ஞாயிறு, 30 ஏப்ரல், 2023

Stone Mountain State Park, Georgia






ஜார்ஜியாவில் உள்ள இந்த பூங்காவிற்கு வியாழக்  கிழமை மகள் அழைத்து சென்றாள்,  மிக அழகான இடம்.


அட்லாண்டாவிற்கு வெளியே 3,200 ஏக்கர்  அளவுள்ள இயற்கை அழகு நிரம்பிய பூங்கா . அங்கு நாள் முழுவதும் குடும்பத்துடன் சென்று இயற்கையை ரசிக்கவும்,  பல இடங்கள்    குழந்தைகள் விளையாடவும்  வசதியாகவும் அமைந்து இருக்கிறது. 

நாங்கள் மலைக்கு மட்டும் போய் வந்தோம். மற்ற இடங்களை பார்க்க வேண்டும் என்றால் காலையில் வர வேண்டும். நாங்கள் மதியம் மூன்று மணிக்கு வந்து மலைக்கு சென்று மலை அழகை ரசித்துவிட்டு   வந்து  விட்டோம். 5 மணி வரைதான் அனுமதி.

அந்த மலை நம் ஊர் பழனி மலை போல இருக்கிறது. இந்த   
பட உதவி- கூகுள் நன்றி.

மலையை சுற்றி அழகிய ஏரி இருக்கிறது,  பசுமையான மரங்கள் வளர்ந்து  ஓங்கி உயர்ந்து இருப்பது பார்க்க அழகு.
கோல்ஃப் விளையாட மைதானங்கள் இருக்கிறது.

டிக்கெட் வாங்கும் இடத்தில் போட்டு இருந்தது

ஸ்டோன் மவுண்டனின் உச்சிக்கு போக   "ஸ்கைரைடு" என்ற மின்  தூக்கியில்  போனோம். போக வர 8 நிமிடம் ஆகிறது. ஒரு நபருக்கு 12 டாலர் என்று நினைக்கிறேன், குழந்தைகளுக்கு கட்டணம் மாறுபடும். ,  வருடாந்திர வாகனம்  அனுமதி 40 டாலர், தினசரி என்றால் 20 டாலர். அதிகமாக காற்று வீசும் காலத்தில்  இந்த ஸ்கை ரைடு கிடையாது. பருவகாலங்கள் மாறும் போது பயணத்திட்டமும் மாறும். போகுமா என்பதை விசாரித்து கொண்டு பயணத்திட்ட வகுக்க வேண்டும்.

மலைக்கு நடந்து செல்லலாம். 15 மைல் ஏற வேண்டும்.  மலையேற்றமும் செய்கிறார்கள்.

மின் தூக்கி இயங்கும்  இடம்

ஆறு பேர் அமர்ந்து கொள்ளலாம் மற்றவர்கள் பிடித்து கொண்டு நிற்க வசதி உள்ளது,  நம்மை அழைத்து செல்பவர் அமர்ந்து கொண்டு மைக்கில் அந்த இடத்தின் பெருமையை சொல்லி கொண்டு வந்தார்.

மலையின் ஒரு பக்கத்தில்  சித்திரங்களை    செதுக்கி இருக்கிறார்கள் அதை பார்க்க  சொன்னார்,   என்னால் சிற்பத்தை படம் எடுக்க முடியவில்லை சூரியன் கண்ணை மறைத்தார். ஏரியின் அழகு, மற்றும் பல இடங்களை படம் எடுத்தேன் அவை கீழே இருக்கிறது.

" குறிப்பிட்ட நேரத்தில் வரவில்லையென்றால்  காத்து இருக்காமல் போய் விடுவோம்   அப்புறம் நீங்கள் நடந்து இறங்கி வர வேண்டும் என்றுஎச்சரிக்கை விடுகிறார்,."

இந்த காணொளியில் சித்திரம் செதுக்கி இருப்பது தெரியும். அங்கு நடக்கும் விழாக்களைப்பற்றியும் அங்கு என்ன என்னப்பார்க்கலாம் என்பதை பற்றியும் சொல்கிறார்கள். சொல்வார்கள். சிறிய காணொளிதான்.




காசு போட்டால் தூரத்தில் உள்ளதை பார்க்கலாம்.


இந்த இடத்திலிருந்து மலை  மேலே போக வேண்டும். கவனமாக நடக்க வேண்டும், காற்று பயங்கரமாக இருக்கிறது ஆளை தள்ளுகிறது. கொஞ்சம் குளிர் இருந்தது. வெயில் இருக்கும் போது போக வேண்டும் என்று மகள் அந்த நாளை தேர்வு செய்து  மதிய வேளை போனோம் . அழகான இடம். வேலை நாளில் போனதால் கூட்டம் இல்லை.

போனவுடன் என்னை வரவேற்ற பறவைகள்

பறவைகளை பார்த்து கொண்டே நடந்தேன்

என் மகள் "அம்மா தரை மேடு பள்ளமாக இருக்கிறது பார்த்து நடந்து வாங்க " என்றாள்..  சில இடங்களில் சரிவு, சில இடங்களில் மேடு பள்ளங்கள் இருந்தன. மழை இரண்டு மூன்று நாள் தொடர்ந்து பெய்த காரணத்தால் பள்ளங்களில் நீர் இருந்தது அந்த நீரில் வானத்தின் பிரிதிபலிப்பு இருந்தது.



மேட்டிலிருந்து கீழே புறாக்கள் நடந்து வந்தது பார்க்க அழகு

வேக வேக நடை

சிறு பறவைகள் மலை முழுவதும் பறந்தன

இந்த பறவைகள் அங்கும் இங்கும் வட்டமிட்டு  பறந்தும் அமர்ந்தும் விளையாடியதை பார்க்கும் போது நினைவுக்கு வந்த பாடல் "சிறு பறவைகள் மலை முழுவதும் இங்கே  பறந்தன" இரு பறவைகள் என்று பாடல் ஆரம்பிக்கும். நான் சிறு பறவைகள் என்று மாற்றி இருக்கிறேன்.


புறாக்கள் பறப்பதை காணொளி எடுத்தேன், சிறிய காணொளி தான் பார்த்து விட்டு சொல்லுங்கள். காற்றின் ஓசை கேட்கும்.



என் தலைக்கு மேல் புறாக்கள்  பறந்ததை என் மகள் படம் எடுத்து இருந்தாள். 



மலை மேல் பல வடிவங்களில் கற்கள் தனி தனியாக இருந்தது. அதில் பேர் எழுதி இருந்தார்கள்,  பித்தளை வில்லை அடித்து இருந்தது  அதில் வாஷிங்கடன் சர்வே நம்பர் என்று இருந்தது. அதை கல்லில் யாரோ அடித்து வைத்து இருக்கிறார்கள்.

கிரானைட் கற்கள் போல "மினு மினு" என்று இருந்தது. மலை பாறை முழுவதுமே அப்படித்தான் இருந்தது. அதனால் தான் அந்த மலையை இப்படி சுற்றுலா தலமாக மாற்றி விட்டார்கள் என்று நினைக்கிறேன்.

 
இந்த வாகனம் எங்களை  மலையிலிருந்து கீழே அழைத்து வந்தது .



மேலே வரும் போது இந்த வாகனத்தில் வந்தோம். 10, 12 பேர் பயணம் செய்யலாம்.


மேலே வரும் மின்தூக்கி



கீழே இறங்கும் மின் தூக்கி



மேலே ஏற தொடங்கும் இடத்தில் இருக்கும் அறிவுப்பு பலகை

1871 ல் மலை ஏறி  வந்தவர்  தன் பேரை வந்த காலத்தை கல்லில் வடித்து இருக்கிறார். 

மலை மேல் இருந்த மரத்தில் குழந்தைகள் ஏறி அமர்ந்து விளையாடினார்கள்

ஒரு அம்மா தன் குழந்தைகளை சரிவில் அமர்ந்து பயமில்லாமல் படம் எடுத்துக் கொண்டு இருந்தார்.


 குழந்தைகள் நிற்கும் பாறையில் குப்புறப்படுத்துக் கொண்டு பறப்பது போல கைகளை விரித்துக் கொண்டு  படம் எடுத்தார்கள். சரிவின் கீழே கம்பி வேலி போட்டு இருந்தாலும்  எனக்கு பயமாக இருந்தது பார்க்க.


மலையின் ஓரத்தில் குழந்தைகள், பின்னால் தாய் நிற்கிறார்




பனி மூட்டம் போல இந்த பக்கம் இருந்தது. தூரத்தில்  அட்லாண்டாவின் உயர்ந்த கட்டிடங்கள்  கொஞ்சம் தெரிகிறது.
மாலை 5 மணி  , வெயில் போய்விட்டது,   குளிர் கொஞ்சம் ஆரம்பித்து விட்டது.


மலை மேல் இருந்து ஊரின் அழகு
மலை மேல் இருந்து ஏரியின் அழகு

மேலே இருந்து பள்ளத்தில் இறங்கினால் ஏரியை பார்க்கலாம் நான் கீழே இறங்க வில்லை மேல் இருந்தே காமிராவில் படம் பிடித்தேன் அதற்கு கீழே இறங்க கூடாது என்று கம்பி வேலி போட்டு இருக்கிறார்கள். ஏரி பார்க்க பக்கத்தில் இருப்பது போல நமக்கு தெரிந்தாலும்  மலையின் அடிவாரத்தில் இருக்கிறது .

மின் தூக்கியில்  ஏறும் முன் மலை மேல் இருந்து இறங்கியவுடன் நாம் சிறிது நேரம் அமர்ந்து  வரலாம்.

சிலுவை தெரிகிறது அதனால்  தேவாலயம் என்று நினைக்கிறேன்.

மரத்தின் நிழல் ஏரியில் தெரிகிறது,  சூரியஒளியும் நீரில் தெரிகிறது. 


மின் தூக்கியில் கீழே இறங்கும் போது எடுத்த  படங்கள் கண்ணாடி கதவு வழியே எடுத்தது.

செல்லபிராணிகளை மின் தூக்கியில் அழைத்து செல்ல அனுமதி இல்லை, அதனால்  கணவன் மனைவி இருவரும் வர முடியவில்லை,   மனைவி மட்டும் மலைக்கு வந்தார்.  அவர் நிறைய தனியாக தன்னை தானே  படம் எடுத்து கொண்டார். கீழே வந்து கணவரிடம் காட்டிக் கொண்டு இருந்தார். 




இன்று இங்கு தேசியபூங்கா நாளாம் அதனால் பூங்கா போனதை பகிர்ந்து விட்டேன்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
---------------------------------------------------------------------------------------------

41 கருத்துகள்:



  1. நல்ல விளக்கத்துடனும் நிறைய படங்கள் மற்றும் காணொளியுடன் தககவல் நிறைந்த பதிவு... குட்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மதுரை தமிழன், வாழ்க வளமுடன்

      //நல்ல விளக்கத்துடனும் நிறைய படங்கள் மற்றும் காணொளியுடன் தககவல் நிறைந்த பதிவு... குட்//
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  2. கோமதிக்கா, படங்கள் எல்லாம் மிக மிக அழகு.

    ஆமாம் மலை மொட்டை மலையாக பழனி மலை போன்றும்...எனக்கு வள்ளியூர் வள்ளி மலையையும் நினைவுபடுத்தியது. பாறை மலை வள்ளிமலையின் கீழ் கோயில் தெப்ப குளம் இருக்கும். சின்ன பாறை மலைதான் அது

    இது சுற்றிலும் அழகாக கீழே ஏரியுடன் இருப்பது அழகா இருக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      //கோமதிக்கா, படங்கள் எல்லாம் மிக மிக அழகு.//

      நன்றி.


      //ஆமாம் மலை மொட்டை மலையாக பழனி மலை போன்றும்...எனக்கு வள்ளியூர் வள்ளி மலையையும் நினைவுபடுத்தியது. பாறை மலை வள்ளிமலையின் கீழ் கோயில் தெப்ப குளம் இருக்கும். சின்ன பாறை மலைதான் அது//

      நான் வள்ளியூர் பார்த்தது இல்லை. மலையும், தெப்பகுளமும் பார்க்க அழகாய் இருக்கும்.

      //இது சுற்றிலும் அழகாக கீழே ஏரியுடன் இருப்பது அழகா இருக்கும்//
      ஆமாம், பார்க்க அழகு. நீரை படங்கள் அதிகமாகி விட்டது, போகும் வழி எல்லாம் அழகுதான் பச்சை பசேல் என்று இருக்கிறது. உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  3. நிறைய படங்கள், காணொளிகள்.. சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறீர்கள். ஈரமாக இருந்தால் மேலே வழுக்கும் என்கிற குறிப்பு பயமுறுத்துகிறது. ஆனா அந்தப் பெண்மணி கணவரையும் குழந்தைகளையும் அபாயமான இடத்தில் நிறுத்தி படம் எடுக்கிறார். முதுகுத்தண்டு சிலீர் என்றது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //நிறைய படங்கள், காணொளிகள்.. சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறீர்கள். //

      நன்றி.

      //ஈரமாக இருந்தால் மேலே வழுக்கும் என்கிற குறிப்பு பயமுறுத்துகிறது. //
      ஆமாம், கவனமாக ஏற, இறங்க வேண்டும்.

      //ஆனா அந்தப் பெண்மணி கணவரையும் குழந்தைகளையும் அபாயமான இடத்தில் நிறுத்தி படம் எடுக்கிறார். முதுகுத்தண்டு சிலீர் என்றது!//

      இரண்டுமே மகன்கள் தான் ஸ்ரீராம். பெரிய பையன் நல்ல வளர்த்தியாக இருக்கிறார்.

      நமக்குத்தான் பயம் அவர்களுக்கு பயமே இல்லை.

      நீக்கு
  4. எத்தனை விதமான இடங்கள் சுற்றிப்பார்க்க..  மிஸ்டர் தாம்ஸன் 1871 ல் எழுதியதை இந்தியாவில் சென்னையில் இருக்கும் நான் கூட படித்து / பார்த்து விட்டேன்.  இனிமை.  இந்நேரம் அவரே அவரின் அடுத்த பிரிவுகளில் வந்து பார்த்திருப்பார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எத்தனை விதமான இடங்கள் சுற்றிப்பார்க்க.. //
      மேலை நாட்டினர் சுற்றுலா பிரியர்கள். சின்ன மலையை சுற்றுலா தலம் ஆக்கி விட்டார்கள். நம் நாட்டிலும் நிறைய இருக்கிறது பார்க்க. பார்க்கத்தான் முடியவில்லை.

      மிஸ்டர் தாம்ஸன் 1871 ல் எழுதியதை இந்தியாவில் சென்னையில் இருக்கும் நான் கூட படித்து / பார்த்து விட்டேன். இனிமை. இந்நேரம் அவரே அவரின் அடுத்த பிரிவுகளில் வந்து பார்த்திருப்பார்!//

      ஓ !மறுபிறப்பிலா,? அல்லது அவர் சந்ததியினர் வந்து பார்த்து இருப்பார்கள் என்று சொல்கிறீகளா?
      ரசனையான கருத்து.

      நீக்கு
    2. ஆமாம். பிறவிதான் பிரிவு ஆகிவிட்டது!!!! :))

      நீக்கு
    3. ஓ சரிதான். ஏழ் பிறப்பிலும் மலையை மறக்காமல் இருக்க ஆசை கொண்டவர் என்றால் வந்து ரசித்து இருப்பார்.

      நீக்கு
  5. செல்லங்களுடன் வருபவர்களுக்கு கீழே அவற்றைப் பார்த்துக்கொள்ள வசதி செய்து கொடுத்திருக்கலாம்.  பாவம், இவளவு தூரம் வந்து அவரால் பார்க்க முடியாமல் போனது துரதிருஷ்டம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //செல்லங்களுடன் வருபவர்களுக்கு கீழே அவற்றைப் பார்த்துக்கொள்ள வசதி செய்து கொடுத்திருக்கலாம். பாவம், இவளவு தூரம் வந்து அவரால் பார்க்க முடியாமல் போனது துரதிருஷ்டம்.//

      ஆமாம், இங்கு அவர் இவ்வளவு தூரம் வந்து பார்க்க முடியவில்லையே என்று எனக்கும் வருத்தமாக இருந்தது. காலையில் வந்து இருந்தால் ஒருத்தர் மாற்றி ஒருத்தர் செல்லத்தைப்பார்த்து கொண்டு மலைக்கு போய் பார்த்து வந்து இருக்கலாம்.
      செல்லத்தைப்பார்த்து கொள்ள வசதி என்றால் அதற்கு ஏற்பாடு செய்வது பெரிய வேலை இல்லையா?

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. பூங்கா நுழைவுக்கட்டணம் வருடத்திற்கு ஆனது மிகவும் குறைவாகவே இருக்கிறதே.

    பூங்காக்குள் நிறைய இருக்கு போல. மலையேற்றம், பாலம் என்றெல்லாம் போட்டிருக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூங்கா நுழைவுக்கட்டணம் வருடத்திற்கு ஆனது மிகவும் குறைவாகவே இருக்கிறதே.//

      வாகனம் வசதி மட்டும் வருடத்திற்கு குறைவு .

      //பூங்காக்குள் நிறைய இருக்கு போல. மலையேற்றம், பாலம் என்றெல்லாம் போட்டிருக்கிறது.//

      ஆமாம், கீதா பல ஏக்கர் இடத்தில் மைந்து இருக்கிறது.குடும்பத்தில் உள்ள பெரியவர்கள், சிறுவர்கள் என்று அனைவரையும் உற்சாகப்படுத்த பார்த்து பார்த்து மைத்து இருக்கிறார்கள்.
      நீர்வீழ்ச்சி இருக்கிறது, மீன் பிடிக்க வசதி இருக்கிறது ஏரியில். ஏற்றம் இருக்கிறது பார்க்க . காணொளியில் நிரைய பார்க்கலாம் கீதா.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  7. மலையேற்றம் 15 மைல்...ஆஹா நல்லாருக்கே. மின் தூக்கியே சிறு பேருந்து போல இருக்கிறது.

    சித்திரம் பற்றி சொல்லும் காணொளி அருமை.

    //" குறிப்பிட்ட நேரத்தில் வரவில்லையென்றால் காத்து இருக்காமல் போய் விடுவோம் அப்புறம் நீங்கள் நடந்து இறங்கி வர வேண்டும் என்றுஎச்சரிக்கை விடுகிறார்,."//

    ஆ! அப்ப டக்குன்னு நேரம் பார்த்துக் கொண்டு விட வேண்டும் அதற்குள் நீங்கள் புகைப்படங்கள் எடுத்து சூப்பர் கோமதிக்கா.

    பாறை மேல் புறாக்கள்! இருப்பதும் பறக்கும் படம் சூப்பர். உங்கள் தலை மேல் பறக்கும் படம் நல்லாருக்கு. புறாக்கள் அப்படித்தான் கூட்டமாக வந்து அமரும் உடனே பறக்கும்..மீண்டும் ஒரு சுற்று சுற்றி வந்து அமரும்..இங்கு ஏரியில் செய்வதைக் காணொளியும் எடுத்திருக்கிறேன்.

    புறாக்கள் பறக்கும் படம் செமையா இருக்கு...

    "சிறு பறவைகள் மலை முழுவதும் இங்கே பறந்தன" //

    பாடல் மெட்டு நினைவுக்கு வந்துவிட்டது. ஆமாம் இரு பறவைகள். ...

    புறாக்கள் பறக்கும் காணொளி நன்றாக வந்திருக்கு அக்கா. காணொளி எடுப்பது சிரமம் பறப்பதை.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. பல வடிவங்களில் பாறைக்கற்கள் இருப்பது அழகாக இருக்கு. ஓ பேர் எழுது பழக்கம் எல்லா ஊர்களிலும் இருக்கு போல..ஆனால் இது மக்கள் அடிக்கலை ...யு எஸ் கோஸ்ட், ஜியார்ஜியான்னும் இருக்கு... சர்வே பித்தளையில் வைத்திருப்பவர்கள் தான் மற்ற பெயர்களையும் அடித்திருக்காங்க...அங்கு பொதுமக்கள் இப்படிச் செய்வது அனுமதி இல்லை என்று நினைக்கிறேன் இல்லையாக்கா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பல வடிவங்களில் பாறைக்கற்கள் இருப்பது அழகாக இருக்கு. ஓ பேர் எழுது பழக்கம் எல்லா ஊர்களிலும் இருக்கு போல..ஆனால் இது மக்கள் அடிக்கலை ...யு எஸ் கோஸ்ட், ஜியார்ஜியான்னும் இருக்கு... சர்வே பித்தளையில் வைத்திருப்பவர்கள் தான் மற்ற பெயர்களையும் அடித்திருக்காங்க...அங்கு பொதுமக்கள் இப்படிச் செய்வது அனுமதி இல்லை என்று நினைக்கிறேன் இல்லையாக்கா?//

      தெரியவில்லை கீதா. மகளிடம் கேட்க வேண்டும்.
      அது கிரைனைட் கற்கள் போல இருப்பதால் அப்படி அடித்து வைத்து இருப்பார்களோ என்று நினைக்க தோன்றுகிறது.

      நீக்கு
  9. படங்கள் மிக அழகு. உங்களுக்கு அந்த இடம் நல்ல பொழுதுபோக்காக இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்
      //படங்கள் மிக அழகு. உங்களுக்கு அந்த இடம் நல்ல பொழுதுபோக்காக இருந்திருக்கும்.//

      ஆமாம். நன்றாக பொழுது போனது. அங்கு வந்தவர்களையும், பறவைகளையும் ரசித்தேன்.

      நீக்கு
  10. நம்ம ஊரில் உள்ள மலை போல்தான் இருக்கிறது. ஆனால் அழகுபட வைத்துள்ளார்கள்.

    கையில் சிப்ஸ் கோன்றவை எடுத்துச் செல்ல அனுமதி உண்டா? நம் ஊரில் மலைமேல் குப்பைகளைப் போட்டுவிடுவார்கள்.

    மலை மேலிருந்து பார்க்கும் காட்சிகள் மிக அழகாகவும் பிமிப்பாகவும் இருக்கும். ஆனால் புகைப்படத்தில் அந்த அழகைக் கொண்டுவருவது கடினம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நம்ம ஊரில் உள்ள மலை போல்தான் இருக்கிறது. ஆனால் அழகுபட வைத்துள்ளார்கள்.//

      நானும் சாரும் "திடியன் மலை" சமண மலை . என்று போனமலைகளை பற்றி பதிவு போட்டு இருந்தேன், நினைவு இருக்கும் அது போல தான் இருக்கிறது.


      //கையில் சிப்ஸ் கோன்றவை எடுத்துச் செல்ல அனுமதி உண்டா? நம் ஊரில் மலைமேல் குப்பைகளைப் போட்டுவிடுவார்கள்.//

      யாரும் எதுவும் கொண்டு வந்து சாப்பிடவில்லை, குப்பைகள் இல்லை மலை சுத்தமாக இருந்தது, பள்ளங்களில் மழை த்ண்ணீர் மட்டும்

      தேங்கி இருந்தது.

      //மலை மேலிருந்து பார்க்கும் காட்சிகள் மிக அழகாகவும் பிமிப்பாகவும் இருக்கும். ஆனால் புகைப்படத்தில் அந்த அழகைக் கொண்டுவருவது கடினம்.//

      ஆமாம், புகை மூட்டம் போல சில இடங்கள் தெரிகிறது. சில இடங்களை மலையின் சரிவிலிருந்து படம் எடுத்தால் நன்றாக இருந்து இருக்கும், நான் கீழே இறங்கவில்லை மேட்டின் மேலேயே இருந்து படங்கள் எடுத்தேன்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.



      நீக்கு
  11. மின் தூக்கி படங்கள் - அங்கு இப்படி பல இடங்களிலும் சுற்றிப் பார்க்க விஞ்ச் வைத்துவிடுவது நடக்க முடியாதவர்களுக்கு ரொம்ப வசதி.

    பாறையில் தான் ஏறி வந்தவருடத்தை அடிக்க நேரம் எடுத்திருக்குமோ..இவ்வளவு வருடங்கள் கழித்தும் தெரிகிறதே!

    பாறை நுனியில் எல்லாம் இருந்து புகைப்படம் எடுப்பது பார்க்க பயமாக இருக்கு..பாத்தீங்களா அந்தப் பையன் தன் கண்ணை மூடிக் கொண்டிருக்கிறார்ன் தலை சுத்தும் போல கீழே பார்த்தால்...அந்த அம்மா சரிவில் உட்கார்ந்துபடம் வேறு....யம்மாடியோவ்!! அப்புறம் படுத்துக் கொண்டு....ஹாஹாஹா நல்ல காலம் செல்ஃபி இல்லை ஆனாலும் அப்படி எடுப்பவர்களும் இருப்பாங்கதான்.

    சிலுவை - தேவாலயம்தன.

    அதற்கு அடுத்த படம் செம ஷாட்! கோமதிக்கா..அந்தப் படத்தை ரொம்ப ரசித்தேன்.

    பாறை மீதிருந்து எடுத்த சுற்றுப்புறக் காட்சிகள் எல்லாமே அருமை.

    கடைசியில் செல்லம்!..

    அங்கு தேசிய பூங்கா தினமா..!! சரியாகப் பகிர்ந்திருக்கீங்க கோமதிக்கா

    படங்களையும் பதிவையும் ரசித்தேன்.

    கீதா


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மின் தூக்கி படங்கள் - அங்கு இப்படி பல இடங்களிலும் சுற்றிப் பார்க்க விஞ்ச் வைத்துவிடுவது நடக்க முடியாதவர்களுக்கு ரொம்ப வசதி.//

      ஆமாம், கீதா எனக்கு வசதியாக இருந்தது.

      //பாறையில் தான் ஏறி வந்தவருடத்தை அடிக்க நேரம் எடுத்திருக்குமோ..இவ்வளவு வருடங்கள் கழித்தும் தெரிகிறதே!//

      கண்டிப்பாய் மிகவும் கஷ்டப்பட்டு தான் தன் பேரை பொறித்து இருப்பார் பெரிய சாதனை செய்த மகிழ்ச்சி அவருக்கு கிடைத்து இருக்கும்.

      //பாறை நுனியில் எல்லாம் இருந்து புகைப்படம் எடுப்பது பார்க்க பயமாக இருக்கு..பாத்தீங்களா அந்தப் பையன் தன் கண்ணை மூடிக் கொண்டிருக்கிறார்ன் தலை சுத்தும் போல கீழே பார்த்தால்...அந்த அம்மா சரிவில் உட்கார்ந்துபடம் வேறு....யம்மாடியோவ்!! அப்புறம் படுத்துக் கொண்டு....ஹாஹாஹா நல்ல காலம் செல்ஃபி இல்லை ஆனாலும் அப்படி எடுப்பவர்களும் இருப்பாங்கதான்.//

      அந்த அம்மா, குழந்தைகள் எல்லாம் தைரியசாலிகள் தான்.

      //ஹாஹாஹா நல்ல காலம் செல்ஃபி இல்லை ஆனாலும் அப்படி எடுப்பவர்களும் இருப்பாங்கதான்.//
      செல்லத்தை விட்டு வந்த ம்மா தனியாக அந்த இடத்தில் நின்று செல்ஃபி எடுத்தார்கள்.

      //தேசிய பூங்கா தினமா..!! சரியாகப் பகிர்ந்திருக்கீங்க கோமதிக்கா//

      கூகுள் தினம் ஒரு தினம் காட்டுகிறது. இன்று பொருத்தமாக பதிவு கிடைத்து விட்டது.

      உங்கள் வேலைகளுக்கு இடையே அனைத்தையும் ரசித்து கருத்துக்கள் கொடுத்தற்கு நன்றி கீதா.
      ஊரிலிருந்து வரும் மகனுடன் மகிழ்ந்து இருங்கள், வாழ்த்துகள்.




      நீக்கு
    2. படங்கள், காணொளி, தகவல்கள் என பகிர்ந்து கொண்ட அனைத்தும் வெகு சிறப்பு. பார்த்து ரசித்தேன். நன்றி.

      நீக்கு
    3. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்

      //படங்கள், காணொளி, தகவல்கள் என பகிர்ந்து கொண்ட அனைத்தும் வெகு சிறப்பு. பார்த்து ரசித்தேன். நன்றி.//

      உங்கள் கருத்துக்கு நன்றி வெங்கட்.

      நீக்கு
  12. மிகவும் அழகான படங்கள் தெளிவாக இருக்கிறது.

    காணொளிகளும் கண்டேன்.

    தகவல்கள் சொல்லிய விதம் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //மிகவும் அழகான படங்கள் தெளிவாக இருக்கிறது.

      காணொளிகளும் கண்டேன்.

      தகவல்கள் சொல்லிய விதம் அருமை//

      அனைத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி ஜி.

      நீக்கு
  13. பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தன்பாலன், வாழ்க வளமுடன்

      //அற்புதம் அம்மா//

      உங்கள் கருத்துக்கு நன்றி தனபாலன்.

      நீக்கு
  14. அழகான படங்கள், காணொளிகள்.. சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறீர்கள்.

    பாறை ஈரமாக இருந்தால் வழுக்கும் என்பது உண்மை தான்.. மலைச் சரிவு பயமுறுத்துகிறது...

    சரிவில் நிற்கும் துணிச்சல் எல்லாருக்கும் வராது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வாராஜூ, வாழ்க வளமுடன்

      //அழகான படங்கள், காணொளிகள்.. சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறீர்கள்.//

      நன்றி.

      //பாறை ஈரமாக இருந்தால் வழுக்கும் என்பது உண்மை தான்.. மலைச் சரிவு பயமுறுத்துகிறது...

      சரிவில் நிற்கும் துணிச்சல் எல்லாருக்கும் வராது..//

      ஆமாம், கவனமாக போக வேண்டும். துணிச்சல் நல்லது, ஆனால் அசட்டு துணிச்சல் ஆபத்து.

      நீக்கு
  15. தேசிய பூங்கா தினத்தில் பொருத்தமான பதிவு.. சிறப்பு..

    விஞ்ச்/ மின்தூக்கி இரண்டும் நடக்க முடியாதவர்களுக்கு மிகவும் வசதி.

    நம்ம ஊரில் இப்படி மலை இருந்தால் பாழடித்து இருப்பார்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தேசிய பூங்கா தினத்தில் பொருத்தமான பதிவு.. சிறப்பு..//

      பதிவு எழுத தினம் கொஞ்சமாக படங்களை வலையேற்றிக் கொண்டு இருந்தேன் , நேற்று தேசிய பூங்கா தினம் என்று கூகுள் சொன்னதும் விஷயங்களை எழுதி பதிவு செய்து விட்டேன்.

      //விஞ்ச்/ மின்தூக்கி இரண்டும் நடக்க முடியாதவர்களுக்கு மிகவும் வசதி.//

      ஆமாம். , நல்ல வசதி.

      //நம்ம ஊரில் இப்படி மலை இருந்தால் பாழடித்து இருப்பார்கள்..//

      நம்ம ஊரில் இப்படி மலைகளை சுற்றுலாதலம் ஆக்கினால் மலைகள் தப்பிக்கும்.

      வெளிநாட்டில் அங்கு உள்ள மலைகளை காப்பாறிக் கொண்டு நம் நாட்டிலிருந்து கனிம வளத்தை பெற்றுக் கொண்டு இருக்கிறார்கள்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  16. வணக்கம் சகோதரி

    பதிவு அருமையாக உள்ளது.
    படங்களும், காணொளியும் பார்த்து மகிழ்ந்தேன். நீங்கள் கூறுவது போல் அந்த மலை நம்மூர் பழனி மலை போலத்தான் உள்ளது.

    நீங்கள் சென்ற ஊர்தி நன்றாக உள்ளது. பழனியிலும் வின்ச் வந்த புதிதில் நாங்கள் ஒரு முறை சென்று வந்தோம். அதன் பின் ஒருதடவை கூட செல்ல வில்லை. கால முன்னேற்றத்தில் இது அவ்வூரின் வளர்ச்சிபடி வித்தியாசமாக நன்றாக இருந்திருக்கும்.

    /குறிப்பிட்ட நேரத்தில் வரவில்லையென்றால் காத்து இருக்காமல் போய் விடுவோம் அப்புறம் நீங்கள் நடந்து இறங்கி வர வேண்டும் என்றுஎச்சரிக்கை விடுகிறார்/

    மலையை சுற்றி காண்பிக்க உடன் வருபவர் இப்படித்தான் கண்டிஷன்கள் போட்டு விடுகிறார்.

    பறவைகள் அங்கும் தங்களைக் காண வந்திருப்பது கண்டு மகிழ்ச்சி. பறவைகளின் நடையை தாங்கள் விவரித்து எடுத்திருக்கும் புகைப்படங்கள் அழகாக இருக்கிறது. தங்கள் தலைக்கு மேல் பறவைகள் பறப்பதை தங்கள் மகள் புகைப்படம் எடுத்திருப்பதும் நன்றாக உள்ளது.

    மலைக்கு கீழையிருக்கும்ஏரி ஏரி கண்களை கவர்கிறது. மொத்தத்தில்இயற்கை காட்சி களுடன் இந்த சுற்றுலா தளம் நன்றாக உள்ளது ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //பதிவு அருமையாக உள்ளது.
      படங்களும், காணொளியும் பார்த்து மகிழ்ந்தேன். நீங்கள் கூறுவது போல் அந்த மலை நம்மூர் பழனி மலை போலத்தான் உள்ளது.//

      நன்றி.

      //நீங்கள் சென்ற ஊர்தி நன்றாக உள்ளது. பழனியிலும் வின்ச் வந்த புதிதில் நாங்கள் ஒரு முறை சென்று வந்தோம். அதன் பின் ஒருதடவை கூட செல்ல வில்லை. கால முன்னேற்றத்தில் இது அவ்வூரின் வளர்ச்சிபடி வித்தியாசமாக நன்றாக இருந்திருக்கும்.//

      நன்றாக இருந்தது முன்பு ஏறுபவர்கள் அமர்ந்து விடுகிறார்கள் பின்னால் போகிறர்வர்கள் நின்று கொண்டு பயணம் செய்ய வேண்டும். நாலுநிமிடத்தில் மலை வந்து விடுவதால் கஷ்டம் இல்லை நிற்பது.

      //மலையை சுற்றி காண்பிக்க உடன் வருபவர் இப்படித்தான் கண்டிஷன்கள் போட்டு விடுகிறார்.//

      ஆமாம் , அப்போதுதான் மக்கள் விரைவில் பார்த்து விட்டு வருவார்கள்.

      //பறவைகள் அங்கும் தங்களைக் காண வந்திருப்பது கண்டு மகிழ்ச்சி. பறவைகளின் நடையை தாங்கள் விவரித்து எடுத்திருக்கும் புகைப்படங்கள் அழகாக இருக்கிறது. தங்கள் தலைக்கு மேல் பறவைகள் பறப்பதை தங்கள் மகள் புகைப்படம் எடுத்திருப்பதும் நன்றாக உள்ளது.//

      பறவைகளை பார்த்ததும் மகிழ்ச்சி.

      //மலைக்கு கீழையிருக்கும்ஏரி ஏரி கண்களை கவர்கிறது. மொத்தத்தில்இயற்கை காட்சி களுடன் இந்த சுற்றுலா தளம் நன்றாக உள்ளது ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//காலை 10 மணீ முதல் மாலை 5 வரை பூங்கா திறந்து இருக்கும் . காலையில் போய் இருந்தால் ஏரியை போய் பார்த்து இருப்போம்.

      நீக்கு
  17. வணக்கம் சகோதரி

    மலைகளின் பள்ளமும், மேடு பார்வைக்கு நன்றாக உள்ளதெனினும் மழை பெய்யும் காலத்தில் வழுக்கும் தன்மையையும் பெற்று விடும்.நீங்கள் பத்திரமாக சென்று வந்தது குறித்து மகிழ்ச்சி.

    பாறை ஒரத்தில் நின்று புகைப்படங்கள் எடுப்பது சற்று எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய விஷயம். அவர்களுக்கு உள்ள தைரியம் நமக்கு வராது.

    படங்கள் அனைத்தையும் நன்றாக எடுத்துள்ளீர்கள். ஒவ்வொன்றையும் பெரிதாக்கி பார்த்து ரசித்தேன். பாராட்டுக்கள்.

    நான் அப்போதே வந்திருக்க வேண்டும். ஆனால் இன்று சகோதரர் துரைசெல்வராஜ் அவர்களது பதிவில் கண்ட அருமையான கவிதை என் தலைக்குள்ளும் ஒரு கவிதையை எழுதச்சொல்லி வண்டாக துளைத்ததில், வேலைகளுக்கு நடுவே யோசித்து ஒரு கவிதை எழுதி என் தளத்தில் போட்டு வர தாமதமாகி விட்டது. அவரைப் போல எனக்கு சட்டென வார்த்தைகள் வசப்படுமா என்ன?. அதனால் தாமதம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மலைகளின் பள்ளமும், மேடு பார்வைக்கு நன்றாக உள்ளதெனினும் மழை பெய்யும் காலத்தில் வழுக்கும் தன்மையையும் பெற்று விடும்.நீங்கள் பத்திரமாக சென்று வந்தது குறித்து மகிழ்ச்சி.//

      பாதுகாப்பான துணை, பாதுகாப்பான இடத்திலிருந்து மட்டும் பார்வை என்பதால் இறையருளில் பத்திரமாக வந்து விட்டோம்.

      //பாறை ஒரத்தில் நின்று புகைப்படங்கள் எடுப்பது சற்று எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய விஷயம். அவர்களுக்கு உள்ள தைரியம் நமக்கு வராது.//

      ஆமாம். கவனமாக இருக்க வேண்டும்.

      //படங்கள் அனைத்தையும் நன்றாக எடுத்துள்ளீர்கள். ஒவ்வொன்றையும் பெரிதாக்கி பார்த்து ரசித்தேன். பாராட்டுக்கள்.//

      உங்கள் பாராட்டுக்கு நன்றி.

      //நான் அப்போதே வந்திருக்க வேண்டும். ஆனால் இன்று சகோதரர் துரைசெல்வராஜ் அவர்களது பதிவில் கண்ட அருமையான கவிதை என் தலைக்குள்ளும் ஒரு கவிதையை எழுதச்சொல்லி வண்டாக துளைத்ததில், வேலைகளுக்கு நடுவே யோசித்து ஒரு கவிதை எழுதி என் தளத்தில் போட்டு வர தாமதமாகி விட்டது. அவரைப் போல எனக்கு சட்டென வார்த்தைகள் வசப்படுமா என்ன?. அதனால் தாமதம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

      ஆஹா! கவிதை பதிவு போட்டு விட்டீர்களா?
      படிக்க வருகிறேன். சட்டென வார்த்தை வசப்பட்டதால்தானே இன்று சகோ கவைதையை படித்தவுடன் கவிதை எழுதிவிட்டீர்கள்.
      நீங்களும் பன்முக திறமை வாய்ந்தவர் தான்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  18. படங்களும் பகிர்வும் மிக நன்று. பறவைகள் பறக்கும் காணொளியும், பின்னணியில் பறவைகள் பறக்க , குன்றின் மேல் நீங்கள் நிற்கும் ஒளிப்படமும் குறிப்பாக மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

      //படங்களும் பகிர்வும் மிக நன்று. பறவைகள் பறக்கும் காணொளியும், பின்னணியில் பறவைகள் பறக்க , குன்றின் மேல் நீங்கள் நிற்கும் ஒளிப்படமும் குறிப்பாக மிக அருமை.//

      படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி ராமலக்ஷ்மி.


      நீக்கு
  19. நல்ல விளக்கங்கள். மிக அழகான சுத்தமான மலை. இப்படி எல்லாம் இடங்கள் இருப்பது இப்போத் தான் தெரியும். அட்லான்டாவிற்குப் போனாலும் இன்று மாலை போயிட்டு, நாளை திரும்பிட்டோம் என்பதால் எங்கேயும் போக முடியலை. தம்பிக்கு வேறே அப்போத் தான் முதல் குழந்தை பிறந்திருந்தது. திரும்பி மெம்பிஸ் வரும்போது நாஷ்வில் பிள்ளையாரைப் பார்த்துட்டுக் கோயிலிலேயே சாப்பிட்டு வந்தோம். பெரிய பிள்ளையாராக இருப்பார். நாலைந்து முறை போனோம் நாஷ்வில் பிள்ளையாரைப் பார்க்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்

      நிறைய இடங்கள் அட்லாண்டாவில் உள்ளது. மழை பெய்து கொண்டே இருந்தது விடுமுறை நாளில். அதனால் நான் இருந்த குறுகிய காலத்தில் இரண்டு முக்கியமான இடங்கள் அழைத்து சென்றாள்.
      நீங்கள் பார்த்த இடங்களை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு