
உலக நீர் தினம். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 அன்று ஜக்கிய நாடுகள் சபையால் உலகளவில் கொண்டாடப்படும் ஒரு தினமாகும்.
நீர் மற்றும் சுகாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை ஊக்குவிப்பதும், பாதுகாப்பான நீர் வசதியின்றி வாழும் 220 கோடி மக்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.
ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருபொருள் இருக்கும்.
இந்த ஆண்டு , 2026 -ல் உலகநீர்தினத்தின் கருப்பொருள்
"நீரும் பாலினமும் " என்பதாகும்.அதன் முழக்கம்" எங்கே" என்பதாகும்
" நீர் பாய்கிறது, சமத்துவம் வளர்கிறது" இந்தக் கருப்பொருள்,
தண்ணீர் நெருக்கடியால் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது ஏற்படும் சமமற்ற தாக்கத்தை வலியுறுத்துவதோடு , மேலும் சமத்துவமான எதிர்காலத்திற்காக நீர் தலைமைத்துவம், மேலாண்மை மற்றும் முடிவெடுப்பதில் அவர்களின் முக்கியப் பங்க்கிற்காக வாதுடுகிறது.
// பேருலகில் வாழுகின்ற மக்களெல்லாம் பெண்ணினத்தின் அன்பளிப்பே எனில்
வேறு என்ன பெருமை இதைவிட எடுத்துப் பேசுவதற்கு //
இப்படிச் சொல்கிறார் தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
இந்த ஆண்டு பெண்கள் , சிறுமிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நீரை பாதுகாப்பது போல பெண்களை, சிறுமிகளை பாதுகாக்க வேண்டும்.
உலகின் பல பகுதிகளில் வீட்டு உபயோகம் நீரைச் சேகரிப்பதில் நிர்வாகிப்பதிலும் பெண்களே . ஆயினும் நீர் அமைப்புகளை நிர்வாகிக்கும் முடிவெடுக்கும் செயல்முறைகளிலிருந்து அவர்கள் பெரும்பாலும் விலக்கப்படுகிறார்கள். நீர் சேகரிப்பதில் சிலர் தங்கள் கற்றலையும் தொடர முடியவில்லை, பாதுகாப்பும் அவர்களுக்கு இல்லை.
பெண்களையும், சிறுமிகளையும் எவ்வாறு சமமற்ற முறையில் பாதிக்கிறது என்பதை எடுத்து காட்டுகிறது.
மேலும் நாளைய தலைமுறையை பெற்று கொடுப்பவர்களுக்கு சுத்தமான, சுகாதாரமான நீரை கிடைக்க செய்வது அவசியம்.
இந்த ஆண்டு உலக நீர் தினத்தின் கருப்பொருள், வருங்கால சந்ததியினருக்காக நீரைப் பாதுகாக்கத் தேவையான மாற்றங்களை விரைவாகச் செயல்படுத்தும் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துகிறது. மோசமான சுகாதாரம், போதுமான சுகாதார வசதியின்மை மற்றும் நீரினால் பரவும் நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் 8.2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இறப்பதைத் தடுப்பதற்காக, ஐக்கிய நாடுகள் சபை 2030-ஆம் ஆண்டுக்கான சில நிலையான வளர்ச்சி இலக்குகளை வகுத்துள்ளது.
//பெண்கள், சிறுமிகள் , மற்றும் நலிவடைந்த நிலையில் உள்ளவர்களின் தேவைகளுக்கு சிறப்புக் கவனம் செலுத்தி சுகாதாரம், மற்றும் தூயமை சேவைகளுக்கான சமமான மற்றும் போதுமான அணுகலை உறுதி செய்தல் மற்றும் திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருதல். தண்ணீரின் தரத்தை மேம்படுத்த வேண்டும்.
எல்லா இடங்களிலும் நீர் இழப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கழிவறைகளில் நீர் கசிவுகள் உள்ளதா என்று அடிக்கடி சரிப்பார்க்க வேண்டும்.
குறுகிய நேர குளியல் மற்றும் நீர் சேமிக்கும் ஷவர் ஹெட்களை பொறுத்துதல்
பல் துலக்கும் போது, சவரம் செய்யும் போது, பாத்திரம் துலக்கும் போது காய்கறிகளை சுத்தம் செய்யும் போது தண்ணீரை தொடர்ந்து ஓட விடுவதை தவிர்க்கவும்.
தானியங்கி பாத்திரம் கழுவும் இயந்திரங்களையும், சலவை இயந்திரங்களையும் முழுமையாக நிரம்பி இருக்கும் போது பயன்படுத்தவும்.
தேவைப்படும் போது செடிகளை பராமரித்தல்//
செய்தி தொகுப்பு https://www.pacehospital.com/world-water-day
மேலும் செய்திகளுக்கு இந்த சுட்டியில் படிக்கலாம்.
உலக தண்ணீர் தினம் (2023)
உலக தண்ணீர் தினம் (2022)
உலக தண்ணீர் தினம் (2023)
வாழ்க வையகம் ! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
- ------------------------------------------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக