ரோட் ரன்னர் பறவை
ரோட் ரன்னர் பற்றி முன்பு பதிவு போட்டு இருந்தேன். அந்த பதிவுக்கு வந்து பின்னூட்டம் போட்டவர்கள் எல்லாம். ஓடுவதை பார்த்தால் காணொளி எடுத்து போடுங்கள் என்று கேட்டு இருந்தீர்கள். அதனால் இந்த பதிவு.
இன்று வீட்டுக்கு முன் புறம் நடந்து கொண்டு இருந்தது. அதை காணொளி எடுத்தேன், ஓட்டம் போன்ற வேக நடை நடக்கிறது.
பழைய பதிவு ரோட் ரன்னர் பார்த்து இருப்பீர்கள் மீண்டும் பார்க்க வேண்டுமென்றால் பார்க்கலாம். தோட்டத்திற்கு வந்த புதிய பறவை என்று போட்டு இருப்பேன். இந்த பறவையை பற்றிய விவரங்களும் இருக்கும். மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் நடக்க கூடியாது.
சின்ன காணொளிதான்
ஒரு வாரம் முன்பு மதில் மேல் ஓடிய போது மிக சிறிய காணொளி
மதில் மேல் ஓடிய போது எடுத்த படம்
இங்கிருந்து தெருவுக்கு குதித்து ஓடி விட்டது
இப்படித்தான் ஓடுதுமகன் வீட்டுக்கு எதிர்பக்கம் கொஞ்சம் தூரமாக இருப்பதால் இவ்வளவுதான் காமிராவில் எடுக்க முடிகிறது.
மகன் வீட்டுக்கு எதிர்பக்கம் நின்றது. காலை மருமகள் அலுவலகம் செல்லும் போது வழியனுப்ப வெளியே வந்த போது பார்த்தேன். அவசரமாக காமிராவை எடுத்துக் கொண்டு வந்து எடுத்த படங்கள். ஓரளவுதான் பார்க்கிற மாதிரி இருக்கும்.
இன்று எடுத்த காணொளியில் . வீட்டுக்கு வீடு குப்பை கூடை வைத்து இருந்தார்கள் அதன் பின் எல்லாம் மறைந்து கொண்டு வெளி வரும். கால்களை எட்டி போட்டு வேகமாக நடக்கிறது.
ஓடும் போது ஒரு காணொளி எடுத்தேன் அது சரியாக வரவில்லை. இந்த காணொளி சிறிது ஆடுகிறது படம் எடுக்கும் போது காமிராவை அசையாமல் வைத்து கொள்ள வேண்டும். அப்போதுதான் காணொளி நன்றாக வரும். இன்னொரு முறை பார்த்தால் எடுக்கிறேன். போக போக கைவரும் என்று நினைக்கிறேன்.(நினைப்புதான் போக போக கை வருமாம் ! )
தோட்டத்து மதில் சுவரில் வந்து அமர்ந்த போது எடுத்த படம்
வெள்ளி, 25 ஜூன், 2021 ல்
தோட்டத்திற்கு வந்த போது எடுத்த படங்கள் கடைசி இரண்டு படங்களும்.
வேறு பதிவில் பார்ப்போம்.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
----------------------------------------------------------------------------------------------------
இந்த பறவை பற்றி இப்போதுதான் உங்கள் பதிவின் மூலம் கேள்விபடுகின்றேன். வீடியோ பார்த்தேன் அது ஒடுவதை மட்டும் எடிட் செய்து இருக்கலாம்
பதிலளிநீக்குவணகம் மதுரை தமிழன், வாழ்க வளமுடன்
நீக்கு//இந்த பறவை பற்றி இப்போதுதான் உங்கள் பதிவின் மூலம் கேள்விபடுகின்றேன். வீடியோ பார்த்தேன் அது ஒடுவதை மட்டும் எடிட் செய்து இருக்கலாம்//
ஓடுவதை எடிட் செய்து விட்டேன்.
உங்கள் கருத்துக்கு நன்றி மதுரை தமிழன்.
இப்பறவைபற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன் காணொளி கண்டேன் இறைவன் படைப்பில் எத்தனை வகைகள்...
பதிலளிநீக்குவணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்குமகன் வீட்டுத்தோட்டத்திற்கு வந்த போது படம் எடுத்து 2021ல் பதிவு போட்டு இருக்கிறேன்.
நீங்கள் கருத்து சொல்லி இருக்கிறீர்கள் இன்று மீண்டும் பார்த்து வந்து விட்டீர்கள்.
//காணொளி கண்டேன் இறைவன் படைப்பில் எத்தனை வகைகள்...//
ஆமாம், நிறைய வியப்பை தரும் இறைவனின் படைப்பு.
பறக்க தெரியாத பறவை. இறக்கை இருந்தும் பறக்காமல் இருப்பது வியப்பு. கோழி கூட சிறிது தூரம் பறக்கும் , இது ஓட்ட நடைதான் .
உங்கள் கருத்துக்கு நன்றி.
சுட்டிக்கு சென்று வந்தேன்.
பதிலளிநீக்குசுட்டிக்கு சென்று வந்தேன்.//
நீக்குபார்த்தேன், அங்கும் உங்கள் கருத்துக்கு பதில் அளித்து விட்டேன்.
நன்றி.
ஓடும் பறவை..... ஹா ஹா... காணொளி அருமை (கடைசிப் பகுதி ஆடிவிட்டது). எட்டி எட்டி நடைபோடும் பறவையை ஓடும் பறவைனு சொல்லிட்டீங்களே
பதிலளிநீக்குவணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
நீக்கு//ஓடும் பறவை..... ஹா ஹா... காணொளி அருமை (கடைசிப் பகுதி ஆடிவிட்டது). எட்டி எட்டி நடைபோடும் பறவையை ஓடும் பறவைனு சொல்லிட்டீங்களே//
ஓடும் பறவைதான் நெல்லை, அப்படித்தான் இந்த பறவைக்கு பேர் கொடுத்து இருக்கிறார்கள். நான் வைக்கவில்லை .படுவேகமாக ஓடி மின்னலாக மறைந்து விட்டது. நான் காணொளி சரியாக எடுக்க முடியவில்லை.
எட்டி எட்டி நடைபோட்டு ஓடும் பறவைதான்.
எவ்வளவு வித விதமான பறவைகள். ஆச்சர்யம்தான்.
பதிலளிநீக்கு//எவ்வளவு வித விதமான பறவைகள். ஆச்சர்யம்தான்//
நீக்குஆமாம், வியப்பை தரும் பறவைகள் நிறைய இருக்கிறது.
ஒவ்வொன்றாக பதிவில் போடுகிறேன்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
சாலையோடி!! அது விரைவாக குடுகுடுவென்று நடப்பதைப் பார்த்தல் நம் மக்கள் நடைப்போட்டி நடத்தும்போது நடப்பார்கள், அது நினைவுக்கு வருகிறது.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்கு//சாலையோடி!! அது விரைவாக குடுகுடுவென்று நடப்பதைப் பார்த்தல் நம் மக்கள் நடைப்போட்டி நடத்தும்போது நடப்பார்கள், அது நினைவுக்கு வருகிறது.//
சாலையோடி அருமை. நன்றாக தமிழ் படித்தி விட்டீர்கள்.
அது குடு குடு என்றுதான் ஓடுகிறது. அன்று ஓரு நாள் தோட்டத்து மதில் மேல் ஓடியது காணொளி எடுக்க போன போது மதிலை தாண்டி தெருவில் ஓட ஆரம்பித்து விட்டது.
நடைபோட்டி நினைவுக்கு வருகிறதா? ஓட்ட நடை நடக்கிறது இந்த பறவை.
கடைசி இரண்டு படங்களும் தெளிவாக இருக்கின்றன. விடியோவும் மோசமாக எல்லாம் இல்லை. காத்திருந்து அது ஓடுவதைப் பார்த்தேன். கைவரும், கண்டிப்பாக கண்டிப்பாக கைவரும். முயற்சி உடையார் வெற்றி பெறுவார்!
பதிலளிநீக்குகடைசி இரண்டு படங்களும் தெளிவாக இருக்கின்றன.//
நீக்குஇரண்டு படங்கள் பழைய படங்கள், அது நின்று கொண்டு இருந்தது . வெயிலில் வெகு தூரம் நடந்து வந்த களைப்பால் நின்றது வெகு நேரம், அதனால் எடுக்க முடிந்தது.
//விடியோவும் மோசமாக எல்லாம் இல்லை. காத்திருந்து அது ஓடுவதைப் பார்த்தேன். கைவரும், கண்டிப்பாக கண்டிப்பாக கைவரும். முயற்சி உடையார் வெற்றி பெறுவார்! //
வெகு தூரத்தில் இருப்பதைஅதிகமாக ஜூம் செய்து எடுக்கும் போது ஆடுகிறது பக்கத்தில் காணொளி நன்றாக எடுக்கிறேன். வெகு தூரம் என்றால் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. முயற்சி செய்கிறேன். உங்கள் ஊக்கம் தரும் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.
வியப்பு மேலிடுகிறது... அருமை அம்மா...
பதிலளிநீக்குவணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
நீக்கு//வியப்பு மேலிடுகிறது... அருமை அம்மா..//
ஆமாம், முதன் முதலில் பார்த்த போது மிகவும் வியப்பு ஏற்பட்டது எனக்கும்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
Roadrunner பறவையின் வேக நடை கண்டு வியந்தேன். காணொளி ஆடுவது எல்லோருக்கும் நடப்பது தான். அந்த இடங்களை எடிட் செய்து விடலாம். படங்கள் அனைத்தும் அழகு.
பதிலளிநீக்குவணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
நீக்கு//Roadrunner பறவையின் வேக நடை கண்டு வியந்தேன்.//
அந்த பறவை பறக்காது என்று கோழியை விட குறைவான உயரத்தில் பறக்கும் போல ! மதில் சுவரில் வந்து அமர்கிறதே!
//காணொளி ஆடுவது எல்லோருக்கும் நடப்பது தான். அந்த இடங்களை எடிட் செய்து விடலாம். படங்கள் அனைத்தும் அழகு.//
காணொளி அலைபேசியில் எடுத்தால் ஆடுவது இல்லை. காமிராவில் எடுக்கும் போது மட்டும் ஆடுகிறது. எடிட் செய்து தான் போட்டு இருக்கிறேன். பறவை தெரிவதே மகிழ்ச்சி என்று போட்டு விட்டேன்.
அனைத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி வெங்கட்.
கோமதிக்கா முன்னர் பதிவை பார்த்திருக்கிறேன் இல்லையா? ஓடும் பறவை....நினைவு இருக்கிறது.
பதிலளிநீக்குஅக்கா வீடியோ ஒன்றும் மோசமாக இல்லை. தூரத்தில் உங்கள் கேமராவில் நன்றாகத்தான் வந்திருக்கிறது. என் கேமரா இவ்வளவு எல்லாம் எடுக்காதுக்கா..
அழகா இருக்கு ஓடுவதைப் பார்க்கறப்ப எதுக்கோ அவசர அவசரமாக நடப்பதைப் போன்று இருக்கு நம்மூரில் கொஞ்சம் வயதானவர்கள் அவசர அவசரமா நடப்பாங்களே அது போல!!!!!!!
ரசித்துப் பார்த்தேன்.
கீதா
வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்குகோமதிக்கா முன்னர் பதிவை பார்த்திருக்கிறேன் இல்லையா? ஓடும் பறவை....நினைவு இருக்கிறது.//
ஆமாம் பார்த்து கருத்து சொல்லி இருக்கிறீர்கள்.
//அக்கா வீடியோ ஒன்றும் மோசமாக இல்லை. தூரத்தில் உங்கள் கேமராவில் நன்றாகத்தான் வந்திருக்கிறது. //
நன்றி.
//அழகா இருக்கு ஓடுவதைப் பார்க்கறப்ப எதுக்கோ அவசர அவசரமாக நடப்பதைப் போன்று இருக்கு நம்மூரில் கொஞ்சம் வயதானவர்கள் அவசர அவசரமா நடப்பாங்களே அது போல!!!!!!!//
நியூஸ் காட்டுவார்கள் சினிமா தியேட்டரில் பழைய காலத்து செய்திகள் காட்டும் போது மக்கள் வேக வேகமாய் நடப்பது போல இருக்கும்.
ரசித்து பார்த்தற்கு நன்றி.
நம்மை விட வேகமாக ஓடும்/நடக்கும் போல!!!!! வாலை ஆட்டிக் கொண்டே இருக்கு வாலாட்டிப் பறவை போன்றி ஆட்டுகிறது. வாலாட்டி ஆட்டிக் கொண்டே தரையைத் தட்டிக் கொண்டே இருக்கும்...
பதிலளிநீக்குஇதுவும் அவ்வப்போது வாலை மேலும் கீழும் அப்பப்ப ஆட்டுகிறட்ஜு.
கீதா
//நம்மை விட வேகமாக ஓடும்/நடக்கும் போல!!!!! வாலை ஆட்டிக் கொண்டே இருக்கு //
நீக்குவாயும் ஆடுகிறது, வாலும் ஆடுகிறது.
//வாலாட்டிப் பறவை போன்றி ஆட்டுகிறது. வாலாட்டி ஆட்டிக் கொண்டே தரையைத் தட்டிக் கொண்டே இருக்கும்...//
வாலாட்டிப் பறவை காணொளி மாயவரத்தில் இருக்கும் போது எடுத்து இருக்கிறேன். மாமாவின் இருசக்கர வாகனகண்ணாடியில் அமர்ந்து கொண்டு வாலை ஆட்டி பாடியதை.
பொருத்தமான பெயர்!!!! ரோட் ரன்னர்!
பதிலளிநீக்குகீதா
அரிசோனா தேசிய பறவைகளில் இதுவும் உண்டு.பொருத்தமான பெயர் வைத்து இருக்கிறார்கள்.
நீக்குஉங்கள் அனைத்து கருத்துக்களுக்கும் நன்றி.
பழைய பதிவில் நானும் வந்திருக்கின்றேன்.. ஆனாலும் நினைவில் இல்லை..
பதிலளிநீக்குவணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
நீக்கு//பழைய பதிவில் நானும் வந்திருக்கின்றேன்.. ஆனாலும் நினைவில் இல்லை..//
அனைத்தையும் நினைவில் வைத்து கொள்ள முடியுமா?
காணொளி அழகு.. அருமை..
பதிலளிநீக்குஇறைவனின் படைப்பில் தான் எத்தனை எத்தனை உயிர்கள்!..
செல்லா நின்ற இத் தாவர ஜங்கமத்துள்...
சிவ சிவ!..
//காணொளி அழகு.. அருமை..//
நீக்குநன்றி.
//இறைவனின் படைப்பில் தான் எத்தனை எத்தனை உயிர்கள்!..//
ஆமாம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு காரணத்திற்கு படைக்கப்பட்டு இருக்கிறது.
//செல்லா நின்ற இத் தாவர ஜங்கமத்துள்...//
சங்மத்துள் நாமும் அடக்கம். மனித பிறவியை அவனின் துணை கொண்டு நல்லபடியாக கடக்க வேண்டும்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. ரோடு ரன்னர் பறவையின் படங்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது.
முதல் படம் தொங்கும் தோரணங்களின் நடுவில் அந்தப் பறவை ஒரு சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பது போன்று கம்பீரமாக அமர்ந்திருக்கிறது. இதன் பெயரே அதற்கேற்றார் போன்று அது ரோட்டிலியே வேகமாக நடை பயிற்சி செய்வதில்தான் அப்படி அமைந்தது போலும்..! அதன் வாலும் நீளமாக அழகாக இருக்கிறது. இறைவன் படைப்பில்தான் எத்தனை எத்தனை விசித்திரங்கள்.
அதன் அருகே உள்ள அது என்ன செடி/ கொடி? இடைவெளி விட்ட சின்ன சின்னதான இலைகளுடன் பார்க்கவே அழகாக உள்ளது.
அது ஓடும் காணொளியும் நன்றாக இருக்கிறது. இந்தப் பறவையை பற்றி தாங்கள் இதற்கு முன் போட்ட பதிவு நினைவில் உள்ளது. அங்கும் சென்று படித்து வந்தேன். படங்களும், காணொளியும் அழகாக எடுத்துள்ளீர்கள். பார்த்து ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்கு//பதிவு அருமை. ரோடு ரன்னர் பறவையின் படங்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது.//
நன்றி.
//முதல் படம் தொங்கும் தோரணங்களின் நடுவில் அந்தப் பறவை ஒரு சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பது போன்று கம்பீரமாக அமர்ந்திருக்கிறது//
ஆமாம், அந்த செடி மதிலுக்கு அந்த பக்கம் வீட்டு செடி. நீண்ட குச்சியாக முட்களுடன் காண்ப்படும் வசந்தகாலத்தில் மட்டும் சிவப்பு பூ பூக்கும். பறவைகள் எல்லாம் அந்த செடியில் அமர்ந்து போகும் .
பேர் தெரியாது எனக்கு.
//இதன் பெயரே அதற்கேற்றார் போன்று அது ரோட்டிலியே வேகமாக நடை பயிற்சி செய்வதில்தான் அப்படி அமைந்தது போலும்..! அதன் வாலும் நீளமாக அழகாக இருக்கிறது. இறைவன் படைப்பில்தான் எத்தனை எத்தனை விசித்திரங்கள்.//
ஆமாம், வேகமாக நடைபோடும் பறவை. இறைவன் படைப்பில் விசித்திரங்கள் நிறைந்து இருக்கிறது.
//அது ஓடும் காணொளியும் நன்றாக இருக்கிறது. இந்தப் பறவையை பற்றி தாங்கள் இதற்கு முன் போட்ட பதிவு நினைவில் உள்ளது. அங்கும் சென்று படித்து வந்தேன். படங்களும், காணொளியும் அழகாக எடுத்துள்ளீர்கள். பார்த்து ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//
நன்றி. இருந்தாலும் இன்னும் நன்றாக காணொளி எடுத்து இருக்கலாம் நான். பழைய பதிவையும் படித்து வந்தமைக்கு நன்றி.
அனைத்தையும் ரசித்து படித்து கருத்து சொன்னதற்கு நன்றி .
பழைய பதிவில் பார்த்தேனானு நினைவில் இல்லை. ஆனால் இந்தப் பறவைகளைப் பார்த்திருக்கேன். விமானம் போலச் சற்றுத் தூரம் ஓடிப் போய்ப் பின்னர் பறக்குமோனு நினைச்சுப்பேன். அப்படி இல்லைனு உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன். அதன் பெயரும் இன்றே அறிந்தேன். மிக அருமையாகப் படங்கள் எடுத்து அதைவிடப் பொறுமையாகப் பதிவிலும் போட்டிருப்பதற்குப் பாராட்டுகள்.
பதிலளிநீக்குவணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
நீக்கு//பழைய பதிவில் பார்த்தேனானு நினைவில் இல்லை. ஆனால் இந்தப் பறவைகளைப் பார்த்திருக்கேன். //
அமெரிக்காவில் பார்த்து இருப்பீர்கள்.
//விமானம் போலச் சற்றுத் தூரம் ஓடிப் போய்ப் பின்னர் பறக்குமோனு நினைச்சுப்பேன். அப்படி இல்லைனு உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.//
நானும் இந்த பறவையை பற்றி பதிவு போட படித்து தெரிந்து கொண்டது, பார்த்தது தெரிந்து கொண்டதை வைத்து சொல்லி இருக்கிறேன்.
//அதன் பெயரும் இன்றே அறிந்தேன். மிக அருமையாகப் படங்கள் எடுத்து அதைவிடப் பொறுமையாகப் பதிவிலும் போட்டிருப்பதற்குப் பாராட்டுகள்//
உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி கீதா
அருமையான பகிர்வு. முதல் காணொளியில் இருப்பதை விட இரண்டாவதில் சுவற்றின் மேல் வேக வேகமாக நடை போடுகிறது:).
பதிலளிநீக்குவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
நீக்கு//அருமையான பகிர்வு. முதல் காணொளியில் இருப்பதை விட இரண்டாவதில் சுவற்றின் மேல் வேக வேகமாக நடை போடுகிறது:).//
ஆமாம், இரண்டாவது கொஞ்சமாக இருக்கு என்று போடவில்லை, பின்பு சேர்த்தேன். நீங்கள் மட்டும் தான் இரண்டாவது காணொளியை பார்த்து இருக்கிறீர்கள்.
உங்கள் கருத்துக்கு நன்றி.