வெள்ளி, 26 ஏப்ரல், 2024

நிலவும், மலர்களும்




சித்திரா பெளர்ணமி அன்று     வீட்டுத்தோட்டத்திலிருந்து எடுத்தோம் , நிலவை நானும், பேரனும்.

நிலாவை பார்க்க பிடிக்கும், அதுவும் நிலா வரும் நேரம் மஞ்சள் வண்ணத்தில் வருவதை பார்க்க மிகவும் பிடிக்கும்.  இந்த பதிவில் நிலவும், கள்ளிச்செடி மலர்களும் இடம் பெறுகிறது.



மதுரையில்   வீட்டிலிருந்து  இரவு வரும் நிலவை பார்க்க முடியாது, வெளியே போய் தான்  நிலவை பார்க்க முடியும். அதிகாலை நிலவை பால்கனியிலிருந்து பார்க்க முடியும்.

 மாயவரத்தில் படுக்கை அறை  ஜன்னல் வழியாக  அருமையாக பார்க்கலாம். தென்னை மரங்களுக்கு இடையே மிக அழகாய் தெரியும். இங்கு மகன் வீட்டில்  சந்திரன் தோன்றும் நேரம் தோட்டத்திலிருந்து பார்க்கலாம்.  ஆசையாக நிறைய எடுத்தோம்.  சில படங்களை மட்டும் இங்கு பகிர்ந்து இருக்கிறேன்.





குட்டை ரக கள்ளிச்செடி.

இங்கு வசந்தம் வந்து விட்டது,  கள்ளிச்செடிகள் எல்லாம் பூக்க ஆரம்பித்து விட்டது, அழகாய்.
.


மொட்டும் மலரும்





இந்த கள்ளிச்செடி மலர்  படங்கள் , பேரன் என் காமிராவில் எடுத்தான், நான் என் கைபேசியில் எடுத்தேன்.


இது ஒரு வகையான கள்ளிச்செடி

தாமரை மொட்டு வடிவத்தில் இருக்கும்  கள்ளி மொட்டு
மலர்ந்தால் மஞ்சள் கலரில்  காகிதத்தில் செய்த  பூ போல அதன் இதழ்கள் இருக்கிறது


செடியின் தோற்றம்  பார்க்கவே கொஞ்சம் பயம் தான்.


புல் செடியில் அழகான ஆரஞ்சு வண்ணப் பூ


உயரமாக உள்ள கள்ளிச்செடி மொட்டு விட்டு இருக்கிறது. அதன் தேனை, பூவில் உள்ள பூச்சியை தின்ன வரும் மரங்கொத்தி பறவை. அரிசோனா மரங்கொத்தி இப்படித்தான் இருக்கும். 

ஆண் மரங்க்கொத்திக்கு நெற்றியில் சிவப்பு கலரில் பொட்டு இருக்கும். இது பெண் மரங்க்கொத்திப்பறவை.

மரங்கொத்திப் பறவைகள் அரிசோனா மரங்கொத்திபறவை பதிவு.



எல்லா பறவைகளும், வண்டுகளும், தேனிக்களும் இந்த கள்ளிச்செடியில்  வந்து  அமர்ந்து, தேன் அருந்தும் படங்கள் உள்ள பழைய பதிவு நினைவு இருக்கலாம். 

பூவாகி , காயாகி , கனிந்த பழம்





மகன் வீட்டுத்தோட்டத்திற்கு பின்னால் இருக்கும்  வீட்டு  செடி. 



அந்த செடியில்   மலர் மலர்ந்து விட்டால் பறவைகள் அதன் தேன், மற்றும் பூச்சிகளை உண்ண வரும்.  மிக சிறிய காணொளிதான். குருவி தேன் அருந்துகிறது.






பின்னனியில் அருமையான பாடல் கேட்கும் கேளுங்கள்.  சின்ன காணொளிதான். காமிராவில் காணொளி எடுத்தேன், பாடல் கைபேசியில் கேட்டேன். அந்த பாடல் பதிவாகி இருக்கிறது.

இந்த மலரின் மொட்டை  மகன் காலை நேரம் சைக்கிளில்  நடை பயணம் சென்று வரும் போது  எனக்கு காட்ட எடுத்து வந்த படம் .

