புத்த மடாலயம் (வாட்ஃபிரா சேதுபோன் விமோன் மங்கலராம் ராஜ்வரமஹாவிஹான். ) பேங்காக் -1
புத்த மடாலயம் (வாட்ஃபிரா சேதுபோன் விமோன் மங்கலராம் ராஜ்வரமஹாவிஹான். ) பேங்காக்--பாகம் -2
தாய்லாந்து பயணத்தில் பார்த்த இடங்கள் தொடர் பதிவாக இடம் பெறுகிறது.
தாய்லாந்து அரசுக்கு சொந்தமான புத்த கோயில், பழங்கால கோயில் .மன்னர் முதலாம் ராமர் கட்டளைப் படி கட்டியது. இங்கு புத்த துறவிகள் தர்மத்தை படிப்பதற்காக கட்டப்பட்டது.
தாய்லாந்து நகரின் தலைநகரம் பேங்காங்கில் அமைந்துள்ளது இந்த மடாலயம்.
புத்த மடாலயத்தில் பிரகாரத்தில் தோட்டம் இருந்தது, மரங்களுக்கும் செடிகளுக்கும் இடையில் அமர்ந்து யோகா செய்யும் சிலைகள் இருந்தது. அந்த சிலைகள் படம் இந்த பதிவில் .
தொங்கு செடி மலர்கள் அழகு
செயற்கை அருவி
நீரை செடிகளுக்கு திறந்து விடுகிறவர் போல நிற்கிறார்
அருவியில் குளிக்க போவது போல நிற்கிறார்
இவரின் தாடியும் மீசையும் வித்தியாசமாக இருக்கிறது
அவரே தான் பன்றியை எட்டி பார்க்கிறார் போல காட்டு பன்றியா? நாட்டு பன்றியா ? என்று நாட்டுபன்றி போலதான் இருக்கிறது.

செடிகளுக்கு இடையில் நிற்கிற முனிவர் தெரிகிறாரா?
கால்களுக்கு மேல் புல் முளைத்து கிடக்கு
இது என்ன தியானம்
ஆசனம் பேர் யார் செய்கிறார்கள் எல்லாம் குறிப்பு இருக்கு போல நமக்கு படிக்க முடியவில்லை எல்லாம் தாய்லாந்து மொழியிலிருக்கிறது
மான் முகம் மனித உடல்
இவர் கையில் என்ன வைத்து கொண்டு இருக்கிறார் என தெரியவில்லை
இப்படி மரம் செடிகளுக்கு அடியில் மண் பாத்திரத்தில் நீர் வைத்து இருந்தார்கள் பறவைகளுக்கு என்று நினைக்கிறேன்.
கோபமாய் இருக்கும் இது பூனையா? புலியா?
ஆமையும் கொஞ்சம் கோபமாக இருப்பது போல இருக்கிறது, ஆமை ஓட்டு மேல் எழுத்துக்கள் எழுதியது போல இருக்கிறது.
இன்று மகாவீரர் ஜெயந்தி . நான் போட்டு இருக்கும் தொடர் பதிவு புத்த மடாலயம். புத்தர் பெளத்த மதம்
நாங்கள் பல வருடம் முன் சித்தன்ன வாசல் போன போது அருகில் இருந்த பூங்காவில் மகாவீரர் சிலை இருந்தது. அங்கு எடுத்த படம்.
சமண மதத்தின் 24-வது தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரரைன் பிறந்த நாள் இன்று. அகிம்சை, உணமை, மற்றும் கருணையை போதித்தார். இந்த நாளில் மக்கள் எல்லோரும் அமைதியாக அன்பும் கருணையுமாக இருக்க பிரார்த்தனை செய்து கொள்வோம்.மகாவீரர் போதித்த மதம் சமண மதம்.
எல்லா மதமும் அன்பும் கருணையைதான் போதிக்கிறது.
போரில்லா உலகம் வேண்டும்.
நாளை பங்குனி உத்திரம் எல்லோரும் குலதெய்வம் கோயிலை நோக்கி போகும் நாள். அவர் அவர் குலதெய்வங்களிடம் வேண்டிக் கொள்ளுங்கள். உலகம் அமைதியாக கருணையாக நலமோடு இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்வோம்.
அடுத்த பதிவில் பெரிய தங்க புத்தரை காணலாம்.
வாழ்க வையகம் ! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
படங்கள் யாவற்றையும் ரசித்தேன். விதம் விதமான செடிகொடிகள், பூக்கள், தவம் செய்பவர்கள்..
பதிலளிநீக்குஅந்த ஆமை கோபமாக இருப்பது போலதான் இருக்கிறது. அதன்மேல் ஏதோ சங்கீத அல்லது சங்கேத எழுத்துகள் போலவும் என்னவோ இருக்கிறது.
வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்கு//படங்கள் யாவற்றையும் ரசித்தேன். விதம் விதமான செடிகொடிகள், பூக்கள், தவம் செய்பவர்கள்..
அந்த ஆமை கோபமாக இருப்பது போலதான் இருக்கிறது. அதன்மேல் ஏதோ சங்கீத அல்லது சங்கேத எழுத்துகள் போலவும் என்னவோ இருக்கிறது.//
ஆமாம், ஆமை முதுகின் மேலே ஏதோ எழுத்துக்கள் தெரிகிறதா? உங்களுக்கும் ஆமை கொஞ்சம் கோபமாக இருப்பது தெரிகிறதா?
நீங்கள் படங்களை ரசித்துப்பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி ஸ்ரீராம்.
சின்ன சின்ன கேப்ஷன்களோடு படங்கள் அழகு.!
பதிலளிநீக்குவணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்
நீக்கு//சின்ன சின்ன கேப்ஷன்களோடு படங்கள் அழகு.!//
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
உங்களை உலக தண்ணீர் பதிவில் எதிர்பார்த்தேன், பழைய தண்ணீர் சேமிப்பு பதிவுக்கு நீங்கள் போட்ட பின்னூட்டத்தை அந்த பதிவில் போட்டு இருந்தேன்.
படங்கள் அனைத்தையும் ரசித்தேன்
பதிலளிநீக்குசிற்பங்கள்லதான் பல யோகா போஸ்கள் செய்ய முடியும் ஹா ஹா ஹா
வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
நீக்கு//படங்கள் அனைத்தையும் ரசித்தேன்//
நன்றி.
//சிற்பங்கள்லதான் பல யோகா போஸ்கள் செய்ய முடியும் ஹா ஹா ஹா//
சிற்பங்கள் போல யோகா செய்பவர்கள் இருக்கிறார்கள் நெல்லை.
தங்க புத்தர் முகம் அடுத்த பதிவிலா?
பதிலளிநீக்கு//தங்க புத்தர் முகம் அடுத்த பதிவிலா?//
நீக்குஇதிலும் முகம் தெரிகிறதே!
அடுத்த பதிவில் முகம் தனியாக தெரியும் படம் அவரை மொத்தமாக எடுப்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம்.
உங்கள் வரவுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.
விதம் விதமான சிலைகள், யோகா செய்பவை, மான்முகம் கொண்ட மனித சிலை, ஆமை என.. அனைத்தும் அருமை. பகிர்வுக்கு நன்றி. தொங்கும் மலர்கள் ஆர்கிட் மலர் வரிசையை நினைவூட்டுகிறது.
பதிலளிநீக்குவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
நீக்கு//விதம் விதமான சிலைகள், யோகா செய்பவை, மான்முகம் கொண்ட மனித சிலை, ஆமை என.. அனைத்தும் அருமை. பகிர்வுக்கு நன்றி. தொங்கும் மலர்கள் ஆர்கிட் மலர் வரிசையை நினைவூட்டுகிறது.//
அனைத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி ராமலக்ஷ்மி.
தொங்கும் செடி மலர்கள் செம அழகு கோமதிக்கா.
பதிலளிநீக்குநீங்க பதிவு போட்டிருப்பீங்களேன்னு நினைச்சேன். பார்த்துவிட்டேன் ஆனால் தாமதமாக.
கீதா
வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்கு//தொங்கும் செடி மலர்கள் செம அழகு கோமதிக்கா.//
ஆமாம், மரத்தில் அந்த செடியை நட்டு இருக்கிறார்கள், அதிலிருந்து பூக்கள்
//நீங்க பதிவு போட்டிருப்பீங்களேன்னு நினைச்சேன். பார்த்துவிட்டேன் ஆனால் தாமதமாக.//
எப்போது வேண்டுமென்றாலும் பதிவை படிக்கலாம் கீதா. வேலைதான் முக்கியம்.
வேலைகள் நிறைய வந்து விட்டது என்று ஸ்ரீராம் சொல்லி இருந்தார் .
செயற்கை அருவி என்றாலும் பார்க்க அழகுதான்
பதிலளிநீக்குகீதா
//செயற்கை அருவி என்றாலும் பார்க்க அழகுதான்//
நீக்குஆமாம், கீதா.
நீரை செடிகளுக்கு திறந்து விடுகிறவர் போல நிற்கிறார்//
பதிலளிநீக்குதோட்டம் பராமரிப்பவர் போல இருக்கிறார்
கீதா
//தோட்டம் பராமரிப்பவர் போல இருக்கிறார்//
நீக்குஆமாம்.
அருவியில் உட்கார்ந்தே இருக்கிறாரோ அடுத்த படத்தில்?
பதிலளிநீக்குகீதா
அருவியின் அருகே அமர்ந்து இருப்பது போலவும் இருக்கிறது.
நீக்குசெடிகளுக்கு நிற்கும் முனிவர் தெரிகிறார்.
பதிலளிநீக்குகன்னத்தில் கைவைத்து வஜ்ராசனத்தில் அமர்ந்திருப்பட்து வித்தியாசமாக இருக்கு
எதையோ அச்சச்சோ என்று பார்க்கிறாரோ?
ஆசனங்கள்தான்.
மான் முகம் மனித உடல் வித்தியாசமாக இல்லையாக்கா
கீதா
//செடிகளுக்கு நிற்கும் முனிவர் தெரிகிறார்.//
நீக்குஓ சரி.
//கன்னத்தில் கைவைத்து வஜ்ராசனத்தில் அமர்ந்திருப்பட்து வித்தியாசமாக இருக்கு
எதையோ அச்சச்சோ என்று பார்க்கிறாரோ?//
இல்லை எல்லாம் ஆசனங்கள் தான்.
//ஆசனங்கள்தான்.//
ஆமாம், இதுவும் ஒரு ஆசனம் தான்.
//மான் முகம் மனித உடல் வித்தியாசமாக இல்லையாக்கா//
ஆமாம்.
புலி போன்றுதான் இருக்கிறது பல் வெளியில்
பதிலளிநீக்குஆமை ஓடும் அதன் மேல் டிசைன் அல்லது ஏதோ எழுத்துகள் போலத் தெரிகிறதுதான்
மகாவீரர் சிலையும் பார்த்தேன்.
ஓ மகாவீர ஜயந்தியா நீங்க போட்ட தினம்
கீதா
//புலி போன்றுதான் இருக்கிறது பல் வெளியில்//
நீக்குஆமாம்.
//ஆமை ஓடும் அதன் மேல் டிசைன் அல்லது ஏதோ எழுத்துகள் போலத் தெரிகிறதுதான்//
ஆமாம். நமக்கு அவர்கள் மொழி தெரியாது என்ன எழுதி இருக்கு என்று படிக்க முடியவில்லை.
//மகாவீரர் சிலையும் பார்த்தேன்.
ஓ மகாவீர ஜயந்தியா நீங்க போட்ட தினம்//
ஆமாம் கீதா.
படங்கள் எல்லாம் செமையா இருக்கு கோமதிக்கா
பதிலளிநீக்குகீதா
//படங்கள் எல்லாம் செமையா இருக்கு கோமதிக்கா///
நீக்குபடங்கள் அனைத்தையும் ரசித்து கருத்துகள் பல சொன்னதற்கு நன்றி கீதா.