புதன், 1 மே, 2024

தமிழ்ச்சங்கத்தில் தமிழ்ப்புத்தாண்டு கொண்டாட்டம்






மகன் தயார் செய்தது

ஞாயிறு அன்று தமிழ்ப்புத்தாண்டு  கொண்டாட்டம் நடந்தது அரிசோனா தமிழ்ச் சங்கத்தில். அதில் கலந்து கொண்டேன் இந்த ஆண்டு, மகிழ்ச்சியாக இருந்தது.  ஊரிலிருந்து வந்த தாத்தா, பாட்டிகளுடன் குழந்தைகள்  இந்த வருட தமிழ்ப் புத்தாண்டை மகிழ்வுடன் கொண்டாடினார்கள்.

தமிழ்ச்சங்கத்தில் நடந்த புத்தாண்டுவிழா படங்கள் இந்த பதிவில் இடம்பெறுகிறது.



குழந்தைகளுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகள் நடந்தன


திருக்குறள் ஒப்பிவித்தல் போட்டியை நடத்திய ஆசிரியர்கள்
நிறைய குறள்கள் சொன்ன குழந்தைகள்
வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு , சான்றிதழும், கவரில் பணமும் வைத்து கொடுத்தார்கள். 
 
வென்றவர்களுக்கு வாழ்த்துகள், வாழ்க வளமுடன்


உணவுக்கு பின் மற்ற   கொண்டாட்டங்கள் தொடர்ந்தன.

நுனி வாழை இலையில் பரிமாற பட்ட புத்தாண்டு  விருந்து உணவு மெனு. காரம் இல்லாமல் சமைத்து இருந்தார்கள். 
கோவையிலிருந்து இலைகள் வந்தன .





கடைகள் போட்டவர்கள்
மணிமாலைகள், 

புடவைகள்



ஆடை வடிவமைப்பாளர்களின் உடைகளை அணிந்து நடந்து வந்தவர்கள்



ஆடை வடிவமைத்து குழந்தைகளுக்கு அணிவித்து அவர்களை அழகாய் நடக்க வைத்தவர்கள்.



விளையாட்டு போட்டிகள்


கவின் தன்னார்வலராக பணி செய்ய தமிழ்ச்சங்கம் வாய்ப்பு கொடுத்தது அனைவருக்கும் மகிழ்ச்சி.



வென்றவர்களுக்கு பரிசு குழந்தைகளுக்கு பிடித்த மிட்டாய்கள்

சிறு குழந்தைகள், பெரிய குழந்தைகளுக்கு ஓட்டபந்தயம் இருந்தது



பெண்களுக்கு போட்டிகள் 



இளம் தன்னார்வலர்கள் மகிழ்ச்சியாக அனைத்து வேலைகளையும் செய்தார்கள்
பேரனுக்கு கிடைத்த சான்றிதழ்

இந்த இரட்டை குழந்தைகள் மாறுவேட போட்டி, மற்றும் திருக்குறள் ஒப்பித்தல்,  ஆகியவற்றில் பரிசுகள் பெற்றார்கள். என்னிடம் அன்பாய் பேசி கொண்டு இருந்தார்கள்.   சொந்தஊர் திண்டுக்கல் என்றவுடன் திண்டுக்கல் தனபாலன் நினைவுக்கு வந்தார். திருக்குறளை குழந்தைகள் சொல்வதை கேட்டால் மகிழ்வார்.


இரட்டை குழந்தைகளின் அம்மாவும் நிறைய போட்டிகளில்  கலந்து கொண்டு பரிசுகள் பெற்றார்.  என் பெயர் கொண்டவர்.

சிறப்பாக தமிழ்ப்பள்ளியில் தமிழ்   சொல்லி கொடுத்தும், தமிழ்சங்கத்தில் அனைத்து பணிகளையும் செய்யும் அன்பு நண்பருக்கு  பாராட்டு. அவர் பிள்ளைகள் படிப்பு காரணமாய்   வேறு ஊர் போவதால் நினைவு பரிசு வழங்கி அவர் சேவைகள் தொடர வாழ்த்தினார்கள்.

இவரும் பல காலம் தொண்டு செய்தவர். புத்தாண்டு அன்று அனைத்து வேலைகளையும் செய்து  வியக்க வைத்தார். இவரும்  பிள்ளைகளுடன் இருக்க வேறு ஊர் போகிறார்.

அவருக்கும் நினைவு பரிசு அளித்து  பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் சொன்னார்கள்.


கோல போட்டியில் மதுரை பொண்ணு சித்திரை தேர் கோலம் போட்டு  பரிசு பெற்றார்.


ஓவிய போட்டியில்   தன் கற்பனை உலகத்தை வரைந்து  பரிசு பெற்றார். கோலபோட்டியில் வெற்றிப்பெற்றவர் மகள்தான்.



சிலம்பம் பின்னனியில் பாட்டு போட்டு  அழகாய் தற்காப்பு கலை என்று செய்து காட்டினார்கள். நிறைய குழந்தைகள் செய்தார்கள்.

இறுதி நிகழ்வாய் தமிழ் சினிமா  பொது அறிவு கேள்விகள். என்னையும் வாங்க வாங்க பாட்டு தான் கேட்பார்கள் என்று மருமகளின் தோழிகள் அமர வைத்து விட்டார்கள். ஆனால் அவர்கள் கேட்டது ராஜ்கிரண், கமல் இயற்பெயர், வடிவேல் நடித்த முதல் படம்,  இப்படி கஷ்டமான கேள்விகள் கேட்டார்கள்.  எனக்கு சினிமா பற்றிய செய்திகள் இப்போது எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் வெள்ளிமலர் பதிவு  மூலம் தெரிகிறது. (அவர் படத்தின் பேர், இசையார், படத்தின் பேர் போடுவதால் )

 இளைய ராஜா எத்தனை பாடலுக்கு  விருதுகள் பெற்றார். ஏ. ஆர். ரகுமான் கடைசியாக வாங்கிய விருது, விஸ்வநாதன் இசை அமைத்த  100 வது படம் என்ன? என்று எல்லாம் கேள்வி கேட்டார்கள். கூகுளை பார்க்க கூடாது.,ஒரு அணியில் நால்வர் தான். நான் , ஒரு இரண்டு சரியாக சொன்னேன்,   அவர்கள் கொஞ்சம் சொன்னார்கள்.  ஜெயித்தவர்கள் மேலே மேடை ஏறி போட்டியில் கலந்து கொண்டார்கள். 

நடத்தியவர் மிக திறமையாக யாரும் சொல்லமுடியாதபடி கேள்விகள் கேட்டு திணற அடித்தார். நன்றாக நடத்தினார்.

பாடல் வரிகளை மாற்றி போட்டு வேறு ராகத்தில் பாடி பாடலை கண்டு பிடிக்க சொன்னார்.

ஆண் நடிகர்களுக்கு பெண் மாதிரி அலங்காரம் செய்து யார் இவர் என்று கேட்டார்.

கல கலப்பாக போனது சினிமா பொது அறிவு போட்டி.


இவர் யார் என்று கண்டு பிடிக்க முடிகிறதா?

எல்லோரும் விரும்பி குடித்த கரும்பு சாறு.

 அனறைய நாள் இனிமையாக கழிந்தது. குழந்தைகள் மிகவும் மகிழ்வாய் அந்த மண்டபம் முழுவது சுற்றி வந்து விளையாடினார்கள். 

எங்கள் உலகம் தனி உலகம் என்று  இருந்தார்கள்.

நண்பர்கள்  ஊரிலிருந்து வந்த நண்பர்களின் தாய் தந்தையரை    வணங்கி அன்புடன் உரையாடினார்கள். 

அவர்கள் பெற்றோர்களை அறிமுகபடுத்தினார்கள்.எப்படி பொழுது போகிறது என்று முதியவர்கள்  ஒருவருக்கு ஒருவர் பேசி கொண்டார்கள்.  பெண்கள் பேரன், பேத்திகளுடன் விளையாடி கொண்டு , வீட்டு வேலைகளில் உதவி கொண்டு இருப்பதால் பொழுது போய் விடுகிறது என்றார்கள், மற்றும் இணையம் மூலம் உறவுகளுடன் உரையாடுவது, தொலைக்காட்சி தொடர்கள், சினிமாக்கள், மற்றும் கோவில்களுக்கும் போய் வருவதால்   பொழுது போய் விடுகிறது என்றார்கள்.


ஆண்கள் தான் பொழுது போகவில்லை என்று சொல்லி கொண்டார்கள். 

 ஆண்கள் சுதந்திரமாக வெளியே போக முடியவில்லை, எல்லாவற்றுக்கும் பிள்ளைகளை எதிர்ப்பார்க்க வேண்டி உள்ளது என்று சொன்னார்கள். ஊரில் யாரையும் எதிர்ப்பார்க்காமல் வெளியே போய் வருவோம் என்றார்கள். 

எப்படி ஆனாலும் பிள்ளைகளுடன் இருக்கும் காலம் மகிழ்ச்சி என்றார்கள்.


வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

----------------------------------------------------------------------------------------------------

30 கருத்துகள்:

  1. படங்கள் அனைத்தும் மிகவும் அழகாக இருக்கிறது.

    கவினுக்கு எமது வாழ்த்துகளை சொல்லவும்.
    குழந்தைகள் அனைவரும் மகிழ்ச்சியாக விளையாடுவதை காணும் போது நமக்கும் சந்தோஷமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //படங்கள் அனைத்தும் மிகவும் அழகாக இருக்கிறது.//

      நன்றி.


      //கவினுக்கு எமது வாழ்த்துகளை சொல்லவும்.//

      கண்டிப்பாய் சொல்கிறேன், நன்றி.
      //குழந்தைகள் அனைவரும் மகிழ்ச்சியாக விளையாடுவதை காணும் போது நமக்கும் சந்தோஷமாக இருக்கிறது.//

      ஆமாம், குழந்தைகள் ஓடி விளையாடி பின் அமர்ந்து பேசியது மகிழ்ச்சியாக இருந்தது. அவர்கள் மகிழ்ச்சி நம்மையும் தொற்றிக் கொள்ளும்.

      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி ஜி.

      நீக்கு
  2. திண்டுக்கல் தனபாலன் ஜி அவரது தந்தையார் மறைவுக்குப் பிறகு வலையுலகம் வரவில்லை.

    துயரிலிருந்து மீண்டு வரட்டும் என்று பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //திண்டுக்கல் தனபாலன் ஜி அவரது தந்தையார் மறைவுக்குப் பிறகு வலையுலகம் வரவில்லை.//

      ஆமாம், தெரியும் அவரை காணவில்லையே என்று கேட்டபோது சொன்னார். வீடு கட்டி கொண்டு இருப்பதாக சொன்னார். வேலைகள் முடிந்தவுடன் மனம் ஆறுதல் அடைந்தபின் வரட்டும்.

      //துயரிலிருந்து மீண்டு வரட்டும் என்று பிரார்த்திப்போம்.//

      பிரார்த்திப்போம்.

      நீக்கு
  3. தமிழ்மொழிக்கு அருமையான சேவை. அந்த ஆசிரியர்கள் வாழ்க.. மாணவர்களின் ஆர்வங்களை ஊக்குவிப்பது பாராட்டுக்குரியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //தமிழ்மொழிக்கு அருமையான சேவை. அந்த ஆசிரியர்கள் வாழ்க.. மாணவர்களின் ஆர்வங்களை ஊக்குவிப்பது பாராட்டுக்குரியது.//

      ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் சொன்னதற்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. செவிக்கு உணவும், வயிற்றுக்கு உணவும் கண்ணைக் கவர்கின்றன.  கவின் ஒரு சான்றிதழ் பெற்றிருப்பப்பதற்கு வாழ்த்துகள்.  குழந்தைகள்தான் வெல்கிறார்கள் என்று பார்த்தால் அவர்தம் அம்மாக்களும் கலக்குகிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //செவிக்கு உணவும், வயிற்றுக்கு உணவும் கண்ணைக் கவர்கின்றன. கவின் ஒரு சான்றிதழ் பெற்றிருப்பப்பதற்கு வாழ்த்துகள். குழந்தைகள்தான் வெல்கிறார்கள் என்று பார்த்தால் அவர்தம் அம்மாக்களும் கலக்குகிறார்கள்.//

      கவினுக்கு வாழ்த்துக்கள் சொன்னதற்கு நன்றி.
      அம்மாக்களும் எல்லா போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு பெற்றது மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
      கோலம், போட்டோ எடுப்பது, ஓவியம் வரைவது என்று , சமையல் போட்டி என்று கலந்து கொண்டு தங்கள் திறமையை காட்டினார்கள்.

      நீக்கு
  5. சினிமா கேள்வி பதில் கடினமாகத்தான் இருந்திருக்கு என்று தெரிகிறது.  என் பெயரையும் குறிப்பிட்டதற்கு நன்றி.  சட்டென மனதில் ஒரு சந்தோஷப்பூ பூத்தது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சினிமா கேள்வி பதில் கடினமாகத்தான் இருந்திருக்கு என்று தெரிகிறது. என் பெயரையும் குறிப்பிட்டதற்கு நன்றி. சட்டென மனதில் ஒரு சந்தோஷப்பூ பூத்தது!//

      கவுண்ட மணி இயற்பெயர், ஒரு பாடலில் மூன்று பெரிய நடிகர்கள் நடித்தார்கள் அவர்கள் யார் என்று எல்லாம் கேள்விகள்
      நமக்கு சட்டென்று நினைவுக்கு வர வேண்டுமே!
      வெள்ளி மலரில் பாடல்கள், எந்த படம், படங்களின்விவரம் என்று தேடி தருவதை சொல்லாமல் முடியுமா?
      சந்தோஷம் பூத்ததா? நன்றி.

      நீக்கு
  6. பெண் வேடம் போட்டிருக்கும் அவர் யார் என்று தெரியவில்லை. சிவகார்த்திகேயன்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பெண் வேடம் போட்டிருக்கும் அவர் யார் என்று தெரியவில்லை. சிவகார்த்திகேயன்?//

      சிம்பு

      நீக்கு
  7. மதுரைப் பெண்ணுக்கு கோலப்போட்டியில் வென்றதற்கு பரிசு கொடுப்பது உங்கள் மகன்தானே?  சான்றிதழிலும் அவர் பெயர் இருக்கிறதுதானே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மதுரைப் பெண்ணுக்கு கோலப்போட்டியில் வென்றதற்கு பரிசு கொடுப்பது உங்கள் மகன்தானே?

      ஆமாம், என் மகன் தான்.

      //சான்றிதழிலும் அவர் பெயர் இருக்கிறதுதானே?//

      ஆமாம். மீடியா டைரக்டர்.
      உங்கள் கருத்துக்கள் அனைத்துக்கும் நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  8. கவினின் அப்பா தமிழ்ச் சங்கத்தின் மீடியா டைரக்டர் என்பதைப் பார்த்தேன்.

    இப்படி வாலன்டீர் (தன்னார்வல) உதவிகள் செய்வது கவினுக்கு உபயோகமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்

      //கவினின் அப்பா தமிழ்ச் சங்கத்தின் மீடியா டைரக்டர் என்பதைப் பார்த்தேன்.//

      ஆமாம்.

      //இப்படி வாலன்டீர் (தன்னார்வல) உதவிகள் செய்வது கவினுக்கு உபயோகமாக இருக்கும்.//

      ஆமாம், அவனுக்கும், அவன் நண்பர்களும் இதை ஆர்வமாக செய்தார்கள். எல்லோருக்கும் உபயோகமாக இருக்கும்.

      நீக்கு
  9. புத்தாண்டு விருந்து அருமை.

    ஊரில் இருக்கும் நினைவை அனைவருக்கும் கொடுத்திருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //புத்தாண்டு விருந்து அருமை.

      ஊரில் இருக்கும் நினைவை அனைவருக்கும் கொடுத்திருக்கும்.//

      ஆமாம். ஊரிலிருக்கும் நினைவை கொடுத்தது உண்மை. எல்லோரும் சொன்னார்கள். குழந்தைகள் விளையாடியது, பெண்கள் எல்லோரும் ஊர் நினைவுகளை பகிர்ந்து கொண்டது , ஊரில் விசேஷ வீடுகளில் வேலைகளை பகிர்ந்து கொண்டு செய்வது, பரிமாறுவது என்று எல்லா வேலைகளையும் மகிழ்ச்சியாக செய்தார்கள்.

      நீக்கு
  10. போட்டிகளும் ஆர்வத்தைத் தூண்டும் வித்த்தில் அமைந்திருக்கும்.

    மொத்தத்தில் பதிவு சிறப்பு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //போட்டிகளும் ஆர்வத்தைத் தூண்டும் வித்த்தில் அமைந்திருக்கும்.//

      ஆமாம்.

      //மொத்தத்தில் பதிவு சிறப்பு//

      நன்றி.

      உங்கள் கருத்துக்கள் அனைத்துக்கும் நன்றி.

      நீக்கு
  11. வேற்று ஊர்களுக்கு செல்லும்போது தான் சொந்த ஊரின் அருமை பெருமை தெரியும். இங்கு இருப்பவர்கள் ஒற்றுமையுடன் கூடி இது போல் கொண்டாடுவார்களா என்றால் இல்லை என்றே சொல்லலாம்.
    விவரணம், படங்கள் நன்றாக உள்ளன. தமிழ் சங்கம் சிறப்புற வாழ்த்துக்கள்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜெயக்குமார், சந்திரசேகரன் சார், வாழ்க வளமுடன்

      //வேற்று ஊர்களுக்கு செல்லும்போது தான் சொந்த ஊரின் அருமை பெருமை தெரியும். இங்கு இருப்பவர்கள் ஒற்றுமையுடன் கூடி இது போல் கொண்டாடுவார்களா என்றால் இல்லை என்றே சொல்லலாம்.
      விவரணம், படங்கள் நன்றாக உள்ளன. தமிழ் சங்கம் சிறப்புற வாழ்த்துக்கள்.//

      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  12. வணக்கம் சகோதரி

    பதிவு அருமையாக உள்ளது. அரிசோனா தமிழ் சங்கம் நடத்திய தமிழ் புத்தாண்டு தின விழா படங்கள் அனைத்தும் மிக அழகாக இருக்கிறது.

    அங்கு பயிலும் குழந்தைகள் அனைவரும் ஆர்வத்துடன் போட்டிகள் கலந்து பரிசுகள் வாங்கியிருப்பது கண்டு மனம் மகிழ்ந்தேன். அவர்களின் அன்னையரும் , போட்டிகள் கலந்து கொண்டிருப்பதற்கு பாராட்டுக்கள். அந்த தேர் கோலம் மிக அழகாக இருக்கிறது.

    அதில் நீங்களும் ஒரு போட்டியில் கலந்து கொண்டிருப்பதற்கும், தங்கள் மகன், மற்றும் பேரனும் விழாவில் முக்கிய பதவிகள் வகித்ததற்கும் மனமார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துகள். உங்கள் மகன், மற்றும், பேரனுக்கும் என் வாழ்த்துக்களை கூறி விடுங்கள்.

    படங்கள் அனைத்தும் வழக்கம் போல அழகாக உள்ளது. மதிய உணவும், அதை அனைவருக்கும் வழங்கிய முறைகளும் அருமையாக உள்ளது. நீங்கள் கருத்துரையில், நம் பதிவுலக நட்புகளை பாராட்டியிருப்பதை கண்டு, உங்கள் பண்பை நினைத்து பெருமை கொள்கிறேன். இந்த விழாவில் கலந்து கொண்டதை நினைத்து நீங்கள் மகிழ்ச்சி கொண்டது குறித்து நானும் சந்தோஷமடைந்தேன். உங்களுக்கு அன்றைய பொழுது நன்றாக கழிந்திருக்கும். பதிவை படிக்கையில் நானும் மனம் மகிழ்ந்தேன் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
      //பதிவு அருமையாக உள்ளது. அரிசோனா தமிழ் சங்கம் நடத்திய தமிழ் புத்தாண்டு தின விழா படங்கள் அனைத்தும் மிக அழகாக இருக்கிறது.//

      நன்றி.
      //அங்கு பயிலும் குழந்தைகள் அனைவரும் ஆர்வத்துடன் போட்டிகள் கலந்து பரிசுகள் வாங்கியிருப்பது கண்டு மனம் மகிழ்ந்தேன். அவர்களின் அன்னையரும் , போட்டிகள் கலந்து கொண்டிருப்பதற்கு பாராட்டுக்கள். அந்த தேர் கோலம் மிக அழகாக இருக்கிறது.//

      ஆமாம். அனைவரும் ஆர்வத்துடன் போட்டிகளில் கலந்து கொண்டார்கள்.

      //அதில் நீங்களும் ஒரு போட்டியில் கலந்து கொண்டிருப்பதற்கும், தங்கள் மகன், மற்றும் பேரனும் விழாவில் முக்கிய பதவிகள் வகித்ததற்கும் மனமார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துகள். உங்கள் மகன், மற்றும், பேரனுக்கும் என் வாழ்த்துக்களை கூறி விடுங்கள்.//

      உங்கள் மனமார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துகளை மகன், பேரனிடம் சொல்லி விடுகிறேன்.

      //படங்கள் அனைத்தும் வழக்கம் போல அழகாக உள்ளது. மதிய உணவும், அதை அனைவருக்கும் வழங்கிய முறைகளும் அருமையாக உள்ளது. நீங்கள் கருத்துரையில், நம் பதிவுலக நட்புகளை பாராட்டியிருப்பதை கண்டு, உங்கள் பண்பை நினைத்து பெருமை கொள்கிறேன்//

      திருக்குறள் என்றால் திண்டுக்கல் தன்பாலன், சினிமா பாடல்கள், அதன் விவரங்கள் என்றால் ஸ்ரீராமின் வெள்ளிக்கிழமை பதிவு நம் நினைவுக்கு கண்டிப்பாய் வரும் இல்லையா!

      //இந்த விழாவில் கலந்து கொண்டதை நினைத்து நீங்கள் மகிழ்ச்சி கொண்டது குறித்து நானும் சந்தோஷமடைந்தேன். உங்களுக்கு அன்றைய பொழுது நன்றாக கழிந்திருக்கும். பதிவை படிக்கையில் நானும் மனம் மகிழ்ந்தேன் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

      ஊருக்கு அழைக்கும் போதே மகன் சித்திரை விழா , மற்றும் பல நிகழ்ச்சிகளை பார்க்கலாம் என்று சொல்லி அழைத்தான் .

      உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி கமலா.







      நீக்கு
  13. சிறப்பான கொண்டாட்டம். அங்கு தமிழ் பண்டிகைகள், புத்தாண்டு ஆகியவற்றுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் மகிழ்ச்சியைத் தருகிறது. வினாக்கள் இரண்டுக்கு உங்களால் பதில் சொல்ல முடிந்தது மகிழ்ச்சி. ஆம், அங்கு செல்லும் முதியவர்களில் ஆண்களுக்கு பொழுது போவது சிரமம் என்பது பொதுவான கருத்தாக உள்ளது. மகள் வீட்டுக்குச் சென்று வரும்போது என் சித்தப்பா ஒவ்வொரு முறையும் சொல்வார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

      //சிறப்பான கொண்டாட்டம். அங்கு தமிழ் பண்டிகைகள், புத்தாண்டு ஆகியவற்றுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் மகிழ்ச்சியைத் தருகிறது.//

      ஊரில் உறவுகளுடன் பண்டிகைகள் கொண்டாடிய மகிழ்ச்சியை தருகிறது அவர்களுக்கு.

      //வினாக்கள் இரண்டுக்கு உங்களால் பதில் சொல்ல முடிந்தது மகிழ்ச்சி. //

      ஆமாம், அது பாடல் சம்பந்தபட்டது அதனால் சொல்லமுடிந்தது.


      //ஆம், அங்கு செல்லும் முதியவர்களில் ஆண்களுக்கு பொழுது போவது சிரமம் என்பது பொதுவான கருத்தாக உள்ளது. மகள் வீட்டுக்குச் சென்று வரும்போது என் சித்தப்பா ஒவ்வொரு முறையும் சொல்வார்கள்.//

      அந்த ஊரில் கார் ஓட்ட தெரிந்து கொண்டு சில முதியவர்கள் பேர பிள்ளைகளை பள்ளி விட்டு வருவது, பின் அழைத்து வருவது எல்லாம் செய்கிறார்கள். கடைகளுக்கும் போய் வருகிறார்கள். அவர்களுக்கு பொழுது போய் விடுகிறது.

      உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  14. தமிழ் மொழிக்கும்
    கலாச்சாரத்திற்கும் சிறந்த சேவை.

    ஆசிரியர்கள் பாராட்டிற்கு உரியவர்கள்..

    மாணவர்களை ஆர்வத்துடன் ஊக்குவிப்பது அனைவருடைய கடமை

    பாராட்டுகள்..

    இனிய தகவல் தொகுப்பு கண்டு மகிழ்ச்சி... நன்றி..

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

      //தமிழ் மொழிக்கும்
      கலாச்சாரத்திற்கும் சிறந்த சேவை.

      ஆசிரியர்கள் பாராட்டிற்கு உரியவர்கள்..//

      ஆமாம், அவர்கள் இதை ஒரு சேவையாக செய்கிறார்கள்.

      //மாணவர்களை ஆர்வத்துடன் ஊக்குவிப்பது அனைவருடைய கடமை

      பாராட்டுகள்..//

      நன்றி உங்கள் பாராட்டுக்கு.

      //இனிய தகவல் தொகுப்பு கண்டு மகிழ்ச்சி... நன்றி..

      வாழ்க நலம்...//

      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  15. தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்கள் அனைத்தும் சிறப்பு.

    கவினுக்கு தன்னார்வலர் பணி கிடைத்தது மகிழ்ச்சி வாழ்த்துகள்.

    விழாவை நிறைந்த படங்களுடன் பகிர்ந்துள்ளீர்கள்.நீங்களும் பங்கு கொண்டது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்

      //தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்கள் அனைத்தும் சிறப்பு.

      கவினுக்கு தன்னார்வலர் பணி கிடைத்தது மகிழ்ச்சி வாழ்த்துகள்.

      விழாவை நிறைந்த படங்களுடன் பகிர்ந்துள்ளீர்கள்.நீங்களும் பங்கு கொண்டது மகிழ்ச்சி.//

      கவினை வாழ்த்தியதற்கும் உங்கள் அன்பான கருத்துக்கும் நன்றி மாதேவி.

      நீக்கு