திருத்தணி சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் - நன்றி கூகுள்
குன்றுதோறாடலில் இந்த திருத்தணிகை
முருகம்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடு திருத்தணிகை. சுவாமியை தணிகாச்சலம் என்றும் அழைப்பர்.
அழகான கோபுரம். நன்றி - கூகுள்
அடியார்களின் துன்பம், கவலை, பிணி, வறுமை ஆகியவற்றைத் தணிக்கும் இடமாக இந்த தணிகைமலை விளங்குகிறது.
வள்ளியை மணந்த இடம் திருத்தணி
இந்த பதிவில் திருத்தணிகை திருப்புகழ் இடம்பெறுகிறது.
இதற்கு முந்திய பதிவுகள்
ஸ்ரீ பாலதண்டாயுதபாணி நீலிக்கோணாம்பாளையம் -கந்த சஷ்டி முதல் நாள் பதிவு
திருப்பரங்குன்றம் திருப்புகழ் கந்த சஷ்டி - இரண்டாம் நாள் நாள் பதிவு
வேலை வணங்குவது எமக்கு வேலை - மூன்றாம் நாள் பதிவு
சுவாமிமலை வாழும் குருநாதா சரணம் !- நான்காம் நாள் பதிவு
அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழில் தணிகை மலையை கைலாய மலைக்கு ஓப்பிட்டு பாடி இருக்கிறார். இராமலிங்க வள்ளலார்சுவாமிகள் திருத்தணிகை முருகனின் பெருமைகளை திருவருட்பாவில் பாடி இருக்கிறார். சென்னையில் உள்ள அவர் இல்லத்தில் கண்ணாடியில் ஜோதி வழிபாடு செய்யும் போது திருத்தணிகை முருகன் காட்சி அளித்துள்ளார்.
முத்துசாமி தீட்சிதர் சங்கீத ஞானம் வேண்டி முருகனை பூஜித்த போது முருகபெருமான் அவர் நாவில் அட்சர ஆசி அருளினினார், அவருக்கு பாடும் திறனை வழங்கி உள்ளார்.
இந்த மலைக்கோயில் படிகள் ஆண்டின் 365 நாட்களை குறிக்கும்படியாக 365 படிகளை கொண்டது படி பூஜைய் மிகவும் சிறப்பு இங்கு.
இப்படி பல பெருமைகள் வாய்ந்தது திருத்தணி தலம்.
கந்த புராணத்தில் திருத்தணி மகிமையை முருகபெருமானே வள்ளியம்மைக்கு சொல்வதாக வருவதை படித்து பாருங்கள்.:-
"தேவீ! இம் மலையில் நான் வீணை, வேய்குழல், மிருதங்கம் போன்ற பற்பல இசைக்கருவிகளை வாசித்து மகிழ்வேன்” தன் நினைவுகளை முருகபெருமான் வள்ளியிடம் பகிர்ந்நு கொள்கிறார்
இயற்கை எழில் கொஞ்சும் திருத்தணிகை
நன்றி கூகுள்
படங்கள் எல்லாம் இணையத்தில் எடுத்தது பகிர்ந்தவர்கள் அனைவருக்கும் நன்றி.
சரவண பொய்கை - நன்றி கூகுள்
படங்கள் எல்லாம் இணையத்தில் எடுத்தது பகிர்ந்தவர்கள் அனைவருக்கும் நன்றி.
திருத்தணி போன போது எங்களிடம் காமிரா இல்லை , காமிரா , அலை பேசி வாங்கிய பின் திருத்தணி போக வில்லை அதனால் என்னிடம் திருத்தணி படங்கள் இல்லை.
சீர்காழி கோவிந்தராஜன் தன் மகனுடன் பாடிய சிறிய பாடல் திருத்தணி பாடல் கேட்டுப்பாருங்கள் நன்றாக இருக்கிறது.
பி. சுசிலா , சூலமங்கலம் ராஜலெட்சுமி பாடிய பாடல்.
திருத்தணி முருகா தென்னவர் தலைவா உன் சேவலும் மயிலும் காவல்
கந்தவேள் முருகனுக்கு அரோகரா
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
--------------------------------------------------------------------------------------------




.jpg)

.webp)
இன்று திருத்தணி!
பதிலளிநீக்குமகன் மேற்படிப்பிற்குச் செல்லும் முன் நானும் அவனும் அவன் அக்காவும் திருத்தணி சென்று வந்தது நினைவுக்கு வந்தது. அழகான கோவில்.
வருகிறேன் அக்கா
கீதா
வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்குபழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி.
இரு முறைக்கும் மேல் திருத்தணி தரிசனம் கிடைக்கப் பெற்றிருக்கிறேன். பாடல்கள் இனிமை. குறிப்பாக தலைப்பில் இடம்பெற்றுள்ள பாடல். மறுபடி கேட்டு ரசித்தேன். மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்கு//இரு முறைக்கும் மேல் திருத்தணி தரிசனம் கிடைக்கப் பெற்றிருக்கிறேன். பாடல்கள் இனிமை. குறிப்பாக தலைப்பில் இடம்பெற்றுள்ள பாடல். மறுபடி கேட்டு ரசித்தேன். மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று.//
சென்னைக்கு அருகில் இருப்பதால் அடிக்கடி போகலாம்.
பாடல்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
ஜோதி டிவிடில் திருச்செந்தூர்நேரலையில் வைத்து இருக்கிரார்கள் நல்ல நல்ல பக்தி பாடல்கள் போடுகிறார்கள் கேட்டுக் கொண்டு இருக்கிறேன்.
போன பதிவுக்கு வரவில்லையே! சுவாமி மலை. அதிலும் உங்களுக்கு பிடித்த பாடல் பகிர்ந்து இருந்தேன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. இன்றைய முருகன் காட்சியாக (ஐந்தாம்படை வீடாக) திருத்தணிமலை முருகனை தரிசனம் செய்து கொண்டேன். முருகனே இந்தமலையின் சிறப்பு பற்றி வள்ளியம்மைக்கு கூறுவது குறித்து தெரிந்து கொண்டேன். இயற்கை சூழ்ந்த மலையழகு கண்களை கவர்கிறது. பகிர்ந்த பாடல்கள், திருப்புகழ் பாடல்கள் அனைத்தும் இனிமை.
நாங்கள் என் பெரிய மகன் இரண்டு வயதற்குள்ளாக இருக்கும் போது, எங்கள் மாமியார், கணவருடன், மற்றும், அவர் நட்பு குடும்பத்துடன் திருத்தணி முருகனை தரிசித்து வந்தோம். அதன் பிறகு மீண்டும் இத்தனை வருடங்களாகியும் அக்கோவிலுக்குச் செல்லும் வாய்ப்பை அந்த இறைவன் தரவில்லை. வீட்டில் சொல்லிக் கொண்டே இருக்கிறேன். அதற்கு "அவன்" அழைக்க வேண்டும். இன்று உங்கள் பதிவில் திருத்தணி முருகனை தரிசிக்கும் பேறு, கோபுர தரிசனம் கிடைத்தது. முருகா சரணம்.🙏.
வேல் மாறல் பாடலில் திருத்தணி முருகா என்றுதான் ஆரம்பமாகும். உங்களது கந்தசஷ்டியின் சிறப்பு பதிவுகள் அருமை. நேற்றைய பதிவு விட்டுப் போய் விட்டது. பிறகு வருகிறேன். தொடர்கிறேன் சகோதரி. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கம்லா ஹிரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்கு//பதிவு அருமை. இன்றைய முருகன் காட்சியாக (ஐந்தாம்படை வீடாக) திருத்தணிமலை முருகனை தரிசனம் செய்து கொண்டேன். முருகனே இந்தமலையின் சிறப்பு பற்றி வள்ளியம்மைக்கு கூறுவது குறித்து தெரிந்து கொண்டேன். இயற்கை சூழ்ந்த மலையழகு கண்களை கவர்கிறது. பகிர்ந்த பாடல்கள், திருப்புகழ் பாடல்கள் அனைத்தும் இனிமை.//
ஆமாம், முருகன் வள்ளியிடம் நிறைய சொல்கிறார். நான் கொஞ்சம் தான் பகிர்ந்தேன்.
//நாங்கள் என் பெரிய மகன் இரண்டு வயதற்குள்ளாக இருக்கும் போது, எங்கள் மாமியார், கணவருடன், மற்றும், அவர் நட்பு குடும்பத்துடன் திருத்தணி முருகனை தரிசித்து வந்தோம். அதன் பிறகு மீண்டும் இத்தனை வருடங்களாகியும் அக்கோவிலுக்குச் செல்லும் வாய்ப்பை அந்த இறைவன் தரவில்லை. வீட்டில் சொல்லிக் கொண்டே இருக்கிறேன். அதற்கு "அவன்" அழைக்க வேண்டும். இன்று உங்கள் பதிவில் திருத்தணி முருகனை தரிசிக்கும் பேறு, கோபுர தரிசனம் கிடைத்தது. முருகா சரணம்.🙏.//
நாங்கள் படியில் ஏறி போகவில்லை அதனால் கோபுரம் பார்த்த நினைவே இல்லை. இப்போது இணையத்தில் பார்த்தேன், முன்பு பார்த்த கோயில் போல இல்லை நிறைய மாற்றங்கள்.
உங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி.
//வேல் மாறல் பாடலில் திருத்தணி முருகா என்றுதான் ஆரம்பமாகும். உங்களது கந்தசஷ்டியின் சிறப்பு பதிவுகள் அருமை. நேற்றைய பதிவு விட்டுப் போய் விட்டது. பிறகு வருகிறேன். தொடர்கிறேன் சகோதரி. பகிர்வுக்கு மிக்க நன்றி.//
தினம் 11 மணிக்கு வேல்மாறல் ஜோதி டிவியில் வைக்கீரார்கள் கேட்கிறேன்.
பழைய பதிவை நேரம் கிடைக்கும் போது படிங்க.
உங்கள் கருத்துக்கு நன்றி.
வள்ளியை மணந்த இடம் திருத்தணி//
பதிலளிநீக்குஆமாம் இதுவும் அறிந்ததுண்டு, அக்கா. அப்ப எனக்கு எழுந்த கேள்வி, தெற்கே வள்ளியூர் முருகன் கோவில், நாகர்கோவில் குமாரகோவிலில் இருக்கும் வள்ளி குகை என்பதைப் பார்த்தப்ப வள்ளி அந்த ஊரைச் சேர்ந்தவரா? அப்புறம் திருத்தணியில் கல்யாணம் எனும் போது எழும் கேள்விகள்
கீதா
//ஆமாம் இதுவும் அறிந்ததுண்டு, அக்கா. அப்ப எனக்கு எழுந்த கேள்வி, தெற்கே வள்ளியூர் முருகன் கோவில், நாகர்கோவில் குமாரகோவிலில் இருக்கும் வள்ளி குகை என்பதைப் பார்த்தப்ப வள்ளி அந்த ஊரைச் சேர்ந்தவரா? அப்புறம் திருத்தணியில் கல்யாணம் எனும் போது எழும் கேள்விகள்//
நீக்குபுராணங்கள் நிறைய இருக்கிரது. வள்ளி குகை வள்ளி விளையாடிய திணைபுணம் காத்த இடம் என்று நிறைய இருக்கிறது.
கந்த புராணத்தில் வள்ளியை அவர் அப்பா நம்பி ராஜன் தன் சிற்றுரை சிங்கார ஊராக்கி அழகிய பந்தல்களால் ஊரை அழகாக்கி தன் மகளை முருகபெருமானுக்கு தாரை வார்த்து கொடுத்ததாகத்தான் இருக்கிறது. நம்பி ராஜன் கொடுத்த் சீதனத்தில் வருகிறது திருத்தணி.
பின் தனக்கு சொந்தமான குன்றுகளை சீதனமாக அளிக்கிறான். அக்குன்றுதோரும் ஆடிக்களித்து வேடுவ குலத்திற்கு குன்றாத பெரும் கீர்த்தியை தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கீறார் நம்பி ராஜன்.
வள்ளியம்மையுடன் திருத்தணி வந்து விஸ்வகர்மாவால் நிர்மாணிக்கபட்டிருந்த பொன் வண்ணக் கோவிலுள் எழுந்தருளினார்.
முதல் முறை நான் ஓட்டிக் கொண்டு சென்றேன் மற்றொரு முறை நான் மகன், கணவர் மூவரும் சென்று வந்தோம் மகன் ஓட்டிக் கொண்டு வந்தான் அப்போது சென்றதும் நினைவில் வந்தது இதெல்லாம் மகிழ்வான தருணங்கள்
பதிலளிநீக்குகீதா
//முதல் முறை நான் ஓட்டிக் கொண்டு சென்றேன் மற்றொரு முறை நான் மகன், கணவர் மூவரும் சென்று வந்தோம் மகன் ஓட்டிக் கொண்டு வந்தான் அப்போது சென்றதும் நினைவில் வந்தது இதெல்லாம் மகிழ்வான தருணங்கள்//
நீக்குகார் ஓட்டி சென்றீர்களா?
உங்களுக்கு கார் ஓட்ட தெரியும் என்று அறிந்து மகிழ்ச்சி.
மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி.
முத்துசாமி தீட்சிதர் சங்கீத ஞானம் வேண்டி முருகனை பூஜித்த போது முருகபெருமான் அவர் நாவில் அட்சர ஆசி அருளினினார், அவருக்கு பாடும் திறனை வழங்கி உள்ளார். //
பதிலளிநீக்குஓ! புதியதாக அறிகிறேன்.
கீதா
//முத்துசாமி தீட்சிதர் சங்கீத ஞானம் வேண்டி முருகனை பூஜித்த போது முருகபெருமான் அவர் நாவில் அட்சர ஆசி அருளினினார், அவருக்கு பாடும் திறனை வழங்கி உள்ளார். //
நீக்குஓ! புதியதாக அறிகிறேன்.//
நானும் திருத்தணி வரலாறு படித்து தெரிந்து கொண்டதுதான், அதில் வருகிறது
திருத்தணி தல பெருமைகளையும் வாசித்தேன் கோமதிக்கா திருத்தணியின் பிற பெயர்களையும் காரணங்களையும் தெரிந்து கொள்ள முடிந்தது.
பதிலளிநீக்குதிருத்தணி மலை சின்னதாக இருந்தாலும் அவ்வளவு அழகானது அக்கா. ஆனால் மலை ஏறும் போது பல கட்டுமானங்களைப் பார்க்க முடிந்தது நான் சொல்வது 10 வருடங்களுக்கு முன்னான விஷயங்கள் அப்ப இப்ப எப்படி இருக்குமோ?
//திருத்தணி போன போது எங்களிடம் காமிரா இல்லை , காமிரா , அலை பேசி வாங்கிய பின் திருத்தணி போக வில்லை அதனால் என்னிடம் திருத்தணி படங்கள் இல்லை.//
எங்களிடமும் அப்போது சரியான அலைபேசி இல்லை கோமதிக்கா. காமெராவும் கைவசம் எதுவும் இல்லை எனவே எடுக்க முடியவில்லை. படங்களும்.
கீதா
//திருத்தணி தல பெருமைகளையும் வாசித்தேன் கோமதிக்கா திருத்தணியின் பிற பெயர்களையும் காரணங்களையும் தெரிந்து கொள்ள முடிந்தது.//
நீக்குநிறைய இருக்கிறது திருத்தணி பெருமைகள்.
//திருத்தணி மலை சின்னதாக இருந்தாலும் அவ்வளவு அழகானது அக்கா. ஆனால் மலை ஏறும் போது பல கட்டுமானங்களைப் பார்க்க முடிந்தது நான் சொல்வது 10 வருடங்களுக்கு முன்னான விஷயங்கள் அப்ப இப்ப எப்படி இருக்குமோ?//
நீரைய மாற்றங்கள் கீதா.
//எங்களிடமும் அப்போது சரியான அலைபேசி இல்லை கோமதிக்கா. காமெராவும் கைவசம் எதுவும் இல்லை எனவே எடுக்க முடியவில்லை. படங்களும்.//
நாம் கவலை படவே வேண்டாம் இணையத்தில் கொட்டி கிடக்கீரது அழகான படங்கள் அதில் பார்த்து ரசிக்காலம்.
திருப்புகழும், சீர்காழியும் அவரது மகனும் பாடிய பாடல் இப்பதான் கேட்கிறேன்.
பதிலளிநீக்குதிருத்தணி முருகா பாடலும் இப்போதுதான் கேட்கிறேன் அக்கா,
ஜெய்சங்கர் சோ நடித்திருக்கும் படம் என்று தெரிகிறது.
கீதா
//திருப்புகழும், சீர்காழியும் அவரது மகனும் பாடிய பாடல் இப்பதான் கேட்கிறேன்.//
நீக்குநானும் இப்போதுதான் கேட்டேன்.
//திருத்தணி முருகா பாடலும் இப்போதுதான் கேட்கிறேன் அக்கா,
ஜெய்சங்கர் சோ நடித்திருக்கும் படம் என்று தெரிகிறது.//
நான் நிறைய தடவை கேட்டு இருக்கிறேன், படமும் பார்த்து இருக்கிறேன்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி கீதா.
திருத்தணிகை முருகனை வணங்கிக் கொண்டோம்.
பதிலளிநீக்குமுருகனே இந்தமலையின் சிறப்புகளை வள்ளியம்மைக்கு கூறுவது இன்றுதான் உங்கள் பகிர்வில் அறிந்தேன்.
கந்த சஷ்டி நாளில் ஆறுபடை வீடுகளின் தொடர் பதிவுகள் தருகிறீர்கள் நாமும் படித்து மகிழ்கிறோம். திருத்தணிகையும் தரிசிக்க எமக்கு பாக்கியம் கிடைக்கவில்லை.
ஓம் முருகா சரணம்.
வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
நீக்கு//திருத்தணிகை முருகனை வணங்கிக் கொண்டோம்.//
நல்லது மாதேவி
//முருகனே இந்தமலையின் சிறப்புகளை வள்ளியம்மைக்கு கூறுவது இன்றுதான் உங்கள் பகிர்வில் அறிந்தேன்.//
ஆமாம், மனவியிடம் கணவன் தான் விளையாடிய இடங்களை காட்டுவது போல முருகன் வள்ளியிடம் சொல்கிறார்.
//கந்த சஷ்டி நாளில் ஆறுபடை வீடுகளின் தொடர் பதிவுகள் தருகிறீர்கள் நாமும் படித்து மகிழ்கிறோம். திருத்தணிகையும் தரிசிக்க எமக்கு பாக்கியம் கிடைக்கவில்லை.//
இப்போது நேரில் பார்ப்பது போல இணையத்தில் கோயிலை சுற்றி காட்டுகிறார்கள் பார்த்து மகிழலாம். என் கண்வர் இருக்கும் போது சஷ்டிக்கு ஒவ்வொரு முருகன் கோயில் அழைத்து செல்வார்கள் இப்போது என்னால் இயலவில்லை கால்வலி அதிகமாக உள்ளது. தொலைக்காட்சியில் ஜோதி டிவியில் சஷ்டி விழாக்கள் நட்க்கும் அத்தனை கோயிலையும் நேரலையில் அண்டு மகிழ்கிறேன்.
வீட்டிலிருந்தே அனைத்து கோவில் விழாக்களையும் பார்க்க முடிவது மகிழ்ச்சி.
உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் இந்தியா வாருங்கள் அனைத்து முருகன் படை வீடுகளையும் கண்டு மகிழுங்கள்.
//ஓம் முருகா சரணம்.//
ஓம் முருகா சரணம்
தொடர்ந்து படித்து கருத்துக்கள் சொன்னதற்கு மகிழ்ச்சி, நன்றி மாதேவி
திருத்தணியில் ஒரு நாள் தங்கியிருக்கிறேன். என்னுடன் வேலை பார்த்தவரின் மாமனார் அந்த ஊரில் இருந்தார். பஹ்ரைனிலிருந்து வந்து நான் அங்கு சென்று ஒரு நாள் லாட்ஜில் தங்கி, மறுநாள் கோயில் தரிசனம் செய்தது நினைவுக்கு வருகிறது.
பதிலளிநீக்குபடங்களும் எடுத்திருப்பேன் என்று நினைவு. பார்க்கணும்.
காலையில் முருகனின் தரிசனம் மனதில் புத்துணர்ச்சி ஏற்படுத்துகிறது
வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
நீக்கு//திருத்தணியில் ஒரு நாள் தங்கியிருக்கிறேன். என்னுடன் வேலை பார்த்தவரின் மாமனார் அந்த ஊரில் இருந்தார். பஹ்ரைனிலிருந்து வந்து நான் அங்கு சென்று ஒரு நாள் லாட்ஜில் தங்கி, மறுநாள் கோயில் தரிசனம் செய்தது நினைவுக்கு வருகிறது.//
நண்பரின் மாமனாரை பார்த்து வந்தீர்களா?
அப்படியே முருகனையும் தரிசனம் செய்து விட்டீர்கள்.
//படங்களும் எடுத்திருப்பேன் என்று நினைவு. பார்க்கணும்.//
இருக்கும் எடுத்து இருப்பீர்கள்.
//காலையில் முருகனின் தரிசனம் மனதில் புத்துணர்ச்சி ஏற்படுத்துகிறது//
திருத்தணி முருகனை தரிசனம் செய்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி.
முருகனின் தரிசனம் புத்துணர்ச்சி தந்தது என்று அறியும் போது மகிழ்ச்சி.
உங்கள் வரவுக்கும் , கருத்துக்கும் நன்றி.
பதிவு அருமை. திருத்தணி சென்றதில்லை.
பதிலளிநீக்கு/இந்த மலைக்கோயில் படிகள் ஆண்டின் 365 நாட்களை குறிக்கும்படியாக 365 படிகளை கொண்டது. படி பூஜையும் மிகவும் சிறப்பு இங்கு./
பகிர்வுக்கும் தகவல்களுக்கும் நன்றி.