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
---------------------------------------------------------------------------------------------------- 

24 கருத்துகள்:

  1. படங்கள் அழகு.  நிலவின் படம் அழகாய் இருக்கிறது.  கள்ளிச்செடியையும் ரசிக்க வைக்கும் மலர்கள்.  காணொளி கண்டேன்.  கால் நொடிக்கும் குறைவான நேரத்தில் தேனை உறிஞ்சிவிடும் குருவி..  மகன் படம் பிடித்து வந்திருக்கும் மொட்டும் அழகு.  பாதி ஊதிய பலூன் போல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //படங்கள் அழகு. நிலவின் படம் அழகாய் இருக்கிறது.//

      நன்றி.

      //கள்ளிச்செடியையும் ரசிக்க வைக்கும் மலர்கள். //
      ஆமாம், ஒவ்வொரு வீட்டு வாசலில் ஒவ்வொரு விதமான கள்ளிச்செடிகள் வைத்து இருக்கிறார்கள்.


      //காணொளி கண்டேன். கால் நொடிக்கும் குறைவான நேரத்தில் தேனை உறிஞ்சிவிடும் குருவி..//

      மொட்டு மலர்ந்ததும் சில நாளில் பறவைகள், வண்டுகள், தேனீக்கள் வருகை, இரண்டு நாளில் செடியில் பூக்கள் உதிர்ந்து விடுகிறது.


      //மகன் படம் பிடித்து வந்திருக்கும் மொட்டும் அழகு. பாதி ஊதிய பலூன் போல!//

      ஆமாம். மொட்டு அழகாய் இருக்கிறது.

      உங்கள் கருத்துக்கு நன்றி ஸ்ரீராம்.



      நீக்கு
  2. பேரனுடன் அருமையான பொழுது போக்கு. படங்கள் நன்றாக உள்ளன. அது என்னவோ தெரியவில்லை. பேரன் பேத்திகள் தாய் தந்தையரிடம் பேசுவதைக் காட்டிலும் தாத்தா பாட்டியருடன் தயக்கம் இன்றி பழகுவர், பேசுவர்.
    Jayakumar​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகரன், வாழ்க வளமுடன்

      //பேரனுடன் அருமையான பொழுது போக்கு.//

      பேரனுடன் பொழுது போக்குவது குறைந்து வருகிறது. பெரிய வகுப்பு வந்தவுடன் பாடங்கள் படிப்பது அதிகமாகி விட்டது.


      //படங்கள் நன்றாக உள்ளன.//

      நன்றி.

      //அது என்னவோ தெரியவில்லை. பேரன் பேத்திகள் தாய் தந்தையரிடம் பேசுவதைக் காட்டிலும் தாத்தா பாட்டியருடன் தயக்கம் இன்றி பழகுவர், பேசுவர்.//

      ஆமாம். பேரன் எல்லோருடனும் நன்கு பேசுவான், பழகுவான். எல்லோருக்கும் நேரம் ஒதுக்குவான். எல்லோரையும் மகிழ்ச்சி படுத்துவான்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  3. அழகான படங்கள்...

    உதய நிலவும் பேரழகு..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ, வாழ்க வளமுடன்

      //அழகான படங்கள்...

      உதய நிலவும் பேரழகு..

      வாழ்க நலம்..//

      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  4. கள்ளிப் பூக்களும் அழகு தான்..

    கவினுடன் பொழுதுகள் நலமாகட்டும்..

    சீரும் சிறப்புமாய் நிறைந்து வாழ்க...

    பதிலளிநீக்கு
  5. காணொளியை பிறகு பார்க்கின்றேன்..

    பதிலளிநீக்கு
  6. அழகிய படங்கள் ரசிக்க வைத்தது.

    பள்ளிச் செடியின் பூக்கள் அழகு.

    இரண்டாவது காணொளி இயக்கம் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //அழகிய படங்கள் ரசிக்க வைத்தது.//
      நன்றி.

      //பள்ளிச் செடியின் பூக்கள் அழகு.

      இரண்டாவது காணொளி இயக்கம் இல்லை.//

      இரண்டாவது காணொளி இப்போது இயங்கும் பாருங்கள், அதன் சுட்டியும் கொடுத்து இருக்கிறேன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி ஜி.

      நீக்கு
    2. //கள்ளிச் செடியின்//
      என்று படிக்கவும்.

      இரண்டாவது காணொளி கண்டேன்.

      நீக்கு
    3. அப்படித்தான் படித்தேன் ஜி.
      இரண்டாவது காணொளி கண்டது மகிழ்ச்சி, நன்றி.

      நீக்கு
  7. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. நீங்களும், உங்கள் பேருமாக எடுத்த நிலவு, மற்றும் கள்ளிச்செடிகளின் மரங்கள் அதன் பூக்களின் படங்கள் அனைத்தும் மிக அழகாக இருக்கிறது.கள்ளிச் செடியைப்பற்றிய விபரங்கள் அருமை.

    கள்ளிச் செடிகளில் வந்து பயமின்றி அமர்ந்து அதன் பூக்களின் தேனை குடிக்கும் பறவைகளும் அழகு. சரியான கோணங்களில் ஒவ்வொரு படங்களையும் அழகாக எடுத்துள்ளீர்கள் .பாராட்டுக்கள்.

    தங்கள் மகன் எடுத்த கள்ளிச்செடி பூக்களின் மொட்டுகள் படமும் மிக அழகாக உள்ளது. உங்கள் மூவருக்கும், பறவைகள், மலர்கள் மேல்தான் எத்தனை விருப்பங்கள் என்ற வியப்பு வருகிறது. நல்ல ரசனையுடன் படங்களை எடுத்துள்ளீர்கள். அனைவருக்கும் எனதன்பான வாழ்த்துகள்.

    இன்றைய பதிவை படித்ததும், "நிலவும், மலரும் பாடுது" என்ற அருமையான பழைய பாடல் நினைவுக்கு வந்தது. அந்தப்பாடலுக்கு பொருத்தமான பதிவு இது.

    நீங்கள் தந்த சுட்டிகளுக்கும் சென்றேன். உங்களின் அந்த இருபதிவுகளுக்கும் நானும் வந்து ரசித்து கருத்துக்கள் தந்திருக்கிறேன். இருப்பினும் மீண்டும் படித்து வந்தேன்.

    பேரனுடனும் , மகன், மருமகளுடன் பொழுதை இனிமையாக கழியுங்கள். தற்சமயம் தங்கள், கால்வலி, மற்றும், பிற தொந்தரவுகள் குறைந்துள்ளதா? உடல் நலத்தை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      பேரனுமாக என்பது பேருமாக என தட்டச்சு பிழையாகி உள்ளது. மன்னிக்கவும்.

      நீக்கு
    2. வணக்கம் கமலா,
      தட்டச்சு பிழை வருவது சகஜம் , நம் கண்ணை தப்பி பிழை வலை ஏறி விடுகிறது.

      நீக்கு
    3. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      பதிவு அருமை. நீங்களும், உங்கள் பேரனுமாக எடுத்த நிலவு, மற்றும் கள்ளிச்செடிகளின் மரங்கள் அதன் பூக்களின் படங்கள் அனைத்தும் மிக அழகாக இருக்கிறது.கள்ளிச் செடியைப்பற்றிய விபரங்கள் அருமை.//

      நன்றி.

      //கள்ளிச் செடிகளில் வந்து பயமின்றி அமர்ந்து அதன் பூக்களின் தேனை குடிக்கும் பறவைகளும் அழகு.//
      கள்ளிச்செடியில் துளையிட்டு கூடு கட்டுகிறது மரங்கொத்திபறவை.

      //சரியான கோணங்களில் ஒவ்வொரு படங்களையும் அழகாக எடுத்துள்ளீர்கள் .பாராட்டுக்கள்.//
      உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி.

      //தங்கள் மகன் எடுத்த கள்ளிச்செடி பூக்களின் மொட்டுகள் படமும் மிக அழகாக உள்ளது. உங்கள் மூவருக்கும், பறவைகள், மலர்கள் மேல்தான் எத்தனை விருப்பங்கள் என்ற வியப்பு வருகிறது. நல்ல ரசனையுடன் படங்களை எடுத்துள்ளீர்கள். அனைவருக்கும் எனதன்பான வாழ்த்துகள்.//

      மூவரையும் வாழ்த்தியதற்கு நன்றி.

      //இன்றைய பதிவை படித்ததும், "நிலவும், மலரும் பாடுது" என்ற அருமையான பழைய பாடல் நினைவுக்கு வந்தது. அந்தப்பாடலுக்கு பொருத்தமான பதிவு இது.//

      நான் இந்த பாடலை பகிரலாம் என்று முதலில் காணொளி போட்டேன், நீங்களும் நினைத்து இருக்கிறீர்கள். பதிவு பெரிதாகி விடும் என்று கட் செய்து விட்டேன். இப்போது நினைக்கிறேன் போட்டு இருக்கலாம் என்று. தலைப்பை தேர்வு செய்தவுடன் பாடல் காதில் ஒலிக்க ஆரம்பித்து விட்டது. காலத்தால் அழியாத பாடல்.

      //நீங்கள் தந்த சுட்டிகளுக்கும் சென்றேன். உங்களின் அந்த இருபதிவுகளுக்கும் நானும் வந்து ரசித்து கருத்துக்கள் தந்திருக்கிறேன். இருப்பினும் மீண்டும் படித்து வந்தேன்.//

      மீண்டும் படித்து கருத்து சொன்னதற்கு மிக்க நன்றி.

      //பேரனுடனும் , மகன், மருமகளுடன் பொழுதை இனிமையாக கழியுங்கள். தற்சமயம் தங்கள், கால்வலி, மற்றும், பிற தொந்தரவுகள் குறைந்துள்ளதா? உடல் நலத்தை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

      பொழுதுகள் இறைவன் அருளால் இனிமையாக கழிகிறது.
      கால்வலி குறைந்து வருகிறது, பல்வலி சரியாகி விட்டது.
      உடல் நலத்தைப்பார்த்து கொள்கிறேன்.
      உங்கள் அக்கறையான நலம் விசாரிப்புக்கு நன்றி.
      உங்கள் வீட்டில் தண்ணீர் பிரச்சனை எப்படி இருக்கிறது?
      உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி கமலா.

      நீக்கு
    4. வணக்கம் சகோதரி

      இங்கு இன்னமும் வீட்டில் தண்ணீர் பிரச்சனை தீரவில்லை. டேங்கர் லாரிகள் மூலமாகத்தான் மேலே ஏற்றி குறிப்பிட்ட நேரங்களில் ஏதோ வருகிறது. நல்ல மழை வர வேண்டும். அப்படியே வந்தாலும், இந்நிலை தொடராதிருக்க வேண்டுமென பிரார்த்தித்து கொண்டுள்ளோம். அக்கறையுடன் விசாரித்தமைக்கு நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    5. //இங்கு இன்னமும் வீட்டில் தண்ணீர் பிரச்சனை தீரவில்லை. டேங்கர் லாரிகள் மூலமாகத்தான் மேலே ஏற்றி குறிப்பிட்ட நேரங்களில் ஏதோ வருகிறது. நல்ல மழை வர வேண்டும்.//

      பிரச்சனை தீரவில்லை என்று கேட்டு வருத்தமாய் இருக்கிறது.
      மழை பெய்து ஏரி, குளங்களில் தண்ணீர் வரத்து வந்து மக்களின் கஷ்டங்கள் குறைய வேண்டும்.
      நானும் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

      ஏரி, குளம், கிணறு, ஆறு எல்லாம் நிரம்பி வழிய
      மாரி அளவாய் பெய்ய மக்கள் வளமாய் வாழ வாழ்த்துவோம்.

      நீக்கு
  8. கள்ளிப் பூ படங்கள் அத்தனையும் அழகு.
    பறவைகள் வந்து தேன் அருந்துவது நன்றாக இருக்கிறது.

    பேரனும் மகனும் எடுத்த படங்கள் அழகானவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்க மாதேவி, வாழ்க வளமுடன்

      //கள்ளிப் பூ படங்கள் அத்தனையும் அழகு.//
      நன்றி.

      //பறவைகள் வந்து தேன் அருந்துவது நன்றாக இருக்கிறது.

      பேரனும் மகனும் எடுத்த படங்கள் அழகானவை.//

      உங்கள் கருத்துக்கு நன்றி மாதேவி.

      நீக்கு
  9. நிலவே என்னிடம் நெருங்காதே... பாடல் நினைவுக்கு வந்தது.

    கள்ளிச்செடி, பூக்கள் படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்

      //நிலவே என்னிடம் நெருங்காதே... பாடல் நினைவுக்கு வந்தது.//

      நல்ல பாடல். முன்பு நிலா படங்கள் பகிர்ந்து நினைவுக்கு வந்த பாடல்களை பகிர சொன்னனேன். அவர் அவர்களும் அவர்களுக்கு நினைவுக்கு வந்த நிலவு பாடல்களை பகிர்ந்தார்கள்.

      //கள்ளிச்செடி, பூக்கள் படங்கள் அருமை.//

      கள்ளிச்செடி பூக்கள் வித விதமாக இருக்கிறது நடைபயிற்சிக்கு போனால் எடுக்கலாம். சரியாக போகவில்லை, நேற்று ஒரு இடம் மகன் அழைத்து சென்றான் நடக்க , அங்கு கள்ளிச்செடிகள் மரம் மாதிரி உயர்ந்து நின்றது ஆனால் அதில் பூக்கள் இல்லை. கள்ளிச்செடிகளை படம் எடுத்து வந்தேன்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு