சனி, 6 மே, 2023

பள்ளிக் குழந்தைகளின் சமூகத் திட்டப்பணிகள்

அரிசோனாவில் உள்ள பீனீக்ஸில் உள்ள   Burton Barr Library நூலகத்தில் ஒரு மாதத்திற்கு மேலாக தன்னார்வலர் பணி செய்தான். அவன் பள்ளியில் கொடுத்த சமூகத் திட்டபணிக்காக. அது நிறைவுக்கு வந்து நேற்று பள்ளியில் கண்காட்சிக்கு வைக்கப்பட்ட போது போய் பார்த்து வந்தோம். 


எட்டாவது படிக்கும் பசங்கள் மட்டும் செய்த பணி இது.
சின்ன வகுப்பிலிருந்து திட்டப்பணிகள் நிறைய செய்து இருந்தாலும் , சமூகத் திட்டப்பணி கடைசி வருடம் செய்து இருக்கிறார்கள்.

கல்லூரியில் கடைசி ஆண்டு திட்டப்பணி செய்வது போல பேரனும் செய்து இருக்கிறான். இந்த பள்ளியில் எட்டாம் வகுப்பு வரைதான் உள்ளது. 9ம் வகுப்புக்கு வேறு பள்ளி செல்ல வேண்டும்.






இந்த நூலகம் கவினுடன் போய் வந்தேன் , அந்த நூலகம் மிகவும் நன்றாக இருந்தது, அந்த நூலகம் படங்களை இன்னொரு பதிவில் போடுகிறேன். நல்ல பெரிய நூலகம்.



திட்டப்பணி விளக்க காட்சி அட்டை தயார் செய்து படங்களை ஒட்ட மட்டும்  மருமகள் உதவி செய்து இருக்கிறாள் , விஷயங்களை எழுதிதொகுத்தது அவன் மட்டுமே.  புத்தகப்படம் வரைந்து  தன் எண்ணங்களை வடிவமைத்தது எல்லாம் அவன் உழைப்பு. 



பள்ளிக்கு  கவின் செய்த சமூக திட்டபணி  நூலகத்தில் செய்த தன்னார்வலர் பணி பற்றியது.


பேரனுடன் நான் படம் எடுத்து கொண்டேன், அவன் தாத்தாவும் இருந்து இருந்தால் நன்றாக இருக்கும் என்ற நினைப்பு வந்தது , அந்த தருணத்தில்.
கவினின்  உயிர் நண்பன்.  அடுத்த பள்ளியில் 9 ம் வகுப்பிலும் சேர்ந்து படிக்கப்பபோகிறார்கள். நட்பு வாழ்க!



நூலகத்தில் புத்தங்களை வரிசைப்படுத்தி அடுக்கி வைத்ததை புத்தகவடிவில் படம் செய்து இருப்பதை அவன் ஆசிரியர்கள் பாராட்டினார்கள். தினம் 100 புத்தகங்கள் அதன் அதன் இடத்தில் வரிசை படித்தி அடுக்கி வைத்து வருவான்.

நூலகம்  பணி கொடுக்கப்பட்டது 15 மணி நேரம். ஆனால் நூலகத்தார் கேட்டுக் கொண்டது இந்த கோடைவிடுமுறை  காலம் வரை  வந்தால் நல்லது என்று. வேலையை நன்றாக செய்வதாக சொல்லி இந்த தன்னார்வலர் பணிக்கு ஆட்கள் பற்றவில்லை என்று சொல்லி இருக்கிறார்.  வருகிறேன் என்று கவின் சொல்லி இருக்கிறான்,மகன் அழைத்து போகவேண்டும்.
வாரத்தில் இரண்டு மணி நேரம் செவ்வாய்க்கிழமை  அழைத்து போய் வந்தான் மகன்.  அரைமணி தூரத்தில் இருக்கும் நூலகம்.




எல்லோரும் புத்தங்களை படிக்க வேண்டும், தினம் கொஞ்ச நேரம்  நல்ல புத்தகம் வாசிக்கும் பழக்கம்   வேண்டும். 

ஸ்கொட்லாந் பாரம்பரிய உடை அணிந்து இருக்கிறார் வரலாறு  வாத்தியார், அவருக்கு தன் பணியைப்பற்றி விளக்கிச் சொல்கிறான்.  


 வாத்தியார் அவனிடம்  அவன் செய்த விவரங்களை கேட்டு அவனுக்கு  தன் கருத்தை பதிகிறார்.



புற்று நோய் விழிப்புணர்வு பணி
உணவு கொடுக்க முன் வருபவர்களிடம்  பெற்று சேமித்து வைத்து  வீடு  இல்லாதவர்களுக்கு உணவு அளிக்கும் வேலை.


//1960-களின் இறுதியில், அரிசோனா மாநில போனிக்ஸ் நகரில் வாழ்ந்த ஜான் வான் ஹெங்கேல் என்னும் ஓய்வுபெற்ற தொழிலதிபர், அருகிலிருந்த  சிற்றுணவகத்தில்  (soup kitchen) தன்னார்வராக வேலையில் சேர்ந்தார்.  முழு ஈடுபாட்டுடன் உணவகத்துக்காக  உணவுப் பொருள்   நன்கொடை வசூலில் இறங்கிய அவரால்  அந்த கிச்சனின் தேவைக்கு மேல் உணவு சேகரிக்க முடிந்தது. தொடர்ந்து அவர்  மளிகைக் கடைகளிலும், உள்ளூர் வயல்களிலும் விரும்பப்படாத உணவுப் பொருட்களைக் கேட்டு வாங்கி இறுதியில் உருவாக்கிய புனித மேரி உணவு வங்கிதான் அமெரிக்காவின் முதல் உணவு வங்கி.  பின்னர் உணவு வங்கிகள்  பெருகி, அமெரிக்காவுக்கு உணவளிப்பு (Feeding America ) என்ற புது அடையாளம் பெற்று, 200 க்கும் அதிகமான உணவு வங்கிகள் இணைந்த நாடு தழுவிய பிணையமாக வளர்ந்து, உணவு வங்கிகளை  சார்ந்துள்ள பொட்டண உணவறைகள்  (food pantries), சிற்றுணவகம் (soup kitchens),  மற்றும் பிற சமுதாய முகமைகள் வழியாக 46 மில்லியன் மக்களுக்கு உணவளிக்கக் கூடிய லாப  நோக்கில்லா பசியாற்று (hunger relief) நிறுவனமாக வளர்ந்திருக்கிறது. இது வருவாய் நோக்கில் அமெரிக்கத்  தொண்டு நிறுவனங்களில் இரண்டாமிடம் வகிப்பதாக  ஃபோர்ப்ஸ் கம்பெனியின் மதிப்பீடு கூறுகிறது.// 

ஒரு நாளில் உணவு நன்கொடைக்கு வருவார்கள்,  நாம்  வீட்டு வாசலில்  வைத்து விட்டால் எடுத்து போவார்கள். இது போன்ற வங்கிகளிலும் கொண்டு போய் கொடுக்கலாம்.




கவினும் , மற்றும் ஒரு மூன்று மாணவர்களை தவிர  மற்ற குழந்தைகள்  தாங்கள் இருக்கும் பகுதி,  தெரு, ஊர், சுற்றுலா செல்லும் இடங்கள் ஆகிய இடங்களை சுத்தபடுத்திய  தன்னார்வலர் பணியைப்பற்றி விளக்கம் கொடுத்து இருந்தார்கள்.   நன்றாக கவனத்துடன்   சிறப்பாக  எல்லாம் செய்து இருந்ததை பாராட்ட வேண்டும்.








கவின் நண்பன் செய்த  திட்டப்பணி


தன் பணியைப்பற்றி சொல்கிறான்.



மேலும் கவின் பள்ளியில்  மதியம் நடந்த நிகழச்சிகள் அடுத்த பதிவில்.

குழந்தைகள் எல்லாம் தங்கள் முயற்சி, மற்றும் பெற்றோர்களின் ஒத்துழைப்பு ஆசிரியர்களின் ஊக்கத்தால் அவர்கள் எடுத்துக் கொண்ட திட்டப்பணியை சிறப்பாக செய்து விட்டார்கள்.

அனைத்து  குழந்தைகளும்  தாங்கள் படைப்பாற்றலை , மற்றும் தனித்துவத்தை வெளிப்படுத்த கிடைத்தை வாய்ப்பை  பயன் படுத்தி கொண்டார்கள். எந்த வேலை செய்தாலும்  தன்னம்பிக்கை விடா முயற்சியுடன் செய்தால் வாழ்வில் வெற்றிப்பெறுவோம் என்ற அனுபவமும் அவர்களுக்கு கிடைத்து இருக்கும்.

வாழ்க வைய்கம்! வாழ்க  வையகம் ! வாழ்க வளமுடன்!.
--------------------------------------------------------------------------------------------------

40 கருத்துகள்:

  1. பதின்ம வயது நூலகர்! கவின் அசத்துகிறார். அதில் அவரது உழைப்பு பாராட்டத்தக்கது. தானாக இருக்கும் ஆர்வம் இருந்தால் ஒழிய இவற்றைச் செய்ய முடியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //பதின்ம வயது நூலகர்! கவின் அசத்துகிறார்.//

      நன்றி ஸ்ரீராம்.

      //அதில் அவரது உழைப்பு பாராட்டத்தக்கது. தானாக இருக்கும் ஆர்வம் இருந்தால் ஒழிய இவற்றைச் செய்ய முடியாது.//

      உங்கள் பாராட்டுக்கு நன்றி. அவனுக்கு ஆர்வம் உண்டு.

      நீக்கு
  2. //அவன் தாத்தாவும் இருந்து இருந்தால் நன்றாக இருக்கும் என்ற நினைப்பு வந்தது , அந்த தருணத்தில்.//

    அவரும் அங்கே நிற்பது போலதான் எனக்குத் தோன்றியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அவரும் அங்கே நிற்பது போலதான் எனக்குத் தோன்றியது.//

      எப்போதும் அப்படியே உடன் இருக்கட்டும்.

      நீக்கு
  3. இன்னும் கொஞ்ச நாள் வரச்சொல்லி நூலக நிர்வாகம் அழைப்பது கவினின் திறமைக்கு சான்று. பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இன்னும் கொஞ்ச நாள் வரச்சொல்லி நூலக நிர்வாகம் அழைப்பது கவினின் திறமைக்கு சான்று. பாராட்டுகளும், வாழ்த்துகளும்.//

      உங்கள் வாழ்த்துகளுக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  4. //ஸ்கொட்லாந் பாரம்பரிய உடை அணிந்து இருக்கிறார் வரலாறு வாத்தியார்,//

    ஆணா, பெண்ணா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்கொட்லாந் பாரம்பரிய உடை அணிந்த வாத்தியார்
      ஆண் தான் நீண்ட முடி வைத்து இருக்கிறார்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
    2. ஐயோ..எனக்கு இந்தச் சந்தேகம் வரவில்லையே. பெண் என்றே நினைத்துக்கொண்டேன். இப்போ மீண்டும் போய்ப் பார்த்தேன்.

      பாருங்க... அவங்க பாரம்பர்ய உடையில் (லண்டன் டவர்) நிறைய படங்கள் எடுத்திருந்தேன். இருந்தாலும் நினைவுக்கு வரவில்லை

      நீக்கு
    3. //ஐயோ..எனக்கு இந்தச் சந்தேகம் வரவில்லையே. பெண் என்றே நினைத்துக்கொண்டேன். இப்போ மீண்டும் போய்ப் பார்த்தேன்.

      பாருங்க... அவங்க பாரம்பர்ய உடையில் (லண்டன் டவர்) நிறைய படங்கள் எடுத்திருந்தேன். இருந்தாலும் நினைவுக்கு வரவில்லை//

      அடுத்த பதிவில் அவரின் படங்கள் இடம்பெறும் . நிகழச்சிகளை தொகுத்து வழங்கினார். மாணவ் , மாணவிகளுக்கு பிடித்த அசிரியர்.
      நல்ல சுறு சுறுப்பாக வலம் வந்தார்.

      நீக்கு
  5. பேரனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!! " ஆளும் வளரணும், அறிவும் வளரணும், அது தாண்டா வளர்ச்சி" பாடல் வரிகள் நினைவில் மோதுகின்றன! எப்போதுமே புத்தகங்களும் சரி, அது தொடர்பான அனுபவங்களும் சரி, அறிவை விசாலமாக்கும், மேம்படுத்தும், நல்ல எண்ணங்களை விதைத்துக்கொண்டேயிருக்கும்! நாளைய சமூகத்தின் மிகச்சிறந்த மனிதனாக உருவாக உங்கள் பேரனை வாழ்த்துகிறேன், ஆசீர்வதிக்கிறேன்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்

      //பேரனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!! " ஆளும் வளரணும், அறிவும் வளரணும், அது தாண்டா வளர்ச்சி" பாடல் வரிகள் நினைவில் மோதுகின்றன!//

      வாழ்த்துக்களூக்கு நன்றி.
      நல்ல கருத்துள்ள பாடல் பட்டுக்கோட்டையார் எழுதிய பாடல்.

      //எப்போதுமே புத்தகங்களும் சரி, அது தொடர்பான அனுபவங்களும் சரி, அறிவை விசாலமாக்கும், மேம்படுத்தும், நல்ல எண்ணங்களை விதைத்துக்கொண்டேயிருக்கும்!//

      ஆமாம், நீங்கள் சொல்வது உண்மை.

      //நாளைய சமூகத்தின் மிகச்சிறந்த மனிதனாக உருவாக உங்கள் பேரனை வாழ்த்துகிறேன், ஆசீர்வதிக்கிறேன்!!//
      உங்கள் வாழ்த்துக்களுக்கும் ஆசீர்வாதங்களுக்கும் நன்றி, மகிழ்ச்சி.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.


      நீக்கு
  6. மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுக் கொடுக்க வேண்டுமா!..

    என்னும் பழமொழி நினைவுக்கு வந்தது..

    கவின் கொண்ட திறமை நமக்கெல்லாம் பெருமை
    நாடு விட்டு நாடு சென்றும்
    நல்ல பெயர் அருமை..
    நலம் பெற்று வளர்கவே
    நாளும் நாளும் இனிமை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வாராஜு, வாழ்க வளமுடன்

      //மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுக் கொடுக்க வேண்டுமா!..

      என்னும் பழமொழி நினைவுக்கு வந்தது..//

      மகிழ்ச்சி.

      //கவின் கொண்ட திறமை நமக்கெல்லாம் பெருமை
      நாடு விட்டு நாடு சென்றும்
      நல்ல பெயர் அருமை..
      நலம் பெற்று வளர்கவே
      நாளும் நாளும் இனிமை..//

      மிக அருமையான கவிதை.
      கவிதையால் வாழ்த்தியதற்கு நன்றி.
      பேரனும் நன்றி சொல்ல சொன்னான்.

      நீக்கு
  7. //அவன் தாத்தாவும் இருந்து இருந்தால் நன்றாக இருக்கும் என்ற நினைப்பு வந்தது , அந்த தருணத்தில்.//

    ஐயா அவர்கள் என்றென்றும் உங்களுடன்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஐயா அவர்கள் என்றென்றும் உங்களுடன்!..//
      நன்றி.

      நீக்கு
  8. நல்ல நூல்களை வாசிப்பது ஒன்றே நம்மை மேம்படுத்தும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நல்ல நூல்களை வாசிப்பது ஒன்றே நம்மை மேம்படுத்தும்..//

      ஆமாம். நல்ல புத்தகங்களை வாங்கி கொடுக்கிறோம் .
      படித்து வருகிறான் தினம்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  9. படங்களும், தகவல்களும் சிறப்பு.

    கவினுக்கு வாழ்த்துகள் வாசிப்பு தொடரட்டும்.

    கவினின் தொண்டுள்ளம் வளரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //படங்களும், தகவல்களும் சிறப்பு.//
      நன்றி.

      //கவினுக்கு வாழ்த்துகள் வாசிப்பு தொடரட்டும்.

      கவினின் தொண்டுள்ளம் வளரட்டும்.//

      கவினை வாழ்த்தியதற்கும் ஆசிர்வாதம் செய்தமைக்கும் நன்றி.
      உங்கள் எல்லோருக்கும் தன் நன்றியை தெரிவிக்க சொன்னான்.

      நீக்கு
  10. பேரனுக்கு பாராட்டுகள்... வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்

      //பேரனுக்கு பாராட்டுகள்... வாழ்த்துகள்//

      பாராட்டுக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி தனபாலன்.

      நீக்கு
  11. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. நூலக படங்கள் அனைத்தையும் கண்டு ரசித்தேன். தங்கள் பேரனுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். இந்த சிறு வயதில் நல்ல ஆர்வத்துடனான உழைப்புடன் செயல்படும் தங்கள் பேரனுக்கும், அவரின் நண்பருக்கும் பாராட்டுக்கள்.

    தங்கள் பேரன் வடிவமைத்திருக்கும் நூலக வரைபடத்தை நிறைய பேர் வந்து பார்வையிட்டு வாழ்த்துவது மிகுந்த பெருமையை தருகிறது. தங்கள் பேரன் கவின் இன்னமும் பற்பல முன்னேற்றங்களை சந்தித்து நன்றாக வரவேண்டுமென இறைவனை பிரார்த்துத்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //பதிவு அருமை. நூலக படங்கள் அனைத்தையும் கண்டு ரசித்தேன். தங்கள் பேரனுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். இந்த சிறு வயதில் நல்ல ஆர்வத்துடனான உழைப்புடன் செயல்படும் தங்கள் பேரனுக்கும், அவரின் நண்பருக்கும் பாராட்டுக்கள்.//

      பேரனையும் , அவன் நண்பர்களையும் பாராட்டியதற்கு நன்றி.

      //தங்கள் பேரன் வடிவமைத்திருக்கும் நூலக வரைபடத்தை நிறைய பேர் வந்து பார்வையிட்டு வாழ்த்துவது மிகுந்த பெருமையை தருகிறது.//

      பள்ளிக்கு வந்த பிள்ளைகளின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் பார்த்து பாராட்டி சென்றார்கள். 5 மணியிலிருந்து ஆறு மணி வரை நின்று கொண்டு தன் திட்டப்பணியை விளக்கி கொண்டு இருந்தான். குழந்தைகள் எல்லோரும் உற்சாகமாக அவர்கள் திட்டப்பணிகளை சொல்லி காட்டினார்கள்.


      //தங்கள் பேரன் கவின் இன்னமும் பற்பல முன்னேற்றங்களை சந்தித்து நன்றாக வரவேண்டுமென இறைவனை பிரார்த்துத்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.//

      உங்கள் பாராட்டுக்களும், பிரார்த்தனைகளும் , ஆசிகளும் அவனை முன்னேற வைக்கும் நன்றி .
      உங்கள் கருத்துக்கு நன்றி.


      நீக்கு
  12. கவினுக்குப் பாராட்டுகள். ஆர்வம், வரைகலை, திட்டம்... மிக நன்று.

    கவினின் நண்பன், கவினின் திட்டப்பணி விளக்கப்படங்களைக் காண்பதையும் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்

      //கவினுக்குப் பாராட்டுகள். ஆர்வம், வரைகலை, திட்டம்... மிக நன்று.//

      நன்றி.

      //கவினின் நண்பன், கவினின் திட்டப்பணி விளக்கப்படங்களைக் காண்பதையும் பார்த்தேன்.//

      எல்லா மாணவர்களும் மற்றவர்கள் திட்டப்பணியை வந்து பார்த்து கொண்டு இருந்தார்கள். கவின் இருந்த இடத்தை விட்டு நகரவில்லை. ஆசிரியர் உட்கார கூடாது அங்கும் இங்க்கும் நகர கூடாது என்று சொன்னதை கடைபிடித்தான். ஆறு மாணி வரை நகரவில்லை அதன் பின் போய் நண்பர்கள் திட்டப்பணிகளை பார்வையிட்டான்.


      நீக்கு
  13. காலம் வேக வேகமாகச் செல்கிறது. உங்களைவிட நல்ல உயரம் கவின்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //காலம் வேக வேகமாகச் செல்கிறது. உங்களைவிட நல்ல உயரம் கவின்//

      ஆமாம், உயரமாக வளர்ந்து வருகிறான். நாள் குள்ளம்.

      காலம் வேகமாக செல்கிறது யாருக்காவும் தன் வேலை நிறுத்திக் கொள்வது இல்லை. தன் வேலையை சரிவர செய்கிறது.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  14. ஆர்வத்துடன் கவின் செய்து வரும் வேலைகள் எல்லாமே ஆச்சரியமூட்டுகிறது. இந்த வயதிலேயே உழைப்பினால் பெறும் நன்மைகளைப் புரிந்து வைத்துக் கொண்டு எல்லாவற்றையும் திறம்படச் செய்திருக்கிறான். பெற்றோர் ஒத்துழைப்பும், ஆசிரியர்கள் ஒத்துழைப்பும் சிறப்பாக அமைந்து விட்டது. எங்கள் பெரிய பேத்தி பூஜா மெம்பிஸில் இருந்தப்போ இம்மாதிரி வேலைகள் செய்திருக்கிறாள். இப்போ பயிற்சி வக்கீலாகப் பணி புரிந்து வருவதாலும் மேல்படிப்பின் காரணமாகவும் நேரம் சரியாக உள்ளது. மகள் அடிக்கடி செய்வாள். நானெல்லாம் நூலகம்னு போனால் உட்கார்ந்து படிக்கத் தான் சொல்லும். கவினுக்கும் அவன் நண்பனுக்கும் எங்கள் ஆசிகளும் பாராட்டுகளும். புதிய பள்ளியிலும் போய் இப்படியே எல்லாவற்றிலும் முதலிடத்தில் இருக்கவும் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்

      //ஆர்வத்துடன் கவின் செய்து வரும் வேலைகள் எல்லாமே ஆச்சரியமூட்டுகிறது. இந்த வயதிலேயே உழைப்பினால் பெறும் நன்மைகளைப் புரிந்து வைத்துக் கொண்டு எல்லாவற்றையும் திறம்படச் செய்திருக்கிறான். பெற்றோர் ஒத்துழைப்பும், ஆசிரியர்கள் ஒத்துழைப்பும் சிறப்பாக அமைந்து விட்டது. //

      ஆமாம், அவனின் ஆர்வத்தை புரிந்து கொண்டு மருமகளின் முயற்சியால் நூலகத்தில் சேர்ந்து பணி ஆற்றினான். மகன் கொண்டு விட்டு கூட்டி வந்தான். ஆரியர்கள் அவனின் ஒவ்வொரு செயலையும் பாராட்டி ஊக்கப்படுத்தினர் அதனால் சிறப்பாக செய்யமுடிந்தது.
      அம்மா, அப்பா, ஆசிரியர்களின் ஒத்துழைப்பு குழந்தைகளுக்கு என்றும் வேண்டும்.


      //எங்கள் பெரிய பேத்தி பூஜா மெம்பிஸில் இருந்தப்போ இம்மாதிரி வேலைகள் செய்திருக்கிறாள். இப்போ பயிற்சி வக்கீலாகப் பணி புரிந்து வருவதாலும் மேல்படிப்பின் காரணமாகவும் நேரம் சரியாக உள்ளது. மகள் அடிக்கடி செய்வாள்.//


      உங்கள் பேத்தியின் வக்கீல் பணி, மற்றும் மேல்படிப்புக்கு நேரம் சரியாக இருக்கும். வாழ்த்துகள் பேத்திக்கு. மகளின் உடல் நிலை தேறி வரும் என்று நம்புகிறேன்.

      //நானெல்லாம் நூலகம்னு போனால் உட்கார்ந்து படிக்கத் தான் சொல்லும்.//
      உடல் நிலை சரியாக இருந்தால் நீங்களும் இழுத்து போட்டு வேலைகளை சளைக்காமல் செய்வீர்கள். நாம் ஆசை பட்டாலும் உடல் ஒத்துழைக்க மறுக்கும் காலம் இது என்ன செய்வது?


      //கவினுக்கும் அவன் நண்பனுக்கும் எங்கள் ஆசிகளும் பாராட்டுகளும். புதிய பள்ளியிலும் போய் இப்படியே எல்லாவற்றிலும் முதலிடத்தில் இருக்கவும் பிரார்த்தனைகள்.//

      கவினை, மற்றும் அவன் நண்பனையும் வாழ்த்தி பாராட்டி எதிர்கால பள்ளி படிப்புக்கும் பிரார்த்தனைகள் செய்து கொண்டது மகிழ்ச்சி.
      உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி கீதா.





      நானெல்


      நீக்கு
  15. கவினுக்கு வாழ்த்துக்கள்! சிறப்பான செயல்பாடு. அங்கெல்லாம் ஒன்பதாம் வகுப்பிலிருந்து படிப்பு கடினமாகி விடும் என்பார்களே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்

      //கவினுக்கு வாழ்த்துக்கள்!//

      நன்றி.

      //சிறப்பான செயல்பாடு. அங்கெல்லாம் ஒன்பதாம் வகுப்பிலிருந்து படிப்பு கடினமாகி விடும் என்பார்களே?//

      ஆமாம், அடுத்தவருடப்படிப்பு கடினமாகத்தான் இருக்கும் என்றான்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  16. பேரன் கவினுக்கும் மற்ற குழந்தைகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். வழிநடத்தும் ஆசிரியர்களும் ஒத்துழைக்கும் பெற்றோர்களும் பாராட்டுக்குரியவர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

      //பேரன் கவினுக்கும் மற்ற குழந்தைகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். //

      நன்றி.

      //வழிநடத்தும் ஆசிரியர்களும் ஒத்துழைக்கும் பெற்றோர்களும் பாராட்டுக்குரியவர்கள்.//

      ஆமாம். பாராட்டி வாழ்த்தி மகிழ்வோம்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  17. அருமையான சிறுவன் அம்மா!! படிக்க நன்றாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் Vasumathy. வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  18. கோமதிக்கா கவின் அசத்துகிறார்! தாத்தா, பாட்டி, அப்பா என்று அடுத்த தலைமுறை பின்னே எப்படி இருக்குமாம்!! பல அடிகள் தூரம் பாயுமே!

    கவினின் ஆர்வம், செயல்பாடுகள் எல்லாமே சிறப்பு. மனமார்ந்த பாராட்டுகள், வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      //கோமதிக்கா கவின் அசத்துகிறார்! தாத்தா, பாட்டி, அப்பா என்று அடுத்த தலைமுறை பின்னே எப்படி இருக்குமாம்!! பல அடிகள் தூரம் பாயுமே!

      கவினின் ஆர்வம், செயல்பாடுகள் எல்லாமே சிறப்பு. மனமார்ந்த பாராட்டுகள், வாழ்த்துகள்!//

      கீதா பேரனை மனமார பாராட்டி வாழ்த்தியதற்கு நன்றி.

      நீக்கு
  19. அங்கு பாருங்க எப்படியான திட்டப்பணிகள் கொடுக்கறாங்க இல்லையா? ஊர் சுத்தம் தெரு சுத்தம் செய்தல் என்று!!! அதுவும் அந்த ஊருக்கே....

    உணவு வழங்கல்...என்ன ஒரு நல்ல விஷயம்! இத்தனைக்கும் அந்த ஊரில் எல்லாம் குறைவுதான் நம்ம ஊரைப் பார்க்கறப்ப

    நம்ம ஊர்ல இப்படி எல்லாம் செய்யச் சொன்னால் எவ்வளவு பொறுப்பு வரும் இளைய சமுதாயத்துக்கு. படிப்போடு கூட இதெல்லாம் செய்யச் சொல்ல வேண்டும் அப்போதுதான் அடுத்த தலைமுறைக்கு பொறுப்புணர்வு வரும்.

    படங்களே விஷயம் சொல்லிவிடுகின்றன. கவினின் நண்பனின் திட்டச் செயல் எல்லாம் அருமை

    கவினுக்கு வாத்தியார் வாழ்த்தியது மகிழ்வான விஷயம்! கவின் இன்னும் பல உயரங்களைத் தொடுவார்!

    பாட்டிக்கு மகிழ்வான தருணங்கள். பேரனோடு பாட்டியும் நின்றிருக்கும் புகைப்படம் அருமை. பொக்கிஷம்!

    பதிவை ரசித்து வாசித்தேன், கோமதிக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அங்கு பாருங்க எப்படியான திட்டப்பணிகள் கொடுக்கறாங்க இல்லையா? ஊர் சுத்தம் தெரு சுத்தம் செய்தல் என்று!!! அதுவும் அந்த ஊருக்கே....//

      ஆமாம், ஊரின் சுத்தம் அங்கு உள்ள்வர்களின் நலம் அல்லவா!


      //உணவு வழங்கல்...என்ன ஒரு நல்ல விஷயம்! இத்தனைக்கும் அந்த ஊரில் எல்லாம் குறைவுதான் நம்ம ஊரைப் பார்க்கறப்ப//

      நம் ஊரில் அன்னதானம் மிகவும் உயர்ந்த விஷயம். அங்கும் நடப்பது மகிழ்ச்சி. உணவு, துணி, கால்அணிகள், மற்றும் புத்த்கம், வேண்டாத பொருட்கள் என்று தான்ம் செய்ய ஊர் முழுவதும் பெட்டி வைத்து இருக்கிறார்கள். நாம் அதில் போட்டு விட்டால் தேவை படுகிறவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும்.

      இப்போது நட்பு சுவர் என்று வேண்டாத துணிகளை அந்த இடத்தில் வைத்து விட்டால் தேவை படுகிறவர்கள் எடுத்து கொள்ளலாம் என்ற திட்டம் இப்போது உள்ளது.



      நம்ம ஊர்ல இப்படி எல்லாம் செய்யச் சொன்னால் எவ்வளவு பொறுப்பு வரும் இளைய சமுதாயத்துக்கு. படிப்போடு கூட இதெல்லாம் செய்யச் சொல்ல வேண்டும் அப்போதுதான் அடுத்த தலைமுறைக்கு பொறுப்புணர்வு வரும்.//

      ஆமாம், செய்யும் நல்ல காரியங்களை பிள்ளைகளை வைத்து செய்தால் அவர்களுக்கும் இரக்க குணம், பகிர்ந்து உண்ணுதல், மற்றும் எல்லோரிடமும் அன்பும் கருணையும் உண்டாகும்.

      //படங்களே விஷயம் சொல்லிவிடுகின்றன. கவினின் நண்பனின் திட்டச் செயல் எல்லாம் அருமை//

      ஆமாம்.



      //கவினுக்கு வாத்தியார் வாழ்த்தியது மகிழ்வான விஷயம்! கவின் இன்னும் பல உயரங்களைத் தொடுவார்!//

      உங்கள் வாழ்த்துகள் அவனுக்கு கிடைத்தது மகிழ்ச்சி.


      பாட்டிக்கு மகிழ்வான தருணங்கள். பேரனோடு பாட்டியும் நின்றிருக்கும் புகைப்படம் அருமை. பொக்கிஷம்!//

      ஆமாம் மகிழ்வான தருணங்கள் தான்.

      பதிவை ரசித்து வாசித்து கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி கீதா.



      நீக்கு