வெள்ளி, 25 ஜூன், 2021

தோட்டத்திற்கு வந்த புதிய பறவைமுதலில் முகம் காட்டாமல் அமர்ந்து இருந்தது வெகு நேரம்.
சிறிது நேரம் கழித்து பக்கவாட்டில் திரும்பி முகம் காட்டியது

மகன் வீட்டுத் தோட்டத்திற்கு வந்த பறவை . இவ்வளவு நாள் பார்க்காத பறவையாக இருக்கிறதே என்று  நினைத்தேன் . பேரனை கூப்பிட்டுக் கேட்டேன்,  "கவின் வா வா வந்து பார் புது பறவை வந்து இருக்கு  இதன் பேர் தெரியுமா?" என்று கேட்டேன்

அவன் "ஆச்சி இது ரோட் ரன்னர் பறவை, அது பக்கத்தில் போகாதீர்கள்" அது கோபமான பறவை என்றான்.

தூரத்திலிருந்து படங்களை எடுத்தேன். 


கரும்பச்சை,  இளம் பச்சை, ஆரஞ்சு வண்ணம் எல்லாம் கலந்தது அதன்  மேனி வண்ணம்.
வெயிலில் ஓடி வந்த களைப்பு போல  மரத்தின் நிழல்  விழும் மதில் மேல்   அமர்ந்து கொண்டது. 
கொஞ்ச நேரம் கழித்து தலை தூக்கி அந்த பக்கம் இந்த பக்கம் ஒரு பார்வை


சிறிது நேரம் அமைதியாக யோசனை
மீண்டும் வாயை திறந்து மூச்சு இழுப்பு

மெதுவாக மேலே எழுந்து கொண்டது

நின்று கொண்டு பார்வை

இதன் உணவு பாம்பு, பல்லி,  மற்றும் மண்ணுக்குள் இருக்கும் புழு பூச்சிகளாம், எல்லாவற்றையும் பிடித்து பாறையில் அடித்து கொன்று அதன் பின்தான் உணவாக உட்கொள்ளுமாம்.


நடக்க தயார் நிலையில் .  அதன் வால் நல்ல நீட்டமாக இருந்தது.

 
 இந்த "ரோட் ரன்னர் பறவை"  வெகு தூரம் பறக்காதாம்.வெகு வேகமாக மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடுமாம். சிறிது பறக்கும் போல!  அதுதான் மதில் மேல் பறந்து அமர்ந்து இருந்தது. பறவை ஓடுவதைப்பார்க்க காத்து இருந்தேன்.  "பேரனிடம் பறக்க போகிறது  பார் தயார் ஆகி விட்டது" என்றேன். சொல்லி விட்டு திரும்பினால் கண் சிமிட்டும் வேளையில் காணாமல் போய் விட்டது மதிலுக்கு அந்த பக்கம் இறங்கி விட்டது . வாசல் கதவை திறந்து கொண்டு வேகமாய் போனோம், அது ஓடுவதைப்பார்க்க அது அடுத்தவீட்டில் அமர்ந்து விட்டது போல வரவே இல்லை வெளியில். அது ஓடுவதைப் பார்க்க முடியவில்லை.

ஒரு காலத்தில் பறந்து கொண்டு இருந்த பறவைதான் இது என்கிறார்கள். அவசியம் ஏற்பட்டால் பறக்குமாம்.

 இறக்கை இருந்தும் பறக்க முடியாமல் இருப்பது  புதிராக இருக்கிறது என்கிறார்கள். நிலத்தில் வசிக்க ஆரம்பித்தவுடன்  இவை வசிக்கும் இடத்தில் இதற்கு எதிரிகள் இல்லாத காரணத்தால் காலப் போக்கில் இறக்கையை பயன்படுத்தி  பறப்பதை விட்டு விட்டது போலும் என்று சொல்கிறார்கள் பறவை ஆராய்ச்சி செய்பவர்கள்.

இந்த பறவையைப் பற்றி  கூகுளில் படித்த செய்திகளை பகிர்ந்து இருக்கிறேன்.

இந்த பறவையை காணொளி எடுத்தேன். தொண்டை குளி அசைவது தெரிகிறது, காற்று மிகவும் வேகமாய் அடித்துக் கொண்டு இருந்தது, காற்றில் செடி அசைவது போல என் காமிராவும் கொஞ்சம் ஆட்டம்.  சின்ன காணொளிதான் பாருங்கள் பார்த்து விட்டு சொல்லுங்கள் இந்த பறவை எப்படி இருக்கிறது என்று.

வாழ்க வையகம் ! வாழ்க வையகம் !  வாழ்க வளமுடன்!
----------------------------------------------------------------------------------------------------

 

41 கருத்துகள்:

 1. கவினுக்கு விஷயங்கள் தெரிவது சிறப்பு.  மேலும் உங்கள் சுவாரஸ்யம் கவினிடமும் இருக்கிறது என்று நினைக்கிறேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
   கவினுக்கு சில பறவைகளின் பேர் தெரியும்.
   அவனும் பறவைகளை ரசிப்பான்.

   நீக்கு
 2. பறக்காத பறவை!  ஏன் பறத்தலைக் கைவிட்டதோ?  அடுத்தடுத்த அதன் தலைமுறைகளில் அதன் இறக்கை காணாமல் போகலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக வேகமாக ஓடுகிறதே! அது போதும் என்று நினைத்து இருக்கும்.

   //அடுத்தடுத்த அதன் தலைமுறைகளில் அதன் இறக்கை காணாமல் போகலாம்.//
   ஆமாம், இவைகள் பறக்காத போது இதன் அடுத்த தலைமுறைகள் எப்படி பறக்கும் இறக்கை இருந்தாலும் சிறிது தூரம் பறக்க மட்டுமே பயன்படுத்தும்.

   நீக்கு
 3. காணொளி கண்டதும் அது நடப்பதோ ஓடுவதோ காணொளி போல என்று நினைத்தேன்.  மிகவும் பதட்டமாக இருந்தது போல..  நீங்கள் பார்ப்பது தெரிந்து ஒளிந்துகொண்டது போலும்.  நீங்கள் தேடுவதைப் பார்த்துக்கொண்டிருந்திருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காத்து இருந்தும் அது ஓடுவதையும், நடப்பதையும் எடுக்க முடியாமல் போய் விட்டது என்று எழுதி இருக்கிறேன் பாருங்கள் ஸ்ரீராம்.

   வாயை திறந்து சத்தம் கொடுத்தது அதை பதிவு செய்யலாம் என்று காணொளி எடுத்தேன் , ஆனால் அது எடுக்கும் போது சத்தம் கொடுக்கவில்லை.

   மதில் சுவர் உயரம் என்னைப்பார்க்க முடியாது. இன்னொரு நாள் வந்தால் எடுத்து போடுகிறேன்.
   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
  2. அடடே... இந்தப் பதிவில் நான் தான் முதல் கமெண்ட்!

   நீக்கு
 4. இதுவரை பார்த்திராத பறவை.

  படங்களும் அழகு. காணொளியையும் பார்த்தேன்.

  கோபமான பறவையா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
   கவின் வைத்து இருக்கும் பறவைகள் படம் புத்தகத்தில் பறவை படம்இருக்கு, பார்த்து இருக்கிறேன். தோட்டத்திற்கு இப்போதுதான் வந்தது,

   //கோபமான பறவையா?//
   கவின் அப்படித்தான் சொன்னான்.

   படங்களை ரசித்து காணொளியும் பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.

   நீக்கு
 5. வணக்கம் சகோதரி

  பதிவு அருமை. பறக்காத புதிய பறவையாகிய ரோட் ரன்னர் பற்றிய விபரங்களை தொகுத்து தந்து படங்களுடன் பகிர்ந்திருப்பது நன்றாக உள்ளது. அந்தப் பறவையை பற்றி தங்கள் பேரன் கவினுக்கு தெரிந்துள்ளது வியப்பை அளிக்கிறது. அங்கேயே இருப்பதால் அவரும் உங்களைப் போலவே பறவைகளைப் பற்றி தெரிந்து கொண்டிருப்பார் போலும். அதன் பெயர் அதன் செய்கைக்கு பொருத்தமாக அமைந்திருக்கிறது. இதை முன்பு குழந்தைகளுடன் கார்ட்டூனில் படமாக பார்த்தாக எனக்கு நினைவுக்கு வந்தது.

  படங்கள், காணொளி நன்றாக இருந்தது. காணொளியில் அதன் சுவாசம் வேகமாக இருப்பது தெரிகிறது. பரபரப்பான பறவை போலும்.... இப்படியும் அப்படியுமாக தலை திருப்பி உங்களுக்கு போஸ் தந்திருக்கிறது. அதன் அலகு கூர்மையாக உள்ளது. கவின் எச்சரித்தது சரிதான்... நம் மனித இனத்திலும் மூக்கு கூர்மையாக இருந்தால் அவர்களுக்கு கோபம் அதிகமாக வரும் என்பார்கள்..:) பறவை பற்றிய விபரங்களுடன் நல்ல பகிர்வு. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
   தினமலர் குட்டீஸ் கார்னரில் வந்து இருக்கிறது இந்த பறவை.
   கவின் நிறைய பறவைகளைப் பற்றி படிக்கிறான். அவனுக்கு தெரிந்தவற்றை சொல்வான். ஐபேடில் பார்க்கிறான் அதன் விவரங்கள் சொல்வான்.
   நம்மைவிட இப்போது உள்ள குழந்தைகளுக்கு நிறைய தெரிகிறது, தெரிந்து கொள்ள வசதி வாய்ப்பும் இருக்கிறது.

   //படங்கள், காணொளி நன்றாக இருந்தது. காணொளியில் அதன் சுவாசம் வேகமாக இருப்பது தெரிகிறது//

   காணொளி பார்த்தது அறிந்து மகிழ்ச்சி. சுவாசம் வேகமாக இருக்கிறது.

   //அதன் அலகு கூர்மையாக உள்ளது. கவின் எச்சரித்தது சரிதான்... நம் மனித இனத்திலும் மூக்கு கூர்மையாக இருந்தால் அவர்களுக்கு கோபம் அதிகமாக வரும் என்பார்கள்..//

   ஓ ! அப்படியா! நானும் கேள்வி பட்டு இருக்கிறேன். வந்த வேகத்தில் திரும்பியும் போய்விடும் அவர்களுக்கு என்பார்கள்.

   நானும் பேரனுடன் டிஸ்னி அனிமேஷன் படங்கள் பார்க்கிறேன்.

   பறவைகள், விலங்குகள் வாழ்க்கை பார்க்க பார்க்க வியப்பாக இருக்கிறது.

   உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி.   நீக்கு
 6. நியூசிலாந்தில் கிவி? பறவையும் பறக்காது, மனிதர்களைத் தாக்கும் எனப் படித்துள்ளேன், நிறைய காணொளிகள் பார்த்துள்ளேன்.

  ஆனால் இந்தப் பறவை அளவில் சிறியதாக இருப்பதாகத் தோன்றுகிறது. இல்லை இது குழந்தையோ?

  அடுத்தமுறை காணொளி போடுங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //நியூசிலாந்தில் கிவி? பறவையும் பறக்காது, மனிதர்களைத் தாக்கும் எனப் படித்துள்ளேன், நிறைய காணொளிகள் பார்த்துள்ளேன்.//

   ஆமாம், நெல்லைத் தமிழன்.நானும் ரோட் ரன்னரைப்பற்றி தேடி படித்த போது தெரிந்து கொண்டேன்.

   நியூசிலாந்திலுள்ள கிவி,


   ஆஸ்திரேலியாவிலுள்ள ஈமு,
   அண்டார்டிக் பகுதியில் வசிக்கும் பெங்குவின்,

   தென் அமெரிக்கா கண்டத்தில் வாழும் டினாமோஸ்

   இவை எல்லாம் பறக்காது என்று இன்று படித்தேன்.


   //ஆனால் இந்தப் பறவை அளவில் சிறியதாக இருப்பதாகத் தோன்றுகிறது. இல்லை இது குழந்தையோ?//

   இல்லை படங்கள் பார்த்தேன் இதே அளவுதான் இருக்கிறது. வளர்ந்த பறவைதான்.

   அடுத்த முறை வந்தால் இன்னும் கவனமாக எடுக்க வேண்டும். பார்த்துக் கொண்டு தான் இருந்தேன். பேரனிடம் பேச திரும்பிய போது சத்தம் கேட்டு பக்கத்துவீட்டுக்கு பறந்து விட்டு இருக்கிறது.

   மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.

   நீக்கு
 7. புதிய பறவையை காணவைத்தமைக்கு நன்றி. படங்கள் அருமை.

  கவின் சராசரி குழந்தைகளைப்போல் தெரியாது என்று சொல்லவில்லை.

  கவினுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

   //படங்கள் அருமை//

   நன்றி.


   //கவினுக்கு வாழ்த்துகள்.//

   கவினுக்கு வாழ்த்து சொன்னதற்கு நன்றி சகோ.

   உங்கள் கருத்துக்கு நன்றி.   நீக்கு
 8. புதியதோர் பறவை இனம் காணத் தந்தமைக்கு நன்றி கோமதிம்மா. படங்கள் அனைத்தும் அழகு.

  காணொளியும் கண்டு ரசித்தேன்.

  இறைவனின் படைப்பில் தான் எத்தனை எத்தனை உயிரினங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்
   //இறைவனின் படைப்பில் தான் எத்தனை எத்தனை உயிரினங்கள்.//

   ஆமாம், வெங்கட் இறைவனின் படைப்பில் எத்தனையோ உயிரினங்கள் ஒவ்வொன்றுக்கும் தனி குணங்கள், பழக்க வழக்கங்கள் வியக்க வைக்கும் அற்புதபடைப்புகள்.

   படங்களை, காணொளியை கண்டு ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

   நீக்கு
 9. கோமதிக்கா உங்கள் கேமராவின் கண்கள் ரொம்ப ஷார்ப் போல!!! ஹாஹாஹா நல்லா படம் எடுக்குது உங்கள் திறமையும் சூப்பர். படங்கள் கொள்ளை கொள்ளுகிறது.

  ரோட் ரன்னர் பற்றி வாசித்திருக்கிறேன் மகனுக்கு பறவைகள் விலங்குகள் என்சைக்ளோபீடியா வாங்கிய போது அதில். 25 புத்தகங்கள். ஆனால் எல்லாம் யாருக்கோ போய்விட்டது திரும்பக் கிடைக்கவில்லை!!!

  காணொளியும் நன்றாகத்தான் இருக்கிறது தொண்டை அசைவது தெரிகிறது. தண்ணீர் வேண்டுமோ? அல்லது சாப்பிட்ட சாப்பாடு மேலே கொண்டு வந்து?

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்

   //கோமதிக்கா உங்கள் கேமராவின் கண்கள் ரொம்ப ஷார்ப் போல!!! ஹாஹாஹா நல்லா படம் எடுக்குது உங்கள் திறமையும் சூப்பர். படங்கள் கொள்ளை கொள்ளுகிறது.//

   காமிரா வாங்கி தந்த மகனுக்கு நன்றி. படங்களை ரசித்து சொல்லும் கீதாவுக்கு நன்றி.

   //ரோட் ரன்னர் பற்றி வாசித்திருக்கிறேன் மகனுக்கு பறவைகள் விலங்குகள் என்சைக்ளோபீடியா வாங்கிய போது அதில். 25 புத்தகங்கள். ஆனால் எல்லாம் யாருக்கோ போய்விட்டது திரும்பக் கிடைக்கவில்லை!!!//

   பேரனும் வைத்து இருக்கிறான். பறவைகளை நிறைய வரைந்து வைத்து இருக்கிறான் அதன் பெயர்களையும் எழுதி வைத்து இருக்கிறான். ஒரு நாள் அதையும் பதிவு போடுகிறேன்.

   நீங்களே என்சைக்ளோபீடியா நிறைய விஷ்யங்கள் தெரியுமே! குழந்தைகளுக்கு சொல்வீர்கள்.

   //காணொளியும் நன்றாகத்தான் இருக்கிறது தொண்டை அசைவது தெரிகிறது. தண்ணீர் வேண்டுமோ? அல்லது சாப்பிட்ட சாப்பாடு மேலே கொண்டு வந்து?//

   ஓடி வந்த களைப்பு என்று நினைக்கிறேன்.
   தண்ணீர், உணவு எல்லாம் தோட்டத்தில் இருந்தது அது எடுக்கவில்லை.


   நீக்கு
 10. புதியதோர் பறவை. பெயரும் கேட்டதில்லை. படம் எடுக்கத் தோதாக அமர்ந்து விட்டது. இல்லையேல் கோபமான பறவை என்பதால் தாக்கி இருக்குமோ என்னமோ! அது நடப்பதையும் பார்க்க முடிந்திருந்தால் நன்றாக இருக்கும். பொறுமையாகப் படம் பிடித்திருக்கிறீர்கள். கவினுக்கும் இவற்றில் ஆர்வம் இருப்பது மகிழ்ச்சி தான். மற்றபடி ஆச்சரியம் இல்லை. ஏனெனில் குடும்பத்தினரின் ஆர்வம் அவனுடைய மரபணுவிலும் வருமே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்

   //படம் எடுக்கத் தோதாக அமர்ந்து விட்டது. //
   ஆமாம், இல்லையென்றால் படம் எடுத்து இருக்க முடியாது.

   மாலை நேரம் வந்து அமர்ந்து இருந்தது, அதனால் வேலை ஒன்றும் இல்லை அதை கவனித்துக் கொண்டு இருந்தோம்.

   //கவினுக்கும் இவற்றில் ஆர்வம் இருப்பது மகிழ்ச்சி தான். மற்றபடி ஆச்சரியம் இல்லை. ஏனெனில் குடும்பத்தினரின் ஆர்வம் அவனுடைய மரபணுவிலும் வருமே!//

   ஆமாம், நீங்கள் சொல்வது போல் இருக்கலாம், கவினுக்கும் ஆர்வம் உண்டு.

   உங்கள் கருத்துக்கு நன்றி.   நீக்கு
 11. அக்கா கவின் சமத்து. ஆச்சிக்குத் தப்பாமல் பேரன்!!!! நல்ல விவரங்கள் எல்லாம் தெரிந்திருக்கிறது. பெரியவர்கள் எப்படியோ அப்படியே குழந்தைகளும் என்பதற்கு நல்ல உதாரணம்.

  படங்கள் எல்லாம் ரொம்ப ரசித்தேன் கோமதிக்கா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //அக்கா கவின் சமத்து. ஆச்சிக்குத் தப்பாமல் பேரன்!!!! நல்ல விவரங்கள் எல்லாம் தெரிந்திருக்கிறது.//

   நான் அவனிடம் நிறைய கற்றுக் கொள்கிறேன் கீதா.

   படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி கீதா.

   நீக்கு
 12. படங்கள் அழகு
  பறக்காத பறவை என்பது அறிந்து வியந்தேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
   ஆமாம், அவசியம் ஏற்பட்டால் மட்டும் பறக்கும் .
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 13. காணொளி அருமை... புதிய பறவை பற்றிய விளக்கங்கள் அருமை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
   காணொளி பார்த்தது அறிந்து மகிழ்ச்சி.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 14. வினோதமான பறவை... பற்பல கோணங்களில் அறிமுகப்படுத்தி இருக்கின்றீர்கள்.. புதிய தகவல் தெரிந்து கொண்டேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
   ஆமாம், வினோதமான பறவைதான்.

   நானும் இங்கு வந்து புது பறவைகள் பார்த்து கொண்டு இருக்கிறேன்.

   நீக்கு
 15. அந்தப் பறவையைப் பற்றி எச்சரித்ததன் மூலமாக - பேரன் கவினும் பறவைகளை அவதானிக்கின்றான் என்பது புரிகின்றது...
  நல்வாழ்த்துகளுடன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //அந்தப் பறவையைப் பற்றி எச்சரித்ததன் மூலமாக - பேரன் கவினும் பறவைகளை அவதானிக்கின்றான் என்பது புரிகின்றது...//

   ஆமாம், அவனுக்கு அந்த பறவையைபற்றி தெரிந்ததால் எச்சரிக்கை செய்தான்.
   உங்கள் கருத்துக்கும், நல்வாழ்த்துக்களுக்கும் நன்றி.

   நீக்கு
 16. அன்பின் கோமதிமா,

  வாழ்க வளமுடன். எப்பொழுதும் போல் தாமதமாக
  வருகிறேன். ரோட் ரன்னர் பழைய காமிக் களில்
  வரும். ஹார்வி காமிக்ஸ்.
  இப்பொழுதுதான் உங்கள் பதிவில் நேராகப்
  பார்க்கிறேன். அந்தத் தாவரங்களுடன் எப்படி ஒன்றி
  இருக்கிறது. மிக அருமை.

  பல பறவைகளின் கலப்பு போலத் தோன்றுகிறது.
  அதன் மூக்கு எத்தனை கூர்மையாக
  வளைந்து இருக்கிறது!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
   நேற்றுதானே போட்டேன் அக்கா தாமதம் இல்லை.
   ரோட்ரன்னர் கேள்வி பட்டு இருக்கிறோம், நேரில் இப்போதுதான் பார்த்தேன்.
   //மூக்கு எத்தனை கூர்மையாக
   வளைந்து இருக்கிறது!!!//
   ஆமாம், மூக்கு கூர்மையாக இருக்கிறது.

   நீக்கு
 17. அன்பின் கவினுக்குத் தான் எத்தனை செய்திகள்
  தெரிகிறது.
  நல்ல அறிவுள்ள பிள்ளை. இப்பொழுது விடுமுறை ஆரம்பித்திருக்கும்.

  அவனுடன் பேசுவதில் நிறைய விஷயங்கள் தெரிய வரும்.
  பதிவுக்கு மிக நன்றி மா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் அக்கா, நிறைய படிக்கிறான்.
   விடுமுறை விட்டு விட்டார்கள்.
   அவனுடன் பேசுவதில் நிறைய விஷயங்கள் சொல்வான் தான்.
   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி அக்கா.

   நீக்கு
 18. நான் பார்த்திராத பறவை. படங்களும் பகிர்வும் மிக அருமை. தொண்டைக்குழி அசையும் காணொளி நன்று.

  அது ஓடுவதைப் பார்க்க முடியாமல் போனது எங்களுக்கும் வருத்தத்தை அளிக்கிறது. மீண்டும் வராமலா போகும்:)?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
   படங்களும், காணொளியும் உங்களுக்கு பிடித்து இருப்பது மகிழ்ச்சி.

   //அது ஓடுவதைப் பார்க்க முடியாமல் போனது எங்களுக்கும் வருத்தத்தை அளிக்கிறது. மீண்டும் வராமலா போகும்:)?//
   ஓடுவதை பார்க்க முடியவில்லை என்று வருத்தம். நான் இங்கு வந்து 6 மாதம் ஆகப்போகிறது இப்போதுதான் பார்க்கிறேன். பார்ப்போம் மீண்டும் வந்தால் ஓடும் படம் கிடைக்கிறதா பார்ப்போம்.

   உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 19. அழகியபறவை படங்களும் தகவல்களும் நன்று.

  பதிலளிநீக்கு
 20. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 21. பதில்கள்
  1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
   பதிவை மீண்டும் படித்து காணொளி கண்டது மகிழ்ச்சி.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு