குழந்தைகளை பெற்றோர்கள் தூக்கி முகம் காட்ட வைத்தார்கள்.

போட்டோ எடுத்து கொள்ள செய்யப்பட்ட இடம்


எல்லோரும் நின்று எடுத்து கொண்டார்கள், நாங்களும் எடுத்து கொண்டோம். வீட்டிலிருந்து கிளம்பும் போது எடுத்து கொண்ட படமும் இருக்கிறது.



சிவப்பு கம்பள வரவேற்பு
சிவப்பு கம்பள வரவேற்பு  காணொளி சின்ன காணொளி தான்.


தான் தமிழ் கற்றதால், தன் ஆச்சிகளுடன், மற்றும்  உறவுகளுடன் உறவாட    தமிழ்  இணைப்பு பாலமாக இருப்பதாக சொல்கிறான்.  தனக்கு தமிழ் கற்றுக் கொடுத்த பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரிசோனா தமிழ்ப்பள்ளிக்கு நன்றி சொல்கிறான். சிறிய காணொளிதான் கேட்டு பாருங்கள்.

என் பிள்ளைகள் இருவர் கல்லூரியில் பட்டம் பெற்ற போதும், என் கணவர் முனைவர் பட்டம் பெற்ற போதும் நான் பார்க்கவில்லை. என் பேரன் தமிழ் கற்று பட்டம் பெறுவதை பார்க்கும் போது மனம்  மகிழ்ச்சி அடைந்தது. அவன் தாத்தா இருந்து பார்த்து இருந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைந்து இருப்பார்கள்  என்ற எண்ணமும் வந்து போனது.
சொற்களை பிழை இல்லாமல் எழுதியதற்கும், வாக்கியம் அமைத்தல் போட்டியிலும்  25 மார்க் முழுதாக பெற்று வெற்றி பெற்றதற்கும்   இரண்டு பதக்கம் பெற்றான்.

பட்டம் பெற்ற இந்த மாணவ செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.

பட்டம் பெற்ற பின் தொப்பியை தூக்கி வீசி மகிழ்ச்சி ஆரவாரம் செய்யும் மாணவர்கள்

பட்டம் பெற்றாலும் உங்களை நாங்கள் விட மாட்டோம் தொடர்ந்து தமிழ் படிப்பை விடாது  இருக்க வாரா வாரம்    தமிழ்பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளி நிர்வாக தலைவரும், ஆசிரியர்களும்  கேட்டு கொண்டார்கள்.

உங்களுக்கு வீட்டு பாடம் மட்டும் கிடையாது ஆனால் தமிழ் பாடம் படிக்கும் மற்ற மாணவர்களை கவனிக்க வேண்டும்  என்று சொன்னார்கள்.  மாணவ, மாணவிகளும் வருவதாக உறுதி அளித்தார்கள்.


தனக்கு தமிழ் கற்றுக் கொடுத்த பெற்றோர்கள், மற்றும்  ஆசிரியர்களுடன் பேரன். இன்னும் சில ஆசிரியர்களுடன் படம் எடுத்து கொண்டான். நான் இவர்களை மட்டும் எடுத்து இருந்தேன். 

11ம்  வகுப்பு தேர்வு  வெற்றி பெற்றவுடன் மிட்டாய்களுடன் போய் எல்லோரிடமும்  ஆசி பெற்று வருவோம் .  மிட்டாய்களை எடுத்து கொள்ளுங்கள், குழந்தைகளை ஆசீர்வாதம் செய்து வாழ்த்துங்கள்.


 மகனின் நண்பர் மனைவி மிட்டாய் பாட்டிலை  எங்களுக்கு கொண்டு வந்து கொடுத்தார். போன பதிவில் அவர்கள் வீட்டில் மதிய உணவு உண்டு வந்ததை பகிர்ந்து இருந்தது நினைவு இருக்கும் என்று நினைக்கிறேன்.அவர்கள் வீட்டில் உணவுக்கு பின்  இந்த மிட்டாய் கொடுத்தார். 'நன்றாக இருக்கிறது ஆரஞ்சுவில்லை மிட்டாய்' என்று சொல்லி  கடைகளில் சிறு வயதில் வாங்கி சாப்பிட்ட பழைய காலங்களை பேசி மகிழ்ந்தோம். குடியரசு தினம், சுதந்திரதினம் எல்லாம் கைநிறைய ஆரஞ்சு வில்லை மிட்டாய் தான் தருவார்கள் நாங்கள் பள்ளியில் படிக்கும் போது.

நிறைய குழந்தைகள் பரிசுகளும்,  சான்றிதழ்களும்  வாங்கினார்கள். ஆசிரியர்கள், தொண்டு செய்பவர்கள் என்று பாராட்டி பரிசுகள் வழங்கினார்கள்.


மேலும் செய்திகள் அடுத்த பதிவில் பார்க்கலாம். 

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
--------------------------------------------------------------------------------------------------


38 கருத்துகள்:

  1. பதக்கங்களும் பட்டமும் பெற்ற உங்கள் பேரனுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!! புகைப்படங்கள் அனைத்திலும் ஒரு பாட்டியின் பூரிப்பை உணர முடிந்தது!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்

      //பதக்கங்களும் பட்டமும் பெற்ற உங்கள் பேரனுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!!//

      உங்கள் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் பேரனுக்கு கிடைத்தது மகிழ்ச்சி.

      //புகைப்படங்கள் அனைத்திலும் ஒரு பாட்டியின் பூரிப்பை உணர முடிந்தது!!//

      ஆமாம், மனதில் மகிழ்ச்சி பூரிப்புதான். நமக்கு வேறு என்ன வேண்டும் . இறைவன் அருளால் எல்லோரும், நலமாக இருக்க வேண்டும்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி மனோ.

      நீக்கு
  2. பேரன் எட்டாவது படித்து வெற்றி பெற்று இருக்கிறான். //

    வாழ்த்துகள் வாழ்த்துகள் !!!!! மிகவிம் மகிழ்வான விஷயம் கோமதிக்கா
    பேரன் தமிழ் கற்பதும் எல்லோருடனும் தமிழில் உரையாடுவதும் மிகவும் மகிழ்வான விஷயம். அதை இங்கு காணொலியில் சொல்லியிருப்பதும், நம் உடையான வேட்டி கட்டிக் கொண்டு சென்று பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டதும் மிகவும் நல்ல விஷயம். பெற்றோர் குடும்ப வளர்ப்பு என்பது எவ்வளவு முக்கியம் என்பதற்குச் சிறந்த உதாரணம் உங்கள் குழந்தைகளும் பேரக் குழந்தைகளும்! கவின் சூப்பர்!

    என் மனமார்ந்த வாழ்த்துகளைச் சொல்லிவிடுங்கள்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      //பேரன் எட்டாவது படித்து வெற்றி பெற்று இருக்கிறான். //
      தமிழ் பள்ளியில் எட்டாவது வரை தான் முடித்து விட்டான்.
      ரெகுலர் பள்ளியில் 9 வது படிக்கிறான்.

      வாழ்த்துகள் வாழ்த்துகள் !!!!! மிகவிம் மகிழ்வான விஷயம் கோமதிக்கா
      //பேரன் தமிழ் கற்பதும் எல்லோருடனும் தமிழில் உரையாடுவதும் மிகவும் மகிழ்வான விஷயம். அதை இங்கு காணொலியில் சொல்லியிருப்பதும், நம் உடையான வேட்டி கட்டிக் கொண்டு சென்று பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டதும் மிகவும் நல்ல விஷயம். //

      நன்றி காணொலி கேட்டதற்கு.

      //பெற்றோர் குடும்ப வளர்ப்பு என்பது எவ்வளவு முக்கியம் என்பதற்குச் சிறந்த உதாரணம் உங்கள் குழந்தைகளும் பேரக் குழந்தைகளும்! கவின் சூப்பர்!

      என் மனமார்ந்த வாழ்த்துகளைச் சொல்லிவிடுங்கள்!//

      உங்கள் கருத்துக்கும், மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் நன்றி.
      பேரனிடம் சொல்லி விடுகிறேன்.

      நீக்கு
  3. மகன் செய்த வரவேற்பு அட்டைகளும் நான் பாரதி என்பதில் முகம் வைத்தகுழந்தைகள் ஃபோட்டோக்கள் சூப்பர். எல்லாருக்கும் மன மகிழ்ச்சி!

    என் பிள்ளைகள் இருவர் கல்லூரியில் பட்டம் பெற்ற போதும், என் கணவர் முனைவர் பட்டம் பெற்ற போதும் நான் பார்க்கவில்லை. என் பேரன் தமிழ் கற்று பட்டம் பெறுவதை பார்க்கும் போது மனம் மகிழ்ச்சி அடைந்தது. அவன் தாத்தா இருந்து பார்த்து இருந்தால் என்ற எண்ணமும் வந்து போனது.//

    நெகிழ்ச்சி! நெகிழ்வான தருணங்கள். கோமதிக்கா.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மகன் செய்த வரவேற்பு அட்டைகளும் நான் பாரதி என்பதில் முகம் வைத்தகுழந்தைகள் ஃபோட்டோக்கள் சூப்பர். எல்லாருக்கும் மன மகிழ்ச்சி!//

      ஆமாம். அங்கு எல்லோரும் நான் பாரதி என்று முகத்தை வைத்து சொல்லும் போது மனதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் பிறந்தது.

      //நெகிழ்ச்சி! நெகிழ்வான தருணங்கள். கோமதிக்கா.//

      ஆமாம், அவன் தாத்தா இருந்தால் பேரன் பேசுவதை கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்து இருப்பார்கள்.

      நீக்கு
  4. குழந்தைகள் எல்லோருக்கும் வாழ்த்துகள்! எல்லோரும் வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழந்தைகள் எல்லோருக்கும் வாழ்த்துகள்! எல்லோரும் வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்!

      உங்கள் வாழ்த்துக்களுக்கும், கருத்துக்கும் நன்றி கீதா.

      நீக்கு
  5. என் பிள்ளைகள் இருவர் கல்லூரியில் பட்டம் பெற்ற போதும், என் கணவர் முனைவர் பட்டம் பெற்ற போதும் நான் பார்க்கவில்லை. என் பேரன் தமிழ் கற்று பட்டம் பெறுவதை பார்க்கும் போது மனம் மகிழ்ச்சி அடைந்தது. அவன் தாத்தா இருந்து பார்த்து இருந்தால் என்ற எண்ணமும் வந்து போனது.//

    ஆம் அந்த ஏக்கம் இருந்திருக்கும். ஆனால் இதுவும் ஒரு விதத்தில் ஒரு அதிர்ஷ்டம் தான். பேரனுக்கும் மற்ற பட்டம் பெற்ற சிறுவர் சிறுமியர்க்கும் மனமார்ந்த வாழ்த்துகள்! இறைவன் எல்லா நன்மைகளும் அவர்களுக்கு ஆசிர்வதிக்கட்டும். உங்கள் மகன் செய்தவையும் அருமை. அவருக்கும் வாழ்த்துகள்!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்

      //ஆம் அந்த ஏக்கம் இருந்திருக்கும். ஆனால் இதுவும் ஒரு விதத்தில் ஒரு அதிர்ஷ்டம் தான். பேரனுக்கும் மற்ற பட்டம் பெற்ற சிறுவர் சிறுமியர்க்கும் மனமார்ந்த வாழ்த்துகள்! இறைவன் எல்லா நன்மைகளும் அவர்களுக்கு ஆசிர்வதிக்கட்டும். உங்கள் மகன் செய்தவையும் அருமை. அவருக்கும் வாழ்த்துகள்!//

      நீங்கள் சொல்வது போல எனக்கு அவனுடன் இருந்து இந்த விழாவை பார்க்க பாக்கியம் கிடைத்தது மகிழ்ச்சிதான்.

      எல்லா குழந்தைகளுக்கும், மகனுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் சொன்னதற்கு நன்றி.
      உங்கள் பிரார்த்தனைகளுக்கும், கருத்துக்கும் நன்றி சகோ.

      நீக்கு
  6. ஏழ் கடல் கடந்தாலும் தாய் தமிழை மறக்காமல் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கும் கற்றுக் கொள்ளும் மாணவர்களுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜெயக்குமார் சந்திர சேகரன் வாழ்க வளமுடன்
      சனிக்கிழமை விழாவிற்கு சென்று விட்டதால் உங்கள் கதை பகிர்வை இன்னும் படிக்கவில்லை, படிக்க வேண்டும்.

      //ஏழ் கடல் கடந்தாலும் தாய் தமிழை மறக்காமல் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கும் கற்றுக் கொள்ளும் மாணவர்களுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.//

      உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

      நீக்கு
  7. படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது.

    தங்களது பெயரன் கவினுக்கு எமது வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது.//

      படங்களை மட்டும் பார்த்தீர்களா? பேரன் பேச்சை கேட்டு விட்டீர்களா?


      //தங்களது பெயரன் கவினுக்கு எமது வாழ்த்துகள்.//

      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி சகோ.

      நீக்கு
  8. உண்மையிலியே பெருமைக்குரிய விஷயம். கடல் கடந்து தமிழை விடாது பயில்பவர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்

      //உண்மையிலியே பெருமைக்குரிய விஷயம். கடல் கடந்து தமிழை விடாது பயில்பவர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்.//

      குழந்தைகளின் தாத்தா, பாட்டிகள் வந்து இருந்தார்கள். அவர்கள் எல்லோருக்கும் பட்டம் பெற்ற பிள்ளைகளின் பேச்சு மிகவும் பிடித்து இருந்தது. பேரன் , பேத்திகள் தமிழ் படிப்பது பெருமையாகவும், மகிழ்ச்சியாக இருப்பதாகவும் சொன்னார்கள்.

      பெற்றோர்கள்சிரமங்களை பார்க்காமல் விடுமுறை நாளில் குழந்தைகளை தமிழ் பள்ளி கூட்டி சென்று விட்டு கூட்டி வந்து அவர்களை படிக்க வைத்தது தான் சிறப்பு.
      பாராட்டுகள் அனைவருக்கும் தான் நீங்கள் சொன்னது போல.

      நீக்கு
  9. கவினின் பேச்சு கவர்ந்தது.

    தாய் மொழி நன்கு தெரியும்போது உறவினர்கள் அனைவரிடமும் கலந்து பழக முடியும். இல்லாவிட்டால் மண்ணைவிட்டு மனம் அந்நியப்பட்டுவிடும்.

    கவினுக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கவினின் பேச்சு கவர்ந்தது.//

      நன்றி.

      //தாய் மொழி நன்கு தெரியும்போது உறவினர்கள் அனைவரிடமும் கலந்து பழக முடியும். இல்லாவிட்டால் மண்ணைவிட்டு மனம் அந்நியப்பட்டுவிடும்.//

      ஆமாம், நீங்கள் சொல்வது உண்மை.

      கவினுக்குப் பாராட்டுகள்.//

      உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி

      நீக்கு
  10. படங்கள் கவர்ந்தன. காணொளியும் நன்று.

    ஆரஞ்சு வில்லைகள் எனக்கும் மிகவும் பிடித்தமானவை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //படங்கள் கவர்ந்தன. காணொளியும் நன்று//

      நன்றி.

      //ஆரஞ்சு வில்லைகள் எனக்கும் மிகவும் பிடித்தமானவை//

      உங்களுக்கும் பிடித்தமானதா மகிழ்ச்சி.


      நீக்கு
  11. நான் பாரதி போட்டோ எடுக்கும் ஸ்டான்ட் மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நான் பாரதி போட்டோ எடுக்கும் ஸ்டான்ட் மிக அருமை//

      மகன் இந்த முறை மிகவும் நேரம் எடுத்து கொண்டு காற்றுக்கு கீழே விழாமல் இருக்க ஸ்டாண்ட் செய்தான். வரவேற்பு பலகையும் காற்றுக்கு கீழே விழாமல் நல்ல கனமாக செய்தான்.
      எல்லோர் பாராட்டியும் பெற்றான்.
      குழந்தைகள் பெரியவர்கள் கூட முகத்தை காட்டி படம் எடுத்து போனார்கள். மகிழ்ச்சியாக இருந்தது.

      உங்கள் கருத்துக்கள் அனைத்துக்கும் நன்றி , நன்றி.

      நீக்கு
  12. கவினுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.  எல்லோரும் ஏதேதோ உடையில் இருக்க அழகாய் வேஷ்டி உடுத்து கம்பீரமாய் நிற்பது அழகு.  சிரித்த முகம் இன்னொரு ப்ளஸ்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //கவினுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.//

      நன்றி ஸ்ரீராம்.

      //எல்லோரும் ஏதேதோ உடையில் இருக்க அழகாய் வேஷ்டி உடுத்து கம்பீரமாய் நிற்பது அழகு. சிரித்த முகம் இன்னொரு ப்ளஸ்.//

      தமிழ் பரீட்சை எழுத போகும் போதும் வேஷ்டி கட்டிதான் போனான்.
      வீட்டில் நவராத்திரி பண்டிகைக்கு வேஷ்டி கட்டி கொள்வான். என் அப்பா மாதிரி வேஷ்டியை அழகாய் கட்டிக் கொள்வான்.
      அது போல சிரித்த முகமாய் இருப்பான் அது எல்லோருக்கும் பிடிக்கும், அந்த சிரிப்பு அப்பா, தாத்தா போல அவனுக்கு இருக்கிறது.

      நீக்கு
  13. நான் பாரதி முக கட்டவுட்டில் எல்லோரும் போட்டோ எடுத்துக் கொண்டது உங்கள் மகனைப்போலவே நமக்கும் மகிழ்ச்சி,  படத்துக்கு தகுந்தாற்போல் முகத்தை வைத்து எடுத்தவர் எத்தனை பேர்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நான் பாரதி முக கட்டவுட்டில் எல்லோரும் போட்டோ எடுத்துக் கொண்டது உங்கள் மகனைப்போலவே நமக்கும் மகிழ்ச்சி, படத்துக்கு தகுந்தாற்போல் முகத்தை வைத்து எடுத்தவர் எத்தனை பேர்?//

      நாம் பக்கத்தில் இருந்து "இன்னும் கொஞ்சம் பக்கத்தில் வாங்க , அப்படி கொஞ்சம் முகத்தை திருப்புங்க" என்று சொன்னால் புரிந்து கொள்ளும் குழந்தைகள் முகத்தை சரியாக வைத்தார்கள், சிலர் சரியாக வைக்கவில்லை .

      நீக்கு
  14. ஆரஞ்சு மிட்டாய் என் பாஸின் பேவரைட்.  பெரும்பாலும் வீட்டில் ஸ்டாக் இருக்கும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆரஞ்சு மிட்டாய் என் பாஸின் பேவரைட். பெரும்பாலும் வீட்டில் ஸ்டாக் இருக்கும்!//

      ஓ ! மகிழ்ச்சி, வயதாகி விட்டது நமக்கு அதை வாயில் போட்டு நீண்ட நேரம் வைத்து இருந்தால் வாயில் புண் வந்து விடுமோ என்று பயந்தேன். அப்படி இல்லை .

      இளமை கால நினைவுகளை நினைத்து அசை போட்டுக் கொண்டு ருசித்தேன்.

      நீக்கு
  15. மொபைலிலும், சினிமாக்களிலும் நேரத்தைத் தொலைக்காமல் இப்படி ஆக்கபூர்வமாக வளரும் கவினுக்கு மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும்.  கவினைப் பெற்றவர்களுக்கும், பெற்றவர்களை பெற்றவர்களுக்கும் வாழ்த்துகளும், வணக்கமும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மொபைலிலும், சினிமாக்களிலும் நேரத்தைத் தொலைக்காமல் இப்படி ஆக்கபூர்வமாக வளரும் கவினுக்கு மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும். கவினைப் பெற்றவர்களுக்கும், பெற்றவர்களை பெற்றவர்களுக்கும் வாழ்த்துகளும், வணக்கமும்.//

      உங்களின் வாழ்த்துக்கள், பாராட்டுக்களை பேரன் கவினிடம் சொன்னேன். எல்லோருக்கும் தன் நன்றியை தெரிவிக்க சொன்னான்.
      மகன் , மருமகளுக்கும் உங்கள் வாழ்த்துகளை தெரிவித்து விட்டேன்.

      உங்கள் கருத்துக்கள் அனைத்துக்கும் நன்றி நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  16. உங்கள் பேரனின் பள்ளி பட்டமளிப்பு விழாவில் உங்களால் கலந்து கொள்ள முடிந்தது ஒரு பாக்கியம்தான். கவினுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்.
    நான் பாரதி.. அமைப்பு சிறப்பு!
    கவின் கிட்டத்தட்ட அவன் தந்தையின் உயரம் வந்து விட்டானே..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்

      //உங்கள் பேரனின் பள்ளி பட்டமளிப்பு விழாவில் உங்களால் கலந்து கொள்ள முடிந்தது ஒரு பாக்கியம்தான். கவினுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்.//

      மகனும் , மருமகளும் கண்டிப்பாய் வர வேண்டும் என்று சொன்னதால் சம்பந்தி அம்மாவுடன் வந்தேன் , அந்த பாக்கியம் கிடைத்தது.
      அவர்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் நான்.

      //நான் பாரதி.. அமைப்பு சிறப்பு!//

      நன்றி.

      //கவின் கிட்டத்தட்ட அவன் தந்தையின் உயரம் வந்து விட்டானே..!//

      ஆமாம்.

      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  17. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. தங்கள் பேரனின் தமிழ் மன்ற பட்டமளிப்பு விழா பற்றிய தொகுப்பு நன்றாக உள்ளது. நான் நேற்று இரவே படுக்கும் நேரத்தில் பதிவை படித்து விட்டேன். ஆனால், கருத்துச் சொல்லத்தான் தாமதமாகி விட்டது. நேற்று கொஞ்சம் வீட்டு வேலைகளின் பிஸியில் வலைப்பக்கம் வர இயலவில்லை. அதனால்தான் இந்த தாமதம் வந்து விட்டது. மன்னிக்கவும்.

    படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. தங்கள் பேரன் கவினுக்கு என மனமார்ந்த வாழ்த்துகளை தெரியப்படுத்துங்கள்.

    விழாவிற்காக தங்கள் மகன் செய்துள்ள அலங்கார பலகைகள், பாரதியாரின் திருவுருவ கட்டவுட் எல்லாமே நன்றாக உள்ளது. அதில் முகம் பதித்து புகைப்படம் எடுத்துக் கொண்ட குழந்தைகளுக்கு எத்தனை சந்தோஷமாக இருந்திருக்கும் இல்லையா.? நல்ல கற்பனை வளம் கொண்ட தங்கள் மகனுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.

    விழா சிறப்பாக நடைபெற்றதும், ,குழந்தைகள் பட்டளிப்பை ஆனந்தத்துடன் ஏற்றுக் கொண்டதும் கண்டு நானும் மிக சந்தோஷ மடைந்தேன். காணொளிகளையும் கண்டேன். கவின் விழாவில் பாரம்பரிய உடையுடன் கலந்து கொண்டது அவரின் திறமைகளை பறைசாற்றுகிறது. எல்லாமே நன்றாக உள்ளது. உங்களுக்கும் மிக மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.

    நேற்று அன்னையர் தினம். இப்போதுதான் தாமதமாக நானும் உங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.பேரனின் தமிழ் மன்ற பட்டமளிப்பு விழாவை ஒரு தாயின் பூரிப்புடன் கண்டு மகிழ்ந்த தங்களுக்கும், கவினின் தாய், தந்தைக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.

    நானும் ஒரு சிறுமியை போன்று உற்சாகத்துடன் நீங்கள் அன்புடன் தந்த மிட்டாய்களை கண்களால் எடுத்துக் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //வணக்கம் சகோதரி

      பதிவு அருமை. தங்கள் பேரனின் தமிழ் மன்ற பட்டமளிப்பு விழா பற்றிய தொகுப்பு நன்றாக உள்ளது.//

      நன்றி.

      //நான் நேற்று இரவே படுக்கும் நேரத்தில் பதிவை படித்து விட்டேன். ஆனால், கருத்துச் சொல்லத்தான் தாமதமாகி விட்டது. நேற்று கொஞ்சம் வீட்டு வேலைகளின் பிஸியில் வலைப்பக்கம் வர இயலவில்லை. அதனால்தான் இந்த தாமதம் வந்து விட்டது. மன்னிக்கவும்.//

      மன்னிப்பு கேட்க வேண்டாம் என்று பல தடவை சொல்லி விட்டேன் கமலா. நேரம் கிடைக்கும் போது வந்து படித்து கருத்து சொல்லுங்கள் அது போதும்.

      //படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. தங்கள் பேரன் கவினுக்கு என மனமார்ந்த வாழ்த்துகளை தெரியப்படுத்துங்கள்.//

      கண்டிப்பாய் சொல்கிறேன்.

      //விழாவிற்காக தங்கள் மகன் செய்துள்ள அலங்கார பலகைகள், பாரதியாரின் திருவுருவ கட்டவுட் எல்லாமே நன்றாக உள்ளது. அதில் முகம் பதித்து புகைப்படம் எடுத்துக் கொண்ட குழந்தைகளுக்கு எத்தனை சந்தோஷமாக இருந்திருக்கும் இல்லையா.? நல்ல கற்பனை வளம் கொண்ட தங்கள் மகனுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.//

      குழந்தைகள், பெரியவர்கள் எல்லோருக்கும் மிகவும் பிடித்து இருந்தது.
      உங்கள் மனமார்ந்த வாழ்த்துகளுக்கு நன்றி.

      //விழா சிறப்பாக நடைபெற்றதும், ,குழந்தைகள் பட்டளிப்பை ஆனந்தத்துடன் ஏற்றுக் கொண்டதும் கண்டு நானும் மிக சந்தோஷ மடைந்தேன். காணொளிகளையும் கண்டேன். கவின் விழாவில் பாரம்பரிய உடையுடன் கலந்து கொண்டது அவரின் திறமைகளை பறைசாற்றுகிறது. எல்லாமே நன்றாக உள்ளது. உங்களுக்கும் மிக மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.//

      ஆமாம், மிக மகிழ்ச்சியாக இருந்தது. நீங்கள் ரசித்துப்பார்த்து சந்தோஷம் அடைந்தது மகிழ்ச்சி.

      //நேற்று அன்னையர் தினம். இப்போதுதான் தாமதமாக நானும் உங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.பேரனின் தமிழ் மன்ற பட்டமளிப்பு விழாவை ஒரு தாயின் பூரிப்புடன் கண்டு மகிழ்ந்த தங்களுக்கும், கவினின் தாய், தந்தைக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.//

      எங்கள் அனையர் தினத்திற்கு சரியாக வாழ்த்தி விட்டீர்கள்.
      கவினின் தாய் ,தந்தையரை வாழ்த்தியதற்கு நன்றி.

      //நானும் ஒரு சிறுமியை போன்று உற்சாகத்துடன் நீங்கள் அன்புடன் தந்த மிட்டாய்களை கண்களால் எடுத்துக் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

      அந்த மிட்டாய் சிறுமியின் உற்சாகத்தை கொண்டு வந்து விட்டது மகிழ்ச்சி.
      உங்கள் வாழ்த்துக்களுக்கும் விரிவான கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  18. அந்நிய மண்ணில் நம் தாய்மொழியை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் உத்வேகத்துடன் செயல்பட்ட ஆசிரியர்களும் ஊக்கம் அளித்த பெற்றோருக்கும் ஆர்வத்துடன் கற்று பட்டம் பெற்ற சிறுவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்! பேரன் அருமையாகப் பேசியுள்ளார். ‘நான் பாரதி’ சிறப்பான ஏற்பாடு. மகிழ்ச்சி அளிக்கும் பதிவு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

      //அந்நிய மண்ணில் நம் தாய்மொழியை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் உத்வேகத்துடன் செயல்பட்ட ஆசிரியர்களும் ஊக்கம் அளித்த பெற்றோருக்கும் ஆர்வத்துடன் கற்று பட்டம் பெற்ற சிறுவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்! //

      //நன்றாக சொன்னீர்கள். வாழ்த்துகளும், பாராட்டுகளும் அவர்களை மேலும் உற்சாகமாக செயல்பட உதவும்.

      பேரன் அருமையாகப் பேசியுள்ளார். ‘நான் பாரதி’ சிறப்பான ஏற்பாடு. மகிழ்ச்சி அளிக்கும் பதிவு!//

      உங்கள் கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  19. பேரனின் தமிழ் திறமைக்கு வாழ்த்துகள்.

    காணொளிகள் கண்டேன்
    .தமிழில் பேரன் பேசுவது மிகவு‌ம் நன்றாக உள்ளது. பாராட்டுகள்.
    மகனின் கைவண்ணங்கள் அருமையாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்

      //பேரனின் தமிழ் திறமைக்கு வாழ்த்துகள்.//

      உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி மாதேவி.

      //காணொளிகள் கண்டேன்
      .தமிழில் பேரன் பேசுவது மிகவு‌ம் நன்றாக உள்ளது. பாராட்டுகள்.
      மகனின் கைவண்ணங்கள் அருமையாக இருக்கிறது.//

      பேரன் பேசியதை கேட்டு அவனுக்கு பாராட்டுகள் வழங்கியதற்கும், மகனின் கை வண்ணங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி மாதேவி.

      நீக்கு